Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமிர்தலிங்கம் கொலையை அன்று கண்டித்து இருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்: சம்பந்தர்

Featured Replies

அவர்கள் உயிர் பயத்தால் போய்  ஒட்டவில்லை 1990இல் எந்த உயிர்பயமும் இருக்கவும் இல்லை.
நக்கி பிழைக்கும் பிழைப்பில் சுகம் கண்டு போய் ஒட்டியவர்கள்.
 
சந்திரிக்கா சேனாதிபதி ஆகிய போது மீண்டும் புலிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு கொடுத்து விலகு மாறும் இனத்தை அழிப்பதில் பங்காளிகளாக இருக்காதீர்கள் என்றும் கேட்டு கொண்டார்கள்.
நாயை தொலைத்த அனுபவம் இங்களுக்கு இருந்தால் புரியும். அவர்கள் என்ன செய்திருப்பார்கள் என்று.

நீங்கள் புலிகள் செய்த ஒரு பிழையை சொல்லுங்களேன்...உங்களால் எதாவது ஒன்றை சொல்ல முடியுமா? :)

(புலிகள் செய்த ஒரே பிழை..தப்பியவர்களை தப்புவதற்கு முன்னேயே போடாதது.... :lol: )

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்
எந்த குற்றமும் செய்யாத என்னை இரு தடவைகள் கைது செய்திருக்கிறார்கள். இரண்டாம் முறை காங்கேசன்துறையில் கொண்டு சென்று பங்கர் வெட்ட விட்டார்கள். ஒரு அடி வெட்ட ஒரு நாள் செல்லும் 
சினைபேர் தாக்குதல் செல் அடித்தல் எனபது சாதாரணமாக அங்கே நாளும் நடக்கும் ஒரு விடயம். 

நீங்க தானே சொல்லுறீங்க நீங்க "தப்பு செய்யவில்லை" என்று..அவர்களின் பார்வையில் "ஏதாவது" சட்டத்தை மீறி இருப்பீர்கள்.....

பங்கர் வெட்டுவது சிரமதானம்...தண்டனை அல்ல....

Edited by naanthaan

அமிர்தலிங்கம் கொலையை அன்று கண்டித்து இருந்தால் பலர் பாதிப்படைந்திருக்கலாம்: சம்பந்தர்

நாளைய சமுதாயம் சம்மந்தர் ஆனந்தசங்கரியை விட்டுவைத்ததை கண்டிக்கலாம். ஏனெனில் இவர்களால் எக்காலத்திலும் தமிழர்களுக்கு சல்லிக்சாசுக்குப் பிரயோசனமில்லை.

நாளைய சமுதாயம் சம்மந்தர் ஆனந்தசங்கரியை விட்டுவைத்ததை கண்டிக்கலாம். ஏனெனில் இவர்களால் எக்காலத்திலும் தமிழர்களுக்கு சல்லிக்சாசுக்குப் பிரயோசனமில்லை

சல்லிகாசுக்கு பிரயோசனம் இல்லாவிட்டால் கொல்லவேண்டும் .நல்ல பொலிசி.

அப்ப முழு தமிழ் சனத்தையும் போடவேண்டும் .சிங்களவன் செய்வது சரி போலத்தான் இருக்கு . :icon_mrgreen:

நாளைய சமுதாயம் சம்மந்தர் ஆனந்தசங்கரியை விட்டுவைத்ததை கண்டிக்கலாம். ஏனெனில் இவர்களால் எக்காலத்திலும் தமிழர்களுக்கு சல்லிக்சாசுக்குப் பிரயோசனமில்லை.

சண்டமாருதன் போன்றோரிடம்  இருந்தும் இப்படியான பதில்கள் வரும் போதுதான் தமிழர் எக்காலத்திலும் ஒரு இனமாக கட்டமைக்கப்படக் கூடியவர்கள் அல்ல என்ற யதார்த்தம் முகத்தில் மீண்டும் மீண்டும் அறைகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

சல்லிகாசுக்கு பிரயோசனம் இல்லாவிட்டால் கொல்லவேண்டும் .நல்ல பொலிசி.

அப்ப முழு தமிழ் சனத்தையும் போடவேண்டும் .சிங்களவன் செய்வது சரி போலத்தான் இருக்கு . :icon_mrgreen:

உங்களுக்கு இந்த உலகில் நடப்பதை வெளி உலகிற்கு மொழிபெயர்த்து எழுத இன்னொருவர் தேவை போல் இருக்கிறது.
 
சல்லிகாசிட்கும்  பிரயோசனம் இல்லாதவர்கள் சரித்திரத்தை மற்றுபவர்கள்போல் வேடம் போடுவதால் ஒரு இனமே ஏமற்றபடுகிறது. அவர்களை கடந்து பயணிக்க வழி இருந்தால் ஒரு இனத்திற்கு அதுவே முக்கியமானதும் தேவையானதும்.
சல்லி காசிற்கு பெறுமதி இல்லாதவர்கள் அந்த இடத்தில் இருந்துகொள்ள வேண்டும். அல்லது அப்படி இருந்தால் யாரும் ஏன் சொறிய போகிறான்?
 
சம்மந்தர் 25 30 வருடத்திற்கு முன்பு நடந்த விடயங்களை வைத்து குழல் ஊதுவதால் யாருக்கு என்ன லாபம்?
நாளைக்கு நடப்பதை பற்றி ஒரு வரத்தை முடிந்தால் பேசலாமே ??
  • கருத்துக்கள உறவுகள்

சரணடைதலும்.....வெள்ளை கோடி பிடிப்பதும்...வேறு வேறா.......சுத்தம்....

அமிதலிங்கமாவது தன்னால் என்ன ஏலும் ஏலாது என்று...அறிந்திருக்கிறார்.....சிலர்...பிறந்ததிலிருந்து...சாகுமட்டும் கனவுலகில் இருந்திருகிறார்கள்......

