Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

india%20srilanka_CI.jpg

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.புதுடெல்லியில் அமைந்துள்ள ராட்சரபதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நிலவி வரும் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110101/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய்... போனவங்கள், திருந்தவே.... மாட்டாங்கள்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=143600&hl=

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய்... போனவங்கள், திருந்தவே.... மாட்டாங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=143600&hl=

தமிழ் சிறி,
 
 சூடு, சொரணை, ரோசம், வெட்கம், மானம் எதுமே கிந்தியர்களுக்கு கிடையாதா ...
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,
 
 சூடு, சொரணை, ரோசம், வெட்கம், மானம் எதுமே கிந்தியர்களுக்கு கிடையாதா ...

கிரிக்கெட் விளையாட்டில்... தோற்றாலும்,

அபிமான சினிமா தலைவர்களை பழித்துப் பேசினாலும்....

ரோசம்... பொத்துக் கொண்டு வந்திடும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் விளையாட்டில்... தோற்றாலும்,

அபிமான சினிமா தலைவர்களை பழித்துப் பேசினாலும்....

ரோசம்... பொத்துக் கொண்டு வந்திடும். :D

உண்மைதான் நானும் அவதானித்து இருக்கின்றேன், இந்தியா அரசியல்வாதிகள் இந்திய குடிமக்கள் மத்தியில் அவ்வளவு கேவலமானவர்களா கருதப்படுகின்றார்களா ....... ?  :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி,
 
 சூடு, சொரணை, ரோசம், வெட்கம், மானம் எதுமே கிந்தியர்களுக்கு கிடையாதா ...

நானும்   இது  பற்றி தலையை  உடைத்ததுண்டு

ஆனால் இதில் இந்திக்காரரின்  தலை  தட்டுப்படவில்லை

மாறாக

அதனை  தீர்மானிப்பவனாக  சிங்களம் உள்ளது

எதைக்காட்டி இவ்வாறு ஆட்டுவிக்கின்றான்  சிங்களவன்......???

சு.ம சாமியை அனுப்பினால் உறவை நன்றாக வளர்த்துவிடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு சோனியாவின் குடும்பி இலங்கையின் கையில் இருப்பதால்தான் இந்தியா இலங்கையிடம் மண்டியிடுகிறதெண்ட்டோம்.

இப்போ மோடியின் எதை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்போகிறோம்.

இலங்கை இஸ்ரேலுக்கே ராசதந்திரப் பாடெமெடுக்கும் அளவுக்கு பூந்து விளையாடுது. நாங்க தான் அவர்களை மோடயன் என்று பழித்தபடி நாட்களை கழிக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும், சுசாமியை வளைத்து விட்டார்கள். சுஸ்மாவையும் வளைத்துவிட்டார்கள். மோடி வரமுன்னே ஒரு பலமான லாபியை டெல்கியில் உருவாக்கி விட்டார்கள் நாமும் காய் நகர்த்த வேண்டும் என்று நான் எதிர்வுகூறினேன். அந்த எதிவுகூறல் ஒன்றும் பெரிதல்ல, சின்ன பிள்ளை யுன் சொல்லி இருக்க கூடியது தான். ஆனால் அதை கூட புரிந்து கொள்ளாமல் சுசாமியை நக்கல் அடிப்பதிலும் சோனியாவை பழிப்பதிலும் காலத்தை போக்கி விட்டு, இப்போ மலங்க மலங்க முளிக்கத்தான் முடியும்.

இப்ப... என்ன, சொல்ல வாறீங்கள்?

ஒண்ணுமே.... புரியல......

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும், சுசாமியை வளைத்து விட்டார்கள். சுஸ்மாவையும் வளைத்துவிட்டார்கள். மோடி வரமுன்னே ஒரு பலமான லாபியை டெல்கியில் உருவாக்கி விட்டார்கள் நாமும் காய் நகர்த்த வேண்டும் என்று நான் எதிர்வுகூறினேன். அந்த எதிவுகூறல் ஒன்றும் பெரிதல்ல, சின்ன பிள்ளை யுன் சொல்லி இருக்க கூடியது தான். ஆனால் அதை கூட புரிந்து கொள்ளாமல் சுசாமியை நக்கல் அடிப்பதிலும் சோனியாவை பழிப்பதிலும் காலத்தை போக்கி விட்டு, இப்போ மலங்க மலங்க முளிக்கத்தான் முடியும்.

அடப் பாவி....

