Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எழுத்தாளருக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்

Featured Replies

DSC_0074(1).jpg

 

சொர்ணகுமார் சொரூபன் இந்திய எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'மாதொருபாகன்' நூல் இந்தியாவில் அண்மையில் எரிக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.இலக்கிய குவியத்தின் ஏற்பாட்டில் யாழ் முனியப்பர் ஆலய முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை (15) முன்னெடுக்கப்பட்டது. எழுத்தாளர் தெரிவித்த ஒரு கருத்துக்கு இந்து அமைப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், 'அவரது மாதொருபாகன்'   நூல் அண்மையில் எரிக்கப்பட்டது.

 

இதனால், எழுத்தாளர் தான் இதுவரையில் எழுதிய நூல்கள் அனைத்தையும் மீளப்பெற்றதுடன், தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி இனி எழுதப்போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார். நூல் எரிக்கப்பட்டமை, ஒரு எழுத்தாளர் முடக்கப்பட்டமை கண்டித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

http://www.tamilmirror.lk/137720#sthash.AsZP0ffc.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

நாலு சொட்டை தலைங்க சேர்ந்து இந்து சமய மக்களை புண்படும் வகையில் எழுதினத்துக்கு வீதியில் நின்று வேடிக்கை காட்டுதுங்க

  • கருத்துக்கள உறவுகள்

டாவின்சி கோட் படத்தை வெளியிட்டால் மதச்சார்பின்மை பாதிச்சுடும்.... இன்னசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ் வந்தா அண்ணாசாலையை அடிச்சு நொறுக்குவோம்.... விஸ்வரூபம் வந்தா தலிபான்கள் நல்லவங்க ஆகிடுவாங்க.... ஆனா, தக்காளி, வர்ற போற நாய் எல்லாம் கலாய்க்க முடியற ஒரே மதம் இந்து மதம் தான்..... கேட்ட, பொறுமை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை மயிரு மட்டைன்னுட்டு.... எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.... சாது மிரண்டால்......

Fb

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகன் என்ற எழுத்தாளன் செத்துவிட்டான் ,இனி எழுத போவதில்லை...///பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன்........

நல்லது பெருமாள் முருகன் அப்பிடியே ஓடி போய்டுங்க.....இனியாவது எழுதிறம் என்ற போர்வையில் இந்துசமையத்தை கேவலப்படுத்தாம இருந்தா சரி......அது சரி பேரில் முன்பாதியான பெருமாளை தூக்கின நீங்கள் பின்பாதியான முருகனையும் தூங்கிட்டு ஏதாவது ஒரு தலித் கட்சியில போய் சேர்ந்தீங்கன்னா......உங்களை இந்துசமயம் தவிர்ந்த வேறு ஏதாவது மதத்தில சேர்த்து விடுவாங்க....அங்க போய் ஓங்க வித்தைய காட்டுங்க

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகன் என்ன எழுதினார் என்பதை வாசிக்காமலேயே முகநூலில் பல வருத்தக்காரர்கள் பிதற்றுகின்றார்கள். அதையெல்லாம் சுண்டல் ஒட்டுவதை விட்டுவிட்டு பெருமாள் முருகன் யார் என்றாவது தேடிப் படிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

படிச்சன் படிச்சன்.....மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களை முதல்ல முருகன் எழுதட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில்.. இந்திய உபதூதரகம் சும்மா துறக்கல்ல. தமிழீழ விரோத.. தமிழர் தனித்துவ விரோத... தமிழ் தேசியம்.. தன்னாட்சி.. சுயநிர்ணயம்.. இவற்றை நிர்மூலமாக்க வந்த ஒன்றே அது. அதன் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் அவசியம். அண்மையில்.. பாப்பரசர் மடுவுக்கு வந்த போதும்.. சி வி உடன்.. இவர்களும் அவரை சந்திக்கப் போயுள்ளனர்.பாப்பரசரை இந்தியாவில் கூப்பிட்டு வைச்சு சந்திக்கலாமில்ல.இங்க என்ன வேண்டி இருக்கு..??! எங்க பிரச்சனையை எங்களுக்கு தீர்க்க வரும். இந்தியா போய் கொழும்பில்.. நட்புப்பாராட்டிக்கிட்டு இருக்கட்டும். அதுவே போதும். :icon_idea:

செளந்தர்யலஹரி என்ற பக்தி இலக்கியத்தின் 79 வது சுலோகம் சொல்வது என்ன? ( இது ஒரு சாம்பிள்தான்! இன்னும் எத்தனையோ உள்ளன)

பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நம்மூர் ஒழுக்கசீலர்களின் பார்வைக்கு!

 
1477641_10205012669384315_91680321783509

ஆதிபராசக்தியின் இடுப்புக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்று ஆதி சங்கரர் வழிப் பிரார்த்திப்போமாக.

”அம்மா ! இயற்கையில் மெல்லியதான உன் இடுப்பு , உன் இரு பருத்த ஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் , கொஞ்சம் முன்புறம் சாய்ந்து இருப்பதைப் பார்த்தால் , ஒடிந்து விழுந்து விடுமோ , என்று தோன்றுகிறது . தண்ணீருள்ள ஆற்றின் கரையிலுள்ள மரமானது , கீழே விழுந்துவிடும் போல் சாய்வாக இருந்தாலும் , எவ்வளவு உறுதியாக இருக்குமோ , அதுபோல் உன் இடுப்பிற்கு எந்த ஆபத்தும் வராமல் ( ஓடிந்துவிடாமல்) , நீண்டகாலம் நன்றாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்” - சௌந்தர்ய லஹரி, சுலோகம் 79

 

  • கருத்துக்கள உறவுகள்
இந்துமதக் கோட்பாடுகள் உயர்வானது. மக்கள் துன்பச்சுழலில் சிக்காது வாழ்வைக்கும் தத்துவங்களைப் போதிக்கும் ஒரு மதம். ஆயினும், 
பாலில் ஒருதுளி பிரை வீழ்ந்தாலும் பால் புளித்துவிடுவது போன்று. தமிழரை நேர்மையாக வெல்லமுடியாத சக்திகள், சூழ்ச்சிகள்மூலம் தமிழரைக் கேவலப்படுத்தும் விசம் போன்ற இதிகாசக் கதைகளையும், கொண்டாட்டங்களையும் இந்துமதத்தில் வீழவைத்துள்ளன, அதனால் உயர்வான இந்துமதமே விசம்போன்று தமிழருக்குத் தெரிவதில் ஆச்சரியமில்லை. 
 

 

 சூழ்ச்சிகள்மூலம் தமிழரைக் கேவலப்படுத்தும் விசம் போன்ற இதிகாசக் கதைகளையும், கொண்டாட்டங்களையும் இந்துமதத்தில் வீழவைத்துள்ளன, அதனால் உயர்வான இந்துமதமே விசம்போன்று தமிழருக்குத் தெரிவதில் ஆச்சரியமில்லை. 

 

 

தயவு செய்து இதிகாசங்களை உள்ளடக்க வேண்டாம்.
மகாபாரதம் போன்று அதில் உள்ள எல்லா கதாபாத்திரங்களிற்கும் கிளைக் கதைகள் உள்ள புத்தகம் அல்லது இதிகாசம் இவ்வுலகில் இதுவரை இல்லை. இனிமேலும் வரப்போவதில்லை. இந்த மகாபாரதம் தனி ஒரு மனிதனால் தனது வாழ்நாளில் எழுதப்பட்டிருந்தால் இது மனித குலம் இருக்கும்வரை முறியடிக்கப்பட முடியாத ஒரு சாதனை.
 
இதிகாசங்கள் நன்மை, தீமை, ஒழுக்கம், நீதி, நேர்மை, வாழ்கைமுறையை போதிப்பனவே தவிர விசம் இல்லை.
 
