Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் செல்ல அனுமதி பெறுவது எப்படி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துல்ஸ்,

எனது அறிவாளித்தனம் பற்றிய உங்கள் நகைச்சுவை ரசிக்கும் படியாக இருந்தது

Edited by goshan_che

  • Replies 64
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விபரத்திற்கு நன்றி இசை,கோசான்...இதில் என்ன நகைச்சுவை கோசான் எனக்கு யாரோ சொன்னார்கள் இந்தியாவிற்கு போய் அந்தமான் போறதென்டால் விசா எடுக்கத் தேவையில்லை என்று அதான் கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா - நகைச்சுவை என்று சொன்னது துல்சுக்கு.

உங்களுக்கு அடுத்து எழுதிய பதிலும் அதோடு சேர்ந்து வந்த்ஹுட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்

அருணாசல பிரதேசத்துக்கள் வரும் இந்தியர்கள் விசா எடுக்க வேண்டும் என்று சீனா ஒருமுறை அறிவித்தது.அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. தற்போது நமக்கும் அதே நிலமை.யாழ்ப்பாணத்துக்கு ரயிலை விட்டுப்போட்டு தமிழர்கள்(வெளிநநட்டுக் குடியுரிமைபெற்றவர்களில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம்)வடக்குக்குப் போக விசா என்றால் என்ன அர்த்தம்?அதுதான் நாட்டுக்குள் நுழையும் போதே விசா எடுத்துத்தான் வருகிறார்கள்.மீண்டும் ஒரு விசா என்றால்(அனுமதியும் விசாவும் ஒன்றுதான்)அது வேற நாடு இது வேற நாடு என்றுதானே பொருள்).iரேர்பிய யூனியன் குடியுரிமை பெற்ற ஒருவர் விசா இல்லாமல் ஐரோப்ப எங்கும் போய் வரலாம்.ஏன்சிறிலங்கா பாஸ்போட்டில் செங்கன் விசா ஒரு நாட்டுக்கு விசா எடுத்தாலே எல்லாநாட்டுக்கும் போய்வரலாம். சுண்டைக்காய் சிறிலங்கா இப்படிச் செய்யுது என்றால் அது தமிழர் விரோதப் போக்கைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்???????

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

இந்தியர் அருணாசல் வர வீசா வேண்டும் என்று சீனா சொல்லவில்லை. அருணாச்சல் வாசிகள் சீனாவுக்கு வர வீசா தேவையில்லை எண்டே சீனா சொல்லியது.

இங்கே புலம் பெயர்ந்தவர்கள் வடக்குக்கு போக பதியத் தேவையில்லை எனும் போது, வெளிநாட்டில் பிறந்தவர் மட்டுமே பதிய வேண்டும் எனும் போது இது வேறு யாருக்கோ சொல்லப்படும் செய்தி என்பதுதானே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

இந்தியர் அருணாசல் வர வீசா வேண்டும் என்று சீனா சொல்லவில்லை. அருணாச்சல் வாசிகள் சீனாவுக்கு வர வீசா தேவையில்லை எண்டே சீனா சொல்லியது.

இங்கே புலம் பெயர்ந்தவர்கள் வடக்குக்கு போக பதியத் தேவையில்லை எனும் போது, வெளிநாட்டில் பிறந்தவர் மட்டுமே பதிய வேண்டும் எனும் போது இது வேறு யாருக்கோ சொல்லப்படும் செய்தி என்பதுதானே உண்மை.

புலம்பெயர்ந்தவர்கள், வேற்று நாட்டின் குடிமக்களாக இருந்தால் அவர்களும் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

Sri Lanka Imposes Foreigner Travel Restrictions to Northern Province

Sri Lanka may be concerned that human rights investigators could pose as tourists.

Amid concerns that human rights investigators could go incognito, posing as travelers to gather evidence, the Sri Lankan government has banned all travel by foreigners (even if they are of Sri Lankan origin) to the country’s Northern Province without the acquisition of a permit for travel from the country’s defense ministry.

http://thediplomat.com/2014/10/sri-lanka-imposes-foreigner-travel-restrictions-to-northern-province/

இதுக்கு இலகுவானா வழி, தனி தமிழ் ஈழன் தான் வழி

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் அற்ப லாபங்களுக்காக பிறந்த நாட்டின் பிரஜா உரிமையை தூக்கி எறியும் போது யோசிச்சிருக்கணும்.

