Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் தொடரும் இராணுவத்தினரின் அடாவடி! இராணுவத்தினரின் தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர் என்போர் பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த மண்ணை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கிழக்கு இத்தியாவின் கலிங்கம் மற்றும் வங்கம் போன்ற இடங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள். அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களே இல்லை!

 

 

இலங்கையில் தான்  சிங்களவர்கள் தோன்றினார்கள் என்பற்கான ஆதாரத்தை தரமுடியுமா?

இலங்கையில் தான் சிங்களவர்கள் தோன்றினார்கள் என்பதற்கு ஆதாரம் சிங்களம் இலங்கையில் மட்டும் உள்ள மொழி என்பதே. வாலி சொல்வது உண்மையானால் கலிங்கம் மற்றும் வங்கம் போன்ற இடங்களில் சிங்களம் பயன்படுத்த பட்டிருக்க வேண்டும். அப்படியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. சிங்களவர்கள் இலங்கையில் தோன்றினார்கள் என்பதை எந்த ஒரு மொழியியல் மற்றும் சமூகவியல் ஆய்வாளரும் இன்றுவரை மறுக்கவில்லை. இலங்கைத்தமிழர் மட்டுமே மறுத்து வருகிறார்கள். ஆகவே உலக அரசுகளும் ஆய்வாளரும் இலங்கைத்தமிழரை நேர்மை அற்றவர் என்றும் நியாமற்ற வகையிலான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்றும் கருதுகிறார்கள். இலங்கைத்தமிழர் சர்வதேச சமுகத்தில் மதிப்பை பெற வேண்டுமானால் எதிரிக்கும் கூட நியாயாமான உரிமையையும் மதிப்பையும் வழங்க தயாராக இருக்க வேண்டும்.

Edited by Jude

  • Replies 65
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

 

இலங்கையில் தான் சிங்களவர்கள் தோன்றினார்கள் என்பதற்கு ஆதாரம் சிங்களம் இலங்கையில் மட்டும் உள்ள மொழி என்பதே. வாலி சொல்வது உண்மையானால் கலிங்கம் மற்றும் வங்கம் போன்ற இடங்களில் சிங்களம் பயன்படுத்த பட்டிருக்க வேண்டும். அப்படியான ஆதாரங்கள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. சிங்களவர்கள் இலங்கையில் தோன்றினார்கள் என்பதை எந்த ஒரு மொழியியல் மற்றும் சமூகவியல் ஆய்வாளரும் இன்றுவரை மறுக்கவில்லை. இலங்கைத்தமிழர் மட்டுமே மறுத்து வருகிறார்கள். ஆகவே உலக அரசுகளும் ஆய்வாளரும் இலங்கைத்தமிழரை நேர்மை அற்றவர் என்றும் நியாமற்ற வகையிலான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்றும் கருதுகிறார்கள். இலங்கைத்தமிழர் சர்வதேச சமுகத்தில் மதிப்பை பெற வேண்டுமானால் எதிரிக்கும் கூட நியாயாமான உரிமையையும் மதிப்பையும் வழங்க தயாராக இருக்க வேண்டும்.

 

இங்கள் எதற்காக சிங்களவர்களுக்காக குத்தி முறிகிறீர்கள் என்பது தெரியவில்லை.

 

நீங்கள் கூறும் எதிரிக்கும் கூட நியாயமான உரிமையையும் மதிப்பையும் வழங்கவேண்டும் என்பதை உங்களுக்கு மூளைச் சலவைச் செய்தவரிடம் கூறிப்பாருங்கள்.

 

சிங்களவர் இலங்கையில்த்தான் தோன்றினார்கள், இலங்கையில்த்தான் தோன்றினார்கள் என்றால், அவர்கள் வானத்திலிருந்து பரமபிதா நேரடியாக அனுப்பி வைத்தவர்களா?? இந்தியாவிலிருந்துதான் வந்தோம் என்று சிங்களவனே கூறினாலும், நீங்கள் இல்லை அவர்கள் கல்தோன்றா மண்தோன்றா காலத்திலிருந்து இலங்கையில் தோன்றி வளர்ந்தார்கள் என்று சத்தியம் செய்கிறீர்கள்.