நெடுக்கு நீங்க சொன்ன மாதிரி தான் மற்றைய இயக்கங்களும் தங்களது உயிரை காப்பாற்ற தான் சிங்களவனின் காலில் விழுந்தார்கள்..ஏனென்றால்..சும்மா ஒதுங்குபவனை கொல்வது  நல்ல தண்ணி பட்டபாடு...ஆயுதம் தூகியவர்களுக்கு.....என்ன செய்வது

வெள்ளை கோடி பிடித்தால்...தோத்துவிட்டோம் என்றே அர்த்தம்...அதற்க்கு நாலு வியாக்கியானம் கூறாமல் தளி குனிந்து நிப்பதே சரி.....ஆனால் பூசி மெழுகி புது வியாக்கியானமே கொடுப்பதில் வேலையில்லை...

யுத்தத்தில்.. சில தந்திரோபாய முடிவுகளை எடுத்து பேரழிவுகளை தவிர்ப்பது கூட.. யுத்த தந்திரமாகும்.

அங்கு சரணடைதலும் கூட அவசியமாகிறது.

இதனை வியட்நாம் போரில் நூற்றுக்கணக்கில் சரணடைந்த அமெரிக்கப் படைகள் பற்றிய திரைப்படம் ஒன்று எடுத்துக்காட்டுவதையும் காணலாம்.

அன்று முள்ளிவாய்க்காலில்.. மக்களின் விருப்பு.. நோக்கி..  நாட்டை மீட்க வந்த கடைநிலை.. இடைநிலை.. மற்றும் காயப்பட்ட போராளிகளை எல்லாம் பலியிடனும் என்ற எந்தத் தேவையும்.. யாருக்கும் இல்லை. அவர்களை எப்படியாவது காக்க வேண்டும் என்ற நோக்கில் தான் சொல் கைம் ஊடாக.. செஞ்சிலுவையின் மேற்பார்வையில்.. அல்லது ஐநாவின் மேற்பார்வையில் சரணடைதல் என்ற ஒன்றிற்கு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது.

அதில்.. விடுதலைப்புலிகளின் தலைமைகள் சரணடையும் நோக்கம் எதுவும் இருக்கவில்லை.

உயர்மட்ட அரசியல் துறை போராளிகள்.. நிர்வாகத்துறை போராளிகள்.. மற்றும் இராணுவப் பிரிவில் இல்லாத போராளிகளும் அவர்களின் குடும்பங்களின் எதிர்காலம் கருதி சரணடைய வாய்ப்பளிக்கப்பட்டது.

போரின் இறுதி நிலையில்.. இதனைச் செய்யாமல்.. எந்த ஒரு இராணுவ வியூகமும் அமைக்க முடியாது. அநியாயமாக உயிர்களை அழிக்க வேண்டும் என்பது அல்ல.. யுத்த உக்தி. உயிர்களின் அழிவை இயன்றவரை தவிர்ப்பதற்கும்... இராணுவ உக்தி பயன்படுகிறது.

முன்னாள் துரோக ஆயுதக் குழுக்கள் ஒன்றும் எதிரியோடு யுத்தம் செய்யவில்லை. அவர்களுக்கு  ஒழுக்கத்தையும் கொள்கையையும் ஒற்றுமையையும் நிலைநாட்டி செயற்பட வாய்ப்புக்களும் அளிக்கப்பட்டன. எல்லாவற்றையும் உதாசீனம் செய்து மக்களையும் தேசத்தையும்.. தங்களின் எதிரிகளின் சொல் கேட்டு அவர்களுக்காக ஆபத்தில் தள்ளியவர்களே இந்த முன்னாள் துரோக ஆயுதக் கும்பல்கள். அவர்கள் சொந்த மக்களுக்காக அல்ல. ஒன்றில் இந்தியாவுக்காக செயற்பட்டார்கள் அல்லது சிறீலங்காவிற்காக செயற்பட்டார்கள். அவர்களையும்... ஒரு நாட்டை மீட்க இன்னொரு நாட்டுக்கு எதிராக போராடிய போராளிகளையும் ஒன்றாக வைத்துக் கருத்துச் சொல்ல முடியாது. அப்படிச் சொல்வது விளக்கக் குறைவாகும்..!

முன்னாள் துரோக ஆயுதக் குழுக்களை சார்ந்தோரும் சரணடைந்து விடுவிக்கப்பட்ட பல நிகழ்வுகள் உள்ளன. இந்தியப் படைகளின் வெளியேற்றத்தோடு சரணடைந்த எத்தனையோ கீழ்நிலை.. இடைநிலை.. துரோகக் கும்பல் ஆட்கள் விடுதலைப்புலிகளால் உடனடியாக அவர் தம் குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டதும்.. சிலர் தலைமைகள் விட்டிட்டு இந்தியப் படைகளோடு சேர்ந்து ஒரிசாவுக்கும் ராஜஸ்தானுக்கும்.. ஓடும் வரை முட்டி மோதி அழிந்ததும்.. அநாவசியமானவை..! அது எதிரிக்கு எதிரான ஒரு யுத்தம் கூட இல்லை. எதிரிக்காக சொந்தச் சகோதர்களை எதிர்த்து செய்த யுத்தத்தின் விளைவு. :icon_idea:

இதனை திரும்ப திரும்ப இங்கு எழுதி.. உங்களுக்கு எல்லாம் விளங்கும் என்றால்.. ஏன் இந்தப் பாடு..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கமும்.. ஒரு நிலையில் துரோகி ஆகிறார். எப்போது என்றால் சொந்த மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று கொண்டிருக்கும் ஒரு எதிரியை காக்கும் வகையில்.. இந்தியப் படைகள் ரப்பர் செல் அடித்து முன்னேறி வருவதாகவும்.. யாழ்ப்பாணத்தில்.. இந்தியப் படைகளை மிக அவதானத்தோடு மக்கள் இழப்பின்றி முன்னேறி வருவதாகவும் அறிக்கை விட்டவர் தான் இந்த காந்தியவாதி.. அமிர்தலிங்கம்.

