Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தலைவரை இழிவு படுத்தும் இலங்கை அரசின் இணையதளம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொழும்பு : இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முதல் பக்கத்தில் வாசகர் கடிதம் பகுதியில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் தலைப்பிட்டு புகைப்படத்துடன் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அண்டை நாட்டின் தலைவரை இவ்வளவு மோசமாக சித்தரித்து, மற்றொரு நாடு, தன்னுடைய அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் இவ்வாறு வெளியிட்டிருப்பது, சர்வதேச நெறிமுறைகளுக்குப் புறம்பானது. இலங்கையுடன் நட்புறவை வலுப்படுத்துவோம் என்று தற்போதைய மத்திய அரசும் கூறி வரும் சூழ்நிலையில், நமது நாட்டுத் தலைவர்களை இப்படி மோசமாக இலங்கை அரசின் இணையதளம் விமர்சித்திருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. தமிழக மீனவர்கள் மீது பாய்ச்சல்:

இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : சர்வதேச எல்லையை கடந்து வந்து இலங்கை எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட படகுகள் மற்றும் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததால் தமிழக கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லை தாண்டி வந்து அடுத்த நாட்டின் மீன்களை கொள்ளையடித்துச் செல்வது எந்த வகையில் நியாயமானதாகும்? தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள் வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நலனை மட்டுமே கருதும் தமிழக மீனவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் நலனை நினைத்து பார்ப்பதில்லை.ஜெயலலிதா மீது அவதூறு:

இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஒருவேளை அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ? 1876ம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தம். இதை ஆங்கிலேய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும், 1924ம் ஆண்டு முதல் கச்சத்தீவு தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி தமிழக அரசு அதனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் ஜெயலலிதாவின் தாளங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே தமது அரசு விரும்புவதாக மோடி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானது அல்ல. இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடிக்கையான வாதம்:

இந்த கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ள விஷயங்களில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்பது மட்டுமே ஏற்க கூடிய விஷயம். மற்றபடி கச்சத்தீவு பற்றி அவர் குறிப்பிட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று நேற்றல்ல, ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே, கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வந்திருக்கின்றனர். இடையில் அந்த தீவை இலங்கைக்கு இந்தியா கொடுத்து விட்டதாலேயே, தமிழக மீனவர்களின் உரிமை பறிபோய் விட்டதாக கருத முடியாது. கச்சத்தீவை கொடுத்ததே தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. அவ்வாறு கொடுத்தது தவறு; அதை மீட்க வேண்டும் என்றே தற்போது தமிழக தலைவர்கள் கேட்டு வருகின்றனர். மேலும் அவ்வாறு எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்குவதும், அவர்களுடைய வலைகளைக் கிழித்தெறிந்து, படகுகளை சேதப்படுத்துவதும் எந்த சர்வதேச சட்டப்படி சரியாகும்? நமது விரோதி நாடு என கூறப்படும் பாகிஸ்தான் கூட, நமது மீனவர்களிடம் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதில்லை. 

இழிவுபடுத்துவது நாகரிகமானதா?:

எல்லாம் சரி. அவர்கள் கூறுவது எல்லாமே நியாமானதாகவே இருந்து விட்டுப் போகட்டும். அதற்காக மற்றொரு நாட்டுத் தலைவரை இப்படியா இழிவாக சித்தரிப்பது? தன் மாநில மீனவர்களைக் காப்பாற்றுமாறு ஒரு முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதுவதை இப்படியா கொச்சைப்படுத்தி விமர்சிப்பது? ஒரு அரசின் இணையதளத்தில் இவ்வளவு மோசமான விமர்சனம், அதுவும் முதல் பக்கத்தில் வெளியிட்டிருப்பது வேதனை தருவதாக உள்ளது. மேலும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் இவ்வாறு ஒரு வாசகரின் கட்டுரையை வெளியிட்டிருப்பதன் உள்நோக்கம் என்ன? இலங்கை அரசின் இந்த அநாகரிக போக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமல்ல. சர்வதேச சமுதாயமே கண்டிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா பற்றி இலங்கை விமர்சனம்: தி.மு.க உள்பட அரசியல் கட்சிகள் கண்டனம்!
 
