Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பார்வை, கத்தி திரைப்படங்கள் திரையிட்டால் கடுமையான போராட்டங்கள் வெடிக்கும் - செய்தியாளர் சந்திப்பில் அறிவிப்பு!

புலிப்பார்வை மற்றும் கத்தி திரைப்படங்கள் திரையிடப்பட்டால் கடுமையா போராட்ங்கள் வெடிக்கும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில தி.வேல்முருகன் தலைமையில் இடம்பெற்ற சந்திப்பிலே இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சந்திப்பில் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சார்பாக 51 பேர் ஆரதரவு வழங்கியுள்ளனர்.

chennai_press_kathi_puliparvai.4.png

செய்தியாளர் சந்திப்பு பின் விடுக்கப்பட்ட செய்தியறிக்கை கீழே தரப்படுகிறது.

அன்று வியட்நாம் போரின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துச் சொன்னது ஒரு சிறுமியின் படம். அதுபோல் தமிழீழ விடுதலைப் போரின் உச்ச கொடூரத்தை சர்வதேச சமூகம் முன்வைத்தது தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் இளைய மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் குறித்த புகைப்படங்கள்.

chennai_press_kathi_puliparvai.6.png

சிங்கள வல்லூறுகளிடம் உயிருடன் சிக்கி நெஞ்சப் பரப்பெங்கும் வஞ்சகத்தார் துப்பாக்கி குண்டுகளால் துளைத்த அந்தப் பிஞ்சுவின் புகைப்படக் காட்சிகள் கண்டு கதறியழுது கண்ணீர் விடாத இதயம் எதுவும் இல்லை.

தற்போது பாலச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்வதாகக் கூறும் வகையில் புலிப்பார்வை என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இதன் காட்சிகளைப் பார்க்கும் மனச்சாட்சி உள்ள எந்த மனிதருமே இப்படி ஒரு அப்பட்டமான இனத்துரோக சிந்தனையுடன் கூடிய படம் தமிழகத்தில் இருந்து வெளியாகிறதே? என்று கொந்தளிக்கத்தான் செய்வார்கள்.

chennai_press_kathi_puliparvai.5.png

ஏனெனில்

1. இந்தப்படத்தின் காட்சிகள் அனைத்திலுமே பாலகன் பாலச்சந்திரன் சிறார் போராளியாக சித்தரிக்கப்படுகிறார். இது உண்மைக்கு மாறானது.

2. அத்தனை காட்சிகளிலுமே துப்பாக்கியுடனும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சீருடையுடனுமே பாலச்சந்திரன் பாத்திரம் வலம் வருகிறது.

3. உச்சக்கட்ட கொடூரமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் பாலசந்திரனுக்கும் சிறார்களுக்கும் ஆயுத பயிற்றி கொடுப்பதாக காட்சிகள் வருகின்றன.

4. இவை அனைத்துமே சிங்களத்தின் பொய்யுரைக்கு வலுச்சேர்க்கவே பயன்படும்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் தொடர்பான உண்மை புகைப்படம் எதனிலும் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கச் சீருடையுடன் ஆயுதப் போராளியாக இருந்ததே கிடையாது.

5. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆளுமை செலுத்திய காலத்தில் பாலகன் பாலசந்திரன், அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்தார். அது தொடர்பான செய்திகளும் படங்களும் உலகத்தின் பார்வைக்கும் வந்திருக்கின்றன.

6. ஆனால் போர்முனையில் பாலகன் பாலச்சந்திரன் பலியானதாகக் காட்சி அந்தப்படுகொலையை நியாயப்படுத்தத் துடிக்கிறது “புலிப்பார்வை” திரைப்படம். இது சிங்களப் பேரினவாத்தின் பொய்யுரைக்கு வலு சேர்க்கிறது திரைபடம்.

7. பாலகன் பாலச்சந்திரன் போன்ற பிஞ்சுக் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் ஈவிரக்கமின்றி சிங்களப் பேரிவாதம் படுகொலை செய்ததை நியாயப்படுத்துகிற இனவெறியின் உச்சகுரலே புலிப்பார்வை திரைப்படம்.

