Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனச்சாட்சி உள்ளவர்கள் இனச்சாட்சியை மறக்கலாமா? கூட்டமைப்பின் ஜனநாயகப்பிரிவு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மகிந்தவை அப்புறத்தவேண்டுமென்று நினைத்தால் தனிச் சிங்களப் பகுதிகளில் மகிந்தவுக்கு 50 வீதத்திற்கு மேற்பட்ட ஆதரவு இருக்கக்கூடாது. ஆனால் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் பிற இனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் மாவட்டங்களில்தான் மைத்திரிக்கு 50 வீதத்திற்கு மேலான ஆதவரவு உண்டு. எனவே ஆட்சிமாற்றம் வேண்டும் என்று விரும்பும் நடுத்தர, படித்த சிங்களவர்களுடன் முஸ்லிம்களும், தமிழர்களும் (மலையகத் தமிழர் உட்பட) சேர்ந்துதான் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்ற நிலை. இந்த நிலையைச் தமிழ்க்கூட்டமைப்பு சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களுக்குக் குறைந்த பட்சம் இராணுவ அழுத்தம் இல்லாத வாழ்வையாவது தருமாறு பேரம் பேசியிருக்கலாம். எதுவிதமான உறுதிகளையும் அதிகாரபூர்வமாகப் பெற்றுக்கொள்ளாது மைத்திரிக்கு ஆதரவு என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது சரியான முடிவுமல்ல. சாணக்கியமான முடிவுமல்ல. அதிகாரபூர்வமில்லாமலே மைத்திரிக்கு ஆதரவைக் காட்டியிருக்கமுடியும்.

தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தமிழர்களின் ஆதரவும் பலமும் வட மாகாணசபைத் தேர்தலில் மூலம் கிடைத்திருந்தும் கொள்கையில் உறுதியில்லாத, தெளிவாக மக்களை வழிநடாத்தமுடியாத தலைமைதான் கூட்டமைப்பில் உள்ளது. இவர்கள் எதுவித உரிமைகளையும் பெற்றுத் தரமாட்டார்கள். மாறாக இணக்க அரசியலுக்குச் சென்று சலுகைகளை வேண்டுமானால் தங்களுக்குப் பெற்றுக்கொள்வார்கள்.

பொதுவாக நீங்கள் இப்படியான திரிகளில் மௌவுனம் சாதிப்பதே வழமை.

அதன்மூலம் உங்களின் ஒரு உயர் நிலையை அல்லது எதையாவது தக்க வைக்க நினைப்பீர்களோ தெரியாது.

மேடைக்கு வந்து வைத்த கருத்து (இதுதான் உண்மை நிலை என்பது ஆறறிவும் செயற்பாட்டில் இருக்கும் எவனுக்கும் தெரியும்)

அருமை. நன்றி.

எந்த உயர்நிலையும் கிடையாது. கருத்தை வைத்து எவரினதும் நிலைப்பாட்டையும் மாற்றமுடியும் என்று நம்பிக்கை குறைந்துவிட்டதால் மெளனமாக இருப்பதுண்டு. சிலநேரம் திரி திசைமாறுவதால் குட்டையில் இறங்க மனம் வருவதில்லை :)

நீ்ங்கள் கூறியது உண்மை கிருபன். இங்கு கருத்து களம் என்ற ரீதியில் நியாயமான விவாதம் நடைபெறுவது மிக அரிது. ஏற்கனவே ஒரு கட்சியில் அபிமானம் கொண்டவர்கள் தமது கட்சியின் செயலை நியாயப்படுத்தும்  பட்டி மன்றமே தொடர்ந்து நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மகிந்தவை அப்புறத்தவேண்டுமென்று நினைத்தால் தனிச் சிங்களப் பகுதிகளில் மகிந்தவுக்கு 50 வீதத்திற்கு மேற்பட்ட ஆதரவு இருக்கக்கூடாது. ஆனால் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் பிற இனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் மாவட்டங்களில்தான் மைத்திரிக்கு 50 வீதத்திற்கு மேலான ஆதவரவு உண்டு. எனவே ஆட்சிமாற்றம் வேண்டும் என்று விரும்பும் நடுத்தர, படித்த சிங்களவர்களுடன் முஸ்லிம்களும், தமிழர்களும் (மலையகத் தமிழர் உட்பட) சேர்ந்துதான் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்ற நிலை. இந்த நிலையைச் தமிழ்க்கூட்டமைப்பு சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களுக்குக் குறைந்த பட்சம் இராணுவ அழுத்தம் இல்லாத வாழ்வையாவது தருமாறு பேரம் பேசியிருக்கலாம். எதுவிதமான உறுதிகளையும் அதிகாரபூர்வமாகப் பெற்றுக்கொள்ளாது மைத்திரிக்கு ஆதரவு என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது சரியான முடிவுமல்ல. சாணக்கியமான முடிவுமல்ல. அதிகாரபூர்வமில்லாமலே மைத்திரிக்கு ஆதரவைக் காட்டியிருக்கமுடியும்.

தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தமிழர்களின் ஆதரவும் பலமும் வட மாகாணசபைத் தேர்தலில் மூலம் கிடைத்திருந்தும் கொள்கையில் உறுதியில்லாத, தெளிவாக மக்களை வழிநடாத்தமுடியாத தலைமைதான் கூட்டமைப்பில் உள்ளது. இவர்கள் எதுவித உரிமைகளையும் பெற்றுத் தரமாட்டார்கள். மாறாக இணக்க அரசியலுக்குச் சென்று சலுகைகளை வேண்டுமானால் தங்களுக்குப் பெற்றுக்கொள்வார்கள்.

தாயக அரசியல் பற்றி நேர்மையாக அறிந்துள்ள பலரின் கருத்தும்.. இதே தான் கிருபண்ணா. அண்மையில் ஊரில் இருந்து இங்கு வந்துள்ள ஒரு அரசியல் பாடத்துறை பேராசிரியரோடு கதைக்க நேரிட்டது. அவர் சொன்னதும் இதைத்தான்.

இந்த கணவான் அரசியல்வாதிகள் எதையும் தீர்க்க வேண்டும் என்று விரும்புவதில்லை. மாறாக ஒரு காரணியை வைச்சுக் கொண்டு அதன் மூலம் தங்களை நிலைநிறுத்தவே முனைகிறவர்கள்.

அதனால் தான் அவர்களுக்கு விடுதலைப்புலிகளும் இரக்கமற்றவர்களாக தெரிகிறார்கள்... தீர்வென்று எதனையும் வலுவாக முன்னிறுத்தவும் தயங்குகிறார்கள். இதில் ஒரு சாணக்கியமும் இல்லை. வெறும் சூனிய வெளிதான் உள்ளது. ஏதோ சாணக்கியம் உள்ளது போல தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு தங்களின் எதிர்காலத்தை அதற்குள் தக்க வைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவே.