இலங்கையரசுக்கு நான் சார்பாளனில்லை எனும் இன்னெருமுகமும் இதுவும் நீங்களா கோசான் ? :D  :D  :D

இந்த விடயத்தில் diplomatic posturing என்பது கல்யாணத்திலை சீப்பை தேடுவதற்க்கு ஒப்பானது  :o

  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்கள் தந்துளா செய்தி ஆதாரமற்றது.

ராணுவ பேச்சாளர் வணிகசூரிய ஒரு செய்தியாளர் மாநாட்டில் அறிவித்ததை இலங்கையின் சகல முன்னணி பேப்பர்களும் வெளியிட்டிருந்தன.

http://dbsjeyaraj.com/dbsj/archives/34441

Sunday Leader, Daily mirror archives இல் தேடிப்பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை நீங்கள் தந்துளா செய்தி ஆதாரமற்றது.

ராணுவ பேச்சாளர் வணிகசூரிய ஒரு செய்தியாளர் மாநாட்டில் அறிவித்ததை இலங்கையின் சகல முன்னணி பேப்பர்களும் வெளியிட்டிருந்தன.

http://dbsjeyaraj.com/dbsj/archives/34441

Sunday Leader, Daily mirror archives இல் தேடிப்பார்க்கவும்.

உங்களுக்காக கோத்தபாயவின் இணையத்தில் இருந்தே செய்தி.. :D வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் எல்லோருமே பதிந்துகொண்டுதான் செல்லமுடியும். :wub:

Foreign Passport holders traveling to the North

Foreign Passport holders traveling to the following areas in the North are required to inform the MOD & UD and obtain prior approval. They can apply by fax or online.

Jaffna District

Kilinochchi District

Mulaithivu District

Mannar District (only areas north of Vidattaltivu)

Vavuniya District (only areas north of Omanthai)

The applications can be submitted for approval via the following Fax/ E-mail address.

Fax- +94112328109

E-mail- modclearance@yahoo.com

The following details are required to be submitted.

1. Name

2. Passport Number

3. Intended date of travel

4. Intended date of return

5. Purpose

6. Mode of travel (Air/Rail/Public transport/Private vehicle)

7. Vehicle registration (only if private vehicle)

8. Name of the driver (only if private vehicle)

9. Whether multiple entries be required during the stipulated period)

(As of now requests up to 3 months considered for multiple entry)

Note: In order to facilitate ongoing projects and investments it is proposed to send such applications, where necessary, through relevant agencies such as BOI, Ministry of Economic Development, Commissioner General for Reconciliation etc.

http://www.defence.lk/new.asp?fname=Foreign_Passport_holders_traveling_to_the_North_20141030_02

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தப்பு பெருமாள்? நம்மில் பெரும்பாலானோர் ஏன் இலங்கை கடவுச்சீட்டை கைவிட்டோம்?

நான் உட்பட?

இலங்கை எம்மை அடக்கி ஆளுகிறது அது என் நாடில்லை எனும் கொள்கை பற்றிலா?

இல்லையே? பிரயாண வசதி, வீசா பிரச்சினை குறைவு, வேலைவாய்ப்பு என்று ஏதோ ஒரு அற்பகாரணத்துக்காகதானே ?

இல்லாவிட்டால், இலங்கை கடவுச்சீட்டையும், ஐசி யையும் கிழித்தெறிந்து விட்டு கழுத்தில் சயனை வில்லைகளை எமது அடையாளமாக அணிந்திருக்க மாட்டோமா?

எமக்கு ஒரு விடயம் விளங்கவில்லை என்றால் அதை கலியாண வீட்டு சீப்பு என்று ஒதுக்கி விட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இசை - இந்த யாஹூ முகவரிக்கு ஒரு இமெயில் தட்டி விட்டுள்ளேன். எசமான் என்ன சொல்கிறார் எண்டு பார்ப்போம்.

நீங்கள் தந்த இணைப்பில் இலங்கையில் பிறந்தவர்கள் பற்றி ஏதுமில்லை.

நேற்று என் நண்பர் ஒருவர் ஓமந்தையூடு போனவர், பிறந்த இடம் தெல்லிப்பளை எண்டதும், பிரச்சினை இல்லாமல் விட்டுவிடனராம். இப்போதான் கேட்டேன்.

உங்களுக்காக என்ன பாடுபட வேண்டி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தப்பு பெருமாள்? நம்மில் பெரும்பாலானோர் ஏன் இலங்கை கடவுச்சீட்டை கைவிட்டோம்?

