Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

8f7fb7820f0f67e3e044c7300d54ddcf.jpg

புதிய அரசின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து  பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி அமைச்சரவை விவரங்கள் 
 
ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம்
 
ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம்
 
மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்
 
கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்
 
ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள்
 
காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்
 
லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில்
 
ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர்
 
றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர்
 
சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர்
 
ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர்
 
துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்
 
கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சர்
 
சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
 
விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர்
 
ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்
 
அர்ஜூன ரணதுங்க- துறைமுக அமைச்சர்
 
ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
 
அகிலவிராஜ் காரியவசம்- கல்வியமைச்சர்
 
டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற இந்து மதவிவகார அமைச்சர்
 
ரஞ்சித் மதுமபண்டார- போக்குவரத்து அமைச்சர்
 
தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேளைவாய்ப்பு அமைச்சர்
 
சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்
 
 
 
ராஜாங்க அமைச்சர்கள்
 
நந்தமித்ர ஏக்கநாயக்க- கலைக்கலாசார அமைச்சர்
 
பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து அமைச்சர்
 
பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
 
துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி அமைச்சர்
 
ரோசி சேனாநாயக்க- சிறுவர் விவகார அமைச்சர்
 
ரஜீவ் விஜேசிங்க- உயர்கல்வி அமைச்சர்

 

http://onlineuthayan.com/News_More.php?id=646803804612870600


100(10).jpg

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து தற்போது பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகின்றது.

அமைச்சரவை விவரங்கள் 

ரணில் விக்கிரமசிங்க- கொள்கை அமுலாக்கம்
ஜோன் அமரதுங்க-கிறிஸ்தவ விவகாரம்
மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்
கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்
ஜோசம் மைக்கல் பெரேரா- உள்நாட்டு அலுவல்கள்
காமினி ஜயவிக்ரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்
லக்ஷ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில்
ரவி கருணாநாயக்க- நிதியமைச்சர்
றவூப் ஹக்கீம்- நகர்புற அபிவிருத்தி நீர்வளத்துறை அமைச்சர்
சம்பிக்க ரணவக்க- மின்சக்கி மற்றும் எரிசக்தி அமைச்சர்
ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர்
துமிந்த திஸாநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்
கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
எம்.கே.டி.எஸ். குணவர்தன- காணி அமைச்சர்
சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
விஜேதாச ராஜபக்ஷ- நீதியமைச்சர்
ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்
அர்ஜூன ரணதுங்க- துறைமுக அமைச்சர்
ரிஷாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்
அகிலவிராஜ் காரியவசம்- கல்வியமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற இந்து மதவிவகார அமைச்சர்
ரஞ்சித் மதுமபண்டார- போக்குவரத்து அமைச்சர்
தலத்தா அத்துகோரள- வெளிநாட்டு வேளைவாய்ப்பு அமைச்சர்
சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்
பி.திகாம்பரம்- தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்


ராஜாங்க அமைச்சர்கள்

நந்தமித்ர ஏக்கநாயக்க- கலைக்கலாசார ராஜாங்க அமைச்சர்
பைசர் முஸ்தபா- விமானபோக்குவரத்து ராஜாங்கஅமைச்சர்
பாலித ரங்கே பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர்
துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி ராஜாங்க அமைச்சர்
ரோசி சேனாநாயக்க- சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர்
ரஜீவ் விஜேசிங்க- உயர்கல்வி ராஜாங்க அமைச்சர்
ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு ராஜாங்கராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார ராஜாங்கஅமைச்சர்

பிரதியமைச்சர்கள்
சம்பிகா பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்
ஹர்ஷ டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர்
ஹெரான் விக்ரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்
சுஜீவ சேனாசிங்க- பிரதி நீதி அமைச்சர்
வசந்த சேனாநாயக்க- சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்
விஜேகலா மகேஷ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்
அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்
அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
 

 

http://www.tamilmirror.lk/137532

27 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு JAN 12, 2015 | 14:03by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

ranil-takeouth-300x200.jpgசிறிலங்காவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்று வருகிறது. புதிய அமைச்சர்கள் 27 பேர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக, பதவிப்பிரமாணம் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை, அதனை அதிபர் மைத்திரிபால சிறிசேனவே தன்வசம் வைத்துள்ளார்.

