Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விசுகுவும் அபிலாசைகளும்.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் விசுகு அண்ணா எனக்கு என்னவோ இந்தத் திரியை நீங்கள் ஆரம்பித்த தன் நோக்கம் உங்கள் தற் பெருமையை சொல்லுவதற்கு என்றே நினைக்கிறேன்...உங்களுக்கு உண்மையான உணர்வு இருந்தால் சிங்கள,முஸ்லிம்களால் நேரடியாக பாதிக்கப்பட்ட நீங்கள் எப்படியாவது அங்கே இருந்து கொண்டு எந்த ஒரு இயக்கத்திலாவது சேர்ந்து அரசிற்கு எதிராக போராடி இருப்பீர்கள்.ஆனால் விட்டால் போதும்,தப்பினால் காணும் என்று நாட்டை விட்டுட்டு ஓடி வந்து விட்டீர்கள்.நீங்கள்,உங்கள் சகோதரங்கள் அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இங்கு இருந்து கொண்டு ஏதோ உங்களை விட்டால் தமிழ் உணர்வு மற்றவருக்கு இல்லை என்ட மாதிரி எழுதுறீங்கள் பாருங்கோ.அங்கே தான் நிற்கிறீங்கள்.பென்டன் செய்து கொடுப்பதால் மட்டும் அவர்களுக்கு தமிழீழ கனவு வந்து விடாது.அவர்களை வன்னிக்கு அனுப்பி ஆக்க பூர்வமாக அந்த மக்களுக்காக,நாட்டுக்காக இவர்கள் எதாவது செய்திருந்தால் மனப்பூர்வமாக பாராட்டி இருப்பேன்.

மற்றப்படி எனக்கு பிரான்சில் நடக்கும் உள்,குத்துகள் ஒன்றும் தெரியாது.அதற்காக நீங்கள் யாழை விட்டுப் போறீங்கள் என்டால் உங்களை விட கோழை ஒருத்தரும் இல்லை.கருத்துக்களை,கருத்துக்களால் எதிர் கொள்ள முடியாமல் யாழை விட்டு நீங்கள் ஓடிப் போவதால் உங்கள் மீது தான் பிழை என்றாகி விடும்.உங்கள் அரசியற் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.ஆனாலும் யாழ் இருக்கும் வரை யாழோடு நீங்கள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

 

அப்படிப் போடணும் அரிவாளை....
 
விசுகருக்கு பிள்ளைகள் எல்லாம் படித்து நல்ல நிலைக்கு வந்த பின்னர் பொழுது போகுதில்லை போல கிடக்குது.
 
தனி மரம் தோப்பாக முடியாது என உணர்ந்து, தோப்புகள் சேர்ந்து உலைக்கும் காலம் வரும் வரையில் ஒதுங்கி அங்குள்ள மக்களுக்கு, வேறு வகையில் உதவ முடியுமே.  :icon_idea:
  • Replies 77
  • Views 7.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுபற்றி முன்னர் கூறியிருந்தீர்கள். இப்பொழுது தான் படமாக பார்க்கிறேன்.

தமிழீழத்தையும் தமிழீழ மக்களையும் பற்றிய உங்கள் சிந்தனை எமக்கு தெரியும். என் வாழ்வில் உங்களை சந்தித்ததை நான் ஒரு பாக்கியமாகவே கருதுகிறேன்.

இந்த வரிகள் எதற்கு விச்சு அண்ணா. :(

 

 

சகோதரி..

 

யாழில்

தாயகம் சார்ந்த

போராட்டம் சார்ந்த

தமிழகம் சார்ந்த பலவிடயங்களை  இணைப்பவர் தாங்கள்..

 

தாயகம் சார்ந்து

தெளிவான கொள்கையுடைய  இன்றைய  தலைமுறை நீங்கள்...

 

யாழிலிருந்து எதற்கு ஒதுங்கியிருக்கிறீர்கள்....??

முன்னையது போல் ஏன் தங்களால் எழுதமுடியவில்லை?? 

 

இதை ஒருமுறை அசை போடுங்கள்

எல்லாம் புரியும்............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

எவ்வளவு உறுதியாக உங்கள் கொள்கையை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்கிறீர்களோ அதே உறுதியுடன்  எத்தனை  தடங்கள் வந்தாலும் யாழுடன் இணைந்து இருக்க வேண்டும். பலருக்கும் பல விதமான அணுகு முறைகள் இருக்கலாம் யார் சரி என்பது நிறுவப்படும் வரை கேள்விக்குறியானதே. எல்லோருக்கும் தமது வாழ்க்கை அனுபவத்தை கொண்டே  கொள்கைகளை வகுக்கிறார்கள் அல்லது வேறொருவரின் கொள்கையோடு ஒத்துப்போகிறார்கள். வரலாற்றில் சிலரின் கொள்கையை எள்ளி நகையாடியவர்கள் பின்னாளில் அதே கொள்கையை சரி என்றோரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
 
தமிழீழம் என்பது முள்ளிவாய்க்காலோடு நிறைவு பெற்றிருக்கலாம்.அக்கொள்கை தொடர்வது என்பதை அங்குள்ள மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.எதிரியின் அடக்கு முறை அவர்களுக்கு வேறு தெரிவை கொடுக்குமா என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.

 

 

 

நுணா

யாழிலே    நான் மதிக்கும் பெருமைப்படும் ஒரு தம்பி  நீங்கள்..