Posted Date : 11:55 (01/08/2014)Last updated : 12:08 (01/08/2014)

modi-%20jaya%20love%20200(1).jpgசென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி இலங்கை பாதுகாப்புத் துறையின் இணையதளத்தில் வெளியான தரக்குறைவான கருத்துக்கு தி.மு.க உள்பட தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், இதுபோன்ற கட்டுரைகள் வெளியாவதை இலங்கை அரசு தடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், இலங்கை பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில் யார் கருத்து வெளியிட்டிருந்தாலும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமானப்படுத்தியது சரியல்ல என்று கண்டித்துள்ளார்.

பா.ஜ.க தேசிய செயலாளர் தமிழிசை செளந்திரராஜன் கூறுகையில், பெண் தலைவர்களை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதனை உலகத்தில் உள்ள பெண் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ.நெடுமாறன், இது இலங்கை அரசின் சர்வாதிகார போக்கை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=30840

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வரை இழிவுபடுத்துவதா? சென்னையில் நாளை இலங்கை தூதரகத்தை இழுத்து மூடும் போராட்டம்- வேல்முருகன்

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்ட இலங்கையைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாளை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் தமிழக முதல்வர், ஒரு நாட்டின் முக்கிய தலைவர் என்றும் பாராமல் பெண் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தி விமர்சித்து கட்டுரை வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தமிழக முதல்வர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் வென்று 37 தொகுதிகளைக் கைப்பற்றி அகில இந்திய அளவில் 3வது பெரிய கட்சியின் தலைவராக திகழ்கிறவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களப் பேரினவாத அரசு படுகொலை செய்யும் போதும் கைது செய்து சிறைகளில் அடைக்கிற போதும் ஒரு மாநிலத்தின் முதல்வர் என்கிற முறையில் இந்திய மத்திய அரசின் பிரதமருக்கு கடிதம் எழுதுவது என்பது ஒரு ஜனநாயக கடமை. அத்தகைய ஜனநாயகக் கடமையாற்றி வரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் தமது அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் கட்டுரை வெளியிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஒட்டுமொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது. அத்துடன் இந்திய நாட்டின் பிரதமர் அவர்களையும் இழிவுபடுத்துகிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியாகி உள்ள கட்டுரை. இது ஒட்டுமொத்த இந்தியாவையே இழிவுபடுத்துவதாகும். இலங்கையில் ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ்நாட்டு சட்டசபையில் எண்ணற்ற தீர்மானங்களை நிறைவேற்றி போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு சிம்ம சொப்பணமாக தமிழ்நாட்டு முதலமைச்சர் அம்மா அவர்கள் இருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக இழிசொற்களால் அவரை அவமதிப்பதை தமிழகம் சகித்துக் கொண்டிருக்காது. இத்தகைய அவதூறுகளை ஆபாச கட்டுரைகளை வெளியிட்டுள்ள சிங்களப் பேரினவாதி ராஜபக்சே கும்பலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இழுத்து மூடவும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரை கைது செய்து சிறையில் அடைக்கவும் உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை இழிவுபடுத்தி பேசுகிற இலங்கைக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் இந்திய பேரரசு துண்டிக்க வேண்டும். டெல்லியில் உள்ள இலங்கை தூதருக்கு ஆணை அனுப்பி அவரை நேரில் வரவழைத்து எச்சரிக்க வேண்டும். இத்தகைய இழிவான கட்டுரையை வெளியிட்ட இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு பொறுப்பான, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை இழுத்து மூடவும் நாளை காலை 10 மணிக்கு எனது தலைமையில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த முற்றுகைப் போராட்டத்தில் கட்சி, சாதி, மத எல்லைகளைக் கடந்து தமிழின உறவுகளாய் ஒன்று திரண்டு இலங்கை சிங்கள பேரினவாத ராஜபக்சே கும்பலுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று உரிமையோடு அழைக்கிறேன். இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். Topics: velmurugan, srilanka, tamilnadu, tvk, condemn, இலங்கை, தமிழகம், முதல்வர் ஜெயலலிதா, வேல்முருகன்

Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/velmurugan-condemns-srilanka-on-article-against-jayalalithaa-207474.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசின் இணையதளத்தில் இடம்பெற்ற ஜெயலலிதா குறித்த சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கம்!
 
Posted Date : 14:09 (01/08/2014)Last updated : 14:53 (01/08/2014)

jaya%20picture.jpgகொழும்பு: இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது. 

