Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியுடன் பேச விக்னேஸ்வரன் விருப்பம்

Featured Replies

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த இந்தியாக்காரனும்,சீனாக்கரனும் ஏன் அவுஸ்ரேலியாவில் வந்து கை ஏந்துகிறார்கள்......யாருக்கும் பதில் தெரியுமோ?

ஒரு இரண்டு கிழமையின் முன் மோடியின் நண்பன் அடானியின் கம்பெனி $6 "Billion" அளவுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நிலகரி சுரங்கமும் ஒரு துறைமுகமும் அமைக்க அவுஸ்திரேலியா அரசு பச்சைகொடி காட்டியது...இவ்வளவுக்கும் அந்த துறைமுகத்தால் கடல் முருகை பாறைகளுக்கு பிரச்னை வரும் என்று இவ்வளவு நாளும் இழுபறியில் இருந்த பிரச்னை இது....அவுஸ்திரேலியாவே இந்தியாவிடம் பிச்சை எடுக்கிறது :)

அவுஸ்திரேலியா உரேனியம் விப்பதற்கும் தயார் :)

  • Replies 89
  • Views 3.7k
  • Created
  • Last Reply

நாந்தான் இப்ப நான் எங்கே வீரம் பேசினேன். உங்களுக்கு கசப்பான ஒரு உண்மையை உங்களைப் போன்ற ஒரு சாதாரண உறவாக தெரிவித்தேன். அவ்வளவுதான். தமிழர்கள் முப்பது வருடமாக அல்ல அறுபது வருடமாக போராடுகிறார்கள் என்ற உண்மையை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் தெளிவாக கூறுகிறேன். "புலிகள் இல்லாத பின்னரான காலப்பகுதியில் இந்தியாவின் நட்பை பேணும் தமிழர்தலைமை இருப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என் று ஒதுக்கிய இந்தியா, ஏன் மிதவாத தமிழர் தலைமைக்கு கூட உதவவில்லை", என்று கேட்டால் அதுப்பற்றி எனக்கும் தெரியவில்லை என்று கூறுவதை விடுத்து பழைய முடிந்து போன புலிக்கதை பேசுகிறீர்கள். அதாவது கேள்வித்தாளில் இவ்வருடம் ஒரு கேள்வி வந்தால் அதற்கு பதில் உங்களுக்கு தெரியாவிட்டால் போனவருட வினாதாளில் வந்த உங்களுக்கு விருப்பமான சுலபமாக பதிலளிக்கக் கூடிய கேள்விக்கு பதில் கூறுவீர்களா?

துல்பேன் நீங்கள் கூறுவது தான் விளங்கவில்லை...என்ன என்று இந்தியா இன்னொரு நாட்டை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நெருக்க முடியும்?

உலகம் முழுக்க நடைபெறும் விடயங்களை பாருங்கள்.....பின் உங்களது இந்தியா பல்லவியை பாடுங்கள்...

எங்களுக்கான நேரத்தில் எல்லாத்தையும் கெடுத்தோம்....

இப்போ உடனே தா என்று கூறுவதற்கு இது என்ன சந்தையில் தேங்காயா வாங்குகிறீர்கள்????

நீங்களும் பிரபாகரன் மாதிரியே கூறுகிறீர்கள். :)

உங்களது தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைக்கே அவர்களுக்கு உடன்படாத ஒரு விடயத்தை செய்ய வையுங்கள்...எவ்வளவு பிரச்சனைகளை எதிர் கொள்ளுவீர்கள்???

இந்தியாவால் இலங்கையால் கொல்லபட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்கே நட்ட ஈடு பெறமுடியவில்லை..ஏன்?? காரணம் சர்வதேச சட்டங்களின் படி இலங்கையை இந்தியாவால் குற்றம் சாட்ட முடியாத படியால் தானே.......பின் எப்படி உடனடியாக ஈழ தமிழர் பிரச்சனையை ..ஈழ தமிழருக்கு ஏற்றவாறு தீர்க்கசொல்லி இலங்கையை பணிக்கமுடியும்??????

