Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவு மகாவித்தியாலயத்துக்கான சுற்றுமதில் திட்டம் - France புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தப்பட்டவர் மரண துக்கத்தில் இருக்கும்போது...... அவரின் பெயரை வைத்து விமர்சனங்கள் எழுத உங்களுக்கு வெட்கமாக இல்லையா? இங்குதான் பலரது மனிதாபிமான பழக்க வழக்கங்கள் தெரிகின்றது.

  • 2 months later...
  • Replies 104
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிவலைப்பிட்டி சனசமூக நிலையம்

நன்றியுடன் கரம்பற்றி நிற்கின்றோம். 

நிலைய உறுப்பினரும், முன்பள்ளியின் பழைய மாணவருமான சிறிகரன் ரவி (தற்போது வவுனியா) சிவலைப்பிட்டி முன்பள்ளி ஆசிரியருக்கான ஐப்பசி மாத சம்பளத்தை (3000ரூபாய்) தந்துதவியமைக்காக நிலைய நிர்வாகம் சார்பாகவும், முன்பள்ளி நிர்வாகம் சார்பாகவும் நன்றியுடன் பாராட்டுக்கள்!

இந்த  செய்தி  பற்றி அஞ்சரனுக்கு பதில் தருவதாக எழுதியிருந்தேன்.

உடனடியாகவே நாங்கள் விளக்கம் கேட்டதற்கு அமைய தற்பொழுது பதில் வந்துள்ளது..

அதை இங்கு இணைக்கின்றேன்

தாமதத்துக்கு மன்னிக்கவும்...

அத்தடன் மேலும் இரு ஆசிரியைக்கான கொடுப்பனவைக்கேட்டு வந்துள்ளது

உடனடியாகவே வழங்க முடிவெடுத்துள்ளோம்..IMG_0001_1_Page_1.jpg

NASARETH.jpgBharathi.jpg

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(எழுத்துப்பிழை  திருத்தப்பட்டது)

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊர் ஒன்றியத்தின் பணிகளுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும்

அண்மையில் சுவிஸ் பொலிகை உறவுகளால் உதவி செய்யப் பட்டு கட்டி முடிக்கப் பட்ட பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் சுற்று மதில்

http://www.polikaiuravukal.com/2014/01/சுவிஸ்-பொலிகை-உறவுகளின்/

இந்த  செய்தி  பற்றி ......

இதுதான் முதல்முறை யாழின் இந்தப்பக்கத்தற்கு வந்தது. யாழ் இவ்வளவு பெரிது என்பது எனக்கு தெரியாது. உங்கள் புரபைல் பார்க்க முயற்சித்தனால் இப்பகுதியும் அறிமுகமானது. 
 
எனக்குத்தான் ஊர் என்பது 1985இலிருந்து இல்லை. நீங்கள் உங்கள் ஊருக்கு செய்யும் உதவிகள் என்னை உங்கள் மீது பொறாமைப்பட வைக்கின்றது. ஆனால் நீங்கள் ஒருங்கிணைத்து செய்யும் உதவிகள் மனதிற்கு ஊக்கத்தை தருகின்றது. எனது ஊரும் ஒருநாள் கிடைக்கும் அதற்கும் ஏதாவது செய்யலாம் என்ற கனவு மேம்படுகிறது.
 
தூற்றுவார தூற்றட்டும் நீங்கள் உங்கள் சேவையை தொடருங்கள்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை பெய்த மழை  வெள்ளம் காரணமாக

தாமதித்த வேலைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன...

90 வீதமான வேலைகள் முடிவடைந்து விட்டதாகவும்

மீதிக்கான பொருட்கள் இறக்கப்பட்டு

வேலைகள் தரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் எமது  வேண்டுகோளுக்கிணங்க  கல்வி அமைச்சின் அரச அங்கீகாரம் பெற்ற பொறியியலாளர் ஒருவர்  இதன் கட்டுமானத்தை உறுதிப்படுத்தி  அத்தாட்சிப்பத்திரமும் தந்துள்ளார்....

image.jpgimage.gifimage.gifimage.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஊர் ஒன்றியத்தின் பணிகளுக்கு மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும்

அண்மையில் சுவிஸ் பொலிகை உறவுகளால் உதவி செய்யப் பட்டு கட்டி முடிக்கப் பட்ட பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் சுற்று மதில்...