இலங்கையில் மட்டுமல்ல.. தமிழக.. இந்திய முக்கிய சனநாய் அக அரசியல் கணவான்களின் நிலைப்பாடும் இதுதான். :):icon_idea:

சிங்கள மக்கள் மகிந்தவை அப்புறத்தவேண்டுமென்று நினைத்தால் தனிச் சிங்களப் பகுதிகளில் மகிந்தவுக்கு 50 வீதத்திற்கு மேற்பட்ட ஆதரவு இருக்கக்கூடாது. ஆனால் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் பிற இனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வாழும் மாவட்டங்களில்தான் மைத்திரிக்கு 50 வீதத்திற்கு மேலான ஆதவரவு உண்டு. எனவே ஆட்சிமாற்றம் வேண்டும் என்று விரும்பும் நடுத்தர, படித்த சிங்களவர்களுடன் முஸ்லிம்களும், தமிழர்களும் (மலையகத் தமிழர் உட்பட) சேர்ந்துதான் மகிந்தவை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும் என்ற நிலை. இந்த நிலையைச் தமிழ்க்கூட்டமைப்பு சாதகமாகப் பயன்படுத்தி தமிழர்களுக்குக் குறைந்த பட்சம் இராணுவ அழுத்தம் இல்லாத வாழ்வையாவது தருமாறு பேரம் பேசியிருக்கலாம். எதுவிதமான உறுதிகளையும் அதிகாரபூர்வமாகப் பெற்றுக்கொள்ளாது மைத்திரிக்கு ஆதரவு என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது சரியான முடிவுமல்ல. சாணக்கியமான முடிவுமல்ல. அதிகாரபூர்வமில்லாமலே மைத்திரிக்கு ஆதரவைக் காட்டியிருக்கமுடியும்.

தமிழர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான தமிழர்களின் ஆதரவும் பலமும் வட மாகாணசபைத் தேர்தலில் மூலம் கிடைத்திருந்தும் கொள்கையில் உறுதியில்லாத, தெளிவாக மக்களை வழிநடாத்தமுடியாத தலைமைதான் கூட்டமைப்பில் உள்ளது. இவர்கள் எதுவித உரிமைகளையும் பெற்றுத் தரமாட்டார்கள். மாறாக இணக்க அரசியலுக்குச் சென்று சலுகைகளை வேண்டுமானால் தங்களுக்குப் பெற்றுக்கொள்வார்கள்.

கூட்டமைப்பின் உள்குத்து வெட்டுக்கள்,சுயநலங்கள் ,தான் தோன்றித்தனமாக சிலருது நடவடிக்கைகள் ஊரறிந்து .உதாரணங்கள் ஆயிரம் சொல்லலாம் .சமபந்தர் ஒன்று சொல்ல சுரேஷ் ஒன்று சொல்ல ,சிவாஜிலிங்கம் ஒன்று சொல்ல இப்படிதான் இழுபட்டுக்கொண்டு போகின்றது .இப்போ அனந்தியும் தன் பங்கிற்கு அறிக்கை விடுகின்றார் .

 இவ்வளவு குளறுபடிகளையும் தாண்டி ஒரு அமைப்பாக அது செயல்படுகின்றது காலப்போக்கில் மாற்றம் வரலாம் என்று நம்புகின்றேன் 

ஆனால் மைத்திரியுடன்  பேரம் என்று போய் அதை  மக்களுக்கு  அறிவித்து இதுதான் ஒப்பந்தம் என்று வெளிவருவதில் எனக்கு ஒரு வீத உடன்பாடும் இல்லை. அது நடைமுறை பெரிய பாதகத்தை இரு தரப்பிற்கும் ஏற்படுத்தும்  ஆனால் நிட்டசயம் ஒரு வெளியில் வராத ஒரு உடன்பாடு  இருக்கும் .

தேர்தல் முடிய அந்த புரிந்துணர்வு இருந்தால் நல்லதொரு முடிவை கட்டாயம் எட்டலாம் .இது தனிய மைத்திரி ஜனாதிபதி ஆகும் தேர்தல் மட்டுமல்ல அடுத்து நடக்கபோகும் பாராளுமன்ற தேர்தல் சந்திரிகா ,ரணில் போன்றவர்களுடனும் தொடர்பு உடையது .

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதம் இலங்கையை பொறுத்தவரை ஒரு வெற்றிகரமான அரசியல் சித்தாந்தம். ஏன் பண்டா செல்வாவுடனா ஒப்பந்தத்தை கிழித்தார்? ஏன் டட்லி கிழித்தார்? தமிழருடனான எந்த ஒப்பந்தமும் தேர்தலில் தோற்பதற்க்குரிய 100% கரண்டிக்கு சமன்.

தமிழரை விடுங்கள், ஹக்கீம் தனி நிர்வாக அலகு கேட்டு, ரெண்டு பேரும் முடியாது என்று கைவிரிக்கவில்லையா? இங்கே இதுதான் யதார்தம். இப்போது மட்டுமில்லை எப்போதும் நிபந்தனை அற்ற ஆதரவு தாருவதெண்டால் வாருங்கள், இல்லாவிட்டால் பிச்சை வேண்டாம் நாயை பிடி, என்பதுதான் மைத்திரியின் நிலைப்பாடாயிருந்தது. ஆக கூட்டமைப்புடன் ஒரு போதும் மைத்திரி ஒரு உடன்படிக்கையை செய்திரார். ஏனெண்டால் அப்படிச் செய்வது உள்ளதையும் கெடுக்கும் என்று அவருக்கு நன்கு தெரியும்.

மகிந்தவை தொடர்து வைத்திருந்தால் போர்க்குற்ற விசாரணை இறுகும், மாங்காய் விழும் என்பதெல்லாம் சுத்த பேய்கதை. இப்போ நடப்பதே மேற்குலகின் திட்டத்தின் ஒரு பகுதிதான். மகிந்தவுக்கான தண்டனை இதுதான். பதவியிழப்பு, உள்நாட்டு ஊழல் விசாரணை அதன் பின் சிறை. அல்லது இடி அமீன் போல ஏதாவது ஒரு நாட்டில் அடைக்கலம். மகிந்தவுக்கு மேற்க்கு வைத்திருக்கும் திட்டம் இதுதான்.

மீறி இந்த தேர்தலில் மகிந்த வெண்டால் - மனுசன் நிச்சயம் சுதாகரித்து கொள்வார். மேற்க்கின் நண்பராவார். கடாபியையே அரவணைத்த மேற்க்குக்கு மகிந்தவை அணைப்பது ஒண்டும் பெரிசில்லை. எப்படிப் பார்த்தாலும் - போர் குற்ற விசாரணையால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் முன்பே சொன்னது போல, மகிந்தவின் கையில் இருந்து நாமலின் கைக்கு ஆட்சி மாறும், அவ்வளவே.