மேலும் இவற்கிற்கும் எமது கலாச்சாரத்திற்கும் தொடர்பு உள்ளதே தவிர இவை தமிழாக்கம் செய்யப்பட்டவையே தமிழ் மூலம் கொண்டவை இல்லை. இவை இரண்டுமே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை.
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை இந்து மதம் மீதான என் ஏனோதானோ போக்கு செள்ந்தர்ய லகரி வாசிப்புடன் மாறும் போல் கிடக்கு.

அனுபவிச்சு வர்ணிச்சிருக்கான் பாவி. பார்வதி ஐயோ பார்வதி ....

ஆகா...

 

இயற்கை வழி தோன்றிய சைவ சமயத்தை தோற்றுவாய கொண்ட இனத்தில் இருந்த எம்மினம் இந்துமதத்தை வலிந்து இழுத்து சமஸ்கிரதம் மந்திரம் என்றும் பின்னர் தனிமனித வழிபாடும் என்று திசைமாறி போய் கனகாலமாகிவிட்டது. 

 

 

பே.மு வின் கதை சுருக்கத்தை யாராவது பதிந்தால் அதை பார்த்துவிட்டு சவுண்டு கொடுக்கலாம்.....

 

 

சௌந்தர்யலகரியும்...கஜராகோ கோயில் சிற்பங்களும் எப்படி மக்களை (அல்லது ஒரு பகுதியினரை) சிறுமைப்படுத்துகிறது என்றும் யாராவது கூறினால் அறிந்து கொள்ளலாம்......

யாரப்பா இந்த பெருமாள் முருகன். அவர் அப்படி என்ன தான் எழுதினார்?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பெருமாள் முருகனைப் பற்றி பெரிசாக தெரியாமல் இருக்கு,இல்லாட்டி யாழ் நாட்டாமைகள் தீர்ப்பை எழுதிப்போடுவினம்:)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பெருமாள் முருகனைப் பற்றி பெரிசாக தெரியாமல் இருக்கு,இல்லாட்டி யாழ் நாட்டாமைகள் தீர்ப்பை எழுதிப்போடுவினம் :)

 

 

இன்னும் உயிருடன் இருப்பதே

எமது நல்லுள்ளத்தைக்காட்டுகிறது

இதுவே பிரான்சிலென்றால்.......??? :(

யாழ் நாட்டாமைகள் தானே already தமது தீர்ப்பை கூறி விட்டார்கள்..... :rolleyes:

 

 

கீழே வருவது  புதுவை ராம்ஜி என்பவரின் ஆயுத எழுத்து என்னும் blog இல் பதிந்திருப்பது (இது தின மணியின் கட்டுரை போலுள்ளது)...

 

பெருமாள் முருகனின் “மாதொருபாகன்'' சொல்லும் உண்மை...!

maathorupaagan.jpg

 

தமிழனுக்குத் தமிழின் பெருமையை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் போலிருக்கிறது. வெளியாகி 4 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது ஆங்கில மொழிபெயர்ப்பு வந்த பிறகுதான் கொங்கு மண்டலத்தில் உள்ள சிலருக்கு பெருமாள் முருகன் எழுதிய “மாதொருபாகன்‘ நாவல் புரிகிறது. கோபம் வருகிறது.

