Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட நாடு, எங்கட நாடு, அவங்கட நாடு எல்லா நாட்டுலேயும் லஞ்சம் ஒரே மாதிரி தான்..... :lol::lol::lol:

அட சாமி லஞ்சம் என்னமோ ஒரே மாதிரி தானப்பு. அதை என்னத்து பயன்படுத்துறம் என்டது தான் முக்கியம். விளங்குதே???

தண்ணி எல்லா நாட்டிலையும் ஒரே மாதிரி தான். ஆனா அதுவே மலையில இருந்தா பனிக்கட்டி. போத்தில்ல இருந்த குடிநீர். அணையை தாண்டி வந்த உயிரை கொல்லும் வெள்ளம், சுனாமியும் அதுவே தான்! இப்ப விளங்குதே??

கடமையை செய்யிறதுக்கு குடுக்கிற லஞ்சத்துக்கும், கடமைய மீறுற லஞ்சத்துக்கும் வித்தியாசம் விளங்கிட்டுதா அதி புத்திசாலி?

  • Replies 80
  • Views 9.2k
  • Created
  • Last Reply

இங்கை இந்திய அரச அணுகுமுறையை பற்றி பேசுறீங்களோ இல்லை லஞ்சத்தை பற்றியா....???

லஞ்சம் என்பது குடுத்து சட்டத்தை மாற்ற முடியாது வேணும் எண்டா கொஞ்சம் வளைக்கலாம்...!

லக்கி எங்களின் அதிஸ்ரமோ துரதிஸ்ரமோ தமிழீழ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அன்பளிப்போ, லஞ்சமோ குடுக்க முடியாது... மிகக்கடுமையாய் வாட்டிப்போடுவார்கள்...!

வெளிநாடுகளில் இருந்து போபவர்கள் எல்லாம் இலங்கை படைகளுக்கும் சிங்களவனுக்கும் காசைக்குடுத்து வேலை முடிச்சுக்கொண்டு வேகமாய் போய் வவுனியா போடரிலை, லைனிலதான் நிக்கவேணும்....! காசைக்குடுத்து முன்னாலை போக ஏலாது எண்ட கடுப்பிலை திரும்பிவந்து கத்துறதை கேக்கலாம்....!

எங்கட ஈழத்தில வாங்க மாட்டர்களே ஒளிய எங்கட தமிழ் ஆக்கள் லஞ்சம் குடுப்பினம்.... அதை உங்கட யாரோ வாங்கிறது எண்டது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு தயவுசெஞ்சு வேண்டாமே...! விட்டுவிடுங்கோ...

யோவ் வடிவேலு மேலே பாரும் நான் எழுதியது வரவில்லை குசும்பு எழுதியதை என் தலையில் கட்டப்பார்கிரீரா :lol::lol: :oops: :oops: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote="ஈழவன்85

யோவ் வடிவேலு மேலே பாரும் நான் எழுதியது வரவில்லை குசும்பு எழுதியதை என் தலையில் கட்டப்பார்கிரீரா :lol::lol: :oops: :oops: :twisted: :twisted: :twisted:

என்ன ஈழவன் வடிவேலுவைக் கலாய்க்கின்றீர்.

அவர் முட்டாள் தனமாக பதில் சொல்லமாட்டேன் என்று தான் எழுதியுள்ளார். ஆனால் முட்டாள்த் தனமாக எழுத மாட்டேன் என்று எழுதவில்லைக் கண்டீரோ??

அவரின் பாட்டன் பெயர் :( வடிவேலுவாம் :roll: :roll:

சிலவேளை யாழினி ரொட்டிக்காரருக்கும் மீனாவைப் போல் ஒரு பாட்டி இருந்திருப்பா. அதனால் அவவை வைத்து விளம்பரம் எடுத்திருப்பார். :(:(

வடிவேல் புலம்பல்:

ஒரு விடுதலைப்போராளியின் இயக்கப்பெயர்: சந்திரிகா!!! விசாரித்து பார்க்கவும்!

