Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை முன்வைக்கத் தயாராகிறது அமெரிக்கா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
UNHRC-meet-300-news.jpg

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை சமர்பிக்க அமெரிக்கா உத்தேசித்துள்ளது. 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் தொடர்ச்சியாக இந்த புதிய யோசனை அமையும் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் திங்களன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இவர் தனது விஜயத்தின் போது இலங்கையின் உயர்மட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கொழும்பில் நடைபெறும் முதல் கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிஸ்வால், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இலங்கை விஜயத்தை முடித்து கொள்ளும் துணை ராஜாங்க செயலாளர் எதிர்வரும் 3 ஆம் திகதி பிரித்தானியா நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளார். இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட உள்ள யோசனை குறித்து அவர் பிரித்தானிய அரசாங்கத்துடன் கலந்துரையாட எண்ணியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் ஜெனிவா சென்றும் அவர் இந்த விடயம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.

http://seithy.com/breifNews.php?newsID=125748&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு பொழுது போகேல்லையா??

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு பொழுது போகேல்லையா??

தாங்கள் ஆரம்பித்த ஒன்றை

காணாமல்  போகச்செய்யப்போகிறார்கள்... :(

தமிழரும் சிங்களவரும் 

இந்த வியாபாரிகளின் பிடியிலிருந்து  மீளணும்

அதுவரை எவருக்கும் விடிவு இல்லை

இலங்கை அரச தரப்பிலுள்ள

சம்பந்தப்பட்டவர்கள் அதை உணரணும்...

  • கருத்துக்கள உறவுகள்

ராம்போ I, II, III மாதிரி இது ஒரு தொடர்கதையாக இருக்கே!

இவர்கள் எப்போ விசாரித்து எப்போ தண்டிப்பது? எப்போ தீவு வருமோ? :( :(

  • கருத்துக்கள உறவுகள்

வருசத்துக்கு ஒருக்கா திருவிழா வருவது வழமைதானே

இவங்களுக்கு பொழுது போகேல்லையா??

அது தானே !!
 
தேர்தலைப் புறக்கணிக்காவிட்டால் தமிழரை உலகம் அம்போ என்று கைவிட்டு விடும் என்றல்லவா எம்முடைய "தொலை நோக்கான சிந்தனையும், நேரிய வழிகாட்டலும், கூரிய பார்வையும்" சொல்லியது !!  
  • கருத்துக்கள உறவுகள்

அது தானே !!
 
தேர்தலைப் புறக்கணிக்காவிட்டால் தமிழரை உலகம் அம்போ என்று கைவிட்டு விடும் என்றல்லவா எம்முடைய "தொலை நோக்கான சிந்தனையும், நேரிய வழிகாட்டலும், கூரிய பார்வையும்" சொல்லியது !!  

சிங்களவருக்கு இரண்டு தெரிவு உண்டு

இது  போன்ற தரகர்களிடம் நாட்டை அடைவு வைப்பது

அல்லது தமிழருடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவது....

தமிழருக்கு

ஒரே ஒரு முடிவைத்தான் சிங்களம் விட்டு வைத்திருக்கிறது

அது

"தொலை நோக்கான சிந்தனையும், நேரிய வழிகாட்டலும், கூரிய பார்வையும்" சொல்லியது !!தான் ...

இந்த உலகம் 30 வருடமாக சிங்களத்துக்குச் சொல்வது.. தமிழர் பிரச்சனையை தீர்த்துவை என்று.
 
சிங்களம் 30 வருடமாக அவர்களுக்கு காட்டுவது.. 
 
"ஐயோ.. எனக்கு விருப்பம் ஆனால் இவர்கள் விடுகிறார்கள் இல்லை." என்று. 
 
யார் விடுகிறார்கள் இல்லை?
 
இந்த...... தொலை நோக்கு.. நேரிய வழிகாட்டல்....
 
அப்போது உலகம் சொன்னது " ஓ.. அப்படியா சங்கதி ? நாம் அவர்களை அப்புறப்படுத்துகிறோம்" என்று. அப்படியே செய்தது.
 
இன்று சிங்களத்துக்கு சாட்டுச் சொல்வதற்கு ஆட்கள் இல்லை.
 