மைத்திரியை வெல்ல வைத்தால் - நாட்டின் மீட்சியில் - நிபந்தனை இன்றி பங்காளர் ஆனார்கள் என்ற ஒரு எண்ணம் கூட்டமைப்பை பற்றி ஏற்ப்படும். ஹெல உறுமய சொல்வதை பாருங்கள் - இவர்களுடன் ஒரே கூட்டில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு மகா அதிசயம் இல்லையா?

ஆனால் 48/56/83 இல் இருந்த அதே இனவாத மனநிலை இப்போ தெற்கிலும் இல்லை.

உலகமயமாதல் எல்லாரையும் ஜனநாயகப் படுத்துகிறது. நாகாரீகப் படுத்துகிறது. மார்டின் லூதர் கிங் காலத்தில் இருந்த அளவு நிற வேற்றுமை இப்போ அமெரிக்காவில் இல்லை. பிரபாகரனை மிஸ்டர் போட்டு அழைப்பதில் தவறில்லை என இன்று மங்கள சமரவீரவால் பேச முடிகிறது.

ராஜபக்சேக்கள் எவ்வளோ முயன்றும் 83 போல் ஒரு கலவரத்தை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்ட முடியவில்லை. கொழும்பில் எதிர்பேரணி கூட நடந்தது.

காலம் மாறுகிறது. ஆனால் சிங்கள பேரினவாதம் எனும் கருத்தியல் இன்னும் ஒரு பெரும் சக்தியாகவே இருக்கிறது. இதை சிறுக சிறுக உள்ளிருந்தே உடைக்க வேண்டும்.

கூட்டமைப்பு தாமதமாக முடிவு சொன்னது மிகச்சரியே. தமிழ் மக்கள் எப்படியோ மகிந்தவுக்கு போடப் போவதில்லை. மைத்திரி ஒரு போதும் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்யப்போவதில்லை. இந்நிலையில் முடிவை அறிவிக்க அவசரம் ஒண்டும் இல்லை. முடிவை முன்பே அறிவித்திருந்தால் - நாட்டை பிரிக்க சதி எனும் கோசம் எழும்பி, மைத்திரிபாலவை ஆரம்பத்திலேயே நசுக்கி இருக்கும்.

இப்போ அப்படி இல்லை, சோபிதர், ஹெல உறுமய எல்லோரும் மைத்திரியின் சிங்கள பெளத்தை இமேஜை நன்றாக உயர்த்தியபின், கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவு எனும் போது, நாட்டை பிரிக்க கூட்டமைப்புடன் சதி எனும் அரசின் பிரச்சாரம், எடுபடாமலேயே போயிற்று.

இது ஒரு ராஜதந்திர மாஸ்டர் ஸ்டிரோக்.

அர்ஜுன் அண்ணா,

கணவான் அரசியல் செய்வது கூட்டமைப்பு மட்டும்தான் என்று நான் நினைக்கிறேன். சிங்களப் பேரினவாதிகளுக்கு அப்படியொரு அரசியல் இருப்பது தெரியாது. அனைவரும் அறியத் தக்கதாகக் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையே கிழித்தெறிந்து இனவாதத்தை நெய்யூற்றி வளர்த்தவர்கள் சிங்கள அரசியல் தலைவர்கள்( ரணிலின் மாமா, சந்திரிக்காவின் அப்பா உற்பட).

ஆக, எவருக்கும் தெரியாமல் செய்துகொள்ளப்பட்ட ரகசிய ஒப்பந்தத்தை மதித்து மைத்திரிபாலவும், ரணிலும், சந்திரிக்காவும் தமது பொது எதிரணி பதவிக்கு வந்தவுடன் தமிழருக்கு ஏதாவது செய்வார்கள் என்கிறீர்கள். அப்படியானால் இவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் சிகல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, ஜே. வீ. பி போன்றவர்களுக்கு இந்த கூட்டணி என்ன பதில் வைத்திருக்கிறது ? இவர்களின் எதிர்ப்பையும் தாண்டி தமிழர்களுக்கு ஏதாவது கொடுக்க முடியுமா இவர்களால்?

13 ஆம் சரத்து மலினப்படுத்தப்படவேண்டும், சமஷ்ட்டி என்கிற பேச்சே எடுக்கக் கூடாது, ஆளுனருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என்று பாட்டாலி சம்பிக்க ரணவக்க மைத்திரியுடன் ஒப்பந்தம் செய்ததாக கேள்வி.

எனது ஆதங்கம் என்னவென்றால், நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்லிக் கொண்டு கூட்டமைப்பு அவர்களின் காலில் விழுந்துவிட்டதே என்பதுதான். ஏனென்றால் ரகசியமாகச் செய்யப்பட்ட கணவான் ஒப்பந்தங்கள் பற்றி நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பதில்லை. ஆக இந்த ஒப்பந்தங்கள் ஒருபோதுமே நடைமுறைப் படுத்தப்படப் போவதில்லை. ஏற்கனவே தமது வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் கூட்டமைப்பினால் வழங்கப்படும் நிபந்தனையற்ற ஆதரவினை அவர்கள் எவ்வளவு தூரத்திற்கு மதித்து ஏற்றுக்கொள்வார்கள் என்கிற கேள்வியும் இருக்கிறது.

எமது மக்கள் நிச்சயம் மகிந்தவை எதிர்த்தே வக்களிப்பார்கள். இதற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு என்கிற தட்டில் தமது சரணடைதலை மைத்திரிரியின் காலில் வைத்து வணங்கவேண்டிய எந்தத் தேவையும் இருக்கவில்லை என்பதுதான் எனது தாழ்மையான கருத்து. கூட்டமைப்பு மக்களிடன் சரியானதைச் செய்யுங்கள் என்று கேட்டுவிட்டு இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதம் இலங்கையை பொறுத்தவரை ஒரு வெற்றிகரமான அரசியல் சித்தாந்தம். ஏன் பண்டா செல்வாவுடனா ஒப்பந்தத்தை கிழித்தார்? ஏன் டட்லி கிழித்தார்? தமிழருடனான எந்த ஒப்பந்தமும் தேர்தலில் தோற்பதற்க்குரிய 100% கரண்டிக்கு சமன்.

தமிழரை விடுங்கள், ஹக்கீம் தனி நிர்வாக அலகு கேட்டு, ரெண்டு பேரும் முடியாது என்று கைவிரிக்கவில்லையா? இங்கே இதுதான் யதார்தம். இப்போது மட்டுமில்லை எப்போதும் நிபந்தனை அற்ற ஆதரவு தாருவதெண்டால் வாருங்கள், இல்லாவிட்டால் பிச்சை வேண்டாம் நாயை பிடி, என்பதுதான் மைத்திரியின் நிலைப்பாடாயிருந்தது. ஆக கூட்டமைப்புடன் ஒரு போதும் மைத்திரி ஒரு உடன்படிக்கையை செய்திரார். ஏனெண்டால் அப்படிச் செய்வது உள்ளதையும் கெடுக்கும் என்று அவருக்கு நன்கு தெரியும்.

