Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பார்வை - சீமானின் விஷமும், விஷச்செடியும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை பிறகேன் பார்ப்பான். பாக்கியராசன்.சே  படத்தின் கதை முழுக்க சொல்லி விட்டார். நான் நினைத்தேன் படத்தின் முழுக்கதையும் படம் வெளியிட முதல் வெளியில் கசிய விட மாட்டார்கள் என்றல்லவா!!!!.

  • Replies 61
  • Views 5.6k
  • Created
  • Last Reply

சீமான் அண்ணா நீக்க சொன்ன காட்சிகள் தனியே இவை மட்டும் தான். இவற்றை நீக்கினால் படம் சரியாகி விடுமா?

முன்னர் வந்த பதிவையும் இங்கு இணைக்கிறேன்.

----------------------

3 விதமான காட்சிகளை நீக்குவதற்கு சீமான் வலியுறுத்தி உள்ளார்.

புலிப்பார்வை படத்தில் 3 காட்சிகள் நீக்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் தேவா, தமிழ்ஈழம் ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–

புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால் மாணவர் அமைப்பினர் சிலர் இத்தாக்குதலில் எங்கள் கட்சிக்கு தொடர்பு இருப்பது போல அவதூறு தகவல்களை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். அதில் சீமான் பற்றியும் தேவையில்லாத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

ஒரு விழா நடைபெறும்போது அதில் பங்கேற்ற மாணவர்கள் திடீர் என எழுந்து கோஷமிட்டு அநாகரீகமான நடந்தது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் அவர்கள் தாக்கப்பட்டதும் கண்டனத்துக்குரியது. நாம் தமிழர் கட்சியினர்தான் மாணவர்களை தாக்கினார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நாங்கள் எந்நேரமும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம். அதுமாதிரி யாராவது நடந்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

புலிப்பார்வை திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் நிலையில் அதில் இடம் பெற்று இருக்கும் 3 விதமான காட்சிகளை நீக்குவதற்கு சீமான் வலியுறுத்தி உள்ளார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சீருடையில் இருப்பது போன்ற காட்சியை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தரிடமும் இயக்குனர் பிரவின்காந்தியுடனும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல விடுதலைப் புலி அமைப்பில் உள்ள பெண்கள் வயிற்று பசிக்காக கண்ணி வெடி தாக்குதலில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் மனிதாபிமானமுற்ற முறையில் இருக்கும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகளையும் நீக்க சொல்லி உள்ளோம்.

தற்போது படத்தின் இசை வெளியிட்டு விழா மட்டுமே நடந்து உள்ளதாலும், படம் வெளியாகும்போது இந்த 3 காட்சிகளும் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி காட்சிகள் இடம் பெற்றால் அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பேட்டியின்போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், அறிவுச் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கிடையே புலிப்பார்வை படம் சம்பந்தமாக போலீஸ் கமிஷனரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் அதியமான் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘‘புலிப்பார்வை திரைப்படத்தில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை தீவிரவாதிபோல சித்தரித்துள்ளனர். இந்த படம் வெளியானால் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே திரைப்படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

(Facebook)

இந்த மூன்று காட்சிகளை விட வேறு காட்சிகளில் மாற்றம் வந்தால் அது மாணவர்கள் மற்றும் ஏனைய ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்களாலேயே ஆகும்.

ஆனால் அவர்களும் ஈழப்போராட்டத்தை எந்தளவில் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதை பொறுத்தே அவர்கள் நீக்க/திருத்த சொல்லும் காட்சிகள் தீர்மானிக்கப்படும்

சரியான தெளிவில்லாத பட்சத்தில் பிழையான சித்தரிப்புகளுடன் கூடிய படத்தை அவர்களும் தமக்கே தெரியாமல் அனுமதித்து விடுவார்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இந்தப்படத்திற்கு ஆதரவு தரவில்லை.. காட்சிகளை மாற்றி திரையிடலாம் என்றுதான் சொல்லியுள்ளார்கள். அவ்வாறு மாற்றாமல் வெளியிட்டால் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.. :huh:

சீமானின் கொ.ப.செ வாழ்க
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இயக்குனர் பிரவீன்காந்தி என்றவுடன் ரட்சகன் படத்தில் இந்தியாவை தவறாக பேசியதற்கு நாயகன் நரம்பு புடைத்து கோவப்படும் காட்சி தான் முதலில் நினைவிற்கு வந்தது. அதிலும் தம்பியின் ராணுவ உடையோடு இருப்பதும், இந்தியா போரை நடத்தியது என்றிருக்க "We Love India" என்ற வாசகமும் மிக எரிச்சலை தந்தது. அத்தோடு தான் புலிப்பார்வை படம் பார்க்க அமர்ந்தேன். தம்பியின் புகைப்படத்தை வைத்து இயக்குனர் ஒரு கற்பனை கதையை உருவாக்கியிருக்கிறார். பிரவீன் காந்தி படங்கள் எல்லாமே immatured மேகிங்காக தான் எனக்கு தோன்றும். அந்த எண்ணத்தில் தான் போய் படம் பார்க்க தொடங்கினேன்.

இந்த படத்தில் தம்பியை ஒரு கதாநாயகனாக வீரமானவராக காட்ட முயற்சிக்கிறார். அதற்கு முட்டுகொடுக்க சில சாராசரிக்கு கூடுதலான சினிமாத்தனமான காட்சிகளை வைத்திருக்கிறார். தம்பியிடம் வந்து அவர் வயதை ஒத்த சிறுவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளில் வழிபட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். தம்பி அவர்களை அங்கே கூட்டி செல்கிறார் அப்பொழுது சிங்கள ராணுவத்தால் சிறைபிடிக்கப்படுகிறார். அங்கே தம்பி மிக தைரியமாக இருக்கிறார் எல்லோரையும் தைரியமாக எதிர்கொள்கிறார். அந்த இராணுவமுகாம் பொறுப்பாளரான ராணுவ அதிகாரிக்கு ஒரு மகன் இருக்கிறான் அச்சிறுவன் ஒரு கோழை. அச்சிறுவனையும் நம் தம்பியும் ஒப்பிட்டு காட்சிகளை காட்டுகிறார். தம்பியை வைத்து தலைவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். இதற்கு நடுவே இயக்கத்தில் இருக்கும் ஒரு போராளியின் காதல் கதை வருகிறது. போராளியின் காதலி இன்னொரு போராளியின் தங்கை. அவர் கண்ணிவெடியை எடுக்கும் வேலையை செய்கிறார். அவர் இந்த போராட்டம் வேண்டாம் வேறெங்காவது போய் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார். இச்சூழலில் அப்போராளியை சிங்கள ராணுவம் பிடிக்கிறது அவரிடம் தம்பியை வைத்து இயக்கத்தின் சரணடைய வேண்டும் என்று மிரட்டி எடுத்த காணொளியை சிடியாக தலைவருக்கு அனுப்புகிறது. ஆனால் அப்போராளியோ காதலியின் வற்புறுத்தலால் இந்தியா தப்பி போக முயற்சிக்கிறார். அப்பொழுது நடுவில் சிங்கள ராணுவத்திடம் மாட்டி தலைவரால் காப்பாற்றப்படுகிறார்கள். அப்பொழுது அந்த சிடி தலைவரிடம் கிடைக்கிறது. தலைவர் எல்லா மகனையும் போலத்தான் என் மகனும் ஆகவே இதற்கு அடிபணிய வேண்டாம் என்கிறார் இருந்தாலும் முக்கிய போராளிகள் தம்பியை காப்பாற்ற போய் வீரமரணம் அடைகிறார்கள். இதற்கு நடுவே இந்தியா தப்பி கிளம்பிய காதலர்கள் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதை படம் எடுத்த ஒரு வெளிநாட்டவரிடம் இருந்து படங்களை பெரும் சிங்கள ராணுவம் அவர்களை விரட்ட அவர்கள் இந்தியாவிற்கு படகு ஏறுகிறார்கள். அந்த போராளி காதலனுக்கு அப்பொழுது தான் தெரிகிறது தான் கொண்டு வந்த சிடியில் இருந்தது தலைவர் மகன் தான் என்று.. உடனே காதலியை விட்டுவிட்டு உன்னை விட இந்த போராட்டம் தான் முக்கியம் தலைவர் மகனை காப்பாற்றுவது தான் முக்கியம் என்று நடுகடலில் குதித்து மீண்டும் உள்ள வந்து தம்பியை மீட்க போராடி மடிகிறான்.

