Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாத முலாம் பூசி வட மாகாணசபையை கலைக்கவும் தயங்காது இலங்கை அரசு! - சென்னையில் விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
cm-speech-chennai-300-news.gif

உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி வடக்கு மாகாண சபையை மத்திய அரசாங்கம் கலைக்கவும் தயங்காது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான் நினைவு நிகழ்வில் உரையாற்றினார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

   

1987ம் ஆண்டின் இலங்கை - இந்திய உடன்படிக்கையில் பாரதம் கையெழுத்திட்டது. 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவால் தமிழர் சார்பில் எடுத்துரைத்த விடயங்களுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்த ஒரு முழுமையற்ற தீர்வாவணம். உடன்படிக்கையை எக்காரணம் கொண்டும் விரைவில் முடித்துவிட வேண்டும் என்று அக்கால இருநாட்டு தலைவர்களும் முடிவெடுத்திருந்ததால் 13வது திருத்தச் சட்டம் முக்கியமான அதிகாரங்களை நியாயமான முறையில் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் பகிர்ந்து கொடுத்துள்ளதா என்ற கேள்விக்கு விடை தேடாமலேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

மற்றவற்றைப் பிறிதொரு ஆவணத்தில் எம் உள்ளூரில் புதிய உடன்பாடு ஏற்பட்டது. அவ்வாறு கொண்டுவந்த சட்டந்தான் மாகாண சபைகள் சட்டமாகும். உண்மையில் பாரதத்தின் எதிர்பார்ப்பு ஒன்றாய் இருக்க இலங்கை அரசாங்கம் கொடுத்த பதில் யாப்புத் திருத்தமும் அதையொட்டிய மாகாண சபைகள் சட்டமும் ஒருகையால் கொடுத்த அதிகாரங்களை மறுகையால் திரும்ப எடுப்பது போல் அமைந்திருந்தன. அதாவது ஆளுநரின் குறுக்கீட்டுக்கு ஆன வழிதேடி ஆவணம் அமைத்து, தந்ததைப் பறிக்க அரசியல் சதி செய்யப்பட்டது.

முழுநாட்டுக்கும் ஏற்புடைத்தான இச்சட்டம் தெற்கில் உள்ளவர்களுக்குப் பெரிய பிரச்சனையாக அமையவில்லை. காரணம் அவர்கள் யாவரும் ஒரே இனத்தவர்கள். பெரும்பாலும் ஒரே கட்சியினர், ஒரே மொழியினர். எம்மையோ இச்சட்டம் பலவிதங்களில் பாதித்தது. இது பற்றி ஏற்கனவே எமது தமிழ்த் தலைவர்கள் தெரிந்து கொண்டு 13வது திருத்தச் சட்டம் ஜனனமான காலத்திலேயே நடக்கப் போவதைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்தியம்பியிருந்தனர்.

பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு எமது தமிழ்த் தலைவர்கள் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ந் திகதி எழுதி அனுப்பிய கடிதத்தில் இத்தீர்க்க தரிசன கருத்துக்கள் இடம்பெற்றன. வடக்கையும் கிழக்கையும் பிரிப்பார்கள் தென்னவர்கள் என்றார்கள். அது நடந்தது. மாகாண அதிகாரங்களை வலுவற்றதாக்க வழி ஏற்படுத்தப்படும் என்றார்கள். அது நடந்தது. சடங்கு ரீதியான பதவியில் இருத்தப்படும் ஆளுநர் அச்சட்டத்தை வைத்தே சபைகளின் அதிகாரங்களைத் தனதாக்கிக்குறுக்கிட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றார்கள். அதுவும் நடக்கின்றது.

எதுவுமே இல்லை இந்த 13வது திருத்தச் சட்டத்தில் என்றார்கள். அதைத்தான் நாங்கள் தேர்தல் காலத்திலும் கூறினோம். இப்பொழுதும் கூறி வருகின்றோம்.ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியாது என்பது தான் நாம் முக்கியமாகக் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியதொன்றாகும். ஒற்றையாட்சியின் ஒரேயொரு அதிகார மையம் இதுதான் என்று எமது அரசியல் யாப்பு மத்தியையே சுட்டிக் காட்டுகின்றது. மத்தி மனமுவந்து அதிகாரங்களைப் பகிர முன் வந்தால்த் தான் மாகாணங்கள் தம் மக்கள் நலனுக்காகப் பாடுபடலாம்.

வடமாகாண இனப்பரம்பலையே மாற்றியமைத்துப் பெரும்பான்மையினரை உள்நுழைத்து, கிழக்கு மாகாணம் போல் பெரும்பான்மையினரை வடக்கிலும் பெருவாரியாகக் குடியிருத்த இராணுவ மூலமாக நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசாங்கம் மனமுவந்து எமக்கு அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.அது தான் தற்போதைய நிலை. எல்லா விதத்திலும் எம்மை இயங்கவிடாது தடுப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்கின்றது.

அதிகாரம் இல்லாத வடமாகாண சபைக்கு ஏன் நீங்கள் தெரிவானீர்கள் என்று கேட்பீர்கள். நியாயமான கேள்வி அது. முன்னர் இதேபோல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நாங்கள் பகிஷ்கரித்ததால் அரசாங்கத்தின் கையோங்கி தமிழ் பேசும் பிரதேசமான கிழக்கு மாகாணம் பாரிய சிங்கள ஊடுறுவல்களுடன் தற்பொழுது காட்சி அளிக்கின்றது. நாம் சுதந்திரம் பெற முன் 5 சதவிகிதத்திற்குங் குறைய இருந்த கிழக்கு மாகாண சிங்களமக்களின் விகிதாசாரம் தற்பொழுது 30 சதவிகிதத்தைத் தாண்டி விட்டது. கிட்டத்தட்ட 35 சதவிகிதமாக இருக்கின்றது.

முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் சேர்ந்து இருப்பதால் கிழக்குமாகாண முதலமைச்சர் முஸ்லிமாகவும், அவைத் தலைவர் சிங்களவராகவும் எதிர்க்கட்சித் தலைவர் தமிழராகவும் இருக்கின்றார்கள். இதே நிலை வடமாகாணத்தைப் பாதிக்கக் கூடாது என்பதாலேயே வலுவற்ற, வெறிதான 13வது திருத்தச் சட்டத்தின் கீழும் நாம் தேர்தலில் முன்னிற்க முடிவெடுத்தோம்.பலவிதங்களில் அது நன்மை பயந்துள்ளது. வெளிநாட்டுப் பணத்தில் பாரிய தெருக்களைப் போட்டு, இந்திய அரசாங்கத்தின் பணத்தில் புகையிரத வழிபாதைகள் அமைத்து, சர்வதேச நிறுவன உதவியுடன் கட்டிடங்கள் கட்டி வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்தி விட்டோம் என்ற அரசாங்கத்திற்கு எம் மக்கள் தக்க பாடம் புகட்டினார்கள் தேர்தலின் போது.