நன்றி  சகோதரா...

நாலு பேர் சேர்ந்தால்...

எவ்வளவோ செய்யலாம்..

அதற்கான சாட்சிகளே இவை.

நன்றி  உங்களது இணைப்புக்கும்

பாராட்டுக்கும்..

நிச்சயமாக தொடர்வோம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் முதல்முறை யாழின் இந்தப்பக்கத்தற்கு வந்தது. யாழ் இவ்வளவு பெரிது என்பது எனக்கு தெரியாது. உங்கள் புரபைல் பார்க்க முயற்சித்தனால் இப்பகுதியும் அறிமுகமானது. 
 
எனக்குத்தான் ஊர் என்பது 1985இலிருந்து இல்லை. நீங்கள் உங்கள் ஊருக்கு செய்யும் உதவிகள் என்னை உங்கள் மீது பொறாமைப்பட வைக்கின்றது. ஆனால் நீங்கள் ஒருங்கிணைத்து செய்யும் உதவிகள் மனதிற்கு ஊக்கத்தை தருகின்றது. எனது ஊரும் ஒருநாள் கிடைக்கும் அதற்கும் ஏதாவது செய்யலாம் என்ற கனவு மேம்படுகிறது.
 
தூற்றுவார தூற்றட்டும் நீங்கள் உங்கள் சேவையை தொடருங்கள்.

நன்றி  சகோதரா..

தர்மம் வெல்லும் என்போம்

ஒற்றுமை 

உழைப்பு பலன் தரும் என்போம்

எமது ஊரிலுள்ள பாடசாலைகள்  அனைத்தும் தனி ஒருசிலரின் உழைப்பால் கட்டப்பட்டவையே என்கிறது வரலாறு.

புதிதாக  கட்டாவிட்டாலும்

அவற்றை புதுப்பித்தலையும்

இன்றைய நிலைக்கேற்ப பாதுகாப்புக்களை அமைத்து பாதுகாத்தலையும்

சிதைந்து

வழி தடுமாறிக்கிடக்கும் எமது கல்விச்சொத்தை ஒரு ஒழுங்குக்கு கொண்டுவருதலையும் செய்ய முனைகின்ற ஒரு முன் செயற்பாடே இது.

இன்னும் 5 வருடங்களில் இவ்விடத்தை  காண்போருக்கு இது சோலையாகி

இந்தத்தலைமுறையும் தன் கடமையைச்செய்தது என்னும் செய்தியைச்சொல்லும்...

நன்றி  சகோதரா..

ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமதித்த வேலைகள் மீண்டும் ஆரம்பித்துள்ளன...

நேற்றுடன் 85 வீதமான பணக்கொடுப்பனவு செய்தாயிற்று.....

SAM_0999.jpg

1_2.jpg1_3.jpg1_4.jpg

SAM_0995.jpg

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
நல்லாத்தான் இருக்கிறது ........
 
ஒரு சின்ன பகிடி ஒன்று எனக்கு நடந்ததை எழுதுகிறேன் .....
நான் மூன்றாம் வகுப்பு வரை படித்த வன்னி பாடசாலைக்கு 2006இல் சென்ற போது எதையாவது செய்யவேண்டு என்ற எண்ணம் இருந்தது.
அவர்கள் இப்படிதான் சுற்று மதில் வேண்டும் என்றார்கள். எனக்கு அதில் பெரிதாக விருப்பம் இருக்கவில்லை.
ஆனால் அவர்கள் அப்போதுதான் பாடசாலை ஒரு அறிக்கையாக இருக்கும் என்று சொன்னார்கள்.
நான் சரி என்று சொன்னேன்  பணமும் பெரிதாக முடியவில்லை.
இங்கு வந்து 1 வருட 0% கிரெடிட் கார்ட்டில் கடனெடுத்து அனுப்பினேன்.
 
