Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1980க்களில் போல மக்கள் காட்சியளிக்கின்றனர்

Featured Replies

இதைப் பார்க்கும் போது 1980க்களில் போல மக்கள் காட்சியளிக்கின்றனர்.மொத்தத்தில் தமிழர் போராட்டத்தை ஐந்து வருட காலத்தில் 34 வருடத்துக்கு பின்னோக்கிதள்ளிவிட்டார்கள் எனலாமா?

1459074_912662508767067_5066200625071615       1503893_912662722100379_7932167442765016

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்க்கும் போது நேற்று wimbledon   பிள்ளையார் கோவிலில் நம்ம சனம் சாப்பாட்டுக்கு அடிபட்ட அடிபாடு இது  பரவாய்இல்லை நாய் வாலை நிமிர்தேலாது .

புளட்டு ஆட்கள் நிறையப் பேர் இன்னும் இருக்கிறாங்கள் போலை உங்க ஊரிலை  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

புளட்டு ஆட்கள் நிறையப் பேர் இன்னும் இருக்கிறாங்கள் போலை உங்க ஊரிலை  :icon_mrgreen:

இதப்பாரடா...?? :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனது மிகவும் நெருங்கிய உறவினர் ஒருத்தர் யாழ்ப்பாணம் போயிருந்தார்,

வெளிநாட்டுக்காசு அங்கு உள்ள எல்லாக்கோவிலுக்கும் நிறையக்கிடைக்கின்றது, வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் கொடுக்கிறார்கள் தவிர பறுவம் அமாவாசை தினங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகின்றது, தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் அன்னதானம் தவறாமல் இருக்கும், அங்குகூட அண்மித்த பகுதியில் வேலைசெய்யும் தெல்லிப்பளை வைத்தியசாலை ஊழியர்கள், மற்றும் அரச ஊழியர்கள் அண்மித்த பாடசாலைகளது ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் அன்னதானத்தில் பங்குகொண்டு பசியாறுவதை அவதானித்துள்ளார்.

அண்மையில் இந்தியத் தொலைக்காட்சியொன்றுக்கு பேட்டியளித்த ராதிகா சிற்சபேசன் தான் சென்ற இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தன்னிடம், எங்களுக்கு மிகவும் கஸ்டசீவியம் பண உதவி ஏதாவது செய்யுங்கோ என்று மிகவும் பரிதாபகரமாக கேட்டார்கள் என கூறியிருந்தார்.

அனேகமாக தமிழர்களில் ஒருசாரர் இலவசங்களுக்கு அடிமைப்பட்டுக்கிடப்பதை அவதானிக்கமுடிகிறது,

ஆடுவளர்ப்பு கோழிவளர்ப்பு போன்றவைக்கு வெளிநாட்டு உதவிக்கொடைகள்மூலம், தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு அரசாங்கம் உதவிகள்செய்தாலும் அவைகளைச் சரிவரப்பயன்படுத்துவதில்லை என்பதை அவதானிக்கமுடிகிறது.

இப்படியான விடையங்கள் ஒருசமூக மக்களது காலத்துக்குக் காலம் காணப்படும் கூட்டுமனப்போக்கு இதை வைத்தே அதிரடியாக ஒரு முடிவுக்கு வரமுடியாது.

இவை லண்டன் மாநகரில் காணப்படும் இந்து ஆலையங்களில் வெள்ளிக்கிழமைகளில் சாப்பாடு வாங்கிச்சாப்பிடுவதுபோலத்தான். வாழ்வின் சிறந்த தருணங்களை இப்போது நாங்கள் அனுபவிக்கிறோம் எனத் தம்பட்டமடிக்கும் புலம்பெயர்தேசத்தின் தமிழர்களே தாங்கள் வாழும் வசதிபடைத்தநாடுகளில் இப்படிச்செய்யும்போது குடாநாட்டு மக்கள் இப்படிச்செய்வதில் பெரிசாக ஒன்றும் தவறில்லை.