ஐயா வெடிவேலு சந்திரிகா என்ற பெயரில் (உண்மைப்பெயரில்) தமிழ்ப் பெண்களே இங்கு சுவிசில் உள்ளார்கள் அது உமக்குத் தெரியுமா???

வசம்பு என்ன இப்போ வட நாட்டுகாரருக்கு ஆதரவு குரல் பலமாக இருக்கு என்ன விசயம் ? :P :P

அது சரி புலிகளை எதிர்ப்பது என்று ஆச்சு வட நாடு என்ன நக்குதான் கால் மாடுமா இல்லை கவு...குளேயுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு விவகாரம்- `கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது'

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஜூலை முதல் வாரத்திலிருந்து முயற்சி

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

கலைஞரின் வீட்டில் கடிதம் கையளிப்பு

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

கலைஞரின் செயலாளருடன் தொலைபேசியில் தொடர்பு

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பழ.நெடுமாறன் கருத்து

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தரான சுப.வீரபாண்டியனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, `கலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸுடன் நான் தொடர்பு கொண்டு நிலைவரங்களைத் தெரிவித்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ராமதாஸ் என்னைக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கு ராமதாஸ் தயாராயிருக்கிறார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இயங்கை சென்றுவிட்டதாகவும் ஒரேயொருவர் மாத்திரம் (சிவாஜிலிங்கம்) சென்னையில் நிற்பதாகவும் கொளத்தூர் மணி மூலம் அறிந்தேன். அத்தகவலை டாக்டர் ராமதாஸுக்கு தெரிவித்த போது, சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு என்னை அவர் கேட்டார் சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப்

`கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது' = சால்ஜாப்

சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்குகையளித்திருந்தார்.

இவருக்கு தற்போது alzheimer எனும் வியாதி போலும்! தமிழீழத்தை ஏளனப் படுத்துவதில் என்ன நன்மை, இவருக்கு? சாதாரணமாக "நான் தற்போது சந்திக்கும் நிலையில் இல்லை" என்று அறிக்கை விட்டிருந்தாலே போதுமே!

பயந்துவிட்டார் கருணாநிதி! ஆமாம் பயந்து ஒரு பெரிய வரலாற்றுத் தவறைச் செய்துவிட்டார், கருணாநிதி!

எங்கே "மறுப்பு" தெரிவித்ததென்று உலகம் அறிந்தால் தனக்குத் "தமிழீழத் துரோகி"ப் பட்டம் சூட்டி விடுவார்களோ, என்ற பயத்தில், "உண்மைக்குப் புறம்பாக" "சால்ஜாப்" விடுகிறார்!

இணைப்புக்கு நன்றி கந்தப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் மரபு மீறல்!

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திப்பதற்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த ஒரு மாதமாக தமிழ்நாட்டு அரசியிலின் சித்து விளையாட்டுகளுக்குள் சிக்குப்பட்டு பெரிதும் அல்லற்பட்டு விட்டார்கள்.

முதல் இரண்டு வராங்கள் தமிழ்நாட்டில் நின்றபடி கலைஞர் கருணாநிதியை சந்திக்க முயன்றனர். ஆனால் கலைஞரை சந்திக்க முடியவில்லை. பின்பு புதுடெல்லி சென்று அங்கு ஒரு வாரம் தங்கி பிரதமர் மன்மோன்சிங்கை சந்திக்க முயன்றனர். அதுவும் நடைபெறவில்லை. ஆயினும் சிறிது ஆறுதல் அளிக்கம் வண்ணம் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத்துறையின் இணை அமைச்சர், வெளியுறவுத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளவர் போன்றவர்களுடன் சந்திப்பை நடத்த முடிந்தது. மன்மோகன்சிங்கை இனி சந்திக்க முடியாது என்று உறுதியாகத் தெரிந்த பின்னர், சென்னை திரும்பிய த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது கலைஞரை சந்திப்பதற்கு ஒரு வாரமாக முயற்சி செய்து அதுவும் கடைசி வரை கைகூடவில்லை.