மகிந்தவை தொடர்து வைத்திருந்தால் போர்க்குற்ற விசாரணை இறுகும், மாங்காய் விழும் என்பதெல்லாம் சுத்த பேய்கதை. இப்போ நடப்பதே மேற்குலகின் திட்டத்தின் ஒரு பகுதிதான். மகிந்தவுக்கான தண்டனை இதுதான். பதவியிழப்பு, உள்நாட்டு ஊழல் விசாரணை அதன் பின் சிறை. அல்லது இடி அமீன் போல ஏதாவது ஒரு நாட்டில் அடைக்கலம். மகிந்தவுக்கு மேற்க்கு வைத்திருக்கும் திட்டம் இதுதான்.

மீறி இந்த தேர்தலில் மகிந்த வெண்டால் - மனுசன் நிச்சயம் சுதாகரித்து கொள்வார். மேற்க்கின் நண்பராவார். கடாபியையே அரவணைத்த மேற்க்குக்கு மகிந்தவை அணைப்பது ஒண்டும் பெரிசில்லை. எப்படிப் பார்த்தாலும் - போர் குற்ற விசாரணையால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் முன்பே சொன்னது போல, மகிந்தவின் கையில் இருந்து நாமலின் கைக்கு ஆட்சி மாறும், அவ்வளவே.

மைத்திரியை வெல்ல வைத்தால் - நாட்டின் மீட்சியில் - நிபந்தனை இன்றி பங்காளர் ஆனார்கள் என்ற ஒரு எண்ணம் கூட்டமைப்பை பற்றி ஏற்ப்படும். ஹெல உறுமய சொல்வதை பாருங்கள் - இவர்களுடன் ஒரே கூட்டில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு மகா அதிசயம் இல்லையா?

ஆனால் 48/56/83 இல் இருந்த அதே இனவாத மனநிலை இப்போ தெற்கிலும் இல்லை.

உலகமயமாதல் எல்லாரையும் ஜனநாயகப் படுத்துகிறது. நாகாரீகப் படுத்துகிறது. மார்டின் லூதர் கிங் காலத்தில் இருந்த அளவு நிற வேற்றுமை இப்போ அமெரிக்காவில் இல்லை. பிரபாகரனை மிஸ்டர் போட்டு அழைப்பதில் தவறில்லை என இன்று மங்கள சமரவீரவால் பேச முடிகிறது.

ராஜபக்சேக்கள் எவ்வளோ முயன்றும் 83 போல் ஒரு கலவரத்தை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்ட முடியவில்லை. கொழும்பில் எதிர்பேரணி கூட நடந்தது.

காலம் மாறுகிறது. ஆனால் சிங்கள பேரினவாதம் எனும் கருத்தியல் இன்னும் ஒரு பெரும் சக்தியாகவே இருக்கிறது. இதை சிறுக சிறுக உள்ளிருந்தே உடைக்க வேண்டும்.

கூட்டமைப்பு தாமதமாக முடிவு சொன்னது மிகச்சரியே. தமிழ் மக்கள் எப்படியோ மகிந்தவுக்கு போடப் போவதில்லை. மைத்திரி ஒரு போதும் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்யப்போவதில்லை. இந்நிலையில் முடிவை அறிவிக்க அவசரம் ஒண்டும் இல்லை. முடிவை முன்பே அறிவித்திருந்தால் - நாட்டை பிரிக்க சதி எனும் கோசம் எழும்பி, மைத்திரிபாலவை ஆரம்பத்திலேயே நசுக்கி இருக்கும்.

இப்போ அப்படி இல்லை, சோபிதர், ஹெல உறுமய எல்லோரும் மைத்திரியின் சிங்கள பெளத்தை இமேஜை நன்றாக உயர்த்தியபின், கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவு எனும் போது, நாட்டை பிரிக்க கூட்டமைப்புடன் சதி எனும் அரசின் பிரச்சாரம், எடுபடாமலேயே போயிற்று.

இது ஒரு ராஜதந்திர மாஸ்டர் ஸ்டிரோக்.

கோஷான்,

உங்களின் கருத்துகள் சிலதுடன் உடன்பட முடியவில்லை.

சிங்கள இனவாதம் இப்போது இல்லையென்கிறீர்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தமிழ் மக்களை முற்றானதொரு இராணுவ ஆக்கிரமிப்பினுள் வைத்துக்கொண்டு அதை நாட்டின் பாதுகாப்பென்று நியாயப்படுத்துவது சிங்கள இனவாதமில்லையா??

நாளுக்கொரு விகாரை தமிழரின் தாயகத்தில் முளைப்பது இனவாதமில்லையா?

அளுத்கமவில் முஸ்லீம்களுக்கெதிராக நடத்தப்பட்டது இனவாதமில்லையா?? சின்ன இனவாதம், பெரிய இனவாதம் என்பவற்றிற்கிடையே என்ன வேறுபாடு இருக்கிறது ? எல்லாமே ஒரு இனத்தின் மேலுள்ள எதிர்ப்பினால் வருவதுதானே?

என்ன , ஒரே வித்தியாசம், 1983 வரை அரசு மறைமுகமாக ஊக்குவிக்க சிங்களக் காடையர் இனவாதத்தில் ஈடுபட்டனர், இப்போது அரசே நேரடியாக நாட்டின் பாதுகாப்பு, சிங்கள ராணுவ வீரரின் வாழ்வு என்கிற பெயரில் செய்கிறது, ஆகவே சிங்களப் பொதுமக்களுக்கு புதிதாக இனவாதாத்தைக் கைய்யில் தூக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழருக்கெதிரான இனவாதம் என்பது தமிழினம் இலங்கையில் இருக்கும்வரை இருந்துகொண்டேயிருக்கும். அதன் வடிவங்களும், அழைக்கப்படும் சொற்பிரயோகங்களும் வேண்டுமென்றால் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, சிங்களச் சிப்பாய்களின் நலன், அரச நிலங்கள், தீவிரவாதம் என்கிற வகையில் அழைக்கப்படலாம்.

இன்று நாங்கள் எம்மை ரட்சிக்க வந்தவர்கள் என்று நினைக்கும் கூட்டத்தை ஒருமுறை பாருங்கள்,

சந்திரிக்கா: இருமுறை ஆட்சியிலிருந்தவர். சமாதான தேவதையாக உருவமெடுத்து 1995 இல் யாழ்ப்பாணத்தை ஏதோ அயல் நாட்டின் மீது படையெடுத்துக் கைப்பறியது போல புராண சிங்கள நடைமுறையின்படி "யாப்ப பட்டுணவைக் கைப்பற்றிய புதிய சப்புமல் குமரைய்யாவுக்கு வாள்கொடுத்து கெளரவித்தவர்". இது என்ன வாதம் ?

ரணில் : சந்திரிக்காவே கொண்டுவந்த சமாதானப் பொதியை பாராளுமன்றத்திலேயே கொளுத்தி அட்டகாசம் செய்தவர். ஜே ஆரின் வாரிசு.