இரண்டு வருடம் கழித்து தொலைபேசினார்கள் ....
பெயின்ட் அடிக்க வேண்டும் என்று கிட்டதட்ட மதில் கட்ட முடிந்த தொகையை சொன்னார்கள்.
 
எனக்கு புரிந்துவிட்டது யாரோ ஒரு மாயாவி களத்தில் இறங்கிவிட்டான் என்று.
நல்லதொரு ஆள் மாட்டி இருக்கிறார் உடனேயே இவரிடம் கொஞ்சத்தை அடிக்கலாம் என்று திட்டத்தோடு 
வந்திருக்கிறார் என்று.
முன்பே அவர்களுக்கு எனது நிலைமை பற்றி சொன்னேன் இதை மாட்டும்தான் என்னால் செய்ய முடியும் என்று 
பின்பு ஒரு 3 வருடம் எனக்கு மீள்வதற்கு வேண்டும் என்று.
 
நான் தொலைபேசியவரை கேட்டேன்.....
மதிலை இடித்து அப்படியே எடுப்பதென்றால் எவளவு முடியுமென்று ?
மதில் இருந்தால் இனி 3-4 வருடத்திற்கு ஒருமுறை பெய்ன்ட் அடிக்க வேண்டும்.
ஆளை அகற்றிவிட்டால் அந்த பணத்தை வேறு தேவைக்கு பயன் படுத்தலாம் என்று.
அதற்கு பிறகு எனக்கு தொலைபேசி எடுப்பதில்லை.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான கேள்விக்கொத்தை   கோரிய போது எமக்கும் சில அனுபவங்கள் கிடைத்தன

ஒப்பந்தக்காரர்

பாடசாலை அதிபர்

மற்றும் தொண்டர் அமைப்பு என எல்லோரும் 

இது ஒரு வரலாற்றுத்தேவை என்ற முடிவோடு ஒத்துழைத்தனர்.

அதனாலேயே தொடங்கினோம்

அத்துடன் இதை அடுத்து இன்னொரு திட்டம் வந்தது

அது   ஒன்றரைக்கோடி.. :icon_idea:

நாம் 60 லட்சத்துக்கு சுற்றுமதில் திட்டத்தை செய்கின்றோம்

நீங்கள் பாருங்கள் என ஏனெய நாடுகளிலுள்ள ஒன்றியங்களுக்கு அனுப்பி  வைத்தோம்..

ஆனால் அந்த ஒன்றரைக்கோடியையும் செய்தால்....

இது வடமாகாணத்தில் ஒரு முக்கிய பாடசாலையாக மாறும்.

Edited by விசுகு

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திட்டம்  நிறைவு பெற்று

வரும் சித்திரை மாதம் 21ந்திகதி திறப்புவிழா நடைபெறஉள்ளது....

அந்த விழாவில் பங்கெடுக்க மக்களை அழைக்கிறார்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சும் பாடசாலை நிர்வாகமும்....

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

SAM_0995.jpg

மணியன் கடையை நோக்கி,.,,

மகாவித்தியாலயம் தாண்டிய,

நடைப்பயணத்தின் போது...,

பாறையிடுக்கில் ,

முளைவிட்டிருந்த பனங்கொட்டையின் நினைவு,

வந்து போகின்றது!

இன்று கூட,,,

முகம் காட்டத் துடிக்கின்ற...,

முருகைக் கற்களும்,

வரிச்சுமட்டை வேலிகளும்,

சற்றும் மாறவேயில்லை!

அந்தக் காய்ந்து போன முருக்கந்தடியும்,

எனது ஊரின் கதை சொல்கின்றது!

புதிய மதில் மட்டும்,

நவீனத்தின் சின்னமாக,

நன்றிக்கடனின் வெளிப்பாடாக,

மண்ணின் மைந்தர்களின்,

மனசுகளின் ஈர நனைவுகளாக,

மின்னுகின்றது! 

ஊர் கூடித் தேரிழுத்தவர்களுக்கு,

எனது வாழ்த்துக்களும்... நன்றிகளும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

SAM_0995.jpg

மணியன் கடையை நோக்கி,.,,

மகாவித்தியாலயம் தாண்டிய,

நடைப்பயணத்தின் போது...,

பாறையிடுக்கில் ,

முளைவிட்டிருந்த பனங்கொட்டையின் நினைவு,

வந்து போகின்றது!

