Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது

Featured Replies

news_CI.jpg

 *வடகிழக்கில் 654,531 மேலதிக வாக்குகள் மைத்திரிக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.. அந்த வகையில் மைத்திரியின் வெற்றியை சிறுபான்மையினரே தீர்மானித்திருக்கிறார்கள்.. .

யாழ் - 176,120

வன்னி- 107,040

மட்டகளப்பு- 167,811

அம்பாறை- 112,333

திருகோணமலை- 88,227

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115345/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
மைத்திரபால பெற்ற வாக்குகள்  6217162
மகிந்த           பெற்ற வாக்குகள்     5798090
 
வாக்கு வித்தியாசம்                       419072
 
வடகிழக்கில் வாக்குகள்                654,531 

மகிந்த நல்லாத்தான் முயற்சி செய்து பார்த்தார், இறியாக புறக்கணிப்பு குளுவொன்றையும் உருவாக்கி பார்த்தார். வெடிகுண்டு போட்டார் ஆனாலும் சனம் தாம் சொல்ல வந்ததை தெளிவாக சொல்லி இருக்குதுகள்.

மாகாணசபையை விட கூட 70% வாக்களிப்பு.

இனியாச்சும் ஊரில் உள்ள சனத்துக்கு உள்ள பிரச்சினை என்னவென்று அறிவது புலத்துக்கும் தாய் நிலத்துக்கும் நன்மை பயக்கும். இல்லாட்டில் யாழ்கள கருத்து சூரர்கள் என்ற பேர் மட்டும் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியான கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்கள் போட்டிருக்காங்க. கொழும்பு வாழ் மக்கள் போட்டிருக்காங்க. வடக்குக் கிழக்கு மக்கள் (முஸ்லீம்கள் உட்பட) போட்டிருக்காங்க. கூட்டமைப்பு சொல்லி தான் இதெல்லாம்... என்றால் அதை நம்புறவன் கேணயனாத்தான் இருக்க முடியும்.

சிறுபான்மை மக்கள் மகிந்த அரசால் நெருக்கடிகளை சந்தித்தார்கள். வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் போர் அழிவுகளையே சந்தித்தார்கள். எல்லா எதிர்ப்புணர்வுகளும் வாக்காக.. மைத்திரி வெற்றி பெற்றார். மற்றும்படி.. தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அப்படியே ஏற்று வாக்களித்தார்கள் என்று இதனை காட்டுவது மிக மோசமான அரசியல் விளங்காத்தனம் என்று எடுக்கலாம்.

மேலும்.. வடக்கில்.. தேர்தல் ஆணையகமே வாக்களிக்கப் போகும்படி.. ஒலிபெருக்கிகள் மூலம்.. நேற்று பிற்பகலில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி தான்.. மக்கள் பிற்பகலில் அதிகம் வாக்களித்துள்ளனர். தங்கள் வாக்கை மகிந்த எதிர்ப்புக்கு வழமை போல வாக்களித்திருக்கிறார்கள். மாகாண சபை தேர்தலை ஒத்த வாக்களிப்பு வீதமே உள்ளது. வேறுபாடில்லை.. வடக்கில். கிழக்கில்..  சிறுபான்மை மக்கள் மகிந்தவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். மலையகம்.. கொழும்பிலும் அதே நிலை. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நோ நோ வீ வோண்ட் ஹாவ் திஸ். கூட்டமைப்பு இஸ் கூத்தாடிங். பீப்பிள் தியர் ஓல்சோ கூத்தாடிங். வீ வாண்ட் ஈழம் ஒன்லி.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் சிறுபான்மை.. மக்களின் மகிந்த எதிர்ப்புணர்வுக்கு சாட்சி. :icon_idea:

Sri_Lankan_Presidential_Election_2015.pn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் எதற்காக வாக்களித்தோம் என்று மற்றவர்கள் ஆராய்வதை பார்க்க சுவாரசியமாக உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்.. மீண்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. மக்களின் மகிந்த எதிர்ப்பு என்ற வடிவில்...!! :lol::icon_idea:

Sri_Lankan_Presidential_Election_2015.pn

அப்ப  வடக்கு  கிழக்கு  மக்கள்  தேர்லை  புறக்கணிக்க வில்லை என்னடா  இது  :D சீமான் ..அனந்தி அக்கா  அவர்களின்  சொல்லை  எவரும்  கேட்கவில்லை எல்லோரும் கேபி ..கருணா  ஆக்காளா  மாறிட்டினம் போல  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கடின காலப்பகுதியில்

திரண்டு சென்று வாக்களித்திருக்கும்  தாயக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றேன்

இந்த தீர்ப்பின் மூலம்  மூச்சுவிட ஒரு காலத்தை அவர்கள் கோருவதாகவே பார்க்கின்றேன்

அதேநேரம்

தாயக மக்களின் துயரங்களைத்துடைக்கவும்

தாயகத்திலிருந்து வெளிவரமுடியாத அவர்களின் குரல்களாக ஒலிக்கவும்

புலம்பெயர் மக்கள் தொடர்ந்து உழைக்கணும்

அதை நான் தொடர்ந்து செய்வேன்.....