8. இனக்கொலை புரிந்த குற்றச்சாட்டின் பேரில் சிங்களப் பேரினவாத அரசு பன்னாட்டுப் புலனாய்வுக்கு உள்ளாகியிருக்கும் நேரத்தில் சிங்களத்தைக் காப்பாற்றும் முயற்சியாக இத்திரைப்படம் வந்துள்ளது. 

இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

chennai_press_kathi_puliparvai.3.png

கத்தி

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் கத்தி திரைப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கடந்த ஒரு மாத காலமாக ஓடிக்கொண்டிருக்கின்றன.

தமிழீழப் பிரச்சினையில் ஒட்டுமொத்தமாக தமிழகமே ஒன்று திரண்ட நிலையில், இலங்கை பேரினவாத அரசு மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் சிங்களப் பேரினவாதமும் அதன் தலைமைத்துவத்தில் இருக்கிற போர்க்குற்றவாளியான ராஜபக்சவும் ஒட்டுமொத்த தமிழினத்தின் கொந்தளிப்பை கொச்சைப்படுத்த, திசை திருப்ப, மழுங்கடிக்க கையில் எடுத்த உத்திதான் தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானத்தை தோற்கடிக்கும் வiயில் தமிழ்த திரை உலகத்துக்குள் பணத்தை பாய்ச்சுவது என்பது.

chennai_press_kathi_puliparvai.2.png

தமிழ்த திரை உலகத்தில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணந்து கோடம்பாக்கத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படத்தைத் தயாரிக்கிறது லைக்கா நிறுவனம்.

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்திற்கும் ராஜபக்ச குடும்பத்திற்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இதற்கெல்லாம் மேலாக லைக்காவின் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத் தமிழர் என்ற சப்பை கட்டப்படுகிறது. ஆமாம் சுபாஸ்கரன் அல்லிராஜா ஒரு ஈழத்தமிழர்தான் சந்தேகம் இல்லை.

ஆனால் முள்ளிவாய்காலில் கொத்து கொத்தாக உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது நம் இனத்தின் மீது நச்சுக்குண்டுகளை வீசிய அதே சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டரில் போய் இறங்கும் அளவுக்கு ராஸபக்ச கும்பலிடம் செல்வாக்குக் கொண்ட இன்னொரு டக்ளசும் கருணாவும் தான் இந்த சுபாஸ்கரன் என்பது உலகத்தமிழினம் நன்கறியும்.

chennai_press_kathi_puliparvai.1.png

முருகதாஸ், விஜய் ஏன்ற தமிழர்கள் செய்யும் துரோகத்தை இனமானம் உள்ள எந்த ஒரு தமிழனும் ஏற்க முடியாது.

உலகத்தையே உலுக்கிய இனப்படுகொலையை நிகழ்த்திய போர்க்குற்றவாளிகளின் கரங்களில் படிந்திருப்பது நம் தொப்புள் கொடி உறவுகளின் ரத்தம் என்பதை மறந்துவிட முடியாது. ஒரு மனிதனாக இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை நிகழ்த்திய மிக மோசமாக மனித உரிமைகள் காலில்போட்டு மிதித்த போர்க்குற்றவாளியான ராஜபக்சேவுடன் யார் கரம் குலுக்கினாலும் மன்னிக்க முடியாது.

இப்படி புலிப்பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே!

சிறீலங்காவைப் புறக்கணிப்போம். அதன் மீது பொருளாதாரத் தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்கள் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

சிங்கத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! தமிழீழ விடுதலையை மீட்டெடுப்போம்! என தமிழர் வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தி.வேல்முருகன் மேலும் கூறியுள்ளார்.

ஆதரவு தரும் கட்சிகள், இயக்கங்கள் பெயர் பட்டியல்

01. தமிழக வாழ்வுரிமைக் கட்சி

02. விடுதலைச் சிறுத்தைகள்

03. மனித நேய மக்கள் கட்சி

04. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

05. கொங்கு இளைஞர் பேரவை

06. புரட்சி பாரதம்

07. எஸ்.டி.பி.ஜ

08. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

09. தமிழ்த் தேசிய மக்கள் கட்சி

10. தமிழ்நாடு மக்கள் கட்சி

11. திராவிடர் விடுதலைக் கழகம்

12. தமிழ்த் தேசிய முன்னணி

13. மே 17 இயக்கம்

14. இளந்தமிழர் இயக்கம்

15. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்

16. தமிழர் எழுச்சி இயக்கம்

17. தமிழர் முன்னேற்றக் கழகம்

18. தமிழத் தேசப் பேரியக்கம்

19. கே.எம்.ஷரீப் ஞானசேகரன்

20. தமிழ்ப்புலிகள் - குடந்தை அரசன்

21. நாகை திருவள்ளுர்

22. தமிழத் தேசிய விடுதலை இயக்கம்

23. இயக்குநர் புகழேந்தி தங்கராசு

24. கவிஞர் புலிமைப்பித்தன் - படைப்பாளிகள்

25. சுப.உதயகுமாரன் - கூடங்குளம் அனு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு

26. சுந்தரராஜன் - பூவுலகின் நண்பர்கள்

27. ஆதியமான்

28. மு.களஞ்சியம் இயக்குநர்

29. மருத்துவர் எழிலன்

30. தமிழர் வாழ்வுரிமை இயக்கம்

31. தமிழர் படை – ஜோதிலிங்கம்

32. தொழிலாளர் மறுசீரமைப்பு இயக்கம் - சேகர்

33. பெண்கள் களம் - வழக்கறிஞர் கயல்

34. ராச்குமார் பழனிச்சாமி

35. மாணவர்களுக்கான அனைத்து கூட்டமைப்புகள்

36. தமிழ்நாடு மக்கள் முன்னேற்றக் கட்சி 

37. தமிழ்நாடு வணிகர் பேரவை

38. இயக்குநர் கீரா – களம்

39. காஞ்சி மக்கள் மன்றம்

40. மனித உரிமைகள் கழகம்

41. ராஜா ஸ்டாலின்

42. அப்பேத்கர் விடுதலை இயக்கம்

43. புலமைப்பித்தன்

44. மீனவர் வேங்கைகள்

45. தமிழக மீனவர் அமைப்பு

46. தமிழ்நாடு மீனவர் பேரவை

47. டி.எஸ்.எஸ். முணி

48. பத்திரிகையாளர்கள்

49. சுன்னத் ஜமாத்

50. பாப்புலர் ஆப் இண்டியா

51. வின் டிவி தேவநாதன்

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy5wYXRoaXZ1LmNvbS8=

  • Replies 91
  • Views 5.2k
  • Created
  • Last Reply

நாம் தமிழர் எங்கப்பா?

ஐரோப்பிய தமிழர்கள் இந்தப் படங்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பாவில் சக்கை போடு போடும் போலிருக்கே.

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய தமிழர்கள் இந்தப் படங்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பாவில் சக்கை போடு போடும் போலிருக்கே.

படத்தை இயக்கியவர் சொல்கிறார் ....  ஒரு கற்பனை காட்சியில் பாலசந்திரன் சிருடையில் வருவதாகவும் அது ஒரு கற்பனை என்றும்.
 
இவர்கள் சொல்கிறார்கள் ..............
அவர் படம் முழுக்க சீருடையில் வருகிறார் என்று.
 
இதில் யார் நல்லவன் 
யார் கெட்டவன் என்பதை ............... முடிவுசெய்ய ஆறறிவு மனிதர்களுக்கு போதிய ஆதாரம் ஏதும் இல்லை என்பதே அடிப்படை உண்மை.  ஏழாம் அறிவு பெற்று பிரபஞ்சத்தில் சஞ்சரித்து கொண்டிருப்பவர்களுக்கு (சீமான் மீது) அவர்களது சொந்த தொழிலை செய்ய இது நல்ல சந்தர்ப்பம் வழங்கி இருப்பதால்....... கலக்கோ கலக்கு என்று கலக்கிவிட்டு இப்போ படம் பற்றிய உண்மை  வெளியில் வரும் நேரம் அச்சா பிள்ளைகள் நித்தா கொள்ள போய்விட்டார்கள்.  
 
மேலே இருக்கும் 51 கட்சிகளில் யார் படத்தை முழுதுமாக பார்த்தவர்கள்? 80 வீதம் யாரோ ஒருவரின் ஆட்டுவிப்பில் ஆடிகொண்டிருக்கிரார்கள் என்பது தெளிவானது. அந்த ஆட்டுவிப்பான் யார் என்பதும் தெளிவாகனும்.
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் எங்கப்பா?

திமுக இல்ல.

அதிமுக இல்ல.