சிங்களன் வைத்த கோரிக்கையை தலைவர் ஏற்காததால் போரை தீவிரமாக்குகிறார்கள். தலைவரை வேறு இடத்திற்கு போக சொல்லி மக்கள் கேட்கிறார்கள். போராட்டத்தை விட்டு செல்ல முடியாது தலைவர் அதை மறுத்து அங்கேயே இருக்கிறார். தம்பி இருக்கும் இடத்தில ஒரு போர் முடிந்துவிட்டது என்று கொண்டாடுகிறார்கள் தலைவர் உடலை டிவியில் காட்டுகிறார்கள். தம்பி பார்த்து அழுதுவிட்டு திடீரென இது என் அப்பா இல்லை என்கிறான். உடனே ராணுவ அதிகாரிகள் என்ன என்ன என்று பதட்டமாகிறார்கள். அதற்கு தம்பி என் அப்பாவை பிடிக்க உங்களுக்கு அருகதை இல்லை என்று சொல்ல கோபமான ராணுவ அதிகாரி தம்பியை சுட்டு கொல்கிறார். அவர் போரில் இறந்ததை போன்று போராளிகளுக்கு நடுவே போட்டு நாடகமாடுகிறார்கள். தம்பியை கொன்ற அந்த ராணுவ அதிகாரி (ராஜபக்சே உடையில்) தன மகனை வந்து வீட்டில் சந்தோசமாக தேடுகிறார். அவர் மகன் நீச்சல் குளத்தில் பயத்தில் தற்கொலை செய்துகொண்டு மிதக்கிறான். உங்களுக்காக தான் நாங்கள் பலரை கொன்றோம் அது வீணாகி போய்விட்டதே என்று தலையில் அடித்து அழுகிறார். காதலனை கொன்றதற்கு பலிவாங்க மனித வெடிகுண்டாய் மாறி அங்கே வந்து இதை பார்த்துவிட்டு செய்த பாவம் பழி வாங்கிவிட்டது என்பதாக திரும்புகிறாள்.. இது தான் படக்கதை..

மேலே நான் சொன்ன கோர்வையில் கூட படம் இல்லை என்றே கருதுகிறேன்.. அங்கும் இங்கும் அலை பாய்கிறது காட்சிகள்.. பாடல்கள் தவறான இடத்தில வருகிறது. போராட்ட காட்சிகள் தரத்தில் இல்லை.. தலைவரின் வாரிசு தம்பி பாலா என்பதாக காட்டுவதாக நினைத்து ராணுவ உடையில் தலைவரை போலவே பேசுவது நடப்பது துப்பாக்கியில் தலைவரோடு குறிபார்ப்பது போன்ற கனவுக்காட்சிகள் சிறுபிள்ளைத்தனமாக எடுக்கபட்டிருக்கிறது. இந்தியா மிக நல்ல நாடு இந்த படுகொலைகள் அவர்களுக்கு தெரிந்தால் உங்களை சும்மா விடமாட்டார்கள் என்ற இந்தியா ஒரு பச்சை பிள்ளை போன்று தோற்றத்தை தரும் வசனங்கள் எரிச்சலை தருகின்றன. படம் ஆரம்பமே ஐந்து குண்டுகள் ஒரு பட்டாம்பூச்சியை விரட்டி சென்று சுடுகிறது.. விழுகிற பட்டாம் பூச்சியின் இரண்டு இறக்கைகள் புலியின் கண்களாக புலிப்பார்வையாக மாறுகிறது. படமுழுக்க புலிக்கொடி பறக்கிறது. தலைவரை பற்றியும் இயக்கத்தை பற்றியும் மிக உயர்வாகவே எடுத்துவைக்கபட்டிருக்கிறது. நடு நடுவே உண்மையான சேனல் 4 காட்சிகள் வருகின்றன. அறிவில் சிறந்த தமிழர்களை வளரவிட்டால் தங்களுக்கு சிக்கலாகிவிடும் அதனாலே அடக்குகிறோம் என்று சிங்களர்கள் சொல்கிறார்கள். தமிழீழமே தீர்வு என்பதை பல காட்சிகள் சொல்கின்றன...படத்தில் பாலாவை பற்றி ஈழம் பற்றி கீழுள்ளவாறு ஒரு பாடல் வருகிறது.

துணிந்தவன் கனவிலும் தோல்விகள் நுழைவதே இல்லை

துணிந்து எழுந்தவன் பார்வையில் வானத்தின் தூரமே எல்லை

தமிழா என் தமிழா

நம் வாழ்வு

எதிரி கையிலா?

பால பாலேந்திரா

யார் நிற்பார்

உனக்கு எதிரா?

தமிழனின் வெற்றியில் தமிழ் இன வெற்றியில்

மனம் தான் லயிகட்டும்

புஜம் தான் துடிக்கட்டும்

புகழ் எங்கும் ஒலிக்கட்டும்

பூமி எங்கும் அதிரட்டும்

தமிழனின் பரம்பரை

திசை எட்டும் பரவட்டும்.