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை பற்றி பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தும் விதமாக தரக்குறைவாக விமர்சித்து, இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதில் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இருக்கும் சர்ச்சைக்குரிய படம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இந்த கட்டுரையின் தலைப்பில் ஜெயலலிதா குறித்து இடம்பெற்ற வாசகம் கடும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில் இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்பிரச்னை இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. 

இதனைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்புத் துறை இணையதளத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சைக்குரிய கட்டுரை நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில், "சர்வதேச எல்லையை கடந்து வந்து இலங்கை எல்லைக்குள் வந்து தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதாலேயே அவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட படகுகள் மற்றும் வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்ததால் தமிழக கடல் பகுதியில் மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக எல்லை தாண்டி வந்து அடுத்த நாட்டின் மீன்களை கொள்ளையடித்துச் செல்வது எந்த வகையில் நியாயமானதாகும்?

தமிழக மீனவர்கள், தடை செய்யப்பட்ட படகுகள் மூலம் இலங்கை எல்லைக்குள் வருவதால் இலங்கையின் மீன்வளமும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நலனை மட்டுமே கருதும் தமிழக மீனவர்கள், இலங்கையில் உள்ள தமிழ் மீனவர்களின் நலனை நினைத்து பார்ப்பதில்லை.

இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். ஒருவேளை அந்த படகுகள் ஜெயலலிதாவிற்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சொந்தமானதாக இருக்குமோ? 1876ஆம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தம். இதை ஆங்கிலேய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. இருப்பினும், 1924ஆம் ஆண்டு முதல் கச்சத்தீவு தங்களுக்கு தான் சொந்தம் எனக்கூறி தமிழக அரசு அதனை திரும்பப் பெற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதமருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி, இலங்கை மீது நடவடிக்கை எடுக்கச் செய்ய ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால் ஜெயலலிதாவின் தாளங்களுக்கு தலையாட்டி மோடி அரசு நடனம் ஆடாது. இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே தமது அரசு விரும்புவதாக மோடி ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தவறான புரிதலின் பேரிலான கடிதத்திற்கு செவி சாய்த்து இலங்கை மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி நினைத்தால், அது சரியானது அல்ல" என்று கூறப்பட்டிருந்தது.

http://news.vikatan.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: சர்ச்சை கட்டுரைக்கான "இணைப்பு" மட்டும் நீக்கம்! கேவலமான தலைப்பு தொடர்கிறது!! Posted by: Mayura Akilan Updated: Friday, August 1, 2014, 15:58 [iST] கொழும்பு: இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதல்வர் ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக விமர்ச்சித்து எழுதியிருந்த சர்ச்சைக்குரிய கட்டுரையின் இணைப்பு (லிங்க்) மட்டுமே நீக்கப்பட்டுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய கட்டுரையை இலங்கை அரசு முழுமையாக நீக்காமல் இன்னமும் அதே கேவலமான தலைப்பில்தான் தமது இணையதளத்தில்தான் வைத்திருக்கிறது. இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதி வரும் கடிதங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. தரம் தாழ்ந்த தலைப்பு ஷெனாலி டி வடுகே என்பவர் " How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?" என்ற தரம் தாழ்ந்த தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கொச்சைப்படுத்தும் படம் அதேபோல முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடி இருவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு படமும் வெளியிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் அதிர்வலை இலங்கை அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றிருந்த அந்த படமும், கட்டுரையும், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. ராஜ்யசபாவிலும், தமிழக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. அரசியல் கட்சியினரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர். வேண்டுமென்ற வெளியிட்ட இலங்கை இந்தக் கட்டுரை இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வேண்டுமென்றே வெளியிட்டுள்ளது என்றும் அதற்கு விளக்கம் கேட்கவேண்டும் என்றும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. கட்டுரை நீக்கமா? நாடகமா? இதனிடையே கடும் எதிர்ப்பினை அடுத்து சர்ச்சைக்குரிய அந்த கட்டுரை இலங்கையின் பாதுகாப்புத்துறை இணையத்தின் முகப்புப்பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் கட்டுரைக்கான இணைப்பு, படம் எதுவும் இல்லை என்றாலும் http://www.defence.lk/new.asp?fname=How_meaningful_are_Jayalalitha_love_letters_to_Narendra_Modi_20140731_03 என்ற இணைப்பில் அதே கேவலமான தலைப்பில்தான் இன்னமும் கட்டுரை இருக்கிறது. எது முழுமையான நீக்கம்? பொதுவாக இணையதளங்களில் ஒரு பக்கத்தை நீக்கினால் முழுமையாக நீக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்தால் இணையப் பக்கம் இல்லை என்று வரும். அதற்குப் பெயர்தான் முழுமையான நீக்கம். இல்லை ஆனா இருக்கு ஆனால் இலங்கையோ இணைப்புகளை மட்டும் நீக்கிவிட்டு கட்டுரையை அப்படியே அதே கேவலமான தலைப்பில்தான் வைத்துள்ளது. முகப்புப் பக்கத்தில் மட்டும் நீக்கியிருப்பதாலேயே இலங்கை அந்த கட்டுரையையே நீக்கிவிட்டது போல் நாடகாமாடிக் கொண்டிருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.in/news/srilanka/defamation-article-link-removed-sri-lankan-defence-site-207496.html

