Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

maithirbala_srisena.png

எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஞ்ஞாபனம் அடுத்த மாதம் 1ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.

இது மூன்று பிரதான அம்சங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்கட்சியுடன் இணைந்துள்ள முக்கிய நிபுணர் ஒர்வரே தயாரித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இதில் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என்று கூறுப்படுகிறது.

  • Replies 101
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon2(2).jpg

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் வாக்குகள் சேனாதிபதியை தேர்வு செய்யபோவதில்லை ...........
 
மகிந்தவை விட நாங்கள் அசுரர்கள் என்று காட்டினால்தான் சிங்களவர்கள் இவர்களை தேர்வு செய்வதை பற்றி சிந்திப்பார்கள். அல்லது இவர்கள் மீண்டும் புலிகளை தொற்றுவித்துவிடுவார்கள் என்று மகிந்த கூட்டம் பிரச்சாரம் செய்ய தொடங்கி விடும்.
 
இப்போதைய சூழலில் மகிந்த மீண்டும் சேனாதிபதி ஆவதுதான் தமிழருக்கு நன்மை பயக்கும்.
சர்வதேச விசாரணையை கடுப்பில் என்றாலும் சர்வதேசம் கையில் எடுக்கும். 
  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபால சிறிசேனாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கு எவ்வித தீர்வும் இல்லை!..

இந்தத்தேர்தல்

சிறீலங்காவுக்கானது என்பது கூட இன்னும் எம்மவருக்கு புரியவில்லை....

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ எதுவும் இல்லை. அரசியலமைப்பு மாறமுன் எங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்த இப்பவே தயாராக வேண்டும். மைதிரியின் ஏதேனும் தரப் பின்னடிக்கவே செய்வர். சம்பந்தர், சுமந்திரன், விக்கி இருப்பதால் வடிவாய் காய்நகர்த்துவர். மேற்குலகும் ஒரு கணக்கு வச்சிருக்கும்.

இந்தியாவும் கூட.

புலம்பெயர்சும் சேர்ந்தால் இன்னும் சாதிக்கலாம்.

தப்பான பார்வை

தமிழர்கள் தான் நிலைமாறியுள்ளனர்

சிங்களவன் அப்படியே  தான் உள்ளான்

சிங்கள ஆட்சி  மாறினால் தமிழருக்கு நல்லது  நடக்கும் என்பது

மிகவும் தாழ்ந்த  வரலாற்றை உணராத சிந்தனை.....

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

தயவுசெய்து நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை இன்னொருதரம் வாசிக்கவும்.

நீங்கள் சொல்லுறதை தான் நானும் சொல்றேன்.

மாறி வரும் உலக சூழலை பயன்படுத்தி, ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து வரும் அரசியலமைப்பு மாற்றத்தில் நம் பங்கை உறுதி செய்ய வேண்டும்.

இதைத்தானே இவ்வளவு நாட்களும் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கிறோம் . :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

தயவுசெய்து நான் என்ன எழுதி இருக்கிறேன் என்பதை இன்னொருதரம் வாசிக்கவும்.

நீங்கள் சொல்லுறதை தான் நானும் சொல்றேன்.

மாறி வரும் உலக சூழலை பயன்படுத்தி, ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து வரும் அரசியலமைப்பு மாற்றத்தில் நம் பங்கை உறுதி செய்ய வேண்டும்.

1- இப்போ எதுவும் இல்லை.

தமிழரிடம்  ஏதும் இல்லை. இது சரி

2- அரசியலமைப்பு மாறமுன் எங்கள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மாற்றங்களை ஏற்படுத்த இப்பவே தயாராக வேண்டும்.

ஏதோ சிங்களம் தூங்கும்.  நாம் அதற்குள் சாதித்துவிடலாம் என்கிறீர்கள்

எங்கே கொண்டு போய் முட்ட..

60 வருடமாக என்ன நடக்குது என்று தெரியலையா..???