            திருச்செங்கோட்டில் கடையடைப்பு, ஆர்.டி.ஓ.வுடன் பேச்சுவார்த்தை, காவல் துறையின் வேண்டுகோளுக்கு இணங்கி, பாதுகாப்பு கருதி, எழுத்தாளர் தன் குடும்பத்துடன் சற்று வெளியே இருத்தல் போன்ற எல்லாமும் நடக்கின்றன.கொங்கு மண்டலத்தின் பெருமைகளை, கலாச்சார விழுமியங்களை, பழக்கவழக்கங்களைப் பதிவு செய்த பாராட்டுக்குரிய எழுத்தாளர் பெருமாள் முருகன், மனம் நொந்து, தனது பேனாவை இனி திறப்பதில்லை என்று மூடி வைத்துவிட்டார்.
           தன்னுள் இருக்கும் இலக்கியவாதிக்கு மரண சாசனம் எழுதவும் முற்பட்டிருக்கிறார். பிள்ளைச்செல்வம் இல்லாத பெண்கள் தெய்வத்தை வேண்டி, யார் எனத் தெரியாமல் “கண்மூடி’ ஏற்றுக் கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக அக்குழந்தையைப் பார்க்கிற, ஒரு பழைய நடைமுறையை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்திருக்கிறார் என்பதுதான் எதிர்ப்புக்குக் காரணம். அவர் எழுதியது பொய் அல்ல.
             சமூகத்தில் இருந்த பழக்கம்தான். கோயிலில் இரவு தங்கி இருத்தல், குறிப்பிட்ட நாளில் இரவு முழுவதும் கோயில் வளாகத்தில் கண்விழித்து மண்சோறு சாப்பிடுதல், தீர்த்தமாடுதல் இவை யாவும், “இத்தனை நாள் இல்லாமல் எப்படி இப்போது?’ என்கிற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சமூகம் தந்த அங்கீகாரச் சடங்குகள் என்பதை நாம் மறுத்துவிடலாகாது. 
             மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர், “இரண்டாம் இடம்‘ என்கிற நாவலை எழுதியிருக்கிறார். அதனை சாகித்ய அகாதெமி தமிழிலும் வெளியிட்டுள்ளது. பீமன் எப்போதும் தான் இரண்டாம் இடத்தில் வைக்கப்படுவதற்காக ஆதங்கப்படுவதுதான் கதை. “நான் அறியாப் பருவத்தில் தேரோட்டியுடன் கலந்து பெற்ற மகன்தான் கர்ணன். பாண்டுவை மணந்த பிறகு, பாண்டு மகாராஜா கலவிக்கும் தகுதியில்லாமல் இருதயமும் பலவீனமாக இருந்ததால், விதுரருக்கு பெற்ற மகன்தான் தருமன்.
            ''மிகத் திடகாத்திரமான காட்டுவாசிக்குப் பிறந்தவன்தான் நீ...'' என்று குந்தி சொல்வதாகக் கதை செல்கிறது.இந்த நாவலை மலையாள உலகம் எதிர்க்கவில்லை. பல பதிப்புகள் கண்ட நாவல் இது. இலக்கியத்தை இலக்கியமாகப் பார்க்கத் தெரிந்த சமுதாயம் அது. படைப்பிலக்கியவாதியின் கற்பனைக்குக் கடிவாளம் போடாத நாகரிக சமுதாயம் அது.இலக்கியத்தை, கோயில் வழிபாட்டுச் சடங்குகளை எல்லாம் விட்டுவிடுவோம். இன்று “ஃபெர்டிலிடி சென்டர்’ எனப்படும் கருகூட்டு மருத்துவமனையில் என்ன நடக்கிறது? ஓர் ஆண், மலடு. பெண்ணோ கருவுறத் தகுதி படைத்தவள்.
              அவர்கள் பெர்டிலிடி மருத்துவமனைக்குச் செல்லும்போது, “உங்கள் குடும்ப மரபினி தொடர விரும்பினால், உங்கள் சகோதரர் யாரிடமாவது விந்து தானம் பெற்று, உங்கள் மனைவியை கருவுறச் செய்யலாம். இல்லையென்றால், விந்து வங்கியில் பெற்று கருவுறச் செய்யலாம். உங்களுக்குச் சம்மதமா’ என்பதுதான் நேர்மையான, நல்லிதயம் படைத்த மருத்துவரின் முதல் கேள்வி. பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வசதி இல்லாத ஒரு தம்பதி, தங்களுக்கு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக சமூகம் அங்கீகரித்த, கோயில்கள் உருவாக்கித் தந்த, யார் யாருடன் என்றறியாத கண்மறைப்பு நடைமுறைகள் இன்று வழக்கத்தில் இல்லாததால், ஒரு பெண் தனக்கான விந்து தானத்தை, தானே தன் விருப்பப்படி, மகாபாரதக் குந்தியைப் போலத் தேர்வு செய்து கொள்கிறாளே,
                  அதைத் தவிர்க்க முடியுமா, மறுக்க முடியுமா அல்லது தடுக்கத்தான் முடியுமா?சங்க காலத் தமிழனின் காதல் வாழ்க்கையைப் பதிவு செய்ததுதானே அகநானூறு. தான் வாழ்ந்த காலத்தில், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த நடைமுறையை, தான் எழுதும் கதையில் பதிவு செய்வது என்பது படைப்பிலக்கியவாதியான பெருமாள் முருகனின் உரிமை, கடமை. இல்லாததையேகூட எழுதியிருந்தாலும் அது அவரது கற்பனைக்குத் தரப்பட வேண்டிய சுதந்திரம். அதைத் தடுக்க முற்படுவது எப்படி சரியாகும்? எதைச் சொன்னாலும் அது யாராவது ஒருவர் மனதைப் புண்படுத்துகிறது என்கிற பெயரில் போராட்டம் நடத்துவது தற்போது வழக்கமாகிவிட்டது.
              ஒரு கருத்து ஏற்புடையதல்ல என்றால் அதற்கு மாற்றுக் கருத்தை முன்வைக்கலாம். மாறாக, யாரும் கருத்தே கூறக்கூடாது என்றால் எப்படி சரி? பெருமாள் முருகனுக்குப் பக்கபலமாக நின்றிருக்க வேண்டிய அரசு நிர்வாகம் போராட்டக்காரர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததேகூட மிகப்பெரிய தவறு.சமீபத்தில் ஒரு திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தெளிவாக வழங்கிய தீர்ப்பு, “தணிக்கைக் குழுவால் சான்றிதழ் வழங்கப்பட்ட திரைப்படத்தை வெளியிடாமல் தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. அந்தத் திரைப்படம் வெளிவருவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உண்டு’ என்பது. அதுவே பெருமாள் முருகனின் “மாதொருபாகன்‘ பிரச்சனைக்கும் பொருந்தும். சாதியும், சமயமும், கணவனும் ஏற்றுக்கொண்டாலும் ஆணாதிக்க மானுடம் ஏற்க மறுக்கிறது.
            இது சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் மற்றொரு பாகம். இதுவே வெளிமாநிலத்திலோ, வெளிநாட்டிலோ நடந்திருந்தால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டெழுந்திருக்கும். ஆனால் தமிழனாய் பிறந்தது பெருமாள் முருகனின் தவறு....!      
நன்றி : தினமணி