இவ்வளவு.... விஷயம் தெரிந்த நீங்கள்,

இது வரை, ஏதாவது....... ஒரு, உருப்படியான வேலை செய்யாமல்,

என்னுடன் ஏன் வீணாய்.... அலட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உருப்படியாய் செய்ய முயற்சியாமலில்லை. புலம் பெயர்ந்தவர்களிடம் பேசிப் பார்த்ததில் புரிந்த உண்மை - அநேகமாக அனைவரும் ஒன்றில் உங்களை போல முரட்டு பக்தர்களாக இருக்கிறார்கள் அல்லது பக்க தேசிய யாவாரிகளாய் இருக்கிறார்கள்.

கூட்டமைப்பில் பெரிய தலைகளை அணுக முடியவில்லை. ஒருவரை மாகாண மட்டத்தில் அணுகிய போது வந்த பதில் - இந்தியாவின் அழைப்புக்கு காத்திருக்கிறோம் (அட கருமமே அதுதுள்ள அவங்க மோடியின் பாட்டியையும் வளைச்சுடுவாங்களே).

இன்னொருவர் - விடுங்க அவர் வல்வெட்டித்துரை நகர சபை ச்ண்டையில ரொம்ப பிஸி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார கொள்கை என்பது ஆட்சி மாறும்போது மாறிவிடும் கட்சிக் கொள்கையல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இந்தியாவை நகர்த்துபவர்கள் எப்போதுமே அதிகாரிகள்தான். அதிகாரிகளின் சொல்லுக்கு ஏற்பவே ஆட்சியாளர்கள் செயற்படுகிறார்கள். அதிகாரிகளைப் பொறுத்தவரை இலங்கைப் பிரச்சினையில் இலங்கையுடன் சேர்ந்து செல்வதே நல்லதென்று யோசிக்கிறார்கள். அதைவிடவும் ராஜீவ் கொலையென்பது கட்சி ஆதரவுக்கு அப்பால் பல இந்தியர்களாலும் ஆத்திரத்துடன் பார்க்கப்பட்ட ஒரு விடயம். ஆகவே இந்த ஆத்திரம் சோனியாவின் பழிவாங்கலை இலகுவாக்கியது.

இப்போதிருக்கும் பாரதீய ஜனதாவிற்கு தமிழகத்திலிருந்து எந்த அழுத்தமுமில்லை. மோடியின் பதவியேற்பு விழாவிற்கு அனைத்துத் தமிழக அரசியகட்சிகளினதும் அழுத்தங்களுக்கு அடிபணியாது மகிந்தவை அழைத்ததே அதற்கு உதாரணம். மேலும் தமிழர்களுக்கு எதிரானவர் என்று பலராலும் நம்பப்படும் சுப்ரமணிய சுவாமியை தமது கொள்கை வகுப்புப் பிரிவின் தலைவராக்கி அவரையே இலங்கைக்கு முதலாவது அரச பிரதிநிதியாக அனுப்பி, அவர்மூலம் சர்வதேச விசாரணை பற்றி கிண்டலடித்தது மட்டுமல்லாமல், இலங்கை பயப்படத் தேவையில்லை என்கிற செய்தியையும் மோடி சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இலங்கை ராணூவம் வருடம்தோறும் நடத்தும் ராணூவப் பட்டறையில் கலந்துகொள்ளவென இந்திய உயர் ராணுவக் குழுவொன்றும் அங்கே அனுப்பப்பட இருக்கிறது. இப்போது இரு நாட்டு நலன்களை விரிவாக்குவது பற்றி ஆராய்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் நடக்கலாம்.

காங்கிரஸ் வீடு போகும், மோடி அரசாட்சி ஏறுவார், ஈழத் தமிழரின் வாழ்வில் வெளிச்சம் வரப்போகிறதென்று எதிர்பார்த்ததெல்லாம் வீணே.

எமக்கென்று ஒரு சுயாட்சிக்கான காலமொன்று இருந்தது. நாம்தான் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு விட்டோம். இப்போது அது வெகுதூரம் போய்விட்டது.

எவரும் எமக்காக நல்லது செய்வார் என்கிற நம்பிக்கையும் எனக்கில்லை, எம்மாலாவது ஏதாவது செய்யலாம் என்கிற  நம்பிக்கையும் எனக்கில்லை.