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இரண்டு கிழமையின் முன் மோடியின் நண்பன் அடானியின் கம்பெனி $6 "Billion" அளவுக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நிலகரி சுரங்கமும் ஒரு துறைமுகமும் அமைக்க அவுஸ்திரேலியா அரசு பச்சைகொடி காட்டியது...இவ்வளவுக்கும் அந்த துறைமுகத்தால் கடல் முருகை பாறைகளுக்கு பிரச்னை வரும் என்று இவ்வளவு நாளும் இழுபறியில் இருந்த பிரச்னை இது....அவுஸ்திரேலியாவே இந்தியாவிடம் பிச்சை எடுக்கிறது :)

அவுஸ்திரேலியா உரேனியம் விப்பதற்கும் தயார் :)

நாடு செழிப்பாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் புலம்பெயரவேண்டிய அவசியமில்லை ...ஏன் ஆசிய பிராந்திய மக்கள் பிழைபுக்காக புலம்பெயர் வேண்டும்....அரச வியாபாரத்தைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை தனிநபர்களைபற்றித்தான் கேட்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நாங்கள் போராடாமல் ஓடி வந்தது தப்புத்தான். ஆனால் ஓடி வந்த இடத்தில் இருந்து முடியும் வரை மன்றாடித்தான் பார்த்தோம். அல்லும் பகலும் போராடினோம். அடைக்கலம் தந்தவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்க மட்டும்தான் இல்லை. மற்றும்படி முடிந்தளவு முயற்சித்தோம் ( 2009 ஆன புலம்பெயர் மக்கள் செயற்ப்பாட்டை நான் என்றும் விமர்சித்ததில்லை).

நீங்கள் யாழில் ஏன் போராடவில்லை, திருமலையில் கொழும்பில் ஏன் போராடவில்லை என்று கேட்பதிலேயே புரிகிறது - நம் எதிரியின் அடக்குமுறை பற்றி, உங்களுக்கு எதுவும் தெரியாது என்பது.

20 லட்சமும் இல்லாத சனத்தொகையில் ஒரு லட்சம் போராளிகள் வந்தார்கள். 7 கோடிபேர்? வீரப்பன் போன்ற கொள்காரருக்கு பின்னால் போனளவும்கூட தமிழரசனுக்கு பின்னால் வரவில்லையே?

30 மைல் தூரத்தில் இவ்வளவு நடந்தும் 7 கோடிக்கு ஒண்டுமே தெரியவில்லை எண்டால், அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றுதானே அர்த்தம்?

எங்கள் அழிவுக்கு நாம் எம்மிடம்தான் குறைதேடவேண்டும். ஆனால் உங்களை நம்பி எங்கள் எதிர்கால போராட்ட வடிவங்கள் அமையக் கூடாது. முள்ளிவாய்க்காலில் நாம் படித்த பாடங்களில் இதுவும் ஒன்று.

நாடு செழிப்பாக இருந்தால் அந்த நாட்டு மக்கள் புலம்பெயரவேண்டிய அவசியமில்லை ...ஏன் ஆசிய பிராந்திய மக்கள் பிழைபுக்காக புலம்பெயர் வேண்டும்....அரச வியாபாரத்தைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை தனிநபர்களைபற்றித்தான் கேட்கிறேன்....

காசு உள்ளவன் அதை தாரளமாக செலவழிப்பதற்கு செல்கிறான்...இல்லாதவன் உழைப்பதற்கு செல்கிறான்....

மேலே கோஷான் சொன்ன மாதிரி இந்தியாவில் எதுவும் சமச்சீராக இல்லை.....ஆனால் இந்திய/சீனாவில் தான் தங்களது பெரும் சந்தை இருக்கிறது ஏன் மேற்குநாடுகள் அவைக்கு சாமரம் வீசுகின்றன?

அவுசுக்கு இங்கிலாந்து, அயர்லாந்திலிருந்து எவ்வளவு பேர் குடியேற, வேலைவாய்ப்புகளுக்காக வருகிறார்கள் என்று தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

...

நீங்கள் யாழில் ஏன் போராடவில்லை, திருமலையில் கொழும்பில் ஏன் போராடவில்லை என்று கேட்பதிலேயே புரிகிறது - நம் எதிரியின் அடக்குமுறை பற்றி, உங்களுக்கு எதுவும் தெரியாது என்பது.