சரத் பொன்சேக்கா : புதிய துட்டகைமுணுவென்று எல்லாள காலத்து போரை மீண்டும் சிங்கள மக்களுக்குக் காட்டி தமிழரை அழித்து அடக்கியவர்.

சம்பிக்க ரணவக்கா : எனது வாழ்நாளில் வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கும் ஒரு சிங்களவரை நான் பார்த்ததில்லை.

ஜே. வீ. பீ : இவர்களுக்கு எங்கள் மேல் என்ன கோபமோ தெரியாது. இடதுசாரிகள் என்கிற பெயரில் இருந்துகொண்டு தமிழருக்கு எந்த நல்ல விடயமும் நடந்துவிடக் கூடாதென்று கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள்.

மைத்திரிபால சிறிசேன : சென்ற மாதம் வரை மகிந்தவின் கைத்தடி. இன்று அனைத்துச் சிங்கள் இனவாதிகளையும் அரவணைத்துக்கொண்டு மகிந்தவை வீழ்த்தக் காத்திருக்கும் இன்னொரு இனவாதி. மகிந்தவின் இனவாதம் காணாதென்று சம்பிக்கவே மைத்திரியின் பக்கம் சாய்ந்துவிட்டாரென்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவர்களூடன் கூட்டுச் சேரக் காத்திருக்கும் முன்னால் பிரதம் ரட்ணசிரி விக்கிரமனாயக்க : இவரின் இனவாதம் எப்படிப்பட்டதென்பதை சந்திரிக்காவில் ஆட்சியில் இவரது பாராளுமன்ற உரைகளைக் கேட்டால் தெரிந்துகொள்ளலாம்.

ஆகச் சிங்கள இனவாதம் இப்போது முழுதாக அரச மயப்படுத்தப்பட்டிருக்கிறது. மாறாக அழியவில்லை.

அமெரிக்காவில் நிறவெறி இல்லையென்று எப்படிச் சொல்ல முடிகிறது ? கடந்த இருமாத காலத்தில் வெள்ளையினப் பொலிஸாரினால் மூன்று கறுப்பின இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அங்கே மாநிலங்கள் தோறும் கறுப்பின மக்களின் ஆத்திரமும் வேதனையும் நகர வீதியெங்கும் கூச்சலாக மாறிக்கொண்டிருக்க நிறவாதம் இல்லையென்கிறீர்கள் ?

பிரபாகரனை மிஸ்டர் போட்டு அழைத்தது சிங்களவரின் மனமாற்றம் இல்லை. மாறாக அவர்கள் அப்படி அழைத்தது 90 வீதமாகா தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில். அப்படி அழைத்தால்த்தான் மக்கள் தமது பேச்சைக் கேட்பார்கள் என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையில். முடிந்தால் மிஸ்டர் பிரபாகரனை தெற்கில் சொல்லிப் பார்க்கட்டும், அப்போது தெரியும் சிங்களவரின் மனமாற்றம்.  ஒரு அரசியல் ஞானியான நீங்களே "மிஸ்டர் பிரபாகரன்" ஐப் பார்த்துவிட்டு, "ஆகா எல்லாம் இன்பமயம், பார்த்தீர்களா, சிங்களவர்கள் மனம் மாறிவிட்டார்கள்?" என்று கிலாகிப்பதை என்னால் ரசிக்க  முடியவில்லை. நகைச்சுவைக்காகத்தானே அப்படி எழுதினீர்கள் ?

அடுத்தது கூடமைப்பின் நிபந்தனையற்ற ஆதரவென்பதை நீங்கள் வாதிடுவதற்கு எடுத்துக்கொண்ட விதத்திலேயே அதன் பலவீனமும் இருப்பதை தெரியாமலேயே எழுதியிருக்கிறீர்களா அல்லது நகைச்சுவைக்காக எழுதினீர்களா என்று தெரியவில்லை.

நிபந்தனையற்ற ஆதரவு என்று சொல்லிவிட்ட பிறகு எப்போது தமது ஆதரவினை வழங்கினால் என்ன ? முந்தி வழங்கினோம், பிந்தி வழங்கினோம் என்பதெல்லாம் செல்லுபடியற்றதாகிவிடுகிறதே நிபந்தனைகளே இல்லையென்கிறபோது? பின்னர் இதை வைத்து எப்படி நாட்டைப் பிரிக்கச் சதி என்று எதிரணி சொல்லப்போகிறது? அப்படிச் சொல்வதானால் இப்போதும் அவர்கள் அதைச் செய்யலாமே ?

சோபிதவும், சம்பிக்கவும் ஏற்கனவே மைத்திரியுடன் ஒப்பந்தம் செய்தபின்னர் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவென்று போய் விழுந்திருப்பது எப்படி ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கா இருக்க முடியும் ? சிங்களப் பேரினவாதம் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையிலும், தமது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையிலும் கூட்டமைப்பின்  நிபந்தனையற்ற ஆதரவினை மைத்திரியோ சந்திரிக்காவோ அல்லது ரணிலோ எந்தளவு தூரத்திற்கு அக்கறையுடன் பார்க்கப் போகிறார்கள் ??

இறுதியாக, தமிழருக்கு இந்தத் தேர்தல் மூலம் ஏதாவது நண்மைகள் நடந்தால் சந்தோஷமே. என்னைப் பொறுத்தவரை மகிந்த தோற்கடிக்கப்பட வேண்டும். அவரைத் தவிர யார் வென்றாலும் எனக்குக் கவலையில்லை. அதற்காக நாம் தன்மானத்தை விட்டுக் கொடுத்து நிபந்தனையற்ற ஆதரவென்று அவரையொத்த இன்னொரு இனவாதியின் காலில் போய்விழுந்தது சரியானதாகப் படவில்லை. அவ்வளவுதான்.

இதற்கு பதிலளிப்பதற்காக என்னை இன்னொரு புலிப்பயங்கரவாதி என்று திட்ட வேண்டாம். ஏதோ எனக்குப் பட்டதை எழுதினேன். தவறிருந்தால் மன்னிதருள்க !

  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

இனவாதம் அழிந்ததாயோ, ரணிலும் சந்திரியும் ரட்சகர் என்றோ நான் சொல்லவில்லை.

குறைகிறது என்றே சொல்கிறேன். கீழே ஜேவிபியின் அனுரா குமார திசாநாயக்கவின் உரையை கேளுங்கள். கடைசி 15 நிமிடங்களை. ஜேவிபி தலைவர் இப்படி சொல்லும் நிலை என்பது மாற்றமில்லையா?

கூட்டமைப்பு முந்திகொண்டு ஆதரவை சொல்லி இருந்தால்- நிபந்தனை அற்ற ஆதரவே ஆயினும் - நிச்சயம் புலிப்பூச்சாண்டி பூதாகாரமாக எழும்பி இருக்கும்.