புதிய அமைச்சர்களின் விபரங்கள் –

ரணில் விக்கிரமசிங்க – கொள்கை அமுலாக்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்

ஜோன் அமரதுங்க- கிறிஸ்தவ விவகார அமைச்சர்

மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்

கரு ஜயசூரிய- புத்தசாசன அமைச்சர்

ஜோசப் மைக்கல் பெரேரா- உள்நாட்டு விவகார அமைச்சர்

காமினி ஜயவிக்கிரம பெரேரா- உணவு பாதுகாப்பு அமைச்சர்

லக்ஸ்மன் கிரியெல்ல- பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

ரவி கருணாநாயக்க- நிதி அமைச்சர்

ரவூப் ஹக்கீம் – நகர்புற அபிவிருத்தி, நீர்வளத்துறை அமைச்சர்

சம்பிக்க ரணவக்க – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

ராஜித சேனாரத்ன- சுகாதார அமைச்சர்

துமிந்த திசநாயக்க- நீர்ப்பாசன அமைச்சர்

கபீர் ஹாசிம்- நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்

எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன- காணி அமைச்சர்

சஜித் பிரேமதாச- வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்

விஜேதாச ராஜபக்ச- நீதி அமைச்சர்

ஜயந்த கருணாதிலக- ஊடகத்துறை அமைச்சர்

அர்ஜூன ரணதுங்க – துறைமுக அமைச்சர்

ரிசாத் பதியுதீன்- கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்

அகிலவிராஜ் காரியவசம்- கல்வி அமைச்சர்

டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற, இந்து மதவிவகார அமைச்சர்

ரஞ்சித் மத்துமபண்டார- போக்குவரத்து அமைச்சர்

தலதா அத்துகோரள- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

சந்திராணி பண்டார- பெண்கள் விவகார அமைச்சர்

பி.திகாம்பரம்-

இராஜாங்க அமைச்சர்கள்

நந்தமித்ர ஏக்கநாயக்க- கலை, கலாசார இராஜாங்க அமைச்சர்

பைசர் முஸ்தபா- விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

பாலித ரங்க பண்டார- மின்வலு மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

துலிப்வெதே ஆராச்சி- மீன்பிடி இராஜாங்க அமைச்சர்

ரோசி சேனாநாயக்க – சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்

பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க – உயர்கல்வி இராஜாங்க அமைச்சர்

ருவன் விஜேவர்தன- பாதுகாப்பு  இராஜாங்க அமைச்சர்

நிரோஷன் பெரேரா- இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்கள்

சம்பிக பிரேமதாச- கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்

ஹர்ச டீ சில்வா- நிதி விவகாரங்கள் மற்றும் கொள்கை செயல்படுத்தல் பிரதி அமைச்சர் 

ஹெரான் விக்கிரமரத்ன- நெடுஞ்சாலை மற்றும் முதலீட்டு பிரதி அமைச்சர்

சுஜீவ சேனசிங்க- பிரதி நீதி அமைச்சர்

வசந்த சேனாநாயக்க – சுற்றாடல் துறை பிரதி அமைச்சர்

விஜயகலா மகேஸ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்

அஜித் பி.பெரேரா- வெளிவிவகார பிரதி அமைச்சர்

அனோமா கமகே- நீர்ப்பாசன பிரதி அமைச்சர்

http://www.puthinappalakai.net/2015/01/12/news/2823

 

டி.எம்.சுவாமிநாதன்- மீள்குடியேற்ற, இந்து மதவிவகார அமைச்சர்

 

பி.திகாம்பரம்-?????????

 

விஜயகலா மகேஸ்வரன்- பெண்கள் விவகார பிரதி அமைச்சர்

 

 

மங்கள சமரவீர- வெளிவிவகார  அமைச்சர்

பாதுகாப்பு அமைச்சராக எவரும் நியமிக்கப்படவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தத்துக்கும் கத்தோலிக்கத்துக்கும் இந்துவுக்கும் அமைச்சு

ஆனால் இசுலாமியருக்கு....??

 

சிறீலங்கா சரியான பாதையில்  போக முயல்கிறதா??

 

 

பிரதியமைச்ச்ருக்கும் ராஜாங்க அமைச்சருக்கும் என்னங்க வித்தியாசம்? 

  • கருத்துக்கள உறவுகள்

பிரதியமைச்ச்ருக்கும் ராஜாங்க அமைச்சருக்கும் என்னங்க வித்தியாசம்? 