38 ஆசனங்களில் எமது கட்சி 30ஐக் கைப்பற்றியது. எனவே மக்களின் மனோநிலை இத்தேர்தல் ஊடாக உலகத்திற்குத் தெரியவந்துள்ளது. தாம் நினைத்தவாறு ஆடி வந்த பாரிய இராணுவத்தின் பிரசன்னம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப்படுகின்றது. அப்படியிருந்தும் சிங்கள மக்களைத் தெற்கில் இருந்து கொண்டு வந்து வடமாகாணத்தில் குடியேற்ற அரசாங்கம் சகல நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. இராணுவத்தினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றது.தமிழ்ப் பேசும் மக்களின் அரசாங்க அதிபர்களாக சிங்களவர்களை நியமித்துள்ளார்கள். எனினும் எமது சொற்ப அதிகாரங்களைப் பாவித்து பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் சிங்களமயமாக்கல் பயணத்திற்கு முட்டுக்கட்டைகளை இட்டே வருகின்றோம்.

ஆனால் எமது பிரதம செயலாளர் அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயல்ப்பட்டு ஆளுநரின் கட்டுப்பாட்டின் கீழ் கருமங்கள் ஆற்றுவதால் எமக்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும் நாம் பறிகொடுத்த நிலையில்தான் வாழ்கின்றோம்.எமது வடமாகாண சபையின் நாளாந்த நடவடிக்கைகளில் நாம் எதிர்நோக்கும் சில விடயங்களை அடுத்துப் பட்டியல் இட்டுக் காட்டுகின்றேன்.

அவையாவன:-

1. பிரதம செயலாளர் முதலமைச்சரின் கட்டளைகளை ஏற்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் மாகாண நிதிச்செயற்பாடுகளை நிர்வகிக்கும் அதிகாரம் முதலமைச்சரிடமிருந்து விலக்கப்பட்டுள்ளது.

2. மாகாண அமைச்சரவையின் எல்லாத் தீர்மானங்களும் பிரதம செயலாளர் மற்றும் ஆளுநரின் அனுமதியுடனேயே செயற்படுத்த முடியும் என்பதோடு இவர்கள் இருவரும் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இருப்பதால் மத்தியின் அரசியல் விருப்புக்கு மாறான விடயங்கள் அமுல்ப்படுத்தப்பட முடியாமல் இருக்கின்றது.

3. மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் மாகாண நிர்வாகத்துடன் எந்த வகையிலும் இணைந்து செயற்படாமல் மத்தியின் நிர்வாகத்தையும் மாகாண நிரல் கடமைகளையும் நிறைவேற்றி வருகின்றனர். முக்கியமாகக் காணி சம்பந்தமான கடமைகள் இவற்றுள் அடங்குவன.

4. ஆளனி விடயங்களில் ஆளுநருக்கு வழக்கப்பட்டுள்ள நியமனம், பதவி உயர்வு, ஒழுக்காற்று அதிகாரத்தின் மூலம் ஆளனியினரை மாகாண அரசு தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

5. நாம் செய்ய எத்தனிக்கும் விடயங்கள் மத்திய அரசில் உள்ள அரசியல் கட்சிகளின் விருப்புக்கு மாறான விடயங்களாக இருந்தால் மாகாண அரச அலுவலர்களைக் கொண்டு நாங்கள் அவற்றைச் செயற்படுத்தப் புகும்போது பிரதம செயலாளர் மற்றும் ஆளுனரின் அச்சுறுத்தல் மூலம் அவை தடை செய்யப்படுகின்றன.

6. மத்தியின் ஆளுங்கட்சி மற்றும் அதன் பிரதேச தலைவர்களின் முகவராக ஆளுநர் செயற்படுவதால் அவருக்கு அஞ்சி மாகாண அரசின் கடமைகளை எமது அலுவலர்கள் நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கின்றனர்.

7. அத்துடன் மாகாண அலுவலர்கள் நேரடியாக ஆளுநரின் பணிப்புரைகளைச் செயற்படுத்த வேண்டியுள்ள ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

8. மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு ஆளுநரின் அறிவுறுத்தலுக்கேற்ப மத்திய அரசின் விருப்பு வெறுப்புக்களுக்கமையவே செயற்படுகின்றது. மாகாண அரசுக்கு வேண்டிய நியமனங்களை மேற்கொண்டு நடத்தல், மத்திய அமைச்சுக்களின் கட்டளைகளை சிரமேற்கொள்ளல் போன்றவை எமக்கு பலத்த பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

9. நியதிச்சட்டங்களை அனுமதிப்பதில் ஏனையமாகாணங்களில் இல்லாத கட்டுப்பாடுகளை ஆளுநர் எம் மாகாணத்தில் பிரயோகித்து வருகிறார். உதாரணத்திற்கு அண்மையில் வடமாகாண முதலமைச்சர் தமக்கென உத்தியோகபூர்வமான நிதியம் ஒன்றைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபைக்கென ஒரு நிதியம் இருக்கின்றது.அது பிரதம செயலாளர் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. அதை விட்டு முதலமைச்சர் நிதியம் ஒன்றை அமைக்க நாங்கள் முற்பட்ட போது அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏனைய மாகாணங்கள் நான்கில் அப்பேர்ப்பட்ட நிதியங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி ஜனாதிபதியிடம் இந்திய உயர் ஸ்தானிகரால் அண்மையில் வினவப்பட்டது. அதற்கு அவர் அளித்த மறுமொழி நாங்கள் பதவிக்கு வரமுன்னர் திறக்கப்பட்டவையே அந்த நிதியங்கள். நாங்கள் வந்த பின் அப்பேர்ப்பட்ட நிதியங்களைத் திறக்க நாங்கள் இடமளிக்கவில்லை. திறக்க விடவும் மாட்டோம் என்றாராம்.

இதிலிருந்து இன்றைய மத்திய அரசாங்கத்தின் மனோநிலையை நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள். அதே மனோநிலையால்த் தான் “புலி வரப்போகிறது”, “புலி வரப்போகிறது” என்று கூறி சுமார் 1 ½ இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள்.கிராம மக்களின் அன்றாட வாழ்க்கையில் எல்லா விதத்திலும் அவர்கள் உள்ளிடுகின்றார்கள். பெண்களின் கதி பெருத்த சங்கடமாக உள்ளது. எமது காணிகளை இராணுவத்தினர் கையேற்று அவற்றைப் பயிரிட்டு அறுவடை செய்து எமக்கே விற்கும் ஒரு நிலை தான் தற்போது நடைபெறுகின்றது.

 

cm-speech-chennai-091114-seithy%20(1).jp

 

 

cm-speech-chennai-091114-seithy%20(2).jp

 

தெற்கில் இருந்து சிங்கள மீனவர்கள் வந்து படையினரின் உதவியுடன் தடுக்கப்பட்ட மீன்பிடி முறைகளில் ஈடுபடுகின்றார்கள். எம்மவர் அவற்றில் ஈடுபட்டால் பிடித்தடைக்கின்றார்கள். மற்ற காணிகளை விட ஒரேயொரு இடத்தில் மாத்திரம், அதாவது வலிகாமம் பிரதேசத்தில் இராணுவம் 6000க்கு மேற்பட்ட காணிகளைச் சுவீகரித்து தாம் நினைத்தவாறு பலாத்காரமாக அங்கு இருந்த குடியிருப்புக்களை, கல்லூரிகளை, கோயில்களை அழித்து பாரிய வாஸஸ்தலங்களையும், கொல்வ் விளையாட்டுத் திடல்களையும், நீச்சல் தடாகங்களையும் கட்டி வருகின்றனர்.