இந்த 5 வார இடைவெளியில் சோபியும் சம்பியும், மைத்திரியின் பெளத்த சிங்கள இமேஜை தக்கவைத்த பின், கூட்டமைப்பு ஆதரவு கொடுப்பதால் அரசின் புலிக்கோசம் அடிபட்டுப்போனது.

ஆக நிபந்தனயற்ற, தாமதித்த ஆதரவு எனும் இரு முடிவுகளும் சரியானதே.

இங்கே யாரும் யாரின் காலிலும் விழவில்லை. இலங்கையின் பிரசைகளாக - நல்லாட்ட்சியில், மாற்றத்தில் நாமும் பங்கு எடுக்கிறோம்.

முசுலீம் காங்கிரஸ் போல பிளாக்மெயில் அரசியல் செய்யாமல் - நாணய அரசியல் செய்துள்ளோம். நிச்சயம் இது தெற்க்கில் மனமாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சிறு முயற்சியே.

நிச்சயமாக புதிய ஜேவிபி போன்ற கட்டிகளுடன் சேர்ந்து எம் பக்க நியாயத்தை நாம் தெற்க்கில் பரப்புரை செய்யும் காலம் கூடி வருகிறது.

https://www.colombotelegraph.com/index.php/an-open-letter-to-jvp-leader-anura-kumara-dissanayake-from-block-votes-to-floating-votes/

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் பேரினவாதம் இலங்கையை பொறுத்தவரை ஒரு வெற்றிகரமான அரசியல் சித்தாந்தம். ஏன் பண்டா செல்வாவுடனா ஒப்பந்தத்தை கிழித்தார்? ஏன் டட்லி கிழித்தார்? தமிழருடனான எந்த ஒப்பந்தமும் தேர்தலில் தோற்பதற்க்குரிய 100% கரண்டிக்கு சமன்.

தமிழரை விடுங்கள், ஹக்கீம் தனி நிர்வாக அலகு கேட்டு, ரெண்டு பேரும் முடியாது என்று கைவிரிக்கவில்லையா? இங்கே இதுதான் யதார்தம். இப்போது மட்டுமில்லை எப்போதும் நிபந்தனை அற்ற ஆதரவு தாருவதெண்டால் வாருங்கள், இல்லாவிட்டால் பிச்சை வேண்டாம் நாயை பிடி, என்பதுதான் மைத்திரியின் நிலைப்பாடாயிருந்தது. ஆக கூட்டமைப்புடன் ஒரு போதும் மைத்திரி ஒரு உடன்படிக்கையை செய்திரார். ஏனெண்டால் அப்படிச் செய்வது உள்ளதையும் கெடுக்கும் என்று அவருக்கு நன்கு தெரியும்.

மகிந்தவை தொடர்து வைத்திருந்தால் போர்க்குற்ற விசாரணை இறுகும், மாங்காய் விழும் என்பதெல்லாம் சுத்த பேய்கதை. இப்போ நடப்பதே மேற்குலகின் திட்டத்தின் ஒரு பகுதிதான். மகிந்தவுக்கான தண்டனை இதுதான். பதவியிழப்பு, உள்நாட்டு ஊழல் விசாரணை அதன் பின் சிறை. அல்லது இடி அமீன் போல ஏதாவது ஒரு நாட்டில் அடைக்கலம். மகிந்தவுக்கு மேற்க்கு வைத்திருக்கும் திட்டம் இதுதான்.

மீறி இந்த தேர்தலில் மகிந்த வெண்டால் - மனுசன் நிச்சயம் சுதாகரித்து கொள்வார். மேற்க்கின் நண்பராவார். கடாபியையே அரவணைத்த மேற்க்குக்கு மகிந்தவை அணைப்பது ஒண்டும் பெரிசில்லை. எப்படிப் பார்த்தாலும் - போர் குற்ற விசாரணையால் ஒன்றும் ஆகப்போவதில்லை. நான் முன்பே சொன்னது போல, மகிந்தவின் கையில் இருந்து நாமலின் கைக்கு ஆட்சி மாறும், அவ்வளவே.

மைத்திரியை வெல்ல வைத்தால் - நாட்டின் மீட்சியில் - நிபந்தனை இன்றி பங்காளர் ஆனார்கள் என்ற ஒரு எண்ணம் கூட்டமைப்பை பற்றி ஏற்ப்படும். ஹெல உறுமய சொல்வதை பாருங்கள் - இவர்களுடன் ஒரே கூட்டில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு மகா அதிசயம் இல்லையா?

ஆனால் 48/56/83 இல் இருந்த அதே இனவாத மனநிலை இப்போ தெற்கிலும் இல்லை.

உலகமயமாதல் எல்லாரையும் ஜனநாயகப் படுத்துகிறது. நாகாரீகப் படுத்துகிறது. மார்டின் லூதர் கிங் காலத்தில் இருந்த அளவு நிற வேற்றுமை இப்போ அமெரிக்காவில் இல்லை. பிரபாகரனை மிஸ்டர் போட்டு அழைப்பதில் தவறில்லை என இன்று மங்கள சமரவீரவால் பேச முடிகிறது.

ராஜபக்சேக்கள் எவ்வளோ முயன்றும் 83 போல் ஒரு கலவரத்தை முஸ்லீம்களுக்கு எதிராக தூண்ட முடியவில்லை. கொழும்பில் எதிர்பேரணி கூட நடந்தது.

காலம் மாறுகிறது. ஆனால் சிங்கள பேரினவாதம் எனும் கருத்தியல் இன்னும் ஒரு பெரும் சக்தியாகவே இருக்கிறது. இதை சிறுக சிறுக உள்ளிருந்தே உடைக்க வேண்டும்.

கூட்டமைப்பு தாமதமாக முடிவு சொன்னது மிகச்சரியே. தமிழ் மக்கள் எப்படியோ மகிந்தவுக்கு போடப் போவதில்லை. மைத்திரி ஒரு போதும் கூட்டமைப்புடன் உடன்படிக்கை செய்யப்போவதில்லை. இந்நிலையில் முடிவை அறிவிக்க அவசரம் ஒண்டும் இல்லை. முடிவை முன்பே அறிவித்திருந்தால் - நாட்டை பிரிக்க சதி எனும் கோசம் எழும்பி, மைத்திரிபாலவை ஆரம்பத்திலேயே நசுக்கி இருக்கும்.

இப்போ அப்படி இல்லை, சோபிதர், ஹெல உறுமய எல்லோரும் மைத்திரியின் சிங்கள பெளத்தை இமேஜை நன்றாக உயர்த்தியபின், கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவு எனும் போது, நாட்டை பிரிக்க கூட்டமைப்புடன் சதி எனும் அரசின் பிரச்சாரம், எடுபடாமலேயே போயிற்று.

இது ஒரு ராஜதந்திர மாஸ்டர் ஸ்டிரோக்.

எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும்.....

உங்கள் கருத்து அருமையானது. இப்படி ஒரு நம்பிக்கை உங்களிடம் இருப்பின் அது தவறில்லை.