நாங்கள் எதற்காக வாக்களித்தோம் என்று மற்றவர்கள் ஆராய்வதை பார்க்க சுவாரசியமாக உள்ளது!

எப்ப விடுமுறை முடிந்து கனடாவுக்கு திரும்புறீங்க சபேசன்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு 65 வயதாகும்போது அல்லது, இலங்கையில் கிடைக்காத வைத்திய உதவி தேவைப்படும் போது வருவேன். உங்களைப் போல என்னில் பாசம் வைத்து நலம் விசாரிக்கும் நலம் விரும்பிகள் உள்ளவரை என்ன கவலை எனக்கு?

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் தமிழ்பேசும் மக்கள் முள்ளிவாய்க்கால் அழிவுக்கு மகிந்தவைப் பழிவாங்கியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப  வடக்கு  கிழக்கு  மக்கள்  தேர்லை  புறக்கணிக்க வில்லை என்னடா  இது  :D சீமான் ..அனந்தி அக்கா  அவர்களின்  சொல்லை  எவரும்  கேட்கவில்லை எல்லோரும் கேபி ..கருணா  ஆக்காளா  மாறிட்டினம் போல  :icon_idea:

மக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாக்களிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்கள் வாக்குகள் துஸ்பிரயோகம் ஆகலாம் என்ற செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டதும்.. தேர்தல் ஆணையகம் வாக்குப் போடுங்கள் என்று தேர்தல் தினத்தன்றே ஒலிபெருக்கிகள் மூலம் கோரிக்கை வைத்ததும்.. மக்கள் வாக்கைப் போடுவம் என்று முடிவெடுத்தார்கள். மக்கள் ஒன்றும் மாற்றிப் போடவும் இல்லை. மக்கள் மகிந்த எதிர்ப்பு என்ற மே 2009 நிலைப்பாட்டில் தான் வாக்களித்திருக்கிறார்கள். 2010 இல் நின்ற அதே மனநிலையில் தான் மக்கள். அவர்கள் மாறக் கூடிய சூழல் அங்க உருவாகல்ல. யாழ் தேவி வந்தும்.. மாகாண சபை வந்தும் மக்கள் மனங்களில் ஏதோ இன்னொன்று ஆட்சி செய்கிறது என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது மீண்டும்..??!! அந்த ஏதோ.. தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு நீதியும்.. தங்களுக்கு நிம்மதியான சுதந்திரமான வாழ்வும்.. என்றாகிறது.

அதை தான் சீமான்.. அனந்தி.. சிவாஜி.. கஜேந்திரன்.. புலம்பெயர் மக்கள்.. என்று எல்லோரும் வலியுறுத்தினம். அவர்கள் அதனை தேர்தல் புறக்கணிப்பு என்ற வடிவில் சொல்ல விளைந்தார்கள். மக்கள்.. சூழ்நிலைக்கு ஏற்படி முடிவு செய்தார்கள்..!!! இதனால்.. யாரும் யாரையும் நிராகரித்தது என்ற நிலை தோன்றவில்லை..!!!!!!! அப்படி காட்டுவது தான் அபந்தம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர், சுமந்திரன், ஹக்கீம் சொல்லித்தான் தமிழ் மக்களும், முஸ்லிம்களும் மகிந்தவுக்கு எதிர்ப்பைக் காட்ட மைத்திரிக்கு வாக்களித்தார்கள் என்று நம்புவர்கள் இன்னமும் இருக்கின்றார்களா! அப்படிப் பார்த்தால் மலையகத் தமிழர்கள் ஆறுமுகம் தொண்டமானின் சொல்லைக் கேட்டு வாக்களித்தார்களா!

சிங்கள இனவாதத்தையும் தமிழர்கள் மேலான வெற்றிவாதத்தையும் பெளத்த மதவாதத்தையும் தனது தேர்தல் ஆயுதங்களாகப் பாவித்த மகிந்தவை தமிழ், முஸ்லிம் இனங்களும், கிறிஸ்த்தவர்களும் (சிங்களவர்கள் உள்ளடங்கலாக) ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. இன அடிப்படையில் இலங்கைத் தீவு இரு துருவங்களாகப் பிரிந்துள்ளமையை மேலுள்ள படம் துல்லியமாகக் காட்டுகின்றது.