ஆனால்......
 
"தொலை நோக்கு" பார்ட்டிகளுக்கு நிலமையைப் புரிந்து கொள்வதில் சிறிய சிக்கல் இருக்கிறது. அது அவர்களுடைய பிறவிக் குணமாகக் கூட இருக்கலாம். அல்லது இடையில் வந்த ஒரு குணமாகக் கூட இருக்கலாம்...
 
அதனால் சிங்களம் சாட்டு தேடுவதற்கு மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எம்முடைய தொலைநோக்குப் பார்டிகள்
 
" நான் சும்மா வந்தனான் பாருங்கோ... "
 
என்று நடுவில் வந்து நிற்பார்கள்.
 
பிறவிக் குணம் என்று ஒன்று உண்டல்லவா....
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் செய்யமுடியாது

இது நரம்புகளின் சிக்கல்... :(

அனுபவமும் வரலாறுமே பாடமாக இருக்கமுடியும்

இந்த உலகம் 30 வருடமாக சிங்களத்துக்குச் சொல்வது.. தமிழர் பிரச்சனையை தீர்த்துவை என்று.
 
சிங்களம் 30 வருடமாக அவர்களுக்கு காட்டுவது.. 
 
"ஐயோ.. எனக்கு விருப்பம் ஆனால் இவர்கள் விடுகிறார்கள் இல்லை." என்று. 
 
யார் விடுகிறார்கள் இல்லை?
 
இந்த...... தொலை நோக்கு.. நேரிய வழிகாட்டல்....
 
அப்போது உலகம் சொன்னது " ஓ.. அப்படியா சங்கதி ? நாம் அவர்களை அப்புறப்படுத்துகிறோம்" என்று. அப்படியே செய்தது.
 
இன்று சிங்களத்துக்கு சாட்டுச் சொல்வதற்கு ஆட்கள் இல்லை.
 
ஆனால்......
 
"தொலை நோக்கு" பார்ட்டிகளுக்கு நிலமையைப் புரிந்து கொள்வதில் சிறிய சிக்கல் இருக்கிறது. அது அவர்களுடைய பிறவிக் குணமாகக் கூட இருக்கலாம். அல்லது இடையில் வந்த ஒரு குணமாகக் கூட இருக்கலாம்...
 
அதனால் சிங்களம் சாட்டு தேடுவதற்கு மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எம்முடைய தொலைநோக்குப் பார்டிகள்
 
" நான் சும்மா வந்தனான் பாருங்கோ... "
 
என்று நடுவில் வந்து நிற்பார்கள்.
 
பிறவிக் குணம் என்று ஒன்று உண்டல்லவா....

பண்டாரநாயக்கா- செல்வநாயகம் உடன்படிக்கை செய்த்த போது பாதயாத்திரை சென்றவர்கள் யார் ,புலிகள் பேசிய போது 2003ம் ஆண்டு நாட்டின் முக்கிய பதவிகளை கைபற்றி அதுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது யார் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களா? வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்க வழக்கு போட்டது யார் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களா?அதுக்கு முதல் விடையை சொல்லுங்கோ பார்ப்பம் அது எப்படி சிங்களவன் எல்லாவற்றையும் செய்ய தமிழர் தரப்பின் போது எல்லா பழியையும் போடுறியள்.

இந்த உலகம் 30 வருடமாக சிங்களத்துக்குச் சொல்வது.. தமிழர் பிரச்சனையை தீர்த்துவை என்று.
 
சிங்களம் 30 வருடமாக அவர்களுக்கு காட்டுவது.. 
 
"ஐயோ.. எனக்கு விருப்பம் ஆனால் இவர்கள் விடுகிறார்கள் இல்லை." என்று. 
 
.......................
 
உங்கள் எழுத்து நடை நன்றாக உள்ளது. நகைச்சுவையாகவும் நிதர்சனமாகவும் உள்ள உங்கள் பதிவு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது - நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரநாயக்கா- செல்வநாயகம் உடன்படிக்கை செய்த்த போது பாதயாத்திரை சென்றவர்கள் யார் ,புலிகள் பேசிய போது 2003ம் ஆண்டு நாட்டின் முக்கிய பதவிகளை கைபற்றி அதுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது யார் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களா? வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்க வழக்கு போட்டது யார் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களா?அதுக்கு முதல் விடையை சொல்லுங்கோ பார்ப்பம் அது எப்படி சிங்களவன் எல்லாவற்றையும் செய்ய தமிழர் தரப்பின் போது எல்லா பழியையும் போடுறியள்.