நான் உட்பட?

இலங்கை எம்மை அடக்கி ஆளுகிறது அது என் நாடில்லை எனும் கொள்கை பற்றிலா?

இல்லையே? பிரயாண வசதி, வீசா பிரச்சினை குறைவு, வேலைவாய்ப்பு என்று ஏதோ ஒரு அற்பகாரணத்துக்காகதானே ?

இல்லாவிட்டால், இலங்கை கடவுச்சீட்டையும், ஐசி யையும் கிழித்தெறிந்து விட்டு கழுத்தில் சயனை வில்லைகளை எமது அடையாளமாக அணிந்திருக்க மாட்டோமா?

எமக்கு ஒரு விடயம் விளங்கவில்லை என்றால் அதை கலியாண வீட்டு சீப்பு என்று ஒதுக்கி விட முடியாது.

கோத்தபாயவின் இணையத்தில் உள்ள செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் பிறந்தவர்களுக்கு என்று சிறப்பு விதிகள் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. இதிலிருந்து டிபிஎஸ் எவ்வாறு இலங்கையின் அழுக்குகளை கழுவி மூடி மறைக்க நினைப்பவர் என்பது புலனாகிறது. :huh: அந்த வரிசையில் உள்ளவர் கோசான் என்பதுபோல் எழுதி எங்களை ஏமாற்றிவிடாதீர்கள் தயவு செய்து. :o

உங்கள் நண்பர் ஓமந்தையை தாண்டி சிறப்பாக போயிருக்கலாம்.. ஆனால் ஒரு இக்கட்டான நிலையில் யாழில் வைத்து பதிவு எங்கே என்று கேட்டிருந்தால் என்ன நிலைமை?? அடுத்த கேள்வி இல்லாமல் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள். ஓமந்தை இராணுவம் உதவிக்கு வராது. :icon_idea:

ஆகவே, வடக்குக்குப் போக விரும்பும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுக்காரர், முறைப்படி விண்ணப்பித்துவிட்டுச் செல்வதே பாதுகாப்பு. டிபிஎஸ் எழுதுவதையெல்லாம் படித்துவிட்டுப் போனால் களிதின்னவேண்டியும் வரலாம். :huh:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன தப்பு பெருமாள்? நம்மில் பெரும்பாலானோர் ஏன் இலங்கை கடவுச்சீட்டை கைவிட்டோம்?

நான் உட்பட?

 

கருத்தின் சாரம்சமே அடிபட்டுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு ஒரு விடயம் விளங்கவில்லை என்றால் அதை கலியாண வீட்டு சீப்பு என்று ஒதுக்கி விட முடியாது.

diplomatic posturing இந்த விடயத்தில் இலங்கையரசு செய்கிறது என்பது உங்கள் கற்பனையே உங்களுக்கு விளங்கவில்லையெனில் எங்களை சாடுவதை நிறுத்துங்கள் .

தமிழர்களை அடிமைகளாக தீர்மானித்து அதை அமுலபடுத்திவரும் சிங்கள அரசு இன்று எமக்கு பலமாக காதை பொத்தி அறைந்ததா அல்லது கொஞ்சம் வலிக்க தலையில் சிறிதாக குட்டியதா என்ற விவாத்த்தில் தமிழர் நாம் இந்த திரியில் ஈடுபடுகிறோம். எம்முடைய எஜமான் இன்று பிடரியில் சிறிதாக தானே தட்டினார். இதற்காக ஏன் கத்துகிறீர்கள் என்று கேட்பது போல் இருக்கிறது

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

நீங்கள் ஒரு பதிவிட - நான் பதிலிட. என்பதில் தூக்கப்படுகிறது. உங்கள் பதிவு அப்படியே விடப்படுகிறது. உங்கள் கருத்து மட்டுமே மக்களை சென்றடையவேண்டும் எண்டு யாரோ நினைக்கிறார்கள். அது யாரோ அது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.

உங்களுடன் தொடர்ந்து விவாதிக்க எனக்கும் உங்களுக்கும் விரும்பாமாயிருந்தாலும், தொடர் வெட்டுக்களால் இனியும் துவள நான் தயாரில்லை. இதை இத்தோடு விடுவம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள்,

நீங்கள் ஒரு பதிவிட - நான் பதிலிட. என்பதில் தூக்கப்படுகிறது. உங்கள் பதிவு அப்படியே விடப்படுகிறது. உங்கள் கருத்து மட்டுமே மக்களை சென்றடையவேண்டும் எண்டு யாரோ நினைக்கிறார்கள். அது யாரோ அது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.