இன்று கூட,,,

முகம் காட்டத் துடிக்கின்ற...,

முருகைக் கற்களும்,

வரிச்சுமட்டை வேலிகளும்,

சற்றும் மாறவேயில்லை!

அந்தக் காய்ந்து போன முருக்கந்தடியும்,

எனது ஊரின் கதை சொல்கின்றது!

புதிய மதில் மட்டும்,

நவீனத்தின் சின்னமாக,

நன்றிக்கடனின் வெளிப்பாடாக,

மண்ணின் மைந்தர்களின்,

மனசுகளின் ஈர நனைவுகளாக,

மின்னுகின்றது! 

ஊர் கூடித் தேரிழுத்தவர்களுக்கு,

எனது வாழ்த்துக்களும்... நன்றிகளும்!

நன்றியண்ணா...

முடிந்தால் 21ந்திகதி எட்டிப்பாருங்கள்...

பிரதம விருந்தினராக கல்வித்திணைக்களத்தில்

உயர் பதவியிலிருக்கும் ஒரு பழைய மாணவர் கலந்து கொள்ளவுள்ளார்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்திட்டம்  நிறைவு பெற்று

வரும் சித்திரை மாதம் 21ந்திகதி திறப்புவிழா நடைபெறஉள்ளது....

அந்த விழாவில் பங்கெடுக்க மக்களை அழைக்கிறார்கள் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்சும் பாடசாலை நிர்வாகமும்....

நன்றி.

அழைப்பிதழ்...

  (அறிவித்தல்) யா. புங்குடுதீவு மகா வித்தியாலய விளையாட்டு மைதான சுற்றுமதில் கையளிப்பும், விளையாட்டு விழாவும்..!!

punguduthvu-maha-vithyalayam7-640x480.jp

யா. புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்ட்ட பாடசாலை விளையாட்டு மைதான சுற்றுமதில் கையளிப்பும் விளையாட்டு விழாவும் எதிர்வரும் 21.04.2015 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.மணியளவில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் திரு. ச.கணேஸ்வரன் அவர்களது தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக திரு. இ.இளங்கோவன் (செயலாளர், ஆளுநர் அலுவலகம், வட மாகாணம்) அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு. ஜீ.வீ. இராதாகிருஸ்ணன் (ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்), திரு. ரி.ஜோன்குயின்ரஸ் (வலயக் கல்வி அலுவலகம், தீவகம்), திரு. பொ.சிவானந்தராசா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை), திரு. கா.குகபாலன் (ஓய்வுநிலை பேராசிரியர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக திரு. சுப்பையா சஸ்பாநிதி (செயலாளர், பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்), திரு. இராசலிங்கம் தமிழ்மாறன் (பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்), திரு. சுப்பிரமணியம் கோபாலப்பிள்ளை (பிரான்ஸ்-புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நலன்விரும்பி), திரு. ந.தர்மபாலன் (ஓய்வுநிலை அதிபர்), செல்வி பொ.ஜமுனாதேவி (அறங்காவலர், வட இலங்கை சர்வோதயம், புங்குடுதீவு), திருமதி தனபாலன் சிலோசனா (பொருளாளர், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியம்), திரு. சு.காளிதாஸ் (பிரான்ஸ், அன்னை திரேசா சமூகநல நற்பணி மன்றம்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவித்து அழைத்துவரப்பட்டு, பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. தொடர்ந்து புதிய சுற்றுமதிலுடன் கூடிய மைதானத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து மக்கல விளக்கேற்றல், இறைவணக்கம், கொடியேற்றல், ஆசியுரை, வரவேற்புரை என்பன இடம்பெற்று, தொடர்ந்து புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவர்களின் கராத்தே காட்சி நிகழ்வு இடம்பெறும்.