அங்கிருந்த மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, வாழ வழியின்றி எமது அனுதாபங்களில் காலத்தைக் கடத்தி வருகின்றார்கள் தற்காலிகத் தங்குமிடங்களில். இது அவர்களின் பாதிப்புக்கு மேலதிகமாக சமூக, கலாசாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தி வருகின்றது.இவ்வாறு எமது நிலையை அடுக்கிக்கொண்டே போகலாம். எமது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பலவிதமான கட்டுப்பாடுகளை நாம் உபயோகித்தே பேசவேண்டியுள்ளது. உண்மைகளை உள்ளூரில் கூறினால் “உனக்கும் புலிகளுக்குந் தொடர்புண்டு” என்று கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

சட்டப்படி பாரிய குற்றங்களை இழைத்த முன்னைய இயக்கத் தலைவர்கள் பலர் அரசாங்க விருந்தாளிகளாக இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். சிறிய குற்றங்களில் ஈடுபட்ட இளவயது எம்மக்கள் பலர் எத்தனையோ வருடங்கள் சிறைகளில் வாடி வாழ்கின்றார்கள். மிகவும் மனவேதனையுடன் காலத்தைப் போக்கி வருகின்றனர். அவர்களை வெளியில் எடுக்க நாம் எடுத்த பிரயத்தனங்கள் யாவும் பலன் அற்றுப் போயுள்ளன.வரப்போகும் தேர்தலில் எம்மிடம் யார் தானும் வாக்களிக்குமாறு உதவி கேட்கும் நிலை ஏற்பட்டால் பல கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைச் செய்யுமாறு கேட்கவிருக்கின்றோம். எமது சிறையில் வாடும் இளைஞர் யுவதிகளை அப்பொழுதேனும் நாங்கள் விடுவிக்கலாமா என்று பார்ப்போம்.

மேலும் சில விடயங்களை இத்தருணத்தில் உங்கள் முன்னிலையில் கூறிவைப்பது உசிதம் என்று கருதுகின்றேன். 30,40 வருடங்களுக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் பெற்று போரின் போது அப்பத்திரங்களைத் தொலைத்து காணிகளில் இருந்து வெளியேறி இப்பொழுது தமது காணிகளுக்கு சென்றவர்கள் அங்கு வேறு நபர்கள் இருப்பதைக் காண்கின்றார்கள். கேட்டால் உங்களிடம் பத்திரங்கள் இல்லை. இவை அரச காணிகள். நாங்கள் திரும்பவும் அவற்றைக் கையேற்று வேறு நபர்களுக்குக் கொடுத்து விட்டோம் என்கிறார்கள்.

அநேகமாக இங்கு வந்து அகதிகளாக இருப்போர் எம் நாடு திரும்பினால் அவர்கள் கதியும் இவ்வாறே அமையப்போகின்றது. எனவே அவர்களைத் திருப்பி அழைத்து புதிய இடங்களில் குடியிருத்த இந்திய அரசாங்கம் எமக்கு உதவ வேண்டும். மேலும் போரினால் பாதிக்கப்பட்ட வலுவற்றவர்கள், மாற்று வலுவுடையவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் என்று 18000ற்கும் மேலானவர்கள் இருக்கின்றார்கள். ஒரு இலட்சத்திற்குக் கிட்டிய தொகையினரான இளம் விதவைகள் இருக்கின்றார்கள்.தாய் தந்தையரை இழந்த அநாதைக் குழந்தைகள் இருக்கின்றார்கள். வேலையற்ற இளைஞர் யுவதிகள் பலர் சில தொழில்களுக்குத் தகைமை இருந்தும், தரம் இருந்தும் தவித்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இன்னுமொரு பிரச்சனை உண்டு. தொழிற்திறம் எம்மக்களிடையே குன்றியுள்ளதால் தெற்கில் இருந்து கொத்தன்மார் போன்றவர்களை வரவழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மக்களின் மனோநிலை போரினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைப் போக்க வேண்டிய வைத்திய வசதிகள் ஆலோசனை கூறும் வசதிகள் எம்மிடம் இல்லை. குழந்தைகளின் போஷாக்கின்மை மற்றொரு விடயம். இவற்றுடன் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழான வீடுகள் தேவையானவர்களுக்குக் கிடைக்காதுஅரசியல் சகாயம் பெற்றவர்களுக்குக் கிடைத்து வருகின்றது. தேர்ந்தெடுக்கும் முறை, தேர்ந்தெடுப்போர், வீட்டைக் கட்ட உதவும் பணம் யாவையும் நாம் வர முன் தீர்மானிக்கப்பட்டவை.

இத்திட்டமானது மக்களுக்கு நன்மை பயக்க இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. ஆனால் ஊழல்கள் மலிந்து காணப்படுகிறது. இவற்றை நாம் எமது இந்தியத் தூதரகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளோம். இவை பற்றிப் பேசுவதற்காக நான் வரவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் தமிழில் பேசவேண்டும் என்றார்கள். மனதில் உள்ளதை உங்கள் முன் கொட்டித் தீர்க்கின்றேன்.

இதுவரை காலமும் இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டின் அரசாங்கங்களும் தமிழ்மக்களின் தலைவர்களும் எமக்கு அளித்து வந்திருக்கும் உதவிகள் எமது மனமார்ந்த ஆழ்ந்த நன்றிக்கு உரித்துடையன. ஒரு இலட்சத்திற்கும் மேலான மக்களை பார்த்து பராமரித்து வந்ததை பாராட்டுக்குரியது. எமது மனபூர்வமான நன்றியறிதல்களை இது சார்பாக தெரிவிக்க விரும்புகின்றேன். ஆனால் நாங்கள் இங்கு பேசும் பேச்சுக்கள், உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் இறுக்கும் பதில்கள் எம்மை மட்டும் அல்ல எமது வடமாகாண சபையையும் பாதிக்கக் கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது.

அதாவது உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது எமது மத்திய அரசாங்கம். ஓன்றரை இலட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்தியம்பும் போது மிக்க கவனம் அவசியம். நிதானம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழலுக்கு ஏற்பச் சூள் உரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்.

இறுதியாக நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். உங்கள் உணர்ச்சிகளை நாம் புரியாதவர்கள் அல்ல. நான் அவ்வாறு புரியாத ஒருவன் என்ற மாயையைப் பத்திரிகைகள் சில ஏற்படுத்தியுள்ளதை நான் அறிவேன். ஆனால் எமக்குத் தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள் கூட அல்ல.அதற்காக நான் உதவி வேண்டாம் என்று கூறியதாக நினைக்க வேண்டாம். உரிய சட்ட மாற்றமே முக்கியம். தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் 13வது திருத்தச் சட்டமானது மேலும் திருத்தியமைக்கப்பட்டாலும் அது எமக்கு நன்மைபயக்காது. யாப்பின் அடிப்படை ஒற்றையாட்சியில் இருந்து மாற்றப்பட வேண்டும்.

எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோர, கொண்டுவர இந்திய அரசாங்கத்திற்குத் தார்மீக உரித்து உள்ளது என்பதைக் கூறி வைக்கின்றேன். எம் சார்பிலுந் தான் நீங்கள் 1987ம் ஆண்டின் உடன்பாட்டில் கையெழுத்திட்டீர்கள் என்பதை மறவாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவாறு எமது நிலைமை அமையவில்லையானால் எம் சார்பில் குரல் எழுப்ப உங்கள் நாட்டிற்கு உரிமையுண்டு.

எமக்குப் போதிய உரித்தளிக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுமாறு நீங்கள் வலியுறுத்த வேண்டும். வடகிழக்கு மாகாண மக்களிடையே கருத்துக்கணிப்பு நடைபெற வேண்டும் என்பது அந்த உடன்பாட்டின் உள்ளடக்கம்.அதை உங்கள் அரசாங்கம் நடத்துமாறு கேட்கலாம். எமது நாளாந்த வாழ்க்கையை மற்றவர்களின் உள்ளீடல்கள் இன்றி நாம் வாழ இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கலாம்.

http://seithy.com/breifNews.php?newsID=120397&category=TamilNews&language=tamil

  • Replies 57
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் உள்ள சிலருக்கு இது சொன்னாலும் விளங்கப் போவதில்லை...

படிக்காத பிரபாகரனும் இதை தான் சொன்னார் பயங்கரவாதி என்றோம், படித்த C.V சிங்களவன் தமிழனுக்கு எதிரி என்கிறார், அப்ப இனிமேல் இவரை படித்த முட்டாள் என்று பட்டம் கட்ட போகீனம், அல்லது சம்பந்தன் வந்து அது தனிப்பட்ட கருத்த கூட்டனியின் இல்லை என்று அறிக்கை விடுவார்

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலமூலத்தில் இந்தப்பேச்சை கேட்டேன். அருமையான பேச்சு. தமிழர் உரிமை என்பது ஆரவார உணர்ச்சி கோசமில்லை. நியாயமான மனித உரிமை அதை சுயநிர்ணய அடிப்படையில் சமஸ்டிய அலகாக்கும் ஒரு சட்டமாற்றத்தை இந்தியா வரவழைக்க வேண்டும் என்கிறார் சீவீ.

பிரபாகரன் கேட்டதற்கும் இவர் கேட்பதற்க்கும் 1000 வித்தியாசங்கள்.

ஓஸ்லோ உடன்படிக்கையில் பாலசிங்கமும் இதை ஏற்போம் என்றே சொன்னார். ரணிலை வெல்ல விட்டிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் ரணில் வென்றால் தமது regime security பாதிக்கப்படும் என்று பயந்த புலிகள், சமஸ்டி அரசமைந்தால் தங்கள் தனிநாட்டு கோரிக்கை காலத்துக்கும் படுத்துவிடும் என்று பயந்த புலிகள் ரணிலை தோற்க்கடித்தனர்.

அதன் பலனை இன்று எல்லோரும் அனுபவிக்கிறோம்.

தேர்தல் சமயத்தில் சீவியை ஆதரித்து நான் எழுதிய போது என்னை எலும்பு நக்கி என்றும் சீவீயை கொழும்பான், இதுவரைக்கும் அரசுக்கு சேவகம்செய்த எடுபிடி எண்டும் திட்டித்தீர்த ஆட்கள் எல்லாம், இப்போ சீவியின் விசிறிகள்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எமது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பலவிதமான கட்டுப்பாடுகளை நாம் உபயோகித்தே பேசவேண்டியுள்ளது. உண்மைகளை உள்ளூரில் கூறினால் “உனக்கும் புலிகளுக்குந் தொடர்புண்டு” என்று கூறி விசாரணைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

சட்டப்படி பாரிய குற்றங்களை இழைத்த முன்னைய இயக்கத் தலைவர்கள் பலர் அரசாங்க விருந்தாளி ஆனால் நாங்கள் இங்கு பேசும் பேச்சுக்கள், உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் இறுக்கும் பதில்கள் எம்மை மட்டும் அல்ல எமது வடமாகாண சபையையும் பாதிக்கக் கூடும் என்பதை இங்கிருக்கும் நீங்கள் மறக்கக் கூடாது.

அதாவது உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி எமது வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது எமது மத்திய அரசாங்கம். ஓன்றரை இலட்சம் படை வீரர்கள் முகாம் இட்டிருக்கும் இடத்தில் அவர்களை பாதிக்கும் கருத்துக்களை நாம் எடுத்தியம்பும் போது மிக்க கவனம் அவசியம். நிதானம் அவசியம். அந்த நிதானத்தை வைத்து நாம் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைப் பரப்பி வராதீர்கள். சூழலுக்கு ஏற்பச் சூள் உரைப்பதே இன்றைய சூழலில் சூரத்தனம். இல்லை என்றால் சுத்த முட்டாள் என்று பட்டம் கட்டி விடுவார்கள்.

இறுதியாக நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். உங்கள் உணர்ச்சிகளை நாம் புரியாதவர்கள் அல்ல. நான் அவ்வாறு புரியாத ஒருவன் என்ற மாயையைப் பத்திரிகைகள் சில ஏற்படுத்தியுள்ளதை நான் அறிவேன். ஆனால் எமக்குத் தற்போது வேண்டியது உணர்ச்சிகள் அல்ல. உதவிகள் கூட அல்ல.அதற்காக நான் உதவி வேண்டாம் என்று கூறியதாக நினைக்க வேண்டாம். உரிய சட்ட மாற்றமே முக்கியம். தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் 13வது திருத்தச் சட்டமானது மேலும் திருத்தியமைக்கப்பட்டாலும் அது எமக்கு நன்மைபயக்காது. யாப்பின் அடிப்படை ஒற்றையாட்சியில் இருந்து மாற்றப்பட வேண்டும்.

எமது தனித்துவத்தை, சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கியதாக அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதனைக் கோர, கொண்டுவர இந்திய அரசாங்கத்திற்குத் தார்மீக உரித்து உள்ளது என்பதைக் கூறி வைக்கின்றேன். எம் சார்பிலுந் தான் நீங்கள் 1987ம் ஆண்டின் உடன்பாட்டில் கையெழுத்திட்டீர்கள் என்பதை மறவாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்தவாறு எமது நிலைமை அமையவில்லையானால் எம் சார்பில் குரல் எழுப்ப உங்கள் நாட்டிற்கு உரிமையுண்டு.