மாறாக புலம்பெயர்தேசங்களில் கடனட்டை மோசடிகளில் ஈடுபட்டொர் சொல்லும் "ஒரு காலத்தில் எங்களது நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள் அதோட ஒப்பிடுபோது இது ஒண்டும் பெரியவிடையமில்லை" என்பதுபோல் நியாயமாக இலங்கைத் தீவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பகிர்ந்தளிக்கவேண்டியா அரசின் பணம் ஏதோ ஒரு வகையில் கொள்ளையடிக்கப்பட்டு அதில் ஒருபகுதி சாப்பாட்டுப்பொட்டாலமாக அம்மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகின்றது அவ்வளவே.

கிராமப்புறங்களில் கட்டுப்பெட்டியாக வாழும் குடும்பப்பெண்மணிகளை நிதிநிறுவனங்களது அதிகாரிகள் கடனாளிகளாக்கி அவர்களைச் சீரழிக்கும் நடவடிக்கையும் அங்கு அதிகமாக இடம்பெறுகின்றது தவிர ஒரு சில என் ஜி ஓக்களது ஊழியர்களும் இக்கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள்.

இளவயதிலேயே பெண்பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் இல்லறம்தேடி போவது அதிகரித்துள்ளது. இவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் துணைகள் நல்ல வருமானமுள்ள வேலையிலோ அன்றேல் நிரந்தர வேலையிலோ இருப்பதற்கான எந்தவித தெரிவும் இல்லாது கூலிக்கு ஆட்டொ ஓட்டுபவர்கள் மற்ரும் நாட்கூலிக்குப் போபவர்கள் இப்படியானவர்களையே இவ்விளம்பெண்கள் தங்கள் துணையாகத் தேர்ந்தெடுக்கின்றார்கள். அதனைக்கும் மத்தியில் ஒரு நல்ல வளமான வாழ்கையை அமைத்துக் கொடுக்கக்கூடிய பெற்ரோரது பிள்ளைகளே இப்படியான முடிவுகளை எடுக்கின்றார்கள்.

சிறுவர் மற்றும் இளையோர் மத்தியில் போதைப்பொருள்ப் பழக்கம் அதிகமாகக் காணப்படுகின்றது. அவர்களிடம் பணப்புழக்கமும் அதிகமாகக் காணப்படுகின்றது.

சிறுகுடும்பங்கள் அதிகமான நேரடி உறவினர்களைக்கொண்டிருந்தாலும் அவர்களது நெருக்கடியான வேளைகளில் யாரும் அவர்களுக்கு உதவுவதிலிருந்து விலகியே நிற்கின்றார்கள்.

மேற்கூறிய அனைத்தும் காணப்படும் ஒருதேசத்தில் இப்படியான காட்சிகளையே எதிர்காலத்தில் எம்மால் காணமுடியும்.

எனினும் இவைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளி அரசியல்ரீதியான முடிவுகள்  மற்ரும் சமூகம் சார்ந்த முடிவுகளில் மிகவும் புத்திசாலித்தனான இலக்குகளைநோக்கி அவர்கள் பயணிப்பதே எல்லோராலும் வியக்கத்தக்கதான விடையமாக இதுவரை கருதப்படுகின்றது, எதிர்வரும் சிறீலங்காவின் அதிபருக்கான தேர்தலில் அத்தீவில் வாழும் தமிழ் வாக்காளர்கள் எந்த மொழியில் பேசப்போகிறார்கள் என்பதே மில்லியன் டாலர் கேள்வி, இருந்தாலும் நம்பிக்கையே வாழ்க்கை.

புளட்டு ஆட்கள் நிறையப் பேர் இன்னும் இருக்கிறாங்கள் போலை உங்க ஊரிலை  :icon_mrgreen:

நல்ல விபரமான அரசியல் தெரிந்த ஆட்கள் இருக்கினம் என்கின்றார் போல  :lol:

இது ஒரு சாதாரண விடயமில்லை ....
ஒரு இன குழுமத்தின் அல்லது மக்கள் கூட்டத்தின் பலம் பலவீனம் என்பவற்றை நன்றாக எடுத்து காட்டுகிறது.
 
