Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நம் அந்தரங்கம் பாதுகாப்பானதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொழில்நுட்பம் வளர வளர வசதிகள் எப்படி அதிகரிக்கிறதோ அதை விடப் பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது. தொழில்நுட்பங்களால் பிரச்சனை என்றால், அதை பயன்படுத்தத் தெரியாமல் அரைகுறையாக செய்து அனைவர் முன்பும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் அதிகரித்து வருகின்றனர். தாங்கள் செய்யும் தவறு தங்களை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை உணராமல் தவறை செய்து வருகிறார்கள். நம்முடைய அந்தரங்கம் உலகம் முழுக்க அனைவரும் பார்க்க நேரிடும் சில வாய்ப்புகளைப் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.Image Credit - themodernnetwork.com

பலரின் அந்தரங்கம் இணையத்தில் பல லட்சம் மக்கள் பார்க்கும் நிலை வர முக்கியக் காரணமே மொபைல் தான். கேமரா மொபைல் வந்த பிறகு இது போன்ற குற்றங்கள் நடைபெற வாய்ப்பு ஏற்பட்டது. இதன் துவக்கமாக டிஜிட்டல் நிழல்ப் படங்களைக் கூறலாம்.

முன்பு ஃப்லிம் ரோல் போட்டு நிழல்ப் படங்கள் எடுத்து வந்தோம். இதன் மூலம் எடுக்கப்படும் நிழல்ப் படங்களை பார்க்க வேண்டும் என்றால் சாதாரண பொது ஜனத்திற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு ஸ்டுடியோக்கள் மட்டுமே! இவர்களிடம் நாம் எடுத்த நிழல்ப் படங்களைக் கொடுத்தால் அவர்கள் அதைக் கழுவி பிரின்ட் போட்டு நிழல்ப் படங்களாகக் கொடுப்பார்கள். இதனால் இன்னொருவர் பார்க்கக் கூடிய நிலை இருந்ததால் நிழல்ப் படங்கள் எடுப்பதில் சுய கட்டுப்பாடு இருந்தது.

எப்போது டிஜிட்டல் வசதி வந்ததோ, ஸ்டுடியோ மூலமாக மட்டுமே பார்க்க முடியும் என்ற நிலை மாறியதோ அன்று ஆரம்பித்தது தான் இந்தப் பிரச்சனை. இது தான் மக்களின் அந்தரங்கம் உலகம் முழுக்க பரவ முழு முதல்க் காரணம். இதன் பிறகு எவரும் என்ன வேண்டும் என்றாலும் எடுக்கலாம் என்றானது. கேமரா மொபைல் எப்போது அறிமுகமானதோ அன்றிலிருந்து இது உச்சத்தை அடைந்து விட்டது. தற்போது கற்பனைக்கு எட்டாத அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது.

முதன் முதலாக இது போல கேமரா மூலம் ஒரு காதல் ஜோடி எடுத்த உடலறவு காணொளி தான் தமிழகத்தில் பரவலாக அறியப்பட்டது. “மைசூர் மல்லிகை” என்று பெயர் வைக்கப்பட்டு இணையத்தில் அப்போது பரபரப்பாக அனைவராலும் பகிரப்பட்டது. 2003 என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை. இது தான் தமிழகத்தில் பரவிய முதல் அந்தரங்கக் காணொளி. இதோடு டிஜிட்டல் கேமரா மூலமாக எடுக்கப்பட்ட பல படங்கள் அவ்வப்போது சுற்றிக்கொண்டு இருக்கும்.

எப்போது மொபைல் கேமரா பிரபலமாகத் துவங்கியதோ அன்றில் இருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான  காணொளிகள் தற்போது இணையத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்களும் இது போல ஒரு காணொளியையாவது பார்த்து இருக்கக்கூடும். செக்ஸ் என்பது எந்த ஒரு மனிதனுக்கும் ஆர்வத்தை தூண்டும் என்பது இயல்பான ஒன்று. அந்த நொடியில் யோசிக்க மறந்த மன நிலையில் செய்த தவறால் வாழ்க்கை முழுதும் மன உளைச்சலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

