Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய நூலகம்

Featured Replies

a1(39).jpg-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமொன்றை காத்தான்குடியில் அடுத்த வருடம் திறக்கவுள்ளதாக  காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, காத்தான்குடி நகரசபையின் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (01)  நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 

'வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகுமென்பதுடன்,  வாசிப்பு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறுப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

காத்தான்குடியில் ஒரு சிறிய நூலகமே உள்ளது. இந்நிலையில், நாங்கள் நூலகமொன்றை நிர்மாணித்து வருகின்றோம். இந்நூலகத்தின் நிர்மாணப்பணிகள் அடுத்த வருடம் முடிவடைந்துவிடும். இது கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமாக திகழும்.  

மேலும், அடுத்த வருடம் காத்தான்குடி நகரசபைப் பிரிவின் பல்வேறு பகுதிகளிலும் புதிய 06 சிறிய நூலகங்களை காத்தான்குடி நகரசபையால் திறந்துவைக்கவுள்ளோம். இதற்கான முன்;மொழிவு 2015ஆம் ஆண்டுக்கான  காத்தான்குடி நகரசபை வரவு -செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, தற்போது காத்தான்குடி நகரசபை பிரிவில் முன்னெடுக்கப்படுகின்ற நடமாடும் நூலக வாகனத்தின் மூலம் வீட்டிலுள்ள  வீட்டுத்தலைவிகளும் பெண் பிள்ளைகளும் அதிகளவில் நன்மையடைகின்றனர். நூலகத்துக்குச் சென்று புத்தங்களை பெற்றுக்கொள்ள முடியாத வீட்டுத்தலைவிகள்  மற்றும் பெண்கள், இந்நடமாடும் நூலக வாகனத்தில் நூல்களை பெற்று வாசிப்பதுடன், தங்களுக்கு தேவையான புத்தங்களையும் கேட்டுப் பெறுகின்றனர். இந்நடமாடும் நூலக வாகனத்தில் இதுவரைக்கும் 3,500 அங்கத்தவர்கள் சேர்ந்துள்ளனர். இது வாசிப்பின் அதிகரிப்பை காட்டுகின்றது' என்றார். 

இந்த விழாவில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல், காத்தான்குடி நகரசபை செயலாளர், உத்தியோகஸ்தர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. 

அத்துடன், 'தற்கால இளைஞர்கள் வாசிப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்'  மற்றும் 'தற்கால இளைஞர்கள் வாசிப்பில் ஆர்வம் காட்டவில்லை' எனும் தலைப்புக்களில் பெரியவர்களுக்கான திறந்த விவாதப்போட்டியும் இங்கு நடைபெற்றது.
 a2(38).jpg

a3(15).jpg

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-14-24/131694-2014-11-02-06-39-22.html

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் மக்களுக்கென்று ஒரு பெரிய நூலகத்தை அமைப்பது வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சொல்லக்கூடாது நானாமார் காத்தாங்குடியை நல்லாத்தான் வச்சிருங்கிறானுகள்.

பேரிச்சை மரங்கள், கார்பெட் வீதிகள், ஸ்டேடியம், பள்ளிவாசல்கள் எண்டு செல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அதிக சனத்தொகை நெருக்கம் கூடிய இடம் காத்தான்குடி. அது கொழும்பை விட அதிகமாகும்...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நூலகத்தை மட்டக்களப்பில் அமைத்திருந்தால் முழு மட்டக்களப்புமே பயன் பெற்று இருக்குமே!...நூலகத்திற்கு எதற்கு தமிழ்,முஸ்லீம் பேதம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகுமென்பதுடன்,  வாசிப்பு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறுப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்கின்றோம்.

இதே சிந்தனையோடு இருந்த எமக்கு யாழ் நூலககத்தை எரித்தபோது......நாம் எவ்வளவு துவண்டு போய் இருந்தோம்  :(

  • கருத்துக்கள உறவுகள்

இதே சிந்தனையோடு இருந்த எமக்கு யாழ் நூலககத்தை எரித்தபோது......நாம் எவ்வளவு துவண்டு போய் இருந்தோம்  :(

அதை ஒரு கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடவும் .....புதிதாக யாழ்தேவியை கனவு காணுவோம் :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நூலகத்தை மட்டக்களப்பில் அமைத்திருந்தால் முழு மட்டக்களப்புமே பயன் பெற்று இருக்குமே!...நூலகத்திற்கு எதற்கு தமிழ்,முஸ்லீம் பேதம்?