மேலும், புங்குடுதீவு மகாவித்தியாலய பெண்கள் அணியினருக்கும் நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலய பெண்கள் அணியினருக்குமிடையிலான உதைபந்தாட்டம் இடம்பெற்று, அதனைத் தொடர்ந்து புங்குடுதீவு மகா வித்தியாலய ஆண்கள் அணிக்கும், அச்செழு சைவப்பிரகாச வித்தியாலய ஆண்கள் அணிக்குமிடையிலான கபடிப்போட்டி இடம்பெறும்.

போட்டி நிகழ்வுகளின் நிறைவினைத் தொடர்ந்து தலைமையுரை, கௌரவ விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை, பிரதம விருந்தினர் உரை என்பன இடம்பெற்று விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவ, மாணவியருக்கான பரிசில்களை வழங்கி வைக்கும் நிகழ்வு என்பன இடம்பெறும். இதனையடுத்து நினைவுப்பரிசில் வழங்கல், நன்றியுரை, கொடியிறக்கல் என்பன இடம்பெற்று நிகழ்வுகள் இனிதே நிறைவுபெறவுள்ளது.

20150419_155720-480x640.jpg

20150419_155754-480x640.jpg

20150419_155813-480x640.jpg

20150419_155824-480x640.jpg

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் இச்சுற்றுமதிலுக்கு  ஒத்துக்கொள்ளப்பட்டு

கையொப்பமிடப்பட்டதொகை முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது என்பதையும்

அத்துடன் இன்றைய திறப்புவிழாவுக்கான செலவாக பாடசாலை அதிபர் அவர்களால் கோரப்பட்ட செலவுத்தொகை முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது  என்பதையும்

புங்குடுதீவு மக்கள் ஒன்றிய பிரான்சின் நிர்வாகம் அறியத்தந்துள்ளது.

IMG_Page_1.jpg

http://www.yarl.com/forum3/index.php?/topic/156472-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE/?p=1104548

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில் கையளிப்பு விழா 21/04/2015
 
date.png 4/26/2015 10:26:00 PM user.png Pungudutivu Makkal Onriyam comments.png No comments

DSC07832-1.jpg
 
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு அமைத்துக் கொடுக்கப் பட்ட சுற்றுமதில் கையளிப்பு விழா
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதில் 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரால் கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வு மிகவும் உணர்வுபூர்மாக பாடசாலைச் சமூகத்தினாலும் புங்குடுதீவு மக்களினாலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமாகாண ஆளுனரின் செயளாளருமான திரு இ இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
 
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் திருG V இராதாகிருஸ்ணன், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு T ஜோன்குயின்ரஸ், வேலனைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு பொ சிவானந்தராசா, ஓய்வுநிலைப் போராசிரியர் திரு கா குகபாலன், ஆகியோரும், பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பாக அதன் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, திரு இராசலிங்கம் தமிழ்மாறன், ஓய்வுநிலை வர்த்தகர் திரு சுப்ரமணியம் கோபாலபிள்ளை அவர்களும்,
மற்றும் வடஇலங்கைச் சர்வோதய அறங்காவலர் செல்வி பொ ஜமுனாதேவி, ஓய்வுநிலை அதிபர் திரு ந தர்மபாலன், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி தனபாலன் சுலோசனா ஆகியோரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவில் விருந்தினர்கள்  காலை 10 மணியளவில்  பாண்டு வாத்தியம் வரவேற்பு நடனத்துடன் அழைத்து வரப்பட்டு சுற்றுமதிலின் பெயர்ப்பலகையினை திரு சுப்பையா சஸ்பாநிதி அவர்களும் திரு இ இளங்கோவன் அவர்களும் இனைந்து திரைநீக்கம் செய்து நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் கேற்றினைத் திறந்து எல்லோரினையும் வரவேற்றார்.
மேலும் இவ்விழாவில் மங்கல விளக்கேற்றலுடன் தேசியக்கொடி, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பனவும் மாணவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து ஆசியுரை, வரவேற்புரையினைத் தொடர்ந்து கராத்தே காட்சி, பெண்களின் உதைபந்தாட்டப்போட்டி புங்/மகாவித்தியாலய அணியினருக்கும் நாவாந்துறை மகாவித்தியாலய அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கபடிப்போட்டி புங்/மகாவித்தியாலய மாணவர்களுக்கும் அச்செழு சைவப்பிரகாசவித்தியாலத்திற்கும் இடையில் நடைபெற்றது.
தொடர்ந்து தலைமையுரையினை பாடசாலை அதிபர் திரு ச கணேஸ்வரன் அவர்கள் பேசும்போது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்களை நன்றியுடன் பாராட்டி தற்போது யாழ்/நகரப்பாடசாலைகளில் 400மீட்டர் சுற்றளவு கொண்ட மைதானம் அமைக்கக் கூடிய விளையாட்டு மைதானத்தினை பாதுகாப்புடன் கொண்ட பாடசாலைகள் வரிசையில் புங்குடுதீவ மகாவித்தியாலயம் 2வதாக உள்ளதாகக் கூறினார்.
 
தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரையுடன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பும் நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டு நன்றியுரை கொடியிறக்கலுடன். இந்நிகழ்வில் பங்கேற்ற எல்லோருக்கும் சிற்றூண்டி மதியஉணவு குளிர்பானம் வழங்கப்பட்டு இனிதே நிறைவேறியது.

விழாப்படங்களைப் பார்வையிட இங்கே clic செய்யவும்
 
https://drive.google.com/folderview?id=0Bw7bWUHiJSgEfngtdmtITkhFaDdHZkFuemVwNVlQRjVxU0lRQUlJbGNKam5rQURIOXBQbms&usp=sharing

http://www.pungudutivu.fr/2015/04/21042015.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே..

இத்திட்டம்  பற்றிய தொடக்கத்திலிருந்து

முடிவுவரை யாழ்கள உறவுகளுக்கு அறிவித்தபடி இருந்தேன்.

எத்தனை தடைகள்

எத்தனை இடைஞ்சல்கள் தரப்பட்டபோதும்

உறுதி அளிக்கப்பட்ட பணம் வந்து சேராதபோதும்

பணப்பெறுமதியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டபோதும்......

இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிப்படி

இத்திட்டம் ஒரு வரலாற்றில் பதியப்படும் பதிவாக செய்து முடிக்கப்பட்டு

வடமாகாணத்திலேயே மிகப்பெரிய பாதுகாப்புடைய மைதானம் என்ற தகுதிக்குள்ளும்  வந்தடைந்துள்ளது.

அத்துடன் இன்னொரு மகிழ்வான செய்தி

நாம் எமது பாடசாலையை தரம் உயர்த்தும் நீண்டகால நோக்கிலேயே இந்த பாடசாலையின் பாதுகாப்புத்திட்டத்தை அதிபர் சமர்ப்பித்ததும் எடுத்துக்கொண்டோம்

அதற்கு கைமேல் பலனாக

உடனடியாகவே இலங்கை அரசு ஒரு கோடியே பத்து லட்சம் பெறுமதியான சாதனங்களை (இராசாயனகூடத்துக்கான சாதனங்களும் 45 கணணிகளும்) அன்பளிப்பு செய்திருக்கிறது.

இதற்கு முன்னுதாரணமாக இருந்ததையிட்டு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் -  France மிக மகிழ்வு கொள்கிறது.

நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த ஊரை நேசிப்பனே பிறந்த நாட்டையும் நேசிப்பான்.வாழ்த்துக்கள் விசுகர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த ஊரை நேசிப்பனே பிறந்த நாட்டையும் நேசிப்பான்.வாழ்த்துக்கள் விசுகர்.

உண்மை

நன்றி  புலவர்....

சிலவேளைகளில் யோசிப்பதுண்டு

எங்க நின்ற நாங்கள் எங்கு நிற்கின்றோம் என..

ஆனால் ஏதாவது ஒன்றை செய்யணும் எனும் போது

எங்கு நின்றாலென்ன?

செய்கின்றோமா என்பதே முக்கியம்..

அண்மையில் வசாவிளான் பகுதிகள் விடுவிக்கப்பட்டதாக செய்தி வந்தபோது

இங்க நான் எழுதினேன்.