 

தேர்தலுக்கு முன்னால வந்தவை...

தேர்தலுக்கு பின்னால வந்தவை... :lol:

ஹரின் பெர்னாண்டோவைக் காணவில்லை. சறுக்கல் ஆரம்பம்????

10417768_836574436402816_710937358618050 10392545_836574496402810_491262161400782

 

Newsfirst.lk

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஹரின் பெர்ணாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. அவர் 19 ம்திகதி ஊவா முதலமைச்சர் ஆகிறார்.

ஹரின் பெர்ணாந்து நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. அவர் 19 ம்திகதி ஊவா முதலமைச்சர் ஆகிறார்.

 

அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியதை மறந்து விட்டேன். தகவலுக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு கொடுப்பதாக பேச்சடிபட்ட அமைச்சு சுவாமிநாதனுக்கு போயிருக்கு.

சுவாமிநாதன் யு என் பி காரர். மேற்கில் ஆளுநராக இருந்தவர். நெடுக்கர் பாசையில் - சொன்னால் கொழும்புப் பனங்கொட்டை. இந்த நியமனம் கூட்டமைப்பு ஆலோசனையில் நடந்திருக்க கூடும்.

முன்பு போல எமக்குரிய இடத்தை, டக்கிக்கும், கருணாவுக்கும் விட்டுக்கொடாமல் - பெயர் சொல்லுமளவுக்கு தமிழ் அமைச்சர்கள் வந்த்ஹிருப்பதே ஒரு நிம்மதி.

கூட்டமைப்பும் ஜேவிபியும் தேசிய அரசில் இணையாமல், வெளியில் இருந்து பங்காளிகளாவது எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தத்துக்கும் கத்தோலிக்கத்துக்கும் இந்துவுக்கும் அமைச்சு

ஆனால் இசுலாமியருக்கு....??

 

சிறீலங்கா சரியான பாதையில்  போக முயல்கிறதா??

 

விசுகு, பெற்றோல் ஊத்துகிறாரா?

அல்லது, உண்மையான.... ஆதங்கத்தில் கேட்கிறார? :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, பெற்றோல் ஊத்துகிறாரா?

அல்லது, உண்மையான.... ஆதங்கத்தில் கேட்கிறார? :D  :lol:

 

 

 

லைட்டான பெற்றோல். வெரி லைட்டான ஆதங்கம். (ஏதோ என்னாலை முடிந்தது) :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு கொடுப்பதாக பேச்சடிபட்ட அமைச்சு சுவாமிநாதனுக்கு போயிருக்கு.

சுவாமிநாதன் யு என் பி காரர். மேற்கில் ஆளுநராக இருந்தவர். நெடுக்கர் பாசையில் - சொன்னால் கொழும்புப் பனங்கொட்டை. இந்த நியமனம் கூட்டமைப்பு ஆலோசனையில் நடந்திருக்க கூடும்.

முன்பு போல எமக்குரிய இடத்தை, டக்கிக்கும், கருணாவுக்கும் விட்டுக்கொடாமல் - பெயர் சொல்லுமளவுக்கு தமிழ் அமைச்சர்கள் வந்த்ஹிருப்பதே ஒரு நிம்மதி.

கூட்டமைப்பும் ஜேவிபியும் தேசிய அரசில் இணையாமல், வெளியில் இருந்து பங்காளிகளாவது எனும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

இப்படியொரு நிலைமையை சும்மா தூசு தட்டுவதுபோல் தேர்தலுக்கு முந்திய நேரத்தில் கூட்டமைப்பால் செய்திருக்க முடியும்
இது ஒரு காலத்தின் தேவை.
 கூட்டமைப்பு தமிழர்களின் ஒரே பலமிக்க கட்சியாக மிளிரும்போதுதான் சர்வதேச அரங்கில் பிற நாடுகளுடன் தலையிட முடியும் 
இன்றைய நாளில் இலங்கையில் உள்ள தமிழர்கள் பற்றிய விவகாராம என்று மட்டும் இல்லை.
இலட்சகனக்கில் வேறு நாடுகளிலும் வாழ்கிறோம் அங்கிருக்கும் எமது பாதுகாப்பு கலாச்சார விழுமியங்கள் பண்பாட்டு துறை சார்ந்த நகர்வுகள் மொழி வளர்ச்சி என்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து. பிற நாட்டு அரசுகளுடன் ஒரு உறவை பேண  வேண்டிய தேவை வந்திருக்கிறது.
 