 

அறிவுரைக்கு நன்றி

 

உங்களது இரண்டாவது கருத்திலே

எனக்கு மாற்றுக்கருத்துள்ளது

 

அங்குள்ளவர்கள் தான் தீர்மானிக்கவேண்டும் என்பது சரி

ஆனால் எனது கருத்தை சொல்ல உரிமை இல்லை என்பது தவறு

காலங்கள்

தூரங்கள் வேறு பாடாக இருக்கலாம்

ஆனால் நானும் எல்லாவற்றையும் இழந்து ஓடிவந்தவனே.....

உரிமை மறுக்கப்பட்டவன்

கலைக்கப்பட்டவன் என்ற ரீதியில் அதை அடைய என்னால் முடிந்தவழிகளில் நானும் பேசுவேன்

அடுத்த தலைமுறைக்கு கடத்துவேன்

எமக்கு நடந்த அநியாயங்களை

முடிந்தால் எனது பூட்டனுக்கும் சொல்லியே  சாவேன்

இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை......??

இப்படி நீங்கள் ஜோக்கிற்கும் சொல்லக்கூடாது விசுகு அண்ணா . :(

 

பகிடி கிடையாது ராசா..

உண்மை கசக்கும்

ஆனால் .............???

 

நன்றி அன்புக்கு......

இதை மஞ்சளும் சிகப்புமாகக் கொடுக்கும் காலம் கனியவேண்டும் விசுகு..!

 

அந்த நம்பிக்கை எனக்கும் உண்டண்ணா...

அதைத்தொடர்ந்து விதைக்கணும்

 

 

எந்த ஒரு விடயமும் தொடர்ந்து சில நாட்கள் கவனிக்கப்படாதிருந்தால்....

காலாவதியாகிவிடும்.....

எந்த ஒரு மக்கள் கூட்டமும் 

ஒதுங்கத்தொடங்கிவிட்டால்

ஒன்று சேர்ப்பது மிகமிகக்கடினம்.....

 

நன்றியண்ணா

அன்புக்கும்  கருத்துக்கும் உற்சாகமூட்டலுக்கும்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு நீங்கள் அறிவும் ஆற்றலும் உள்ள ஒரு யாழ் இணைய உறுப்பினர். அந்தக் கடைசி வரிகள் என்னைப் கலங்கவைக்கிறது காரணம் என்ன?

 

அந்த வரிகளை எழுதும் போது

எனது கண்கள் கசிந்தன..

அதன் வலிமை அறிவேனக்கா...

 

யாழை எனது குடும்பம் என்று எழுதுபவன் யான்.

அதில் எந்த மாற்றமும் இல்லை

 

ஆனால்   பேசவேண்டியதை

பேசவேண்டிய  நேரத்தில் பேசாமல் இருப்பதும் மடமையல்லவா...??

 

நன்றியக்கா

அன்புக்கும் அறிவுரைக்கும்.

ஊரில் இருந்த போது பலரது வீட்டுச் சுவரை அலங்கரிப்பது.. அவரவர் குடும்ப போட்டோக்களும்.. நடிகர்.. நடிகைகளும்.. இயற்கை காட்சிகளும் தான். ஆனால் எங்கள் வீட்டில்.. பெரிய ஒரு தமிழீழம் அமைத்திருந்தேன். அதில் தமிழீழம் சார்ந்த படங்கள்.. செய்திகளை தேடி தேடி வெட்டி ஒட்டி விடுவேன். 

 

அந்த வீடு இன்றில்லை. வீட்டை தரைமட்டமாக்கினாலும்.. அன்று சேகரித்த அந்த படங்களும் செய்திகளும் தந்த அறிவை யாரும் தரைமட்டம் ஆக்க முடியாமலே உள்ளது.

 

அதேபோல் தான் தமிழீழம் என்ற இலட்சியமும். தாயக மக்கள் மட்டுமல்ல.. தாயகத்தை விட்டு இடம்பெயர்ந்த 90% மக்களின் மனங்களில் அது பல நினைவுகளோடு இன்னும் வாழ்ந்து கொண்டே உள்ளது. அது ஓர் நாள்.. விடியும் வேளை வரும். காலங்கள் ஒரே மாதிரியே இருக்கப் போவதில்லை. அந்த நம்பிக்கையோடு எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்பட்டால்.. சிலவற்றை விரைந்து நடத்திக் காட்டலாம். 

 

தினமும் வாழ்வில் எத்தனையோ தோல்விகள்.. வெற்றிகள். அவற்றிற்காக தோல்வியை கண்டு எவனும் வீழ்ந்ததில்லை. வெற்றியை கண்டு பூரித்துக்கொண்டே வாழ்ந்ததில்லை. அடுத்த நிலைக்கு எப்படியோ போகனுன்னே முயற்சிக்கிறான். அதுபோலவே இதுவும்.

 

உங்கள் முயற்சியை தொடருங்கள் விசுகு அண்ணா. அது மற்றவர்களின் முயற்சியோடு ஒரு நாள் கூட்டுச் சேரும் போது.. இலக்கு அடையப்பட்டதாக இருக்கலாம்.

 

முயற்சி மட்டுமே திருவினையாக்கும்..!!!  :icon_idea:  :)

 

நன்றி  ராசா..

 

நான் ஒரு செயற்பாடடாளன்

சொல்லுக்கும் நிகராக செயல் இருக்கணும் என்று செயலில் காடடுபவன்

எங்கிருந்தாலும்

எனது முயற்சிகளும் பணிகளும்

செயல்களும் தொடரும்........

 

அதை எவரும் மாற்றவோ

தடுக்கவோ முடியாது

அதற்கு எவருக்கும் அருகதையுமில்லை.........

 

நன்றி 

 

விசுகண்ணா, வெள்ளிக் கிழமை போத்திளைத் திறந்தால், குசும்பு தான். (கடைசி வரி). (நான் அப்படி அடிப்பதில்லை எண்டுவார் பாருங்க).
 