பெரிதும் எதிர்பாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் இந்தியப் பயணம் இப்படி ஆனதற்கு கலைஞர் கருணாநிதியே காரணம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அதே வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பக்கமும் தவறுகள் இருப்பதை மறுப்பதற்கில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஈழத் தமிழினத்தின் பிரதிநிதிகளாக இந்தியா சென்றார்கள். ஒரு இனத்தையோ அல்லது ஒரு நாட்டையோ பிரதிநிதித்துவப் படுத்துபவர்கள் இன்னும் ஒரு நாட்டிற்கு செல்கின்ற பொழுது, அங்குள்ள அரச தரப்பினரை சந்திப்பதே உலக அரசியலின் மரபு. முன்னைய கால கட்டத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் தமிழக முதலமைச்சராக இருந்த எம்ஜிஆருக்கே முன்னுரிமை கொடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஆகவே தமிழீழத்தின் சார்பில் செல்கின்ற ததேகூட்டமைப்பினர் தமிழ்நாடு செல்கின்ற பொழுது, கலைஞரையே முதலில் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தமிழ்நாட்டு முதலமைச்சருடன் சந்திப்பிற்கு சரியான ஏற்பாடுகள் இன்றியும், தமிழ்நாடு முதலமைச்சரின் எழுத்து மூல ஒப்புதல் இன்றியும் தமிழ்நாடு சென்றுள்ளார்கள். அத்துடன் மரபை மீறி எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான வைகோவுடனான சந்திப்பையும் நடத்தியிருக்கிறார்கள்.

ததேகூட்டமைப்பினர் நேரடியாக புதுடெல்லி சென்றிருந்தால் இச் சர்ச்சைகளை தவிர்த்திருக்க முடியும். புதுடெல்லியில் வைகோவை சந்தித்திருந்தால் எவ்வித பிரச்சனையும் வந்திருக்காது. சில வேளைகளில் இந்தியப் பிரதமரையும் சந்தித்திருக்க முடியும்.

ஆனால் ததேகூட்டமைப்பினர் இப்படி மரபு மீறி நடந்ததற்கு கலைஞர் மீது இருக்கும் அதீத நம்பிக்கையே காரணமாக இருக்க முடியும். இன்றும் பெரும்பாலான ஈழத் தமிழர்கள் கலைஞரை தமிழினத் தலைவர் என்று நம்புவது போன்று அவர்களும் நம்பிவிட்டார்கள். வைகோவை சந்திப்பதை கலைஞர் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார் என்று எண்ணி மோசம் போய்விட்டார்கள். வாழ்வா, சாவா என்ற பிரச்சனையில் கலைஞர் தன்னுடைய அரசியல் விளையாட்டைக் காட்டுவார் என்று யார்தான் நினைத்திருப்பார்கள்?

கலைஞர் தான் வெறும் அரசியல்வாதிதான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். தனக்கு இனப்பற்றும் பெருந்தன்மையும் சிறிதும் இல்லை என்பதையும், தனது அரசு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் பதவியில் இருக்கின்ற ஒரு சிறுபான்மை அரசு என்பதையும் கலைஞர் உணர்த்தி விட்டார். எம்மவர்கள் இதை உணர்ந்து அடுத்த முறை சரியான முறையில் இந்திய அரசை அணுக வேண்டும்.

சபேசன்

நீங்களும் கலைஞரைச் சாட வேண்டுமென்றே கருத்தைத் திணித்தள்ளீர்களே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தவறை ஏதோ சிறுபிள்ளைகளின் தவறு போல் சமாளிக்கப் பார்க்கின்றீர்கள். ஒரு மாநிலத்திற்குச் சென்று எவரும் முதலில் மரியாதை நிமித்தம் முதலமைச்சரைத் தான் சந்திப்பார்கள். ஆனால் இவர்கள் அதைவிடுத்து மற்றவர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு கடைசியாக அவரை அணுகியதாகச் சொல்வதில் எந்தவிதத்திலும் நியாயமில்லை. உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலைஞரைச் சந்திக்க நினைத்திருந்தால் இராமதாஸ் அல்லது வீரமணி மூலமாக எளிதில் அணுகியிருக்க முடியும். அதனை இவர்கள் செய்யாது விட்டது யாரையோ திருப்திப் படுத்த கலைஞரை அவமதித்ததாகவே கருத முடியும்.