 

நீங்கள் சாட்சியமாகத் தூக்கிப் பிடிக்கும் புணையப்பட்ட மகாவம்சத்தில்க் கூட விஜயனும் அவனது 700 தோழர்களும் இந்தியாவின் புரிஷ்ரேஷ்த்தா எனும் நாட்டிலிருந்து வந்ததாகச் சொல்லப்பட்டிருக்கே? அதுமட்டுமல்லாமல் அவன் இலங்கையை வந்தடைந்தபோது நாகர், இயக்கர் என்னும் சிவனை வழிபடும் ஆதிவாசிகள் அங்கே ஏற்கனவே வசித்து வந்ததாக எழுதப்பட்டிருக்கே?? அப்படியிருக்க எப்படி சிங்களவர் இலங்கையில்த்தான் தோன்றினார்கள் என்று சத்தியம் செய்கிறீர்கள் ? அப்படியானால் அந்த நாகரும் யக்கரும்தான் சிங்களவரா??

 

விஜயனின் தந்தையான சிங்கபாகு தனது தந்தையைக் கொன்றபின்னர் தனது சொந்தச் சகோதரியான சின்ஹசீவளீயை மணந்ததாகவும் அவனுக்குப் பிறந்த குழந்தையே பின்னர் விஜயன் என்கிற பெயரில் இலங்கையை வந்தடைந்ததாகவும் உங்களின் மஹாவம்சம் கூறுகிறதே?றாப்படியிருக்க சிங்களம் தோன்றியது இலங்கையில்த்தான் என்று ஏன் அடம்பிடிக்கிறீர்கள் ?

 

உங்களின் மஹாவம்சத்தின்படி, இன்றைய சிங்களவர்கள் வட இந்தியாவின் இந்தோ - ஆரிய மொழிக் குடும்பத்தின் மொழிகளைப் பேசும் இடங்களான வங்காளம், மகதா மற்றும் கலிங்கம் ஆகிய இடங்களிலிருந்து வந்தவர்கள். சிங்களம் என்கிற மொழியே இந்த மூன்று இடங்களிலும் பேசப்பட்ட மொழிகளின் கலப்பால் உருவாக்கப்பட்டதுதான்.

 

அதேபோல இன்னும் சில சிங்களவர்கள் வடமேற்கு இந்தியாவின் குஜாரத்திலிருந்து இங்கே வந்தவர்கள். ஆரம்ப காலத்தில் குஜாரத்தில் பேசப்பட்ட மொழியே இன்று சிங்களமாக உருமாற்றம் அடைந்திருப்பதாகவும் சிங்கள வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக பாலி மொழியின் ஆதிக்கம் சிங்களத்தில் ஏற்பட்டு இன்றிருக்கும் சிங்கள மொழி வழக்கிற்கு வந்திருக்கிறது. காரணம் பாலி மொழியிலேயே கெளதம புத்தர் தனது ஆண்மீகப் படிப்பினைகளை ஆற்றிவந்ததால், அவரைப் பின்பற்றும் சிங்களவர்களும் அவரது மொழியினைப் பின்பற்றவேண்டும் என்கிற அன்றைய சிங்கள அரசர்களின் விருப்பிற்கு இணங்க பாலி, கலிங்க, மகதா, வங்க மற்றும் குஜாரத்தி மொழிகளின் கூட்டுக் கலவையில் உருப்பெற்றதுதான் சிங்களம்.இதனால்த்தான் இன்றிருக்கும் சிங்கள மொழி வேறு எங்கிலும் நடைமுறையில் இல்லை. காரணம் அவர்கள் காலத்திற்குக் காலம் தமது மொழியை வேற்று மொழிகளுடன் கலந்து மாற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். சிங்கள மொழி தோன்றியது இலங்கையில்த்தான், அதற்காக அதைப் பேசுபவர்களே அங்குதான் தோன்றினார்கள், அவர்களுக்குத்தான்  அந்த நாடே சொந்தம் என்று முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அங்கேதான் உங்களின் மூளைச்சலவையின் வீரியம் தெரிகிறது.

