Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வியை ஏற்றுக் கொள்கின்றேன் - மகிந்த - BBC

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த  தன் தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக  பிபிசி அறிவித்துள்ளது

 

Sri Lanka's Rajapaksa 'admits defeat' in election
_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd

Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says.

President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena.

The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power bowing to the wishes of the people".

Mr Rajapaksa, who was seeking a third term in office, is credited by many with ending the civil war in 2009.

Troops routed the Tamil Tigers after more than two decades of fighting.

But rights groups accused both sides in the war of atrocities, allegations the government denies.

 

 

 

http://www.bbc.com/news/world-asia-30738671

 

 

  • கருத்துக்கள உறவுகள்

_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd

 

Sri Lanka's Rajapaksa 'admits defeat' in election
_51606573_fa1d16c0-9c6c-4f82-b0b8-ab66dd

Sri Lanka's long-time leader Mahinda Rajapaksa has admitted defeat in the presidential election, his office says.

 

President Rajapaksa has dominated politics for a decade, but faced an unexpected challenge from his health minister Maithripala Sirisena.

 

The statement said Mr Rajapaksa would "ensure a smooth transition of power bowing to the wishes of the people".

Mr Rajapaksa, who was seeking a third term in office, is credited by many with ending the civil war in 2009.

Troops routed the Tamil Tigers after more than two decades of fighting.

 

But rights groups accused both sides in the war of atrocities, allegations the government denies.

 

http://www.bbc.co.uk/news/world-asia-30738671

 

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்கள் உட்பட.. கொழும்பு.. மலையக சிறுபான்மை மக்களும்.. பெருமளவில் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். அதேவேளை தனிச்சிங்கள மாவாட்டங்கள் கூடிய அளவுக்கு மகிந்தவுக்கே வாக்களித்துள்ளன.

 

இதில் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்றில்லை. கொழும்பு.. மற்றும் மலையகத்திலும் தமிழ் மக்கள் மகிந்தவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

 

சிறுபான்மையினரின்.. மகிந்த எதிர்ப்பு அலையில்.. மைத்திரி வெற்றியை தக்க வைத்துள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை மகிந்த ஜெயித்தால், அனந்தி, கஜேந்திரன்ஸ், சிவாஜிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் வெற்றிக்கு பொதுபலசேனாவுக்கும் கிறீஸ்பூதத்திற்கும் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கும்.. நன்றி சொல்ல வேண்டும். :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவே பம்மிட்டார் பிறகேன் சண்டை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் பேரழிவு நடந்த இறுதி நாட்களில் அரசில் மைத்ரியின் பதவி என்ன? இறுதி நாட்களில் நாட்டில் இருந்த பாதுகாப்பு அமைச்சர் யார்? மகிந்த ஜோர்தான் போனபோது, அவரது பாதுகாப்புத்துறையை கவனித்த பிரதிப் பாதுகாப்புத்துறை அமைச்சர் யார்? முள்ளிவாய்க்காலுக்கு நன்றி சொல்வதென்றால், அந்த ஆளை தேடிப்பிடித்து நன்றி சொல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே உங்க ஒத்த வாக்கில தான் மைத்திரி வென்றவர்.. வேண்டின பாலை புளிக்க முதல் காய்ச்சி குடிச்சிட்டு வந்து புலம்புங்கோ..!!!

 

அதுசரி.. அத்தியடி தாடிக் காரக் குத்திய எப்படி கட்சி தாவப் போறார்..???! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடித்து விட்டேன். அதுதான் புலம்பும் இடத்துக்கு வந்திருக்கிறேன். அநேகமாக புதிய அரசில் அவரும் அமைச்சராக இருப்பார் என்பது எனது ஊகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள்: சிறிசேனா வெற்றி முகம்; தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச

Comment   ·   print   ·   T+  
 
 
 
 
 
sriraja_2272061h.jpg
 
இலங்கை அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்துள்ளார்; அதிபர் மகிந்த ராஜபக்ச தொல்வி முகம் கண்டுள்ளார்.

 

இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 மணி நிலவரப்படி, தேச அளவில் சிறிசேனா 14,06,557 (52.49%) வாக்குகளுடன் முன்னிலையிலும், ராஜபக்ச 12,38,340 (46.21%) வாக்குகளுடனும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

கொழும்பு, கம்பஹா, கண்டி, புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை, நுவரெலியா, பதுல்ல, யாழ்ப்பாணம், வன்னி, பொலநறுவ உள்ளிட்ட மாவட்டங்களில் மைத்ரிபால சிறிசேனா முன்னிலை வகித்திருந்தார்.