3- மைதிரியின் ஏதேனும் தரப் பின்னடிக்கவே செய்வர்.

தரவே மாட்டான். அது தான் வரலாறு

அதென்ன தருவதற்கு மனம் வைத்த ஆனால் மற்றவர்களது உபத்திரவத்தால் பின்னடிப்பான் என்பது போல்...

4-சம்பந்தர், சுமந்திரன், விக்கி இருப்பதால் வடிவாய் காய்நகர்த்துவர். ...

அதாவது முன்பிருந்த தலைவர்கள் எல்லோரும் முட்டாள்கள்

இப்படியான  தலைவர்கள் முன்பே கிடைத்திருந்தால்

சிங்களவனிடம் புடுங்கியிருக்கலாம் என்பது போல...??

சட்டிக்க ஒன்றும் இல்லை ஐயா

அதைப்புரிந்து கொள்ளுங்கள்

5-மேற்குலகும் ஒரு கணக்கு வச்சிருக்கும்...

மேற்குலகம் ஆட்சி  மாற்றத்தை விரும்புவதே

தமிழரின் பிரச்சினையை  திசை மாற்றத்தான்..

6-இந்தியாவும் கூட.

மகிந்தவின் கூட்டாளிகள் அவர்கள்

இவர்களிடமும் எதிர்பார்க்கின்றீர்களா...?

7-புலம்பெயர்சும் சேர்ந்தால் இன்னும் சாதிக்கலாம்.

அப்படியா?

அவர்கள் தான் புண்ணாக்குளாச்சே........... :(  :(  :( 

தமிழருக்கு தனி நாட்டை பிரித்து தருவதற்கு ஆர்வமான வல்லரசுகள் உலகத்தில் இல்லை. ஆனால் தனிநாட்டை எதிர்ப்பதற்கான வல்லரசுகள் உண்டு. போர்க்குற்ற விசாரணைக்கும் இதே நிலை தான்.
 
ஆகவே போர்க்குற்ற விசாரணை யூடான பிரிவினை என்பது நடைமுறைச் சாத்தியம் மிகவும் குறைந்த தெரிவு. 
 
போர்க்குற்ற விசாரணையை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவது தமிழரின் நிலமையை முன்னேற்றாது. வேண்டுமானால் இன்னும் கீழே இறக்கலாம். ( சிங்களத்திற்குத் தேவையான கால அவகாசத்தை வளங்குவதன் மூலம்)
 
ஆட்சி மாற்றம் மேற்கு மற்றும் இந்தியா சார்பான ஒரு அரசாங்கத்தை அமைக்குமானால் தமிழரிற்கு ஆகக் குறைந்த அதிகாரங்கள் கொண்ட ஒரு தீர்வை பெற்றுத் தருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். அதை ஆரம்பப்புள்ளியாக பாவிப்பதன் மூலம் நிலங்கள், உரிமைகளைத் தக்க வைக்கலாம்.
 
சீனாவை இந்தப் பிரந்தியத்தில் இருந்து அகற்றுவதால் நன்மை அடையப் போவது தமிழர்களே.   
 
  • கருத்துக்கள உறவுகள்

60 வருசமா புடுங்க முடியவில்லை, என்பது தவறு 87,95,02 என புடுங்க பல சந்தர்பங்கள் வாய்த்தும் புடுங்கினால் மலை ( தனிநாடு) யை மட்டுமே புடுங்குவோம் எனும் பிடிவாத்ததால் பல வாய்புகளை இழந்தோம். 83 ற்கு முன்பிருந்த தலைவர்கள் தனியே அரசுடன் மட்டுமே பேச முடிந்தது ஆகவே தொடர்சியாய் ஏமாற்றப்பட்டனர். 87-05 வரை உலக நாடுகள் எல்லாம் கூடி ஒரு முடிவை திணித்தபோது ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இப்போ வலுவற்ற நிலையில் உள்ளோம். இருக்கும் ஒரே பலங்கள் ஒன்று புலம்பெயர்ஸ் மற்றது மேற்குலகின் கரிசனை.