ராஜ ராஜ சோழன் எனும் தமிழ் சக்கரவர்த்தியின் 'தமிழர்களின் மகோன்னத' காலத்தில் வாழ்ந்த தமிழனும் இந்த உலகில் இருந்திருக்கிறான்.
 
தமது சொத்தை கொள்ளை அடித்தவர்கள், சிறை சென்ற போது, மாரடித்து உயிர் விட்ட தமிழனும் இருந்த அதே உலகில், மானம் காக்க, களம் கண்டு வீழ்ந்த மறத் தமிழனும் நாம் வாழும் இந்த காலத்தில் இருந்திருக்கிறான்.
 
ஆக, நாம் வாழும் இந்த காலம் தமிழனின் 'சிறப்பான காலம் இல்லை, என்பதை ஏற்று, காலம் ஒரு நாள் மாறும் என காத்திருப்போம்.
 
சூரியன் மறையாத சாம்ராஜம் என மார்தட்டியவர்கள் மண்ணிலேயே, சுதந்திர குரல் எழுந்து அதிர வைத்த நிலை பார்த்தோம்.
 
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும். பொறுப்போம்.
 
எனது விருப்பம் எல்லாம், மகிந்தர் மீண்டு வென்று வர வேண்டும். 
 
அந்த நிலைமையில் தான், உலகம் வேறு வழி இன்றி உறுதியான நடவடிக்கை எடுக்கும். இப்போது ரணில் வந்தால், சமாதானம் வரும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. 
 
பார்ப்போம்  :icon_idea:

 

 

பார்க்கலாம் நாதமுனி....

ஆனால் அந்த நேரத்தில் நாம் எல்லோரையும் ஒதுக்கி ஒற்றுமையற்று

ஒரு கை கொண்டு எதைச்சாதிக்கமுடியும்???

இதே கேள்வி..........

 

நன்றி  அன்புக்கும்

அறிவுரைக்கும்...

விசுகர்... எங்கயிருந்து இந்தக் குணம் உங்களுக்கு வந்தது? :mellow:

 

வெறும் கட்டாந்தரையிலும்....மண் நிரப்பி, மிளகாய்க் கண்டு வளர்த்த.. அந்த 'ஓர்மம் ' எங்கே தொலைந்து போனது?

 

கொதிக்கும் வெய்யிலிலும், பனங்காய் மீது ஏறிநின்று, காலின் சூடு தணித்த அந்த 'திண்மை' யை எங்கே தவற விட்டு விட்டீர்கள்

 

கிணற்றின் உப்புத் தண்ணீரிலும்... காசித்தும்பை வளர்த்து.. வீட்டை அழகு படுத்திய அந்த ஆத்ம  'திருப்தியை' எங்கே தொலைத்து விட்டீர்கள்?

 

பூமி உருண்டை என்ற உண்மையைச் சொன்னதற்காக, கொப்பெனிகஸ் கலிலியோ, துரோகியாக்கப் பட்ட கதை, நீங்கள் அறியாததா?

 

இரவும் பகலும் இரண்டு வேலை செய்து உழைத்த உங்களது...மனோபலம் ஆட்டம் காணுகின்றதா?

 

காலம் உங்களைத் தின்று விட அனுமதிக்காதீர்கள்! 

 

காலத்தைக் கூடத் தின்று ஜீரணிக்கக்கூடிய வலிமையை...எமது மண் எங்களுக்குள் விதைத்துள்ளது!

 

அதனால் தானே உலகின் மூலை முடுக்கெங்கும் எம்மால் கடை பரப்ப முடிந்தது?!

 

தூற்றல்கள், துரோகங்கள்,அனைத்தையும் தாண்டி நகர்வதே 'வாழ்க்கை'!

 

இடுக்கண் வருங்கால் நகுக..... என்றான் வள்ளுவன்!

 

அவன் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும்! :icon_idea:

 

அண்ணா

அத்தனையும் இருக்கு..

 

என்ன செய்வது மதியாதோர் வாசல் மிதியாதே

இதையும்  படித்துவிட்டோமே......

 

பூமி உருண்டை என்ற உண்மையைச் சொன்னதற்காக, கொப்பெனிகஸ் கலிலியோ, துரோகியாக்கப் பட்ட கதை, நீங்கள் அறியாததா?

 

இரவும் பகலும் இரண்டு வேலை செய்து உழைத்த உங்களது...மனோபலம் ஆட்டம் காணுகின்றதா?

 

காலம் உங்களைத் தின்று விட அனுமதிக்காதீர்கள்! 

 

காலத்தைக் கூடத் தின்று ஜீரணிக்கக்கூடிய வலிமையை...எமது மண் எங்களுக்குள் விதைத்துள்ளது!

 

அதனால் தானே உலகின் மூலை முடுக்கெங்கும் எம்மால் கடை பரப்ப முடிந்தது?!

 

தூற்றல்கள், துரோகங்கள்,அனைத்தையும் தாண்டி நகர்வதே 'வாழ்க்கை'!

 

இடுக்கண் வருங்கால் நகுக..... என்றான் வள்ளுவன்!

 

அவன் சொன்னால் அதில் அர்த்தமிருக்கும்! :icon_idea:

 

ம்ம்ம்

இரு கன்னங்களையும் காட்டினேன்

இனி

என்ன  செய்ய  யேசுவே....

 

பார்க்கலாம் அண்ணா

அன்புக்கும் அறிவுரைக்கும்  நண்றியண்ணா...

