Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் eiffel tower க்கு அருகில் தேசிய தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வன்னியில இல்லாட்டிலும் வீட்டில இருந்து கொண்டு கணணியில் அரசியல் செய்து கொண்டு இருக்கேல்ல

சும்மா கட்டிலில் காலாட்டி கொண்டு இருந்தோம் என்பது.

எதையாவது செய்தார்கள் என்பதை விட மேலாகி விட்டது.

மேன்மையான பரிணாம வளர்ச்சி என்று எண்ணுகிறேன்.

 

இனி ஏதாவது நல்லது செய்பவர்கள் ஒழித்துத்தான் செய்யவேண்டும்.

சும்மா இருப்பவர்களிடம் அடி உதை வாங்க நேரிடும்

  • Replies 130
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பார்ரா.. முள்ளிவாய்க்கால் நேரத்தில இந்து சமுத்திரத்தில கட்டவுட் போட்டு போராளிகளை மீட்ட மூஞ்சி ஒன்னு.. எங்களை பார்த்து கருத்துச் சொல்லுறதை. நீங்க எங்க கிடந்தீங்கன்னு.. முதல்ல நினைச்சுப் பாருங்க. லண்டன் வீதிகளில் நடந்த போராட்டத்தில் தன்னும் இறங்கினீங்களோ.. ஐயுறவு..!

யாழ் களம் முன்னெடுத்த வணங்கா மண் உதவித் திட்டத்தில் கூட பங்கெடுக்காத ஆள் நீங்க.

மொதல்ல.. உங்க முதுகு ஊத்தை உரசிக் கழுவிட்டு.. அடுத்தவன் முதுகை விமர்ச்சிக்க முனையுங்க. இல்ல அசிங்கமாயிடும். :lol::D

என்ட முதுகில என்ன ஊத்தையை கண்டீங்கள்..நீங்கள் வணங்கா மண் திட்டத்தில் பங்கி பற்றினீங்களா?...அதில பொறுப்பாக இருந்த ஒருத்தர் சொன்ன பல விசயங்கள் எனக்குத் தெரியும் தேவையில்லாமல் என்ட வாயைக் கிளறாமல் தயவு செய்து தலைப்போடு உரையாடவும்

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் உங்களுகுத் தெரியாமலே உங்களுக்குள் இருக்கும் superiority complex ரதி! நீங்கள் மட்டுமே உண்மை பேசுவது, மற்றவர்கள் பார்வைக் குறைவினால் கருத்துக்களைக் கவனிப்பதில்லை, நீங்கள் தவிர மற்றவர்கள் சளாப்புவோர்....

பதில் எழுதும் போது ஒரு நக்கலையும் சேர்த்தே எழுதுவதும் உங்கள் SC இன் அறிகுறி தான்! எல்லாரும் nasty ரதி எண்டு கூப்பிடப் போறங்கள்! :D

 

meditation_for_pain_relief.jpg

Edited by Justin

ஆகா  அருமை  யாழ்  களம்  ரொம்ப  மாறி  மாறி  இருக்கு நாயகன்  படம்  பார்த்தது  போல இருக்கு  தப்பு  பண்ணு  ஆனால்  அது  சரியான காரியத்துக்கு  கொடுத்தால்  தப்பு இல்லை நீயும்  நல்லவனே ....மற்றவனிடம்  புடுங்கும்  காசில்  தலைவருக்கு  கேக்கு  வெட்டின  நீயும்  நலவனே ...

 

ஜஸ்டின்  அண்ணே..... பரிதி  அவர்களின்  கொலையை நாம் தான்  புலி  உறுப்பினர்  கொலையா  பார்க்கிறம் போலிஸ்  இரண்டு கோஷ்டி  சண்டையாத்தான்  பார்க்குது  பகை  தீர்க்க பட்டது அவ்வளவுதான் இதுக்கு ஆதாரம்  அவனுக்கு  தேவை  இல்லை  பாருங்கோ செய்தவன் இல்லை  பிடிபட்டவன்  நேரடி  தொடர்பு  இல்லை எவனை விசாரிப்பது ...