இதை பயன்படுத்த - புண்ணாக்குத் தனமாய் கொடி பிடித்து தனிநாடு கேளாமல் - புலம் கூட்டமைப்புடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

மகிந்தாவைத் தோற்கடித்து மேற்குலகு விரும்பும் ஒருவர் இலங்கைத் தீவுக்கு ஜனாதிபதி ஆகிவிட்டால் எல்லாம் சுமூகமாக முடிந்துவிடும்.

போர்க்குற்ற விசாரணை, இன அழிப்பு குற்றச்சாட்டுக்கள், சிறுபான்மையினருக்கான அங்கீகாரம், மேற்குலகின் பொருளாதாரத் தடை மிரட்டல்கள் போன்றவை எல்லாமே இல்லாமல் போய் புதிய பௌத்த சிங்கள பேரினவாதியின் செங்கோல் ஆட்சியை உலகமே பாராட்டும். தமிழர்கள் இப்போதுள்ளதைவிட அதி உச்ச இணக்க அரசியலைச் செய்யலாம்.

Edited by இணையவன்

கசப்பான உண்மை. 

இந்த வாதத்தில் உள்ள தவறு என்னெவென்றால் இணையவன்,
 
மஹிந்த மேற்கு சார்பாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று மேற்கு சில முயற்சிகளை எடுப்பது தான். தமிழர் பிரச்சனையை மேற்கு கைவிட்டால் மஹிந்தவும் மேற்கின் நன்பன் தான்.
 
இலங்கை சீனாவின் நன்பன் அல்ல. மேற்கும் இலங்கையை எதிரியாகப் பார்பதில்லை. பார்க்கப் போவதும் இல்லை. ஆனால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் சமாதானத்திற்கும் தமிழர் பிரச்சனை தீரவேண்டும் என்று விரும்புகிறார்கள். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் இங்கு வருவதற்கான சந்தர்ப்பம் ஒருபோதும் இல்லை அவர்களால் சொல்ல முடியாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகை influence பண்ணும் வேலைப்பகுப்பு புலத்தில் பெரிதும் தங்கியுளது.

நாங்கள் கொடி பிடித்து,அவர் லீடர் கோசங்கள் எழுப்பும் வரை மேற்க்கு நம்மை திரும்பியும் பாராது.

புலத்தமிழர் பலத்தை சேர்த்து - ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஸ்டி எனும் தீர்வுக்கு ஆதரவு திரட்டினால் - நம்மோட பேசவாவது முன்வருவார்கள்.

உங்களின் இந்த கருத்தோடு உடன்படுகிறேன். 

போராடியவர்களுக்கும் போராட்டத்துக்கும் தியாகிகளுக்கும் தனியான இடமும் கவுரமும் எம்மிடத்தில் இன்றும் இருக்கும்.

போராட்டம் தொடங்கப்பட்டது போராளிகளையும் போராட்டத்தையும் தூற்றுவதற்கோ துதிப்பதற்கோ அல்ல. அது அடக்குமுறைக்கும் உரிமைக்குமான போராட்டம். தமிழீழத்தை மாத்திரமே முடிவாக இருந்ததால் அதனில் இருந்து விளகுடியாத காரணத்தால் ஆயுத போராட்டமும் தலைமையும் தொடரமுடியாமல் போய்விட்டது. 

போராட்டஇலக்கு என்னும் அடையப்படவில்லை. எதை தொடரமுடியாமல் போனதோ அதையே தொடர நினைப்பது எங்களின் இலக்கை இல்லாமல் ஆக்கிவிடும்.

நிரந்தரமான தீர்வு தனி ஈழமே அதில் எந்த சந்தேகமும் இல்லை அனால் இன்றுள்ள நிலையில் அது சாத்தியப்படப்போவதில்லை. அதை எமது நெடுந்தூர இலக்காக விட்டு விட்டு சாத்தியமான தீர்வோடு சமூகத்தை கட்டி எழுப்புவதே நன்மை பயக்கும் என்பது எனது நிப்பாடு. 