அதைவிட நீங்கள் சொல்வது போல் கலைஞரைத் தவிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேரடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முயன்றாலும் பிரதமர் கலைஞரின் ஆலோசனை பெறாமல் இவ்விடயத்தை கையாள விரும்ப மாட்டார். அதன் பின்பு கலைஞரைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அணுகச் சொல்கின்றீர்கள்.

நாம் அடுத்தவரிடம் எதிர் பார்க்கும் மரியாதையை முதலில் நாமும் மற்றவர்களுக்குக் கொடுத்து எதிர் பார்ப்பது தான் சிறந்தது.

தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு விவகாரம் கருணாநிதியின் கூற்று உண்மைக்குப் புறம்பானது

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து விளக்கிக் கூறுவதற்காக அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியை சந்திப்பதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டிருந்த போதிலும், அவ்வாறு அவர்கள் தன்னைச் சந்திப்பதற்கு முயற்சித்ததாகக் கூறுவது வெறும் கட்டுக்கதையென்று அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லையென்ற கலைஞரின் கூற்று உண்மைக்குப் புறம்பானது என்று தமிழக கட்சிகளின் வட்டாரங்களும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் அவர்களுக்கும் இடையேயான சந்திப்புகளை ஏற்பாடு செய்வதில் முன்னின்று பாடுபட்ட முக்கியஸ்தர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூலை முதல் வாரத்திலிருந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத் தலைவர்களைச் சந்திப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் சந்திப்புகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தமிழகத்தின் சகல கட்சிகளினதும் தலைவர்களுக்கு சென்னையில் நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தமிழரசுக் கட்சியின் கடிதத்தலைப்புகளில் தானே கையெழுத்திட்டு கடிதங்களை அனுப்பிவைத்திருந்தார். முதலமைச்சர் கருணாநிதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் நடிகர் விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகப் பிரிவு தலைவர்களிடமிருந்து இக்கடிதங்களுக்கான பதில் கிடைக்கவில்லை. சம்பந்தன் தமிழகம் வந்து சேருவதற்கு முன்னதாக பல கட்சிகளின் தலைவர்களை மாவை சேனாதிராஜாவும் சச்சிதானந்தனும் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர்.

சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். தங்களைச் சந்திப்பதற்கு நியமனம் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.

செப்டெம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறே அக் கடிதத்தில் வேண்டுதல் விடுக்கப்பட்டது. செப்டெம்பர் 7 ஆம் திகதியும் சம்பந்தன் தனியாகக் கையெழுத்திட்டு பிற்பகல் 2 மணியளவில் கலைஞரின் வீட்டுக்கு தொலை நகல் மூலம் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கும் அன்றைய தினமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன் கடிதத்தை அனுப்பினார்.

செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது. தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமர் கலாநிதி சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. அவர்கள் புதுடில்லியிலிருந்து சென்னை திரும்பிய பின்னரும் கூட கலைஞர் கருணாநிதியைச் சந்திப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்க வில்லை என்ற கலைஞர் கருணாநிதியின் கூற்று குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுடன் நேற்று புதன்கிழமை மாலை சென்னைக்குத் தொடர்பு கொண்டு கேட்டபோது கலைஞர் கூறியது சகலதுமே உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூதுக்குழுவினர் முதலமைச்சரைச் சந்திப்பதற்கு 10 நாட்களாக இடையறாது முயற்சித்த போதிலும் அதற்கான வாய்ப்பை அவர் வழங்கவில்லை. சந்திப்பதற்கு அவர் மறுத்து விட்டார். இத் தூதுக்குழுவினரை இந்தியப்பிரதமர் சந்திக்க மறுத்தமைக்கும் கருணாநிதி அவர்களைச் சந்திக்க முதலில் மறுத்ததே காரணமாக இருக்கக் கூடும். தமிழக முதலமைச்சரே சந்திக்க மறுத்த தூதுக்குழுவினரை தான் ஏன் சந்திக்க வேண்டும் என்று பிரதமர் நினைத்திருக்கக்கூடும். இதற்கெல்லாம் முழுப் பொறுப்பு முதலமைச்சர் கருணாநிதியே என்று நெடுமாறன் கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தரான சுப.வீரபாண்டியனுடன் தொடர்புகொண்டு கேட்டபோது, ஹகலைஞர் கருணாநிதி தெரிவித்த கருத்தையடுத்து, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ{டன் நான் தொடர்பு கொண்டு நிலைவரங்களைத் தெரிவித்தேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு ராமதாஸ் என்னைக் கேட்டுக் கொண்டார். முதலமைச்சரை அவர்களுடன் சந்திக்க வைப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்குவதற்கு ராமதாஸ் தயாராயிருக்கிறார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்கள் இயங்கை சென்றுவிட்டதாகவும் ஒரேயொருவர் மாத்திரம் (சிவாஜிலிங்கம்) சென்னையில் நிற்பதாகவும் கொளத்தூர் மணி மூலம் அறிந்தேன். அத்தகவலை டாக்டர் ராமதாசுக்கு தெரிவித்த போது, சிவாஜிலிங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு என்னை அவர் கேட்டார் சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்' என்று சொன்னார்.

பதிவு.கொம்

நாம் அடுத்தவரிடம் எதிர் பார்க்கும் மரியாதையை முதலில் நாமும் மற்றவர்களுக்குக் கொடுத்து எதிர் பார்ப்பது தான் சிறந்தது.

வசம்பு அடிக்கடி சில புத்திமதிகள் சொல்லுறார். இந்த ஆளவந்தானுக்கும் உப்படி எழுத முடியாதா என்ன. உதாரணத்திற்கு ஒன்று

"அடுத்தவனுக்கு "ஐடியா" கொடுக்க முதல் நாம் அதைக்கடைப்பிடிக்கிறோமா என்று பார்க்க வேண்டும்."

:P :P :P

ஆளவந்தான் வசம்புவின் நரித்தனம் இங்கு உள்ளவர்கள் எல்லோருக்கும் தெரியும், எங்கு சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் வந்து தமிழகத் தமிழர்களுக்கும் புலிகளுக்கும் சிண்டு முடிவதிலயே கண்ணும் கரிசனையும் ஆக இருப்பவர்.

கருணானிதியின் செய்கைகளுக்கு அடிப்படைக் காரணம் , அவர் மத்திய அரசின் வழிகாட்டலை எதிர்பார்த்தே ஈழம் சம்பந்தமான தனது நிலைப்பாட்டை எடுக்க விரும்புகிறார்.அதற்கு அவரின் ஆட்சியைப் பாதுகாக்கும் உள் நோக்கமே அடிப்படை.,இந்திய அரசு இன்னும் தனது கொள்கை நிலைப்பட்டைத் தெளிவாக வெளிக் கொணரவில்லை. இந்த தருணத்தில் கூட்டமைப்பனரைச் சந்தித்து சிக்கலில் மாட்ட அவர் விரும்பவில்லை.

இவர்களின் நடவடிக்கைகள் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல் நாங்கள் தமிழ் நாட்டு மக்களிடம் நேரடியாக எமது செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டும்.எந்த அரசியல் வாதியும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராகச் செயற்பட முடியாது.கருணாணிதியோ,மத்திய அரசோ தமிழ் நாட்டு மக்களின் விருப்புகளுக்கு ஏற்றாவாறு நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளார்கள் என்பதுவே உண்மை.இந்த நேரத்தில் இந்த சிண்டு முடிபவர்களின் சூழ்ச்சிக்கு நாம் பலியாகி விடாமல் இதனை சமயோசிதமாகக் கையாள வேண்டும்.

