Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவின் தோல்வியில் 'றோவின் வகிபாகம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

aa(228).jpg

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின் கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம் அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.

 

இந்தியாவின் பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார்.

 

மைத்திரிபால சிறிசேன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற தூண்டியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடாது இருக்க தீர்மானிக்க வைத்து, வெல்லக்கூடியவரும் இந்தியாவுடன் ஒத்துபோகக்கூடியவருமான ஒருவரை களத்திலிறக்க உதவினார் என்றும் இலங்கையின் றோவின் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

 

றோ உளவு நிறுவனம் ரணிலை சந்தித்து கட்சித்தலைவர்களை தூண்டி சந்திரிக்காவையும் கொண்டுவந்தது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராய்டருக்கு கூறினார்.   

 

http://www.tamilmirror.lk/137888

  • கருத்துக்கள உறவுகள்

இதன் ஒரு தொடர்ச்சியாக.. சம்பந்தன் ஐயாவை இந்தியாவுக்கு வரவைத்து, யாருக்கு ஆதரவு என்பதை அறிவிக்க வைப்பதில் தாமதம் காட்ட வைத்தார்கள். அவர் இடையிடையே மருத்துவ பரிசோதனைகளும் செய்துகொண்டார். :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மருத்துவ பரிசோதனையின் பின் தான்....
சம்பந்தர் ஐயாவால், ஓட்டும் போட முடியாமல், விரல் வீங்கினது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்   ஏப்ரிலுக்கு முதல்  றோவின் பார்வைக்கு பிடிக்காத கூட்டமைப்பில் மக்கள் செல்வாக்குப் பெறும்.. அனந்தி அக்கா.. போன்றவர்களை வெளில தூக்கி போட   அல்லது கட்டுப்படுத்த முனைவார். அப்புறம்.. நாலு தடவை இந்தியாவுக்கு விசிட்  அடிச்சு தேசிய தலைவரைப் பற்றி அவதூறு பேசி.. றோவிடம் பெற வேண்டியதைப் பொறுவார். பின் கொழும்பில்... சிங்கள எஜமானர்களை தாஜா பண்ணுவார். தமிழ் மக்கள் தான்.. தீர்க்கமாக   இருக்கினமில்ல..  கூட்டமைப்புக்கு வாக்குப் போட. அதில  குளிர் காய்ஞ்சுக்குவார்.

 

சம்பந்தனின் கொட்டத்தை கூட்டமைப்பில்  அடக்கிய பின்    தான் கூட்டமைப்பு எனி சோரம் போதலுக்கு அப்பாலான வலிமை பெற முடியும். அதற்குரிய ஆணித்தரமான கட்சிகள்.. இன்று கூட்டமைப்பில்    இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தை றோ நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. விடுதலைப்புலிகளை   அழிக்கனும்  என்பதில்.. சம்பந்தன் றோவுக்கு  மறைமுகமாக  உதவி இருக்க வாய்ப்புள்ளது.

 

முள்ளிவாய்க்கால் பேரழிவை தடுத்து நிறுத்த சம்பந்தன் குழுவினர் தீவிரமாக செயற்படாமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. :icon_idea::(

  • கருத்துக்கள உறவுகள்

ஆணித்தரமான சம்பந்தர் எதிர் அரசியல் செய்யத்தானே இருக்கவே இருக்கு கஜன் கம்பேனி. அவர்களால் ஏன் மக்களை விழிப்பூட்ட முடியேல்ல.

ஓ மறந்தே போனேன் மக்கள் எல்லாரும் முட்டாப்பயலுகள் என்பதை :)

போய் முதல்ல ஒரு கிராமசபை, வேண்டாம் சனசமூக நிலையத்தில் பெரும்பான்மையை எடுங்க. அப்புறம் சம்பந்தனைத்திட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப அனந்தி அக்கா இந்திய 'ரோ'வின் சதித் திட்டத்தை முறியடிக்கத்தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவவா? அட ஆள் பெரிய ஆள்தான் போல இருக்கு! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது வேலைத்திட்டங்களோடு மக்கள் நலன்களை பாதிக்காத தீர்மானங்களை எடுத்து மக்களுக்காக வேலை செய்து கொண்டே தான் உள்ளது.  தற்போது சுன்னாகம் சுற்றாடல் சீர்கேடு பிரச்சனையிலும்   அவர்கள் தான் போராடுகிறார்கள். தமிழரசுக் கட்சி போராடவில்லை. கூட்டமைப்பில்   உள்ள   இதர கட்சி உறுப்பினர்கள்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு நெருங்கி ஒத்துழைத்து இயங்குவதை காண முடிகிறது. குறிப்பாக  ஐங்கரநேசன் போன்றவர்கள். இது வரவேற்கதக்க நல்ல மக்கள் நலன் சார் சிந்தனையாகும்.