இடுகையிட்டது புதுவை ராம்ஜி நேரம்

 

 

 

மேலே உள்ளதை வாசித்த பிறகு...நான் நினைப்பது..பெ.முவுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் சொல்லுவது போல் வீணாக ஒருவரை காயப்படுத்திவிட்டார்கள்....ஆனால் இதை எதிர்ப்பவர்கள் சொல்லுவது இந்த கதை ஒரு "சாதியை" மட்டும் குறிவைத்து தாக்குவது போலுள்ளது என்று....எல்லாம் வாசிச்சவருக்கே வெளிச்சம்...

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

மாதொருபாகன் நாவல் pdf வடிவில்..

https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகனைப் பற்றி அறிய விரும்புவர்கள் இதைப் படிக்கலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

அவர் தனது வலைத்தளத்தையும் எடுத்துவிட்டார். ஆனால் முன்னர் அவருடைய கட்டுரைகள் சிலவற்றை யாழில் இணைத்திருந்தேன்.

கம்பராமாயணம்: இலக்கிய வழக்கும் உலக வழக்கும்

http://www.yarl.com/forum3/index.php?/topic/139676

கங்கணம் - திருமணம் ஆகாதவனின் அவஸ்தைகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/131088

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகனது முக்கியமான கட்டுரை. தமிழ் இலக்கணம் படிப்பிப்பவர்களுக்கு உதவும்.