உங்களுடன் தொடர்ந்து விவாதிக்க எனக்கும் உங்களுக்கும் விரும்பாமாயிருந்தாலும், தொடர் வெட்டுக்களால் இனியும் துவள நான் தயாரில்லை. இதை இத்தோடு விடுவம்.

உணர்ச்சி வசபட்டு கள விதிமுறைக்கு மாறாக எழுதிய என்னுடைய கருத்துக்களும் பல தடைவை வெட்டு வேண்டியுள்ளன .உங்கள் கருத்துக்களின் பிழையான தன்மைக்கு எதிராகவே என் கருத்து, உங்களுக்கு எதிராணது அல்ல வேறு ஒரு திரியில் உங்களின் கருத்து வரவேற்ப்பை பெற்று பச்சை குத்தியுள்ளேன் என் கருத்தில் பிழையை கானவும் நிர்வாகத்திடமல்ல சில வேளைகளில் இதை நிர்வாகம் நீக்கினாலும் அது நிர்வாகத்தின் முடிவே .

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் நான் இயல்பிலேயே உணர்சிவசப்படாதவன். என்கருத்த்க்களிலும் அது இராது. உங்கள் கருத்துடன் எவ்வளவோ முரண்பட்டாலும் உங்கள் பேச்சுரிமையை மதிப்பவன். ஆனால் கையை கட்டி விட்டு சண்டைக்குப் போக நான் தயாரில்லை. விளங்கும் என நினைக்கிறேன்.

உங்களிற்க்காக இந்த இணைப்பு

http://www.yarl.com/forum3/index.php?/topic/148240-யாழில்-ரவுடிகளை-துரத்தித்-துரத/

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உங்களை உணர்சிவசப்படாதவர் எதற்க்கும் கலக்கமற்றவர் உறுதியாணவர் என நம்புகிறேன் இதை இத்துடன் முடிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின்  சுயரூபத்தை இத்திரி  அப்படியே  காட்டுகிறது

 

சிங்களம் புலம் பெயர்ந்தவர்களுக்குத்தான் 

அதை ஒரு அடக்குமுறையாக

ஒரு பயங்கரவாதச்சட்டம போன்று தான் இதைக்கொண்டு வந்து

அது இதல்ல

இவருக்கு  அதுவல்ல என கண்ணாம்பூச்சி காட்டுகிறது..

ஆனால் ஊருக்கு போகப்போற எல்லாத்தமிழர் மீதும் இது பாயப்போகின்றது என்பது ஒட்டுமொத்த உலகத்துக்கே தெரியும்

 

ஆனால் தமிழரின் சுயநலபுத்தி

தனது கதவைத்தட்டும்வரை...........

இது  அடுத்தவனுக்குத்தான் எனக்கல்ல என ஒதுங்கும்

அல்லது வக்கால்த்து வாங்கி சுய இன்பம் காணும்.....

தொடருங்கள்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் செல்ல அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது நிரந்தமரமான ஒன்றா அல்லது தற்காலிகமானதா?

அடுத்த சம்மருக்கு விடுமுறையில் போகின்றவர்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு முட்டுக்கட்டை போட்டால் புலம்பெயர் தமிழர்களின் இலங்கை வருகை குறைவடையுமல்லவா. புலம்பெயர் தமிழர்களின் வரவு குறைந்தால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரிபவர்களின் இலஞ்ச வருமானம் வீழ்ந்துபோகும் என்பதையும் அரசு கவனத்தில் எடுக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு இலங்கை பாஸ்போட்டில் களவா ஒடி வரும் போது லஞ்சம் கொடுத்தது ஓகே.

இப்ப வெளிநாட்டுப் பாஸ்போர்ட்டுடன் போகும் போதும் ஏன் லஞ்சம் கொடுக்கிறார்கள்?

எனக்குத்தெரிய அப்படி யாரும் செய்வதில்லை.

நாடு கடதிய ஆக்கள் அல்லது அளவுக்கு மீறி போத்தல் கொண்டு போறவை செய்யக்கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

gos இதுக்கை நிண்டு குத்திமுறிவதன் மர்மம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

வாயக்கிளறுறியளாக்கும் குசா அண்ணை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.