 

தமிழரசுக் கட்சி  இந்திய சிங்கள எஜமானர்களை கவனத்தி்ல் எடுத்து முன்னெடுக்கும்   அரசியல் எமது மக்களை நட்டாற்றில் மட்டுமே கொண்டு போய் விடும். சம்பந்தன் கூடாரம்  அதையே செய்யப் பிரியப்படுகிறது. :icon_idea::):rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறப்பட்டுளது பச்சைப்பொய். குறித்த போராட்டத்தில் சகல கட்சிகளும் பாகுபாடின்றி போராடுகிறனர். சரா எம்பி சித்தார்தன் உட்பட.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப அனந்தி அக்கா இந்திய 'ரோ'வின் சதித் திட்டத்தை முறியடிக்கத்தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவவா? அட ஆள் பெரிய ஆள்தான் போல இருக்கு! :D

 

வாலி திரிப்பு அரசியலை கைவிடுங்கள்.

 

அனந்தி அக்கா மகிந்தவுக்கு ஆதரவு சொல்லி கருத்துச் சொல்லேல்ல. மைத்திரிக்கும் சொல்லேல்ல. தமிழ் மக்களின் குறிப்பாக காணமல் போன மக்களின் சார்ப்பில்  எவருமே பிரஸ்தாபிக்க மறுப்பதால்.. இவர்கள் யாருக்கும் தான் வாக்குப் போடப்போவதில்லை என்று தான் சொன்னார்.

 

அவர் சொன்னது போலவே மைத்திரி வந்து என்னென்னவோ எல்லாம்   அறிக்கை கொடுக்கிறார்கள்.. காணாமல் போன மக்கள் தொடர்பில்  ஒரு அறிக்கை வரேல்ல.

 

எங்கள் உறவினர்களை  இந்தியப் படை பிடிச்சுக் கொண்டு போய் ஒரு மாதம் கண்ணில் காட்டாமல் வைத்திருந்தது. அன்றைய காலத்தில் வீட்டில் பட்டினிதான். ஒரே அழுகை.

 

நினைச்சுப் பாருங்கள்.. உங்கள் வீட்டில்  அப்படி ஒரு சூழலில்... நீங்கள் யாருக்கு வாக்களிப்பது என்று சொல்வீர்கள்..????!

 

நீங்கள் சொகுசாக இருந்து கொண்டு மற்றவர்களி்ன்  துன்பத்தை உணராமல்.. திரிபு கருத்து எழுதுவதை பார்க்க  உங்கள் மீதும் வெறுப்பே ஏற்படுகிறது. :icon_idea::(

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இதையே நானும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் அதிதிரிப்பு அரசியலையும் சேறடிக்கும் அரசியலையும் கைவிடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறப்பட்டுளது பச்சைப்பொய். குறித்த போராட்டத்தில் சகல கட்சிகளும் பாகுபாடின்றி போராடுகிறனர். சரா எம்பி சித்தார்தன் உட்பட.

 

சரவணபவன்    உதயனுக்கு போஸ் கொடுக்கப் போறவர். சரவணபவனை பற்றி எங்களுக்கு நல்லா தெரியும். மாவீரர்களை மறக்கனுன்னு சொன்ன பெரும் தலைவர்  அவர். அவர் அதை மறப்பார்.. ஆனால்  உதயனில் பட்ட நாலு குண்டுகளை காட்டி விளம்பரம் தேடிக் கொள்வார்.

 

அவரைத் தவிர மிச்ச தமிழரசுக் கட்சி ஆக்கள்...   எங்க. பிரச்சனையுடன் சம்பந்தப்பட்ட தொகுதி ஆள் மாவை எங்க...????!  அனந்தி மீது நடவடிக்கைக்கு கடிதம்  எழுதிறாரா..???! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி தேர்தலைப் பகிஸ்கரித்தே நேரடியாக மகிந்தவை ஆதரிக்கும் நிலைப்பாடுதான். இதனையே அவர் டான் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியை வைத்து விளம்பரம் செய்தது அந்த தொலைக்காட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை புறக்கணிச் சொல்வதும் மகிந்தவுக்கு போடசொல்வதும் ஒன்றே.

சிறையில் உள்ள அரசியல் கைதிகள் விரைவில் விடுதலையாவர் என்று மைத்திரியும், சிற்சிச்சாலைகள் ஆணையாளரும் தெரிவித்துளனர்.