பிறவிக் குணம் என்று ஒன்று உண்டல்லவா.... :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகம் 30 வருடமாக சிங்களத்துக்குச் சொல்வது.. தமிழர் பிரச்சனையை தீர்த்துவை என்று.

சிங்களம் 30 வருடமாக அவர்களுக்கு காட்டுவது..

"ஐயோ.. எனக்கு விருப்பம் ஆனால் இவர்கள் விடுகிறார்கள் இல்லை." என்று.

யார் விடுகிறார்கள் இல்லை?

இந்த...... தொலை நோக்கு.. நேரிய வழிகாட்டல்....

அப்போது உலகம் சொன்னது " ஓ.. அப்படியா சங்கதி ? நாம் அவர்களை அப்புறப்படுத்துகிறோம்" என்று. அப்படியே செய்தது.

இன்று சிங்களத்துக்கு சாட்டுச் சொல்வதற்கு ஆட்கள் இல்லை.

ஆனால்......

"தொலை நோக்கு" பார்ட்டிகளுக்கு நிலமையைப் புரிந்து கொள்வதில் சிறிய சிக்கல் இருக்கிறது. அது அவர்களுடைய பிறவிக் குணமாகக் கூட இருக்கலாம். அல்லது இடையில் வந்த ஒரு குணமாகக் கூட இருக்கலாம்...

அதனால் சிங்களம் சாட்டு தேடுவதற்கு மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எம்முடைய தொலைநோக்குப் பார்டிகள்

" நான் சும்மா வந்தனான் பாருங்கோ... "

என்று நடுவில் வந்து நிற்பார்கள்.

பிறவிக் குணம் என்று ஒன்று உண்டல்லவா....

சிங்களத்தை மிக சாதாரணமாக விளங்கி வைத்துள்ளீர்கள். இந்த ஆயுதம் மண்ணாங்கட்டி எதுவும் இல்லாத காலத்திலேயே இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என்று பலருடன் விளையாடியவர்கள்.. சுதந்திரத்திற்குப் பின் முப்பது வருடங்களாக தீர்வை கொடுக்கும்படி அழுத்தம் கொடுத்தார்களா??

இன்று சிங்களம் பம்முவதுபோல் நடிப்பதன் பின்னாலும் பலத்த காரணிகள் உள்ளன.. இதிலிருந்து மீண்டால் பழைய பாதையில் சிங்களம் நடைபோடும்.

பிறவிக் குணம் என்று ஒன்று உண்டல்லவா.... :(  :(  :( 

இதில் என்ன பகிடி என்றால் தமிழர் தீர்க்கவில்லை என்று சிங்களவன் சொன்னவனாம் அதை கேட்டு போட்டு தான் சர்வதேசம் அவற்றை அழித்தவர்களாம், அது என்னவோ சர்வதேசத்துக்கு தமிழர் செய்யிற ஒவ்வொரு தவறையும் இனம் கண்டு தண்டனை வழங்கும் உத்தமர்களாம் ஆனால் சிங்களவன் என்ன செய்தாலும் அவர்களுக்கு தெரியாதாம் இவர்கள் என்ன எல்லாறையும் மடையன் என்றா நினைக்கிறார்கள்.

சிங்களத்தை மிக சாதாரணமாக விளங்கி வைத்துள்ளீர்கள். இந்த ஆயுதம் மண்ணாங்கட்டி எதுவும் இல்லாத காலத்திலேயே இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா என்று பலருடன் விளையாடியவர்கள்.. சுதந்திரத்திற்குப் பின் முப்பது வருடங்களாக தீர்வை கொடுக்கும்படி அழுத்தம் கொடுத்தார்களா??

இன்று சிங்களம் பம்முவதுபோல் நடிப்பதன் பின்னாலும் பலத்த காரணிகள் உள்ளன.. இதிலிருந்து மீண்டால் பழைய பாதையில் சிங்களம் நடைபோடும்.