இந்த பினாமிகளை ஓரம் கட்டி இவர்களுக்கு கொடுக்கும் பாடம் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும்.
தற்போதைய கூட்டமைப்பிற்கும் அவர்களுக்கும் அதிக அளவில் வித்தியாசம் இல்லை. இவர்களும் முன்னைநாள் அவர்கள்தான்.
தமிழ் மக்கள் நம்பும் படியான ஒரு வாழ்வை இனியாவது கூட்டமிப்பினர் வாழ தொடங்க வேண்டும்.
சும்மா சாணக்கிய அரசியல் பூச்சாண்டி இனியும் காட்ட முடியாது.
 
சம்மந்தர் சோத்துக்காக சும்மா புலம்புவதை முதலில் நிறுத்த வேண்டும்.
புலிகளுடைய அரசியல் நகர்வு வேறு அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். புலிகள் தற்போதைய தமிழர் எதிரி பண்டைகால தமிழ் மன்னர்களின் எதிரிகள் என்று எல்லோருக்கும் எதிரியாக வேண்டிய சூழலில் அரசியல் செய்தவர்கள். அவர்களுடைய எதிர்பாராத அதீத வளர்ச்சியே அதற்கு காரணம் ஆகி போனது.
 
கூட்டமைப்பு  இலங்கை அரசை மீறி வெளிக்கிட முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் ஜெனநாயக நாடகம் போடுவார்கள். அப்படியே எமது காட்சிகளையும்  அரங்கேற்றி விட வேண்டும்  அதற்கு மக்களின் பலம் மிகவும் முக்கியம்.
புலத்து பினாமிகள் 
புலராத பினாமிகள் 
என்று இங்கிருக்கும் சில புலன் பெயர்ந்ததுகள்  போல் சேற்றில் விழாது நிஜ விடயங்களை புரிய வேண்டும். நான் புலம் பெயர்ந்து வாழ்ந்தால் அம்மாவும் தம்பியும்  உள்ளூரில்  வாழ்கிறார்கள் இதுதான் உண்மை. என்னையும் அம்மாவையும் எந்த சக்தியால் பிரிக்க முடியும் ?  பிரிக்கலாம் என்று சத்தி வேண்டுமானால் எடுக்கலாம்  இங்கு சிலர் செய்வதுபோல். 
 
அடுத்த தலைமுறையை கல்வியின் பால் நோக்கி நகர்த்த வேண்டும்.
தற்போதைய தமிழர்களின் முதன் முதல் கண்ணும் கருத்துமான செயற்பாடாக அதுவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய தனிபட்ட எண்ணம்.
 
வெளியில் இருக்கும் எம்மை ஆளும் அரசு கணக்கில் எடுக்குமா?
(இதுதான் தற்போதைய ஒரே வழி  என்பது தெரியும்)
எதிர்கால தேர்தல்களை கணக்கில் எடுத்தே கூட்டணியை கணக்கில் எடுப்பார்கள். மக்களின் பலம் தமக்கு பின்னால் இருக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு நினைவில் வைத்திருக்கும் என்று நம்புகிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, பெற்றோல் ஊத்துகிறாரா?

அல்லது, உண்மையான.... ஆதங்கத்தில் கேட்கிறார? :D  :lol:

 

 

எந்தக்காலத்திலாவது

நானாவது

நீங்களாவது 

இசுலாமியருக்காக ஆதங்கப்பட்டுள்ளோமா??... :icon_idea:

லைட்டான பெற்றோல். வெரி லைட்டான ஆதங்கம். (ஏதோ என்னாலை முடிந்தது) :lol:  :lol:

 

என்னைக்காப்பாற்றும் தங்களது முயற்சிக்கு கூட என்னால் நன்றி கூற முடியாதுள்ளது.... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பரம்பரைப் பணக்காரன். ஊரில் சோத்துக்கு சிங்கி அடித்து விட்டு, வெளிநாட்டுக்குப் போய் பவிசு கண்டவர் அல்ல.சம்பந்தன் சோத்துக்காக அரசியல் செய்வதாகச் சொல்வது, பிரபாகரன் இனெவெறியில் போராடப்போனார் என்பதைப் போல் அபத்தமானது.