 

 

இனி  பாம்புக்கு  நல்ல  காலம்  போல பாரிசில்  இப்பத்தான்  புரியுது  எந்த பொத்தில்  எந்தபாம்பு  கிடக்கும்  என்று  எவர்  கண்டார் .


இந்த  விவாதம்  பார்த்த  ஒரு  தம்பி  எனக்கு  அனுப்பிய  செய்தி ..

 

 

 

பிரபாகரன் புகைப்பதில்லை. மது அருந்துவதில்லை. பெண்கள்.... ஊஹூம்.... அந்தப் பழக்கமே இல்லை.

ஆனால் அவரது பக்தகோடிகள் ( என்று சீன் போடுபவர்கள் ) பச்சைக் குடிகாரர்களாகவும், செயின் ஸ்மோக்கர்களாகவும் இருக்கிறார்கள். 

கஞ்சா, பான்பராக் எதையும் விட்டுவைப்பதில்லை இவர்கள்.

இந்த லட்சணத்தில “பிரபாகரனை பின்பற்று பிறந்த உன் மண்மேல் வையடா பற்று” என்று பாட்டு வேற!

போங்க, நீங்களும் உங்கட பற்றும்.

அருணன் .

தலைவர் வன்னியில் இருந்தபோது  இவர்கள் இப்படியெல்லாம் செய்ய அனுமதித்திருப்பாரா ?

தலைவர் வன்னியில் இருந்தபோது  இவர்கள் இப்படியெல்லாம் செய்ய அனுமதித்திருப்பாரா ?

அருமையான  கேள்வி  அண்ணே இதுக்கும் பதில் இப்படித்தான்  வரும் பாருங்கோ   ..

 

ஓடி வந்து  அசுல் அடிச்சவ செய்யலாம்  என்று ...எலிசபோத் மகாராணியின்  பேரன் சொல்லுவார்  :D

 

களவெடுத்து காசை   அள்ளி  விசலாம் என்று .....வன்னியில்  சாப்பிடாமல்  கிடப்பவனுக்கு  மட்டும்  இல்லை  :lol:

 

யாழில்  குடிப்பவர்கள்  இல்லையா .........பெரும்பாலும்  குடிகாரர்  போல  எல்லோரும்  அமைதி காக்கினம்  :rolleyes:

 

சீமானுக்கு  பிறகு ஈழம் பாம்பு குறுப்த்தான்  பிடிக்கும் தெரியுமே ...........அஞ்சரனுக்கு  பொறாமை  :icon_idea:

 

எல்லோரும்   கேக்  வெட்டினார்கள்  ஆனால்  பாம்பின்  கேக்கு தான்  துளசிக்கு தெரிந்ச்சது .........ஒருவேளை உறுபினர்  போல   :o

தலைவரால் தேசியக் கொடி பற்றிய கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. அது என்னிடம் இபோது இல்லை. அதில் தேசியக் கொடிக்கு எவ்வாறு மரியாதை செய்யப்பட வேண்டும் எவ்வாறு பிடிக்கப்பட வேண்டும் என்றெல்லாம்  விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