வணக்கம் விசுகர். உங்கள் கருத்தை ஆதரிக்கின்றேன்.

 

 

நன்றியண்ணா......

நமக்கு குறி  

கொக்கின் தலை தானே அண்ணா......

அதனால்தானே இங்கு இணைந்தோம்

ஒன்றாக பயணிக்கின்றோம்........

 

அதுமட்டும் இல்லையென்றால்....?? :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்திற்கும் புலிகளுக்கும் ஆதரவு என்று யார் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு அவர்களை நம்பும் ஒருவராகத்தான் விசுகு ஐயாவை நான் பார்க்கின்றேன். இப்படியான ஆதரவைக் காட்டுபவர்கள் நேர்மையானவர்களா, நாணையமானவர்களா, சுயநலத்திற்காக வேடம் பூண்பவர்களா, சுய ஒழுக்கம் உள்ளவர்களா என்று எல்லாம் ஆராய்வது மாதிரித் தெரியவில்லை. கூட்டம் சேர்த்தால் ஓங்கிக் குரலை உயர்த்தினால் எல்லாம் நன்றாகவே நடந்துவிடும் என்ற தவறான சிந்தனையின் விளைவை உணர்வதில்லை.

அத்தோடு புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரில் அமைப்புக்களை வைத்திருப்பவர்களது தவறான நடவடிக்கைகளைப் பற்றிய விமர்சனங்களை வைக்காது வெறுமனே இருப்பதையும் பார்த்துள்ளேன். அண்மையில் கூட ஈழமுரசு பத்திரிகை நிறுத்தப்பட்ட விடயத்தில் கூட வெளிப்படைத்தன்மையுடன் கருத்துக்களை வைக்க முடிந்தும் வைக்கவில்லை.

தலைவர் கூட கருணா அம்மான் தமிழீழ இலட்சியத்தில் உறுதியுடன் இருப்பார் என்ற நம்பித்தான் அம்மானின் செயல்கள் பற்றித் தெரிந்தும் அவற்றை உடனடியாகக் கவனிக்கவில்லை. இறுதியில் அது புலிகள் இயக்கத்தின் அழிவுக்கே வழிவகுத்தது.

எனவே தவறுகள் நடக்கும்போது அவற்றைச் சுட்டிக்காட்டுவதும் தவறானவர்கள் என்று தெரிந்தால் அவர்கள் என்னதான் தாயக விடுதலையை நேசிப்பவர்களாக இருந்தாலும் ஒதுக்குவதும் தேசியத்தை வலுப்படுத்தும். இல்லாவிட்டால் அமைப்புக்கள் கொடியவர்களின் கூடாரமாகத்தான் இருக்கும்.

எனவே எதிர்காலச் சந்ததி தமிழீழக் கனவைச் சுமக்கவேண்டுமென்றால் அவர்களுக்கு தமிழீழம் ஏன் தேவை என்ற அறிவை ஊட்டவேண்டும். அவர்கள் தாயகத்தில் உள்ளவர்களோடு பிணைப்பை உருவாக்க வழிவகைகளைச் செய்யவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

யாழ்களத்தில் ஒவ்வருவரும் எழுதும்போது எதோ உறவுக்காரர்கள் எழுதுவதுபோல உள் உணர்வு சொல்லும் அதில் மூத்த உறவுகளில் விசுக்கும் ஒருவராகும் உங்கள் உணர்வை ஒத்த உணர்வுதான் எனதும்.
 
நீண்ட ஆயுளுடன் வாழவேண்டுகின்றேன். 

 

 

 

நன்றி  சகோதரா....

எம்மால் முடிந்தவரை முயல்வோம்....

 

உங்கள் போன்ற  உறவுகளின் பாசத்துக்கு கடமைப்:பட்டுள்ளேன்

நன்றி

அன்புக்கும் வேண்டுதலுக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா, உங்களது உணர்வை ஒத்த நிலையில் தான் அனேகமான தமிழர்கள் வாழ்கிறார்கள். நான் உட்பட.

உங்களை ஒருதடவை தான் சந்தித்த போதிலும் உங்களை அப்போதே என்னால புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த கடைசி வரியை நீக்கி விடலாமே அண்ணா. என்றும் சேர்ந்து பயணிப்போம்.

 

தண்ணீரும் 3 முறை  தான் பொறுக்கும் என்பார்கள்...

பார்க்கலாம்

 

உங்களை  சந்தித்த நினைவுகள் என்றும் மறவாதவை....

 

நன்றி  ஐயா

அன்புக்கும் நேரத்துக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை என்ன இது?

நீங்கள் இப்படி பதியலாமா?

இன்னும் நூறாண்டுகள் கூட ஆகட்டும் நாம் கொண்ட கொள்கையும் லட்சியத்தையும் விடாமல் இருந்தால் போதும். நீங்கள் உங்கள் சிந்தனையை இளையோருக்கு எடுத்து செல்கிறீர் அதுதான் இன்றைய தேவை. உங்களை எவ்வளவு பேர் பிள்ளைகளிடம் கொண்டு செல்கிறார்கள். தொடர்ந்தும் உறுதியோடு இருங்கள்.

அப்பறம் என்ர குரு வாரக்குள்ள அதை தூக்கிடுங்கோ.. இல்ல அதுக்கப்புரம் நடக்கிற உள்நாட்டு போருக்கு குருகுலம் பொறுப்பாகாது :)

 

 

உங்களைப்போன்றவர்களின்  வரிகள் தெம்பு தருபவை

எம்மை தூக்கிவிடுபவை...

 

எமக்கு குறி  ஒன்றுதான்...