மதிமுக இல்ல.

ப.ம.க இல்ல.

நாம் தமிழர் மட்டும் இருக்கனுமா..?????! என்ன நியாயம்..??????????????!

இதில இருக்கிற பல அமைப்புக்கள்.. இந்த எதிர்ப்பின் மூலம் தான் மக்கள் முன் அறிமுகமாகவே போகின்றன.!!! :D:lol::rolleyes:

புலிப்பார்வை முற்றிலும் தவறான கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்ட, போர்க்குற்றம் ஒன்றை நியாயப்படுத்தும் கருத்தியலைக் கொண்ட படம் என்பதால் அதனை எதிர்ப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. திரைப்படத்தின் திருட்டு விசிடி கூட வெளியாகக்கூடாது என்று விரும்புகின்றேன்.

ஆனால், கத்தியை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. புலம்பெயர் நாடுகள் தோறும் சிறிலங்காவின் பொருட்களை விற்பனை செய்தும், ஊக்குவித்தும் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் கத்தி படத்தினை எதிர்க்கும் தார்மீக உரிமை கூட எமக்கு இல்லை. 2009 பின்னரான சூழ்நிலையில் வடக்கு கிழக்கின் உற்பத்திகளை, முயற்சிகளை ஊக்குவித்து பரந்த சந்தையை ஏற்படுத்தி பேரழிவுக்குள்ளான மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்ய வேண்டிய தேசிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும் என்பதால் சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்பது என்பது கூட தவறான கருத்தியலாகத் தான் தெரிகின்றது.

இது என் தனிப்பட்ட கருத்தாகும்.

எதை ஆதாரமாக வைத்து கொண்டு இப்படி சொல்கிறீர்கள்?
இவ்வாறு ஒரு துரோகத்தனம் அதில் இருந்தால் ................ அதை உலெகெங்கும் தடைசெய்யும் அளவிற்கு போராடனும்.
முளையிலேயே கிள்ளிவிடனும்.
 
அனால் படத்தை பார்க்காதவர்கள்தானே இப்படி சொல்லிவருகிறார்கள்?????
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் எங்கப்பா?

அவங்கதான் நடுச்சந்தியில நிக்கினம்,செத்தான் சேகரு(ச்சீ மான்)

எதை ஆதாரமாக வைத்து கொண்டு இப்படி சொல்கிறீர்கள்?
இவ்வாறு ஒரு துரோகத்தனம் அதில் இருந்தால் ................ அதை உலெகெங்கும் தடைசெய்யும் அளவிற்கு போராடனும்.
முளையிலேயே கிள்ளிவிடனும்.
 
அனால் படத்தை பார்க்காதவர்கள்தானே இப்படி சொல்லிவருகிறார்கள்?????

தமிழகத்தின் செய்திகளின் படியும், படத்தின் சுவரொட்டிகள் மற்றும் Trailer இன் படியும் பாலச்சந்திரனை இராணுவப்பயிற்சி பெற்ற போராளியாகவே காட்டியிருக்கின்றார்கள் என்று தெளிவாக தெரிகின்றது. இவற்றை விட நெடுமாறன் ஐயா, வைகோ போன்றவர்களுக்கும் பல மாணவ அமைப்பு பிரதிநிதிகளுக்கும் திரைப்படத்தினை விசேடமாக திரையிட்டுக் காட்டியுள்ளார்கள் என்றும் அறிய முடிகின்றது.

Trailer:

இவற்றை விட, புலிக் கொடி ஒரு காட்சியில் வந்தாலோ தலைவர் பிரபாகரன் பெயர் வந்தாலோ விழுந்தடித்து தணிக்கை மற்றும் தடை செய்யும் இந்திய அதிகார வர்க்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் தணிக்கை குழு, இப்படத்தினை UA சான்றிதழுடன் வெளியிட அனுமதித்து இருப்பதும் சந்தேகத்துக்குரியது.

இவற்றை எதுவும் நம்பாமல், படம் வெளியாகி அதை எல்லாரும் பார்த்த பின் தான் தடை செய்வதா இல்லையா என்று முடிவு செய்ய வேண்டும் என்கின்றீர்களா?