நேற்றுவரை தேர்தலை புறக்கணிக்கும் படி மக்களை தூண்டிவிட்டு, மக்கள் 66%-71% வாக்களித்தபின், கூட்டமைப்புப் போகும் பாதை எது என்று வகுப்பு வேறு எடுக்க வெளிக்கிட்டீனம் :)

மக்கள் தெளிவாக ஆணை கொடுக்கிறார்கள், கூட்டமைப்பு அதைச் செய்ய முனைகிறது. ஜிடிஎப் போன்ற சில அமைப்புகள் இதை விளங்கி செயல்படுகிறன.

சில புலம்பெயர் -------- - தொல்லை தாங்க முடியல்ல.

Edited by நிழலி
சீண்டல் சொல் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பரம்பரைப் பணக்காரன். ஊரில் சோத்துக்கு சிங்கி அடித்து விட்டு, வெளிநாட்டுக்குப் போய் பவிசு கண்டவர் அல்ல.சம்பந்தன் சோத்துக்காக அரசியல் செய்வதாகச் சொல்வது, பிரபாகரன் இனெவெறியில் போராடப்போனார் என்பதைப் போல் அபத்தமானது.

நேற்றுவரை தேர்தலை புறக்கணிக்கும் படி மக்களை தூண்டிவிட்டு, மக்கள் 66%-71% வாக்களித்தபின், கூட்டமைப்புப் போகும் பாதை எது என்று வகுப்பு வேறு எடுக்க வெளிக்கிட்டீனம் :)

மக்கள் தெளிவாக ஆணை கொடுக்கிறார்கள், கூட்டமைப்பு அதைச் செய்ய முனைகிறது. ஜிடிஎப் போன்ற சில அமைப்புகள் இதை விளங்கி செயல்படுகிறன.

சில புலம்பெயர் -------- - தொல்லை தாங்க முடியல்ல.

நான் உங்களை திட்டி உங்களை நான் திட்டி ஏதும் ஆகபோவதில்லை.
எனது கருத்து கூட்டமைப்பு பற்றியது ... 
அதனை சார்ந்து உங்கள் கருத்தை வைக்க முடியாதா? 
 
பில்கேட்ஸ் உலக பணக்கார்களில் ஒருவர் பணம் போதும் என்று ....
இப்போ வியாபரத்தை விட்டு விட்டாரா?
பணத்திட்குதான் எப்போதும் பணம் தேவை.
 
தேர்தல் புறக்கணிப்பால் நடந்திருக்க கூடிய நண்மைகளை நான் எழுதிவந்தேன் உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் அதைப்பற்றி அங்கே எழுதி இருக்கலாம்.
தேர்தலில் மைத்திரி வெல்லுவார் என்பதும் 
தமிழர்கள் மைத்திரிக்கு வாக்களிக்க போவது சிறு பிள்ளைக்கும் தெரிந்து இருந்தது.
(நான் வாக்களிக்க போனால் மைத்திரிக்கே வாக்களிப்பேன் என்று கூட எழுதி இருக்கிறேன்) 
அதனால்தான் மைத்திரி தோற்க வேண்டும் என்று நான் எழுதினேன்.
 
அதற்காக இனி நான் தமிழன் இல்லை என்று நீங்கள் திண்ணையை ஆக்கிரமிக்கும் எண்ணமெல்லாம் ரொம்ப ஓவர்.
புலிகளுக்கு எதிராக இருந்து புலிகளால் சிறை பிடிக்க பட்டவன் நான் 
புலிகளை முழு மனதுடன் ஆதரித்தது .... தமிழன்  விடுதலை பெற வேண்டும் என்ற உள்ள கிடைக்கையால்  
கூட்டமைப்பு வந்தால் என்ன ...
கூடமைப்பின் அப்பப்பா வந்தால் என்ன நான் அவர்களுடன் கூடித்தான் நிற்பேன்.
உங்களிடம் அனுமதி கேட்டு கூடமைப்பை ஆதரிக்க வேண்டிய நிலைமை யாருக்கும் இல்லை. 
 
மக்கள் பற்றி உண்மை அக்கறை இருந்தால் 
இந்த புலம் பெயர்ந்த   கொடிபிடிக்கிற   நெடியவன் கொடியவனை தாண்டி .... நாகரீகமாக கருத்தை வையுங்கள்.
 