அதை  அடையும்வரை

அல்லது நான் இறக்கும்வரை அது தொடரும்..

இடம் மாறலாம்

பாதை வேண்டுமானால் மாறலாம்..

 

நன்றி  தம்பி

 

 

உங்கட குரு

என்னை  நன்றாக புரிந்தவர்

தேர்  ஓட்டிகளில் மிகவும் தேர்ச்சி  பெற்றவர்

வரவேண்டிய  நேரத்தில்

நிச்சயம் வருவார். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகரிண்ட அறுவை தாங்க ஏலாமக் கிடக்குது எண்டு தண்ணியப் போட்டுட்டு நான் கத்தினதை அந்தாள் கேட்டுட்டுதோ தெரிவில்லை.
 
கடசில ஒரு வரி போட்டு விட்டுது.  :wub:
 
பரவாயில்லை விசுகர்.... கொஞ்ச நாளைக்கு ஓய்வில இருந்து மீண்டும் வருக. :icon_mrgreen:

 

உங்களது அபிலாசைகள் நிறைவேற்றப்படும்..

நன்றி

கருத்துக்கும் அன்புக்கும்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்னப்பா? என்ன நடந்தது? தொடர்ந்து யாழ்களத்திற்கு வாருங்கள்.....புங்கையின் கருத்துதான் எனது கருத்தும்.....

 

தாயகப்பற்றுள்ள

பழைய

மற்றும் 

நெடுநாள் உறவுகள் எவரும் இங்கு இல்லை ஐயா

ஒவ்வொன்றாக ஒதுங்கிவிட்டார்கள்

ஒதுக்கப்பட்டு விட்டார்கள்...

 

இறுதியாக ராசவன்னியன்...

என்னாச்சு?

ஏன் வருவதில்லை??

 

எல்லாவற்றையும் அலசுங்கள்

புரியும்........

நன்றி  தங்கள் அன்புக்கும் நேரத்துக்கும்....

ஐயா விசுகு,
யாழ் களத்தில் எனது குறுகிய காலத்தில் உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது ஒரு அன்யோன்னிய உணர்வு ஏற்படுவதுண்டு. இது ஒரு பொது களம் இங்கே நீங்கள் விரும்பும் பதிவுகளும் இருக்கும். விரும்பத்தகாத கோபத்தை ஏற்படுத்தும் பதிவுகளும் இருக்கும். அதுதான் ஒரு விவாத தளத்தின் அழகு. புலிகள் விடயத்தில் உங்களது பார்வைக்கும் எனது பார்வைக்கும் பல ஆயிரம் மைல் இடைவெளி உண்டு. ஆனால் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் இங்கு இருக்கும் அனைவரும் ஒத்து போவர் என்பது தான் எனது எண்ணம் (புலிகள் வேறு தமிழர் நலன் வேறு அல்ல என்று நீங்கள் நினைக்கலாம்). உங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் உங்களை முற்றுமுழுதாக புலிகள் பக்கம் சாய வைத்தது போல வேறு ஒருவருக்கு கிடைத்த அனுபவங்கள் அவரை முற்று முழுதாக புலிகளுக்கு எதிராக திருப்பி இருக்கலாம். அனைவரும் ஆட்டு மந்தைகள் போல சிந்திக்காது ஒரு வழியில் செல்ல முடியாது. 
வாதங்களும் எதிர் வாதங்களும் தான் மக்களுக்கு ஒரு அரசியல் தெளிவை உருவாக்கும். தாயகப்பற்றுள்ளவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என உங்களைப் போன்றவர்கள் ஒதுங்காமல் தைரியமாக கருத்தாடல் செய்ய வேண்டும் என்பதே எனது அவா. நீங்கள் கடைசியில் எழுதிய வசனத்தை இனி கனவிலும் நினைக்காதீர்கள்.அந்த எண்ணமே உங்களை ஓய்வடைய செய்து விடும். 
  • கருத்துக்கள உறவுகள்

தாயகப்பற்றுள்ள

பழைய

மற்றும் 

நெடுநாள் உறவுகள் எவரும் இங்கு இல்லை ஐயா

ஒவ்வொன்றாக ஒதுங்கிவிட்டார்கள்

ஒதுக்கப்பட்டு விட்டார்கள்...

 

இறுதியாக ராசவன்னியன்...

என்னாச்சு?

ஏன் வருவதில்லை??

....

 

பிரச்சனை ஒன்றும் இல்லை விசு. ஆனால் "நீங்கள் இந்தியர்...! எங்களை சொல்ல நீங்கள் யார்...?" என ஈழத் தமிழர்கள் மனதளவில் நினைக்கையில், 'நான் நலம், நீங்கள் நலமா...?' என சம்பிரதாயமாக பார்த்து, நலம் விசாரித்துவிட்டு செல்லவே இயலும் விசு.

 

ஈழத் தமிழர்கள், அவர்கள் எண்ணப்படி நன்றாக வளமுடன் வாழட்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை ஒன்றும் இல்லை விசு. ஆனால் "நீங்கள் இந்தியர்...! எங்களை சொல்ல நீங்கள் யார்...?" என ஈழத் தமிழர்கள் மனதளவில் நினைக்கையில், 'நான் நலம், நீங்கள் நலமா...?' என சம்பிரதாயமாக பார்த்து, நலம் விசாரித்துவிட்டு செல்லவே இயலும் விசு.

 

ஈழத் தமிழர்கள், அவர்கள் எண்ணப்படி நன்றாக வளமுடன் வாழட்டும்.

 

 

ராஜவன்னியன்,

மிகவும் மன வேதனையை.... தந்தது உங்கள் கருத்து.