எமக்குப் போதிய உரித்தளிக்க எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுமாறு நீங்கள் வலியுறுத்த வேண்டும். வடகிழக்கு மாகாண மக்களிடையே கருத்துக்கணிப்பு நடைபெற வேண்டும் என்பது அந்த உடன்பாட்டின் உள்ளடக்கம்.அதை உங்கள் அரசாங்கம் நடத்துமாறு கேட்கலாம். எமது நாளாந்த வாழ்க்கையை மற்றவர்களின் உள்ளீடல்கள் இன்றி நாம் வாழ இந்திய அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கலாம்.

http://seithy.com/breifNews.php?newsID=120397&category=TamilNews&language=tamil

தற்போதைய சூழ்நிழையில் அங்கிருப்பவர்களால்/அங்கிருப்பவர்கள் சார்பாக பேசக்கூடிய யதார்த்தமான பேச்சு.,

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் இருநதால் கிழித்திருக்கலாம் என்று கதைவிடுபவர்களுக்கு... எதுவுமே முடிந்த பின்னர் அப்படிக் கிழிக்கலாம், இப்படிக் கிழிக்கலாம் என்று கதை விடலாம். ஆனால் ரணில் ஒப்பந்தத்தில் சொன்ன விடயத்தில் ஒன்றையுமே அவரால் செய்யமுடியவில்லை.இடைக்கால நிர்வாகசபை, அதன் பிறகு சிரான் என்று கிராமிய சட்டம் வரை எதுவுமே அவரால் 5 வருடங்களில் செய்ய முடியவே இல்லை. ஆனால் கருணா பிளவு மட்டும் செய்யமுடிந்தது. மகிந்த ஆட்சிக்கு வந்தபோதும், கோத்தபாயா, சரத் பொன்சேகா என்ற இரண்டு பேரை அழிக்க முயன்ற முயற்சிகள் தோற்றுப் போன பிற்பாடு தான் எங்களுடைய பக்கம் அழிவுக்கு உள்ளகின. சும்மா சொல்லாவிடினும், இன்று கோத்தபாயா இல்லாவிடின் மகிந்தவால் இந்தப் போர் வெற்றியைப் பெற்றிருக்க முடியுமா என்றால் இல்லை. கடைசி யுத்தம் வரை அவன் அலரிமாளிகையிலேயே அடைபட்டிருந்தான். கொப்பைக்கடுவா மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றி யாழ்ப்பாண ஆக்கிரமிப்பைத் தடுத்தது. கோத்தபாயா மீதான தாக்குதல் தோல்வி எங்களின் போராட்டத்தை மௌனிக்கச் செய்தது. இரண்டாவது புலிகள் சிலவிடையங்களைப் பகிரங்கமாச் செய்தனர். யாழ்ப்பாணம், வன்னி என்று எல்லா மக்களுக்கும் தற்பாதுகாப்புப் பயிற்சி கொடுத்தனர். யாழ்ப்பாண முற்றுகை செய்யும்போது அவர்களின் பலம் உதவும் என நம்பினர். ஆனால் மாவீலாறு தாக்குதல் தொடங்கும்போது, யாழ்ப்பாண வீதியைச் சிங்கள அரசு மூடியதோடு யாழ்ப்பாணத்தில் மூழுநேர ஊரடங்கினைப் பிறப்பித்தது சிங்கள அரசு. 2007ம் ஆண்டு பெப்பரவரி மாதம் பேச்சுவார்த்தையினைத் திரும்பவும் நடத்தும்போது புலிகள் கேட்ட ஒரே ஒரு கோரிக்கை. யாழ்ப்பாணவீதியைத் திறக்கும்படியாகும். ஆனால் அது மறுக்கப்பட்டது.

அதே காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த சிலர் வீதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அது மக்களைப் பயமுறுத்தவது மட்மல்லாமல், அது சில பொறுப்புக்களைச் செய்ய வந்தவர்களாக இருக்க்ககூடும். இதனால் கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தில் தற்பாதுகாப்புப் பயிற்சி பெற்ற கிட்டத்தட்ட 30- 50 ஆயிரம் பேரளவிலான பலம் அப்படியே முடக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் தான் வன்னி மக்களை கட்டாய ஆட்சேர்ப்புக்கு உள்ளாக வேண்டிய தேவை வந்திருக்க வேண்டும்.... இதை விடலாம். கடந்து போன விடயங்கள். இதைப் புத்திசாலித்தனம், முட்டாள்தனம் என்ற கோமாளித்தனமான புத்திசாலிகள் இங்கே எழுதிக் கொண்டிருப்பார்கள். காய் நகர்த்தல் என்பது தான் போராட்டம் எனும்போது, அதை நாம் சறுக்கும் நந்தர்ப்பங்களில் தோற்றுவிடுகின்றோம்.

2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவீலாறு தொடங்கும்போது நாம் முழுமையான பலத்தோடு தாம் தமிழர் தரப்பு இருந்தது. அந்த சமயத்தில் ரணிலுக்கு ஆதரவு கொடுக்காமல் மகிந்தவைக் கொண்டு வந்தது 100க்கு 200 வீதம் சரியாகத் தான் இருந்தது. ஆனால் எதிர்பார்க்காத சில விடயங்கள் முழுவதையும் முடிச்சுப் போட வைத்தன. கிழக்கில் தாக்குதல் நடக்கும்போது வடக்கில் சிங்கள அரசு தடையைப் போடும் என எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். திருகொணமலைத் துறைமுகம் வரை சென்று விட்டு எல்லாவற்றையும் கைவிட்டுப் போக வேண்டிய தேவை அன்றைக்குப் புலிகளுக்கு இருக்கவில்லை. இருந்தது என்றால் எதிரியின் எதிர்பார்க்காத காய்நகர்த்தல்.... (இது தான் நடந்திருக்கும் என்பது என் ஊகமே ஆகும்)

இதில் ரணில் கொண்டு வந்திருக்கலாம் என்பது ஆதாரமற்ற, காலம் கடந்த வாதமே ஆகும்...இப்போது இதைச் சொல்பவர்கள் நாளைக்கு காலம் கடந்த பிற்பாடு இன்றைய விடயங்களைப் பற்றி அறிவுபூர்வமாக(???) நாளைக்கும் கதைத்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓஸ்லோ உடன்படிக்கையில் பாலசிங்கமும் இதை ஏற்போம் என்றே சொன்னார். ரணிலை வெல்ல விட்டிருந்தால் இது சாத்தியப்பட்டிருக்கும். ஆனால் ரணில் வென்றால் தமது regime security பாதிக்கப்படும் என்று பயந்த புலிகள், சமஸ்டி அரசமைந்தால் தங்கள் தனிநாட்டு கோரிக்கை காலத்துக்கும் படுத்துவிடும் என்று பயந்த புலிகள் ரணிலை தோற்க்கடித்தனர்.

இது தவறான சிந்தனை.. :D ரணில் வரக்கூடாது என்று நினைத்தது சரிதான். ஆனால் மகிந்தவை வரவைத்து அடி குடுப்போம்.. நாடு பிடிப்போம் என்பது காரணமல்ல.. இன்று நடப்பதை கூர்ந்து கவனித்தால் அன்று ஏன் ரணில் விரும்பப்படவில்லை என்பது தெளிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் குள்ள நரிதான் ஒத்துக்கிறேன். ஆனால் எமது பலத்தை தக்க வைத்த படி அவருடன் டீல் பண்ண ஒரு அவகாசம் இருந்தது.

யாராலும் எதிர் காலத்தை சாத்திரம் பார்க்க முடியாது. ஆனால் ரணிலை தோற்க்கடிப்பது உலக நாடுகளை சினம் கொள்ளச்செய்யும் எனும் எதிர்வு கூறல் ஓரளவுக்கு விடயம் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். தலைமையில் இருப்பவர்கள் தனியே காய் நகர்துவது மட்டுமில்லை, எதிர் கால விளைவுகளையும் கணித்தே காய் நகர்த்துவர். நடத்தி இருக்க வேண்டும்.