புலிக்கொடி பரந்த தமிழ் மண்ணில்

புலிகள் மீது இன்று கருணையில்லை

இந்திய நாட்டின் எல்லையானது

கன்னியாகுமரி எல்லையானது

குமுறி குமுறி அழும் நிலை தான்

எங்கள் கன்னிப்பெண்கள் வாழ்க்கையானது

மாற்றிடுவோம் நிலை மாற்றிடுவோம்

ஏற்றிடுவோம் கொடி ஏற்றிடுவோம்

ராமாயணத்தில் யுத்த காண்டம்

நடந்தது அன்று பெண்ணிற்காக

சீதை தெய்வ பெண்ணிற்காக

இன்று இலங்கையில் யுத்த காண்டம்

நடப்பது ஈழ மண்ணிற்காக

தமிழ் ஈழ ஈழ மண்ணிற்காக

முருகனுக்கு தமிழ் கடவுள் முருகனுக்கு

அறுபடையுண்டு ஆறுபடையுண்டு

100 படையுண்டு தமிழினம் காக்க 100 படையுடு

அது உலகமெல்லாம் உண்டு

சிலுவை சுமந்த இயேசு கூட கூசிபோவார் குற்றம் கண்டு

போர் குற்றம் கண்டு

படம் பார்க்கும் முன்னர் அண்ணன் சீமான் வீட்டில் பிரவீன் காந்தியிடம் பேசியபொழுது அவர் போராட்டத்தை பற்றிய முழு புரிதலில்லாதவர் என்று தெரிந்தது ஆனால் எதிரான சிந்தனையில் இல்லை என்பது அதை விட தெளிவாக தெரிந்தது. இந்த படம் சென்சாரில் சிக்கல் இல்லாமல் வெளிவந்ததற்கு காரணம் பாலாவின் ஆன்மா தான் காரணம் என்று அவர் என்னிடமும் சீமான் அண்ணனிடமும் சொல்லும் பொழுது இருவரும் பார்த்து சிரித்துக்கொண்டோம். அந்த அளவிற்கு தான் அவரின் அரசியல் சார்ந்த சிந்தனை. அவர் சென்ற பிறகு இவர் உண்மையில் உணர்வாளரா என்று அண்ணனிடம் கேட்டேன். 2004 ஆம் ஆண்டு தங்கர் பச்சான் நடிகைகளை தவறாக பேசிவிட்டார் அவரை நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தும் சரத்குமாரும் வரவைத்து நடிகைகள் காலில் விழவைத்தனர். அப்பொழுது பிரவீன் காந்த் துள்ளல் என்ற படம் அவரே நடித்து எடுத்து வெளியிட்டார் அந்த பட பாடல் வெளியீட்டு விழாவில் நானும் தங்கர் பச்சானும் கலந்து கொண்டோம். எல்லோரும் பேசியபின் பிரவீன் காந்தி பேச வந்தார். வந்தவர் இந்த படத்தின் மூலம் நானும் நடிகர் தான் நடிகர் சங்கத்தில் தங்கர் பச்சானுக்கு நடந்த அவமானத்தை போக்கும் விதமாக நடிகனான நான் அவர் காலில் விழுகிறேன் என்று சாஸ்டாங்கமாக தங்கர் காலில் விழுந்தார். அதை அவர் செய்திருக்க தேவையில்லை. உணர்வாளர் என்பதால் தான் செய்தார். இந்த படமும் அப்படியொரு உணர்வின் அடிப்படையில் எடுத்திருப்பார் என்றார். படம் பார்த்த பின் சீமான் அண்ணன் சொன்னது சரியே எனபட்டது.

ப்ரிவியு படம் பார்த்து வெளியே வந்து படம் பற்றிய கருத்தை இயக்குனர் கேட்கையில் சீமான் அண்ணன் சொன்ன முதல் வார்த்தை தம்பி ராணுவ உடையோடு இருக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் இது வந்தால் பாலா போராளி தான் என்று சுப்பிரமணிய சாமி போன்றார் சொல்வது உண்மையாகிவிடும் அது நம் போராட்டத்திற்கு மீக பெரிய சிக்கலை தந்துவிடும் என்பது தான். இயக்குனரோ படம் எடுக்கும் பொழுது தம்பிக்கு சாதாரண உடை போட்டு பார்த்தேன் அந்த கதாபாதிரத்திற்குரிய வீரம் வரவில்லை அதனால் தான் இந்த உடை போட்டுவிட்டேன். இப்பொழுது நீங்கள் சொன்னதும் தான் தவறென்று புரிகிறது என்றார். உடையோடு வரும் காட்சிகளை நீக்கிவிடுகிறேன் மாற்றிவிடுககிறேன் என்றார் பிரவீன் காந்தி. மாற்றிவிடுகிறேன் என்று சொல்பவரை எதிர்க்க தேவையில்லை என்று தான் பட விழாவிற்கு சென்றார் சீமான் அண்ணன். என்ன கருத்தை படம் பார்த்தபின் சொன்னாரோ அதே கருத்தை தான் பாடல் வெளியீடு விழாவிலும் சொன்னார். நம் போராட்டத்திற்கு எதிரான கருத்தை கொண்ட மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் மத்திய அமைச்சர் இருக்கும் அவையில் தம்பி பாலா போராளி இல்லை மாணவன் என்பதையும் புலிகள் இயக்கம் இறந்தவர்களுக்காக அழுதவர்கள் இல்லை அழுதவர்களுக்காக இருந்தவர்கள் என்பதையும் பதிவு செய்யும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்டார் சீமான் அண்ணன்.(http://tamilanseemanvideos.blogspot.in/2014/08/seeman-speech-at-puliparvai-audio.html) இத்தனைக்கும் பொன் ராதாகிருஷ்ணனை எதிர்த்து மிக கடுமையாக தேர்தல் பணி செய்தவர்கள் நாங்கள். எங்களோடு மேடையை பகிர அவர் தான் வெறுப்பாக வேண்டும் மறுக்கவேண்டும். அவரே சரி என்னும் பொழுது நமக்கெதுக்கு தயக்கம் என்று தான் அண்ணன் சீமான் அங்கே சென்றார்.

இதுவரை அப்படத்தை எதிர்ப்பவர்கள் அந்த புகைப்படங்களை பார்த்தவர்கள் தான். இல்லை சீமானுக்கு மட்டும் காட்டியிருக்கிறார்கள் நமக்கு காட்டவில்லை என்று வெறுப்பில் இருப்பவர்க்கள், படத்தை பார்க்காமலே என்னென்னமோ கதையை கட்டி பூதாகரமாக்கி கட்டுரையாக எழுதி தள்ளுகிறார்கள். படம் பார்த்தவர்கள் படத்தில் ஆதரவான கருத்துகளும் இருக்கிறது என்பதை எங்குமே பதிவு செய்யாததற்கான அரசியல் என்னவென்று தெரியவில்லை. நான் என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இப்போராட்டத்தை பார்த்து நேசித்து ஆதரித்து வருகிறேன். என் வாழ்வில் மாறாத ஆன்ம விருப்பம் தமிழீழமும் தேசிய தலைவருமே.. அவ்விரண்டையும் யார் விமர்சித்தாலும் எதிர் கேள்வி எழுப்பினாலும் அவர்களை எதிரியாகத்தான் பார்த்திருக்கிறேன். ஈழப்பிரச்சனையில் ஒருவர் எடுக்கும் நிலைபாடை வைத்து தான் அவரின் அரசியலையே நான் பார்க்கிறேன். அப்பார்வையில் சொல்கிறேன் இப்படத்தில் நம்மை சிதைக்கும் நம் போராட்டத்தை கேவலப்படுத்தும் நாசப்படுத்தும் எந்த பெரிய கருத்தும் இல்லை. இப்படம் தடை கோருவதற்குரிய படமல்ல. சில காட்சிகளை நீக்கினால் சரியாக இருக்கும். நமக்கு 100 சதவீதம் எதிர் கருத்து இருக்கும் ஊடகங்கள் இன்றளவும் தமிழ்நாட்டில் நடக்கிறது. காலம் முழுக்க எதிராக பேசும் ஆட்கள் இருக்கிறார்கள். சுசாமி இன்றவளவும் தமிழகதிற்குள் வந்து எதிர்த்து பேசிவிட்டு செல்கிறான். இது தான் தமிழகத்தின் எதார்த்த நிலை. இந்நிலையில் இம்மாதிரியான அரைகுறை புரிதலோடு எடுக்கப்பட்ட படங்களாவது வர துவங்கினால் தான் நாளை முழு புரிதலுடன் கூடிய படம் வர தளம் அமைக்கும்.