கோவில்களில் தாராளமாக வெள்ளிகிழமைகள் செவ்வாய் கிழமைகளில் அன்னதானம் வழங்கும் ஒரு மக்கள் கூட்டம்.
அந்த கோவிலில் இருந்து ஒரு 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அகதி முகாமை எட்டி பார்பதில்லை.
 
தெல்லிபளை கோவிலிலோ லண்டன் கனடா கோவிலிலோ யாரும் பட்டினி கிடப்பவன் உணவிற்கு செல்வதில்லை (தெள்ளிபளைக்கு ஓரிருவர் போகலாம்).
அன்னதான முறையே முன்னைய காலத்தில் பக்த்தர்கள் பல மயில்கள் தூரம் கால்நடையாக வந்து சுவாமியை வணங்குவார்கள். (இப்போதும் கூட யாழில் இருந்து கால் நடையாக கதிர்காமம் செல்வார்கள்) அப்படியான பக்த அடியார்களை கருத்தில் வைத்து ஒரு நல்ல சிந்தனையோடு செயல் படுத்திய விடயம். இன்று எமது கோவிலா? உமது கோவிலா? என்ற நிலையில் வந்து நிற்கிறது.
 
கடவுள் தங்களை ஆசிவதிப்பார் என்ற அடிமுட்டாள் தனத்தில் ஒரு ஆணவம் தலைக்கேறிய கொடுமையை செய்கிறர்கர்கள்.
கடவுளே அருள கூடிய கருணை நிறைந்த உணர்வுடன் இல்லாதவன் ஒருவனுக்கு பகிர்ந்தளிப்போம் என்றால் ????
இதே மக்கள் கூட்டம் அதற்கு துணிய போவதில்லை. புற முதுகு காட்டி ஓடிவிடும். 
 
இலவசங்களை எல்லோரும் தான் பெற்றுகொள்கிரார்கள் அதில் ஒரு தவறும் இல்லை. இப்போ மேலை நாடுகளில் விளம்பர நோக்கில் இவளவு இலவசங்கள் கொடுக்கிறார்கள். அதுகும் இப்போ இந்த வருட பிறப்பு நேரத்தில் எத்தனையோ பொருட்களை நாம் எல்லோரும்தான் பெற்று கொள்கிறோம்.
 
"ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்"
ஊர் கோவில்களில் ஓவரு வருடமும் சென்று தேர் இழுத்தாலும் இந்த பொருளை விளங்கி கொள்ள இந்த மக்கள் கூட்டத்தின் சுயநல சிந்தனை ஒருபோது அவர்களுக்கு  சந்தர்ப்பத்தை  கொடுக்க போவதில்லை.
ஊர் என்ற தேரையோ  நாடு என்ற தேரையோ இழுக்க இந்த மக்கள் கூட்டம் ஒருபோது கடந்த நூறாண்டு காலத்தில் ஒன்று கூடியதில்லை.
இழுக்க துணிந்தவன் தனது குடும்பம் உறவுகள் உடைமைகள் என்று எல்லாவற்றையும் இழந்து தேய்ந்து இன்று கட்டெறும்பாக அகதி முகாமிலும் தடுப்பு காவலிலும்  இருக்கும்போது கூட எட்டி பார்கவில்லை என்பது நிதர்சனம். 
 
ஊரோ ..... நாடோ ...
இந்த மக்கள் கூட்டத்தால் முன்னேற போவதில்லை என்பதுதான் கசப்பான உண்மை. 

நல்ல விபரமான அரசியல் தெரிந்த ஆட்கள் இருக்கினம் என்கின்றார் போல  :lol:

உண்மைதான் சோத்துபாசல் அரசியலை அவர்கள் அளவிற்கு வேறு யாராலும் தெளிவாக தெரிந்திருக்க முடியாது.
சோத்துபாசல் அரசியலுக்காக ஒரு இயக்கமே நடத்தியவர்கள் அல்லவா ?? 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பட்டினி கிடப்பவர்கள் யாரும் இலவசங்களையோ அன்னதானங்களையோ நாடிச்செல்வதில்லை என்பதே எனதும் கருத்து, அனேகமாகச் சமூகத்தின் இயலாமையில் வாழும் எவருக்குமே ஒரு ஆணவம் இருக்கும் இவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்வதன்மூலமாக நான் இவர்களைப் பழிவாங்குகிறேன் என்பதுபோல், கடைக்கோடி மனிதன் எப்போது இழிநிலைக்குப் போகமாட்டான். இன்னுமொரு இடுகையில் நான் கூறியதுபோல் படித்த நடுத்தர வர்க்கமே சில வக்கிரங்களை தம்மிடத்தே உள்வாங்கியிருக்கும் தன்னால் இயலாத ஒன்றை இன்னுமொருத்தன்மூலம் நிறைவேற்றிப் புழகாங்கிதமடையும். தவிர அன்றாடம்காச்சிகள் இப்படியானதுக்குப் போகமாட்டான் காரணம் தனது வாழ்வுதேடி ஓடும் தொடரோட்டம் இதன்மூலம் முறிதுவிடுமென்பதால்

இவர்கள் இரண்டும்கெட்டான்கள்.

இவர்களால் சமூகத்தில் எந்தவிதான பாதிப்புகளும் வரமாட்டாது.

கோவில், கடவுள் நம்பிக்கை இவற்றுக்கு நான் போகவில்லை எமைச் சுற்றி அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளையே நான் உங்களுக்கு விளக்க முற்பட்டேன்.

மாறாக கோவில் கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் ஈடுபாடு என்பனவும் அதனூடான நிகழ்ச்சிநிரல் என்பனவும் மெகாதொடர்களுடன் அடிபட்டுப்போய்விட்டன. யாழ்குடாநாட்டில் விவசாய முறைமையில் இராசாயன உரங்களையும் கிரிமிநாசினிகளையும் நூறுவீதம் கையாளும் நிலைக்கு மெகாதொடர்களே காரணம் என்பதாகிவிட்டது. நேரத்தைச் சுருக்கி பாரிய இலாபம் பெறும் முயற்சி இன்று யாழ் குடாநாட்டின் நீர் வளத்தில் நைதரசன் செறிமானத்தை அதிகரித்துள்ளது. ஆண்டாண்டுகாலமாய் விவசாயத்தில் ஈடுபட்டோர் மலட்டுத்தன்மைக்கும் புற்றுநோய்க்கும் முடக்குவாதத்துக்கும் ஆளாகிவிட்ட கொடுமை நான் வாழ்க்கைப்பட்ட ஏழாலைக் கிராமத்தில் நடந்துள்ளது. பொன்விளையும் பூமியாகிய கட்டுவன் வடக்குவெளித்தோட்டம் இப்போது விவசாயத்தின் பின்னரான  நோயாளர்களை விளைவிக்கின்றது.

ஏழாலைக்கிராமத்தை அண்டியுள்ள பெரியதம்பிரான் கோவில் குளம் அதாவது ஏழுகோவிலை அண்டிய பகுதியில் அமைந்துள்ள யாழ் குடாநாட்டின் மிகப்பெரிய குளம், இதுபற்றி அண்மையில் நடுவண் அரசினது கவனத்துக்குக்கொண்டுபோய் அதைப்பராமரித்து தூர்வாரினால் குடாநாட்டின் நிலத்தடிநீர்ப்பிரச்சனையை ஓரளவுக்குச் சீராக்கலாம் எனக்கூறியபோது அவர்கள் கூறியபதில் யாழ்குடாநாட்டில் இப்படி ஒரு பெரிய குளம் இருப்பது நில அளவைத் திணைக்களத்தால் எமக்கு இதுவரை கூறப்படவில்லை என, இப்படி இருக்கு எமக்காக அரசியல் செய்பவர்களது நிலை.

போததுக்கு சுண்ணாகத்தின் மின்பிறப்பாக்கிகளது கழிவெண்ணை அப்பகுதியின் விவசாயக் கிணறுகள் அனைத்தையும் ஆக்கிரமித்துவிட்டது. எம்மால் அவர்களை இனிமேல் இப்பிரச்சனையிலிருந்து மீட்கவே முடியுமா எனும் கேள்வியே இப்போது மிஞ்சிநிற்கின்றது.