தவருவோமாக இருந்தால் முதலுக்கே மோசமாக முடியலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

60 வருசமா புடுங்க முடியவில்லை, என்பது தவறு 87,95,02 என புடுங்க பல சந்தர்பங்கள் வாய்த்தும் புடுங்கினால் மலை ( தனிநாடு) யை மட்டுமே புடுங்குவோம் எனும் பிடிவாத்ததால் பல வாய்புகளை இழந்தோம். 83 ற்கு முன்பிருந்த தலைவர்கள் தனியே அரசுடன் மட்டுமே பேச முடிந்தது ஆகவே தொடர்சியாய் ஏமாற்றப்பட்டனர். 87-05 வரை உலக நாடுகள் எல்லாம் கூடி ஒரு முடிவை திணித்தபோது ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இப்போ வலுவற்ற நிலையில் உள்ளோம். இருக்கும் ஒரே பலங்கள் ஒன்று புலம்பெயர்ஸ் மற்றது மேற்குலகின் கரிசனை.

இதை பயன்படுத்த - புண்ணாக்குத் தனமாய் கொடி பிடித்து தனிநாடு கேளாமல் - புலம் கூட்டமைப்புடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

இதை 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச பழகியவர்கள்தான் எழுதமுடியும்.
1986இல் திம்புவிலே தமிழர் தரப்பு தமிழர்கள் பிரதேசம் அடையாளம் கனபாடல் வேண்டும் . எனும் கோரிக்கையைத்தான் அதி கூடிய கோரிக்கையாக முன்வைத்தார்கள். அது கூட தூக்கி எறியபட்டது.
1987இல் புலிகள் ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைத்து நிராயுதபாணிகளாக நின்று கொண்டு அரசியல் போராளிகளாக தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாராக இருந்தும். அவர்களது தளபதிகள் போராளிகளை கைது செய்து சித்திரவதை செய்து அவர்கள் தற்கொலை செய்தார்கள்.
1990இல் மீண்டும் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணியை தோற்றுவித்தார்கள்.
 
இப்படி எல்லாம் தூக்கி ஏறியபட்டு இன போர் சிங்கள அரசால் தொடர்ந்தும் முன்னெடுக்க பட்டது.
நேற்று தமிழ் பேச பழகியவர்கள் தமிழில் கருத்து எழுத தொடங்கினால் ............. இப்படிதான் எழுத முடியும்.
 
அடிப்படியில் ஒரு கருத்தை கூறினால் அதை முழுமையாக கூறவேண்டும்.
தனி தமிழ் ஈழத்தை எப்படி எப்போது எங்கே வலியுரித்தினார்கள் என்றாவது எழுதவேண்டும். அது கருத்தை எழுத எத்தநிப்பவர்கள்தான் கவனத்தில் எடுப்பார்கள்.
எதையாவது எழுதிவிட்டு போபவர்களுக்கு அந்த பிரச்சனை இல்லை  
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகை influence பண்ணும் வேலைப்பகுப்பு புலத்தில் பெரிதும் தங்கியுளது.

நாங்கள் கொடி பிடித்து,அவர் லீடர் கோசங்கள் எழுப்பும் வரை மேற்க்கு நம்மை திரும்பியும் பாராது.

புலத்தமிழர் பலத்தை சேர்த்து - ஒன்று பட்ட இலங்கைக்குள் சமஸ்டி எனும் தீர்வுக்கு ஆதரவு திரட்டினால் - நம்மோட பேசவாவது முன்வருவார்கள்.