நடப்பதை வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பதைத்தவிர. இதைச் சொல்வதற்காக வருந்துகிறேன், ஆனால் வேறு எதுவும் எம்மால் செய்யமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு இயந்திரம் பழசு அதில்தான் மாற்றம் இல்லை ஆனால் மோடி வித்தியாசமானவர்,அவரது முக்கிய இரு தேர்தல் வாக்குறுதி இந்தியாபொருளாதார வளர்ச்சி,இந்திய பாதுகாப்பு.மோடிக்குத்தெரியும் இலங்கைதான் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எப்பவும் அச்சுறுத்தல் என்பது.பனிப்போர் காலத்தில் இலங்கை இந்தியாவை உளவு பார்க்கும் தளமாக அமெரிக்காவை இலங்கை அனுமதித்தமை இந்திய பாகிஸ்தான் போரில் இலங்கை பாகிஸ்தான் விமானப்படைக்கு தளமாக இலங்கை செய்ற்பட அனுமதித்தமை இப்ப சீனாவின் முத்துமாலை திட்டத்திற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் அமைப்பு. இவ்வளவு காலமும் சீனாவிற்கு ப்றக்கிற சிங்கள ஜனாதிபதியும் சிங்களவர்களும் புதிதாக இந்திய இலங்கை உற்வுகளுக்கு கவலைப்படுமளவிற்கு நிலமை உள்ளது.

சு.சுவாமியை வைத்து நல்லா மிரட்டிகிறார்கள் , இதை கூட புரிய முடியாதா நிலையில் எமது அரசியல் இருக்குது, சு,சுவாமியால் எதுவும் முடியாது,அவருக்கு நாம்

நினைப்பதி போல் ப.ஜ.கா வில் பெரிய செல்வாக்கு இல்லை, இவர் இப்போது செய்வதெல்லாம், தந்து தமிழ் இன எதிரி பட்டத்தை வைத்து தமிழரை மிரட்டி அடிபணிய வைப்பதே. இவர் நடத்துவது ஒரு உளவியல் போர் மட்டுமே , இது அறியாமல் பலர் இதுக்கு பலியாகி விட்டார்கள் என்பதே சோகமான உண்மை,

உந்த ஆரியர் திருந்தவே மாட்டார்கள் 

உந்த ஆரியர் திருந்தவே மாட்டார்கள் 

இப்படியே ஆரியர்,பிராமணர் ,இந்துதுவா என்று காலம் தல்லுங்கோ, இதை விட்டால் உங்களுக்கு வேரு என்ன தெரியும்

பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும், சுசாமியை வளைத்து விட்டார்கள். சுஸ்மாவையும் வளைத்துவிட்டார்கள். மோடி வரமுன்னே ஒரு பலமான லாபியை டெல்கியில் உருவாக்கி விட்டார்கள் நாமும் காய் நகர்த்த வேண்டும் என்று நான் எதிர்வுகூறினேன். அந்த எதிவுகூறல் ஒன்றும் பெரிதல்ல, சின்ன பிள்ளை யுன் சொல்லி இருக்க கூடியது தான். ஆனால் அதை கூட புரிந்து கொள்ளாமல் சுசாமியை நக்கல் அடிப்பதிலும் சோனியாவை பழிப்பதிலும் காலத்தை போக்கி விட்டு, இப்போ மலங்க மலங்க முளிக்கத்தான் முடியும்.

அண்ணை தயவு செய்து உலகத்திலை என்ன நடக்குது எண்டதை ஒருக்கா பாத்து போட்டு எழுதுங்கோ... !!!

2008 ல் லை BRIC  அமைப்பு  Brazil, Rusia, India, China  நாடுகளால் பேரளவிலை ஸ்தாபிக்க பட்டது... !!   ஆனால் 2010 ம் ஆண்டு அது  தென்னபிரிக்காவையும் இணைத்து  திடமான செயற்திட்டத்தோடு BRICS எனும் அமைப்பாக  கூட்டாக செயற்பட்டது...  

அவர்களின் முக்கிய செயற்திட்டமே  அமெரிக்க ஐரோப்பிய கோலோச்சலுக்கும் பெரியண்ணன் தனத்துக்கும்  முடிவு கட்டுவதுக்காகவே.... !!   

2014 ல்  மோடி கலந்து கொண்ட மிக முக்கியமான கூட்டங்களில் இது ஒண்று... 