களத்தில் பலர் இருப்பார்கள், அதில் ஒரு சிலரின் கருத்தை தூக்கிப் பிடித்து,

பெரும்பான்மையான உறவுகள் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பை, உதாசீனம் செய்வது சரியல்ல.

 

யாழ்களத்தில், உங்கள் கருத்துக்களை... தமிழக உறவு என்னும் முறையில்,

பலரால் விரும்பி வாசிக்கப் படுகின்றது என்பதே... உண்மை.

இனியும்.... உங்கள் மௌனம், விரும்பத்தக்கதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறியின் கருத்தே எனதும். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை ஒன்றும் இல்லை விசு. ஆனால் "நீங்கள் இந்தியர்...! எங்களை சொல்ல நீங்கள் யார்...?" என ஈழத் தமிழர்கள் மனதளவில் நினைக்கையில், 'நான் நலம், நீங்கள் நலமா...?' என சம்பிரதாயமாக பார்த்து, நலம் விசாரித்துவிட்டு செல்லவே இயலும் விசு.

 

ஈழத் தமிழர்கள், அவர்கள் எண்ணப்படி நன்றாக வளமுடன் வாழட்டும்.

 

 
ஆகா, நீங்கள் இந்தியரா, சொல்லவே இல்லையே ! 
 
முதலில் தமிழர். அப்புறம் இந்தியர்.
 
ஒன்றை புரிய வேண்டும், சூதானமாக, வன்னியர்.
 
உங்களைப் போன்றவர்களை இங்கே இருந்து, கடுப்பேத்தி, வருகையை தடுக்க என்றே பலர் உள்ளே வருவார்கள். தாங்கள், ஏதோ, பெரும் பற்று உள்ளவர்கள் போல காட்டிக் கொள்வார்கள். :icon_mrgreen:
 
அவர்களை அடையாளம் கண்டு, வெட்டி ஆட வேண்டும் நண்பரே.  :D

உறுதியான இலச்சியத்துடன் போரடுபவர்களை எப்படி சதிசெய்து மக்களுடன் சேர்த்து அழித்தார்களோ., அதன் தொடர்ச்சி தான் புலம்பெயர் நாடுகளிலும் சதிகூட்டங்களினால் தொடர்கிறது. அதன் வெளிப்பாடுகளே நாளும் பொழுதிலும் யாழில் எதிர்கருத்து கூறல் எனும் பெயரில் தங்கள் முகமூடியை அகற்றி தாயகத்தை நேசிப்பவர்களை குறிவைத்து தாக்கி, குதற காத்திருப்பர். சிங்களத்தின் தமிழின அழிப்பின் முல்லிவாய்க்காலின் பின்னரும் இன்றுவரை பல தமிழருக்கு எதிராக செய்துவரும்(திட்டமிட்ட குடியேற்றம், இராணுவ நில ஆக்கிரமிப்பு...) இருந்தாவது படிப்பினைகளை வைத்து திருந்தாது பல காரணங்களுக்கு(பணம், புலிகளுக்கு எதிரான பலிவாங்கல், மன நோய் இப்படி பலகாரணங்களால் பாதிக்கப்பட்டு விடுதலை விரும்பிகளுக்கு எதிராக செயல்படுவர்களின் நோக்கம் உங்களின் நோக்கங்களை சிதறடிப்பதே. விசுகுவில் அவர்கள் எண்ணம் நிறைவேறவிடாமல் செய்வதற்கு மேலும் இரட்டிப்பு வேகத்துடன் தனியாகவும் சேர்ந்தும் இயங்குதல் வேண்டும். பகைவர் எங்கோ மறைவர்..... பகைவரின் தாகம்( நரிகளின்) தமிழர்களை சிங்களவரின் அடிமைகளாக வைத்திருப்பதே.

தாயகப்பற்றுள்ள

பழைய

மற்றும்

நெடுநாள் உறவுகள் எவரும் இங்கு இல்லை ஐயா

ஒவ்வொன்றாக ஒதுங்கிவிட்டார்கள்

ஒதுக்கப்பட்டு விட்டார்கள்...

இறுதியாக ராசவன்னியன்...

என்னாச்சு?

ஏன் வருவதில்லை??

எல்லாவற்றையும் அலசுங்கள்

புரியும்........

நன்றி தங்கள் அன்புக்கும் நேரத்துக்கும்....

தாயகப்பற்றுள்ள பலர் யாழ் இணையத்தை விட்டு ஒதுங்கியது ஒதுங்கிக்கொண்டிருப்பது உண்மை தான்.

அகூதா அண்ணா, மல்லை அண்ணா மற்றும் சில கள உறவுகள் யாழை விட்டு விலகிய பின் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் வழி தெரியாமல் இன்னமும் கவலைப்பட்டுகொண்டிருக்கிறோம்.

ஆனால் அதற்காக நீங்களும் ஒதுங்குவது சரியான தீர்வு அல்ல. நீங்கள் தொடர்ந்து யாழுடன் இணைந்திருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

சகோதரி..

யாழில்

தாயகம் சார்ந்த

போராட்டம் சார்ந்த

தமிழகம் சார்ந்த பலவிடயங்களை இணைப்பவர் தாங்கள்..

தாயகம் சார்ந்து

தெளிவான கொள்கையுடைய இன்றைய தலைமுறை நீங்கள்...

யாழிலிருந்து எதற்கு ஒதுங்கியிருக்கிறீர்கள்....??

முன்னையது போல் ஏன் தங்களால் எழுதமுடியவில்லை??

இதை ஒருமுறை அசை போடுங்கள்

எல்லாம் புரியும்............