ஷரியா சட்டத்தின் பெருமைகள், பேரீச்சம்பழத்தின் நன்மைகள் போன்ற புத்தகங்கள் அதிகளவில் இருக்கும் என நம்ப இடமுண்டு. :D ஆகவே, காத்தான்குடிதான் சரியான இடம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நூலகத்தை மட்டக்களப்பில் அமைத்திருந்தால் முழு மட்டக்களப்புமே பயன் பெற்று இருக்குமே!...நூலகத்திற்கு எதற்கு தமிழ்,முஸ்லீம் பேதம்?

இருக்கும் பிரச்சனை போதாதென்று மட்டக்களப்பில் ஒரு முஸ்லீம் நூலகத்தை நிறுவி இஸ்லாத்தைத் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு எழவில்லையென என எண்ணுகிறேன்.

இந்தச் செய்தியில் எந்த இடத்திலும் இது இஸ்லாமிய நூலகம் என்று குறிப்பிடப்படவில்லையே?

முஸ்லிம்களுக்கு ஒரு நூலகம் அமைப்பதையே வேண்டா வெறுப்பாக பார்க்கும் தமிழர்கள் தான் இன்னொரு இனத்திடம் இருந்து விடுதலையை எதிர்பார்க்கின்றனர்.

கிளிநொச்சியில் லெபரா நிறுவனம் (லைக்காவின் போட்டி நிறுவனம்?) பெரும் நூலகம் அமைக்கும் போது நல்லவேளை ஏன் யாழ்ப்பாணத்தில் அதை அமைக்கவில்லை என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.

இலங்கைப்பிரச்சினைக்கு மூலகாரணமே 

அங்கு வாழும் இனங்களுக்கிடையிலான  சந்தேகம் தான்....

நான் சரி

நீ பிழை  என்பதற்கப்பால்

இந்த சந்தேகங்கள் நிவர்த்தி  செய்யப்படணும்..

ஆனால் மாறாக

இவை ஊற்றி  வளர்க்கப்படுகின்றன....

எதைச்செய்தாலும் சந்தேகத்துடன் பார்த்தலே முதலில் தொடங்குகிறது... :(

தமிழர் யாழில் இதைச்செய்தால்

தமிழீழத்துக்காக  பிரச்சாரம் செய்ய  பாவிக்கப்போகின்றார்கள் என்றும்

இசுலாமியர் எங்கு  இதைச்செய்தாலும் 

மதத்துக்காக  பிரச்சாரம் செய்ய  பாவிக்கப்போகின்றார்கள் என்றும்

சிங்களவர்கள் இதைச்செய்தால்

பௌத்தமதத்துக்கும் மற்றும் சிங்களத்துக்காகவும்  பிரச்சாரம் செய்ய  பாவிக்கப்போகின்றார்கள் என்றும்

மறு பகுதியினர் சந்தேகம் கொள்கின்றனர்...

இவற்றிலிருந்து விலகுவதற்கான எந்த முயற்சிகளும் கண்ணுக்கெட்டியவரை  இல்லை...

:(

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடியில் அமையப் போகும் நூலகம் முஸ்லீம்களுக்கல்லாது வேறு யாருக்காக?  அங்கு கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு ஒரு இடம் கிடைக்குமா? ஒரு தேவாரப் புத்தகத்தைத்தானும் வைக்க முடியுமா? விவரம் தெரியாதவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

Edited by karu

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காத்தான்குடியில் அமையப் போகும் நூலகம் முஸ்லீம்களுக்கல்லாது வேறு யாருக்காக?  அங்கு கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு ஒரு இடம் கிடைக்குமா? ஒரு தேவாரப் புத்தகத்தைத்தானும் வைக்க முடியுமா? விவரம் தெரியாதவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

சைவசமய புத்தகங்கள் வைத்தால்தான் நூலகம் முழுமையடையுமா என கேள்விகள் வரும் கவனம்!!!!!  :lol:  :D
 
நாலும் தெரிந்த வெள்ளைக்காரன் தேவாரப்புத்தகம் வைச்சுக்கொண்டே நூலகம் திறந்தவன் எண்ட கேள்விகளும் வரும் கவனம்!!!!  :D  :lol:

காத்தான்குடியில் அமையப் போகும் நூலகம் முஸ்லீம்களுக்கல்லாது வேறு யாருக்காக?  அங்கு கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு ஒரு இடம் கிடைக்குமா? ஒரு தேவாரப் புத்தகத்தைத்தானும் வைக்க முடியுமா? விவரம் தெரியாதவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

ஆக அங்கு சரஸ்வதிக்கும் தேவாரத்துக்கும் இடம் கொடுத்தால் தான் ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் நூலகம் அமைப்பதில் உடன்படுவீர்கள்?

கிழக்கு மாகாணத்தில்  அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் எம்பிக்களும் மாநகர சபை உறுப்பினர்களும் உள்ளனர். உங்கள் கவலையை கேள்வியை அவர்கள் முன் வைத்து முற்றிலும் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடி நூலகத்தில் மிக அவசியமான சரஸ்வதி தேவிக்கு இடம் கொடுக்க ஆவண செய்து பாருங்கள். ஆகக் குறைந்தது அவர்களிடம் இது பற்றியாவது கதைத்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தியில் எந்த இடத்திலும் இது இஸ்லாமிய நூலகம் என்று குறிப்பிடப்படவில்லையே?

முஸ்லிம்களுக்கு ஒரு நூலகம் அமைப்பதையே வேண்டா வெறுப்பாக பார்க்கும் தமிழர்கள் தான் இன்னொரு இனத்திடம் இருந்து விடுதலையை எதிர்பார்க்கின்றனர்.

கிளிநொச்சியில் லெபரா நிறுவனம் (லைக்காவின் போட்டி நிறுவனம்?) பெரும் நூலகம் அமைக்கும் போது நல்லவேளை ஏன் யாழ்ப்பாணத்தில் அதை அமைக்கவில்லை என்று எவரும் கேள்வி கேட்கவில்லை.

மட்டக்களப்பில் நூலகம் அமைந்தால் தமிழர்,முஸ்லீம் என எல்லா இன மக்களும் போய் வாசித்து பயன் பெறுவார்கள்.காத்தான்குடியில் என்டால் தனிய முஸ்லீம்கள் தான் பயன் பெறுவார்கள்.தமிழ்ர்கள் தைரியமாக இந்த நூலகத்திற்கு போக முடியுமா? போகத் தான் விடுவார்களா?...பக்கத்து ஊரான ஆரையம்பதியில் இருக்கும் சனம் கூட இதுக்குப் போக மாட்டார்கள்.

மற்றப்படி இந்த விடயத்தில் உண்மையிலேயே முஸ்லீம்களை பாராட்டியே ஆக வேண்டும். தன்ட இன மக்களை,தங்கள் இடத்தை என்னமாக ஒற்றுமையாக அபிவிருத்தி செய்கிறான். இதே நூலகத்தை தமிழ்ர்கள் ஆரையம்பதியில் கட்டி இருந்தால் ஏன் மட்ட்ககளப்பில் கட்டி இருந்தால் எல்லா மக்களும் பயன் பெறுவார்கள் என சொல்லி இருப்பீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகோடி ரூபாய் இருந்தால் நாங்களும் தமிழர்களுக்கான ஒரு பெரிய நூலகத்தை அமைக்கலாம். தமிழர்கள் ஆதரவு தந்தால் இது சாத்தியமாகும். நாங்களும் ஒரு நூலகம் அமைப்பமோ ? 

ரதி,

இங்குள்ள செய்தியின் படி, காத்தான்குடியில் ஒரு சிறு நூலகமே இருப்பதாகவும் அதனால் நடமாடும் நூலகத்தின் மூலம் அக் குறையை தற்காலிகமாக நீக்கியவர்கள் இன்று பெரிய நூலகம் ஒன்றை கட்டுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது அவர்கள் அப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக செய்கின்ற ஒன்று.  இதுக்கேன் இவ்வளவு கேள்வி.