இதை தட்டச்சால் பதிவு செய்த உங்கள் விரலுக்கு ஒரு மோதிரம் வாங்கி போட வேணும், அரச உயர் பதவிகள் வழங்குவதற்கும் இது தான் காரணம்

பண்டாரநாயக்கா- செல்வநாயகம் உடன்படிக்கை செய்த்த போது பாதயாத்திரை சென்றவர்கள் யார் ,புலிகள் பேசிய போது 2003ம் ஆண்டு நாட்டின் முக்கிய பதவிகளை கைபற்றி அதுக்கு ஆப்பு வைக்க தொடங்கியது யார் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களா? வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரிக்க வழக்கு போட்டது யார் இந்த தொலை நோக்கு சிந்தனையாளர்களா?அதுக்கு முதல் விடையை சொல்லுங்கோ பார்ப்பம் அது எப்படி சிங்களவன் எல்லாவற்றையும் செய்ய தமிழர் தரப்பின் போது எல்லா பழியையும் போடுறியள்.

புலிகளின் போராட்டம் இல்லாதிருந்தால் சம்பந்தரும் கருணாநிதி போல காலை உணவிற்கும் மதிய போசணத்திற்கும் இடையில் உண்ணாவிரதம் இருந்திருப்பார் இப்போதும். 
 
80களில் சர்வதேசம் எமது பிரச்சனைகளைப் புரியத் தொடங்கியிருந்தது. அதன் பின்னான சில சம்பவங்கள் புலிகளை தடை செய்யுமளவிற்கு மட்டுமில்லை அழிக்கவும் செய்தது.
 
ஆனால் சிங்களவர்கள் எம்மை உருக்குலைத்தபோது எமக்கு ஊடக பலம் இருக்கவில்லை சர்வதேச ரீதியாக வெளிக்கொண்டுவர. ஆனால் நாம் சிங்களவர்களினை உருக்குலைத்தபோது அவர்கள் நன்றாகவே சர்வதேச ரீதியில் வெளிக்கொண்டு வந்தார்கள். 
 
இவைதான் எமது போராட்டத்தின் வரலாற்று தவறு.
 
இதனால்தான் இன்றைய நிலை.
 
இலங்கை அரசினால் எமாற்றப்பட்ட மேற்குலகம் எமக்கு ஏதாவது செய்ய முனைகின்றதுதான் இன்றைய யதார்த்தம்.

இல்லை, சர்வதேசத்துக்கு எல்லாம் நன்கு தெரியும் , புலிகள் யார் அவர்கள் ஏன் போராடுகிறார்கள் , சிங்களவன் செய்த்த அடூழியம் என்ன எல்ல நன்கு தெரியும், மக்கள் கொத்து கொத்தாக செத்த போது அது எப்படி அவர்களுக்கு தெரியாமல் போகும், சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலனை அனுப்ப தெரிந்தவனுக்கு பூமியில் ஒரு இனம் அழிக்கப்பட்டது எப்படி தெரியாமல் போகும்,சரி அது எப்படி யூகொஸ்லாவியாவில் மிலொசவிc,கரடிக்,மீலாடிக் செய்தது தெரிந்த உலகுக்கு (20 வருடத்துக்கு முன்னர்) தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த காலத்தில் (2006- 2009) அது தெரியாமல் போனது, ராஜ ராஜ சோழன் எப்படி தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் என்று ஆராய்ச்சி செய்து அதை தமிழனுக்கே விளக்கிய மேற்கால் சிங்களவன் தமிழனை அழிக்கிறான் என்பது மட்டும் தெரியாமல் போனது என்பது எனக்கு மர்மமாகவே இருக்கிறது, எமது செயற்பாடுகள் தான் பலவீனமானவி, சிங்களவன் தனது பரப்புரையை பலமாக செய்ற்படுத்தினான் என்ற அம்புல்மாமா கதையை இன்னமும் எத்தனை நாளைக்கு தான் கூறப் போறியள்

இன்று சிங்களம் பம்முவதுபோல் நடிப்பதன் பின்னாலும் பலத்த காரணிகள் உள்ளன.. இதிலிருந்து மீண்டால் பழைய பாதையில் சிங்களம் நடைபோடும்.