அமிர்தலிங்கம் இப்படி அறிக்கை விட்டுக் கொண்டிருக்க.. பருத்துறையில் ஓர் இன அழிப்பை இந்தியப் படைகள் செய்து முடித்திருந்தன. அதில் குடும்பம் குடும்பமாக எமது மக்கள் வீடுகளுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டார்கள். கொக்குவிலில் செய்தது போலன்றி அங்கு தடையங்களை தெரியக் கூடாது என்பதற்காக தீயிட்டுக் கொழுத்தினார்கள். இதனை அமிர்தலிங்கம் என்ற காந்தியவாதி.. தர்மம்.. நியாயம்.. என்றா கருதினார். அப்படி என்றால்.. அமிர்தலிங்கத்தின் சாவும் தர்மம் நியாயம் ஆகும்..!

காந்திக்கும் நல்லா பொய்யும் வருமாமே...!!! காந்தியே ஒரு டுபாகூர். அவரைப் பின்பற்றிய இவர்கள்.. டபுள் டுபாகூர். :):lol:

Edited by nedukkalapoovan

நெடுக்கு நீங்கள் சொல்வது சரிதான்..ஒருவர் செய்தது மற்றவருக்கு விளங்கவில்லை என்பதால் தான் இவ்வளவு பிரச்னையும்....

பலமில்லாதவன் வாய்மூடி இருக்கிறான்...வசதிகிடைத்தவன் தருணம் பார்த்து பலி வாங்குகிறான்.. அது தானே எங்களுக்கு நிதர்சனம்...

இந்தியைரானுவத்துக்கு ஆதரவு என்பதற்காக அமிரை கொல்லுவதா??

(என்ன சாட்சி இல்லையே என்கிறீங்களா... :lol: )

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்திற்கு ஆதரவு அல்ல. எதிரிக்காக.. ஒரு சொந்த இன மக்களின்.. மனித இன அழிப்பை மறைக்க தலைப்பட்ட ஒருவர்.. எப்படி.. மனிதனாக இருக்க முடியும். தலைவராக இருக்க முடியும்..????!

தலைமை என்ற பதவியில் உள்ளவர்களுக்கு ஒரு பொறுப்பிருக்குது. அமிர்தலிங்கம் அதனை ஏதேதோ காரணங்களுக்காக துஷ்பிரயோகம் செய்தார். பழிவாங்கப்பட்டார். அவ்வளவே.

ஒரு இன அழிப்புக்கு துணைபோன ஒருவரே இந்த அமிர்தலிங்கம்..!!!! நீதியான விசாரணைகள் இந்த உலகில் இருப்பின்.. இந்தியப் படைகளின் இன அழிப்பை நியாயப்படுத்திய இவரும் குற்றவாளியாக நின்றிருப்பார்.. நிச்சயமாக..!!!

Edited by nedukkalapoovan

சல்லிகாசுக்கு பிரயோசனம் இல்லாவிட்டால் கொல்லவேண்டும் .நல்ல பொலிசி.

அப்ப முழு தமிழ் சனத்தையும் போடவேண்டும் .சிங்களவன் செய்வது சரி போலத்தான் இருக்கு . :icon_mrgreen:

பிரயோசனமானவர்கள் மக்களின் பிரதிநிதிகளாவதற்கு இவர்கள் தடை. சிங்களவர்களுடன் ஒட்டுண்ணிவாழக்கை. பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டிவாழும் போக்கு. அதையே மக்களுக்கு பழக்குதல். இப்படி இவர்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

போடவேண்டும் என்பது அடுத்த சந்ததியின் விருப்பமாக இருக்கலாம் ஏனனில் அமிர்தலிங்கத்தை போட்டபோது நான் சிறு பையனாக இருந்தேன். மொட்டயனை சுட்டாச்சு என்று ஊரே சந்தோசப்பட்டது. அந்த நேரம் எங்கள் ஊர் புலிகளுக்கு ஆதரவானதாகவும் இல்லை. ஊருக்கு யார் சுட்டது என்ற அக்கறையும் இருக்கவில்லை. பெரும்பான்மை மக்களின் விருப்பமே ஒருதரப்பால் நிறைவேறி இருந்தது. இது நான் நேரடியாகக் கண்ட அனுபவம். அதைவைத்தே சொல்கின்றேன் அடுத்த சந்ததில் இவர்களை விட்டுவைத்ததை மடத்தனம் எனலாம். அப்படி இப்போது கதைக்கும் எத்தனையே மக்கள் இருக்கின்றார்கள்.

90 வீதத்துக்கும் மேற்பட்ட சிங்களமக்களின் விருப்பத்தோடுதான் முள்ளிவாய்காலில் பல்லாயிரம் உயிர் எடுக்கப்பட்டது. அதுக்கு கோத்தாவும் மகிந்தனதும் கைகள் பாவிக்கப்பட்டது. எந்தப் பொருளாதார நெருக்கடியையும் தாங்கள் சந்திக்கத் தயார் ஆனால் போருக்கு ஆதரவு தருகின்றோம் என்று சிங்களமக்கள் ஆதரவு தந்தார்கள். இனியும் இப்படித்தான் தொடரும்.

கோத்தாவுக்கும் மகிந்தாவிற்கும் பின்னணியில் ஒரு பெரும் மக்கள் விருப்பு இருக்கின்றது அதேபோல் புலிகளின் ஒவ்வொரு செயற்பாட்டிற்குப் பின்னணியிலும் தமிழர்களின் விருப்பு வெறுப்பு சமூக முரண்பாடுகள் பழக்கவழக்கங்கள் இருக்கின்றது. பேரினவாதம் செய்த படுகொலையை மகிந்தன் கோத்தா என்ற இருவர் தலையில் மட்டும் கட்டுவது எவ்வளவு முட்டாள்தனமோ அதைவிட மோசமானது எல்லாத்தையும் புலித்தலமையில் கட்டிவிடுவது.