 

விஜயன் இலங்கையை வந்தடைந்தது கெளதம புத்தர் இறந்த நாள் என்று மகாவம்சம் கூறுகிறது. கெளதம புத்தர் இருந்த காலத்தில் புழக்கத்திலிருந்த மொழிகள் இன்றும் அப்படியே கலப்பில்லாமல் இருக்கின்றன. அதிலொன்று தமிழ். வெறுமனே ஒரு மொழி வேறெங்கிலும் இன்று புழக்கத்தில் இல்லை, அதனால் அது பழமை வாய்ந்தது, ஆகவே அந்த மொழியைப் பேசும் மக்கள் அங்கேதான் தோன்றினார்கள் என்று சப்பைக் கட்டுக் கட்டாமல் நீங்கள் சேர்ந்திருக்கும் இனத்திற்கும், மொழிக்கும் நியாயம் கிடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
சிங்கள மொழி எலு மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகவே சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து தான் வந்துள்ளார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு இராணுவ முகாமுக்குள் அனுமதியின்றி, பாதுகாப்பு அரணின் நுழைவாயில் தவிர்ந்த ஏனைய பகுதிகளால் நுழைந்தால், அமெரிக்க, கனடா, ஐரோப்பா உட்பட எந்த நாட்டிலும் சுட்டு கொன்றாலும் அது சட்டப்படியான ஒரு செயலே. அடியோடு விட்டது இன்றைய ஸ்ரீ லங்கா இராணுவத்தின் பெரும்தன்மையை காட்டுகிறது.

 

இவர் செய்து இருக்க வேண்டியது பந்தை எடுப்பதற்கு நுழைவாயிலில் சென்று அனுமதி கேட்பது. அப்படி கேட்க பயம் என்றால், கேட்க கூடியவர்களுடன் சென்று கேட்பது. அனுமதியில்லாமல் இராணுவ முகாமுக்குள் நுழைவதல்ல.

 

கனடாவிலும், அமெரிக்காவிலும் விமான நிலையங்களில் பொதுமக்களுக்கு அனுமதியற்ற பகுதிகளில் பிரவேசித்தவர்களே சுடப்பட்டு இருக்கிறார்கள்.

எள்ளங்குளம் பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல நான் அறிந்த வகையில் அங்கு சர்வதேச விமான நிலையம் இல்லை அப்பாவி தமிழர்கள் வாழும் ஒரு பகுதி .உங்களை மாதிரி சிங்களத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் கனபேரின்  கடைசி கதை எப்படியானது என்பது எல்லாருக்கும் தெரியும். 

 

சிங்கள மொழி எலு மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. ஆகவே சிங்களவர்களும் இந்தியாவில் இருந்து தான் வந்துள்ளார்கள்.
 

 

சரித்திரம் தெரியாமல் அரைகுறையாய் படித்ததுகள் சிங்களத்துக்கு வக்காளத்து வேண்டுவது வியப்பில்லையே நுணா. :D

  • கருத்துக்கள உறவுகள்

எள்ளங்குளம் பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்ல நான் அறிந்த வகையில் அங்கு சர்வதேச விமான நிலையம் இல்லை அப்பாவி தமிழர்கள் வாழும் ஒரு பகுதி .உங்களை மாதிரி சிங்களத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் கனபேரின்  கடைசி கதை எப்படியானது என்பது எல்லாருக்கும் தெரியும். 

 

 

நேரம் பொன்னானது

 

நித்திரை மாதிரி  நடிப்பவர்களை ஒன்றும் செய்யமுடியாது...

அதற்கான  ஆகக்கறைந்த விளக்கமுள்ளவருடனாவது மினக்கெடுங்கள்...

தமிழரைக் கொல்லும் உரிமையை இயற்கையாக சிங்கள இராணுவம் பெற்றிருப்பதே யதார்த்தம் என்று நாம் கருதுவதால் அவர்கள் கடுமையாக தாக்கி உயிரோடு விட்ட அவர்களின் பெருநதன்மையை பாராட்டாமல் கண்டிப்பது யதார்த்தத்தை விளங்காதவர்களின் செயல்.

  • கருத்துக்கள உறவுகள்

தனிச்சிங்கள சட்டம் தரப்படுத்தல் இப்படி எதையும் கேள்விப்பட்டு இருக்கிறீங்களா?

  • தனிச்சிங்கள சட்டம் அமுலில் இருக்கும் ஒரு நாட்டில் எப்படி அரசாங்க பாடசாலையில் தனித்தமிழில் படித்தீர்கள்? பல்கலைக்கழகம் வரை தனித்தமிழில் படித்தீர்களே? எப்படி?
  • எப்படி அரச அலுவலகங்கள் தனித்தமிழில் தமிழர் பகுதிகளில் தனிச்சிங்கள சட்டத்தில் இயங்குகிறது?