ஆனால் மொத்தமாக உங்கள் கருத்தை வாசித்து கருத்தின் சார அம்சம் என்று வரும்போது...

மகிந்த வந்தால் என்ன ..?

மைத்திரி வந்தால் என்ன ....?

உலகம் மாறிவிட்டது ... ஜெனநாயகம் மலருகிறது தெற்கில் இனி கலவரத்திற்கு இடமில்லை என்று கொள்ளலாம்.

இப்போ எனது கேள்வியை நான் மாற்றிவிடலாம் ஏன் மகிந்தவை ஆதரிக்க முடியாது என்று?

உங்களுடைய கருத்து என்பது உங்களுடைய வாதத்தை தக்க வைக்க எழுதிய ஒரு புத்திசாலித்தனமே தவிர அது உண்மை நிலை கிடையாது.

(உண்மைநிலை என்று சொல்வது கூட்டமைப்பின் ஆதரவு பற்றியது)

ஜேவிப்பி சம்பிக்க எல்லாம் ஏற்கனவே அரசுடன் முறுகல் நிலையில்தான் இருந்தார்கள். அவர்களுக்கு இருப்பு என்பது தமிழ் இனவாதத்தில்தான் இருக்கிறது. அவர்களுக்கு எங்கு இருக்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல. புலிகள் போரில் பாரிய வெற்றி கண்டிருந்தால் புலிகளோடும் வந்து இருந்திருக்க கூடியவர்கள்.

எது வெல்ல கூடிய இடம் என்று பார்த்து அங்கு தவுவதே இவர்கள் வேலை. ஏற்கனவே யுஎன்பியில் இருந்து மகிந்தவுடன் தாவியவர்கல்தான் இவர்கள்.

கூட்டமைப்பு தமிழர்களின் வாக்கு பலத்தை இப்போ கேலிகூத்தக்கியது என்பதை யாராலும் மறுக்க முடியாது. தேர்தலை நாம் புறக்கணிப்போம் எனும் யுத்தியை பாவித்து மைத்திரியுடன் ஒரு உடன்பாட்டை பேணியிருக்கலாம். இங்க தமிழ் மக்களின் நலன் என்று எதுவும் இல்லை. வெல்லும் அணிக்கு ஆதரவு தந்தோம் என்று தங்களது இருப்பை உறுதி செய்து கொண்டார்கள் அவளவுதான்.

தவிர மகிந்தவின் நீடித்த ஆட்சியே சிங்களவர்களுக்கு எதிரானதாக இருக்கும். சிங்களவர்களுக்கு எதிரானது தமிழர்களுக்கு சாதகமானது.

மகிந்தவின் அடுத்த ஆட்சிகாலம் சீனாவா? மேற்குஉலகா? என்ற முடிவை கட்டாயம் எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை கைதியாகக்கி  அமைந்துகொள்ளும்.  இதில் சீனாவை ஊழல் ஏற்கனவே போட்ட ஒப்பந்தங்களால் புறம்தள்ள முடியாத சூலை தோற்றுவிக்கும்போது.

கூட்டமைப்பு இந்தியா மேற்குடன் சேர்ந்திருக்க முடியும்.

இப்போ தமிழர்கள் யாருக்கும் தேவையற்று போய்விட்டார்கள்.

இந்த மாபாவத்தை தந்திரம் என்று ஒருபோதும் சொல்ல முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சவை ஆதரித்திருக்கலாம், உண்மைதான். ஆனால் அதன் விளைவுகள் எப்படி இருந்திருக்கும்?

1) பயங்கரவாதிகளை அழித்து தமிழரை மனிதாபிமான யுத்தம் மூலம் காப்பாற்றினேன் - இப்போ அவர்களும் எம்பக்கம் என்று- சானல்4 முதல் எமது அத்துணை நட்பு சக்திகளின் முகத்திலும் அறைந்து கூவும் அரசு.

2) 2005 இல் இவர்கள் நம்பமுடியாத, வங்குரோத்து அரசியல் செய்கிறார்கள், இவர்களை நம்பி பயனில்லை என்று புலிகள் பற்றி எடுத்த அதே முடிவுக்கு கூட்டமைப்பை பற்றியும் சர்வதேசம் வந்திருக்கும்.

3) ஹக்கீமுக்குக்கும், ரிசாத்துக்கும், அஸ்வருக்கும் எமக்கும் வித்தியாசமில்லை என்றாகியிருக்கும்.

இவ்வளவுக்கும் மேலாக கூட்டமைப்பு சொன்னாலும் மக்கள் மகிந்தவுக்குப் போடமாட்டார்கள். எனவே மகிந்தவை ஏன் ஆதரிக்கவில்லை என்பது ஒரு கேள்வியே இல்லை. நீங்கள் கேடதற்க்காக பதில் சொன்னேன்.

முன்பு மேற்குலகு என்பதே இல்லை. அவைக்கு ஒரு ஒருமித்தநிலைபாடு இல்லை, எல்லாம் பேய்பிசாசு கதை என்று கருத்தெழுதிய நீங்களே, இப்போ அடுத்த முறை மகிந்த வெண்டால்- மேற்க்கு v சீனா முறுகல் ஏற்படும். கூட்டமைப்பு மேற்குலகுடன் நிக்கலாம் என்பது ஒரு நல்ல மனமாற்றம்.

ஆனால் உண்மையாதெனில் - சீனா மேற்கு முறுகல் என்பது ஒரு அளவுக்கு மேல் போகாது. சும்மா கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டே 50 ஆண்டுகளை ஓட்டி விடுவார்கள். அதற்குள் யாழ்ப்பாணம் முற்றுமுழுதாக ஜம்புகோளப் பட்டுண ஆகியிருக்கும். அப்படியே அடுத்த 10 ஆண்டில் மோதல் முற்றினாலும் அதன் இறுதி முடிவு ரெஜீம் சேஞ் எனும் மகிந்த்ஹவின் பதவியிறக்கம்தானே ஒழிய அப்போதும் தமிழர்க்கு ஒரு விடிவும் வரப்போவதில்லை. அதே ரெஜீம் சேஞ்சை இப்போதே செய்தால் - மாறிவரும் சூழலில் எமது உரிமைகளை வெல்ல ஒரு சைக்கிள் கேப்பாவது கிடைக்கும்.

மகிந்த வெண்டால் இன்னும் 20 வருடத்துக்கு காத்து போகவும் கேப் இராது.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளை கூா்ந்து பாத்தால், அவா்கள் ஏதாே ஒரு தூரநாேக்காேடு செயற்படுவது பாேல்த்தான் எனக்குத்தெரிகிறது. சிங்கள அரசியல்வாதிகள் ஊட்டி வந்த மாயையை, சிங்கள மக்களிடையே ஊறிப்பாேன பிழையான கருத்தை மாற்றியமைக்க முயற்சிப்பதுபாேல்த் தெரிகிறது. தேவையானதும் அதுதான். பாெறுத்திருந்து பாப்பாேம் ராஜதந்திரத்தை.
 