என்ன காரணங்கள் அவை என்று சொன்னால் வாசகர்கள் நன்மை அடைவார்கள் ( நானும் தான் )  :)

தொலை நோக்கு நேரிய வழிகாட்டல் ................இந்த இரண்டையும்தான் தற்போது தமிழினம் இழந்து நிற்கின்றது, .விடுதலைப்புலிகளின் மௌனத்திற்குப்பிறகு ...........

  • கருத்துக்கள உறவுகள்

தொலை நோக்கு நேரிய வழிகாட்டல் ................இந்த இரண்டையும்தான் தற்போது தமிழினம் இழந்து நிற்கின்றது, .விடுதலைப்புலிகளின் மௌனத்திற்குப்பிறகு ...........

இன்றைக்கு உங்களுக்கு பொழுது போகவில்லைப்போலும்.......?? :( 

மீண்டும் அருவரியிலிருந்தா.....?

நான் வரல இந்த விளையாட்டுக்கு.......... :(

இன்றைக்கு உங்களுக்கு பொழுது போகவில்லைப்போலும்.......?? :( 

மீண்டும் அருவரியிலிருந்தா.....?

நான் வரல இந்த விளையாட்டுக்கு.......... :(

விசுகு அண்ணா பொழுது போக வேண்டும் என்று நான் இதை எழுதவில்லை .  எழுச்சைப்பாடலை உருவாக்கி கொண்டிருந்துவிட்டு இப்போதுதான் யாழுக்கே வந்தேன்.
 
இங்கே இன்று தொலை நோக்கு நேரிய பாதை என்ற விடயத்தை இப்போதுதான் தெரிந்தவர்கள் போல எங்கள் அரசியல் அவதானிகள் கருத்தாடுகிறார்கள் .இந்தியாவின் நிலையை மீறி அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கமையவே இலங்கையின் அரசியல் போக்கு இன்று அமைந்து வருகிறது .......இப்படியே போனால் எதிர்காலத்தில் சிங்களவர்களுக்கும் தமிழர்கள் போல ஒரு நிலை உருவாகும் ,ஏனனில்  அமேரிக்கா தனது சுயநலத்திற்கு என்ன வேண்டும் என்றாலும் செய்யும் .
 
இந்த வகையிலேயே விடுதலைப்புலிகளின் நேரியம்,தொலை நோக்கு அமைந்திருந்தது .அதனாலேயே அமேரிக்கா அவர்களின் இருப்பை விரும்பவில்லை ...அமெரிக்கவை ஆதரித்தால் முள்ளிவாய்க்கால் உருவாக்கி இருக்காது ...........ஆனால் அதைவிட கொடிய நிலை எதிர்காலத்தில்  உருவாகும் என்பதே எனது பார்வை .
  • கருத்துக்கள உறவுகள்

என்ன காரணங்கள் அவை என்று சொன்னால் வாசகர்கள் நன்மை அடைவார்கள் ( நானும் தான் ) :)

முதற்காரணி.. பழைய நாட்கள்போல அல்லாமல் இந்த முறை வகையாக சிக்கிக் கொண்டார்கள்.. அதற்குக் காரணம் மகிந்தவின் மேற்கு எதிர் கொள்கைகள். அவருக்கு அழுத்தம் கொடுக்க ஐநா பேரவை பயன்பட்டது.

ஆனால் பதிவில் வந்துவிட்ட ஒரு விடயத்தை அழிப்பது அவ்வளவு சுலபமில்லை.. ஆகவே சிங்களத்தால் நடந்தவைகளை திருத்த முடியாது. ஆனால் தணிவிக்க முடியும். அதுவ இந்த ஆட்சிமாற்றம். இதன் பின்னணியில் இந்தியாவும், மேற்குலகும்..

இப்போது ஐநா தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மேற்குலகின் (குறிப்பாக அமெரிக்காவின்) துருப்புச் சீட்டுகள். இவை இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்குப் பயன்படுத்தப்படும். இலங்கை வளைந்து கொடுக்கும்போது ஐநாவின் மூலம் கிடைக்கப்பெறும் தாக்கங்கள் தண்மையடையும் (உதாரணமாக ஐநா அனுசரணையுடன் கூடிய உள்நாட்டு விசாரணை). இது நடந்து முடிந்தால் சீனா ஓரங்கட்டப்பட்டு விடும். அப்போது சீனா என்ன செய்யப்போகிறது என்பதை வைத்தே அடுத்தகட்டம் அமையும்.