Read: செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

உடலுறவு கொள்ளும் எவருக்கும் சிறு ஆசை வந்து போக ஏராளாமான வாய்ப்புகள் இருக்கிறது. அது நாம் உடலுறவு கொள்வதை காணொளி எடுத்து வைத்து பின்னர் ரசிக்கலாமே! என்பது தான். இதைப் படித்துக்கொண்டு இருக்கும் சிலர் கூட இது போல செய்து இருக்கலாம். நான் காணொளி எடுப்பதை தவறு என்று கூறவரவில்லை, அது ஒருவருடைய தனிப்பட்ட விருப்பம் / ரசனை. இவ்வாறு எடுக்கப்படும் காணொளி எப்படியும் நீங்கள் ஏமாந்த / கவனக்குறைவாக இருந்த தருணத்தில் மற்றவர் கையில் சிக்க 90% வாய்ப்பு இருக்கிறது என்பதே நான் கூற வருவது. இதன் ஆபத்து இன்னும் பலருக்குத் தெரியவில்லை. நம்ம கிட்ட தானே இருக்கிறது! எப்படி வெளியே போக முடியும் என்று அசட்டு நம்பிக்கை தான் பலரின் வாழ்க்கை சீரழியக் காரணமாக அமைந்து விடுகிறது.

அதுவும் மொபைல் கேமரா மூலம் அனைத்தையும் விளையாட்டாக எடுத்துக் கொள்கிறார்கள். நிஜமாகவே இவர்களுக்கெல்லாம் மூளை இருக்கிறதா!! என்று சந்தேகமாக இருக்கிறது. இந்தக் காணொளிகளில் எல்லாம் ஆண்கள் முகம் தெரிவது மிகக் குறைவாக இருக்கும் அல்லது தெளிவாக இருக்காது. நாளை இதையே வைத்து மிரட்டினால் என்ன செய்வார்கள்? இது போல எத்தனை செய்திகளை நீங்கள் தினமும் படிக்கிறீர்கள். இதையெல்லாம் படித்தும் அறிவு வரவில்லை என்றால் இவர்களை எல்லாம் என்ன செய்வது?!

உங்கள் மொபைலில் சேமிக்கும் காணொளியை நீக்கினாலும் (Delete) அது அதிலேயே இருக்கும் என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்? நீங்கள் உங்கள் உடலுறவு / அந்தரங்க காட்சிகளை எடுத்து பின் புத்திசாலியாக இருப்பதாக நினைத்து அதை டெலிட் செய்து இருக்கலாம். டெலிட் செய்தாச்சு இனி ஒன்றும் செய்ய முடியாது, நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தால், உங்களை நினைத்து  பரிதாபப்பட மட்டுமே முடிகிறது. இவ்வாறு டெலிட் செய்தாலும் அதை எளிதாக திரும்ப எடுக்க முடியும். இது போல கொஞ்ச மாதங்கள் முன்பு அர்ச்சகர் தேவநாதன் பாலியல் காட்சிகள் வெளிவந்தது இந்த முறையில் தான். தன்னுடைய மொபைல் பழுதானதால் சரி செய்ய கொடுத்த இடத்தில், இதில் இருந்த காணொளிகளை எடுத்து இணையத்தில் விட்டு விட்டார்கள்.

கடந்த வாரம் கூட ஒரு பைனான்சியர் தனக்கு வர வேண்டிய பணத்தை சரிகட்ட சம்பந்தப்பட்ட (தெரிந்தவரை 27) பெண்களுடன் உறவு கொண்டு அதை காணொளியும் எடுத்து இருக்கிறார். இவரும் தன்னுடைய மொபைல் பழுதானதால் கொடுத்து, அதை சரி செய்பவர்கள் எடுத்து இணையத்தில் விட்டு விட்டார்கள். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Hack-300x300.jpgநான் கூறுவது அதிகாரப்பூர்வமாக திறமையான நபர்களால் சோதனை செய்யப்பட்ட ஒரு விசயம். இரண்டு மாதங்களுக்கு முன்பு 20 Android மற்றும் iPhone முற்றிலும் தகவல்கள் அழிக்கப்பட்ட (factory reset) மொபைல்களில் Android மொபைலில் இருந்து அனைத்துத் தகவல்களையும் எடுத்து இருக்கிறார்கள். iPhone ல் இருந்துEncryption காரணமாக  எடுக்க முடியவில்லை. இந்தியாவில் Android தொலைபேசிகளே பெரும்பாலனவர்கள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஓரளவு தொழில்நுட்பம் தெரிந்தவர்களே அழித்த தகவல்களை எடுக்க முடியும். அப்படி இருக்க.. உங்கள் தகவல்களை எடுத்தே ஆக வேண்டும் என்று முயற்சித்தால் ஒரு பெரிய விசயமே இல்லை.