கொடிகளை கொண்டுபோய் மேற்குலகின் பிரதிநிதிகளிடம் இதை வைத்துகொண்டு.
எங்களுக்கு விடிவை தாருங்கள் என்று கேட்டால். உடனேயே அலுமாரியை திறந்து விடுதலையை எடுத்துத்தர எவளவு சாத்தியம் இருக்கிறது??
என்பதை விளக்கமாக எழுதினால் .......
ஒரு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்து ...கொடிகளை கொண்டுபோய் அவர்களிடம் கொடுக்கலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

60 வருசமா புடுங்க முடியவில்லை, என்பது தவறு 87,95,02 என புடுங்க பல சந்தர்பங்கள் வாய்த்தும் புடுங்கினால் மலை ( தனிநாடு) யை மட்டுமே புடுங்குவோம் எனும் பிடிவாத்ததால் பல வாய்புகளை இழந்தோம். 83 ற்கு முன்பிருந்த தலைவர்கள் தனியே அரசுடன் மட்டுமே பேச முடிந்தது ஆகவே தொடர்சியாய் ஏமாற்றப்பட்டனர். 87-05 வரை உலக நாடுகள் எல்லாம் கூடி ஒரு முடிவை திணித்தபோது ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இப்போ வலுவற்ற நிலையில் உள்ளோம். இருக்கும் ஒரே பலங்கள் ஒன்று புலம்பெயர்ஸ் மற்றது மேற்குலகின் கரிசனை.

இதை பயன்படுத்த - புண்ணாக்குத் தனமாய் கொடி பிடித்து தனிநாடு கேளாமல் - புலம் கூட்டமைப்புடன் சேர்ந்து செயல்பட வேண்டும்.

தயவுசெய்து புலிகள்  மீதான வெறுப்பை வைத்துக்கொண்டு

வரலாற்று அனுபவங்களை  எழுதாதீர்கள்....

உங்கள் வாதப்படி புலிகளது போக்கு பிழை என்றால்

தற்பொழுது 6 வருடமாகிறது

சிறீலங்காவும்

சர்வதேசமும் தமிழருக்கு ஆகக்குறைந்த தீர்வையாவது காட்டியிருக்கணும்.......

வேண்டாம் அண்ணோய்... அவர் திரும்பவும் ஆரம்பத்திலேருந்து தொடங்கவேனுமா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து புலிகள்  மீதான வெறுப்பை வைத்துக்கொண்டு

வரலாற்று அனுபவங்களை  எழுதாதீர்கள்....

உங்கள் வாதப்படி புலிகளது போக்கு பிழை என்றால்

தற்பொழுது 6 வருடமாகிறது

சிறீலங்காவும்

சர்வதேசமும் தமிழருக்கு ஆகக்குறைந்த தீர்வையாவது காட்டியிருக்கணும்.......

தற்போது என்ன நடந்து 6 வருடமாகிறது?  இப்போதும் சர்வதேசத்தில் புலிக்கொடி பறக்கிறதே

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து புலிகள்  மீதான வெறுப்பை வைத்துக்கொண்டு

வரலாற்று அனுபவங்களை  எழுதாதீர்கள்....

உங்கள் வாதப்படி புலிகளது போக்கு பிழை என்றால்

தற்பொழுது 6 வருடமாகிறது

சிறீலங்காவும்

சர்வதேசமும் தமிழருக்கு ஆகக்குறைந்த தீர்வையாவது காட்டியிருக்கணும்.......

ஒரு முக்கிய தமிழ்நாட்டு காங்கிரஸ் காரர். அவரது பெயரை மறந்துவிட்டேன் .
15 வருடங்கள் முன்பு ஈழ தமிழருக்கு விரோதமாக ஏன் காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று ஒரு நிருபர் கேள்வி கேட்டார்.
 