BRICS_leaders_in_Brazil.jpeg

இந்த கூட்டத்தின் முடிவின் படியான செயற்திட்டங்களின் படியே  ஐநாவில்  இஸ்ரேலுக்கு எதிரான  நிலைப்பாட்டை முதல்முதலாக  இந்தியா எடுத்துக்கொண்டது...  1997 க்கு பின் அண்மைய காலங்களில் அமெரிக்காவை வெளிப்படையாக இநதியா பகைத்துக்கொள்ள எடுத்துக்கொண்ட  முதல் நடவடிக்கை  இதுதான்...  அதுவும் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மாவை எதிர்த்து எடுத்து கொண்ட  நடவடிக்கை என்கிறது இந்திய ஊடகங்கள்... 

இந்த  துணிவான நடவடிக்கையை இந்தியா நீண்டகாலம் தொடர்ந்து செய்வதாக இருந்தால் இந்தியா  அமெரிக்க சார்பு பொருளாதார கொள்கையில் இருந்து வெளியில் வந்து சீனாவை போண்ற உத்திகளை கையாள்வது அவசியம்...    அதற்கான அடிகளின் ஒண்றுதான் இலங்கையை அடிமை படுத்துவது இல்லை  சமதரப்பாக அங்கீகரிப்பது...   

இந்தியாவின் 120 கோடி மக்களின் நலன்களோடு பார்த்தால்  35 லட்ச்சம் தமிழர்கள் பிரச்சினையோ 2 கோடி சிங்களவரோடான நண்போ இல்லை பகைமையோ   ஒண்றும் பெரிதல்ல....  

இந்தியாவுக்கு இனிவருங்காலங்களில் பாக்கிஸ்தான் கூட நட்பு நாடாகலாம்...  

(குறிப்பு :-  இண்றைய திகதியில்  இந்தியாவை தோற்கடிப்பது  அமெரிக்க தரப்புக்கு ஒண்றும் பெரிய வேலை இல்லை...  )

இந்த உலக சூழலில் ஈழத்தமிழர்  தரப்பு உலக அரசியல் சுழலில் சிக்கி நிற்பதுதான் உண்மை... 

ஆனால் தயா ,2 கோடி சிங்கல்வனை நட்பாக்குவதால் என்ன லாபம், அதை தமிழ் ஈழ தனி நாட்டை உருவாக்கி அதை தனது நட்பு நாடாக்கி திருகோணமலை, மற்றும் இந்து சமுத்திர முக்கிய பிரதேசங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரலாமே, ஏண் சீனாவின் தோழன் ஆன இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்,என்னைப் பொறுத்தவரையில் நாம் மோடி அரசு பற்றி அவசரப்பட்டு முடிவு எடுக்கிறோம், இதை அறிந்து தான் சு.சுவாமி போன்றோர் எம்மை மிரட்ட முயர்சி செய்கின்றர் (குரைக்கிற நாய் கடிக்காது),இவர் கதைக்கும் விததை பார்த்தாலே விளங்கும், இது ராஜ தந்திர நடவடிக்கை இல்லை, தமிழனை மிரட்ட்ப் பார்க்கும் நாடகம். நாம் இதுக்கு panic reaction கொடுக்கிறோம்

சீனா இந்தியாவின் எதிரி நாடு எனும் நிலை மாறி நீண்ட காலம் ஆகிவிட்டது...   ஆயுத ரீதியில் உரசி கொள்ளும் நடவடிக்கைகளில்  சீனாவும் இந்தியாவும் ஈடுபடுவதில்லை...   

காரணம் சீனா பொருளாதாரத்தை வகையில் கொள்கை வகுப்பை செய்து கொண்டு இருக்கிறது...  ஆசிய பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பெரும் வல்லரசுகளான சீனாவும் இந்தியாவும்  மோதிக்கொள்வதால் பலம் பெறப்போவது  அமரிக்காவும் ஐரொப்பிய நாடுகளும் தான் என்பதில் இந்தியா சீனா இரண்டு நாடுகளும் தெளிவாக உள்ளன...

அதோடு இந்திய அரசு  தனது சந்தையை வெளிநாடுகளுக்கு திறந்து விட்டதின் காரணமாக பெரும் பயன் பெற்ற நாடுகளில் சீனா மிக முக்கியமானது...  உலகத்தின் பெரும் சந்தைப்படுத்தல்களில் இரண்டாவது பெரும் சந்தையை இழக்க சீனா எப்போதும் துணியப்போவது இல்லை...

இதுதான் இண்றைய இந்திய நிலைப்பாடு...  