நான் புலிகளின் 100% ஆதரவாளன் 
புலம்பெயர்ந்து வாழுகிறேன் 
நடந்த எல்லா ஊர்வலத்திலும் முடிந்த அளவில் பங்கு எடுத்து கொடி பிடித்திருக்கிறேன் (புலிக்கொடி எனது தமிழ் கொடி உயிர் உள்ளவரை பிடிப்பேன்) 
கூட்டமைப்பு தற்போதைய தமிழர்களின் ஒரே கட்சியாக இருக்கிறது ... அதையும் ஆதரிப்பேன். 
கடந்த தேர்தலில் மகிந்த வென்றிருந்தால் தமிழருக்கு மிகுந்த லாபம் என்பதை முழுதாக இப்போதும் நம்புகிறேன்.
(நான் கூறி வந்த விடயங்கள் கண்முன்னே காட்சியாக விரிகிறது) 
2009 உடன் தமிழனின் கதை முடிந்தது என்று ஒதுங்கவில்லை 
இருக்கும் துரும்பை பற்றியாவது அரசியல் செய்ய வேண்டும் என்பது குறிக்கோள்.
 
உங்களுக்கு இப்ப இதில் என்ன பிரச்சனை?
 
உங்களுடைய கருத்துக்கள் பலதும் உண்மையை நிகழ்வை தாங்கி நிற்பவை 
அதை நாகரீகமாக எழுதினால் ....
எல்லோரிடமும் மதிப்பு பெறும்.
கூட்டணியை குத்தைக்கு எடுத்த மாதிரியான அடாவடி போக்கை யாரும் ஆதரிக்க போவதில்லை.
உங்கள் எண்ணங்களை தொடர்ந்தும் பகிருங்கள்.
என் கருத்து மீது இருக்கும் தவறை சுட்டி காட்டினால் எமக்கும் திருந்த வாய்பிருக்கும்.

Edited by நிழலி
மேற்கொள் காட்டிய பகுதியில் மட்டுறுத்தப்பட்ட வசனம் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

சோபித தேரர் தேர்தலுக்கு முன்னரே 30 அமைச்சர்கள் தான்  அமைச்சரவையில் இருக்கவேண்டும் எனத் தெரிவித்து விட்டதால் சிறிசேனவும் இப்போது அதையே செய்கின்றார்.
மேற்குலகம் யாரையும் ஆட்டுவிப்பதாகத்  தெரியவில்லை.
எல்லாம் பௌத்த சாசனப்படியே நடக்கின்றது. இனியும் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதாத சாசனத்தை நடைமுறைப்படுத்துபவதில் சிங்களவர்கள் கெட்டிக்காரர்கள். 

அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சுவா­ரஷ்ய சம்­ப­வங்கள்

 

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை மையில் நேற்று நடை­பெற்ற புதிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­சர்கள் பத­வி­யேற்­பின்­ போது சில சுவா­ரஷ் ­ய­மான சம்­ப­வங்கள் இடம்­பெற்றதை அவ­தா­னிக்க முடிந்­தது.

cabinet.jpg

அமைச்­சர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்கள் ஜனா­தி­ப­தி­யினால் வழங்­க ப்­பட்­டன. ஜனா­தி­பதி செய­லாளர் பி.பி. அபேகோன் நிய­மனக் கடி­தங்­களை வழங்கும் ஏற்­பா­டு­களை செய்­து­கொண்­டி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்திரிபால சிறி­சேன சபைக்கு வந்து ஆச­னத்தில் அமர்ந்­ததும் அதி­காரி ஒருவர் அமை ச்­சர்­க­ளுக்­கான நிய­மனக் கடி­தங்கள் அடங்­கிய அனைத்து கோப்­புக்­க­ளையும் ஒரு கதி­ரையில் வைத்து கதி­ரையை நகர்த்தி ஜனா­தி­பதி செய­லா­ள­ரிடம் கொண்­டு­வந்தார். அப் ­போது கதிரை திடீ­ரென சாய்ந்­து­விட்­டது. இதனால் கோப்­புக்கள் அனைத்தும் கீழே விழுந்­தன. இத னை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அமைச்­சர்­க­ளாக பத­வி­யேற்க காத்­தி­ருந்­த­ வர்­களும் அவ­தா­னித்­தனர்.

பின்னர் குறித்து அதி­காரி உட­ன ­டி­யாக கோப்­புக்­களை சரி செய்து ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்தார். முதலில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சி ங்க திட்­ட­மிடல் மற்றும் பொரு­ளா­ தார அலு­வல்கள் அமைச்­ச­ராக பத ­வி­யேற்றார்.