பல்வேறு கட்சிக் கூட்டணிகளினால் மகிந்தவைப் பதவியை விட்டு இறக்குவதை நோக்கமாகக் கொண்டே மைத்திரி களமிறக்கப்பட்டார். இவர் அரசியலமைப்பை மாற்றுவதில் வெற்றிபெற இக்கூட்டணிகளும் இன்னமும் பலமாக உள்ள மகிந்த தரப்பினரும் விடுவார்களா என்பதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

சுதந்திரக் கட்சி மகிந்த ஓரங்கட்டுப்பட்டு ஒன்றாக இருக்கும் என்று தோன்றவில்லை. இரண்டாகப் பிளவுபடும் அல்லது மைத்திரியும் சந்திரிக்காவும் சுதந்திரக் கட்சியை முழுவதுமாகக் கைவிடவேண்டிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு 65 வயதாகும்போது அல்லது, இலங்கையில் கிடைக்காத வைத்திய உதவி தேவைப்படும் போது வருவேன்.

கனடிய பாஸ்போட்டையும் வைச்சுக் கொண்டு தான்.. அங்க உள்ள மக்களுக்கு விலாசம் காட்டிறியளோ. அதைக் கிழிச்சு போடுறது. மக்களுக்கு நன்கு.. தெரியும்.. இந்த சூழ்நிலை சந்தர்ப்பதாரிகளை பற்றி.  :lol::D

மக்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாக்களிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தங்கள் வாக்குகள் துஸ்பிரயோகம் ஆகலாம் என்ற செய்தி அவர்களுக்கு சொல்லப்பட்டதும்.. தேர்தல் ஆணையகம் வாக்குப் போடுங்கள் என்று தேர்தல் தினத்தன்றே ஒலிபெருக்கிகள் மூலம் கோரிக்கை வைத்ததும்.. மக்கள் வாக்கைப் போடுவம் என்று முடிவெடுத்தார்கள். மக்கள் ஒன்றும் மாற்றிப் போடவும் இல்லை. மக்கள் மகிந்த எதிர்ப்பு என்ற மே 2009 நிலைப்பாட்டில் தான் வாக்களித்திருக்கிறார்கள். 2010 இல் நின்ற அதே மனநிலையில் தான் மக்கள். அவர்கள் மாறக் கூடிய சூழல் அங்க உருவாகல்ல. யாழ் தேவி வந்தும்.. மாகாண சபை வந்தும் மக்கள் மனங்களில் ஏதோ இன்னொன்று ஆட்சி செய்கிறது என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது மீண்டும்..??!! அந்த ஏதோ.. மக்கள் தங்களுக்கு நிம்மதியான சுதந்திரமான வாழ்வை தேடுவது என்றாகிறது.

அதை தான் சீமான்.. அனந்தி.. சிவாஜி.. கஜேந்திரன்.. புலம்பெயர் மக்கள்.. என்று எல்லோரும் வலியுறுத்தினம். அவர்கள் அதனை தேர்தல் புறக்கணிப்பு என்ற வடிவில் சொல்ல விளைந்தார்கள். மக்கள்.. சூழ்நிலைக்கு ஏற்படி முடிவு செய்தார்கள்..!!! இதனால்.. யாரும் யாரையும் நிராகரித்தது என்ற நிலை தோன்றவில்லை..!!!!!!! அப்படி காட்டுவது தான் அபந்தம். :icon_idea::)

ஆனால்  தலைவர்  இருந்த  காலத்தில்  புறக்கணியுங்கள் என்னும்  சும்மா  வாய்வழி  செய்தி எப்படியான  மாற்றத்தை  உண்டுபண்ணியது  என்பதையும்  நீங்கள்  இங்கு  எண்ணி பார்க்க வேண்டும்  :D

எல்லோரும்  அண்ணை  ஆக  முயற்ச்சி பண்ணக்கூடாது  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம்.. மீண்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. மக்களின் மகிந்த எதிர்ப்பு என்ற வடிவில்...!! :lol::icon_idea:

Sri_Lankan_Presidential_Election_2015.pn

இந்த வரைபடம் சொல்லும் செய்தியை  நாம் புரிந்து கொண்டு

தொடர்ந்து உழைக்கணும்

சரத் கொன்சேகா கேட்டபோதும் இதேபோல் தான் தமிழீழப்பகுதிகள் தோன்றின

இந்த படம் சொல்லும் செய்தி

இலங்கையில் இரு நாடுகள் என்பதே

எனவே தமிழீழம் மறக்கப்பட்டுவிட்டது என்பது வெறும் கூப்பாடு மட்டுமே....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடிய பாஸ்போட்டையும் வைச்சுக் கொண்டு தான்.. அங்க உள்ள மக்களுக்கு விலாசம் காட்டிறியளோ. அதைக் கிழிச்சு போடுறது. மக்களுக்கு நன்கு.. தெரியும்.. இந்த சூழ்நிலை சந்தர்ப்பதாரிகளை பற்றி.  :lol::D

நான் ஏனய்யா கிழிக்க வேண்டும்? சட்ட ரீதியாக இரட்டை பிரஜாவுரிமை வைத்திருக்கிறேன். கனடாவில் பணிபுரிந்து அந்த பென்ஷனில் இலங்கையில் வாழ்கிறேன். அதில் கனடாவுக்கும் பிரச்னையில்லை, இலங்கைக்கும் பிரச்னையில்லை. உங்களுக்கு ஏன் பிரச்னையாக இருக்கு? 