மகிந்த வோ, கோத்த வோ புலிகளின் அழிவுக்குக் காரணமில்லை. அவர்கள் கருவிகள். காரணம் - மேற்குலகின் "புலிகள் எவ்விலை கொடுத்தாவது" அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் முடிவு.

அதாவது புலிகளை பிரச்சினையின் தீர்வின் ஒரு அங்கம் (part of the solution) எனும் நிலை மாறி பிரச்சினையின் அங்கம் (part of the problem) என்று மேற்க்கு நாடுகளை நினக்க வைத்தமை.

புலிகளின் சமாதான கால அரசியல் படுகொலைகள் மூலம் ஏலவே இப்படி சிந்திக்க தொடங்கிய மேற்குலகை ரணிலை தோற்கடித்த முடிவு இறுதி முடிவெடுக்க வைத்தது.

தேர்தல் புறக்கணிப்பை செய்யவேண்டாம் என்றும் you are on the last chance saloon என்றும் பாலசிங்கத்தாருக்கு சொல்லப்பட்டிருக்கு ஆனால் வன்னி தமது ஆயுத பலத்தின் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும், இது ஈற்றில் சமஸ்டியில் முடிந்து, தனிநாடு காலத்துக்கும் படுத்துவிடும் என்ற பயத்தாலும் மகிந்தவை வர வைத்தனர்.

மேற்குலகு தான் சொன்ன படி

1) இலங்கையரசின் மக்கள் மீதான தாக்குதலை கண்டுக்காமல் விட்டது

2) ஆயுத வழங்கலை முடக்கியது

3) தேவைப்பட்ட தொழில் நுட்ப உதவிகளை வழங்கியது

4) இலங்கைக்கான ஆயுத வழங்கலை உறுதி செய்தது

5) இந்தியா மூலம் களத்தில் உதவியும் செய்தது

முடிவு - எல்லோருக்கும் தெரிந்ததே.

புலிகளின் அழிவின் முடிவில் சில விடயங்களை தமிழர்க்கு கொடுப்பதாக மேற்க்குக்கும் இந்தியாவுக்கும் இலங்கை உறுதி கொடுத்திருந்தது. அதில் இலங்கை தவறியதால் வரும் விளைவுகளே - போர்குற்ற விசாரணை போன்றவை.

யுத்த முடிவில் மகிந்த சொன்ன படி நடந்திருந்தால் இப்போ அவர்தான் மேற்க்கின் செல்லப்பிள்ளை. நோபல் பரிசு கூட கொடுத்திருப்பர்.

2005 இல் மேற்குலகை under estimate பண்ணி பிரபா விட்ட அதே தவறை இப்போ மகிந்தவும் விடுறார். அவரின் நிலை வர முன்சுதாகரித்து course correction செய்வாரா? இல்லை அவரைப்போலவே காணாமல் போவாரா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

நீங்கள் சொன்ன விடயங்கள் உண்மைதான் ஆனால் அவை சின்னப் பிரச்சினைகள். Minor points of military tactics. புலிகள் தோல்விக்கு இவை பிரதான காரணமில்லை.

1) கொத்துக் குண்டுகள், எரிஆயுதங்கள் பாவித்து தாக்க அனுமதித்தது (கண்டுக்காமல் விட்டது)

2) ஆயுத விநியோகத்தை தடுத்தது

இவைதான் புலிகள் வீழ முக்கிய காரணிகள்.

இந்தப்போரில் மேற்குலகும் இந்தியாவும்தான் -கண்ணன்

கோத்த, மகிந்த, பொன்ஸ் எல்லோரும் வெறும் அர்ஜுனர்கள்.

ரணில் குள்ள நரிதான் ஒத்துக்கிறேன். ஆனால் எமது பலத்தை தக்க வைத்த படி அவருடன் டீல் பண்ண ஒரு அவகாசம் இருந்தது.

யாராலும் எதிர் காலத்தை சாத்திரம் பார்க்க முடியாது. ஆனால் ரணிலை தோற்க்கடிப்பது உலக நாடுகளை சினம் கொள்ளச்செய்யும் எனும் எதிர்வு கூறல் ஓரளவுக்கு விடயம் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும். தலைமையில் இருப்பவர்கள் தனியே காய் நகர்துவது மட்டுமில்லை, எதிர் கால விளைவுகளையும் கணித்தே காய் நகர்த்துவர். நடத்தி இருக்க வேண்டும்.

மகிந்த வோ, கோத்த வோ புலிகளின் அழிவுக்குக் காரணமில்லை. அவர்கள் கருவிகள். காரணம் - மேற்குலகின் "புலிகள் எவ்விலை கொடுத்தாவது" அழிக்கப்பட வேண்டியவர்கள் எனும் முடிவு.

அதாவது புலிகளை பிரச்சினையின் தீர்வின் ஒரு அங்கம் (part of the solution) எனும் நிலை மாறி பிரச்சினையின் அங்கம் (part of the problem) என்று மேற்க்கு நாடுகளை நினக்க வைத்தமை.

புலிகளின் சமாதான கால அரசியல் படுகொலைகள் மூலம் ஏலவே இப்படி சிந்திக்க தொடங்கிய மேற்குலகை ரணிலை தோற்கடித்த முடிவு இறுதி முடிவெடுக்க வைத்தது.

தேர்தல் புறக்கணிப்பை செய்யவேண்டாம் என்றும் you are on the last chance saloon என்றும் பாலசிங்கத்தாருக்கு சொல்லப்பட்டிருக்கு ஆனால் வன்னி தமது ஆயுத பலத்தின் மீது கொண்ட அதீத நம்பிக்கையாலும், இது ஈற்றில் சமஸ்டியில் முடிந்து, தனிநாடு காலத்துக்கும் படுத்துவிடும் என்ற பயத்தாலும் மகிந்தவை வர வைத்தனர்.

மேற்குலகு தான் சொன்ன படி

1) இலங்கையரசின் மக்கள் மீதான தாக்குதலை கண்டுக்காமல் விட்டது

2) ஆயுத வழங்கலை முடக்கியது

3) தேவைப்பட்ட தொழில் நுட்ப உதவிகளை வழங்கியது

4) இலங்கைக்கான ஆயுத வழங்கலை உறுதி செய்தது

5) இந்தியா மூலம் களத்தில் உதவியும் செய்தது

முடிவு - எல்லோருக்கும் தெரிந்ததே.

புலிகளின் அழிவின் முடிவில் சில விடயங்களை தமிழர்க்கு கொடுப்பதாக மேற்க்குக்கும் இந்தியாவுக்கும் இலங்கை உறுதி கொடுத்திருந்தது. அதில் இலங்கை தவறியதால் வரும் விளைவுகளே - போர்குற்ற விசாரணை போன்றவை.

யுத்த முடிவில் மகிந்த சொன்ன படி நடந்திருந்தால் இப்போ அவர்தான் மேற்க்கின் செல்லப்பிள்ளை. நோபல் பரிசு கூட கொடுத்திருப்பர்.