இலக்கணம் கற்பித்தல் : ஆசிரிய அனுபவம்

http://www.yarl.com/forum3/index.php?/topic/141604-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81/

  • கருத்துக்கள உறவுகள்

எது இருந்தாலும் பெருமாள் முருகனின் வாலை ஓட்ட நறுக்கியாச்சு இனி அவர் எழுதவே மாட்டன் எண்டு விட்டிட்டு ஓடிட்டார்....பிறகென்ன விவாதம் வேண்டி கிடக்கு......

  • கருத்துக்கள உறவுகள்

மு.க.ஸ்டாலின், சீமான்,பழ. நெடுமாறன், திருமாவளவன் உட்பட) சில கேள்விகள்:

1)உங்கள் மனைவிக்கு குழந்தை இல்லையென்றால் நீங்களும் பெருமாள் முருகன் பின்பற்றிய வழியை பின்பற்றுவீர்களா?

2) பெருமாள் முருகன் குறிப்பிட்ட வழி - தமிழர்களின் பண்பாடா?

3) திருசெங்கோட்டைப் பற்றிய ஏராளமான இலக்கியங்கள், குறிப்புரைகள், திருசெங்கோட்டைப் பற்றி விளாவாரியாக எழுதப்பட்ட வெள்ளையர் ஆவணங்கள், ஏன், (பெருமாள் முருகன் தொகுத்த) நாவலில் குறிப்பிடப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்த திரு.முத்துசாமி கோனார் அவர்களின் கொங்குநாடு புத்தகத்தில் திருசெங்கோட்டை பற்றி விலாவாரியாக கூறப்பட்டுள்ளது, அதிலும் இல்லை. இந்த கோயில் மண்டப கட்டளைதாரர்கள் (பல்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள்), முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் எவருமே இதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளனர். நிலை இப்படி இருக்க பெருமாள் முருகனின் ஆதாரமற்ற கூற்றை நீங்கள் ஆதரிக்கிரீர்களா?

4) நாவல் நடந்த காலகட்டமாக சொல்லியிருப்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தீயாக பரவிய காலம். இப்படியொரு சம்பவம் (மனதளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டு) நடந்திருக்குமெனில் திராவிட இயக்கத்தவர்கள் கூட இதை விட்டு வைத்திருப்பார்களா? இதைப்பற்றி இதுவரை வந்த எந்தவொரு சமூக வரலாற்று ஆய்வாளர்களும் குறிப்பிடாதது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் முருகன் போன்ற மூன்றாம்தர எழுத்தாளர்கள் இந்த சமூகத்துக்கு தேவை அற்றவர்கள். இம்மாதிரியான காசுக்கு காமத்தை விற்பவனுக்கு விருது வழங்கிய நண்பர்கள் வெட்கி தலை குனிந்துள்ளார்கள், குழந்தை வேண்டி அடுத்தவனோடு தன மனைவியை அனுப்பும் கலாச்சாரத்திற்க்கு கொடி பிடித்தவனை ஆதரிப்பவர்களை அவர்களும் அம்மாதிரியான செயலுக்கு துணை செல்பவர்கள் என்றுதானே எண்ண தோன்றும்?

 

பெருமாள்முருகன்
அந்தாளு தான் கஷ்டமான கொங்கு வட்டார மொழி சொற்களை தனியாக உருவாக்கி எத்தனையோ நாவல்கள் அம்மக்களின் சிறப்புகளை வெளிய கொண்டு வந்தார்........