20 லட்சமும் இல்லாத சனத்தொகையில் ஒரு லட்சம் போராளிகள் வந்தார்கள். 7 கோடிபேர்? வீரப்பன் போன்ற கொள்காரருக்கு பின்னால் போனளவும்கூட தமிழரசனுக்கு பின்னால் வரவில்லையே?

30 மைல் தூரத்தில் இவ்வளவு நடந்தும் 7 கோடிக்கு ஒண்டுமே தெரியவில்லை எண்டால், அவர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை என்றுதானே அர்த்தம்?

எங்கள் அழிவுக்கு நாம் எம்மிடம்தான் குறைதேடவேண்டும். ஆனால் உங்களை நம்பி எங்கள் எதிர்கால போராட்ட வடிவங்கள் அமையக் கூடாது. முள்ளிவாய்க்காலில் நாம் படித்த பாடங்களில் இதுவும் ஒன்று.

எந்த போராட்டமும் அடக்குமுறைகளை மீறித்தானே நடப்பது? :o

7 கோடி பேரில் ஓரளவிற்கு சுதந்திரமிருக்கையில், தமிழரசன் பின்னால் ஓட அவர்களுக்கென்ன தேவை..?

ஒருவேளை இங்கே ஈழம் மாதிரி வாழ்வாதாதரமே கேள்விக்குறியாகும் போது நீங்கள் எதிர்பார்க்கும் வீரியம் வரலாம்.

'தனக்கு துன்பம் வராதவரை எவருமே தள்ளி நிற்பர்' என்பது நீங்கள் அறியாததா? உதாரணத்திற்கு தமிழகத்தின் அண்டை மாநில உரிமை போராட்டங்களில் ஈழத்தமிழர்களின் பங்கென்ன என நான் கேட்டால் நகைச்சுவைதானே?

உங்களை மட்டுமே நம்பி ஒற்றுமையுடன் இனியாவது இலக்கு நோக்கி நடவுங்கள்...

அண்டையில் நீங்கள் நம்பும்(?????) அல்லது உண்மையாகவே உதவும் தளம் கிட்டினால் மட்டுமே சேருங்கள்.. :icon_idea:    அதைத்தான் திரும்பத் திரும்ப இங்கே சொல்வது.. :)

  • கருத்துக்கள உறவுகள்

அதேபோல் இங்கிலாந்தின் pubs எல்லாம் அவுஸ் நியூஸிலாந்து கார் தான் வேலைசெய்யுனிம். அவுசில என்ன பஞ்சமோ, கடவுளே :)

  • கருத்துக்கள உறவுகள்

ரா.வ,

இப்போ எம் தேவை இலக்கை மீள் நிர்ணயம் செய்வதே.

என்னை பொறுத்தமட்டில், நீங்கள் போற்றும் "தமிழ் நாட்டளவு சுந்திரமே போதும்" என்கிறேன்.

அதை அடையும் வழியை பார்ப்போம் என்கிறேன்.

நெடுக்கர்/விசுகு ஐயா இல்லை தனிநாடே வேண்டும் என்கிறார்கள்.

எமது ஒற்றுமையீனம் இங்கே தான் ஆரம்பிக்கிறது.

இது ஒற்றுமையீனம் இல்லை. இலக்கு எது என்பது பற்றிய கொள்கை முரண்.

அதேபோல் இங்கிலாந்தின் pubs எல்லாம் அவுஸ் நியூஸிலாந்து கார் தான் வேலைசெய்யுனிம். அவுசில என்ன பஞ்சமோ, கடவுளே :)

அவுஸை குறைத்து எதுவும் சொல்லாதீர்கள்...."புது (வள்ளங்களில் வராத) ஒZக்களுக்கு" கோபம்..வெட்கம்...ஏதாவது வரும்

7 கோடி பேரில் ஓரளவிற்கு சுதந்திரமிருக்கையில், தமிழரசன் பின்னால் ஓட அவர்களுக்கென்ன தேவை..?

அதென்ன ஓரளவு சுதந்திரம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ரா.வ,

இப்போ எம் தேவை இலக்கை மீள் நிர்ணயம் செய்வதே.