 இதில்  இலங்கை பெறும் பயன் என்பது அதன்   கேந்திர முக்கியத்துவம் சார்ந்து இருக்கிண்றன...   உலக சனத்தொகையின் பெரும் பகுதியை ஆசியா  கொண்டு இருக்கிறது...   அந்த ஆசிய நாடுகளுக்கான எண்ணை வர்த்தகத்தை  ஐரோப்பிய , சீன , அமெரிக்க , இந்திய  நிறுவனங்களே கொண்டு இருக்கிண்றன...  

இதில்  சுயஸ்கால்வாய் ஊடாக  அரபிக்கடல் வரும் எந்த கப்பலும்  இலங்கை கடல் எல்லைக்குள் வராமல்  ஆசிய நாடுகளை செண்று அடைவது கடினமாக இருக்கும்...    காரணம் இலங்கையின் தென் கடல் எல்லை 300 கடல் மை தூரம் கொண்டது  கிட்டத்தட்ட 600 கிலோ மீற்றர்கள்...   இந்த 600 கிலோ மீற்றரை சுத்தி சர்வதேச கடல் எல்லை ஊடாக  கப்பல்கள் செல்வதாக இருந்தால்  36 மணிநேரத்துக்கும் அதிகமாக பிடிக்கும்...  ஆகவே அந்த நாடுகளின் நிறுவனங்களும் நாடுகளும்  இலங்கையுடன் இணக்கமாக போக விரும்புகின்றன... 

இது இலங்கைக்கு தானாக அமைந்த  வலு...   

ஒருவேளை  வைகோ  ஆசைப்படுவது போல சேது கால்வாய் வெட்டப்பட்டால்  தமிழர்களின் தர்ப்பின் பலம் ஓங்கலாம்... 

முன்பு சோனியாவின் குடும்பி இலங்கையின் கையில் இருப்பதால்தான் இந்தியா இலங்கையிடம் மண்டியிடுகிறதெண்ட்டோம்.

இப்போ மோடியின் எதை பிடித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லப்போகிறோம்.

இலங்கை இஸ்ரேலுக்கே ராசதந்திரப் பாடெமெடுக்கும் அளவுக்கு பூந்து விளையாடுது. நாங்க தான் அவர்களை மோடயன் என்று பழித்தபடி நாட்களை கழிக்கிறோம்.

கோசன் இங்கு சிங்கள அரசு ஒன்றும் பூந்து விளையாடவில்லை. தமிழ் மக்களை அடக்கி அடிமைகளாக வைத்திருக்கவேண்டும் என்பதில் தன்னைவிட மிக அதிக அக்கறையுடன் இந்தியாவில் அதிகாரத்தை தீர்மானிக்கும் ஒரு கூட்டம் உள்ளது என்பதை அவர்கள் சரியாக விளங்கி வைத்துள்ளார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தான் அதிகாரத்தை கட்டுபடுத்தும் கூட்டம். 1978 ல் தமிழர் பிரச்சனையை தொடர்பாக பரப்புரைக்காக திரு அமிர்தலிங்கம் இந்தியா சென்றிருந்த போது அவரை இந்த கூட்டம் தூற்றியது. இந்து பத்திரிகையில் அமிர்தலிங்கத்தை தூற்றி ஆசிரிய தலையங்கமே அன்று எழுதப்பட்டது. தமிழ்மக்களின் விடுதலைக்காக எவர் போராடுகிறார்களே அவர்களுக்கு எதிராகவே இந்த வர்க்கத்தினர் செயற்படுவர்.  தமிழ் மக்களின் துரதிஷ்ரம் இவர்கள் இந்தியாவில் செல்வாக்குடன் இருக்கிறார்கள். இது தான் வரலாறு.

Edited by tulpen

அப்படியானால்,

1.யார் இந்த கூட்டம் ?

2. அவர்கள் என் தமிழரை அடக்க

முயல்கிறார்கள் ?

3. தமிழரை அடக்குவதால் இவர்களுக்கு என்னா பயன்?

4.தமிழார் வென்றால் இவர்களுக்கு

என்ன இழப்பு??

இவற்றுக்கான பதில்களை இனம்கண்டு அதை நாம் முறியடிக்க வேண்டும்,அப்படி செய்தால் மட்டுமே எமக்கு விடிவு !!

  • கருத்துக்கள உறவுகள்

தல நீங்க territorial waters ஐயும் exclusive economic area வையும் போட்டுக் குழப்புறீங்க.