உங்களுடைய இந்த சந்தேகம் ...... எனக்கும் ஏற்கனவே இருக்கும் ஒரு சந்தேகம்தான்.
புலிகளுக்கு சார்பாக ஒரு வசனம் இருந்தாலே கத்திபோடும் கூட்டத்திடம் இருந்து எப்படி இந்த படம் தப்பியது?
அப்படி  என்று நானும் சந்தேகத்தில்தான் இருக்கிறேன்.
 
என்னுடைய ஒரு குற்றசாட்டு ....... (நீங்கள் எந்த அளவிற்கு ஏற்பீர்கள் என்று தெரியவில்லை)
1970இல் சிவாஜி  எம்ஜிஆர் நடித்த அதே படங்களையும் காட்சிகளியும்தான் நாம் இப்போதும் புது நடிகர்கள் நடிக்க பார்த்து கொண்டு இருக்கிறோம். தமிழ் சினிமாவில் கொப்பி  அடிப்பதுதான் நடக்கிறதே தவிர புதிய சிந்தனைகள் குறைவு. அப்படி யாரவது சிந்தித்தாலும் அதற்கு ஆதரவு இல்லை.
அகவே ஒரு தமிழ் இயக்குனர் வீரப்பனை எப்படி காட்ட்டினர்களோ அதே பாதிப்பை வைத்து கொண்டே தலைவரையும்  காட்ட  முனைவார்கள். அது அவர்களுடைய ஒரு குறைபாடு ஆகா கூட இருக்கலாம் இல்லையா?? 
 
படத்தில் ஒரு கற்பனை காட்சியில்தான் அவர் சீருடையில் வருவதாக இயக்குனர் சொல்கிறார்.
அதை ஏன் இவர்கள் யாரும் மறக்கவில்லை???
 
சரியான ஒரு பரஸ்பரம் அங்கே இல்லாமல் இருக்கிறது எனபது மட்டும் தெளிவாக தெரிகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தவர்கள் தான் எதிர்க்கின்றனர்,சீமானைத்தவிர இங்கு உள்ள சிலர் சீமானுக்கு ஆலவட்டம் பிடிப்பதால் உண்மைகள் உறங்கப்போவதில்லை.தமிழீழ போராட்டத்தை மிக நேர்மையாக ஆதரிக்கும் திருமுருகன் காந்தியே இதை இப்படத்தை எதிர்ப்பது கூடஉங்களுக்கு புரியாமல் இருப்பதே பெருவியப்பாக இருக்கின்றது.

உங்களது  நிலை தான் எனதும்

ஆனால் சீமான் தள்ளியிருப்பதையே  ஆதரிக்கின்றேன்

எல்லாவற்றுக்குள்ளும் நியாயம் கேட்கப்போய்

எல்லோருக்குள்ளும் பகையை  வளர்த்து

எதிரிக்கு எதிரி  நண்பன் என எல்லோரும் ஒன்று  கூடியதால் தான்

ஏற்கனவே அழிவைச்சந்தித்தோம்

இனியும் வேண்டாம்.....

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பார்த்தவர்கள் தான் எதிர்க்கின்றனர்,சீமானைத்தவிர இங்கு உள்ள சிலர் சீமானுக்கு ஆலவட்டம் பிடிப்பதால் உண்மைகள் உறங்கப்போவதில்லை.தமிழீழ போராட்டத்தை மிக நேர்மையாக ஆதரிக்கும் திருமுருகன் காந்தியே இதை இப்படத்தை எதிர்ப்பது கூடஉங்களுக்கு புரியாமல் இருப்பதே பெருவியப்பாக இருக்கின்றது.

பாலன்  பாலச்சந்திரன் கையில்.... துவக்கு கொடுத்து எடுத்த படம் மகாதவறு.

இதனை சீமான் எதிர்க்காவிட்டாலும், நாம் எதிர்க்க வேண்டும்.

திரு முருகன் காந்திக்கு, எனது ஆதரவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
சீமானுக்கு யாரும் ஆலவட்டம் சுத்துவதில்லை ................. சீமானுக்கு சேறு அடிக்க வேண்டும் என்று இரவுபகலாக அலையும் உங்களுக்குத்தான் உண்மையான கருத்தாடல்கள் ஆலவட்டம்போல் தெரிகிறது.
நீங்கள் சீமான் மீது சேறு அடிக்க தொடங்கி 3 வருடம் ஆகிறது .......... அதற்கு தகுந்த காரணம் ஏதும் இருக்கிறதா??
 