ஏற்கனவே பலதடவை எனது கருத்தில் எழுதியது போல் தமிழர்களின் சமூக முரண்பாடு அதனால் உருவான பழக்கவழக்கம் சமூக மற்றும் தனிமனித உளவியலை அடிப்படையாக வைத்து போட்டுத்தள்ளுவதை ஒரு பெருட்டாக தூக்கிப்பிடிக்க முடியாது. அது இன்னும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைதலும்.....வெள்ளை கோடி பிடிப்பதும்...வேறு வேறா.......சுத்தம்....

அமிதலிங்கமாவது தன்னால் என்ன ஏலும் ஏலாது என்று...அறிந்திருக்கிறார்.....சிலர்...பிறந்ததிலிருந்து...சாகுமட்டும் கனவுலகில் இருந்திருகிறார்கள்......

நெடுக்கு நீங்க சொன்ன மாதிரி தான் மற்றைய இயக்கங்களும் தங்களது உயிரை காப்பாற்ற தான் சிங்களவனின் காலில் விழுந்தார்கள்..ஏனென்றால்..சும்மா ஒதுங்குபவனை கொல்வது  நல்ல தண்ணி பட்டபாடு...ஆயுதம் தூகியவர்களுக்கு.....என்ன செய்வது

வெள்ளை கோடி பிடித்தால்...தோத்துவிட்டோம் என்றே அர்த்தம்...அதற்க்கு நாலு வியாக்கியானம் கூறாமல் தளி குனிந்து நிப்பதே சரி.....ஆனால் பூசி மெழுகி புது வியாக்கியானமே கொடுப்பதில் வேலையில்லை...

போராடி இயலாமல் அதுவும் 30 வருடம் சரணடைவதற்கும் லெபனானில் பயிற்சி எடுத்து மக்களுக்காக போராட வெளிக்கிட்டவர்கள் மக்களை காட்டிக்கொடுத்தும் போராடிய புலிகளை காட்டிக்கொடுத்தும் தமிழ் மக்களின் எதிரியுடன் சேர்ந்து காட்டிக்கொடுப்பதற்கும் பாரிய வித்தியாசம் உண்டும். இதனை உங்கள் மூளையால் பகுத்தறிய முடியவில்லையா??

மொட்டையனை போட்டாச்சு என்ற வார்த்தை இன்றுதான் கேள்விப்படுகின்றேன் .

எமது அரசியலில் அமிர் பல தவறுகள் விட்டிருக்காலாம் அதற்ககு தண்டனை மரணம் அல்ல .இந்த சிந்தனையும் செயற்பாடும் தான் இன்று எமது இனத்தை  இந்த இடத்திற்கு கொண்டுவந்துவிட்டிருக்கு .

அமிர் ஒரு சதிபுரட்சி மூலமோ அல்லது ஆயுத முனையிலோ தமிழர்களின் தலைவராக வந்தவரல்ல அவருக்கு கொடுக்கவேண்டியதண்டனை கட்டுகாசும் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பவேண்டியதுதான் .

உலககமெங்கும் உள்ள ஜனநாய நாடுகளில் நடப்பவற்றை சற்று என்றாலும் திரும்பி பாருங்கள் (சோனியா ராகுல்,கருணாநிதி இவர்களுக்கு இதுதான் நடந்தது )

கடைசி எங்கள் அடுத்த சந்ததியாயாவது கொலைக் கலாச்சரத்தில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம்.. லிங்கன்.. காந்தி.. சஞ்சேய்.. இந்திரா.. ராஜீவ்.. பெனாசிர் இவர்களின் கதிகளையும் சிந்திச்சுப் பார்க்கனும்.

ஏன் அவர்களை வீட்டுக்கு அனுப்பாமல்.. மேல அனுப்பினார்கள்.

காரணம் வீட்டுக்குப் போனாலும்.. செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கவே மாட்டார்கள் என்பதால் தான்..!

அமிர்தலிங்கமும் அதே தான்.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை. கொலைகாரப் பாதகன். அப்பாவி மக்களின் உயிர் குடிக்க குடிக்க.. ரப்பர் செல் அடிக்கிறது என்று அறிக்கை தந்த கொடியவர் அவர்..! :icon_idea::)

மொட்டையனை போட்டாச்சு என்ற வார்த்தை இன்றுதான் கேள்விப்படுகின்றேன் .

எமது அரசியலில் அமிர் பல தவறுகள் விட்டிருக்காலாம் அதற்ககு தண்டனை மரணம் அல்ல .இந்த சிந்தனையும் செயற்பாடும் தான் இன்று எமது இனத்தை  இந்த இடத்திற்கு கொண்டுவந்துவிட்டிருக்கு .

அமிர் ஒரு சதிபுரட்சி மூலமோ அல்லது ஆயுத முனையிலோ தமிழர்களின் தலைவராக வந்தவரல்ல அவருக்கு கொடுக்கவேண்டியதண்டனை கட்டுகாசும் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பவேண்டியதுதான் .

உலககமெங்கும் உள்ள ஜனநாய நாடுகளில் நடப்பவற்றை சற்று என்றாலும் திரும்பி பாருங்கள் (சோனியா ராகுல்,கருணாநிதி இவர்களுக்கு இதுதான் நடந்தது )

கடைசி எங்கள் அடுத்த சந்ததியாயாவது கொலைக் கலாச்சரத்தில் இருந்து மீட்டு எடுக்கவேண்டும் .

போட்டது சரி பிழை என்பது எனது வாதம் இல்லை. என்னும் சொல்லப்போனால் போட்டுத்தள்ளுவதை அது தமிழர்களுக்குள் தமிழர்கள் யாரை யார் போட்டாலும் நான் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை.

மரண தண்டனை குறித்த சிந்தனை என்னுடையதல்ல. அந்தச் சிந்தனைக்கான சமூக பின்புலம் என்ன என்பது மட்டுமே எனது சிந்தனை.