இப்படியான படங்களை இப்பொழுது தடை கோருவதால் நாளை மேலும் 'ஈழம்' என்ற வார்த்தையைகூட படங்களில் பயன்படுத்தாதவாறு பார்த்துககொள்கிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். புலிப்பார்வை போன்ற படத்தையே நாம் தடுத்தால் இனிமேல் ஈழப்போராட்டத்தை கருவாககொண்டு படம் எடுக்க துணிய மாட்டார்கள். பாரிவேந்தர் 2011 ஆண்டு நமக்கு எதிரான கருத்தை பதிவு செய்திருக்கிறார். இலங்கையில் அவர் கல்லூரியை தொடங்கினார். அப்பொழுது நாம் எதிர்த்தோம். இந்த படத்தையும் அதே கண்ணோட்டத்தோடு பார்த்து படம் பார்க்காமலே எதிர்ப்பது சரியாகாது. பாரிவேந்தருக்கு இந்த படத்தை நிறுத்துவதால் எந்த பெரிய நஷ்டமும் வந்துவிட போவதில்லை. ஆனால் குறைந்த பட்ச ஆதரவாக இருக்கும் இப்படம் நாம் முன் வைக்கும் திருத்தங்களுடன் வந்தால் நமக்கு தான் லாபம். பொது மக்களிடம் பரவலாக தம்பி பாலா போய் சேருவான். நம் போராட்டத்தின் நியாயம் பரவலாக போய் சேரும்.

இந்த கத்தியும் புலிபார்வையும் ஒட்டு மொத்த தமிழ்தேசிய விடுதலை அரசியலை மழுங்கடித்துவிடும் என்ற பிம்பத்தை உருவாக்கிவிடும் நோக்கம் யாருக்கானது(?) என்பதே இப்போதைய முக்கிய கேள்வியாக இருக்கிறது. தமிழ் திரை உலகில் ராஜபக்ஷேவின் முதலீடு அல்லது ஆதரவாளர்கள் வருகையின் மூலம் இனப்படுகொலை மறக்கடிக்கபடும் என்ற சிந்தனையை நம்புபவர்கள் ஏற்றுக்கொள்பவர்கள் எப்படியான படங்களை அனுமதிப்பார்கள் (?) என்பதே கேள்விக்குறியாக உள்ளது. லட்சகணக்கான தமிழர்களின் பிணங்கள் மீதான நீதி இந்த சொற்ப படங்களால் நீர்த்துபோயவிடும் என்ற மாயை யாரால் எப்படி நுட்பமாக பரப்பட்டது என்பதே விடைதெரியாத கேள்வியாகே இருக்கிறது.

# நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்பட்டதே சிறு குழுவாக இருக்கும் ஈழ ஆதரவு அரசியல் வெகு ஜன பொது வெளி அரசியலாக மாறவேண்டும் என்பதற்காகத்தான். புரிதலில்லாமல் படத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தமிழர்களுக்குள் எல்லோரையும் கண்மூடித்தனமாக எதிர்ப்பது பெரிய பின்னடைவை தரும். மேலும் நாம் சிறு குழுவாய் மாறி நிற்போம். ராஜபக்சேவின் காசுக்கு விலை போவார்கள் என்று சொல்வதும் நம் போராட்டத்தை சிதைக்கும் படம் எடுத்து நம் போராட்டத்தை நசுக்குவார்கள் என்று சொல்வதும் உணர்வெழுச்சியோடு இருக்கும் திரைத்துறையை கீழ்த்தரமாக சிரித்தரிக்கும் வேலை. இது நம்மை அவர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும். நமக்கு அருகே இருக்கும் திரைத்துறை தமிழர்களிடம் நமக்கு முரணானதை எடுக்க சொல்வோம். நமக்கு சாதகமானதை உருவாக்குவோம். நமது கருத்தை புரியவைப்போம். நம்மிடமிருந்து மேலும் எதிரிகள் உருவாகாமல் தடுப்போம் அதுவே நாளை நமக்கு போராட்டத்திற்கான வலிமையை சேர்க்கும்..

பாக்கியராசன் சே

(Facebook)

இந்த படம் வெளியிடப்படகூடாது என்பதற்கான முக்கிய காரணம் பலாசந்திரனை போராளியாகக் காட்டப்படுவதே.. இராணுவச்சீருடை அகற்றப்பட்டு பாலச்சந்திரனை போராளியாக சித்தரிக்கப்படும் கட்டங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிற காரணத்தால் படத்தை எதிர்க்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. சரியான நேரத்தில் நிதானமாக முடிவெடுக்கும் சீமானுக்கு வாழ்த்துக்கள்.. அத்தனை பேரையும் பகைத்துத்தான் கடற்கரையில் நாதியற்று நம்மினம் செத்தழிந்தது.. இனிமேலும் நமக்கு எதிரிகளை சேர்க்க வேண்டாம்.. எம்மினத்தை மேலும் மேலும் பலகீனப்படுத்தி இருக்கும் கொஞ்ச நஞ்ச நேசக்கரங்களையும் பலகீனபடுத்த திரைமறைவில் செயல்படுபவர்கள்தான் தீவிரதமிழீழ ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டு கண்ணில்படும் அத்தனையையும் எதிர்த்துக்கொண்டு திரிகிறார்கள்.. அண்மையகாலங்களில் மைய எதிரி சிங்களத்துக்கெதிரான மக்களின் உணர்வுகளை சீமான் போன்ற சாதாரண மனிதர்கள் மீதும் சினிமாத்துறை மற்றும் நாளாந்த விடயங்கள் மீதும் திருப்பிவிடுவதில் தீவிர தமிழீழ ஆதரவு அங்கியை அணிந்துகொண்டு இணையங்களிலும் முகப்புத்தகத்திலும் பலர் தலைகீழாக நிற்பதை நாளாந்தம் காண்கிறோம்,இன்னும் சிலருக்கு  நாளாந்தம் சீமானைப்பற்றி ஏதாவது நக்கல் நையாண்டி எழுதிய பின்னரே தொண்டைக்குள்ளால் அன்றைய தேநீர் இறங்குகிறது போல் உள்ளது..
 
சீமானின் தமிழ் நாட்டு அரசியல் பற்றி இணையங்களிலும், மற்றும் முகப்புத்தகத்தில் தங்கள் நாளாந்த நாலுவரி நிலைத்தகவலுக்கும், எதோ தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிந்ததே சீமானால்தான் போல என்று  நாளாந்தம் வாயில் வருவதை எழுதிப்பொழுதுபோக்கிவிட்டு செயலற்றிருக்கும் ஈழத்தமிழரை விட தன் அரசியலுக்காகவாவது எம் பிரச்சினைகளை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று பேசிக்கொண்டிருக்கும் சீமானின் செயல் பலமடங்கு மேலானது...
 
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அவர்களின் தேர்தல் வெற்றிகளின் போது வாழ்த்தியும் புகழ்ந்தும் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியும் பிரேமதாசவுடன் தேவைப்பட்டபோது நண்பர்களாகியும் செயற்பட்டவர்கள்தான் விடுதலைப்புலிகள்..
 