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுதான் சிங்களவரின் வீரம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.வைக் கிண்டலடித்த கட்டுரை: இலங்கை பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு

 

இலங்கையின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்படுவது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதும் கடிதங்களை முன்வைத்து, எழுதப்பட்ட கட்டுரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆங்கிலத்தில் ஷெனாலி டி வடுகே என்பவரால் அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தலைப்புதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய விடயங்கள்

தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையையும் இலங்கை – இந்தியா நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தையும் மீறுவதாகவும், தமிழக முதலமைச்சர் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார் என்பதாலேயே பிற நாடுகளுக்குச் சொந்தமான கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்போதும் இலங்கை அரசு மீது குற்றம் சுமத்த தயாராக இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தங்களுடைய மீனவர்களுக்காக குரல்கொடுக்க முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் மோதி ஒன்றும் தன்னுடைய அச்சுறுத்தல்களுக்கு தலையாட்டும் பொம்மையில்லை என்பதை தமிழக முதல்வர் விரைவிலேயே புரிந்துகொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

140801105942_jayalalitha_letter_narendra

ஜெயலலிதா மோதிக்கு எழுதும் கடிதங்கள் பற்றிய கட்டுரை இலங்கை அரசு பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வெளியாகியிருந்தது.

இலங்கையின் பாதுகாப்புத் துறை இணைய தளத்தில் வெளியார் கருத்துத் தெரிவிக்கும் பகுதியில் வெளியாகியிருக்கும் இந்தக் கட்டுரைக்கு, தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கட்டணத்தைத் தெரிவித்துள்ளனர்.

“கருத்து வேறுபாடுகள் என்பது அரசியலில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பதை ஏற்க முடியாது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.

“இந்திய அரசு உடனடியாக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசுடனான தூதரக உறவுகளை முறிக்க வேண்டும். இல்லாவிடில் சிங்கள அரசோடு கைகோர்த்துக் கொண்டு தமிழ் இனத்தைத் தண்டிக்கவும், தமிழ் மக்களை இழிவுபடுத்தவும் நரேந்திர மோடி அரசு துணிந்து விட்டதோ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோதியை தங்களுக்கு நெருக்கமானவராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க. உறுப்பினர் மைத்ரேயன் இது குறித்துக் கேள்வியெழுப்பினார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயல்லிதா இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

140801112536_defence_lk_apology_281x351_

கட்டுரை பிரசுரமானதையிட்டு பாதுகாப்பு அமைச்சு இணையதளம் மன்னிப்பு தெரிவித்துள்ளது.

உடனடியாக வெளியுறவுத் துறை அமைச்சகம், இலங்கைத் தூதரை அழைத்து இந்தியா தன் அதிருப்தியைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டுமென்றும் இலங்கை அரசை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரச் செய்ய வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தமது இணையதளத்தில் சம்பந்தப்பட்ட கட்டுரை வெளியிடப்பட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது சம்பந்தமான அறிவிப்பு பாதுகாப்பு அமைச்சு இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

மன்னிப்புக் கேட்கவே தகுதியற்ற வகையில் மன்னிப்பைக் கோருகிறோம்: இலங்கை

 

நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் 'லெட்டர்கள்’ எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை - என்ற தலைப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படத்துடன் இலங்கை ராணுவ இணையதளத்தில் ஒரு கட்டுரை பிரசுரிக்கப் பட்டிருந்தது.