இது மகிந்த காலத்தை விட முன்னேற்றமில்கையா?

அனந்தி சொல்கேட்டு தேர்தலை புறக்கணித்து மகிந்த வெண்டிருந்தால், இவர்கள் தொடர்ந்தும் சிறையில் அல்லவா இருப்பர்.

அரசியல் என்பது the art of the possible இங்கே உணர்சிக்கு இடமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இதையே நானும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் அதிதிரிப்பு அரசியலையும் சேறடிக்கும் அரசியலையும் கைவிடுங்கள்!

 

நாங்கள் ஆதாரங்களை முன்வைத்துதான் கருத்துச் சொல்கிறோம். சகட்டு மேனிக்கு ஒருவரின் பேச்சை எமக்கு ஏற்றமாதிரி திரிக்கவில்லை.

 

அனந்தி அக்கா ஊடகங்களுக்கு அளித்த விளக்கம்.. தமி்ழ்நெட்டில்.. ஒலி.. வடிவில்  உள்ளது. அவர் தானந்த தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாகவே சொல்லி அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார்.

 

இதே சம்பந்தன்  தேர்தலில் வாக்களிக்கவில்லை. இதனை ராஜபக்சவுக்கு ஆதரவளித்தார் என்று திரிக்கலாமா..??! :lol::D

 

மேலும் மைத்திரி பதவிக்கு வந்தும் காணாமல் போன.. எம் உறவுகள் தொடர்பில்  எடுத்த நடவடிக்கை என்ன. பாப்பரசரிடம் கூட  அதனை முறையிட தடை தான்  ஏற்படுத்தி உள்ளனர்.

 

ஆக.. முக்கிய பிரச்சனைக்கு யாருமே தீர்வு வைக்கினமில்ல... எனும் போது புறக்கணிப்பு நிலைப்பாடு வருகிறதே அன்றி அதி்ல்   எவர்  அரசியல் ஆதாயம் பெறுவர்   என்பது   உங்கள் போன்ற பொப் கோன் சிங்கள கிரிக்கெட் ரசிகர்களின் நிலைப்பாடு.

 

நாங்கள் நிச்சயமாக எங்கள் நியாயத்தை ஆதாரங்களோடு பதிவிடுவோம். உங்கள் திரிப்பு அரசியலையும் எதிர்ப்போம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாலி,

என்ன ஜோக்கடிக்கிறீர்களா.

மருத்துவத்துக்கு அப்பால் அண்ணருக்கு தெரிந்த அரசியல் என்றால் சேறடிப்பு அரசியல்தான். அதையும் விட்டுட்டு - வீட்டில என்ன மோட்டுவளையை பார்த்தபடி உக்காந்திருப்பதா? இண்டைக்கு locum வேலையும் இல்லை போல கிடக்கு :)

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலுக்கு பின் தமிழ்மக்களுக்கு கூட்டமைபபை ஆதரிப்பதைத் தவிர வேறு தெரிவு இல்லை.இதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் சம்பந்தர் தமிழ்த்தேசிய அரசியல் பேசிக்கொண்டே அதற்கெதிரான இந்தியாவின் நிகழ்ச்சி நிரலை அரங்கேற்றுகிறார்.ததேகூட்டமைப்புக்குள் விழிப்பணர்வு ஏற்பட்டு சம்பந்தரையம்,சுமத்திரனையும் ததேகூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வேண்டும். மாவை எந்த நிலமைக்கும் இசைந்து கொடுக்கக் கூடியவர். அவரால் பிரச்சினை இல்லை.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருக்கும் தமிழ்த்தேசிய சிங்கங்கள் எல்லாம் ஊருக்குப் போனா ஈசியா சம், சும் ஐ வெளியேற்றி விடலாம்.

எப்ப டிக்கெட் எடுக்கிறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை: அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2015, 02:35.24 PM GMT ]
army_people_001.jpg
தேசிய பாதுகாப்பு கருதி வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று இலங்கையின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது தொடர்பில் தெளிவான அறிவித்தலை விடுத்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகின.

 

எனினும் அதில் உண்மையில்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

கண்டியில் இன்று மல்வத்த மகாநாயக்கரை சந்தித்தபோது அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்..