சோனியா ராகுல் கருணாநிதி போன்றவர்கள் வேறு தமிழர்களை கொன்றுகுவிக்கும் சிங்களப்பேரினவதத்தோடு அண்டிப்பிழைக்கும் நிலை வேறு. ஈராக்கில் அப்கானிஸ்தானில் அமரிக்காவை அண்டிப்பிழைக்கும் அரசநிர்வாகம் சார்ந்தவர்களுக்கு என்ன கதியோ அதே நிலைதான் சிங்களவர்களை அண்டிப்பிழைப்பவர்களுக்கும் நடக்கலாம். ஏனெனில் இது தேர்தல் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமைக்கு மக்கள் தேர்தலால் கொடுக்கும் தண்டனை அல்ல. பல பத்தாயிரம் உயிர்கள் பலியெடுக்கப்படும் கொடிய போர் அது சார்ந்த வடுக்கள் சம்மந்தப்பட்டது. இரத்தக்கறை படிந்தது. சில இடங்களில் வாக்குச் சீட்டுகளால் தண்டனை சில இடங்களில் புல்லட்டுகளால் தண்டனை என உலகில் இவை மிகச் சகஜம்.

இவற்றை எல்லாம் நானும் நீங்களும் மேற்குநாடு ஒன்றில் இருந்து திருத்த முடியாது. தாயகத்தில் இருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அவரவர்கள் என்ன முடிவு எடுக்கின்றார்களோ அதுதான் முடிவு. அவர்கள் நாளை இவர்களை போட்டிருக்கலாம் என்று அபிப்பிராயப்படலாம். அதுதான் என்கருத்து. இவ்வாறான அனுபவம் வரலாற்றில் உண்டு.

 சம்பந்தன் தனது இன்றைய நிலையை justify பண்ண அப்படிச் சொல்லியிருக்கலாம்... அமிரின் அரசியல் வரலாற்றை ஆ‌ழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் அவர் சுயநல நோக்கத்துடன் அரசியல் செய்யக்கூடிய 'அரசியல்வாதி' அல்ல. தமிழீழம் என்ற conceptஇல் அவருக்கு இருந்த ஆழ்ந்த பற்றை நான் சந்தேகிக்க மாட்டேன். 

அமிர்தலிங்கத்தின் வரலாறானது (1) தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, (2) எதிர்ப்புப் பிரச்சாரங்களின் பாதிப்பு இல்லாமல் நடுநிலைப்பார்வையுடன் தொகுக்கப்பட வேண்டும். அமிர் காலத்தில் இருந்த சர்வதேச அரசியல் அவர்பற்றிப் பேசும்போது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். அவர் காலத்துக்குப் பிந்திய இந்தியாதான் ஈழத்தமிழருக்கு எதிராக இருந்து போ‌ராட்டத்தை தோற்க வைத்தது என்பது கவனிக்கப்பட வேண்டும். அந்த இந்தியாவை ஈழத்தமிழரின் நண்பராக வைக்கும் நிலையில் அரசியல் செய்தவர் அமிர். அவரின் நேர்மையை தொலைநோக்கை அவர்காலத்து so called "இளைஞர்கள்" புரிந்து கொள்ள முடியாததால்தான் அவரது அரசியல் தோல்வி ஏற்பட்டது. அது கடைசியில் ஈழத்தமிழர் தோல்வியாக மாறியது (காலம் கடந்த நிலையில் இன்று ருத்திரகுமாரன், சம்பந்தன் எல்லாருமே இந்தியா நம் நண்பன் என்கிறார்கள்...) ஈழத்தமிழர்களின் அரசியல் பாதையின் ஒரு குறிப்பிடத்தக்க நேர்மறையான பெரும் திருப்பம் அமிர்தலிங்கம். 

அமிர் என்ற புள்ளியில் இருந்தே “இணக்க அரசியல்” என்ற பாதையில் இருந்து “தமிழ்ஈழக் கோட்பாடு” கருக்கொள்கிறது. ஈழப் போராட்டத்தில் ஆர்முடுகல் ஏற்படுகிறது. பிரபாகரன் என்ற புள்ளியில் உச்சம் கொண்டிருந்த தனிஈழக் கோட்பாடு இன்று சம்பந்தன் காலத்தில் அமர்முடுகலில் செல்கிறது. மீண்டும் “இணக்க அரசியல்” என்பது பேசு பொருளாகிக் கொண்டது. 

அமிர் ஒரு மறைக்கப்பட்ட மறக்க முடியாத ஈழத் தமிழ் அரசியல் ஆளுமை.

(மூர்த்தியின் முகபுத்தகத்தில் இருந்து )

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கமும் .... அதனைப் போன்ற  அரசியல் பொறுக்கிகளின்.....
கொலைகள் எனக்கு இன்றும்.... கவலையை தரவில்லை.
ஏனென்றால்.... இதுகள், என்றுமே... தமிழனுக்கு.... உதவாதுகள்.
ஆகவே....  அமீருக்கு, கிடைத்த தண்டனை சரி.
 
  • கருத்துக்கள உறவுகள்

இவையள் ஆர்முடுகல்.. அமர்முடுகல் என்று அலங்காரமாக எழுதித் தள்ளலாம்.

அமிர்தலிங்கமும் சரி... நீலன் திருச்செல்வனும் சரி.. தமிழர்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு மட்டமான தீர்வை பெற முடியுமோ.. எவ்வளவுக்கு எவ்வளவு சிங்களவர்களை உச்ச அளவில் திருப்திப்படுத்த முடியுமோ.. எவ்வளவுக்கு எவ்வளவு இந்தியாவை குளிர்விக்க முடியுமோ.. அப்படி ஒரு தீர்வை நோக்கி நகர்த்தவர்களே அன்றி தமிழ் மக்களின் தேசிய அரசியல் சமூக அபிலாசைகளை வெல்ல அவர்கள் ஒருபோதும் வினைத்திறனுடன் செயற்பட்டதில்லை.