மட்டக்களப்பில் ஒரு பெரிய நூலகத்தின் தேவை இருக்குமெனில் அதை அவ் ஊர் மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் தான் தீர்க்க வேண்டும். லெபராவின் உதவி கொண்டு கிளிநொச்சியில் அமைந்துள்ள பெரிய நூலகம் போன்று அங்கும் உருவாக்கட்டும்.  அது காத்தான்குடியில் அமையப்போகும் நூலகத்தினை விட பெரிதாக அமைய வேண்டுமா இல்லையா என்பதை தேவைகளின் பொருட்டு அவர்க்ளே தீர்மானிக்கட்டும்.

மற்றது, காத்தான்குடிக்கு தினமும் பணியின் நிமிர்த்தமும் வியாபார நோக்கத்திலும் அயல் கிராமங்களில் இருந்து பெருமளவு தமிழ் மக்களும், காத்தான்குடியில் இருந்து இதே தேவைக்காக பெருமளவு முஸ்லிம் மக்களும் வந்து போய்க் கொண்டு தான் இருக்கின்றனர். இப்படி இல்லாமல் ஆளையாள் வெட்டிக் கொல்கின்றனர் என்பது போல இருக்கின்றது உங்கள் பதில். காத்தான்குடியில் ஒரு அரச அலுவலகத்தில் முக்கிய கணக்காளராக இன்று வரைக்கும் இருப்பவர் என் சித்தப்பா முறையான யாழ்ப்பாணத் தமிழர் தான்.

ஒருகோடி ரூபாய் இருந்தால் நாங்களும் தமிழர்களுக்கான ஒரு பெரிய நூலகத்தை அமைக்கலாம். தமிழர்கள் ஆதரவு தந்தால் இது சாத்தியமாகும். நாங்களும் ஒரு நூலகம் அமைப்பமோ ? 

போன வருடமும் இவ் வருடத்தின் மேமாதமளவிலும் கிளிநொச்சி லெபரா நூலகத்துக்கு புத்தகங்களை/ நூல்களை மற்றும் பல வசதிகளை அன்பளிப்பாக வழங்கச் சொல்லிக் கேட்டு இருந்தார்கள். இவற்றில் எவ்வளவு விடயங்களை புலம்பெயர் அமைப்புகள் வழங்கினர் என்று அறிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இந்த நூலகம் ம.களப்பில் அமைந்திருந்தால் எல்லா இன மக்களும் பயன் பெற்று இருப்பார்கள் என்ட எனது ஆதங்கத்தையே குறிப்பிட்டு இருந்தேனே தவிர அவர்களுக்கு போட்டியாக நூலகம் கட்ட வேண்டும் என்று சொல்லவில்லை. முஸ்லீம்களது இடத்தில் வேலைக்கு போவதை விட,சிங்கள இடத்தில் வேலைக்கு போய் வருவார்கள் நிம்மதியாக போய் வருவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக அங்கு சரஸ்வதிக்கும் தேவாரத்துக்கும் இடம் கொடுத்தால் தான் ஒரு முஸ்லிம் பிரதேசத்தில் நூலகம் அமைப்பதில் உடன்படுவீர்கள்?

கிழக்கு மாகாணத்தில்  அங்குள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் எம்பிக்களும் மாநகர சபை உறுப்பினர்களும் உள்ளனர். உங்கள் கவலையை கேள்வியை அவர்கள் முன் வைத்து முற்றிலும் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடி நூலகத்தில் மிக அவசியமான சரஸ்வதி தேவிக்கு இடம் கொடுக்க ஆவண செய்து பாருங்கள். ஆகக் குறைந்தது அவர்களிடம் இது பற்றியாவது கதைத்துப் பாருங்கள்.

ஒரு பொது நூலகமென்றால் எல்லாச் சமய கலாச்சார விழுமியங்களுக்கும் இடங்கொடுத்து அனைவரும் சென்று பயன்பெறக்கூடியதாக இருக்க வேண்டும். அதனைச் சுற்றி வாழும் மக்களும் ஏனையோரின் சமய கலாச்சார விழுமியங்களை மதித்து நடக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.  நெருக்கடியான காலகட்டங்கள் வரும்போது காத்தான்குடி போன்ற பிரதேசங்களுக்குள் தமிழர்கள் சென்றால் திரும்பிவரவே முடியாது.  அதனால் அந்நூலகத்தால் முஸ்லீம்கள் மட்டுமே பயனடைவார்கள்.  தவறில்லை அதனாலேயே வாழ்த்தித் தொடங்கிவைத்தேன்.  தவறு அதனை ஒரு பொதுநூலகமாகக் கருதித் தலையில் வைத்துக் கொண்டாடுவதில்த்தான் உள்ளது.  அப்படி யாரும் கருதினால் அது முட்டாளத்தனம்.  அதுசரி ரொம்ப அவசியமான சரஸ்வதியை ஏன் யாழ்நூலகத்தில் மட்டும் வைக்க வேண்டும்.  யாழ்நூலை இயற்றிய விபுலானந்தர் வாழ்ந்த கிழக்கின் பொது நூலகமாம் காத்தான்குடி நூலகத்திலும் வைக்கலாம்தானே!  அது பற்றி வாய்திறக்கவே தைரியம்  வருமா?

