Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணியிற்கு அனுமதி மறுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

தம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கிரிக்கட் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் தேசிய அணியின் வீரர்கள் இன்று தம்புள்ள பள்ளி வாசலில் தொழுகைகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர்.

எனினும், இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தம்புள்ள மஸ்ஜிதுள் கஹய்ரா என்னும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் நடைபெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்கும் நோக்கில் பாகிஸ்தான் கிரிக்கட் அணியினர் இன்று தம்புள்ளவிற்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு பாகிஸ்தான் அணி வீரர்கள் தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டமைக்கு அணி வீரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கட் அணியை இலங்கை அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளதாக சில பாகிஸ்தான் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் கலேவல பள்ளிவாசலுக்கு சென்று, தமது வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொண்டுள்ளனர்.

அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிவாசலை உடைக்குமாறு சில பௌத்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பள்ளிவாசல் புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் அதனை உடைக்குமாறும் தொடர்ச்சியாக பௌத்த மத அமைப்புக்கள் கோரி வருகின்றன.

இதேவேளை, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பாதுகாப்பு உறவுளை விஸ்தரிப்பது குறித்து இண்ககம் காணப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/111053/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இடிக்கப் பட இருக்கின்ற.... தம்புள்ள பள்ளிவாசலில்,
பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள்.... இறுதித் தொழுகை நடத்த இலங்கை அரசு அனுமதி மறுத்தது, கவலைக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ரோசமில்லத மூனாக்கள் ஆயுதங்களை அள்ளிக் கொடுப்பினம்...என்னோடு வேலை செய்யும் Pakistani, srilankan cricket team வென்றால் Pakistan வென்றது போல் சந்தோஷப்படும்.

பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மறுப்பு: அதிருப்தியில் வீரர்கள்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடதம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி நாளை கண்டியில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர்.

எனினும், இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தம்புள்ள மஸ்ஜிதுள் கஹய்ரா என்னும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாகிஸ்தான் அணி வீரர்கள் தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டமைக்கு அணி வீரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கட் அணியை இலங்கை அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளதாக சில பாகிஸ்தான் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் கலேவல பள்ளிவாசலுக்கு சென்று, தமது வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.virakesari.lk/articles/2014/08/29/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

வந்தா கிரிக்கெட் விளையாடினமா போனமா என்றிருக்கனும். அரசியல் செய்யப்படாது. சிங்களத்தின் இந்த முடிவு பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான ஒன்று. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான்காரருக்கு ஹக்கீம்தான் ஈமெயில் அனுப்பி கூப்பிட்டிருப்பார்.. ::rolleyes::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இந்தா பார் பாக்கிஸ்தான்காரன் வாறான் விளையாடுறான் வெள்ளிக்கிழமை எண்டவுடனை பள்ளிக்கு போகோணும்...தொழவேணும் எண்டுறான்..... :icon_idea:
 
உந்த சுப்ரமணி சூப்ரமணி எண்டு ஒரு தேவாங்கு வந்து போச்சுதே........ஒரு கோவிலுக்காவது போச்சுதா நாதாரி..... :(
 
பாகிஸ்தான்காரனுக்கு முஸ்லிம் மதம் வளரவேண்டும் சிறிலங்காவில் என்ற கனவு.......சுப்பிரமணிக்கு சிறிலங்காவே தங்களுக்கு வேணும் என்ற கனவு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தா பார் பாக்கிஸ்தான்காரன் வாறான் விளையாடுறான் வெள்ளிக்கிழமை எண்டவுடனை பள்ளிக்கு போகோணும்...தொழவேணும் எண்டுறான்..... :icon_idea:
 
உந்த சுப்ரமணி சூப்ரமணி எண்டு ஒரு தேவாங்கு வந்து போச்சுதே........ஒரு கோவிலுக்காவது போச்சுதா நாதாரி..... :(

இராமர் பாலத்தை உடைக்கக் கூடாது என்று ஊழையிட்டுக் கொண்டே இருக்கும்.

கோயில் பக்கம் தலை வைச்சும் படுக்காது.

சு.சாமி ஒரு ஊத்தைவாழி அரசியல்வாதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.