தமிழருடைய போராட்டம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை சீமான் கேட்டுவிட்டால் போதும் எனும் மனநிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள். கிட்டதட்ட அர்ஜுன் அவர்கள்போல் 
புலிகள் 50 தமிழ் மக்களை சுட்டார்கள் என்று செய்திவந்தால் அது பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் எந்த தமிழனும் எண்ணுவான். ஆனால் அப்படி ஒரு பொய்யையும் எப்படி உணமி ஆக்குவது என்று அர்ஜுன் அலைவார் அந்த நிலையில் தான் நீங்களும் இப்போது இருக்கிறீர்கள். உண்மையான தமிழனுக்கு புலி நல்லதா? கெட்டாத? என்பதை கடந்து 50 தமிழ் உயிர் இறந்திருக்க கூடாது என்றுதான் எண்ண தோன்றும். அர்ஜுனுக்கு அப்படியல்ல புலிக்கு சேறடிக்க ஒரு செய்தி வேண்டும்.
 
உயிரே படம் வந்த போதும் இப்படிதான் சிலர் குத்தி முறிந்தார்கள் 
இயக்குனருக்கு படம் இயக்க தெரியாத ஒரு குறைபாடு கூட இருக்கலாம். சீமானும் ..... மாணவர்களும் வீணே முரண்பட்டு போக கூடாது. என்றுதான் நாங்கள் நினைக்கிறோம். 
படம் வெளிவராது போனால் கூட இப்போ தமிழ் இன விரோதிகளுக்கு பெருத்த வெற்றி வந்திருக்கிறது. அந்த வெற்றியை  தமிழன் தனதாக்க வேண்டும் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.  
  • கருத்துக்கள உறவுகள்

சீமான்.... இந்த விடயத்தில்,
நெடுமாறன் ஐயா, வைகோ.  போல் கருத்து தெரிவிக்காமல் இருப்பதே..... உத்தமம்.

புலியாகவே ஒரு தசாப்தம் கடந்த எனக்கு நீங்கள் பாடம் எடுப்பதும் நல்ல நகைச்சுவையே,சிலருக்கு தாங்கள் ஆதரித்துவிட்டால் அதற்கு யாரும் யாரும் மறுப்பு கருத்து எழுதக்கூடாது.நீங்களும் அந்த மனநிலையில் இருப்பவரே
  • கருத்துக்கள உறவுகள்

படம் வெளி வந்த பிறகு அதில் பாலசந்திரனை இராணுவ போராளியாக படத்தில் காட்டி இருந்தால்[படம் முழுக்க அப்படித் தான் காட்டி இருக்குது என்பது என் கருத்து]மருதங்கேணி போன்றோர் படத்தை தடை செய்யச் சொல்லி போர் கொடி பிடிப்பினமோ? அதற்கு பிறகு போர் கொடி பிடித்தும் என்ன பிரயோசனம்?...என்னைப் பொறுத்த வரை நிழலியின் கருத்து தான் என்னோடது

அப்போதும் பிடிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் 
 
கத்தியும் கோடாலியும் இப்போ யாருக்கு வேண்டும்?
ஒன்று பட்ட  தமிழ் இனத்தின் ஒற்றுமைதான் வேண்டும். மாணவர்கள் இதில் தனித்து விட கூடாது என்று தான் சொல்கிறேன். ஏழாம் அறிவிற்கு எட்டும் படி எழுத தெரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

அப்போதும் பிடிக்க மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன் கத்தியும் கோடாலியும் இப்போ யாருக்கு வேண்டும்?

ஒன்று பட்ட தமிழ் இனத்தின் ஒற்றுமைதான் வேண்டும். மாணவர்கள் இதில் தனித்து விட கூடாது என்று தான் சொல்கிறேன். ஏழாம் அறிவிற்கு எட்டும் படி எழுத தெரியவில்லை.

மாணவர்களை தனித்து விடக் கூடாது என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு சீமானுக்கு இந்த தேவை இல்லாத மக்களது ஒற்றுமையை,தேசியத்தை விற்றுப் பிழைக்கும் கேவலம் கெட்ட வேலை...முதலில் ஒற்றுமையை சீமானுக்கு க்ற்றுக் கொடுத்து நீங்களும் கற்று கொள்ளுங்கோ

விளம்பரக் காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும்போதே இப் படத்தின்மீது சொல்லமுடியாத வெறுப்பு உண்டாகிறது. சீமான் ஆதரிக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகக் கூட இதை ரசிக்க முடியவில்லை.