குடிப்பது அநாகரீகமான செயல் அல்ல. அருவருக்கத்தக்கவாறு நடுவிரலைக் காட்டுதலும்,  பகிரங்கமாகச் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுதலும், பின்னர் தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டு திரிபவர்களைப் பார்க்க அருவருப்பாக உள்ளது. இத் திரியில் இணைக்கப்பட்ட படங்களைப் பார்த்தபோது தேசியக் கொடியை மட்டுமல்ல போராட்டத்தையே அவமதிபப்தாக உணரமுடிகிறது. தங்களைப் புனிதர்களாகக் காட்டக் கொடியைப் போர்த்தியிருக்கத் தேயையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஜவான் இங்கு வந்தபோது  நான் அவனை சந்திக்கப் போய் காரில் அவனை ஏற்றி அவனது பொதியை காருக்கு பின்னால் வைக்கும்போது டிக்கியில் இருந்த கொடியை பார்த்து கோபமாகி என்னடா கொடியை இப்படி எறிஞ்சு இருக்கிறாய் எண்டு சொல்லி எனக்கு கொடி பாவிக்கிற முறையை வகுப்பெடுதிருந்தான் ..எரிச்சலாக இருந்தது ..கொடி எண்டால்  கம்பத்திலை ஏத்தி  அண்ணாந்து பாத்து சலுட் அடிக்காமல் கொடியை முதுகிலும் இடுப்பிலும் .குண்டியிலும் கட்டலாம் எண்டு அவனுக்கு சொன்னபோது பேசாமல் தலையை குனிந்து என்னமோ செய்யுங்கோ  எண்டான் ..எனவே கொடியை எங்கு யார் கட்டினாலும் தவறு இல்லை

 

ஜவான் என்பவர் யார் என்றும் சிலர் கேள்வி எழுப்புவார்கள்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவை

தமிழீழத் தேசியக் கொடி பயன்பாட்டுக் கோவையின் முழுவிபரம்:

01. முன்னுரை
உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.
மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார்.
நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.
உலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றிப்போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ்ச்சியுடன் வெளியிடுகிறோம்.

02. தேசியக்கொடியின் தன்மை
ஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.

03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்
ஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன.

04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்
நாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.
நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.
வெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.
தேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.
கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.
சீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.
வணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.
தேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.
தேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.
தற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.
தேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.
தேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்கமுடியாத இழி நிலையாகும்.
தேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.

05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக்கூடாதவை
தேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.
தேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.
தேசியக்கொடியைத் தலைகீழாகப் பறக்கவிடக்கூடாது.
மடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.


06. கொடிமீது கொண்ட பற்று
சிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்.
தேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன.


07. தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு
எமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றிவைக்கப்பெற்றது.

08. நிறங்களும் குறிக்கோளும்
எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.
தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.
விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.
விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.

09. தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும்
கொடியின் வகை அளவு கொடிக்கம்பபீடத்துக்குமேலுள்ள அளவு
ஏற்றுங்கொடி/பொதுக்கொடி 4 x 6 24
- உள்ளிடக்கொடி 3 x 5 9
எழுச்சிக்கொடி 2 x 3 18
வீட்டுக்கொடி 2 x 3 18
அணிவகுப்புக் கொடி 2 x 3 -6
ஊர்திக் கொடி 1 x 1.5 2
மிசையக்கொடி (மேசைக்கொடி) 6 x 9 15

பொதுக்கொடி 4 x 6
விடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.

உள்ளிடக்கொடி 3 x 5
அரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.

எழுச்சிக்கொடி 2 x 3
பொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.

வீட்டுக்கொடி 2 x 3
தாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம்.

அணிவகுப்புக்கொடி 2 x 3
அணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.

10. கொடிக்கம்பமும் கயிறும்
கொடிக்கம்பங்கள் மேற்குறிக்கப்பட்ட அளவுகளில் வெள்ளிநிறத்தில் இருத்தல் வேண்டும.; கொடிக்கம்பத்தின் நுனியில் வெள்ளி நிறமுடையதும் இங்குக் காட்டப்பட்ட வடிவிலமைந்ததுமான முடி பொருத்தப்படவேண்டும். கொடிக்கயிறு வழுக்காமலிருப்பதற்காகக் கயிற்றைக் கட்டுமிடத்தில் தடை அமைக்கப்படல் வேண்டும். இத்தடை பீடத்திலிருந்து மூன்றாவது அடியில் இருத்தல் வேண்டும். கொடிக்கயிறு வெள்ளை நிறத்தில் இருத்தல்வேண்டும். கொடிக்கம்பம் பீடத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். பீடம் இல்லாத இடங்களில் நிலமட்டத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். கொடிக்கம்பம் 2 அங்குல விட்டமுடையதாக இருக்கவேண்டும்.