நமக்குத்தேவை அரிசிதான் என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவாகத்தான் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள்,இருப்பார்கள்..முகப்புத்தக மற்றும் இணைய செயற்பாட்டாளர்களுக்குத்தான் இன்னொரு பொழுதுபோக்கு விடயம் கிடைக்கும் வரை சீமான் எதிர்ப்பு தேவைப்படும்..  :D

Edited by சுபேஸ்

இந்த படம் வெளியிடப்படகூடாது என்பதற்கான முக்கிய காரணம் பலாசந்திரனை போராளியாகக் காட்டப்படுவதே.. இராணுவச்சீருடை அகற்றப்பட்டு பாலச்சந்திரனை போராளியாக சித்தரிக்கப்படும் கட்டங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிற காரணத்தால் படத்தை எதிர்க்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. சரியான நேரத்தில் நிதானமாக முடிவெடுக்கும் சீமானுக்கு வாழ்த்துக்கள்.. அத்தனை போரையும் பகைத்துத்தான் கடற்கரையில் நாதியற்று நம்மினம் செத்தழிந்தது.. இனிமேலும் நமக்கு எதிரிகளை சேர்க்க வேண்டாம்.. எம்மினத்தை மேலும் மேலும் பலகீனப்படுத்தி இருக்கும் கொஞ்ச நஞ்ச நேசக்கரங்களையும் பலகீனபடுத்த திரைமறைவில் செயல்படுபவர்கள்தான் தீவிரதமிழீழ ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டு கண்ணில்படும் அத்தனையையும் எதிர்த்துக்கொண்டு திரிகிறார்கள்.. அண்மையகாலங்க்களில் மைய எதிரி சிங்களத்துக்கெதிரான மக்களின் உணர்வுகளை சீமான் போன்ற சாதாரண மனிதர்கள் மீதும் சினிமாத்துறை மற்றும் நாளந்த விடயங்கள் மீதும் திருப்பிவிடுவதில் தீவிர தமிழீழ ஆதரவு அங்கியை அணிந்துகொண்டு இணையங்களிலும் முகப்புத்தகத்திலும் பலர் தலைகீழாக நிற்பதை நாளாந்தம் காண்கிறோம்,இன்னும் சிலருக்கு  நாளாந்தம் சீமானைப்பற்றி ஏதாவது நக்கல் நையாண்டி எழுதிய பின்னரே தொண்டைக்குள்ளால் அன்றைய தேநீர் இறங்குகிறது போல் உள்ளது..
 
சீமானின் தமிழ் நாட்டு அரசியல் பற்றி இணையங்களிலும், மற்றும் முகப்புத்தகத்தில் தங்கள் நாளாந்த நாலுவரி நிலைத்தகவலுக்கும், எதோ தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிந்ததே சீமானால்தான் போல என்று  நாளாந்தம் வாயில் வருவதை எழுதிப்பொழுதுபோக்கிவிட்டு செயலற்றிருக்கும் ஈழத்தமிழரை விட தன் அரசியலுக்காகவாவது எம் பிரச்சினைகளை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று பேசிக்கொண்டிருக்கும் சீமானின் செயல் பலமடங்கு மேலானது...
 
கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அவர்களின் தேர்தல் வெற்றிகளின் போது வாழ்த்தியும் புகழ்ந்தும் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியும் பிரேமதாசவுடன் தேவைப்பட்டபோது நண்பர்களாகியும் செயற்பட்டவர்கள்தான் விடுதலைப்புலிகள்..
 
நமக்குத்தேவை அரிசிதான் என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவாகத்தான் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள்,இருப்பார்கள்..முகப்புத்தக மற்றும் இணைய செயற்பாட்டாளர்களுக்குத்தான் இன்னொரு பொழுதுபோக்கு விடயம் கிடைக்கும் வரை சீமான் எதிர்ப்பு தேவைப்படும்..  :D

சுபேஸ் சீமானுக்கு இன்னொரு ஈழம் போன்ற காசு பார்க்கும் இடம் கிடைக்குவரை ஈழ பிழைப்பு நடந்துகொண்டே இருக்கும் ..

மத்திய அரசை மீறி எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் சும்மா சீனுக்கு ஈழம் பிடிக்கிறன் என்று கோஷம் போடுவதை நிறுத்தி ஈழத்தமிழர் நலனில் அக்கறை இருந்தால் மத்திய அரசுடன் ஒரு நல்ல நட்புறவு வளர்த்து அதனூடா எமக்கான தீர்வை நோக்கி செல்வது நன்மை அளிக்கும் ..

அதை விடுத்து தமிழ்நாடு எதோ தனி நாடு போலவும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்தநாளே தாம்பாளத்தில் வைத்து சீமான் ஈழம் தந்திடுவார் என்பது போலவும் உள்ளது உங்கள கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய அரசை மீறி எதுவும் செய்ய முடியாது என்று தெரிந்தும் சும்மா சீனுக்கு ஈழம் பிடிக்கிறன் என்று கோஷம் போடுவதை நிறுத்தி ஈழத்தமிழர் நலனில் அக்கறை இருந்தால் மத்திய அரசுடன் ஒரு நல்ல நட்புறவு வளர்த்து அதனூடா எமக்கான தீர்வை நோக்கி செல்வது நன்மை அளிக்கும் ..

சீமான் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயம். சில நெழிவு சுழிவுகளினூடாகத்தான் இந்தியாவில் சாதிக்க முடியும்.. சீமானின் நககர்வுகள் அப்படிப்போலத்தான் அண்மைய காலங்களில் தெரிகிறது.. விமர்சனங்களில் வரும் நல்ல விடயங்களை எடுத்துகொண்டு சீமான் தன்னை இன்னமும் செளுமைப்படுத்துவாராக...

அதை செய்யுங்கோ என்று சொன்னால் நீங்கள் அவர் மேல் காழ்ப்பு கொண்டு கதைக்கிறியல் எரிச்சல் பொறாமை என்று சண்டைக்கு வாறாக தம்பிகள் ..

சீமானா யார் அது .

  • கருத்துக்கள உறவுகள்

சீமானா யார் அது .

1. Aமான்  Bமான் என்பனவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக வரும் C-மான்

2. வனவாசத்தின்போது சீதை ராமனுக்கு மாயமானைக் காட்டி see-மான் என்றாளாம். (இது பார் மனிதனே என்றும் மானைப் பார் என்றும் அர்த்தம் தரும்)

3. கடற்கரையில்  நின்று ஒருவரைப் பார்த்து see-man என்று அதாவது கடலைப் பார் என்றும் சொல்ல்லலாம்.

4. கடலிலே பயணம் செய்யும் மாலுமி seaman

5. ஒரு (பெண்) மானைப் பார்த்து (ச்ச்)சீ... மான் என்று கேவலமாகவும் சொல்லலாம்

"யாவும் கற்பனையே" என்னும் கதையை உண்மையான ஆட்களின் பெயர்/உருவங்களை பொருத்தி எடுக்கிறார்களா?...

:)

இந்த படம் வெளியிடப்படகூடாது என்பதற்கான முக்கிய காரணம் பலாசந்திரனை போராளியாகக் காட்டப்படுவதே.. இராணுவச்சீருடை அகற்றப்பட்டு பாலச்சந்திரனை போராளியாக சித்தரிக்கப்படும் கட்டங்கள் நீக்கப்பட்டு வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிற காரணத்தால் படத்தை எதிர்க்கவேண்டிய எந்த அவசியமும் இல்லை. சரியான நேரத்தில் நிதானமாக முடிவெடுக்கும் சீமானுக்கு வாழ்த்துக்கள்.. அத்தனை பேரையும் பகைத்துத்தான் கடற்கரையில் நாதியற்று நம்மினம் செத்தழிந்தது.. இனிமேலும் நமக்கு எதிரிகளை சேர்க்க வேண்டாம்.. எம்மினத்தை மேலும் மேலும் பலகீனப்படுத்தி இருக்கும் கொஞ்ச நஞ்ச நேசக்கரங்களையும் பலகீனபடுத்த திரைமறைவில் செயல்படுபவர்கள்தான் தீவிரதமிழீழ ஆதரவாளர்களாகக் காட்டிக்கொண்டு கண்ணில்படும் அத்தனையையும் எதிர்த்துக்கொண்டு திரிகிறார்கள்.. அண்மையகாலங்களில் மைய எதிரி சிங்களத்துக்கெதிரான மக்களின் உணர்வுகளை சீமான் போன்ற சாதாரண மனிதர்கள் மீதும் சினிமாத்துறை மற்றும் நாளாந்த விடயங்கள் மீதும் திருப்பிவிடுவதில் தீவிர தமிழீழ ஆதரவு அங்கியை அணிந்துகொண்டு இணையங்களிலும் முகப்புத்தகத்திலும் பலர் தலைகீழாக நிற்பதை நாளாந்தம் காண்கிறோம்,இன்னும் சிலருக்கு நாளாந்தம் சீமானைப்பற்றி ஏதாவது நக்கல் நையாண்டி எழுதிய பின்னரே தொண்டைக்குள்ளால் அன்றைய தேநீர் இறங்குகிறது போல் உள்ளது..