இப் படத்தைத் தயாரித்த பாரிவேந்தர் பச்சமுத்து கூகிளில் மேலும் வெறுப்பேற்றுகிறார். :wub:

  • கருத்துக்கள உறவுகள்
அக்கா மன்னிக்கவேண்டும் !
அதுதான் முதலே எழுதிவிட்டேன் ஏழாம் அறிவுக்கு புரியும்படி எனக்கு எழுத தெரியாது.
 
(நான் தமிழ் நாட்டில் புலிபார்வை என்று ஒரு படம் வருகிறதாம் அதை சிலர் எதிர்கிறார்கள் சிலர் ஏதும் இல்லை என்று சொல்கிறார்கள். மேலே நான் அந்த விடயம் பற்றிதான் எழுதினேன். நாங்கள் வேறு விடயம் பற்றி பேசுவோம்)
 
லண்டனில் எப்படி காலநிலை?
மழையா ? குளிரா ?
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களை தனித்து விடக் கூடாது என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு சீமானுக்கு இந்த தேவை இல்லாத மக்களது ஒற்றுமையை,தேசியத்தை விற்றுப் பிழைக்கும் கேவலம் கெட்ட வேலை...முதலில் ஒற்றுமையை சீமானுக்கு க்ற்றுக் கொடுத்து நீங்களும் கற்று கொள்ளுங்கோ

தமிழினத் துரோகி கருணாவை அண்ணன் என்று பெருமையாய் சொல்லுற நீங்கள் எல்லாம் கேவலத்தை பற்றி கதைக்க வியப்பாய் இருக்கு............

  • கருத்துக்கள உறவுகள்

பந்தி பந்தியாக எழுதுபவர்களைக்கூட நம்பலாம்.இந்த மயக்க நிலையில் எழுத்பவர்களை நம்பமுடியாது.அவர்கள் எந்நேரமும் தங்கள் கருத்தை மாற்றி வாதடக்கூடியவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய தமிழர்கள் இந்தப் படங்களுக்கு எந்த எதிர்ப்பும் காட்டாமல் இருப்பதைப் பார்த்தால் ஐரோப்பாவில் சக்கை போடு போடும் போலிருக்கே.

படத்தின் இயக்குனா் தமிழ் அமைப்புக்களுக்கு படத்தை திரையிட்டு காட்டுவதற்க்கும், அது தொடா்பான மாற்றங்கள் செய்யவும் தயாராக இருக்கின்றாா் என்று சொல்லியிருக்கின்றாா்.

இது அரசியல் போலவே தொிகின்றது. சீமானை தேடுவோா், வைக்கோவை, நெடுமாறன் ஐயாவையும் காணவில்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத் துரோகி கருணாவை அண்ணன் என்று பெருமையாய் சொல்லுற நீங்கள் எல்லாம் கேவலத்தை பற்றி கதைக்க வியப்பாய் இருக்கு............

என்ட அண்ணா முந்தி எங்கட மக்களுக்கு செய்த நல்லதில் பத்தில் ஒன்றையாவது உங்கட சீமான் தங்கட மக்களுக்கு செய்தாரா? என்ட அண்ணா ஒன்றும் உங்கட சீமானை மாதிரி எங்கட போராட்டத்தை வித்துப் பிழைக்கவில்லை.அவரால் முடியாது என்றவுடன் ஒதுங்கி விட்டார்.அவரை பற்றி கதைக்க உங்களுக்கு எந்த வித தகுதியும் இல்லை.முடிந்தால் சீமானுக்கு உங்கள் போராட்டத்தை பற்றி எடுத்துச் சொல்லுங்கள் முடியா விட்டால் மூடிட்டு படுங்கள் தேவையில்லாமல் சீமான் செய்கின்றதை மறைக்க என்ட அண்ணாவை இழுத்து திரியை திசை திருப்ப வேண்டாம்.சீமானை அழிக்க அவரை எதிர்ப்பவர்கள் தேவையில்லை அவராலேயே அவர் அழிவார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.