2005 இல் மேற்குலகை under estimate பண்ணி பிரபா விட்ட அதே தவறை இப்போ மகிந்தவும் விடுறார். அவரின் நிலை வர முன்சுதாகரித்து course correction செய்வாரா? இல்லை அவரைப்போலவே காணாமல் போவாரா? இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

100%உண்மை ,

ஆனால் சர்வதேசத்தை இப்படி செட் பண்ணியதே தலைவரின் தொலைநோக்குத்தான் என்ற படி பலர் வேறு கணக்கு போடுகினம் .

மிகவும் நேர்த்தியான இந்தியாவில் பேச வேண்டிய பேச்சு .

முதலமைச்சருக்கு எங்கு எப்படி எதை பேசவேண்டும் என்று நன்றாக தெரிந்திருக்கு .

அரசியல் தீர்வு என்ற இடத்தை அழுத்தி பிடிப்பதில் தான் அவர் கவனம் தெரிகின்றது .அதைத்தான் நாங்கள் மீண்டும்மீண்டும் சொல்லிவந்தது .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். இவர் சொல்லி வந்ததால் தான் அவர் அப்படிப் பேசியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

சோசன் சொல்கின்ற கொத்துக் குண்டுகளின் பாவணை என்பது சிங்கள அரசு கிளிநொச்சிக்கு வந்த பின்னரே பாவிக்க வெளிக்கிட்டது. அதற்கு முன்னர், மக்களின் செறிவு குறைவு என்பதால் அந்தப் பாவணையைச் செய்திருந்தது என அறியக் கிடைக்கவில்லை. தவிர, ஆயுதத் தேவை என்பதைப் புலிகள் பெரிய அளவு எதிர்பார்த்திருந்தார்கள் என்பது எல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என் தெரியவில்லை. 2006 இல் இருந்து 2008ம் ஆண்டு நடுப்பகுதி வரை சிங்கள அரசு மடுப்பகுதியில் தான் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தது. 2008ம் ஆண்டு மாவீரர் தினத்தினத்தை அண்ணிடிய காலப்பகுதியில் தான் பூநகரியில் ஆக்கிரமிப்பினைச் செய்தது. யாழ்ப்பாணம் ஊடாக வந்து இறங்கி.... புலிகளின் ஆயுதத்தேவையை எல்லா நேரங்களிலும் கப்பல்கள் பூர்த்தி செய்யவில்லை 70 வீதமான ஆயதங்கள் எதிரியிடம் இருந்து பெறப்பட்டவை. கனரக ஆயுதத் தேவைகளே வெளியில் இருந்து பெறப்பட்டிருக்கலாம். அது கிடைக்கவில்லை என்பதால் தான் தோல்வி என்பது ஒரு சாதாரண காரணமாகவே இருக்கலாம். ஏனெனில் 2006ம் ஆண்டுக்குப் பின்னர் எந்த வித தாக்குதல்களையும் புலிகள் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் யாவும் முறியடிப்புத் தாக்குதல்கள் மட்டுமே...

அனுராதபுரவான்படைத் தாக்குதல் மட்டும் தான் சொல்லக்கூடிய ஒரு தாக்குதல் கூட எதிரியின் வான்படைத் தாக்குதல்களை மட்டுமப்படுத்தவும், கண்காணிப்பு விமானங்களை இல்லாது ஒழிக்கவுமுhகவுமே இருந்தது.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்சே தனிநாட்டுக் கோரிக்கை புலிகளின் கோரிக்கை அல்ல.சம்பந்தர் உள்ளிட்ட தமிழ்த்தலைவர்களால் 1977 ஆண்டுத் தேர்தலில் விஞஙாபனத்தில் குறிப்பிடப்பட்டு மக்கள் குடுத்த ஆணைஅது.பதவி கிடைத்தவுடன் தலைவர்கள் அதை மறந்து விட்டாலும் அந்த மக்கள் ஆணையை நிறைவேற்ற புலிகள் உயிரைக்கொடுத்து பேராடினார்கள் என்பதுதான் உண்மை. மற்றம் படி சிவியின் உரை மதிநுட்பத்தோடு கூடிய உரை(சம்பந்தர் இசுமத்திரன் போல் உளறல் அல்ல)இந்தியாவின் கடைமையைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Edited by புலவர்

இலங்கை தமிழ் மக்கள் கெளரவமாக வாழக்கூடிய எந்த தீர்வுக்கும் எதிராகவே இந்திய கொள்கை வகுப்பாளர்கள் சிந்திப்பர் என்பது தெரிந்த விடயம். கெளரவ முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரனின் முயற்சி பலிக்க வேண்டும் என்பதே ஈழதமிழர் விடுதலையை விரும்பும் எல்லோரினதும் நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

பரந்தன் விழும் வரை புலிகளும் உள்ளே விட்டு அடிக்கும் முடிவில்தான் இருந்தனர். அத்தோடு எப்படியும் வெலிஓயாவில் இருந்து அலம்பில் செம்மலை வழியாக முல்லைத்தீவு வர கன நாள் எடுக்கும் என்றும் நினைத்தனர். ஆனால் பரந்தனில் இருந்துதான் no limits யுத்தம் ஆரம்பித்தது. கிட்டத்தட்ட இன்சு இன்சா அடித்த்கார்கள். மக்கள் சாவை பற்றி ஒரு நாடும் பேசவில்லை. பேசமாட்டோம் செய்வதை செய்ய்யுங்கள், ஆனால் விரைந்து முடியுங்கள் என்பதுதான் இலங்கைக்கு கிடைத்த செய்தி.

பரந்தன் வரை மெதுவாய் போய் பின் அசுர அடி என்பது எல்லா நாடுகளும் சேர்ந்தே எடுத்த முடிவு.

புலிகளின் ஒவ்வொரு கையையும் ( கருணா பிரிவு, கேபியை வாங்கியது, ஆயுத வரவை தடுத்தது) கட்டி விட்டு, கடைசியில் ஒரு அசுர அடி அடித்த்கார்கள்.

மகாபாரத்த்தில் கர்ணன் தோற்கடிக்கப்பட்டது போல ( குந்தியின் வரம், பரசுராமர் சாபம், இந்திரன் யாசகம்).

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்,

ஒரு தனி நாட்டின் அதிபர் எண்டால் அமிர்தலிங்கத்துக்கு கசக்குமா? சும்மா எம்பியா இருக்கிறதுக்கு இது எவ்வளவு நல்லம்?

அவருக்கும் அசோகா ஹோட்டல் கவனிப்பு டெல்லியில் நடந்திருக்கும்.

அதுதான் மனுசன் ஊருக்கு வந்ததும் தமிழ் ஈழத்தை ஒரு நல்ல பரணா பார்த்து ஏறக்கட்டினவர்.

பிரபா கடைசி வரை இதை விடாமல் பிடித்தார். அவரைபொறுத்த மட்டில் மணந்தால் மகாதேவன் இல்லையேல் மரணதேவன்.

ஒண்டில் நாடு காண்போம் அல்லது முழு இலங்கைத்தமிழரும் அழிவோம்.