புலம் பெயர் வசாவிளான் மக்கள் அந்த கிராமத்தை முன்னேற்ற முயலணும் என.

தற்பொழுது பிரான்சில் வசாவிளான் மக்கள் ஒன்றியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டள்ளது என அறிநதேன்.

எம்மை எம்மவரை நம்புவதைத்தவிர

 வேறு வழியில்லை எமக்கு

நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்...

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகாவித்தியாலய நிர்வாகத்தால்

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம்பிரான்சுக்கு தரப்பட்ட கேடயம்.

photo_1_2.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மகாவித்தியாலய சுற்றுமதில் கையளிப்பு விழா 21/04/2015

date.png 4/26/2015 10:26:00 PM user.png Pungudutivu Makkal Onriyam comments.png No comments

DSC07832-1.jpg
 
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் 6 மில்லியன் ரூபா செலவில் புங்/மகாவித்தியாலயத்திற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட சுற்றுமதில் கையளிப்பு விழா
 
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 620மீட்டர் நீளமும் 1.8மீட்டர் உயரமுமான சுற்றுமதில் 21/04/2015 அன்று பாடசாலைச் சமூகத்திடம் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தினரால் கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வு மிகவும் உணர்வுபூர்மாக பாடசாலைச் சமூகத்தினாலும் புங்குடுதீவு மக்களினாலும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் வடமாகாண ஆளுனரின் செயளாளருமான திரு இ இளங்கோவன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
 
மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுநிலைக் கல்விப்பணிப்பாளர் திருG V இராதாகிருஸ்ணன், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு T ஜோன்குயின்ரஸ், வேலனைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு பொ சிவானந்தராசா, ஓய்வுநிலைப் போராசிரியர் திரு கா குகபாலன், ஆகியோரும், பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பாக அதன் செயலாளர் திரு சுப்பையா சஸ்பாநிதி, திரு இராசலிங்கம் தமிழ்மாறன், ஓய்வுநிலை வர்த்தகர் திரு சுப்ரமணியம் கோபாலபிள்ளை அவர்களும், மற்றும் வடஇலங்கைச் சர்வோதய அறங்காவலர் செல்வி பொ ஜமுனாதேவி, ஓய்வுநிலை அதிபர் திரு ந தர்மபாலன், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி தனபாலன் சுலோசனா ஆகியோரும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
 
இவ்விழாவில் விருந்தினர்கள்  காலை 10 மணியளவில்  பாண்டு வாத்தியம் வரவேற்பு நடனத்துடன் அழைத்து வரப்பட்டு சுற்றுமதிலின் பெயர்ப்பலகையினை திரு சுப்பையா சஸ்பாநிதி அவர்களும் திரு இ இளங்கோவன் அவர்களும் இனைந்து திரைநீக்கம் செய்து நாடாவினை வெட்டி திறந்து வைத்தனர். திரு சுப்பிரமணியம் கோபாலபிள்ளை அவர்கள் கேற்றினைத் திறந்து எல்லோரினையும் வரவேற்றார்.
 
மேலும் இவ்விழாவில் மங்கல விளக்கேற்றலுடன் தேசியக்கொடி, பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், பாடசாலை கீதம் என்பனவும் மாணவர்களால் பாடப்பட்டது. தொடர்ந்து ஆசியுரை, வரவேற்புரையினைத் தொடர்ந்து கராத்தே காட்சி, பெண்களின் உதைபந்தாட்டப்போட்டி புங்/மகாவித்தியாலய அணியினருக்கும் நாவாந்துறை மகாவித்தியாலய அணியினருக்கும் இடையில் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கபடிப்போட்டி புங்/மகாவித்தியாலய மாணவர்களுக்கும் அச்செழு சைவப்பிரகாசவித்தியாலத்திற்கும் இடையில் நடைபெற்றது.
தொடர்ந்து தலைமையுரையினை பாடசாலை அதிபர் திரு ச கணேஸ்வரன் அவர்கள் பேசும்போது பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய உறுப்பினர்களை நன்றியுடன் பாராட்டி தற்போது யாழ்/நகரப்பாடசாலைகளில் 400மீட்டர் சுற்றளவு கொண்ட மைதானம் அமைக்கக் கூடிய விளையாட்டு மைதானத்தினை பாதுகாப்புடன் கொண்ட பாடசாலைகள் வரிசையில் புங்குடுதீவ மகாவித்தியாலயம் 2வதாக உள்ளதாகக் கூறினார்.
 