சிங்களமக்கள் எகிறிவரும் விலைவாசியால் எப்பவாே இந்த அரசை வெறுத்துப்பாேனாா்கள். ஆனால் அரசாங்கம் புலிகளை அழிக்க வேண்டுமென்ற கருத்தை ஊட்டி அதன்பின் எல்லாமே நன்றாகிவிடும் என்று ஏமாற்றியது. பாோ்முடிந்தபின்னும் மக்களின் அன்றாட வாழ்க்கைப்பிரச்சனை தீரவில்லை. அவா்களால் எதிா்த்துக்கேட்க முடியவில்லை. புலியளை அடக்கின எங்களுக்கு உங்களை அடக்க முடியாதாே? என்று அதேபாணியில் பதில் காெடுத்தாா்கள். ஃ சிங்கள மக்களே இப்பாே சரியான பதில் காெடுக்கப்பாேகிறாா்கள். தமிழரின் கதையை வச்சு பழைய உம்மாண்டி கதை சாெல்லி வெல்லலாம் எண்ட நப்பாசையில தூண்டில் பாேட்டுப் பாக்கிறாா் மகிந்தா. த. தே. கூட்டமைப்பாே, உது உன்ர யூகம் மட்டுந்தான் என்பதை நிரூபிக்கப் பாக்கிறாா்கள். மகிந்த தன்ர நிழலைப்பாத்தே பயப்பிடும் காலமாச்சு. 9ந் திகதி சிங்களக்கலவரம் ஏற்படவும் வாய்ப்புண்டு. முந்துறவன் கெட்டிக்காறன். இது எனது அபிப்பிராயம். எங்க கண்டனி? ஆதாரம் காெண்டா எண்டு எல்லாம் கேக்கப்புடாது சாெல்லிப்பாேட்டேன். 
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு மேற்குலகு என்பதே இல்லை. அவைக்கு ஒரு ஒருமித்தநிலைபாடு இல்லை, எல்லாம் பேய்பிசாசு கதை என்று கருத்தெழுதிய நீங்களே, இப்போ அடுத்த முறை மகிந்த வெண்டால்- மேற்க்கு v சீனா முறுகல் ஏற்படும். கூட்டமைப்பு மேற்குலகுடன் நிக்கலாம் என்பது ஒரு நல்ல மனமாற்றம்.

மேற்குலகு என்ற வார்த்தை மயக்கத்தில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை.
எனது கருத்தில் மேற்குலகு என்று அமெரிக்கவைதான் சொன்னேன் ... சில நேரிடை கருத்துக்களை சமூக தளங்களில் தவிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
 
இப்போதைய ஜூரோ வின் வீழ்ச்சி 
ஜெர்மன் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளை எப்படியும் சிந்திக்க வைக்கும். அவர்கள் எப்போதோ சிந்திக்க தொடங்கிவிட்டார்கள் புலிவாலை பிடித்த கதியாக தொடரவேண்டிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த கட்டாய நிலையை இவளவு நாளைக்கு தொடர முடியும்? என்று ஒரு கேள்வியும் இருக்கிறது.
 
இராக் ஆப்கானிஸ்தான் என்று பெரும் செலவில் போருக்குபோன ஐரோப்பிய நாடுகளுக்கு எதுவும் எஞ்சவில்லை என்ற கசப்பான உண்மையை அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். உசபெகிஸ்தானில் இருந்து ஆப்கான் ஊடாக அடித்த பைப் லைனால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறார்கள். ஈராக் எண்ணை வளம் பூராக இன்று அமெரிக்க நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. இன்று இங்கு ஒரு கலன்(3.78541 லீட்டர்) பெற்றோலை $1.88 இற்கு அடித்தேன். ஐரோப்பாவில் (ஜெர்மனியில்) 1 லீட்டர் இன்று 1.32 ஈரோ நாட்டு வரிகள் காரணம் என்றாலும் ... அதுவும் நாட்டின் விலைவசியைதான் சொல்லி நிற்கிறது. 
 
இந்த நிலையை அவர்கள் எவளவு காலத்திற்கு தொடர்வார்கள் என்பது கேள்விக்கு உட்பட்டதே. 
ரஷ்யா இனி ஒரு போரை ஐரோப்பா மீது எடுக்காது என்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். சும்மா போலந்தில் பெலருசில் ஏவுகணை நிறுத்திறம் நிமித்திறம் எண்டு ரஷ்யாவோடு யாரோ உரசுவதால் ஐரோப்பவிட்கு என்ன லாபம்? ஐரோப்பிய கண்டத்தின் (ரஷ்ய) எண்ணை வளத்தை ஐரோப்பியர்களே புறக்கணித்து என்ன லாபம் அடைய முடியும்? 
 
பெட்ரோல் விலை வீழ்ச்சி ரஷ்யாவை குறிவைத்து செயற்படுத்திய விடயம் இன்று ஈரோவை தாக்கி இருக்கிறது. ஈரோவின் வீழ்ச்சி ஐரோப்பிய சந்தையை மேலும்  தள்ளாடு நிலைக்கு தள்ளிவிட போகிறது இதை ஐரோப்பிய எக்கொனோமிஸ்டுகள் ஏற்றுகொள்ளபோவதில்லை.
 
துருக்கிய கிஸ்புல்லா அமைப்பு வெட்ட வெளியாக ஐ ஸ் ஸ் இற்கு ஆதரவு உதவிகளை கொடுக்கிறது.
சீனாவின் சுழற்சி சும்மா மூலையில் இன்று இல்லை அறுகம் புல்லை போல அழிக்க முடியாத நிலையில் உலகு எங்கும் படருகிறது. 
 
இது வெறுமனே மேற்கு உலகு எனும் வார்த்தைக்குள் நடக்கும் தில்லுமுல்லாக இருக்கிறது.
அவர் அவர் தனக்கு சாதகமானதை திரை மறைவில் செய்ய தொடங்கி விட்டார்கள்  என்பது வெளிச்சமாக இருக்கிறது.
இந்திய சந்தையை தமதாக்கி கொள்வது எனும் நிலைபாட்டில் 
இலங்கை பங்களதேஸ் போன்ற நாடுகளின் அரசியல் ஸ்திரதன்மை முதன்மை படுத்த படுகிறது. அவை சீன சார்பு சந்தைகளாக மாறுவது இந்திய சந்தையை தற்போதைய  ஈரோ வீழ்ச்சிபோல பாதிக்கும். 
புலிகள் இல்லாதுபோனது ஒட்டு துரோக குழுக்களை எப்படி பாத்தித்தது? என்பதும் இதுவும் கிட்டதட்ட ஒரே மாதிரியான விடயங்கள்தான்.
எதிரியின் பொருளாதார வீழ்ச்சி ...
எம்மையும் பாதிக்கும் நிலையை தற்போதைய உலக வர்த்தகம் தோற்றுவித்து இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.