11. கொடிப்பீடம்
கொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும்.

12. கொடியேற்றும் முறை
தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும்.

13. கொடியின்பார்வை
கொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும்.

1
4. தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்
கொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.
மங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.
தேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.
தேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.
கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும்.


15. எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள்
(கொடிக்கம்பத்தின் முன்பக்கத் தோற்றம்)
தமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவேண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக்கவேண்டும்.

16. தேசியக்கொடியும் ஏனைய கொடிகளும்
எமது தேசியக் கொடியுடன் எமது முப்படைகள், காவற்றுறை, படையணிகள், உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். விளையாட்டுக் கழகங்கள், குமுகாய அமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளைப் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள கம்பங்களில் ஏற்றும்போது தேசியக்கொடியின் அளவைவிடச் சிறிய அளவிலான கொடிகளைத் தேசியக்கொடிக் கம்பத்தைவிட 4 உயரம் குறைவான கம்பங்களில் ஏற்றவேண்டும். அதாவது தமிழீழத் தேசியக்கொடி மற்றக் கொடிகளைவிட4 கூடுதலானஉயரத்தில் இருக்கவேண்டும்.

16.1தேசியக்கொடிக்கு இடப்புறமாகச் சமனான இடைவெளியில் ஏனையகொடிகள் ஏற்றப்படலாம்.
(கொடிக்கம்பத்தின் முன்பக்கத் தோற்றம்)

16.2 தேசியக்கொடிக் கம்பத்திலிருந்து ஏழு அடிக்குப்பின்னால் தேசியக்கொடிக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தமிழீழத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் கொடிகளும் காவற்றுறையின் கொடியும் சமனான இடைவெளியிற் பறக்கவிடப்படலாம்.

16.3 தேசியக் கொடிக்குப்பின்னால் 16. (2) இற்கமைவாக முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகளும் அவற்றுக்குப் பின்னாற் போதிய இடைவெளிவிட்டுப் படையணிகளின் கொடிகளும் பறக்கவிடப்படலாம்.

16.4 உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குமுகாயவமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளும் தேவைக்கேற்ப பறக்கவிடப்படலாம். தேசியக் கொடியுடன் முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகள் பறக்கவிடப்படும் நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னாலேயே மேற்படிக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட கொடிகளும் படையணிக் கொடிகளும் ஒரே நிரையிற் பறக்கவிடப்படலாம். உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள் முதலியவற்றின் கொடிகள் நிகழ்ச்சி நடைபெறும் திடலின் பின்புறமாக உட்பக்கத்திலும் பறக்கவிடப்படலாம்.

16.5 தேசியக்கொடியுடன் இங்குக் குறிக்கப்பட்ட ஏனைய கொடிகளைக் கூட்டமாகப் பறக்கவிடும்போது ஏனைய கொடிக்கம்பங்களைவிட உயரமான கொடிக்கம்பத்தில் எல்லாக்கொடிகளுக்கும் நடுவில் தேசியக்கொடியைப் பறக்கவிடவேண்டும்.

தேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பே ஏனையவை ஏற்றப் படவேண்டும் ஏனையவற்றை இறக்கியபின்பே தேசியக் கொடியை இறக்கவேண்டும். அரைக்கம்பத்திற் கொடிகளைப் பறக்கவிடும்போது ஏனைய கொடிகளை அரைக் கம்பத்திற்குக் கொண்டுவந்தபின்பே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்குக் கொண்டுவரவேண்டும்.
1455941_669363569774581_1399666198_n.jpg

 


இதெல்லாம் சும்மா பம்பலுக்கு எழுதின சட்டங்கள் விரும்பினவர் விரும்பிய படி செய்வது நல்லது யாராவது எதாவது சொன்னால்  துரோகி அவ்வளவுதான் ..