இன்று வரை இது போல ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது ஆனால், எவரும் இது குறித்து அலட்டிக் கொள்வது போல தெரியவில்லை. ஒருவேளை தங்கள் காணொளி வெளியே வந்தால் பராவாயில்லை என்று நினைக்கிறார்களா!? இது போன்ற காணொளிகள் மற்றவர்களுக்கு (நண்பர்கள், உறவினர்கள்) தெரியாதவரை பிரச்சனை இல்லை ஆனால், இருவரில் ஒருவரைப் பற்றி தெரிந்தவர் பார்த்தால் கூட போதும் அவர் ஊர் முழுக்க பரப்பி விடுவார். அதுவும் இவர்களைப் பிடிக்காத ஒருவருக்குத் தெரிந்தால், நிலை என்ன ஆகும்?!

உங்கள் கணினி, மொபைல், கேமரா, இணையம் என்று எதுவுமே பாதுகாப்பில்லை. உங்களுடைய குடும்ப நிழல்ப் படங்கள், சான்றிதழ்கள் போன்றவை மற்றவர்களிடம் கிடைத்தால் அதனால் பெரிய இழப்பு உங்களுக்கு வந்து விடப்போவதில்லை ஆனால், அதே உங்கள் அந்தரங்கம் கிடைத்தால்?!

ஒரு உதாரணத்திற்கு உங்களுடைய நண்பரோ உறவினரோ உங்களை அழைத்து உங்கள் அந்தரங்கக் காணொளி இணையத்தில் ஒரு தளத்தில் இருக்கிறது என்று ஒரு சுட்டியை (லிங்க்) கொடுத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?! ஒரு நிமிடம் மூச்சு நின்று விடாதா?! நாளை உங்கள் அருகில் வசிப்பவர்கள் சாதாரணமாக சிரித்தால் கூட இதற்காகத் தான் சிரிக்கிறார்களோ என்று தோன்றாதா?! இருவர் நம்மைப் பார்த்து ரகசியமாகப் பேசினால்…! சிலருக்கு இதெல்லாம் தான் மாட்டாதவரை இதன் முக்கியத்துவம் புரியாது.

எந்த பிரௌசிங் சென்டரில் அறை போல இருக்கிறதோ அங்கே விவகாரமா நடக்க வாய்ப்பு இருக்கிறது. ஆண் பெண் ஜோடியாகச் சென்றால் அங்கே செக்ஸ் இருக்க வாய்ப்புள்ளது. பிரௌசிங் சென்டரில் இது போல வசதி செய்து கொடுப்பவர்கள் சிலர் இதோடு வருபவர்களுக்கு தெரியாமல் ரகசிய கேமராவையும் வைத்து இருப்பார்கள். யாரும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டே “மற்ற” நடவடிக்கைகளில் ஈடுபவர்கள் முன்னாடியே ஒரு கேமரா இருப்பதை கவனிக்காமல் விட்டு விடுவார்கள். கேமரா எங்கே வேண்டும் என்றாலும் (மேலே கீழே எதிரில்) வைக்கப்பட்டு இருக்கலாம். அனைத்தும் பதிவு செய்யப்பட்டு ஆபாச தளங்களுக்கு விற்கப்படும். கடை நடத்துபவரால் மிரட்டவும் படலாம். இணையத்தில் இது போல காட்சிகள் கடல் போல இருக்கிறது. தவறு செய்பவர்களை கடவுள் கவனிக்கிறாரோ இல்லையோ எங்கோ ஒரு கேமரா கவனித்துக்கொண்டு இருக்கிறது.

இவையெல்லாம் அல்லாது பொது இடத்தில் கூட நிம்மதி இல்லாமல் செய்து விட்டார்கள். ஒரு ஹோட்டலில் தங்கினால் அங்கே கேமரா, கழிவறை / குளியலறை சென்றால் அங்கே கேமரா, உடை மாற்றும் இடத்தில் என்று வரைமுறையே இல்லாத அளவிற்கு பாதுகாப்பு இல்லாது சென்று விட்டது. அங்கே சுற்றி இங்கே சுற்றி இறுதியில் நம் வீட்டிற்கு மின்சார வேலை, இரும்புக் குழாய் வேலை பார்க்க வருகிறவர்கள் கூட கேமரா வைத்த செய்தி வந்து கொண்டு இருக்கிறது. இத்தனை ஆபத்து இருக்கிறது ஆனால், பலரும் எந்த எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இருக்கிறார்கள். நான் கூறியது எதுவுமே என்னுடைய கற்பனை செய்தியல்ல, அனைத்துமே செய்திகளில் வந்த அதிகாரப்பூர்வச் சம்பவங்கள்.