கோசான் சே விடுதலைப்போராட்டம் என்று புறப்பட்டால் போராளிகள் ,மக்கள் அழிவது தவிர்க்கப்படமுடியாது [ எனது சிறிய அறிவிற்கு எனக்கு தெரிந்த வரலாறுகளில் இருந்து தெரிந்து கொண்டது .........அன்று முள்ளி வாய்க்காலில் போராளிகளும் ,மக்களும் உலக கூட்டுக்குழுக்களால் அழிவை சந்திக்கப்போகிறார்கள் என்று தெரிந்தும் ,சரி நாம் எல்லாவற்றையும் விட்டு செல்கிறோம் எமக்கு விடுதலை வேண்டாம் என்று கூறி எம் உயிர்களை காப்பாற்றுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டுமா .........அல்லது இந்த போராட்டமே எமக்கு தேவையில்லாதது என்று சொல்ல வருகிறீர்களா .........

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன்,

முள்ளிவாய்க்கால் நடக்கும் என்று ஊகித்து அதற்கேப்ப காய் நகர்தி இருக்க வேண்டும்.

மூக்குச்சாத்திரம் எல்லாம் பார்த்திருக்க தேவையில்லை கிட்டதட்ட ஓபனாகவே இது சொல்லப்பட்டது. அதன் பின்பும் ரணிலை தோற்கடித்ததுதான் பிழை.

புலிகள் தோற்றது 2009 அல்ல. 2005 டிசம்பரில். அவர்களின் முடிவு அப்போதே எழுதபட்டு விட்டது. பிறகு நடந்ததில் புலிகள் முன் இருந்த ஒரே தெரிவு தலையை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டு அல்லது குப்பியடிக்க செய்துவிட்டு இலங்கை படைகளிடம் சரணடைவது மட்டுமே.

அதைத்தான் கடைசியில் செய்தார்கள்.

இதில் கர்ணன் இறந்த பின் அர்சுனனுக்கும் கிருஸ்ணருக்கும் நடக்கும் சம்பாசனையை (10:50 முதல்) பாருங்கள். புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்டனர் என்பது புரியும்.

Edited by goshan_che

கோசான் ஒரு கேள்வி..
 
ரணில் இருந்திருதால் முள்ளிவாய்க்கால் நடந்திருக்காதா ? 
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன்,

புலிகளை பலவீனப் படுத்தும் திட்டம் கன ஜரூராக நடந்திருக்கும். தமிழரை பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து ஏமாற்றும் வேலையும் நடந்திருக்கும்.

ஆனால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்திராது. புலிகள் தாமே யுத்தத்தை தொடங்காத அல்லது ரணிலை கொல்லாத வரை. அப்படி செய்திருந்தால் ரணில் வெண்டிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்திருக்கும்.

2005 இல் புலிகள் முன்பிருந்த தெரிவு 3.

1) ரணிலுடன் ராஜதந்திர யுத்தம் இதன் அதி உட்ச முடிவு சம்ஸ்டியாக இருக்கும். புலிகள் மற்றும் தனி நாட்டு கோரிக்கை அழிந்து போகும்.

2) ரணிலுடன் போர்

3) மகிந்தவுடன் போர்.

2 இலும் 3 இலும் புலிகளின் regime security மற்றும் தனிநாட்டுக் கோரிக்கைக்கு வாய்ப்புகள் கூட. இதில் மகிந்த காட்டான் ஈசியாக கையாளலாம் என்று நினைத்து 3 ஐ தேர்ந்தனர்.

ஓரளவுக்கு மேல் சனம் சாக மேற்கு நாடுகள் விடாது, தமிழகம் கொந்தளிக்கும் என்று தப்பு கணக்கு மேல் தப்பு கணக்குப் போட்டனர்.

மேற்குலகின் ஓர்மத்தை குறைத்தும், தமிழ்நாட்டின் உணர்வை கூட்டியும், புலம்பெயர்ந்தவரின் இயலுமையை கூட்டியும் எடை போட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன்,

முள்ளிவாய்க்கால் நடக்கும் என்று ஊகித்து அதற்கேப்ப காய் நகர்தி இருக்க வேண்டும்.

மூக்குச்சாத்திரம் எல்லாம் பார்த்திருக்க தேவையில்லை கிட்டதட்ட ஓபனாகவே இது சொல்லப்பட்டது. அதன் பின்பும் ரணிலை தோற்கடித்ததுதான் பிழை.

புலிகள் தோற்றது 2009 அல்ல. 2005 டிசம்பரில். அவர்களின் முடிவு அப்போதே எழுதபட்டு விட்டது. பிறகு நடந்ததில் புலிகள் முன் இருந்த ஒரே தெரிவு தலையை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டு அல்லது குப்பியடிக்க செய்துவிட்டு இலங்கை படைகளிடம் சரணடைவது மட்டுமே.

அதைத்தான் கடைசியில் செய்தார்கள்.

இதில் கர்ணன் இறந்த பின் அர்சுனனுக்கும் கிருஸ்ணருக்கும் நடக்கும் சம்பாசனையை (10:50 முதல்) பாருங்கள். புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு முன்பே தோற்கடிக்கப்பட்டனர் என்பது புரியும்.

கோசான் சே  ஒரு விடயம் தெளிவு படுத்தவே உங்களிடம் அந்த கேள்வியை நானே கேட்டேன் .எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு மட்டுமல்ல ,எந்த அமைப்பாய் இருந்தாலும் நடந்திருப்பது அதுதான் ..அதுதான் சமகால உலகளாவிய அரசியல் போக்காக இருந்தது ...........ஆனால் எமக்கு விடுதலை பெறவேண்டும் என்ற ஒரு தேவை உள்ளது .அந்த தேவையை அடைவதற்கு நாம் பயணிக்கும் பாதையில் இந்த நிகழ்வும் ஒரு காலத்தின் கட்டாயமே .அதையும் நாம் எதிர்கொண்டோம் .அதன்பின்னும் எம் விடுதலைப்பயனத்திற்கான பயணம் தொடரவேண்டும் ........அது இப்போது ஏற்படுத்தப்பட்ட கால அட்டவணைப்படி நகர்ந்துகொண்டிருக்கிறது ...........இந்த உண்மையை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு செயல்வடிவம் கொடுப்பதே தற்போது உள்ள காலத்தின் கட்டாயம் .நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்,

இதில் யோகி ஒன்றையும் எதிர்வு கூறவில்லை. மேற்குலகு புலிகளுக்கு கொடுத்த எச்சரிக்கையை ரிப்பீட் பண்ணுகிறார். புலிகள் இந்த எச்சரிக்கையின் கனத்தை குறை மதிப்பீடு செய்தனர். புலமும் தமிழகமும் மேற்க்குக்கு கொடுக்கும் அழுத்தம் பற்றி மிகை மதிப்பீடு செய்தனர் என்பதுக்கு யோகியின் இந்தப் பேச்சே சிறந்த சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

Project Beacon மற்றும் 2009 இல் போர் முடிவு பற்றி கணித்துச் சொல்லிவிட்டார்கள். களத்தில் இல்லாதிருந்த‌ சீனாவும் இன்று வந்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.