  • கருத்துக்கள உறவுகள்

போன வருடமும் இவ் வருடத்தின் மேமாதமளவிலும் கிளிநொச்சி லெபரா நூலகத்துக்கு புத்தகங்களை/ நூல்களை மற்றும் பல வசதிகளை அன்பளிப்பாக வழங்கச் சொல்லிக் கேட்டு இருந்தார்கள். இவற்றில் எவ்வளவு விடயங்களை புலம்பெயர் அமைப்புகள் வழங்கினர் என்று அறிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் சாந்தி.

லெபாராவின் செய்தியை நானும் படித்தேன். இருப்பதற்கு நூல் வழங்கக்காணமாம் அதில் ஆரையம்பதிக்கும் காத்தான்குடிக்கும் இணைப்பு போடுவோருக்கு யதார்த்தம் புரியப்போவதில்லை.

------------

----------

கிழக்கில் முஸ்லீம்கள் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக செய்யும் பணிகளில் ஒருதுளிகூட தமிழர்களின் பணிகள் இல்லை. யூதரை அடிக்கடி எங்களுக்கு உதாரணமாக சொல்லுவதற்கு பொருத்தமே இல்லாதவர்கள் நாங்கள். அந்த யூதனைப்போலவே முஸ்லீம்கள் தங்கள் இனம் வளர்ச்சி சார்ந்து செய்யும் பொதுப்பணிகளும் உதவிகளும். 

தற்போது கிளிநொச்சியில் உள்ள லெபாரா நூலகத்திற்கு வழங்கும் ஆதரவினை அதிகரித்தால் கிழக்கில் கூட லெபாரா ஒரு பெரும் நூலகத்தை அமைக்கக்கூடும். இருப்பதை உயர்த்த வழியைச் செய்யலாம். அல்லது குழ(த)ப்பாமல் இருக்கலாம். 

யதார்த்தம் இது தான் நிழலி :-

முஸ்லீம்கள் தங்கள் சமூகத்திற்காக அமைக்கும் இந்நூலகத்தில் அவர்கள் தங்கள் சமூகத்தின் மேம்பாட்டையே பிரதிபலிப்பார்கள். இது தவிர்க்க முடியாது. அந்த சமூகம் தன்னை கிழக்கில் வேரூன்ற செய்யும் பல விடயங்கள் வெளியில் தெரிவதில்லை.  இது கசப்பான உண்மை.

தனது இனத்தவன் ஏதாவதொரு நல்ல விடயத்தை தொடங்கினால் அல்லது நடத்தினால் எப்படி அதை அழிக்கலாம்

எனவே தமிழன் சிந்திப்பான்: முஸ்லீம் அப்படியல்ல தனது பரம எதிரியானலும் தனது சமூகத்திற்காக எதிரியையும் அரவணைத்து தனது சமூகத்தை முன்னேற்றக்கூடியவர்கள்.

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நான் சுமார் 35 வருடங்களுக்கு முன் காத்தான்குடியில் பெருந்தெரு தொடக்கம் குச்சொழுங்கைவரைக்கும் அடிபட்டவன் .......
 
ஐயா நிழலி அவர்களே! ஒரு வாரம் காத்தான்குடியில் சுற்றுலா செய்யுது பாருங்கள். நிலமை புரியும்.

அவர்களால் தமிழ்மொழி வளர்க்கப்படும் என நிம்மதியடைவோம்.....நிச்சமாக தமிழ்மொழி பேசும் இந்துக்களையோ,கிறிஸ்தவர்களையோ அரவணைக்கப்போவதில்லை......என்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.