தந்தை செல்வாவிற்குப் பின்.. அது இல்லாமலே போய்விட்டது. தேசிய தலைவர் மட்டும் தான் தந்தை செல்வாவுக்கு பின் தமிழ் மக்களின் உரிமைக்காக இதய சுத்தியோடு உழைத்த இன்னொரு தலைவர். எனி அவரின் இடத்தை நிரப்ப இப்போதைக்கு ஆட்கள் இல்லை என்றே சொல்லலாம். ஆனால் காலம்.. நிச்சயம் தமிழர்களுக்கு ஒரு நல்ல தலைமையை கொணரும். உலக மாற்றத்தோடு அந்தத் தலைமை இயங்கும்.. தமிழ் மக்களின் உரிமையை வெல்லவும் கூடும்..!  எல்லாவற்றிற்கும்.. முயற்சியும் ஒற்றுமையும் அவசியம். அமிர்தலிங்கத்தின் எச்ச சொச்சங்கள் இன்னும்.. இருந்து கொண்டு.... தமிழர்களை சீரழிப்பதை எனியும் வேடிக்கை பார்க்க முடியாது. அதற்கான தண்டனைகளை அவர்களுக்கு மக்களே எனி அளிப்பார்கள். :icon_idea:

படுகொலைகளை ஆராதிப்பவர்கள் எங்கள் மீதும் நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு கண்ணீர் விடுவது ஒரு irony....

நாங்கள் இன்னும் 5 இலட்சம் சிங்களவர்களையும்...எங்களை பிழை என்று சொல்லும் எல்லா தமிழர்களையும்...எங்களுக்கு துரோகம் செய்த இந்தியர்களையும்...வீறு கொண்டெழுந்து கொலை செய்வோம் என்று ஏன் ஒருத்தரும் சூழுரைக்க வில்லை...ஏன் பம்முகிறோம்... :)

எங்களது வீரம் எப்பொதுமே மலிந்தவர் மீதே தான்....

இஸ்ரேலை மாதிரி போட்டு தாக்குவோம் என்று பரணி பாட ஒருத்தரும் இல்லையா?

1:220 தற்போதைய நிலை காசாவில் :)

(அந்த ஒன்றிலும் எனக்கு சந்தேகம்...உலகுக்கு தங்களிலும் ஆட்கள் செத்தார்கள் என்று காட்டுவதற்காக இஸ்ரேலின் செட்டப்போ தெரியாது)

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

பாவப் பட்ட.... தமிழ், ஜென்மங்கள்.....
குதிரை.... ஓடிய.. பின், இன்னும்.....
அழுது.... வடிந்து கொண்டிருக்குதுகள்.

படுகொலைகளை ஆராதிப்பவர்கள் எங்கள் மீதும் நிகழ்த்தப்படும் கொலைகளுக்கு கண்ணீர் விடுவது ஒரு irony....

நாங்கள் இன்னும் 5 இலட்சம் சிங்களவர்களையும்...எங்களை பிழை என்று சொல்லும் எல்லா தமிழர்களையும்...எங்களுக்கு துரோகம் செய்த இந்தியர்களையும்...வீறு கொண்டெழுந்து கொலை செய்வோம் என்று ஏன் ஒருத்தரும் சூழுரைக்க வில்லை...ஏன் பம்முகிறோம்... :)

எங்களது வீரம் எப்பொதுமே மலிந்தவர் மீதே தான்....

இஸ்ரேலை மாதிரி போட்டு தாக்குவோம் என்று பரணி பாட ஒருத்தரும் இல்லையா?

1:220 தற்போதைய நிலை காசாவில் :)

(அந்த ஒன்றிலும் எனக்கு சந்தேகம்...உலகுக்கு தங்களிலும் ஆட்கள் செத்தார்கள் என்று காட்டுவதற்காக இஸ்ரேலின் செட்டப்போ தெரியாது)

அமிர்தலிங்கம் ஆனந்தசங்கரி வகையறாக்கள் சிங்களம் செய்யும் படுகொலைகளை அனுசரிப்பவர்களாக இருந்தரர்கள். இந்தக் காலகட்டத்தில் சிங்களத்தின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருதரப்பு ஆயுதவழியில் போராடிக்கொண்டிருந்தது. அந்தந்தக் காலத்துக்கேற்ப்ப சில தண்டனைகளுக்கான நியாயம் அமிர்தலிங்கம் போன்றோரின் செயற்பாடு சார்ந்து இருந்தது. அவற்றை இப்போது சரி பிழை என்பதால் எந்த பலனும் கிடையாது. இது ஆதரிப்பது எதிர்ப்பது என்பதுக்கு அப்பாற்பட்ட காலம் சூழ்நிலை சார்ந்தது. கொலையை ஆதரிப்பது ஆராதிப்பது என்றதற்கு அர்த்தம் எதுவும் இல்லை மாறாக அதை ஒரு பொருட்டாக காலம் சார்ந்து எடுக்கமுடியாது.

அமிர் ஆனந்த சங்கரி சம்மந்தன் போன்றோரின் நெளிவு சுழிவுகள் அனுசரிப்புகள் அனைத்தும் மக்கள் உணர்வார்கள் அதே போல் ரவிராஜ் ஜோசப் பரராசசிங்கம் போன்றோரின் செயற்பாடுகளையும் உணர்வார்கள்.

அமிர் ஒரு மறைக்கப்பட்ட மறக்க முடியாத ஈழத் தமிழ் அரசியல் ஆளுமை

அவர்கள் செய்தது அரசியலே கிடையாது பின்னர் எப்படி அதில் ஆளுமை கிழம்பியது?