அவர் பதில்.
சில அரசியல் புரிந்துணர்வுகள் காலம் கடந்துதான் உருவாகுகிறது. ஈழத்தமிழர் புலிகளை பொருத்தவரை மிகவும் சிறிய தொகை மக்களாக இருந்துகொண்டு போராடி கொண்டு இருந்தார்கள். இந்தியா புரிதல் இன்றி தவாறாக நடந்து கொண்டு இருந்தால் கூட அவர்கள் பொறுமையாக இருந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். திலீபன் உண்ணாவிரதம் இருந்தார் பின்பு இறந்து போனார் அது என்னை கூட மிகவும் பதித்தது..........
அப்படியே தொடர்ந்தும் பிரபாகரன் மற்றைய தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து இருந்தால் ? இந்தியாவில் மாற்றம் வந்திருக்கும் என்றார்.
 
(இதை நான் எழுதுவதன் காரணம் இவருடைய பதில் என்னை மிகவும் பாதித்தது. பொதுவாக காங்கிரஸ் கட்சி காரர்கள் என்றால் புலிகள் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று ஏதாவது சொல்லிவிட்டு போவார்கள் இவர் தமிழர் புலிகள் எல்லோரும் நன்மை அடைய வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் இவர் நல்லவரா? கெட்டவரா? என்ற கேள்விக்கான பதில் எனக்கு இன்றுவரை கிடைக்கவில்லை)
 
அவர் சொன்னமாதிரி தலைவரும் உண்ணாவிரதம் இருந்து மற்ற தளபதிகளும் உண்ணாவிரதம் இருந்து இறந்து இருந்தால். அவர்கள் கையோட கம்மார்ஸ் என்றுவிட்டு கப்பல் ஏறி போயிருப்பார்கள்.  
அவரை விடவும் யாழ் களத்தில் காமடி பண்ணகூடியவர்கள் இருக்கிறார்கள். 

இந்திய இராணுவ தளபதி கரிகரனே தனது புத்தகத்தில் எழுதுகிறார் .....
ராஜீவ் காந்தி பிரபாகரனை கொலை செய்யும்படி உத்தரவு இட்டதாகவும். அப்படியொரு சூழல் தமக்கு சாதகமாக அமையவில்லை என்றும்.
 
இவளவு நாளும் எங்க கிடந்தர்களோ? இப்பதான் கோமாவில் இருந்து மீண்டு  வருகிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் புலிகள் மீது எனக்கு ஒருவித வெறுப்பும் இல்லை.

அவர்களால் நான் பாதிக்கப்படவும் இல்லை. சொல்லப்போனால் ஒரு புலியாதரவு பின்புலத்தில் இருந்து வந்தவன் நான்.

அதற்க்காக அவர்களால் பாதிக்கப்பட்டவர்களை துரோகி என்று ஒற்றை வார்த்தையால் கடந்து போகவும், புலிகள் விட்ட வரலாற்றுத்தவறுகளை "தலைவரின் ராஜதந்திரம்" "தியாகிகள் பிழை விட்டால் கேள்வி இல்லை" என்று கூறி மூடி மறைக்கவும் நான் தயாரில்லை.

தனிமனித துதியிலும் அவர் எந்த கொம்பனாய் இருந்தாலும் எனக்கு உடன்பாடில்லை.

ரஜீவ் பிரபாவை கொல்ல முடிவு செய்தார் - உண்மை. ஏன்? பிரபாவின் தனிநாட்டு கொள்கை உறுதி அவருக்குத் தெரியும்.

சும்மா சின்ன பிள்ளை மாரி - புலி தனிநாட்டை விட தயாராயிருந்தது எண்டு கதயளக்கப்படாது. பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபா என்ன சொன்னார்? தமிழ் ஈழத்தை கைவிட்டால் என்னை ஒரு போராளி சுடலாம். இது என்னத்தை குறிக்கிறது.

87 யூலையில் ஆயுத ஒப்படைப்பு செய்தவர்கள் ஆக்டோபரில் என்ன கத்தி கபடாவை வைத்தா சண்டை போட்டனர்?

பிரபா தனிநாட்டை கடைசிவரை கைவிடவில்லை. இதை கொள்கை உறுதி எண்டு போற்றலாம். அல்லது எம்மை போல் அழுங்குப் பிடிவாதம் என்று விமர்சிக்கலாம்.