நீங்கள் என்னென்ன செய்யக்கூடாது / செய்ய வேண்டும்

முதலில் உங்கள் அந்தரங்கச் செயல்களை கேமரா / மொபைல் கேமரா போன்றவற்றில் காணொளி / நிழல்ப் படங்கள் எடுக்கக் கூடாது.

உங்கள் துணை எவ்வளவு வற்புறுத்தினாலும், சமாதானம் கூறினாலும், பிரச்சனை இருக்காது என்று கூறினாலும் ஒப்புக்கொள்ளக் கூடாது. உறுதியாக மறுக்க வேண்டும்.

ஒருவேளை நீங்கள் ஏற்கனவே இது போல காணொளி எடுத்து இருந்தால், அந்த நினைவகத்தை (SD Card) வீணானாலும் பரவாயில்லை என்று உடைத்து விடுங்கள். சில நூறு ருபாய்கள் சேமிக்க எண்ணி வாழ்நாள் அவமானம் அடைந்து விடாதீர்கள்.

கண்டிப்பாக உங்கள் தொலைபேசியில் Passcode activate செய்து இருக்க வேண்டும்.

உங்கள் தொலைபேசி பழுதானால் கடையில் கொடுக்கும் போது  SD card ஐ எடுத்து விட்டு மொபைலை மட்டும் கொடுக்கவும்.

உங்கள் மொபைலை வேறு ஒருவருக்கு விற்பனை செய்தால், அதில் உள்ள SD Card ஐ மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டும். எதுவும் முக்கியமாக அதில் சேமித்ததில்லை என்றால் பிரச்சனையில்லை, அப்படியே கொடுக்கலாம்.

உங்கள் கணினியை பழுது சரி செய்யக் கொடுத்தாலும் இதே பிரச்சனை வரும். Hard disk ல் உள்ள எவற்றையும் இதற்கு என்று உள்ள மென்பொருள் மூலம் எடுக்க முடியும். Hard disk ஐ கழட்டிவிட்டு கொடுப்பது என்பதும் அனைவருக்கும் சாத்தியமில்லை எனவே இது போன்ற அந்தரங்கக் காணொளிகளை இதில் சேமிக்கக் கூடாது. சேமித்தாலும் வேறு ஒருவரிடம் கொடுக்க வேண்டிய நிலை வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

துணிக் கடைகளில் உடை மாற்றும் இடங்களில், நீங்கள் தங்கும் ஹோட்டல்களில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வது நல்லது, குறிப்பாகப் பெண்கள்.

உங்கள் வீட்டில் உள்ள குளியறை / படுக்கையறையில் பழுது பார்க்க எவரும் வந்தால் அவர் செல்லும் வரை உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். அவர் தவறாக நினைத்துக் கொள்வார் என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. அவர் தவறாக நினைத்துக் கொள்வதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை.

இணையத்தில் சேமித்தால் அவசியம் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்தி இருக்க வேண்டும். இதுவே 100% பாதுகாப்பில்லை எனும் போது இதை செயல்படுத்தாமல் இருந்தால் உங்கள் நிலை என்ன என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

Read: ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

Read: ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

உங்கள் இணையக் கணக்கு “ஹேக்” செய்யப்படவில்லை என்றால், நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தமில்லை. உங்களை யாரும் இது வரை குறி வைக்கவில்லை என்று அர்த்தம். இதை நான் ஒவ்வொரு முறையும் கூறிக்கொண்டு இருக்கிறேன் ஆனாலும், நண்பர்கள் பாதிக்கப்பட்ட பின் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

Read: ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது ஆனால், தினமும் ஆயிரக்கணக்கான காணொளிகள் ஏற்றப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இவை அனைத்துமே மேற்கூறிய காரணங்களால் நிகழ்ந்தவை. ஒரு காலத்தில் அனைவருக்கும் இருக்கும் இயல்பான ஆர்வத்தில் இது போன்ற காணொளிகளை பார்ப்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது ஆனால், தற்போது வெறுப்பே ஆகும் அளவிற்கு அத்தனை காணொளிகள் கொட்டிக் கிடக்கிறது. அவர்கள் ரசிக்க எடுக்கப்பட்டது தற்போது உலகம் முழுக்க உள்ளவர்களால் பார்க்கப்படுகிறது. சிலர் அவர்களே மற்றவரை அசிங்கப்படுத்த, வேண்டும் என்றே பரப்பி விடுகிறார்கள்.