ஈழத்தில் மர்க்சியம் பேசுகின்ற பல சித்தாந்த வாதிகள் தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்களுக்கும் அன்றாடம் விவசாயம் மற்றும் இதர கூலிவேலை செய்பவர்களுக்கும் கடற்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் என்ன தொடர்பிருந்தது?  எதுவும் கிடையாது. தத்தமது அடயாளத்தேடலுக்காகவே அவை பயன்பட்டது தவிர தேவைப்படும் மக்களுக்காக இல்லை.

அமிர்தலிங்கத்தின் அரசியலும் அவ்வாறே. அவர்களின் அரசியலுக்கும் அடிமட்ட மக்களுக்கும் எந்த உறவும் இருக்கவில்லை. இவர்களின் செயற்பாட்டை அரசியல் என்ற வகைக்குள்ளாகவே எடுக்க முடியாது. இவர்கள் அதிகாரவர்க்கங்களை அண்டிப்பிழைப்பதை மக்கள் அரசியலாக கருதவேணும் என்ற என்ன அவசியம் உள்ளது? இதற்குள் ஆழுமையும் மண்ணாங்கட்டியும்.

அமிரின் செயற்பாட்டை பலர் ஏற்கவில்லை சிலர் ஏற்றார்கள்.  அதே போல்தான் ஒவ்வொரு இயக்கத்தலமையையும் இன்றய சம்பந்தன் விக்கி டக்ளஸ் என அனைவரையும். இது பொதுத்தன்மைக்குள் வரமுடியாத சமூகம். இவ்வாறான ஒரு சமூகத்துக்கு தலமை அரசியல் ஆழுமை என்பதெல்லாம் கோமாளித்தனமானது.

அமீரும் சரி,  சம்பந்தரும் சரி  தமிழ் மக்களுக்காக திட்டங்களை வகுத்து செயற்பட்டார்கள் என்பதை விட தங்களின் இருப்பில் குறியாக செயற்பட்டார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்...   தங்களின் இருப்பை தக்க வைக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தனர் இனியும் செய்வார்கள்... 

புலி எதிர் இலங்கை அரசு எண்று வரும் போது தங்களுக்கு அதிக பலன் தரும் தரப்பு எது என்பதை சிந்தித்து அதன் பால் நகர்ந்து கொண்டார்கள்...  

marriage of convenience எண்று ஆங்கிலதில் சொல்வார்கள்  தங்களின் நலன்கள் சார்ந்து பந்தங்களை செய்துகொள்வது...  இதில் அமீர்  தன் இருப்பை கருதில் கொண்டு புலிகளுக்கு எதிரான  போரில் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து   இந்திய படுகொலைக்கு சார்பான நிலையை எடுத்து அதை நியாய படுத்தி  கொண்டார்... 

இதில் இந்திய படுகொலைக்கு எதிராக அமீர் ஏதாவது ஒண்டை எங்களுக்கு தெரியமல் செய்து இருந்தால் அதை அறிய தாருங்களேன்... 

இதில்  தமிழர்  தலைவர்கள் குமார் பொன்னம்பலம் ,   ஜோசப் பரசசிங்கத்தார், எண்டு நடுநிலை வகிக்க போய் மாண்டவர்களுக்காக யாரும் கண்ணீர் கூட சிந்துவது இல்லை...  இங்கே நடு நிலை எண்டதை கூட  புலி ஆதரவு நிலை எண்டதையே குறிக்கிறது... 

அமிர்தலிங்கம் ஆனந்தசங்கரி வகையறாக்கள் சிங்களம் செய்யும் படுகொலைகளை அனுசரிப்பவர்களாக இருந்தரர்கள். இந்தக் காலகட்டத்தில் சிங்களத்தின் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஒருதரப்பு ஆயுதவழியில் போராடிக்கொண்டிருந்தது. அந்தந்தக் காலத்துக்கேற்ப்ப சில தண்டனைகளுக்கான நியாயம் அமிர்தலிங்கம் போன்றோரின் செயற்பாடு சார்ந்து இருந்தது. அவற்றை இப்போது சரி பிழை என்பதால் எந்த பலனும் கிடையாது. இது ஆதரிப்பது எதிர்ப்பது என்பதுக்கு அப்பாற்பட்ட காலம் சூழ்நிலை சார்ந்தது. கொலையை ஆதரிப்பது ஆராதிப்பது என்றதற்கு அர்த்தம் எதுவும் இல்லை மாறாக அதை ஒரு பொருட்டாக காலம் சார்ந்து எடுக்கமுடியாது.

அமிர் ஆனந்த சங்கரி சம்மந்தன் போன்றோரின் நெளிவு சுழிவுகள் அனுசரிப்புகள் அனைத்தும் மக்கள் உணர்வார்கள் அதே போல் ரவிராஜ் ஜோசப் பரராசசிங்கம் போன்றோரின் செயற்பாடுகளையும் உணர்வார்கள்.

அவர்கள் செய்தது அரசியலே கிடையாது பின்னர் எப்படி அதில் ஆளுமை கிழம்பியது?

ஈழத்தில் மர்க்சியம் பேசுகின்ற பல சித்தாந்த வாதிகள் தலைவர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்களுக்கும் அன்றாடம் விவசாயம் மற்றும் இதர கூலிவேலை செய்பவர்களுக்கும் கடற்தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கும் என்ன தொடர்பிருந்தது?  எதுவும் கிடையாது. தத்தமது அடயாளத்தேடலுக்காகவே அவை பயன்பட்டது தவிர தேவைப்படும் மக்களுக்காக இல்லை.

அமிர்தலிங்கத்தின் அரசியலும் அவ்வாறே. அவர்களின் அரசியலுக்கும் அடிமட்ட மக்களுக்கும் எந்த உறவும் இருக்கவில்லை. இவர்களின் செயற்பாட்டை அரசியல் என்ற வகைக்குள்ளாகவே எடுக்க முடியாது. இவர்கள் அதிகாரவர்க்கங்களை அண்டிப்பிழைப்பதை மக்கள் அரசியலாக கருதவேணும் என்ற என்ன அவசியம் உள்ளது? இதற்குள் ஆழுமையும் மண்ணாங்கட்டியும்.