என்னை பொறுத்தமட்டில், நீங்கள் போற்றும் "தமிழ் நாட்டளவு சுந்திரமே போதும்" என்கிறேன்.

அதை அடையும் வழியை பார்ப்போம் என்கிறேன்.

நெடுக்கர்/விசுகு ஐயா இல்லை தனிநாடே வேண்டும் என்கிறார்கள்.

எமது ஒற்றுமையீனம் இங்கே தான் ஆரம்பிக்கிறது.

இது ஒற்றுமையீனம் இல்லை. இலக்கு எது என்பது பற்றிய கொள்கை முரண்.

அட நீங்க வேற...! நாங்கள் எதிர்பார்க்கும் "சுதந்திரமே" வேறு.. :(

காலம் கனியாமலா போகும்? :)

கொள்கை முரணிருக்கலாம்..அதை அடைய வழிமுறை கையாளுகையில் முரணிருக்கக்கூடாது!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

7 கோடி பேரில் ஓரளவிற்கு சுதந்திரமிருக்கையில், தமிழரசன் பின்னால் ஓட அவர்களுக்கென்ன தேவை..?

அதென்ன ஓரளவு சுதந்திரம் . :icon_mrgreen:

உங்களை மாதிரி விற்பன்னர்கள் பலரும் ஒரத்த நாட்டிலும், சென்னையிலும், தில்லியிலும் பல காலம் குப்பை கொட்டுமளவிற்கு நாங்கள் உபசரிக்கும்போது அதை உணர்ந்திருக்கனுமே! :icon_mrgreen:

நான் முழுமையாக  உணர்ந்ததை நீங்கள் எப்படி ஓரளவாக என்று தான் கேட்டேன் . :icon_mrgreen:

லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட எந்த நாட்டில் விடுவான்  :D

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன ஓரளவு சுதந்திரம் . :icon_mrgreen:

"நாங்கள் சாகிறோம்.. இனத்தைச் சேர்ந்த நீங்கள் என்ன செய்தீர்கள்..?" என்ற தர்மசங்கட கேள்விக்கு இடமளிக்காதவாறு எம்மினத்தைக் காக்க, தாய்மொழியை, மண்ணைக் காக்கும் சுதந்திரம் - எனக்குத் தோன்றிய மட்டில் அதுவே முழுச் சுதந்திரம்.

இந்தியாவில் உள்ள மானில சுய ஆட்சி போன்று கிடைப்பதே நினைத்து பார்க்கமுடியாது. பொலிஸ், காணி அதிகாரங்களே தற்போது தரமாட்டார்களாம். சிங்களவனிடம் எதுவும் கேட்டு தரமாட்டான்.. கிடைக்கவைக்க அதற்குரிய நெருக்கடிகளை உச்சமாக பிரயோகிக்க வேண்டும். அதற்குள்ளும் தப்பித்துவிடுவான்.சிங்கள பௌத்த இனவாதம் என்னும் மலைப்பாம்பின் பிடியில் இருந்து விடுபடும் சாணக்கியம் தமிழ்மக்களுக்கு எப்போது உண்டாகிறதோ அன்றுதான் விடிவு.அதுவரை வீண் காலவிரையம்.

  • கருத்துக்கள உறவுகள்

வழிகாட்டி அந்த சாணாக்கியம்தான் என்ன? சொன்னால் கேட்ப்போம்தானே?

"நாங்கள் சாகிறோம்.. இனத்தைச் சேர்ந்த நீங்கள் என்ன செய்தீர்கள்..?" என்ற தர்மசங்கட கேள்விக்கு இடமளிக்காதவாறு எம்மினத்தைக் காக்க, தாய்மொழியை, மண்ணைக் காக்கும் சுதந்திரம் - எனக்குத் தோன்றிய மட்டில் அதுவே முழுச் சுதந்திரம்.

தமிழ் நாட்டு அரசியல் நெடி அடிக்குது ? உந்த மண்,மொழி ,இனம் என்று புலுடா விட கூடாது . தமிழ் நாடு இந்தியாவில் ஒரு மாநிலம் .இலங்கை வேறு ஒரு நாடு .