அதேவேளையில், காலி, மாத்தளை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல், மொனராகலை, கேகாலை, ரத்தினபுரி, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் ராஜபக்சவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

 

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்ச

 

இந்த நிலையில், அதிபர் ராஜபக்ச தனது தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார். மக்களின் முடிவை ஏற்றுக் கொண்டு ஆட்சியை அமைதியான வழியில் புதிய அதிபரிடம் ஒப்படைப்படைக்கப்படும் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அதிகாலை பிரதான எதிர்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்கவை சந்தித்த ராஜபக்ச தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார்.

தமிழர் பகுதிகளில் அதிக வாக்குப்பதிவு:

 

இலங்கை அதிபர் தேர்தல் அமைதியான முறையில் நேற்று நடைபெற்றது. பெரும்பாலான பகுதிகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. நேற்று மாலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடந்து வருகிறது.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. வானிலை சீராக இருந்ததால், வாக்குப்பதிவு பாதிக்கப்படவில்லை. சுமார் ஒரு கோடியே 50 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்களில் 67 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளைப் பதிவு செய்னதர்.

தமிழர், முஸ்லிம் வாக்குகள்:

“அனைத்துப் பகுதிகளிலும் அதிக அளவு வாக்குகள் பதிவானது. முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் வடமேற்கு மாகாணத்திலுள்ள புத்தளத் தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே மொத்தமுள்ள 1,200 வாக்காளர்களில் 800 வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இது மிகக் குறிப்பிடத்தக்க விஷயம்” என, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் இயக்க நிர்வாகி கீர்த்தி தென்னகூன் தெரிவித்துள்ளார். மசூதிகளில் உள்ள ஒலி பெருக்கி மூலம், வாக்குப்பதிவில் பங்கேற்க தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

 

இதனிடையே, புத்தளம் பகுதியில் இடம் பெயர் முஸ்லிம்கள் சுமார் 10,000 பேர் வாக்களிக்காத வகையில் தடுக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ரிசார் பதியுதீன் குற்றம்சாட்டியுள்ளார். 20 பஸ்களை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த போதும் ஆளும் கட்சிப் பிரமுகரின் தலையீட்டால், சுமார் 10,000 முஸ்லிம்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப் பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

 

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில், அதிக அளவு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு மையம் திறந்தவுடனேயே நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித் தனர் என தமிழ் தேசியக் கூட்டணி எம்.பி. சரவணபவன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 61.15 சதவீத வாக்குகளும், மாத்தறை - 76, அம்பாந்தோட்டை 70, நுவரேலியா 80, புத்தளம் 78, பொலனறுவ 75, கோலை 70, கம்பஹா 65, காலி 79 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் 19 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், ராஜபக்சவுக்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனாவுக்கும் இடையேதான் கடும் போட்டி.

தனது சொந்த தொகுதியான ஹம்பன் தோட்டையில் தனது வாக்கைப் பதிவு செய்த அதிபர் ராஜபக்ச கூறும்போது, “மீண்டும் நாங்கள் பெருவெற்றி பெறுவோம். அது உறுதி. நாளை முதல் எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்குவோம்” என்றார்.

வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: வாக்குப்பதிவு நேற்று மாலை 4.30 மணிக்கு முடிந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்னர் இரவு 8 மணிக்கு மேல் வாக்கு எண்ணும் பணி நடந்தது. முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இரவு 10 மணி முதல் அறிவிக்கப்பட்டன.

 

கையெறி குண்டு வீச்சு:

முன்னதாக வவுனியா பகுதியில் நெலுக்குளம் கலைமகள் மகாவித்யாலா பள்ளியில் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பள்ளி வளாகத்தில் உள்ள மைதானத்தில் மதியம் 2.25 மணிக்கு கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் எவ்வித சேதமுமில்லை. இக்குண்டை யார் வீசியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை அல்வாய் லங்கா வித்யாலத்தில் உள்ள வாக்குப் பதிவு மையம் அருகே கையெறி குண்டு வீசப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பில்லை. காங்கேசன் துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிபர் மாளிகைக்கு கூடுதல் பாதுகாப்பு:

 

அதிபர் ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு வழக்கத்தை விட கூடுதலாக 800 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண காவல்துறை டிஐஜி அனுரா சேனாநாயகவின் உத்தரவையடுத்து அதிபர் மாளிகைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விருப்ப வாக்கு முறை:

இலங்கை அதிபர் தேர்தல் விருப்ப வாக்கு முறையில் நடைபெறு கிறது. வாக்காளர்கள் அதிகபட்சம் மூவருக்குத் தமது விருப்ப வாக்குகளை அளிக்கலாம். 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார். முதற்கட்ட வாக்கெடுப்பில் யாருக்கும் 50 சதவீத வாக்குகள் கிடைக்கவில்லை என்றால், அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்புக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.