சீமானின் தமிழ் நாட்டு அரசியல் பற்றி இணையங்களிலும், மற்றும் முகப்புத்தகத்தில் தங்கள் நாளாந்த நாலுவரி நிலைத்தகவலுக்கும், எதோ தமிழீழ விடுதலைப்போராட்டம் அழிந்ததே சீமானால்தான் போல என்று நாளாந்தம் வாயில் வருவதை எழுதிப்பொழுதுபோக்கிவிட்டு செயலற்றிருக்கும் ஈழத்தமிழரை விட தன் அரசியலுக்காகவாவது எம் பிரச்சினைகளை தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று பேசிக்கொண்டிருக்கும் சீமானின் செயல் பலமடங்கு மேலானது...

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் அவர்களின் தேர்தல் வெற்றிகளின் போது வாழ்த்தியும் புகழ்ந்தும் ஆதரவு கேட்டு கடிதம் எழுதியும் பிரேமதாசவுடன் தேவைப்பட்டபோது நண்பர்களாகியும் செயற்பட்டவர்கள்தான் விடுதலைப்புலிகள்..

நமக்குத்தேவை அரிசிதான் என்பதில் ஈழத்தமிழர்கள் தெளிவாகத்தான் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள்,இருப்பார்கள்..முகப்புத்தக மற்றும் இணைய செயற்பாட்டாளர்களுக்குத்தான் இன்னொரு பொழுதுபோக்கு விடயம் கிடைக்கும் வரை சீமான் எதிர்ப்பு தேவைப்படும்.. :D

பாலச்சந்திரன் போராளிக்கான சீருடையுடன் நிற்கும் காட்சிகளை அகற்றினால் படம் சரியாகி விடும் என நீங்கள் நினைத்தால் அது தவறு.

அண்மைக்காலத்தில் சிங்களத்துக்கு எதிரான பிரச்சினை சீமான் அண்ணா மேலும் சினிமா மேலும் திருப்பப்படுவது உண்மை தான். ஆனால் சீமான் அண்ணாவும் அதே சினிமாவிலுள்ள ஒரு படத்தை ஆதரித்ததால் தானே பிரச்சினை. சினிமா மீது கவனத்தை திருப்ப கூடாது என்றால் சீமான் அண்ணா இனம், மெட்ராஸ் கபே போன்ற படங்களை எதற்கு எதிர்த்தவர்? அதே போல் புலிப்பார்வை படத்தை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை எதற்கு ஆதரித்தவர்? அமைதியாக கருத்து கூறாமல் இருந்திருக்கலாமே.

இப்படத்தை ஆதரித்தால் எதிர்வினைகள் கிளம்பும் என்று தெரிந்தும் வெளிப்படையாக இசை வெளியீட்டிற்கு சென்று பிரச்சினையை உருவாக்கியது அவர் தானே?

சீமான் அண்ணா மேல் இணைய தளங்களிலும் முகநூலிலும் காழ்ப்புணர்வு கொண்டு பலர் எழுதுவது எனக்கு தெரியும். அதற்காக இப்பொழுது சீமான் அண்ணா மேல் விமர்சனம் வைப்பவர்கள் அனைவரையும் அந்த பட்டியலில் உள்ளடக்குவது தவறு.

நான் முன்னரும் நாம் தமிழர் கட்சி செய்யும் நல்லவற்றை பகிர்ந்திருக்கிறேன். இப்பொழுதும் பகிர்கிறேன்.

ஆனால் நாம் தமிழர் கட்சி எந்த நல்லவற்றை செய்தாலும் அவற்றை பகிரும் சிலர் இப்பொழுது பகிர்வதில்லை. நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இருந்த சிலர் இந்த சம்பவத்தின் பின் கட்சியை விட்டு நீங்கியிருந்தார்கள். நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்ட சிலர் தாம் அதற்காக கவலைப்படுவதாக கூறியிருந்தார்கள்.

இணைய தள, முகநூல் செயற்பாட்டாளர்கள் தான் பொழுது போக்கிற்கு எதிர்க்கிறார்கள் என்று கூறி உண்மையாக சீமான் அண்ணாவை ஆதரித்து இதுவரை கருத்து பகிர்ந்தோரையும், நேரடியாக நாம் தமிழர் கட்சியின் போராட்டங்களில் பங்குபற்றியவர்களையும் கொச்சைப்படுத்துகிறீர்கள்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் மீதான சிலரின் பார்வை மாறாத வரை.. இப்படியான திரிகள் நீளவே செய்யும். அதற்கு சீமான் பாவம் என்ன செய்ய முடியும். :lol::icon_idea:

சீமான் மீதான சிலரின் பார்வை மாறாத வரை.. இப்படியான திரிகள் நீளவே செய்யும். அதற்கு சீமான் பாவம் என்ன செய்ய முடியும். :lol::icon_idea:

2016 சட்டமன்ற தேர்தலில் சீமான் அண்ணா வெல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தவள் நான் என்பதை மறந்து விட வேண்டாம். :lol:

சீமான் மீதான சிலரின் பார்வை மாறாத வரை.. இப்படியான திரிகள் நீளவே செய்யும். அதற்கு சீமான் பாவம் என்ன செய்ய முடியும். :lol::icon_idea:

சீமான் மீதான சிலரின் பணம் மாறாதவரை... என்று வரவேண்டும்.  :o

2016 சட்டமன்ற தேர்தலில் சீமான் அண்ணா வெல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தவள் நான் என்பதை மறந்து விட வேண்டாம். :lol:

இதை கேட்டால் சீமானே விழுந்து விழுந்து சிரிப்பார்.
நீங்கள் அதிகம் தமிழ் சினிமா பார்க்கும் ஆள் போல உள்ளது. அது தான் ஒரே பாட்டில் பெரிய ஆள் ஆவது போல ஒரே தேர்தலில் சீமான் வென்றுவிடுவார் என்று எதிர்பார்த்திருக்கிறீர்கள். 
எமது போராட்டத்தையும் பலர் சினிமா போல பார்க்க வெளிகிட்டுதான் இப்ப இந்த நிலமையில நிக்கிறம்.

2016 சட்டமன்ற தேர்தலில் சீமான் அண்ணா வெல்ல வேண்டும். அப்படி வெற்றி கிடைக்காவிட்டால் 2021 இல் வெல்ல வேண்டும் என்று கூறியிருந்தேன்.

தமிழகத்திலுள்ள ஏனைய கட்சிகளை விட நாம் தமிழர் கட்சி மிக விரைவில் முன்னேறி வந்தது. ஆனால் சீமான் அண்ணாவின் அண்மைய செயற்பாடே அவர் தேர்தல் இலட்சியத்துக்கு பாதிப்பாக அமைந்து விடுமோ தெரியவில்லை.