இல்லை இப்ப வடக்கில பத்து அடிக்கு ஒரு புத்தர் முளைச்சிருக்கிற விடயமாவது தெரியுமா?

  1. நீங்கள் அதற்கு ஆதரவா? இல்லையே?
  2. தமிழரின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலை ஒரு புத்த காப்பியம். எத்தனை புத்த கோயில்களை கட்டி தமிழரின் வரலாற்று மதமான புத்தத்தை நாம் பாதுகாத்தோம்?
  3. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் புத்தத்தை பரப்பியதே போதி தர்மர் என்ற தமிழர் என சில வரலாறுகள் சொல்கின்றன. போதி தர்மருக்கு விழா எடுத்தோமா? இல்லையே?
  4. இலங்கை அரசாவது சிங்களவரை கொண்டு புத்தத்தை தமிழ் பகுதிகளில் பாதுகாக்க முயன்றால் ஆதரவா கொடுக்கிறோம்? இல்லையே?

விட்டா சும்மா இருந்த தமிழ் இளைஞர்கள் டைம் பாசுக்கு இந்தியா சென்று பயிற்சி பெற்று வந்து போதி மரத்திக்கு அடியில் தியானம் செய்து கொண்டிருந்த சிங்களவர்களை அழித்தார்கள் என்றும் சொல்லுவீங்கள் போல.

அதைத் தான் அப்படியே தமிழ் இளைஞர்கள் அனுராதபுரத்தில் போதிமரத்தடியில் செய்தார்கள். தியானம் செய்த பிக்குகளை வாகனத்தில் வந்து தொகையாக சுட்டு கொன்றுவிட்டு ஓடிவிட்டார்கள். எண்பதுகளில் நடந்ததது. அது இந்தியாவின் றோவின் கட்டளைப்படி இடம்பெற்றதாக ஆய்வுகளில் படித்த நினைவும் உண்டு.

 

உண்மையை சொல்லுங்க எங்களை வைச்சு காமடி கீமடி பண்ணிறீங்களா?

உலகத்துக்கே இலங்கை தமிழர்கள் இன்று ஏளனத்துக்கு உரிய அவலமான மக்கள்.

 

சிங்களவர்கள் சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்காவிடின் அவர்களால் தங்களது மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது கடினம்.....

உண்மை. இது தமிழருக்கும் (மறு வளமாகவும்) பொருந்தும் என்பதே எனது வாதத்தின் நோக்கம்.

 

சிங்களத்துக்கு வக்காலத்து வாங்க எத்தனைபேர் மாரடிக்கினம். இதற்காக மாண்டவர்களும் இழுத்து வரப்படவேணும். காரணம் தமிழுக்காக மாண்டபடியால் .    இதுதான் ஐயா நியாயம்.

 

நியாயம் வெறும் கற்பனையே, இது தேவை கருதி உருவாக்கப்படும் ஒரு கற்பனை. உலகில் பலம், ராஜதந்திரம், இணக்க உடன்பாடுகள். நலன் கருதிய இருபக்க, பல பக்கஉடன்பாடுகளே இருக்கின்றனவே அன்றி நியாயம் இல்லை. நியாயம் இருப்பதாக கருதி உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள்.

 

ஒரு  தமிழனால் எந்தளவுக்கு குனியமுடியும்

குனிவதும் நிமிர்வதும் மட்டும் தான் தெரிந்தால் குனிந்து அழிந்து போவீர்கள் அல்லது நிமிர்ந்து முறிந்து போவீர்கள்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைக் கொல்லும் உரிமையை இயற்கையாக சிங்கள இராணுவம் பெற்றிருப்பதே யதார்த்தம் என்று நாம் கருதுவதால் அவர்கள் கடுமையாக தாக்கி உயிரோடு விட்ட அவர்களின் பெருநதன்மையை பாராட்டாமல் கண்டிப்பது யதார்த்தத்தை விளங்காதவர்களின் செயல்.

 

  1. தமிழரை பெரும்தொகையில் கொன்ற தமிழரையும் நாம் அறிவோம், இல்லையா?
  2. அவர்களின் பெருந்தன்மையை உலகின் பல நாடுகளிலும் நாம் பராட்டுவதில்லையா?