 

Edited by sathiri

முதலில இதை சீமானுக்கு அனுப்புங்கோ!!!  :o

  • கருத்துக்கள உறவுகள்

முதலில இதை சீமானுக்கு அனுப்புங்கோ!!!  :o

 

சீமானுக்கு கொடி பிடிக்கிற ஆக்களிட்டை சொல்லுங்கோ

இதுக்க ஏன் இப்ப சீமான்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்க ஏன் இப்ப சீமான்  :lol:

பச்சைமிளகாய் உப்பு எல்லாம் கொண்டுவந்து செருகினால்தான் ..... வசதியாய் பரோட்டா போடலாம்.
இதைத்தானே திரிக்கு திரி செய்கிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புலிக்கொடி ஏற்றும்பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்ட தமிழீழக்கொடி பயன்பாட்டுக்கோவைக்கு அமையத்தான் ஏற்றி இருக்கிறார்..

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் புலிக்கொடி ஏற்றும்பொழுதெல்லாம் மேற்குறிப்பிட்ட தமிழீழக்கொடி பயன்பாட்டுக்கோவைக்கு அமையத்தான் ஏற்றி இருக்கிறார்..

 

எது மாவீரர் அஞ்சலி பாடலை போட்டு தனது கட்சி மகாநாட்டில் புலிக்கொடி ஏத்தியதா

தேசியக்கொடிக்கு  சாத்திரி அண்ண   பதிவிட்டது  போல நிச்சயம் மதிப்பும் மரியாதையும் வழங்குதல் ஒவ்வொரு தமிழனதும் உரிமை .அதை இங்குள்ள செயல்பாட்டாளர்களிடம் இருந்து பார்த்து தெரிந்து கொண்டேன் .அவர்கள் சில நேரங்களில் இப்படிஎல்லாம் செய்யாதே என்று கூறும்போது பலர்  அவர்கள் மீது கோபம் கொண்டதையும் கண்டேன்  ஆனால் இது பற்றி இந்த கொடிக்குரிய மரியாதை பற்றி அதை தெரியாதவர்களிடம் நாம் தெரியப்படுத்துவதில்  எங்களுக்கு என்ன பிரச்சனை .............உண்மையான உணர்வு உள்ளவர்கள் என்றால் நிச்சயம் புரிந்து கொள்வார்கள் .......அதற்காக தேசியக்கொடியை தம் உடல் மீது போர்த்துபவர்களை உணர்வு இல்லையென்று ஒதுக்கி ஓரம் கட்டமுடியாது ........பல நாட்டு மக்கள் தம் கொடியை உடல்மீது ஆடையாக போர்த்தியிருப்பதையும் காண்கிறோம் .இவர்கள் எல்லாம் தேசப்பற்று  அற்றவர்கள் என்று அந்த நாட்டு சட்டங்கள்  கூறுவதில்லை ..தங்கள்  கொடி மீது உள்ள பற்று ,உணர்வினாலேயே அதை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் .எம்மவர்களும் அப்படி பல தடவை ஊர்வலங்கலில் போர்த்தி செல்வதை காண்கிறோம் ..ஒட்டு மொத்தத்தில் கொடிக்குரிய மரியாதையை நாம் வழங்குவது  சிறப்பு ,ஆனால் தெரியாதவர்கள் அதை செய்யும்போது அவர்கள் உணர்வில்லாதவர்கள் என்று குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல .............இங்கே இந்த இளைஞ்சர்கள் தேசிய தலைவரது பிறந்த நாளை நினைவு கூர்ந்தார்கள் அவ்வளவுதான் ..அவர்கள் யார் எதற்கு என்றெல்லாம் தேடி அலச வேண்டிய அவசியம் இந்த சந்தர்ப்பத்தில் இல்லை .அதற்கு வேறு சந்தர்ப்பங்கள் உள்ளது அங்கே போய் தேடுவது சிறப்பு என்று நினைக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வன்னியில் இருந்தபோது  இவர்கள் இப்படியெல்லாம் செய்ய அனுமதித்திருப்பாரா ?