பிச்சு புடுங்கவம் என்று படம் காட்டுபவர்களிடம் தான் அந்த கேள்வியை கேட்கின்றார்கள் மற்றப்படி அவர்களால் எதுவும் முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் .

கனடாவில் பிரெஞ்சு பேசுபவர்கள் இருக்கின்றார்கள் அவர்களும் பிரிவினை கேட்டு போராடினார்கள் ஆங்கிலேயர்கள் தங்களை அடக்குவதாக சொன்னார்கள் இந்த பெரிய பிரான்ஸ் மண் மொழி இனம் என்று கனடா மீது போர் தொடுக்கவில்லை .

கொஞ்சம் யதார்த்த உலக அரசியல் பேசினால் நல்லது .

இது ஏற்கனவே பதிந்ததுதான்.

உங்கள் வாதப்படியே இருக்கட்டும்.

நீங்கள் வாழ்வுக்கு போராட ஒன்றுகூட மாட்டீர்கள், ஆனால் உதவாக்கரை கந்தனுக்கு கும்மியடிக்க, அரோகரா பாட, கூட்டம் கூட்டமாய் உருளுவீர்கள்!

ஆனால் எங்களை நோக்கி நக்கலும், கேள்விக் கணைகளையும் தொடுப்பீர்கள்..! நல்ல நியாயமப்பு!

அற்புதமான வரிகள். ஒவ்வொரு தமிழனிடமும் சொல்ல வேண்டிய பெறுமதி மிக்க கருத்து இது. புலம் பெயர்நதவர்களையும் சேர்த்தே கூறுகிறேன். நன்றி திரு ராஜவன்னியன் அவர்களே.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

60% பேர்கு மலசலகூடம் இல்லாத நாட்டில், நீங்கள் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவதில்லையா, அப்படி ஒரு அபத்தம்தான் இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

"நாங்கள் சாகிறோம்.. இனத்தைச் சேர்ந்த நீங்கள் என்ன செய்தீர்கள்..?" என்ற தர்மசங்கட கேள்விக்கு இடமளிக்காதவாறு எம்மினத்தைக் காக்க, தாய்மொழியை, மண்ணைக் காக்கும் சுதந்திரம் - எனக்குத் தோன்றிய மட்டில் அதுவே முழுச் சுதந்திரம்.

தமிழ் நாட்டு அரசியல் நெடி அடிக்குது ? உந்த மண்,மொழி ,இனம் என்று புலுடா விட கூடாது . தமிழ் நாடு இந்தியாவில் ஒரு மாநிலம் .இலங்கை வேறு ஒரு நாடு .

பிச்சு புடுங்கவம் என்று படம் காட்டுபவர்களிடம் தான் அந்த கேள்வியை கேட்கின்றார்கள் மற்றப்படி அவர்களால் எதுவும் முடியாது என்பது அனைவருக்கும் தெரியும் .

கனடாவில் பிரெஞ்சு பேசுபவர்கள் இருக்கின்றார்கள் அவர்களும் பிரிவினை கேட்டு போராடினார்கள் ஆங்கிலேயர்கள் தங்களை அடக்குவதாக சொன்னார்கள் இந்த பெரிய பிரான்ஸ் மண் மொழி இனம் என்று கனடா மீது போர் தொடுக்கவில்லை .

கொஞ்சம் யதார்த்த உலக அரசியல் பேசினால் நல்லது .

அர்ஜூன் ஐயா, நான் எழுதியதை வடிவா பாருங்கோ.. :(

நான் அரசியல்வாதியல்ல. மிகச் சாதாரண தமிழன். என்னைப் போலும் சில ஒத்த கருத்துடையோர் இருக்கலாம், அதை வைத்தே என் மனவோட்டத்தை எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

60% பேர்கு மலசலகூடம் இல்லாத நாட்டில், நீங்கள் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவதில்லையா, அப்படி ஒரு அபத்தம்தான் இதுவும்.

இதன்  மறுவடிவம்

கருத்து எழுதாதீர்

பொத்திக்கொண்டிரும்.........

ஆனால் ஐனநாயகம் பேசுவோம்

தனிமனித உரிமை பற்றி  எழுதுவோம்..