இந்தக் கட்டுரைக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

 

இதை அடுத்து, இலங்கை ராணுவ இணையதளத்தில் இது குறித்து தாங்கள் மன்னிப்புக் கேட்கவும் தகுதியற்ற வகையில் இந்த மன்னிப்பைக் கோருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரை சரியான வகையில் பார்வையிடப் படாமல் வெளியாகிவிட்டதாகவும், இது இலங்கை ராணுவ மற்றும் நகர்ப்புற வளர்சி அமைச்சகத்தின் அதிகாரபூர்வமான கருத்தை வெளிப்படுத்தவில்லை என்றூம், அந்தக் கட்டுரை இணையத்தில் இருந்து நீக்கப் பட்டு விட்டதாகவும் இலங்கை ராணுவ இணைய தளத்தில் மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

 

 

மன்னிப்புக் கேட்கவே தகுதியற்ற வகையில் மன்னிப்பைக் கோருகிறோம்: இலங்கை // தினமணி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரையின் தலைப்பு பொதுவாக இனவெறி சிங்களவருக்குள் உள்ள உணர்வுதான். சமூக வலைத்தளங்களில் இப்படி கேவலமாக எழுதித் திரிவார்கள். ஆகவே மன்னிப்பு கேட்பதெல்லாம் உண்மைநிலைக்குப் புறம்பாக, அரசியல் காரணிகளுக்காக செய்யப்படுவது.

இது ஒரு முக்கியமான செய்தி. இதுபற்றிய பதிவுகளை சகோதரர் பெருமாள் அவர்கள் தொகுத்து

வழங்கியது மிகுந்த பாராட்டுக்குரியது.

 

தமிழர்களாகிய நாம் இதனை இந்திய மத்திய அரசு எப்படி கையாளுகின்றது என்பதை

உன்னிப்பாகக் கவனிக்கவேண்டும். இங்கு அவமானப்படுத்தப்பட்டிருப்பவர் தமிழகமுதல்வர்.

தமிழகமக்களின் தற்போதைய தலைவர்,ஏகப்பிரதிநிதி. ஒரு இந்திய தூதரக அதிகாரி தேவயானி

அவமானப்படுத்தப்பட்டபோது அமெரிக்காவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய இந்திய அரசு

இதற்கு என்ன செய்யப்போகிறது?

 

இலங்கையின் அடக்கமற்ற அடாவடித்தனமான இத்தகைய செயற்பாடுகளை இந்தியா எப்படி

எதிர்கொள்ளப்போகிறது? விரைவில் அங்கு நடைபெற இருக்கும் மகாநாட்டில் பங்குபற்றப்போகிறதா?

சுப்பிரமணியசுவாமி போன்ற கோமாளிகள்தான் மோடி அரசின் கொள்கைவகுப்பாளர்களா?

 

அதிமுக கட்சியினரும் பிறதமிழர்களும் டெல்கி நாடாளுமன்றத்தில் பெரிய சலசலப்பை

ஏற்படுத்தவேண்டும். இலங்கைபற்றிய கொள்கை குறித்து விளக்கம் பெறவேண்டும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுக்கோடி மக்களின் முதல்வரையும், நூறு கூடி மக்களின் பிரதமரையும்....

இழிவு படுத்துகின்ற அளவிற்கு....சிங்களவனின், கொழுப்பு கூடி விட்டது.
இனியும்.... வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்தால்.... அது இந்தியா இல்லை, பொந்தியா.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு நாட்டின் 'அடிமை'யாக இருந்தால் இப்படி வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

எட்டுக்கோடி மக்களின் முதல்வரையும், நூறு கூடி மக்களின் பிரதமரையும்....

இழிவு படுத்துகின்ற அளவிற்கு....சிங்களவனின், கொழுப்பு கூடி விட்டது.

இனியும்.... வாய் மூடி பார்த்துக் கொண்டிருந்தால்.... அது இந்தியா இல்லை, பொந்தியா.