அனுமதிப்பது என்பதன் பொருள் சரியாக புரியவில்லை.
 
இங்கு நடந்தது எல்லாம் தலைவரிடம் அனுமதி பெற்றா நடந்தது? 
 
ஆனால் கயோ முயோ என்று கத்தி இதை பெரிது படுத்தி இருக்கமாட்டார். தமிழீழம் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது.
நாட்டில் எல்லா வகையினரும் இருப்பார்கள்.
 
இந்த சந்தடி சாக்கில் .....
பிராபகரன் மது அருந்துவதில்லை ..... புகை பிடிப்பதில்லை. இப்படி திரிக்க வேண்டி கிடக்கிறது நிலைமை. 
 
இனி கொடி  பிடிப்பதென்றால் ......
செத்த போராளிகள் அப்பர் சுந்தரர் சம்மந்தர் என்று மேல் லோகத்தில் இருந்துதான் ஆட்களை இறக்க வேண்டும். 
 
உங்களிடம் ஒரு கேள்வி.
கொடி பிடிக்கும் எல்லோரிடமும். இதற்கு முன்பு அவர்கள் பின்புலம் பரிசோதனை செய்யபட்டா கொடி  பிடித்தார்கள்?
 
இவர்கள் எவளவோ மேலானவர்கள் ............. 
இவர்களுக்கு இன்னொரு பக்கம் என்பது இல்லை.... நாம்  யார் என்பதை வெளிப்படையாக சொல்லிக்கொண்டே செய்கிறார்கள்.
 
புலி கொடி கட்டி பறந்தபோது ............... விழ விழ ஆயிரமாய் எழுந்தவர்கள்.
புலி மாண்ட  பின்பு இந்திய சிங்கள விபச்சார விடுதிகளை தடவி பார்க்க பல்டி அடிச்சு விட்ட பிழைகளை திருத்தியவர்களை விட. இவர்கள் ஆயிரம் மடங்கு மேலானவர்கள். 

போராளிகள்   இரத்தம் ..சிந்தி  கட்டி  எழுப்பிய போராட்டம்  இன்று  கவாலி ..கூத்தாடி  கைகளில்  அகப்பட்டு  சாகிறது .

 

அண்ணா  எங்கிருக்கிறாய்   :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்
இவர்கள் பரிதியை சுட்டபோது பக்கத்தில் நின்று பார்த்தவர்கள்.
ஏன் இவளவு நாளும் வாய் திறக்கவில்லை ?
ஈவில் டவரில் கொடிபிடிக்கும்போது ......... பார்க்கலாம் என்று இருந்தார்காளா?
கூட்டி கழிச்சு பார்க்கும்போது ................
 
அவர்களை சுட கூட்டிப்போனது .....
ஈவில் டவரில் கொடிபிக்க வைத்தது ............
எல்லாம் ?
இவர்கள் திட்டப்படி நடந்திருக்கிறது?

போராளிகள்   இரத்தம் ..சிந்தி  கட்டி  எழுப்பிய போராட்டம்  இன்று  கவாலி ..கூத்தாடி  கைகளில்  அகப்பட்டு  சாகிறது .