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் யார் என்ன சொன்னாலும் சொல்லா விட்டாலும் ஆட்ச்சி மாற்றத்தை விம்பினம் என்று எப்பவோ தொிந்தது தான்.சம்பந்தன் புறக்கனிக்கச் சொல்லி இருந்தால அவருக்கும் சோத்து நாமம் தான்.

ஈழத்துக்கு  பிளான்  பண்ணி  மஞ்சள்  கலர்  கொடுத்து  இருக்கு ..

10897050_10201884825361109_4150429383980

மலையக மக்கள் போட்டிருக்காங்க. கொழும்பு வாழ் மக்கள் போட்டிருக்காங்க. வடக்குக் கிழக்கு மக்கள் (முஸ்லீம்கள் உட்பட) போட்டிருக்காங்க. கூட்டமைப்பு சொல்லி தான் இதெல்லாம்... என்றால் அதை நம்புறவன் கேணயனாத்தான் இருக்க முடியும்.

சிறுபான்மை மக்கள் மகிந்த அரசால் நெருக்கடிகளை சந்தித்தார்கள். வடக்குக் கிழக்கு தமிழ் மக்கள் போர் அழிவுகளையே சந்தித்தார்கள். எல்லா எதிர்ப்புணர்வுகளும் வாக்காக.. மைத்திரி வெற்றி பெற்றார். மற்றும்படி.. தமிழ் மக்கள் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அப்படியே ஏற்று வாக்களித்தார்கள் என்று இதனை காட்டுவது மிக மோசமான அரசியல் விளங்காத்தனம் என்று எடுக்கலாம்.

மேலும்.. வடக்கில்.. தேர்தல் ஆணையகமே வாக்களிக்கப் போகும்படி.. ஒலிபெருக்கிகள் மூலம்.. நேற்று பிற்பகலில் கேட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி தான்.. மக்கள் பிற்பகலில் அதிகம் வாக்களித்துள்ளனர். தங்கள் வாக்கை மகிந்த எதிர்ப்புக்கு வழமை போல வாக்களித்திருக்கிறார்கள். மாகாண சபை தேர்தலை ஒத்த வாக்களிப்பு வீதமே உள்ளது. வேறுபாடில்லை.. வடக்கில். கிழக்கில்..  சிறுபான்மை மக்கள் மகிந்தவை எதிர்த்து வாக்களித்துள்ளனர். மலையகம்.. கொழும்பிலும் அதே நிலை. :icon_idea::)

உணமைதான் அன்னை... கூட்டமைப்பு சொன்னால் சனம் கேளாது.

அனால் நடக்கும் எல்லா தேர்தலிகளிலும் கூட்டமைப்பு வெல்லுது அனால் அவர்கள் சொன்ன சரத்துக்கும் மைத்திரிக்கும் சனம் வாக்குப்போடுது.

மலையகத்தில் மனோ கணேசன் மைத்திரிக்கு போடா சொல்லவில்லை 

முஸ்லிம் கட்சிகளும் மகிந்தவுக்குத்தான் போட சொன்னவையல்.

:lol:  :lol:  :lol:

சம்பந்தர் தலைமையில் கிழக்கு மாகாண சபையை இழந்தது. பாராளுமன்றத்தில் 5 உறுப்பினர்களை இழந்தது... இவையும்.. நடந்திருக்குது.

மேலும்.. சம்பந்தர்.. சொல்லி மக்கள் கேட்கல்ல. மக்கள் இதனை தான் தெரிவு செய்வார்கள் என்று தெரிந்து சம்பந்தர் சொல்லிக் கொள்கிறது. அவ்வளவே..!

மக்கள் சம்பந்தர் சொல்லி தீர்மானிப்பதில்லை. தாங்களே தான் தீர்மானிக்கிறார்கள்.  மக்கள் இன்னும் கூட்டமைப்பை தேசிய தலைவரின் முன்மொழிவாகவே பார்க்கிறார்கள். சம்பந்தர் அதில் குளிர்காய்கிறார். :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துக்கு பிளான் பண்ணி மஞ்சள் கலர் கொடுத்து இருக்கு ..

10897050_10201884825361109_4150429383980

அஞ்சரன் உங்கட குசும்புக்கு அளவே இல்லையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.