 

இங்கு இந்த செய்தியெல்லாம் பெரிய விசயமில்லை.......அனந்தியை  வெளியேற்றுந்துதான் இங்கு பெரிய இசு....தமிழ் மக்கள் வாக்களித்தது மஹிந்தவை வெளியேற்ற வேண்டுமென்றே  என்பதுதான்...அதற்காக மைத்திரிக்கு ஆதரவு என்றோ.....நம்ம சம்பந்து   அய்யாவின் விருப்பத்துக்கு ஆகவோ அல்ல... இன்கு புலத்தில் இருந்து கொண்டு புலத்தமிழரை குறைசொல்லும்  சிலருக்கும் இது தெரியும்...என்ன செய்வது கட்சி கலர் மாறிவிட்டுது.... வருமானமும்   கெட்டுப்போம்...  ..அதற்கு பரிகாரம்தான் இந்த மேட்டர்

 நேற்றுத்தான் கூறியிருந்தேன்.அமெரிக்காவின் காசில் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலில் பயணிக்கும் இந்த அரசின் மூலம் தமிழர்களை கொலை செய்து போர்குற்றமிழைத்து இனப்படுகொலை செய்த கறைபடிந்த கரங்களை போரில் சம்பந்தப்பட்டவர்கள் கழுவப்போகின்றார்கள்.அதன் ஆரம்பம் தான் இது.கடைசியில் அனைவரும் போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை இவைகளிலிருந்து நழுவி   "கிடைக்காத வாழ்க்கைக்காக அலைவதிலும் பார்க்க கிடைத்த வாழ்க்கையை வாழ்வதே மேல்" என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள்.

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஓ அப்ப அனந்தி அக்கா இந்திய 'ரோ'வின் சதித் திட்டத்தை முறியடிக்கத்தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவவா? அட ஆள் பெரிய ஆள்தான் போல இருக்கு! :D

 

 

இது உங்களை போன்ற வித்துவான்களால் தான் தொடங்கப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி ஒரு முடிவுக்கு வலியை அனுபவித்த நிலத்து மக்கள் வந்தாலும் அதில் தப்பில்லை நீலப்பறவை.

வெளிநாட்டில் ஓடிவந்து வாழும் நமக்கு அதைத்தடுக்கும் உரிமையும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்..இந்த கொலைவெறி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு ஆரயப்பட்ட விடையங்கள் ..அநியாயமானதே....ஆனதி சொன்னதை திரிவுபடுத்தி தனது சுயலாபத்திற்காய் பாவித்தவர் டங்கு மாமா...இதை தொடர்ச்சியாக செய்திகளி வாசிக்கும் நீதியான வர்கள் உணார்ந்து இருப்பார்கள்...இப்ப உள்ள ஆட்டம் ரணில் நரியுடையது....விஜயகலாவின் கொடிபறக்க  சுமந்திரன் மூலம் செய்யும் தந்திரம்தான் இந்த அனந்தி வெளியகற்றல் நடவடிக்கை.....இதன்மூலம் இலாபம் அடையப்போவது.. யூ என் பி..சம்பந்தரின் கையில் கொடிகொடுத்ததும் இந்தநரிதான்...இதையுணராமல்..செயல்படுகிறது கூத்தமைப்பு...யாழ் களத்தை ஈனாக்க அரசியலில் கொண்டுவந்து விட்டதாக நீலிக்கண்ணீர் விட்டவரின் வேசம் கலைந்துவிட்டது....அவரின் கனவு யாழ் களத்தில் பலியாது...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

aa(228).jpg

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின் கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம் அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன.

 

இந்தியாவின் பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார்.

 

மைத்திரிபால சிறிசேன உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற தூண்டியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடாது இருக்க தீர்மானிக்க வைத்து, வெல்லக்கூடியவரும் இந்தியாவுடன் ஒத்துபோகக்கூடியவருமான ஒருவரை களத்திலிறக்க உதவினார் என்றும் இலங்கையின் றோவின் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

 

றோ உளவு நிறுவனம் ரணிலை சந்தித்து கட்சித்தலைவர்களை தூண்டி சந்திரிக்காவையும் கொண்டுவந்தது என ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ராய்டருக்கு கூறினார்.   

 

http://www.tamilmirror.lk/137888

 

றோ(கொழும்பில் உள்ள றோ அதிகாரி) இதற்கு மறுப்பு தெரிவித்து சவாலாக உண்மை எனில் நிரூபிக்குமாறும் கேட்டுள்ளது.


ஓ அப்ப அனந்தி அக்கா இந்திய 'ரோ'வின் சதித் திட்டத்தை முறியடிக்கத்தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தவவா? 

 

அவரின் ஆதங்கம் இனப்படுகொலை ,போர்க்குற்றம் அமெரிக்காவின் பணத்துடன் இந்தியாவால் அழிக்கப்படுகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.