 

அண்ணா  எங்கிருக்கிறாய்   :(  :( 

அஞ்சு .எந்த காவாலி  கையிலும் அகப்படல ..............அந்த இளைஞ்சர்கள் தலைவரது பிறந்தனாளைத்தான் கொண்டாடினார்கள் .அவ்வளவுதான் .இதுக்கே இப்படி உனர்ச்சிவசப்படுரீங்க :D ..........  இங்க பலர் தலைவரைப்பற்றியும் ,போராளிகளை பற்றியும் ,அதுவும் குறிப்பாக பெண் போராளிகளை பற்றியும் படு இழிவாக ,மோசமாக விமர்சித்து  எழுதிக்கொண்டிருப்பது உங்கள் கண்ணுக்கு அகப்பட்டிருந்தால் அங்கே  போய்  உந்த புலம்பலை புலம்புவது பேருதவியாய் இருக்கும்  :D

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள்   இரத்தம் ..சிந்தி  கட்டி  எழுப்பிய போராட்டம்  இன்று  கவாலி ..கூத்தாடி  கைகளில்  அகப்பட்டு  சாகிறது .

 

அண்ணா  எங்கிருக்கிறாய்   :(  :( 

உண்டவீட்டை கொளுத்திவிட்டு போபவர்களை விட.
 
போராட்டம் அவர்கள் கையில் இருப்பது எவளவோ மேலானது.

அஞ்சு .எந்த காவாலி  கையிலும் அகப்படல ..............அந்த இளைஞ்சர்கள் தலைவரது பிறந்தனாளைத்தான் கொண்டாடினார்கள் .அவ்வளவுதான் .இதுக்கே இப்படி உனர்ச்சிவசப்படுரீங்க :D ..........  இங்க பலர் தலைவரைப்பற்றியும் ,போராளிகளை பற்றியும் ,அதுவும் குறிப்பாக பெண் போராளிகளை பற்றியும் படு இழிவாக ,மோசமாக விமர்சித்து  எழுதிக்கொண்டிருப்பது உங்கள் கண்ணுக்கு அகப்பட்டிருந்தால் அங்கே  போய்  உந்த புலம்பலை புலம்புவது பேருதவியாய் இருக்கும்  :D

அதுக்கு ஆதரவு கொடுத்தால் அல்லவா ............... போராளிகள் சிந்திய இரத்ததிற்கு பலன் கிடைக்கும்?
நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள். 

 

அனுமதிப்பது என்பதன் பொருள் சரியாக புரியவில்லை.
 
இங்கு நடந்தது எல்லாம் தலைவரிடம் அனுமதி பெற்றா நடந்தது? 
 
ஆனால் கயோ முயோ என்று கத்தி இதை பெரிது படுத்தி இருக்கமாட்டார். தமிழீழம் என்பது நாட்டில் உள்ள அனைவருக்கும் சொந்தமானது.
நாட்டில் எல்லா வகையினரும் இருப்பார்கள்.
 
இந்த சந்தடி சாக்கில் .....
பிராபகரன் மது அருந்துவதில்லை ..... புகை பிடிப்பதில்லை. இப்படி திரிக்க வேண்டி கிடக்கிறது நிலைமை. 
 
இனி கொடி  பிடிப்பதென்றால் ......
செத்த போராளிகள் அப்பர் சுந்தரர் சம்மந்தர் என்று மேல் லோகத்தில் இருந்துதான் ஆட்களை இறக்க வேண்டும். 
 
உங்களிடம் ஒரு கேள்வி.
கொடி பிடிக்கும் எல்லோரிடமும். இதற்கு முன்பு அவர்கள் பின்புலம் பரிசோதனை செய்யபட்டா கொடி  பிடித்தார்கள்?
 
இவர்கள் எவளவோ மேலானவர்கள் ............. 
இவர்களுக்கு இன்னொரு பக்கம் என்பது இல்லை.... நாம்  யார் என்பதை வெளிப்படையாக சொல்லிக்கொண்டே செய்கிறார்கள்.
 
புலி கொடி கட்டி பறந்தபோது ............... விழ விழ ஆயிரமாய் எழுந்தவர்கள்.
புலி மாண்ட  பின்பு இந்திய சிங்கள விபச்சார விடுதிகளை தடவி பார்க்க பல்டி அடிச்சு விட்ட பிழைகளை திருத்தியவர்களை விட. இவர்கள் ஆயிரம் மடங்கு மேலானவர்கள். 