Edited by துளசி

இப்பவும் சொல்றன் சாருங்களா .....................சீமானின் மேல் சந்தேகப்படும் உறவுகளாகிய நீங்கள் பார்க்கும் பார்வைக்கும் ,வைக்கும் கருத்துக்கும் எப்பிடி எல்லாம் நியாயம் கூற முயற்சிக்கிறீர்கள் .உங்கள் கருத்துக்களை மதிக்கும் அதே வேளை,,,,,,,,,,, இந்திய றோவின் சதித்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ,நிகழ்ச்சிப்படுத்தப்பட்ட ஓர் நிகழ்வாகவே இதை நான் பார்க்கிறேன் :o  :D     இன்று வரை சீமானின் மேல் நம்பிக்கை இழக்காதவர் கூட்டத்தில் நானும் ஒருவன் என்ற வகையில் .கூறுகிறேன் ........................இதை நீங்கள் அலசுவதும் ஆராய்வதும் நீங்கள் எந்த மட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதை மையமாய் கொண்டது .....இந்தக்கருத்தை நான் இங்கே வைப்பதற்கும் ஓர் காரணம் சீமான் தனது நிலையை மிக தெளிவாக ,ஆணித்தரமாக விளக்கியபின்னும் .மீண்டும் நீங்கள் அதை புரியாமல் ...............
:icon_idea:
அய்யய்யோ நீங்கள் றோவின் ஆட்கள் என்றும் நான் சொல்லல ...............தப்பாக புரிந்திடாதீங்க  :D  :lol:

Edited by தமிழ்சூரியன்

இப்பவும் சொல்றன் சாருங்களா .....................சீமானின் மேல் சந்தேகப்படும் உறவுகளாகிய நீங்கள் பார்க்கும் பார்வைக்கும் ,வைக்கும் கருத்துக்கும் எப்பிடி எல்லாம் நியாயம் கூற முயற்சிக்கிறீர்கள் .உங்கள் கருத்துக்களை மதிக்கும் அதே வேளை,,,,,,,,,,, இந்திய றோவின் சதித்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ,நிகழ்ச்சிப்படுத்தப்பட்ட ஓர் நிகழ்வாகவே இதை நான் பார்க்கிறேன் :o:D இன்று வரை சீமானின் மேல் நம்பிக்கை இழக்காதவர் கூட்டத்தில் நானும் ஒருவன் என்ற வகையில் .கூறுகிறேன் ........................இதை நீங்கள் அலசுவதும் ஆராய்வதும் நீங்கள் எந்த மட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதை மையமாய் கொண்டது .....இந்தக்கருத்தை நான் இங்கே வைப்பதற்கும் ஓர் காரணம் சீமான் தனது நிலையை மிக தெளிவாக ,ஆணித்தரமாக விளக்கியபின்னும் .மீண்டும் நீங்கள் அதை புரியாமல் ...............

:icon_idea:

அய்யய்யோ நீங்கள் றோவின் ஆட்கள் என்றும் நான் சொல்லல ...............தப்பாக புரிந்திடாதீங்க :D:lol:

இந்திய றோவின் சதித்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி எனின் அதற்குள் இவர் ஏன் போய் விழுந்தவர். தேவையில்லாமல் இரு படங்களுக்கு பஞ்சாயத்து வேலை பார்க்க போய் தானே எதிர்ப்பு கிளம்பியது?

இந்திய றோவின் சதித்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி எனின் அதற்குள் இவர் ஏன் போய் விழுந்தவர். தேவையில்லாமல் இரு படங்களுக்கு பஞ்சாயத்து வேலை பார்க்க போய் தானே எதிர்ப்பு கிளம்பியது?

இரு படங்களிலும் அவர் எதை சொல்ல வந்தவர் எதை சாதிக்க நினைத்தவர் என்பதை அவரது பேட்டிகளில் இருந்து தெரிந்து கொண்டவன் .கொஞ்சம் ஆழமாய் அதை பாருங்கள் .............அவர் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் மனச்சாட்சி உடன் நீங்கள் இருந்தால் அந்த கேள்விகளுக்கு முதலில் ஆணித்தரமாய் பத்தி அளியுங்கள் அதன் பின் உங்கள் பதிலில் இருந்து நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வதா விடுவதா என்பதை தீர்மானிக்கிறேன் தங்காய் ....... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய றோவின் சதித்திட்டத்தில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி எனின் அதற்குள் இவர் ஏன் போய் விழுந்தவர். தேவையில்லாமல் இரு படங்களுக்கு பஞ்சாயத்து வேலை பார்க்க போய் தானே எதிர்ப்பு கிளம்பியது?

இந்தப் பிரவீன் காந்தியை சினிமா வட்டாரத்தில் அறிந்தவர் சீமான். விளக்கம் இல்லாமல் படம் எடுத்துவிட்டார் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்த பிரவீன் காந்தி ஒரு தரமான இயக்குர் இல்லை.. யார் யாரையோ பிடித்து ஒரு வாய்ப்பைப் பெற்று ஆர்வக்கோளாறில் ஒரு படத்தை எடுத்துவிட்டார். இவ்வளவுதான் நடந்தது. இதற்கு ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டியதில்லை. நேரிேலயே பேசி குறைகளை நிவர்த்தி செய்யலாம். :D

இரு படங்களிலும் அவர் எதை சொல்ல வந்தவர் எதை சாதிக்க நினைத்தவர் என்பதை அவரது பேட்டிகளில் இருந்து தெரிந்து கொண்டவன் .கொஞ்சம் ஆழமாய் அதை பாருங்கள் .............அவர் கேட்கும் கேள்விகளுக்கு உங்கள் மனச்சாட்சி உடன் நீங்கள் இருந்தால் அந்த கேள்விகளுக்கு முதலில் ஆணித்தரமாய் பத்தி அளியுங்கள் அதன் பின் உங்கள் பதிலில் இருந்து நான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வதா விடுவதா என்பதை தீர்மானிக்கிறேன் தங்காய் ....... :D

நான் எனது மனச்சாட்சியுடன் இருப்பதால் தான் இவ்வளவும் எழுதுகிறேன். நீங்கள் கொஞ்ச பேர் தான் மனச்சாட்சியை எங்கேயோ புதைத்து விட்டு கதைக்கிறீர்கள்.

சீமான் அண்ணாவின் பேட்டிகளை ஏற்கனவே நானும் கேட்டிருந்தேன். அவர் பேட்டிகளில் கூறிய கருத்துக்களிலேயே பல பிழைகளை காணலாம். ஒரு சிலரை பகைக்க கூடாது என நினைத்து மாணவர்களையும் சீமான் அண்ணாவுக்கு ஆதரவு கொடுத்த ஒரு சில கட்சிகளையும் பகைத்து விட்டார். பல மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்.

மாணவர் போராட்டமாகட்டும், நாம் தமிழர் கட்சியாகட்டும் உங்களை விட அதிகளவில் பலருடன் நான் முகநூலில் தொடர்பில் இருக்கிறேன்.

இந்தப் பிரவீன் காந்தியை சினிமா வட்டாரத்தில் அறிந்தவர் சீமான். விளக்கம் இல்லாமல் படம் எடுத்துவிட்டார் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

இந்த பிரவீன் காந்தி ஒரு தரமான இயக்குர் இல்லை.. யார் யாரையோ பிடித்து ஒரு வாய்ப்பைப் பெற்று ஆர்வக்கோளாறில் ஒரு படத்தை எடுத்துவிட்டார். இவ்வளவுதான் நடந்தது. இதற்கு ஒரு போராட்டத்தை அறிவிக்க வேண்டியதில்லை. நேரிேலயே பேசி குறைகளை நிவர்த்தி செய்யலாம். :D

பிரவீன்காந்தி எப்படியோ எனக்கு தெரியாது. ஆனால் பாரிவேந்தர் ஒரு புலி எதிர்ப்பாளர்.