இதில் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளில் 2-ம் விருப்பத் தெரிவாக போட்டியில் நிற்கும் வேட்பாளருக்குரிய வாக்குகள் கணக்கிடப்பட்டு அவர்களின் முதலாம் கட்ட எண்ணிக்கையுடன் கூட்டப்பட்டு வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார். இதன் பின்னரும் யாரும் 50 சதவீத வாக்குகள் பெறாவிட்டால் 3-ம் விருப்ப வாக்கு கணக்கிடப்படும். இறுதியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர் அதிபராவார். 

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A/article6770518.ece?homepage=true

 

 

இதில் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு தமிழ் மக்கள் வாக்களித்தார்கள் என்றில்லை. கொழும்பு.. மற்றும் மலையகத்திலும் தமிழ் மக்கள் மகிந்தவுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.

 

 

 

நிச்சயமாக!  உங்கட மீசையில் மண் ஒட்டவே இல்லை  :lol:  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக!  உங்கட மீசையில் மண் ஒட்டவே இல்லை  :lol:  :lol:

அண்ணன் விழவே இல்லையே.. விழுந்தால்தானே மண் ஒட்டுவது பற்றிய பேச்சு!

ஒருவேளை மகிந்த ஜெயித்தால், அனந்தி, கஜேந்திரன்ஸ், சிவாஜிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். 

10898074_918761254823859_92094051422726010924705_918761284823856_982094063084899

https://www.youtube.com/watch?v=0qXreFUJiM8#t=83

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

10898074_918761254823859_92094051422726010924705_918761284823856_982094063084899

 

சரி. மைத்திரி ஜெயித்தால் சுமந்திரன், சம்பந்தனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

breaking news 09012015 01

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

breaking news 09012015 01

 

 

அருமை.. நாட்டில் எந்த பிரச்னையும் இல்லாத ஆட்சி மாற்றம். இந்த விஷயத்தில் மகிந்த ஜென்டில்மேன்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 10 தலைமுறைக்கு தேவையான சொத்து சேர்த்தாச்சு...........

30 வருடங்கள் தமிழர்கள் உயிரை கொடுத்து முன்னெடுத்த உரிமை போரை ஒட்டுமொத்தமாக அழித்தாச்சு ......

11/2 லட்சம் தமிழர்களை கொன்று பல லட்சம் தமிழர்களை இலங்கையை விட்டு புலம்பெயர வைச்சாச்சு.......

இனி மகிந்தா வென்றால் தான் என்ன தோல்வியடைந்தால் தான் என்ன ....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒரு நன்மை

மைத்திரி பதவிக்கு வந்ததன் மூலம்

ஆஸ்திரேலியா கள்ள படகு அகதிகளை திருப்பி அனுப்ப கூடியவாறு இருக்கும்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

"கடமையை செய்; பலனை பாராதே" என்று உழைக்கிறேன். மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான எனது போராட்டம், நடந்து முடிந்த தேர்தலுடன்

 

ஆரம்பித்தது அல்ல. அது என் நண்பன் ரவிராஜுடன் நான் ஆரம்பித்த போராட்டம். பல்லாண்டுகளாக மனந்தளராமல் மீண்டும், மீண்டும் முயற்சி

 

செய்து, கொலைக்கார மகிந்தவை வீழ்த்த முதல் நபராக பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று உழைத்தேன். இன்று நான் இந்த கட்டத்தில்

 

வெற்றிக்கண்டுள்ளேன் என நம்புகின்றேன். ஆனால், மைத்திரிபால ஆட்சி என்பது ஒரு விடுதலை என்றோ, ஒரு மீட்சி என்றோ நான் ஒருபோதும்

 

நினைக்கவில்லை. இதை தாய் நாட்டிலும், புலம் பெயர்ந்தும் வாழும் என் உடன் பிறப்புகள் புரிந்துகொள்ள வேண்டும். வேண்டுகிறேன் !

 

<மனோ கணேசன்> 

 

iஇந்த தலைவரி கருத்தைப் பாருங்கள்...உண்மையை உணருங்கள்....அதை விட்டு விட்டு மகாபாரதத்தில் உள்ள அர்ஜுனின் கற்பனை அஸ்திரங்களையெல்லாம் திண்ணையில் ஆவென்று பார்த்துக் கொண்டிராதீர்கள்...