ஆனால் பிரபா தனிநாட்டை கைவிட தயாராய் இருந்தார் என்பது - காதில பூ.

பேய்கதை, பிசாசுகதை, கோமா, மாமா என்று சேத்து வாளியும் கையுமாக சிலர் களத்தில் இறங்கியபின் - இந்த திரி ஆக்கபூர்வமாய் நகரும் என நான் எதிர்பார்க்கவில்லை.

நன்றி, வணக்கம்

இங்கு பதிவிடும் பலருக்கு உண்மையில் நடந்துது என்ன என்றே தெரியாது ,

புலிகள் சொன்னதை அவர்கள் பிரசுரங்களை மட்டும் வாசித்துவிட்டு அதை மட்டுமே நம்பி இன்று வரை அதுதான் சரி என்று இங்கு பலர் வாதித்துவருகின்றார்கள் .இவர்கள் என்றுமே மாறப்போவதில்லை .

புலிகள் தமிழ் ஈழத்தை அடைந்திருந்தால் அவர்கள் விட்ட தவறுகள் மறைந்திருக்கலாம் ஆனால் தோல்வி என்று வந்தபின் தவறுகள் பற்றிய விமர்சனங்கள் வரத்தான் செய்யும் .

குறிப்பு -ஒப்பந்தம் நிறைவேற்றபடவேண்டும் என்பதில் தான் ராஜீவ் ஒற்றைக்காலில் நின்றார் அதற்காக யார் தலையையும் எடுக்கவும் தயாராக இருந்தார்  ஆனானப்பட்ட ஜே ஆரையே வெருட்டி ஒப்பந்தத்தை கையெழுத்து வைக்க உடன்படித்திய பின் பிரபா குழப்ப வெளிக்கிட்டால் விடுவார்களா என்ன ?  

அதன் விளைவு தான் இன்றுவரை தொடரும் அவலம் .

அண்ணே விரண்டாவதம் பேசுவதாக எண்ணாமல் .....
ராஜீவ் எப்போது அல்லது எப்படி அதை நிறைவேற்ற முயற்சி செய்தார்? என்று எழுதமுடியுமா?
 
புலிகள் பிரச்சாரத்தை கேட்டு எழுத புலிகள் என்ன பிரச்சாரம் எப்போது செய்தார்கள் என்று எழுத முடியுமா?
 
சும்மா மனம் போன போக்கில் வெறும் பித்தாலாடங்களை மட்டுமே இங்கே எழுதிவருகிறீர்கள்.
எதோ ஐ நா சபை பிரதிநிதியாக இருந்ததுபோல் உலக அரசியல் கத்தரிக்காய் என்று திரிக்கு திரி திரித்துகொண்டு இருப்பதைத்தான் உங்களால் செய்ய முடியும்.
 
இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் என்ன இருந்து?
 
ஜே ஆரை எப்படி மிரட்டினார்?
 
சாப்பாடு கொண்டுவந்த கப்பலையே ஜே ஆர் திருப்பி அனுப்பியது மட்டும் அல்ல ..... ராஜீவிற்கு பிடரியிலும் போட்டு அனுப்பினார்.
புலிகள் எப்படி எப்போது ஒபந்ததை குழப்ப வெளிக்கிட்டார்கள்? 
அப்படி ஒரு பழி வரும் என்பதற்காவே குமரப்பா புலேந்திரன் ஆகியோர் சரணடைந்தார்கள். அவர்கள் அன்டன் பாலசிங்கம் அவர்களை கேட்டது தாம் தற்கொலை செய்ய போவதாக. அதை தடுத்து சரணடையும்படி சொன்னது தலைவரும் அன்டன் பாலசிங்கம் அவர்களும்.
 
சோபா சுத்தியின் கதை புத்தகம் வாசித்து அரசியல் எழுதினால் ........இப்படிதான் உங்களால் எழுத முடியும்.
அல்லது நீங்கள் எழுதுவதை நிருபிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.