இதில் மேற்கூறிய பிரச்சனைகள் இருக்கிறது என்பது ஒரு பக்கம் என்றால், இதை வைத்து மிரட்டப்படவும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. உதாரணத்திற்கு உங்களின் துணை இது போல ஒரு காணொளி எடுத்து நாளை உங்கள் காதல் முறிந்து போனாலோ, விவாகரத்து ஆனாலோ, வேறு காரணங்களாலோ இதை வைத்து உங்களை மிரட்ட ஏராளமான வாய்ப்பு. இது போல காணொளி எடுத்து இதை வைத்து மிரட்டி பணம் பெறும் சம்பவங்கள், இதை வெளியிட்டு விடுவேன் என்று பெண்களை மிரட்டி மீண்டும் உறவுக்கு அழைத்த சம்பவங்கள் வாரம் ஒன்றாவது செய்தியில் வருகிறது, செய்தியில் வராதது ஏராளம் இருக்கும். உங்களுக்கு இந்தச் சம்பவங்கள் நடக்காது என்பதற்கு யார் உத்ரவாதம் கொடுக்க முடியும்?!

தொலைபேசிகளில் பேசப்படும் செக்ஸ் உரையாடல்  பதிவு செய்யப்படுகிறது. காதலர்கள், துணையை நீண்ட காலங்களாக பிரிந்து இருப்பவர்கள், இதற்காகவே இருப்பவர்கள் என்று பலரது செக்ஸ் உரையாடலும் பதிவு செய்யப்படுகிறது. தற்போது காணொளிகளே இணையத்தில் எளிதாகக் கிடைப்பதால் இதற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டது. இருப்பினும் இதிலும் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

கடந்த மாதம் பிரபல ஹாலிவுட் நடிகைகளின் ஆப்பிள் நிறுவனக் கணக்குகளை ஒரு ஹேக்கர் ஹேக் செய்து அவர்கள் வைத்து இருந்த அவர்களுடைய நிர்வாணப் படங்களை வெளியிட்டு விட்டார். இது உலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹாலிவுட் நடிகைகள் ஏற்கனவே நிர்வாணமாக / ஆடை குறைவாக நடித்து இருக்கிறார்கள் என்றாலும், திரைப்படம் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு. இதில் இவர்கள் கணக்கின் கடவுச்சொல் (Password) மிக மோசமாக இருந்ததே இவர்கள் கணக்கை இழக்கக் காரணம். இவர்கள் பிரபலம் என்பதால் அனைவராலும் பேசப்படுகிறது. இவ்வாறு வைத்தது / வைத்ததோடு இல்லாமல் மோசமான பாதுகாப்பில் வைத்தது இவர்களுடைய தவறு. இது போலத்தான் நம்மவர்களும் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

உங்கள் அந்தரங்கத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் மூன்றாவது நபருக்கோ / வேறு சாதனத்திற்கோ / இணையக் கணக்கிற்கோ சென்றால் அது எப்போது வேண்டும் என்றாலும் உலகில் அனைவருக்கும் சென்றடைய வாய்ப்பு இருக்கிறது. உங்களின் சிறு கவனக்குறைவு கூட உங்களை வாழ்நாள் மன உளைச்சலில் கொண்டு சென்று விடலாம்.

பாதுகாப்பு குறித்து நான் பல விசயங்கள் தெரிந்து வைத்து இருந்தாலும், நம்மைச் சுற்றி நடக்கும் ஏதாவது ஒரு சம்பவம் என்னை தொடர்ந்து எச்சரிக்கைப் படுத்திக்கொண்டே இருக்கிறது. ஹேக்கிங் செய்பவர்களை என்றுமே குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்கள் மிக மிகத் திறமையானவர்கள். எனவே இணையத்தை நான் முழுவதும் நம்புவதே இல்லை. மிகப்பெரிய வங்கிகளின் கணக்கை, பெரிய நிறுவனங்களின் பாதுகாப்பு மிகுந்த கணக்கையையே ஹேக்கர்கள் ஹேக் செய்து விடும் போது நாமெல்லாம் ஒன்றுமே இல்லை.