அத்தோடு கூட்டமைப்பு எம்பி மாரும் தலவர்களை மட்டும் சந்திக்காமல் தமிழ் நாடிட்ன் பதிரிகையாளர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் என்பவற்றையும் சந்திக்க வேண்டும்.இவர்கள் சென்னையில் ஒரு பத்திரிகையாளர் மா ணாட்டை நடாத்தியதாக நான் ஒரு செய்தியையும் படிக்கவில்லை.தமிழ் ஈழத்தில் நடக்கும் கொலைகள்,மக்களின் துயரங்கள்,பட்டினிச் சாவு என்பவை பற்றி இவர்கள் தமிழ் நாடு மக்களுக்கு இன்னும் ஊக்கமாக விளக்கி இருக்க வேண்டும்.அது நடந்ததாகவும் தெரியவில்லை. இவர்கள் தமக்குள் செயற்பாடுகளைப் பிரித்துக்கொண்டு இன்னும் செயற்பாட்டுத் திறனுடன் இயங்க வேண்டும்.சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருடனும் தொடர்புகளை ஏற்படுத வேண்டும்.உதாரணமாக சென்னையில் உள்ள மாணவர் அமைப்புக்கள் சட்டக் கலூரி மாணவர்கள் போன்றோருடன் எம்பி கஜேந்திரன் ,முன்னைய மாணவர் அமைப்புத் தலைவர் என்ற வகையில் மாணவர்களின் பிரச்சினைகள் பற்றிக் கலந்துரை யாடி இருக்கலாம்.சட்டக்கல்லூரி,மற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்

நீங்களும் கலைஞரைச் சாட வேண்டுமென்றே கருத்தைத் திணித்தள்ளீர்களே தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தவறை ஏதோ சிறுபிள்ளைகளின் தவறு போல் சமாளிக்கப் பார்க்கின்றீர்கள். ஒரு மாநிலத்திற்குச் சென்று எவரும் முதலில் மரியாதை நிமித்தம் முதலமைச்சரைத் தான் சந்திப்பார்கள். ஆனால் இவர்கள் அதைவிடுத்து மற்றவர்கள் அனைவரையும் சந்தித்துவிட்டு கடைசியாக அவரை அணுகியதாகச் சொல்வதில் எந்தவிதத்திலும் நியாயமில்லை. உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கலைஞரைச் சந்திக்க நினைத்திருந்தால் இராமதாஸ் அல்லது வீரமணி மூலமாக எளிதில் அணுகியிருக்க முடியும். அதனை இவர்கள் செய்யாது விட்டது யாரையோ திருப்திப் படுத்த கலைஞரை அவமதித்ததாகவே கருத முடியும்.

அதைவிட நீங்கள் சொல்வது போல் கலைஞரைத் தவிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நேரடியாக டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க முயன்றாலும் பிரதமர் கலைஞரின் ஆலோசனை பெறாமல் இவ்விடயத்தை கையாள விரும்ப மாட்டார். அதன் பின்பு கலைஞரைக் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அணுகச் சொல்கின்றீர்கள்.

நாம் அடுத்தவரிடம் எதிர் பார்க்கும் மரியாதையை முதலில் நாமும் மற்றவர்களுக்குக் கொடுத்து எதிர் பார்ப்பது தான் சிறந்தது.

ஐயா குசும்பு

புலிஎதிர்ப்புக் காச்சலில் பிதற்றி திரிகின்ற உமக்கு

உமது எழுத்து ஒரு கட்சியினர்மீது நற்பார்வை செய்கிறதென்றால் அதற்க்கு ஒரேகாரணமாக இருக்கப்போவது புலிஎதிர்ப்புதனக்துக்கு கடைபோடக் கிடைத்த வசதியே ஆகும். ஏன் ஐயா உமது மேதாவிதனத்தை விளங்கிக் கொள்ள எமக்கு அறிவு போதாதா?

தொடர்ந்தும் ஒரே குப்பையைக் கொட்டிக் கொண்டிருக்கிறீரே வேறு பிழைப்பைப் பார்த்தால் என்ன?