10933957_10206092112447350_8331001287018

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எல்லா தேர்தலிலும் தமிழர் வாக்களிப்பது யார் வரக்கூடாது என்று தான், வருபவர் நடந்து கொள்ளுவது அட இவரை விட முன்பிருந்தவர் பரவியில்லை என்னும் படி
இது தான் இலங்கைத் தமிழனின் சாபக்கேடு
  • கருத்துக்கள உறவுகள்

polling-080115-seithy%20(1).jpg

 

இன்னும்... இரண்டு வருஷம் ஜனாதிபதியாய் இருந்திருக்க வேண்டிய ஆள்.

ஊரில் உள்ள விகாரை, கோவில்களின் நூலை கையில் கட்டியிருந்தும்......
ஒரு சோதிடரின் பேச்சைக் கேட்டு, தேர்தல் வைக்கப் போய்... இருந்ததும் போச்சு.
இதைத்தான்... தலைவிதி என்று சொல்வார்கள். :)

Edited by தமிழ் சிறி

இது தான் ஜனநாயகம்.....funny-Obama-thumbs-up.jpg

மகிந்த ஒன்றும் கருணாநிதி..பிரபா இல்லையே...போட்டிக்கு வருபவர்களை "போட"

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. நாட்டில் எந்த பிரச்னையும் இல்லாத ஆட்சி மாற்றம். இந்த விஷயத்தில் மகிந்த ஜென்டில்மேன்தான்.

 

மகிந்தாவின்ர ஜென்ரில்மேன் தகைமையை முள்ளிவாய்க்காலில் பாத்தாேம், தோ்தலுக்குப்பின் கிறிஸ்பூதத்தில பாத்தாேம், வேண்டுமென்ற தாேற்கடிக்கப்பட்ட சரத்தை, க்ஷிராணி பண்டாரநாயக்காவை நடத்தியவிதத்திற் பாத்தாேம். இப்ப அவரால ஒண்டும் செய்யேலாது. கமலேஷ்ஷா்மா ஒருபுறம், பான்கிமூன் மற்றப்பக்கம், கடைசிவரை அவராேடு கூடஇருந்த மைத்திரி ஆட்டத்தின்   சகல ரகசியங்களையும் வாரிக்காெண்டு பாேனதால் தடுத்தாட முடியாத இக்கட்டான நிலை. பாெலிஸ் வேற அலரிமாளிகையைச்சுற்றியாச்சு. தான் பிரச்சனை பண்ணினால் அடுத்தது என்ன நடக்குமென்று தெரியாத எல்லாம் கைவிட்டுப்பாேன நிலை. இப்பாேதைக்கு அவருக்கு இதைவிட்டால் வேறுவழியுமில்லை. துள்ளிக்குதித்த காேட்டா என்னனவானாா்? தெரிந்தவா்கள் யாராவது சாெல்லுங்கப்பா. ஒட்டுக்கழுக்களுக்கு தா்மசங்கடமான நிலை.இவா்களின் பாடு கஸ்ரமாகப்பாேகுது.  கெஞ்சினா மிஞ்சுவாா், மிஞ்சினா கெஞ்சுவாா்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின்ர ஜென்ரில்மேன் தகைமையை முள்ளிவாய்க்காலில் பாத்தாேம், தோ்தலுக்குப்பின் கிறிஸ்பூதத்தில பாத்தாேம், வேண்டுமென்ற தாேற்கடிக்கப்பட்ட சரத்தை, க்ஷிராணி பண்டாரநாயக்காவை நடத்தியவிதத்திற் பாத்தாேம். இப்ப அவரால ஒண்டும் செய்யேலாது. கமலேஷ்ஷா்மா ஒருபுறம், பான்கிமூன் மற்றப்பக்கம், கடைசிவரை அவராேடு கூடஇருந்த மைத்திரி ஆட்டத்தின்   சகல ரகசியங்களையும் வாரிக்காெண்டு பாேனதால் தடுத்தாட முடியாத இக்கட்டான நிலை. பாெலிஸ் வேற அலரிமாளிகையைச்சுற்றியாச்சு. தான் பிரச்சனை பண்ணினால் அடுத்தது என்ன நடக்குமென்று தெரியாத எல்லாம் கைவிட்டுப்பாேன நிலை. இப்பாேதைக்கு அவருக்கு இதைவிட்டால் வேறுவழியுமில்லை. துள்ளிக்குதித்த காேட்டா என்னனவானாா்? தெரிந்தவா்கள் யாராவது சாெல்லுங்கப்பா. ஒட்டுக்கழுக்களுக்கு தா்மசங்கடமான நிலை.இவா்களின் பாடு கஸ்ரமாகப்பாேகுது.  கெஞ்சினா மிஞ்சுவாா், மிஞ்சினா கெஞ்சுவாா்.

 

ஒட்டுக் குழுக்களின் பாசையில்.... மஹிந்த, ஜென்டில்மேன். :D 

 

09-1420774369-rajapaksa9-600.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.