 

 

குடிப்பது (அல்லது புகை பிடிப்பது) அநாகரீகமானதல்ல என்று எழுதியுள்ளேன்.  வாசிக்கவில்லை போலுள்ளது.

 

தலைவர் காலத்தில் Eiffel Tower இங்கேதான் இருந்தது. அப்போது இப்படியானவர்கள் கொடியைப் போர்த்துக் கொண்டு செய்தி வெளியிட்டதாக நான் அறியவில்லை.

ஒருவேளை போராட்டம் 2009 க்குப் பின் இளைஞர் கைகளில் ஒப்படைக்கப் பட்டதால் நிலமை மாறிவிட்டதோ தெரியவில்லை.

 

இவர்கள் பரிதியை சுட்டபோது பக்கத்தில் நின்று பார்த்தவர்கள்.
ஏன் இவளவு நாளும் வாய் திறக்கவில்லை ?
ஈவில் டவரில் கொடிபிடிக்கும்போது ......... பார்க்கலாம் என்று இருந்தார்காளா?
கூட்டி கழிச்சு பார்க்கும்போது ................
 
அவர்களை சுட கூட்டிப்போனது .....
ஈவில் டவரில் கொடிபிக்க வைத்தது ............
எல்லாம் ?
இவர்கள் திட்டப்படி நடந்திருக்கிறது?

 

பாம்பு  குருப்  தலைவர்  கைதுவரை  நடந்து  முடிந்தது  ....உலகம்  பூரா  செய்தியா  வந்தது  அப்ப நீங்கள்  எங்க  இருந்தியலோ  தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

http://sathirir.blogspot.fr/2013/01/blog-post_26.html

ஆனால் தற்சமயம் பரிதியின் கொலை விசாரணை உள்வீட்டு விவகாரம் என்கிற கோணத்திலேயே தான் போய்க்கொண்டிருக்கின்றது. கைதானவர்கள் பரிதியோடு நெருக்கமாக இருந்த ஒரு வன்முறைக் குழுவினர். பரிதி தலைமைச் செயலகத்துடன் இணைவதை விரும்பாத சுவிஸ் ரகுபதியும். லண்டன் தனமும் கொடுத்த அழுத்தத்தினால்  இரும்பொறையே  பாம்பு குழுவிடம் பரிதியை  போடச் சொல்லியிருக்கலாம். இப்படி நடந்ததை பிரெஞ்சு காவல்த்துறை உறுதி செய்தாலும்  செய்ததும் தமிழன் செத்ததும் தமிழன் . எனவேப கணக்கு தீர்த்தல் என்கிற  வகையில் இந்த கொலையை அடக்கி கைது செய்யப் பட்டவர்கள் விசாரணை கைதிகள் என்கிற பெயரிலேயே  ஆறு அல்லது ஏழு வருடங்கள் கழித்து எச்சரித்து விடுவித்து விடுவார்கள்.  அவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி எந்த ஊடகத்திலும் வராது. ஆனால் உண்மையில்  என்ன நடந்தது என்பதனை  ஊடுருவி தேடல்கள் நடத்தி கண்டு பிடித்து கொலையை வெளியே கொண்டு வரும் அளவிற்கு எம்மவரின் எந்த ஊடகமோ  ஊடகர்களோ இல்லை.  எங்களை நாங்களே மகிழ்ச்சிப் படுத்த  எழுதும் ஊடகங்களும்   தலைப்பை மட்டும் மாற்றி விட்டு வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மட்டுமே எம்மிடம் உள்ளது.எனவே பரிதியின் கெலை என்பது  இன்னும் சில காலங்களில் மறக்கப்பட்டதொன்றாகவே மாறிவிடும்.

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஜவானே சொல்லீட்டார் பிறகேன் குத்தி முறியிறீயள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.