சிறப்பான பதில் :lol: :P

இது ரஜனி படத்து பஞ் டயலக் மாதிரி இருக்கே....! :wink:

நீங்கள் என்ன சொன்னாலும் எங்களுக்கு உறைக்காது..... :idea: 8) 8)

வசம்பு! தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முறைப்படி முதலில் தமிழ்நாடு முதல்வரைத்தான் சந்தித்திருக்க வேண்டும் என்பதைப் பற்றி யாரும் ஆரம்பத்தில் பேசவில்லை. (யாராவது கூறியிருந்தால் அது என் கவனத்திற்கு வரவில்லை) அனைவரும் கலைஞரை மட்டும்தான் சாடிக் கொண்டிருந்தார்கள்.

இங்கே நான் ததேகூட்டமைப்பினர் பக்கமும் தவறு உள்ளதை சுட்டிக்காட்டிய பிறகு, நீங்கள் உடனடியாக அதை உயர்த்திப் பிடிக்கிறீர்கள். அதே கருத்தை திருப்பிக் கூறுகிறீர்கள்.

உங்களுக்கு ஆயுதம் தந்தது குறித்து எனக்கு கவலையே.

ஆனால் என்னுடைய நோக்கம் அதுவல்ல. அடுத்த முறை ததேகூட்டமைப்பினர் இந்தியப் பயணம் மேற்கொண்டால் இவைகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்

நாரதர்! கஜேந்திரன் தமிழ்நாடு செல்லவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலமே தமிழ்நாடு சென்றிருந்தார்.

இது 1வது இந்தியாவிற்கான பயணமாக இருந்தாலும் ததேகூ பாராளமன்ற உறுபினர்கள் சந்தித்த இந்திய அரசியல் மற்றும் அதிகாரத் தலைவர்களை பார்க்கும் பொழுது இது ஒரு பெரு வெற்றி. தாயகத்து களநிலமைகளும் பரிதாபமாக இருப்பதால் 1வது பயணத்திலேயே பிரதமர் முதல் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்று எல்லா முக்கியமானவர்களைரயும் சந்தித்து விடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் இந்தியாவுடனான உறவுகள் 1 வருடத்திற்கு முன்னர் 2 வருடங்களிற்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் நினைவு படுத்தவும்.

சன் நியூஸ் தொலைக்காட்சியில் இல் இரா சம்பந்தன் தாயகத்து அவல நிலைகள் பற்றி கலையகத்து சென்று எடுத்து கூறியது ஒளிபரப்பப்பட்டது. இவை போன்ற ஊடகத்துடனான தொடர்பாடல்கள் விரிவாக்கப்பட்டு தொடர்ச்சியாக எமது நிலைப்பாடுகள் அவலங்கள் அங்குள்ள main stream media ஊடகா மக்களிற்கு பரந்த அளவில் எடுத்து செல்லப்பட வேண்டும். அங்கு உள்ள 1 தொலைக்காட்சியிலாவது மாதாந்த அல்லது 2 வாரங்களிற்கு ஒருக்கால் என்றரீதியில் ஈழத்தமிழர்கள் விவகாரத்திற்கு என்று ஒரு நிரந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட வேண்டும். அதற்கு ததேகூ பாராளமன்ற உறுபினர்கள், ஈழத்து ஊடகவியலாளர்கள், மனிதஉரிமை ஆவலர்கள் போன்றோர் பங்களிப்புகள் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு தமிழ் ஒளி இணையத்தின் தாயக கலையகம் தயாரித்து வழங்கு வாராந்த கலந்துரையாடல் போன்றவை. இது போன்றவை தான் இந்திய தமிழ்ழீழ உணர்வாளர்கள் ஆதரவாளர்கள் எமக்காக குரல்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் இருந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியது. ததேகூ பாராளமன்ற உறுபினர்கள் இந்திய பயணங்கள் அவர்களது ஜரோப்பிய பயணங்கள் போல் சுழற்சி முறையில் நடந்து கொண்டிருக்க வேண்டும். மன்மோகன் சிங்கையும் கருணாநிதியை 1வதில் சந்திப்பினம் அடுத்த சந்திபில உணவு பொட்டலம் போடச் சொல்லுவினம் எண்ட பாணியில அங்கலாய்க்கிறதை நிப்பாட்ட வேணும்.