ஜூட் இப்ப எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது. இலங்கைத்தீவு சிங்களவருக்கு மட்டுமே சொந்தம் தமிழ் நாய்கள் அதில் உரிமை கொண்டாட கூடாது என்றதை ஆணித்தரமாக கூறும் ஒரு புத்தகத்தை நாம் இருவரும் எழுதி இந்த தமிழருக்கே அதை விற்று பணம் பண்ணுவோமா? எனக்கென்னவோ இந்த திட்டம் வேரக்அவுட் ஆகும் என்று படுகிறது.

நீங்கள் இந்த விடயத்தில் மிக ஆக்ரோஷமாக இருப்பதால் எழுத்து வேலையை நீங்கள் பொறுப்பெடுங்கள். புத்தகம் அச்சிட தேவையான செலவை நான் பொறுப்பெடுக்கிறேன். வெளியீட்டு விழா செலவை யாழ்களத்தில் உறுப்பினரிடம் வாங்கி தருமாறு நிழலியிடம் கேட்போம் . புத்தகம் விற்ற வருமானத்தை ஆளுக்கு பாதியாக பிரிப்போம். உங்கள் நேரத்தை செலவழித்து எந்த வருமானமும் இல்லாமல் இங்கு எழுதி என்ன பிரயோசனம். யோசித்து முடிவு சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு சார்பாக பேசும் அல்லது அவர்களது ஆதரிக்கும் சிங்களவர்களை, சிங்கள இனவாதிகள் சிங்கள புலிகள் என அழைப்பது வழக்கம். அதேபோல் ஜூட் கூறும் பல கருத்துக்களில் உண்மை இருப்பதனால் இங்கு எழுதப்படும் பல பதில் கருத்துக்களில் தமிழ் இனத்துவேச வாசம் காணப்படுகின்றது. 

 

எனவே சிங்கள இனத்துவேசத்திற்கு கொஞ்சமும் தமிழ் இனத்துவேசம் சளைத்ததல்ல‌.

  • கருத்துக்கள உறவுகள்

சரி விடுங்கப்பா இராணுவம் எண்டா

அடிக்கணும்....... பப்புக்கு போனா குடிக்கணும்.......

இதுகெல்லாம் போய் பொங்கிகிட்டு.......

நாங்களும் தேசிய நீரோட்டத்தில் இணைந்தாச்சு ......இனி நீந்திட வேண்டியது தான்........

  • கருத்துக்கள உறவுகள்

இங்கள் எதற்காக சிங்களவர்களுக்காக குத்தி முறிகிறீர்கள் என்பது தெரியவில்லை.

 

நீங்கள் கூறும் எதிரிக்கும் கூட நியாயமான உரிமையையும் மதிப்பையும் வழங்கவேண்டும் என்பதை உங்களுக்கு மூளைச் சலவைச் செய்தவரிடம் கூறிப்பாருங்கள்.

 

தமிழர்களுக்கு போதிய உரிமைகளை கொடுக்க வேண்டும் என்று கேட்கும் சிங்களவர்களிடம் மற்ற சிங்களவர்கள்:

"நீங்கள் எதற்காக தமிழர்களுக்காக குத்தி முறிகிறீர்கள் என்பது தெரியவில்லை.

 

நீங்கள் கூறும் எதிரிக்கும் கூட நியாயமான உரிமையையும் மதிப்பையும் வழங்கவேண்டும் என்பதை உங்களுக்கு மூளைச் சலவைச் செய்தவரிடம் கூறிப்பாருங்கள்."

என்று கூறுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? விக்கிராமபாகு கருணாரத்னவிடம் பேசி பாருங்கள், தெரியும்.

இதனால் தான் தமிழர்களுக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

நீங்கள் சேர்ந்திருக்கும் இனத்திற்கும், மொழிக்கும் நியாயம் கிடைக்க என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள் !

அப்படி சிந்தித்ததால் தான் தமிழர் மத்தியிலும் சிங்களவர்களின் நியாயமான உரிமைகள் பற்றி பேச (சிங்களவர்கள் மத்தியில் ஜெயலத் ஜெயவர்தன இருந்தது போல, விக்கிரமபாகு இருப்பது போல) தமிழர் சிலராவது இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிங்ககொடி ஏந்திய சம்பந்தனும், தமிழ் நாட்டை தலையிட வேண்டாம் என்று சொன்ன முதலமைச்சர் விக்னேஸ்வரனும், சிங்களவர்களுடன் ஒப்பத்தங்கள் செய்து வேண்டியதை செய்து முடிக்கும் சுமேந்திரனும் இப்படியானவர்களே. இவர்கள் அடுத்த தேர்தலிலும் பலம் பெற்று மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துக்கள்.