இந்தக் கட்டுரையின் சுருக்கம் “உங்கள் அந்தரங்கத்தை எங்கும் சேமிக்காதீர்கள் / பதிவு செய்யாதீர்கள்”. மேற்கூறியது எதுவுமே அறிவுரையல்ல, அனைத்துமே எச்சரிக்கை.

http://www.giriblog.com/

  • கருத்துக்கள உறவுகள்

நம் அந்தரங்கம் பாதுகாப்பானதா?

அப்பிடித்தான் நினைச்சிக்கிட்டிருக்கோம் எசமான்.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடித்தான் நினைச்சிக்கிட்டிருக்கோம் எசமான்.. :unsure::D

 

 

நான் அடிக்கடி சரி  பார்ப்பது

எனது தொலைபேசியை  ஒழுங்காக அணைத்து இருக்கின்றேனா  என்பது.. :icon_mrgreen:

மனசுக்கு பெரும் தொல்லையப்பா.............. :lol:  :D

.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் இளசுகளின் அந்தரங்கம்... செல்போன் அப்ஸ்களால்.. அம்பலாமாகி வருகிறது.

 

அண்மையில்.. சினப் சாட் (Snapchat) மூலம்.. நிர்வாண செல்பி (Selfie) அனுப்பிவனையிட படங்கள் இணையத்தில் அரங்கேறக்கண்டு பலர் ஆடிப் போயிருக்கினம்.

 

நிர்வாணமா செல்பி எடுத்து அனுப்பிற ஒரு வியாதி வேற தொற்றி இருக்குது.. இளசுகள் மத்தியில்..??!! இதெல்லாம் எங்க போய் முடியப் போகுதோ..??!

 

Nude 'Snapchat images' put online by hackers

 

_78144834_456736602.jpg

 

http://www.bbc.co.uk/news/technology-29569226

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்கு பாதுகாப்பு வசதி!

Read: ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

Read: ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

 

இதைக் கொஞ்சம் வடிவாக விளங்கப் படுத்துங்கோ. இரட்டை அடுக்குப் பாதுகாப்பு என்பது விளங்கவில்லை.

முதலில் இவ்வாறான அந்தரங்க வீடியோக்கள் எடுக்கக் கூடாது

சரி, அப்படியே எடுத்துட்டாலும் Encrypt பண்ணி சேமிச்சு வைக்க வேண்டும் - முக்கியமாக இணையத்தளத்திலோ மொபைலிலோ சேமிக்க கூடாது

சரி, அப்படியே அவற்றை இணையத்தளத்திலோ அல்லது மொபைலிலோ சேமிச்சால், அவை வெளியே போவதற்கான கதவுகளை அடைக்க வேண்டும்

 

சரி, அப்படியே வெளியே போய் நாலு பேர் அதை பார்த்து விட்டால்....தங்கள் நிர்வாண உடலை ஓசியில பார்த்தது தப்பு என்று அதற்கும் ஒரு கட்டணம் அறவிட வேண்டும் :)

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் அந்தக்காலத்திலை யன்னல் ஓட்டை,வேலி இடுக்கு,செத்தை இடுக்கு,குளக்கரை மறைப்பு எண்டு எத்தினைக்காலை எத்தினை விசயத்தை பாத்திருப்பம்!!!! :lol:

 

ஆனால் வெளியிலை காட்டிக்கொள்ளவேயில்லை.... :D  :icon_idea:

 

இப்ப கண்டறியாத செல்போன் ஒண்டு வந்து எல்லாரின்ரை வாழ்க்கையையும் நாசமாக்குது.. :(

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அந்தக்காலத்திலை யன்னல் ஓட்டை,வேலி இடுக்கு,செத்தை இடுக்கு,குளக்கரை மறைப்பு எண்டு எத்தினைக்காலை எத்தினை விசயத்தை பாத்திருப்பம்!!!! :lol:

 

ஆனால் வெளியிலை காட்டிக்கொள்ளவேயில்லை.... :D  :icon_idea:

 

இப்ப கண்டறியாத செல்போன் ஒண்டு வந்து எல்லாரின்ரை வாழ்க்கையையும் நாசமாக்குது.. :(

எங்கடை ஊரில, வேலி ஓட்டைகள் எல்லாம், நில மட்டத்தோட தான் இருக்கும்!

 

அவசரத்துக்குப் பூந்து விளையாடுறதுக்கு! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.