தொடர்ந்து பிரதமவிருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரையுடன் விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பும் நினைவுப்பரிசில்களும் வழங்கப்பட்டு நன்றியுரை கொடியிறக்கலுடன். இந்நிகழ்வில் பங்கேற்ற எல்லோருக்கும் சிற்றூண்டி மதியஉணவு குளிர்பானம் வழங்கப்பட்டு இனிதே நிறைவேறியது.
 
விழாப்படங்களைப் பார்வையிட இங்கே clic செய்யவும்
 
https://drive.google.com/folderview?id=0Bw7bWUHiJSgEfngtdmtITkhFaDdHZkFuemVwNVlQRjVxU0lRQUlJbGNKam5rQURIOXBQbms&usp=sharing

http://www.pungudutivu.fr/2015/04/21042015.html

வாழ்த்துக்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

SAM_0995.jpg

DSC07832-1.jpg

மிக அருமையான வேலை ஒன்றை.... பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் செய்துள்ளது. :rolleyes: 
காலத்தால்... என்றும் மறக்க முடியாத செயல் இது.
மதில் கூட... ஏனோ தானோ என்று இல்லாமல், அதிக பொருட் செலவில்...  மிகவும் நேர்த்தியாக கட்டப் பட்டுள்ளதை பார்க்கும் போது... எமக்கும், இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது.
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்திற்கும், மதில் கட்டுவது சம்பந்தமான விடயங்களை ஆரம்பத்திலிருந்து.... யாழ்களத்தில் எமக்கு அறியத் தந்த விசுகுக்கும் நன்றி. :) 

  • கருத்துக்கள உறவுகள்

மதிலின் மேல் பதிக்க... உடைந்த போத்தில், கண்ணாடி துண்டுகள் தேவைப் பட்டால்....
ஜேர்மனியிலிருந்து தேவைப்பட்ட அளவு, அன்பளிப்பாக விநியோகிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். :lol:  :D

நன்றி  சிறி..

எட்டடி உயரம்

அதைவிட நிலத்தின் உயரம் பதிவு சார்ந்து சில இடங்களில்  மூன்றரை அடி உயரமான அத்திவாரம்

(நிலத்துக்கு கீழ் அல்லது மேல்) 

இரு பக்கம் குளங்கள்

அவற்றுக்கு பக்கத்தில் எட்டடி ஆளமான அத்திவாரம்...

அத்துடன் ஏற்கனவே போடப்பட்டு பிரச்சினைகளால் கைவிடப்பட்ட பழைய அத்திவாரம்..

படத்தில் பாருங்கள்.

image.jpgimage.jpgimage.jpg

மைதானத்துக்கு வேறாக ஒரு பாதை..

image.jpg

image.jpg

எம்முடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மதித்து

இது ஒரு பொதுக்காரியம் வடிவாகச்செய்து தாங்கோ என்ற எமது வேண்டுகோளை

இறுதிவரை மதித்து

மனம் வைச்சு செய்து தந்த பெரியவர். ( இன்று கட்டி முடிக்கப்பட்ட பின்னர் பலராலும் பாராட்டிச்சொல்லப்பட்ட இதன்பெறுமதி ஒரு கோடிக்கு மேல் )

image.jpg

தரை தட்டமுதல் இருந்த மைதானம்...

image.jpgimage.jpg

மதிலின் மேல் பதிக்க... உடைந்த போத்தில், கண்ணாடி துண்டுகள் தேவைப் பட்டால்....

ஜேர்மனியிலிருந்து தேவைப்பட்ட அளவு, அன்பளிப்பாக விநியோகிக்க முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். :lol:  :D

இதுக்கு மேலால்  ஏறி பாய்வினம் என்றோ நினைக்கிறீர்கள்...?  :icon_idea:

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.