காலத்துக்குக் காலம் எமக்குக் கஞ்சி ஊத்தியவர்கள் இன்று நோயாளிகளாக, சோம்பேறிகளாகவே யாழ் நகரின் மையப்பகுதியில் வாழ்பவர்கள் இரணைமடுக்குளத் தண்ணீருக்கு வாய் பிளந்துநிற்கின்றார்கள். ஒரு விவசாயிடமிருந்து பறித்தொடுத்து இன்னுமோர் விவசாயிக்குக் கொடுத்தால் ஒருவேளை நியாயம் ஆனால் சுற்றுச்சூழலில் எவ்வித கரிசனையும் இல்லாது கண்டதெல்லாம் எனது வாய்க்குள்ளேயே போடவேண்டும் அதுவும் தரமானதாக வேண்டும் எனும் சோம்பேறிகளுக்கு நாம் எதை எதற்காகக் கொடுக்கவேண்டும்.

இங்கு நானும் என்போன்ற சிலரும் கொஞ்சக்காலத்துக்கு இவற்றையெல்லம் எழுதிக்கொண்டு இருப்பம், ஒருசிலர் என்னதான் இருந்தாலும் புலிகள் செய்தது மிகப்பெரிய பிழை அவர்களால்தான் இப்படியெல்லாம் நடந்துபோட்டுது இனிமேல் கதைச்சுப் பிரியோசனம் இல்லை காரணம் கடைசியாக வீட்டிலிருந்த அம்மிக்குழவியையும் கிளப்பியெடுத்து சாக்கில கட்டி இப்ப நான் வாழும் புலம்பெயர் நாட்டுக்குக் கொண்டுவந்திட்டன் என்ன கேடு எண்டாலும் கெட்டுப்போகட்டும் இதுக்குத்தான் சொன்னனான் புலிகளுக்குமேலை காசைகட்டாதையுங்கோ எண்டு சொல்லியபடியே...........சொல்லியபடியே.............அதுக்குப்பிறகு நாங்களும் செத்துப்போயிடுவம்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்
உண்மைதான் 
உங்கள் உள்ளுணர்வை பகிர்ந்ததற்கு நன்றி. 
பல விடயங்களை அறிவு சார்ந்து ஊற்று பார்த்து வருகிறீர்கள்.
 
யாழ் வீதிகளில் 1989-1990 கால கட்டத்தில் திரியும்போது எமது மக்களின் மன நிலை பற்றி அறிவதில் அதிக ஆர்வம் எனக்கு இருந்தது.
அப்போதே முடிவு கடிவிட்டேன்.
கடவுளே இனி வந்தாலும் காப்பாற்ற முடியாது. பிரபாகரன் எம்மாத்திரம் என்று. 
  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுப்பனவு என்று கூப்பிட்டு காய வைச்சிட்டு சனத்துக்கு இதைக் கொடுக்கினமோ..???!

சனத்தை இதில குறை சொல்ல முடியாது. தாகத்தால்.. தவிச்ச வாய்க்கு ஒரு தண்ணி போத்தல் கிடைக்காதா என்ற ஏக்கத்திற்கு வரும் வரை மக்களை காக்க வைச்சிட்டு.. தண்ணி கொடுக்கிறது.. சோடா விற்கிறது.. முன்னர் தாண்டிக்குளத்திலும் சிங்களப் படைகளால்.. நடத்தப்பட்ட உக்தி தான். இப்ப மட்டும்..???!

அப்பாவி ஏழை மக்களை இப்படி ஏமாற்றுவது இது முதன்முறை அல்ல. இந்திய படைகள் காலத்தந்திரமாகவும் இது இருந்துள்ளது. இன்றும் அதே. :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

ஒருபகுதி சனம் சோத்துக்கு ஓடுது, இன்னொரு பகுதி சனம் கள்ளத்தோனியில் ஏறுது.

இன்னுங்கொன்சம் வெளினாட்டு காசில சோக்குப்பண்னி திரிதுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.