தமிழர்கள் இலங்கையில் நீண்ட காலம் வாழ்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் இலங்கையில் தான் தமிழர்கள் தோன்றினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

அதே வேளை இலங்கையில் தான் சிங்களவர்கள் தோன்றினார்கள்.

 

 

 

 

தமிழன் எதற்காக ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது .என்பதை  புரிந்து  கொள்ள உங்கள் இந்த கருத்து ஒன்றே போதும் ............. :D

 

 

//ஒரு கருத்து சுய தணிக்கை ..................கொஞ்சம் பண்பில்லாமல் இருந்ததென்று நினைத்த படியினால் // :o  :lol:
 
 

Edited by தமிழ்சூரியன்

கொழும்பன்இந்த களத்தில் யாராவது சிங்களவருக்கும் எதிராக துவேச கருத்து எழுதினார்களா? இல்லையே? நான அறிய கள உறுப்பினர்கள் இங்கு சிங்கள இனத்திற்கு எதிராக துவேச கருத்துகளை முன்வைப்பதில்லை. ச

  • கருத்துக்கள உறவுகள்

 

தமிழன் எதற்காக ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது .என்பதை  புரிந்து  கொள்ள உங்கள் இந்த கருத்து ஒன்றே போதும்.

 

தமிழன் இந்திய வல்லரசின் ஆதிக்க நோக்கத்துக்கு கூட்டு சேர்ந்து சிங்களவருக்கு எதிராக  ஆயுதம் ஏந்தி அழிந்து போனான்.

 

சிங்கள மொழியும் கலாச்சாரமும் இலங்கையில் மட்டும் வாழும் மொழியும் கலாச்சாரமும் என்பது எவராலும் மறுக்க பட முடியாத உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் இந்திய வல்லரசின் ஆதிக்க நோக்கத்துக்கு கூட்டு சேர்ந்து சிங்களவருக்கு எதிராக  ஆயுதம் ஏந்தி அழிந்து போனான்.

 

சிங்கள மொழியும் கலாச்சாரமும் இலங்கையில் மட்டும் வாழும் மொழியும் கலாச்சாரமும் என்பது எவராலும் மறுக்க பட முடியாத உண்மை. 

சரி, எல்லாவற்றையும் விடுவோம்,

 

நான் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் பதில் என்ன,

 

1. தமிழர் வாழும் வடக்குக் கிழக்கு அவர்களின் தாயகமா இல்லையா/

2. தமிழர் எப்போது சிங்களவரின் இடத்தை ஆக்கிரமிக்கப் பார்த்தார்கள்/

3. தமிழர்களுக்கு இலங்கையில் வாழும் உரிமை இருக்கிறதா இல்லையா/ தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா/

4. தமிழர்களை இந்தியாவுக்குத் திரும்பிப் போங்கள், உங்களுக்கு இங்கே ஒரு நாடும் இல்லையென்று சொல்லும் சிங்களவரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா/

5. சிங்கள்வர் மரம், தமிழர் அவர்களை சுற்றிப் படரும் கொடி என்பதையும், இலங்கை சிங்கள பெளத்தர்களின் நாடு என்பதையும், ஏனையவர்கள் அவர்களை அண்டிப் பிழைக்க வந்தவர்கள் என்பதையும் ஏற்றுக் கொள்கிறீர்களா/

6. இலங்கையில் எந்த இனத்தை எந்த இனம் அடக்கியொடுக்குவதாக நினைக்கிறீர்கள்/

7. சுதந்திரத்தின் பின்னர் சிங்களத் தலமைகள் தமிழரோடு எப்படி நடந்துகொண்டனர் என்று நினைக்கிறீர்கள்/

8. இதுவரை தமிழர் தாயகத்தின் மீது நடந்த போர் திட்டமிட்ட இனவழிப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா/

9. இதுவரை காலமும் நீங்கள் தமிழருக்குச் சார்பாக கருத்தெழுதியதன் நோக்கமும், இப்போது சிங்களவருக்குச் சார்பாகக் கருத்தெழுதும் மாற்றமும் எதனால் ஏற்பட்டது /

10. உங்களின் திடீர் கொள்கை மாற்றத்துக்கான காரணம் என்ன /

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.