ததேகூ பாராளமன்ற உறுபினர்கள் சிலர் சந்திக்க முடியாது போனது பற்றி கூறிய குற்றம்சாட்டும் பாணியிலான கருத்துகள் சில பொறுப்பற்றவை. இங்கு நாம் உறவை புதுப்பித்து வலுப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறம். சில கருத்துக்கள் அதற்கு உதவப்போவது இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மதான் குறுக்ஸ்

சில காத்திருக்கும் சகுனிக் கருத்தாளருக்கு பணியைக் கொடுத்துவிடும் புண்ணைக் கிண்டிக்கொண்டெ இருக்கின்றமை.

உறவைப் புதுப்பிக்கும் முயற்சி களின்பால் எமது கவனத்தை செலவிடுவதே பயன் தரும் வினை ஆகும்

Aalavanthan wrote:

Vasampu wrote:

நாம் அடுத்தவரிடம் எதிர் பார்க்கும் மரியாதையை முதலில் நாமும் மற்றவர்களுக்குக் கொடுத்து எதிர் பார்ப்பது தான் சிறந்தது.

வசம்பு அடிக்கடி சில புத்திமதிகள் சொல்லுறார். இந்த ஆளவந்தானுக்கும் உப்படி எழுத முடியாதா என்ன. உதாரணத்திற்கு ஒன்று

"அடுத்தவனுக்கு "ஐடியா" கொடுக்க முதல் நாம் அதைக்கடைப்பிடிக்கிறோமா என்று பார்க்க வேண்டும்."

உமக்கு எழுதத் தெரியாதென்று யாரைய்யா சொன்னது. அது தானே எழுதித் தள்ளுகின்றீரே. ஆனால் அதனை முதலில் நீரே கடைப்பிடிக்கின்றீரா என்று சிந்தித்துப் பார்க்கத்தான் உம் போன்றவர்களும் களத்தில் நரித்தனம் காட்டி ஏதோ தாம் தான் அரசியலில் அதிமேதாவிகள் என்று கருத்தெழுதும் அறிவுக் கொழுந்துகளும் புரிந்து கொள்வதில்லை.

அடுத்தவரின் கருத்துக்களுக்கு பதிலெழுதத் தெரியாமல் அவர்களை விமர்சித்து தங்களைப் போல் மற்றவர்களும் எச்சிலைகள் தான் என்று நினைக்கும் எச்சிலைகளுக்கும் இதைத் தவிர என்ன செய்ய முடியும்.

ஆமாண்ட செல்லம்

அடி செருப்பால என்னத்தையோ தோச்சு எண்டானாம்.

எங்கட தேசியத்துக்கு அறிவு சொல்ல எண்டு கொஞ்சப்பேர் வெளிக்கிடிருக்கிறியள். உங்கட நரித்தனம் எழுத்தில நாறாது எண்டு நினைத்துதானே பிழைப்பைப் பார்க்கிறியள் இங்க ஒருதருமே அதை விளங்கிக் கொள்ளாமல்த்தானே இருக்கின்றோம். எழுத்தில மேதாவிதனத்துக்கு தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்டு உங்க கழிஞ்சுவைக்கின்ற அசிங்கங்களை நாம் பார்க்காமல்த்தானே இருக்கின்றோம்.

பொத்திக்குண்டு போய் வேற பிழைப்பை பார் இராசா.

தனிமனிதத் தாக்குதல்கள் இங்கே எல்லை மீறுகின்றன. மட்டுறுத்துனர் யாராவது தலையிட்டால் தேவலை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SunNews Networkக்கு என் நன்றி! இவ்வகையில் எமக்கு சந்தர்ப்பம் அளிப்பதன் மூலம் மற்றைய தமிழக ஊடகங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக SunNews Network தன்னை வெளிக்காட்டியுள்ளது! நன்றி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.