ஏன் சகோதர யுத்தம் பற்றியும் அங்கலாய்ப்போம்........... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்/விசுகு ஐயா இல்லை தனிநாடே வேண்டும் என்கிறார்கள்.

தனிநாடு வேண்டும் என்று எங்கு எழுதியுள்ளேன்

காட்டமுடியுமா???

இன  அழிப்பு நடந்தது என்கின்றேன்

தமிழருக்கு தொடர்ந்து அழிவுகளும் துன்பங்களும் நடக்கின்றன  என்கின்றேன்

இதற்கு பரிகாரம் வேண்டும் என்கின்றேன்

நீதி  வேண்டும் என்கின்றேன்

அதற்கு என் உயிர் உள்ளவரை  ஆதரவு தருவேன் என்கின்றேன்

இதற்காக தமது உயிரைக்கொடுத்தவரை மறவேன் என்கின்றேன்.

இவை  தான் நான் எழுதுவது

இங்கு பேசுவது....

இது தனிநாடு கேட்பதாக  உங்களுக்கு படுகின்றது என்றால்....

இந்த அநியாயங்களுக்கு அது தான்தீர்ப்பு

தீர்வு என்று உங்கள் உள்மனம் சொல்வதே காரணமே தவிர

நான் எங்கும் எழுதவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

60% பேர்கு மலசலகூடம் இல்லாத நாட்டில், நீங்கள் கட் அவுட்டுக்கு பால் ஊத்துவதில்லையா, அப்படி ஒரு அபத்தம்தான் இதுவும்.

'குதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு யர்ரம்'ன்னு ஒரு கொல்டி வாசகம் நகைச்சுவையாக இங்கே கூறுவதுண்டு, அதுபோல்தான் உங்களின் ஒப்பீடும் இருக்கிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வாழ்வுக்கு போராட ஒன்றுகூட மாட்டீர்கள், ஆனால் உதவாக்கரை கந்தனுக்கு கும்மியடிக்க, அரோகரா பாட, கூட்டம் கூட்டமாய் உருளுவீர்கள்!

அங்கு இருக்கும் மக்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒரே சந்தோசத்தை கூட அனுபவிக்க கூடாது என்பது தான் வன்னியன் ஜயாவின் நோக்கம் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை மாதிரி விற்பன்னர்கள் பலரும் ஒரத்த நாட்டிலும், சென்னையிலும், தில்லியிலும் பல காலம் குப்பை கொட்டுமளவிற்கு நாங்கள் உபசரிக்கும்போது அதை உணர்ந்திருக்கனுமே! :icon_mrgreen:

சூப்பர்.. ஏன் ஒரத்தநாட்டுடன் நிறுத்தி விட்டீர்கள்? எஸ்.டி.சோமசுந்தரம் மட்டுமா கொடுத்தார்?  

சேலம், கொல்லிமலை, கும்பகோணம்...  கோவையருகே அரங்கநாயகம் ஏற்பாடு செய்து கொடுத்த இடங்கள்.. வேதாரண்யத்தில் சண்முகத்தின் (தற்கொலை செய்து கொண்டதாக சி.பி.ஐ. சொல்கிறது) தோப்பு.. காங்கயம் அருகே வெள்ளங்கோவிலில் இருந்த பண்ணையில் இருந்த ஸ்டோர்.. திருச்சி மலைக்கோட்டை அருகே அன்பில் தர்மலிங்கம் ஏற்பாடு செய்துகொடுத்த தங்குமிட ஹாஸ்டல்.. நிறைய சொல்லலாம்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளுடன் யுத்தம் புரிந்த நேரத்தில், ஆன்டன் பாலசிங்கத்தை சென்னை ஏர்போர்ட்டில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் ஏற்ற ரகசியமாக பாலவாக்கத்தில் வீட்டில் வைத்து உபசரித்து, இமிகிரேஷன் அருகே வந்து நின்றாரே அந்த நாமக்கல் அதிகாரி... 

அப்பனே.. நாம அப்போதெல்லாம் வாய் திறக்க மாட்டோம். இப்போ போட்டுத் தாக்குவோம். உதவி செய்தவர்களுக்கு பின்னாட்களில் உபத்திரவம் கொடுப்பது எமது வழக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.