என் மேல் தாக்குதல் நடத்தியவர்கள் பலர். ஆனால் யாரும் தாக்குதல் நடத்தாத நேரத்தில் தான் நான் யாழுக்கு வராமல் விட்டிருந்தேன்.

எனக்கு தனிப்பட்ட பிரச்சினை, வீட்டு நினைவு, மனசு நல்லாயில்லை போன்ற தருணங்களில் என்னை மீறி யாழில் புலம்பல் கருத்து எழுதி யாழில் யாரிடமும் பேச்சு வாங்க வேண்டாம் என நினைத்தே விலகியிருந்தேன்.

இப்பொழுது யாழில் பதிவுகள் போடுவது குறைந்தமைக்கு காரணம் நேரமின்மை.

பிரச்சனை ஒன்றும் இல்லை விசு. ஆனால் "நீங்கள் இந்தியர்...! எங்களை சொல்ல நீங்கள் யார்...?" என ஈழத் தமிழர்கள் மனதளவில் நினைக்கையில், 'நான் நலம், நீங்கள் நலமா...?' என சம்பிரதாயமாக பார்த்து, நலம் விசாரித்துவிட்டு செல்லவே இயலும் விசு.

ஈழத் தமிழர்கள், அவர்கள் எண்ணப்படி நன்றாக வளமுடன் வாழட்டும்.

உங்களுக்கு எதிராக அன்று கருத்து எழுதியிருந்தவருக்கு உங்களை பற்றி அதிகம் தெரிந்திருக்காது. ஆனால் அவர் கருத்தால் நீங்கள் வேதனைப்பட்டதும் யாழில் உங்களை காணவில்லை என்றதும் அதுபற்றி அந்நபரிடம் சுட்டிக்காட்டியதும் அவர் உங்களுக்கு தனிமடல் போட்டிருந்தார். (அதில் என்ன எழுதியிருந்தார் என்று எனக்கு தெரியாது). அதன் பின் மீளவும் யாழில் உங்களை கண்டதும் மகிழ்ச்சியடைந்தோம். யாழுக்கு வந்தாலும் எழுதாமல் இருக்கும் முடிவை மாற்றி மீளவும் பழையபடி எழுதுங்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இப்போதுதான் பார்த்தேன்.

ஆரம்பத்தில் விசுகுவும் அபிலாசாவும் என்று தலைப்பை தப்பாக வாசித்து கொஞ்சம் ஆடித்தான் போனேன். :)

இப்ப லேட்டஸ்ட் ஸ்கோர் என்ன விசுகர் இன்னா அவுட்டா? :)

விசுகு/ராசவன்னியன் ,

நான் கருத்து முட்டுப்பட்ட ஆட்களில் நீங்கள் ரெண்டு பேரும் அதிகம். நீங்கள் எல்லாம் ஒரு குழுவாய் எத்தனை பேர் இருக்கிறீர்கள். ஒருத்தருடன் கருத்து முரண்பட்டால் பதிலுக்கு பத்துப்பேர் வருவீர்கள்.

கொஞ்சம் எங்களையும் யோசித்துப் பாருங்கப்பா....எத்தனை வசவுகள்? இதே திரியில் கூட, உங்களை போன்றவர்களை ஒதுங்க வைக்கவே நாம் கருத்து எழுதுவதாய் எத்தனை பேர் சொல்லிப் போயுள்ளார்கள். நீங்கள் உட்பட.

ஒரு கருத்தை எதிர்ப்பது என்பது வேறு கருத்தாளனை களத்தில் இருந்து அப்புறப்படுத்துவது என்பது வேறு.

நீங்கள் யாழ்களத்தில் இருந்து ஒதுங்குவதுக்கு மாற்றுக்கருத்தாளரை காரணம் காட்டுவது, சிங்களவர்களுக்கு காலியில் தமிழர்களால் பிரச்சினையாம் என்று சொல்வதை விட அபத்தமானது.

யாழ் என்பது புலிக் கோட்டை - இங்கே நீங்கள்தான் ராஜாக்கள்,எண்ணிக்கைப்பலம், வசவுப்பலம், நிர்வாக ஆதரவு எல்லாம் உங்கள் பக்கமே. மாற்றி யோசிக்கும் நாங்கள் ஒரு பத்திற்க்கும் குறைவான மொட்டையர். நாங்கள்தான் பலமற்ற சிறுபான்மையினர்.

அகூதாவை பற்றி தெரியவில்லை, ஆனால் மல்லை ஆங்கில பக்கங்களில் எழுதுவதியும் குறைத்து விட்டார். யாழில் நடக்கும் புலி எதிர் சதியால் அவர் வராமல் போனமாரி எனக்கு தெரியவில்லை.

இங்கே நீங்கள் வருவதை தவிர்க்க ஒரே காரணம்தான் இருக்க முடியும் - உங்களுக்கே உங்கள் நிலைப்பாடு மீது நம்பிக்கையீனம் வருகிறதோ தெரியவில்லை. எத்தனை பேர் உயிரை விடவும் மேலாக மதித்த கொள்கையை வரித்துக்கொண்டவர்கள் நீங்கள் - ஒரு நாலு மாற்று கருத்துக்கு பயந்து ஓடும் அளவுக்கா இருக்கிறது உங்கள் கொள்கை பிடிப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியன்,

ஒரு குடும்பத்தின் அக்கா (தமிழகம்) ஒரு அடக்கியாளும் கணவன் (இந்தியா) விற்கும் தங்கை ( இலங்கைத் தமிழர்) ஒரு கொடுமைக்கார கணவனுக்கும் ( இலங்கை) வாழ்க்கைப் பட்டுள்ளனர். அக்காவின் கணவனும் தங்கையின் கணவரும் சேர்ந்து தங்கையை அடி பின்னி எடுத்துள்ளனர்.