அமிரின் செயற்பாட்டை பலர் ஏற்கவில்லை சிலர் ஏற்றார்கள்.  அதே போல்தான் ஒவ்வொரு இயக்கத்தலமையையும் இன்றய சம்பந்தன் விக்கி டக்ளஸ் என அனைவரையும். இது பொதுத்தன்மைக்குள் வரமுடியாத சமூகம். இவ்வாறான ஒரு சமூகத்துக்கு தலமை அரசியல் ஆழுமை என்பதெல்லாம் கோமாளித்தனமானது.

அநியாயத்திற்கு முழு பிழையான பதிவு .

சிங்களம் செய்யும் படுகொலைக்கு அமிர் எப்ப அனுசரித்தார் .

அமிரை பலர் ஏற்கவில்லை சிலர் ஏற்றார்கள் அப்படிதான் டக்கிலசும் என்பது அபத்தத்திலும் அபத்தம் .

ரவிராஜ் ,ஜோசப் பரராஜசிங்கம் இருவரும்  அரசால் கொலைசெய்யப்பட்டவர்கள் என்பதனால் மற்றைய கூட்டணி அங்கத்தவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் என்பது போல என்ற பொய்யை திணிக்க முனையவேண்டாம் .ரவிராஜ் அமிரை உயிராய் நேசித்தவர் .கனடா வந்தபோது அமிரை கொலை செய்தவர்கள் அதற்கான பலனை ஒருநாளைக்கு அனுபவிப்பார்கள் என்று சொன்னவர் .

மேலோட்டமாக எல்லோரும் ஒரு குட்டையில் உறிய மட்டைகள் தான் என்று அரசுடன் ஒட்டி  இருப்பவர்களையும் (டக்கிளஸ் ,கருணா ,பிள்ளையான் ) இருப்பவர்களையும் கூட்டமைப்பையும்  ஒரு கூடையில் போடவேண்டாம் .

புலிகள் எது செய்தாலும் சரி எவரை கொலை செய்தாலும் அவன் துரோகி என்பவர்களுக்கு பதில் எழுதி பிரயோசனம் இல்லை .

ஒரு காலகட்டத்தில் சிங்களம் இனஅழிப்பை செய்கின்றது. அதே நேரம் அதற்கெதிராக ஆயுதப்போராட்டம் நடக்கின்றது. இக்காலகட்டத்தில் அழிப்பவர்களை அனுசரித்து அரசியல் செய்யலாம் என்ற நிலைப்பாடு என்பது படுகொலைகளை அனுசரிப்பதாகவே போராடும் தரப்பாலும் அதுசார்ந்த மக்களாலும் கருதப்படும். இதை இப்போதைய காலகட்டத்தில் நின்று சரிபிழைபேசுவது அர்த்தமற்றது. அமிர்கொல்லப்பட்ட காலகட்டத்தின் நியாயம் வேறானது. இதுதான் சுருக்கமான கருத்து. நாளை கதிர்காமர் கொலையை இதேபோல் கதைக்கலாம். இனவழிப்பகாலகட்டத்தில் கதிர்காமர் என்ன செய்தார் உதாரணத்திற்கு நவாலிப்படுகொலையை சந்திரிகா அரசை விட நியாயப்படுத்தியது கதிர்காரமர். காலம் சம்பவங்கள் செயற்பாடுகள் சார்ந்து தான் கொலைகள் அணுகப்படமுடியும். இன்றய கொலை 20 வருடத்திற்குப் பிறகு அதன் கனமும் அர்த்தமும் வேறானதாக இருக்கும்.

புலிகள் எதுசெய்தாலும் சரி என்று நான் எங்கும் சொன்னதில்லை. அதே நேரம் பிழை என்றும் சொன்னதில்லை மாறாக ஏன் செய்தார்கள் அதற்கான சமூகப் பின்னணி என்ன தூண்டுதல் என்ன என்பதே எனது நோக்கு. எல்லா பிழையையும் தூக்கி புலித்தலையில் போட்டுவிட்டு ஏனையவர்கள் யோக்கியர்களாக முடியாது.

கருணா பிள்ளையான் டக்ளஸ் ஆனந்த சங்கரி சம்மந்தன் இவர்களை ஒரு தரப்பாக அணுகுவதும் அணுகாமல் விடுவதும் அவர்கள் செயற்பாடு என்ன பெறுபேறுகளை கொடுக்கின்றது என்பதில்தான் தங்கியுள்ளது. அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு மக்களை எவ்வாறு விடுதலை நோக்கி நகர்த்துகின்றார்கள் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றார்கள் என்ற பல்வேறு நிலைகளை வைத்துத்தான் அணுகுமுறை அமையும்.

மக்களுக்காக நாலு பேரின் மூளையும் சிந்தனையும் செயற்பாடும் போதும் என்று கருதும் நிலையே தொடர்கின்றது. அதில் ஒரு அம்சமே விக்கியை முதலமைச்சராக்கியது. ஒவ்வொருவரும் அவ்வாறே கருதுகின்றனர் விக்கியின் அறிவு விடுதலை பெற்றுத்தரும் என்றும் சங்கரி நினைப்பார் தன்ர யோசனை தான் சரிவரும் இப்படியே சம்மந்தன் கருணா டக்களஸ் போன்றவர்கள் கருதுகின்றார்கள். ஏன இயக்கத்தலைமைகளுக்கும் இவ்வாறான போக்கு இருந்தது. ஒட்டுமொத்த மக்களின் அறிவும் சிநந்தனையும் ஒருங்கிணையும்போது ஒரே திசையில் பயணிக்கும் போதே விடுதலை சாத்தியமானது. அதை நிராகரிக்கும் எந்தச் சுப்பனும் ஒரேகுட்டையில் ஊறிய மட்டைகளே. முடிவு தோல்வியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.