என்ன தமிழ் சிறி சொல்லுறியள் ...  முந்தியும் ஒருக்கால் சிறிலங்கா முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று சொல்லி இருந்தவர் அப்போது ஒன்று கொடுத்திருந்தால் சிங்களவன் திருந்தி இருப்பான் 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு நாட்டின் 'அடிமை'யாக இருந்தால் இப்படி வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியதுதான். :)

 

மன்மோகன்சிங் தான்..... அடிமை என்று நினைத்தோம். மோடியுமா?

 

நட்வார் சிங்கின் சுயசரிதத்தில்.... ராஜீவ் காந்தி, ஈழத்தமிழர்கள்  மீது மேற்கொண்ட தவறான அணுகு முறையால் தான், கொல்லப்பட்டார்.... என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

அதனைப் பார்த்தாவது.... இந்தியாவின், வெளிநாட்டு கொள்கைகள் உடனடியாக.... மாற்றியமைக்கப் பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

capturedrw.jpg

இந்தமாதி படம் போடும் அளவுக்கு சிங்களவனுக்கு சிலிர்த்து போட்டுத்தாக்கும்  ...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ் சிறி சொல்லுறியள் ...  முந்தியும் ஒருக்கால் சிறிலங்கா முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கோமாளிகள் என்று சொல்லி இருந்தவர் அப்போது ஒன்று கொடுத்திருந்தால் சிங்களவன் திருந்தி இருப்பான் 

 

https://www.youtube.com/watch?v=wnMB5YfMTjo

 

தமிழரசு,

துவக்குப் பிடியாலை.... சிங்களவனிடம், பிடரியில் அடி வாங்கின ராஜீவ்  காந்தியே... திருந்தவில்லை.

இவங்கள் திருந்துவாங்கள்.... என்று நம்புறீங்களா.....

 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=wnMB5YfMTjo

 

தமிழரசு,

துவக்குப் பிடியாலை.... சிங்களவனிடம், பிடரியில் அடி வாங்கின ராஜீவ்  காந்தியே... திருந்தவில்லை.

இவங்கள் திருந்துவாங்கள்.... என்று நம்புறீங்களா.....

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143638#entry1029712

இந்த செய்தியை பாருங்கோ இது வேற நடக்கிறதாம் நாங்கள்தான் சும்மா கத்திக்கொண்டு இருக்கிறம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10525917_768643599861099_653304116308624

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி பெருமைப்பட வேண்டியதுதான்..  :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி பெருமைப்பட வேண்டியதுதான்..  :D

 

போர்ட்டைப்பார்த்தால் நீங்கள் சொல்வது சரி

அதைவிட

கீழேயுள்ள  வீட்டைப்பார்த்தால்

சிங்களத்தின் தலைக்கனத்துக்கான  காரணம் புரியும் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10525917_768643599861099_653304116308624

 

 

நம் தமிழினம் படங்களிலும்,திரைப்படங்களிலும் வரும் வீராவேசங்களையும் வீரதீரச்செயல்களையும் பார்த்து.......ஒருவித இறுமாப்புடன் அமைதியாகிவிடும்.. :D

 

விசயமொண்டுமில்லாமலே உங்கினேக்கை சாந்தி...சாந்தி...சாந்தி எண்டு சொல்லுறவை.... :lol:

03-rajakase-banner-600.jpg

இது எப்படி..... :)

03-rajakase-banner-600.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடந்ததற்காக வருத்தம் தெரிவிக்கிறேன்.. ஜெயலலிதா அவதூறுக் கட்டுரை குறித்து ராஜபக்சே

கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்பான கட்டுரை வெளியானதற்காக வருத்தப்படுகிறேன். இது எப்படி நடந்தது என்பது குறித்து நான் விளக்கம் கேட்டுள்ளேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோத்தபயா ராஜபக்சேவின் நேரடிப் பொறுப்பில் உள்ள பாதுகாப்புத்துறை இணையதளத்தில், முதல்வர் ஜெயலலிதாவை கேவலமாக சித்தரித்து ஒரு கட்டுரை சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையும், அதற்காக அவர்கள் போட்டிருந்த படமும் மிகவும் கீ்ழ்த்தரமாக இருந்ததால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. ஆரம்பத்தில் இந்த விஷயத்தில் மத்திய அரசு வழக்கம் போல மெத்தனமாகவே இருந்தது. ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த்தின் தேமுதிக தவிர அத்தனைக் கட்சிகளும் இலங்கையின் இந்த செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததால் மத்திய அரசு சற்று அசைந்து கொடுத்தது. திமுக தலைவர் கருணாநிதியே கூட மிகக் கடுமையாக இந்த செயலைக் கண்டித்திருந்தார். கடைசி ஆளாக விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து மத்திய அரசு இலங்கையைத் தொடர்பு கொண்டு ஆட்சேபனை எழுப்பியதைத் தொடர்ந்து கட்டுரையை நீக்கியது இலங்கை அரசு. மேலும் மன்னிப்பும் கேட்டது. இருப்பினும் அதிமுக விடவில்லை. தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி எடுத்து வந்தது. நேற்று நாடாளுமன்றத்தையும் அதிமுக உறுப்பினர்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். இதையடுத்து நேற்று இலங்கை தூதர் சுதர்சன் சேனவிரத்னேவே நேரில் அழைத்து மத்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த விவகாரத்தில் இன்று வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடந்ததற்காக வருத்தப்படுகிறேன். இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளேன் என்றார் ராஜபக்சே. Film industry of South India protests over Sri Lanka's derogatory article Topics: rajapakse, sri lanka, jayalalitha, article, இலங்கை, ராஜபக்சே, ஜெயலலிதா,

http://tamil.oneindia.in

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி தர்பார் -------------

இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்

http://www.youtube.com/watch?v=Ld9IVhVu3X8

 

தென்னிந்திய திரையுலக இயக்குநர்கள் சங்கம் முன்னிலை வகித்து, சென்னை - நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு, சிவகுமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், பாக்யராஜ், விவேக், ஜீவா, விக்ரம்பிரபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"உலகாண்ட தமிழனை அழிக்க நினைக்காதே", "ஆட்டம் போடும் சிங்களனே ஓட்டம் எடு இலங்கைக்கு", "குரங்கு கையில் பூமாலை கோத்தபய கையில் இலங்கை" போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியது: :D 

 

சீமான்:

"தமிழக மக்களையும் இந்தியாவையும் இழிவாக பேசுவது சிங்களவர்களுக்கு புதிதானது அல்ல. இதன் தொடர்ச்சியாக நமது தமிழக முதல்வரையும் இழிவுபடுத்தியிருக்கிறார்கள். நமது முதல்வர், பிரதமருக்கு கடிதம் எழுதியதன் காரணம், தமிழக மீனவர்களை காப்பாற்றுவதற்கும், சிறையில் தவிப்பவர்களைய மீட்பதற்குமான கோரிக்கை மட்டுமே அது.

சர்வதேச கடல் எல்லையை முடிவு செய்யும்போது கச்சத்தீவு யாருக்கு என்பதைத்தான் முதலில் முடிவு செய்வோம். தமிழக மக்களின் உரிமைக்காக கடிதம் எழுதியதை கொச்சைப்படுத்தியது தவறு. இதற்காக இலங்கை அரசு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும். 8 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதியான முதலமைச்சரை இழிவுபடுத்தும்போது இந்திய அரசு அதனை கண்டிக்காமல் இருக்கிறது. இந்த மாதிரி செயலை இலங்கை அரசு தொடர்ந்தால் நாங்களும் போராட்டதை தொடர்வோம்."

//அண்ணே அந்த புலிப்பார்வை பற்றி ஏதாச்சும்....//

 

நடிகர் விஜய்:

"இலங்கைத் தமிழர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்யுமாறு இணையதளத்தில் சித்தரித்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒத்துமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல், என் தாயைத் தவறாக பேசியது மாதிரியே நினைத்து வன்மையாகக் கண்டிக்கிறேன்."

//கத்தி கழுத்துக்கு கீழ நிக்கும் போது இப்படிதான் பேச தோணும்...கத்தி ஓடணும் என்டா நீங்க கத்த தானே ஆகணும்//

 

ஏ.ஆர். முருகதாஸ்

முதலமைச்சரை விமர்சனம் செய்த ராஜபக்சேவின் இந்த நடவடிக்கை கீழ்த்தரமான, கேவலமான செயலாகும். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அசிங்கப்படுத்திய நடவடிக்கை என்றே நான் கருதுகிறேன். இதை நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்றார்."

// ராஐபக்சேக்காக படம் எடுத்து ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்தினது அசிங்கமா தெரியலையா ஆபீசர்ர்ர்ர்ர்//

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.