கலாச்சாரம் பேசுற ஏதாவது ஒரு நாயி பதில் சொல்லட்டும் 
பார்ப்பான் உன்னைய பாத்து சூத்திரன்னு சொன்னான் இன்னும் சொல்லிக்கிட்டு இருக்கான் 
அதுக்கு அர்த்தம் தேவடியா மகன் 
நீ அவ்வளவு ரோசமான ஆம்பள மசுரா இருந்தா அவ்வளவு பார்ப்பானையும் கொல்லுடா மொதல்ல...........
இதே ஹிந்துத்துவா நாய்கள் தான் ஒரு நூறு வருசத்துக்கு முன்னுக்கு சக ஹிந்துவை நாடார்களை மேலாடை போடவிடாமல் செருப்பு போடவிடாம சட்டை போடவிடாம அட பொம்பளைங்க முலைக்கு வரி வாங்குன தேசம் இது 
பெண்ணின் முலை பெருசா இருந்தா வரி கொடுக்கணும் இப்போ கத்துற நாய்களா ஒருவேள உன் அப்பத்தாவோ உன் ஆயாவோ இந்த வரியை கொடுத்து இருக்கலாம்........

டேய் கலாச்சாரம் எவண்டா பேசுறது 
கோவிலில் தொண்டு செய்ய வந்த தேவரடியாள் என்ற முறையை மாற்றி அந்த பெண்களை பாலியியல் அடிமையாக்கி பார்ப்பான் தொடங்கி ஊர் பெரியவன் வரை அனுபவிச்சி சப்பி துப்பி கடைசியா தேவடியான்னு கொண்டுவந்து விட்டான் பாரு இவனுகதாண்டா இன்னைக்கு ஹிந்து கலாச்சாரம் பேசுறான்...

இன்னும் நீ கலியாணம் பண்ணும் போது மாங்கல்யம் தந்துனானேனா என்று மந்திரம் சொல்லுறானே பார்ப்பான் அதுக்கு அர்த்தம் என்ன 
இந்தா இவள கட்ட போறியே 
இவ இதுக்கு மொத கந்தவருக்கு பொண்டாட்டி இந்திரனுக்கு பொண்டாட்டி அக்னிக்கு பொண்டாட்டி பார்ப்பான் கூட படுத்துட்டு இப்போ உனக்கு பொண்டாட்டி ஆகுரான்னு பச்சை பச்சையா சமஸ்கிருதத்துல சொல்லி நம்ம பொம்பளைகளை கேவலப்படுத்துற அவனுகளை விடவா பெருமாள்முருகன் உங்க பிஞ்சிபோன பண்பாட்டை கெடுத்துட்டாரு சொல்லுங்கடா.....

பெத்த தாயி செத்து குடுக்குற திவசத்துல கூட இவ என்ன யாருக்கு பெத்தான்னு தெரியாது ஆனாலும் என் தாய் அப்புடின்னு கேவலப்படுத்துரானே பார்ப்பான் அவனை விடவாடா கேவலப்படுத்திட்டாறு........
உன் மதம் யோக்கியமா உன் கடவுள் யோக்கியமா........
டேய் முதலில் காஞ்சி சங்கரன் தொடங்கி நித்தியானந்தா தொடங்கி எல்லாத்தையும் வெட்டி கொன்னுட்டு நீ பாரம்பர்யம் பேசுங்கடா...........,

இளிச்சவாயன் மாட்டுனா ஏறி மிதிக்கத்தான் செய்வானுக , பாரம்பர்யம் பேசுறானுக வெங்க கூதிக..
யோவ் பெருமாள்முருகன் இனி கவுண்டர் சாதியில பொறக்காம, பார்ப்பானா பொறந்து தொலை.

 

facebookஇல் இந்த துள்ளு துள்ளுறுவர் "உண்மையாகவே" துள்ளி பெ.மு வை மடக்கினவர்கள் முன் துள்ளியிருக்கலாம்...

 

மற்றது இந்த பார்ப்பான் சொல்லுற மந்திரம் எல்லாம்...பார்ப்பான் தன்னுடைய திவசம், கல்யாண சடங்கிலும் தான் கூறுகிறான்....பார்ப்பானுக்கு என்று வேறு மந்திரங்கள் இருக்குதா???

 

பே.முவை கேட்டால் நீயும் "திருவிழாவில் தான் பிறந்தியா" என்று கேட்டால் என்ன சொல்லுவார்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.