அமைச்­சர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்­கிய ஜனா­தி­பதி அனை­வ­ருக்கும் நிய­மனக் கடி­தங்­ களை வழங்­கி­விட்டு கைகூப்பி மரி­ யாதை செய்தார். ஆனால் அமைச்­ சர்­க­ளான ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் கபிர் ஹஷீம் ஆகி­யோ­ருக்கு ஜனா­தி­பதி கைலாகு கொடுத்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

நிய­மனக் கடி­தங்­களில் உள்ள வாச­கத்தை வாசித்து சத்­திய பிர­மாணம் செய்­து­விட்டு அதில் கையொப் பம் இடு­வ­தற்கு இரண்டு பேனை­களை ஜனா­தி­பதி செய­லாளர் அபேகோன் அங்கு வைத்­தி­ருந்தார். இந்­நி­லையில் வீட­மைப்பு சமுர்த்தி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற சஜித் பிரே­ம­தாச நிய­மனக் கடி­தத்தில் தனது பேனையை எடுத்தே கையொப்பம் இட்டார். அதன் பின்னர் பல அமைச்­சர்கள் இவ்­வாறு செய்­தனர்.

எம்.கே.டி.எஸ். குண­வர்த்­தன காணி அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற­போது ஜனா­தி­ப­தியின் பக்கம் திரு ம்பி நின்­று­கொண்டு கையொ­ப்பம் இட முயற்­சித்தார். அப்­போது ஜனா­தி­பதி அவரை மறு­பக்கம் அதா­வது செய­லாளர் பக்கம் திரும்பி கையொ ப்பம் இடு­மாறு கூறினார்.

சுகா­தார அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ராஜித்த சேனா­ரட்ன சத்­தி­ய­ பி­ர­மா­ணத்தை வாசிக்கும் முன்னர் கையொப்பம் இட்­ட­தையும் அவ­தா­னிக்க முடிந்­தது. கையொப்பம் இட்ட பின்னர் அவர் சத்­தி­ யப் ­பி­ர­மா­ணத்தை வாசித் தார்.

பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற லக்ஷ்மன் கிரியெல்­லவும் சுற்­று­லாத்­துறை அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற நவீன் திசா­நா­யக்­கவும் சத்­தி­ய­ப்பி­ர­மா­ணத்தை செய்­து­விட்டு ஜனா­தி­ப­தி­யிடம் நிய­மனக் கடி­தங்­களை வாங்­காமல் வந்­து­விட்­டனர். பின்னர் ஜனா­தி­பதி அழை த்து அவர்­க­ளுக்கு நிய­மனக் கடி­தங்­களை வழங்­கினார்.

மேலும் பிர­தி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்ற விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனும் இரா­ஜாங்க அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ராதா­கி­ருஷ்­ணனும் தமிழ் மொழியில் சத்­தி­ய­பி­ர­மாணம் செய்­தனர்.
இதே­வேளை நிகழ்வு ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ரவிகரு­ணா­நா­யக்­க­வு டன் நீண்­ட­நேரம் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்தார். மேலும் சந்­தி­ராணி பண்­டார ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ர­ம­வுடன் கலந்­து­ரை­யா­டினார்.அத்­துடன் விஜ­ய­கலா மகேஸ்­வரன் பைசர் முஸ்­த­பா­வு­டனும் அர் ­ஜுன ரண­துங்­க­வு­டனும் சொற்­ப­நேரம் கலந்­து­ரை­யா­டினார். வீட­மை ப்பு அமைச்­ச­ராக பதவியேற்ற சஜித் பிரேமதாச நிகழ்வு ஆரம்பிக்க சற்று நேரத்துக்கு முன்னரே சபைக்குள் வந்தார்.

இந்த நிகழ்வுக்கு முன்னாள் ஜனா திபதி பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாசவும் வருகை தந் திருந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை பதவியேற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களின் உறவினர்கள் நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://virakesari.lk/articles/2015/01/13/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%C2%AD%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%C2%AD%E0%AE%B5%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%C2%AD-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%C2%AD%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

10923385_1053063828044446_33262031165409

உந்த நூறுநாட்கள் வேலைத்திட்டம் எண்டு தொடங்கி இப்ப செய்திக்கு பஞ்சமில்லை.

 

எப்ப பார்த்தாலும் யாரும் ஒருத்தர் அறிக்கை மேல் அறிக்கை விட்டு தள்ளுறார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.