கடல் எல்லை (territorial waters) எல்லா நாட்டுக்கும் 12 கடல் மைல்தான். EEA கூட 200 கடல் மைல்தான், கடல் எல்லையில் கூட innocent passage எனும் வர்தக போக்குவரத்துக்கு வழி விட்டே ஆகவேணும். இதில் 600 கடல் மைலுக்கு இலங்கை போக்குவரத்தை தடை செய்யும் என்பதெல்லாம் அம்புலிமாமாக் கதை.

தவிர BRICS என்பது ஒரு பொருளாதார அமைப்பு இதற்கு எந்த ராணுவ அரசியல் கூட்டும் இல்லை. கிட்டத்தட்ட G8போல.

இதைப்போய் அமெரிக்காவுக்கு எதிரான ராணுவ, அரசியல் அமைப்பாக நீங்க சொல்குவது நகைப்புக்குரியது.

அமெரிக்காவின் ஜப்பானுக்கு அடுத்த நெருங்கிய ஆசிய நண்பன் இந்தியா. இந்தியாவின் மிக நெருங்கிய நண்பன் அமெரிக்கா. இதுதான் யதார்த்தம்.

இலங்கை விடயத்தில் மேற்கு நாடுகள் கடும் நிலைப்பாடு எடுத்தாலும், முடிவில் அவை இந்தியாவின் முடிவுக்கு கட்டுப்படும், ஏனென்றால் அவர்களின் தெற்காசிய முகவர் இந்தியா தான்.

எனவேதான் டெல்கியில் நாம் பலமாக லாபி செய்வது அவசியமாகிறது. இதை உணர்ந்த இலங்கை எப்போதோ தனக்கொரு நட்பு வட்டத்தை உருவாக்கி விட்டது.

நாம் இன்னும் டீமானையும் திருமுருகனையும் நம்பிக்கொண்டு சீரழிகிறோம்.

http://en.m.wikipedia.org/wiki/Territorial_waters

  • கருத்துக்கள உறவுகள்

.... நாம் இன்னும் டீமானையும் திருமுருகனையும் நம்பிக்கொண்டு சீரழிகிறோம்.

http://en.m.wikipedia.org/wiki/Territorial_waters

டீமானையும், தெருமுருகனையும் நம்பி நீங்கள் சீரழிய வேண்டாம், நீங்களே நேரடியாக டெல்கியில் லாபி செய்வதை யாரும் இங்கே (தமிழகத்தில்) தடுத்தார்களா?

உங்களின் இயலாமைக்கு இங்குள்ளவர்களை ஏன் நோக வேண்டும்?

அண்ணை கோசான் EEZ  எண்டது Exclusive Economic Zone  என்பதை குறிக்கும்...   நீங்கள் ஏதோ EEA  என்ன கோதாரியை உளறுகிறீர்களோ  உங்களுக்கு தான் வெளிச்சம்... 
 
இலங்கையின் தரைப்பகுதியை ( 65,610Km2) போல 8 மடங்கு (537,000 km2)பெரிய கடல் பகுதி இலங்கையின் பொருள் சார் நடவடிக்கைகளுக்காக பெற்று இருக்கிறது... 
 
ஒரு கடல் ( நொட்டிக்) மைல் என்பது இரண்டு கிலோமீற்றருக்கு அண்ணளவாக   வருவது... 
 
நீங்கள் தந்த இணைப்பிலையே  பொருள் சார் கடற்பிரதேசம் அந்த நாடுகளின் இறைமைக்கு உட்பட்டதாகவே குறிப்பிட பட்டு இருக்கிறது
 
 Innocent passage is a concept in law of the sea which allows for a vessel to pass through the territorial waters of another state subject to certain restrictions. TheUN Convention on the Law of the Sea defines innocent passage as:

Passage is innocent so long as it is not prejudicial to the peace, good order or security of the coastal State. Such passage shall take place in conformity with this Convention and with other rules of international law.[
http://en.wikipedia.org/wiki/Innocent_passage
 
எங்கேயும் கட்டாயம் எல்லா கப்பல்களுக்கும் போக்கு வரத்துக்கு வளிசெய்யப்பட வேண்டும் எண்று குறிப்பிடப்படவில்லை...

மிக முக்கியமாக  தயவு செய்து அரை குறை விளக்கத்தோட  வந்து எதையாவது குழப்பி அடிக்காமல்  ஆற அமர இருந்து நண்றாக படிச்சு போட்டு வந்து  எங்கட நேரத்தை வீணடியுங்கள்... 

இதுதான் நான் சொல்லும் சேது

04kbk.jpg

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.