இவ்வளவு நடந்தும் அக்கா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நான் முதலில் என் கணவனின் மனைவி பின்புதான் என் தங்கையின் அக்கா ( முதலில் இந்தியன், பின் தமிழன்) என்பதே அக்காவின் நிலைப்பாடு.

தங்கையின் எதிர்காலத்தை பற்றிக்கதைக்க இங்கே அக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது?

வாழ்த்துக்கள் விசுகு !
 " நம்பிக்கைதான் வாழ்க்கை" அதேபோலத்தான் "வாழ்க்கையும் வாழ்வதற்கே" இதற்காகத்தான் அரும்பாடு நாம் அடையாவிட்டால் என்ன? எமது பிள்ளகள் அடைவார்கள்.சரி அவர்கள் அடையாவிட்டாலும் எமது சந்ததி அடையும்.அதற்காக முயற்சியை கைவிட்டால்.........
 
 
மறக்கமுடியாது
  • கருத்துக்கள உறவுகள்
விசுகு ஐயா,
 
தேசிய‌த் தலைவரது கொள்கைகளை பின்பற்றுகிறேன் என்கிறீர்கள், 30 வருட காலம் கட்டிக்காத்த அவரது மனத்துணிவிலும் / பலத்திலும் ஒர் 5% மாவது, இருக்கும் என எதிபார்த்தேன். இப்படி சோர்ந்து மனம் போகிறீர்கள்.

ராசவன்னியன்,

ஒரு குடும்பத்தின் அக்கா (தமிழகம்) ஒரு அடக்கியாளும் கணவன் (இந்தியா) விற்கும் தங்கை ( இலங்கைத் தமிழர்) ஒரு கொடுமைக்கார கணவனுக்கும் ( இலங்கை) வாழ்க்கைப் பட்டுள்ளனர். அக்காவின் கணவனும் தங்கையின் கணவரும் சேர்ந்து தங்கையை அடி பின்னி எடுத்துள்ளனர்.

இவ்வளவு நடந்தும் அக்கா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நான் முதலில் என் கணவனின் மனைவி பின்புதான் என் தங்கையின் அக்கா ( முதலில் இந்தியன், பின் தமிழன்) என்பதே அக்காவின் நிலைப்பாடு.

தங்கையின் எதிர்காலத்தை பற்றிக்கதைக்க இங்கே அக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது?

நீங்கள் ராஜவன்னியன் அண்ணா பற்றி தெரியாமல் முன்னர் கருத்து வைத்திருந்தீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது அவர் பற்றி தெரிந்தும் கருத்து வைக்கிறீர்கள்.

உங்களை விட அதிகமாக ஈழத்தமிழர்களை நேசிப்பது ராஜவன்னியன் அண்ணா தான் என்பது ராஜவன்னியன் அண்ணா பற்றி தெரிந்த அனைவருக்குமே மிக நன்றாக தெரியும்.

அடுத்து,

எதற்கு எதை உதாரணம் காட்டுவது என உங்களுக்கு தெரியவில்லை. சரி உங்கள் கதைப்படி பார்த்தால் கூட ஒருத்தனுக்கு தனது மனைவியின் தங்கையை அடிப்பதற்கான உரிமையை யார் கொடுத்தது? இங்கு அடிப்பவன் மேல் தான் பிழை என தெரிந்தால் மனைவி தனது தங்கைக்கு ஆதரவாகவும் தனது கணவனுக்கு எதிராகவும் கதைப்பதற்கு பூரண உரிமை உள்ளது.

கணவன் தனது மனைவியை போட்டு படுத்திற பாட்டில் மனைவியே தனது கணவனுக்கு எதிராக திரும்பியுள்ள காலம் இது.

ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு தான் உள்ளது, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு இல்லை என திரிக்கு திரி கூறும் உங்களுக்கு தமிழக உறவுகள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்க கூடாது என்று கூறுவதற்கான உரிமையை மட்டும் யார் தந்தது. உங்கள் தேவைக்கமைய மாற்றி மாற்றி கதைப்பீர்களோ?

தமிழக உறவுகள் தமக்காக குரல் கொடுப்பதை போராடுவதை வரவேற்கிறோம் என்று ஈழத்திலுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கூறியது குறிப்பிடத்தக்கது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

துளசி

உங்களுக்கு என் உதாரணம் விளங்கவில்லைபோலுள்ளது.

புருசனும் அத்தானும் போட்டு பின்னி எடுக்க - கணவனே கண்கண்ட தெய்வம் என்று இருக்கும் அக்கா

இந்த அக்கா, அடிக்கும் புருசனையும் அத்தானையும் விட மோசமானவள்.

நாம் கொத்துக்கொத்தாக அழிந்தபோது, லண்டனை, ரொடாண்டோவை சிட்னியை போராடி திகிலடித்தோமே? 7 கோடி பேர் என்னத்தை கிழிச்சார்கள்?

நான் யாரையும் முகம், குலம் கோத்திரம் பார்த்து கருத்து வைப்பதில்லை. தமிழகத்தை குறை சொன்னா ராஜவன்னியன் முகம் கோணுவார் என்பதற்காக உண்மையை பேசாமல் விட முடியுமா?

கருத்தாடலுக்காக நான் டூ என்று எல்கேஜி பிள்ளை மாரி ஓடுபவராக ராஜவன்னியனை நான் நினைக்கவில்லை.

நீங்கள் தான் ஓவர் செண்டிமெண்டாகிறிஉர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.