இந்த படத்தை திருத்த முடியும் என சீமான் அண்ணா நினைத்தால் கூட திருத்திய பின் இசை வெளியீட்டிற்கு சென்றிருக்கலாமே. எதற்கு மற்றவர்கள் இவரை எதிர்ப்பதற்கான வாய்ப்பை உருவாக்கினார்?

நாம் தமிழர் கட்சியில் இருந்த சிவப்பிரியன் செம்பியனே நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கருத்து கூறும் நிலை ஏன் வந்தது?

பாரிவேந்தர் என்று ஒருவர் இருக்கிறார் என்பது இந்தப் பிரச்சினைக்குப் பின்னால்தான் எனக்குத் தெரியும். உங்களுக்கும் அப்படித்தான் என நினைக்கிறேன். சீமானுக்கு ஓரளவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறியாமல் இருந்திருக்கலாம்.

முன்பு புலிகளை எதிர்த்தவர்கள் பலர் இப்போது இளக்கமாகி வருகிறார்கள். உதாரணம் ஜெயலலிதா. அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாரிவேந்தர் என்பவர் பல ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பாளராக இருந்திருக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் விமர்சனத்தை வைத்துப் பார்க்கும்போது எதிர்ப்புப் படம் எடுக்கவில்லைஎன்பது புரிகிறது. ஆனால் விடயத்தை வைத்து பணம் பார்க்க முயன்றிருக்கிறார்கள் (சினிமாவில் இது வாடிக்கைதானே).

பழைய விடயத்திற்காக எதிர்ப்பதாக இருந்தால் சீமான் ஜெயாவுக்கு வாக்கு சேர்த்ததே தவறு. ஆனால் அது தவறல்ல என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்திவிட்டன்.

ஆகவே முன்பு பகையாளியாக இருந்து திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயங்கக்கூடாது என்பது எனது வாதம் சட்டவாளர் துளசி அவர்களே... :D That's all your honour..! :lol:

Edited by இசைக்கலைஞன்

நான் எனது மனச்சாட்சியுடன் இருப்பதால் தான் இவ்வளவும் எழுதுகிறேன். நீங்கள் கொஞ்ச பேர் தான் மனச்சாட்சியை எங்கேயோ புதைத்து விட்டு கதைக்கிறீர்கள்.

சீமான் அண்ணாவின் பேட்டிகளை ஏற்கனவே நானும் கேட்டிருந்தேன். அவர் பேட்டிகளில் கூறிய கருத்துக்களிலேயே பல பிழைகளை காணலாம். ஒரு சிலரை பகைக்க கூடாது என நினைத்து மாணவர்களையும் சீமான் அண்ணாவுக்கு ஆதரவு கொடுத்த ஒரு சில கட்சிகளையும் பகைத்து விட்டார். பல மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார்.

மாணவர் போராட்டமாகட்டும், நாம் தமிழர் கட்சியாகட்டும் உங்களை விட அதிகளவில் பலருடன் நான் முகநூலில் தொடர்பில் இருக்கிறேன்.

எந்த நம்பிக்கைகளையும் அவர் இழக்கவில்லை .
 
ஈழத்தமிழனாக ..சிந்திக்கிறேன் 
எந்த ஒரு அமைப்பும் அது ஐ நாவாக இருந்தாலும் சரி லைக்காவாக இருந்தாலும் சரி லிபராவாக இருந்தாலும் சரி சிறிலங்காவின் அனுசரணை இன்றி எம் மக்களுக்கு உதவும் ஓர் சூழல் தற்போது இருக்கின்றதா 
 ?? 
 
இந்த சர்ச்சைகளுடன் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசி அதன்பின் தீர்வு காண்பது தவறான விடயமா ,அல்லது அது எம் கௌரவத்திற்கு இழுக்கா?  [ தமிழீழ விடுதலைப்புலிகளே பேச்சுவார்த்தைக்காக சிறி லங்காவின் ஹெலிகொப்டர்களை பயன் படுத்தியதை நினைவில் கொண்டு ] 
 
திராவிடமே தலை எடுத்துள்ள தமிழகத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் ஓர் மீண்டும் தமிழர்களின் ஆதிக்கத்தை தமிழகத்தில் நிலை நிறுத்தப்படுவது பிழையா ???
 
உண்மையாக செயல் வடிவம் கொடுப்போர் எதுவும் சீமானுக்கு இது வரை சொல்லாத நிலையில் செயல் வடிவம் கொடுக்க விவஸ்தை இல்லாதவர்கள் தங்கள் சிந்தனைக்கமைய கருத்துக்களை எழுதுவது எவ்வகையில் எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் ::???
 
எம் புதல்வன் பாலச்சந்திரனின் திரைப்படம் சம்பந்தப்பட்ட மிகையான  காட்சிகள் நீக்கப்படவேண்டும் என்ற ஒப்பந்தத்தில் அங்கு சென்று அதை மேலும் வலு சேர்க்கும் முகமாக செயல்பட்ட சீமான் பிழையா?? .அல்லது அங்கு செல்லாமல் படம் முழுமையாக வெளி வந்தபின் அதை எதிரித்து போராடவேண்டும் என்று நாம் நினைப்பது பிழையா ???
 
ஒட்டு மொத்தத்தில் 2009 இற்கு பிறகு சீமானின் யதார்த்தமான செயல்பாட்டால் தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை நாம் எப்பிடி பார்க்கின்றோமோ அதேபோல இந்த இரு திரைப்படங்களும் யதார்த்தமான மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் சிந்திப்பது பிழையா :???
 
இவற்றைத்தான் சீமான் அங்கே மிக தெளிவாக கூறியுள்ளார் .இதுவரை எந்த விதமான துரோகத்தனமான செயலோ ,சொல்லோ அதில் காணப்படவில்லை ..........
 
சரி கொஞ்சம் மேலே கேட்கிறேன் .இவற்றை பற்றி விமர்சிக்க எமக்கு என்ன உரிமை இருக்கு ஏனனில் எங்கும் லைக்கா எதிலும் லைக்கா என்று வாழ்ந்து கொண்டிருந்து கொண்டு நாய்க்கூட்டம் போல சீமானை பார்த்து கேள்வி கேட்க எமக்கு என்ன உரிமை இருக்கு .கொஞ்சம் டெண்ட்சன் ஆகாமல் யோசியுங்க தாயி .......... :D

சீமானுக்கு முதலே.. பல ஈழத்து பொருளாதார தடைகளை அந்த தமிழக சாதாரண மக்களின் பங்களிப்புகள்தான் தகர்த்தன. 

அங்கே தமக்கான உணவு அட்டைகளில்கூட பொருட்கள் வாங்கி பங்களித்தவர்களைப்பற்றி அப்போது கேள்விப்பட்டேன்.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் போராட்டத்திற்கு எப்படியான வரவேற்பு இருந்தது.

அவர் எவ்வளவு உதவிகளைச் செய்தார்_

அதற்காக அவர் பாடலை எடுத்தாரா? கொடியை பயன்படுத்தினாரா? உண்டியல் குலுக்கினாரா... 
அல்லது ஈழத்து போராட்டத்தில் தனது மூக்கை நுழைத்துக் கொண்டாரா?

தமிழ்நாட்டு அரசியலோடு நின்று கொண்டு எமக்கான ஆதரவை தந்து கொண்டிருந்தார்.

இதைத்தானே சீமானிடம் எதிர்பார்க்கிறோம்...

இது இவரால் முடியாது... ஏனெனில் இவரது முகவரியே இதுதானே?!  :wub:  :o  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.