இதில் தமிழர் பிரச்சினை மற்றும் தீர்வு என்பன எங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆரம்பத்திலிருந்து போக முடியாது இசை. :unsure:   உதாரணமாக மஹிந்த ஏன் மேற்கு எதிர் நிலை எடுத்தார் ?
 
86, 89, 94, 2002 இப்படி பல சந்தர்ப்பங்களில் சர்வதேசம் தமிழர் பிரச்சனையைத் தீர்க்க இலங்கைக்கு அரசியல் அழுத்தம் தந்திருக்கிறது. இவை வெளிப்படையாக சர்வதேசப் பங்களிப்புகள் தெரிகின்ற சந்தர்ப்பங்கள்.
 
ஆனால் அதற்கு முன்பே ( 83 இல் இருந்து ) இலங்கை மீது சர்வதேசத்தின் தொடர் அழுத்தம் இருந்த படி தான் இருக்கின்றது. உதாரணமாக பிரித்தானிய அமெரிக்க ஆயுத ஏற்றுமதி தடை.. அகதிகளை ஏற்றுக் கொண்டமை.. அகதிகள் தொடர்பாக இலங்கை மீது அழுத்தம்.. இப்படி பல..
 
இலங்கையின் பல ஆட்சியாளர்கள் ஜேவிபி மேல் மேற்கொண்ட அதே கொடூர செயன்முறைகளை தமிழ்ப் "பயங்கரவாதிகளின்" மேல் பாவிக்க தயங்கியதற்கும் சர்வதேசத்தின் மறைமுக அழுத்தமும் ஒரு காரணம். ஆனால் மஹிந்த தயங்க வில்லை. 
 
சர்வதேசம் தமிழர் பிரச்சனையை நன்கு அறிந்துள்ளது. பிரிவினைக்கு ஒரு போது ஆதரவு தரமாட்டார்கள். ஏனென்றால் அது வேறு இடங்களில் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
 
ஏற்கனவே பலர் சொன்னது போல்.. தமிழர்கள் சர்வதேசத்தின் நிகச்சி நிரலுக்கு ஏற்ப பயணம் செய்து உரிமைகளை வெல்வது தான் நமக்கு உள்ள வழி. 
 
அமெரிக்காவும் இந்தியாவும் தமது நலன்களுக்காக தமிழர் பிரச்சனையைத் தீர்க்காமல் இப்படியே விடப்போவதில்லை. புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் மோடியும் கெரியும் சொன்ன வாழ்த்துச் செய்திகள் தமிழர் சம்பந்தமாக அவர்கள் கரிசனையை உணர்த்துகின்றனன்.
 
தேர்தலைப் பகிஷ்கரித்து மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் இப்படி ஒரு நிலை இன்னுமொரு ஐந்து வருடங்களின் பின் ஏற்பட்டிருக்கலாம். அப்போது தமிழரின் நிலை ?? கிழக்கு மாகாணம் ?? ஏன் வட மாகாணம் ??
 
அதை விட ஐ.நா. தீர்மானத்தை சீனாவும் ரஷ்ஷியாவும் வீட்டோ செய்திருப்பார்கள். 
 
தமிழரின் நிலை இழிநிலைக்கு போயிருக்கும். 
 
அதேநேரம் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையிலான விகிதாசாரம் 7 : 1
 
ஒருவன் ஏழுபேரை தாக்கி வெல்ல முடியுமா ? ஆகவே ஆயுதப் போராட்டத்தின் எல்லை எதுவென்று எமக்கு விளங்க வேண்டும்.
 
அந்த எல்லைக்கு போகாமல் எம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த எல்லை தாண்டினால் எமது நிலை பூச்சியம். (இன்றைய நிலை)
 
இதுக்கு மேல விளங்கப் படுத்த முடியாது.   :blink:
 
எல்லாருக்கும் விளங்க வேண்டும் என்றில்லை.  :D
 
It requires some skills to understand. I don't expect everyone to have that.  :wub:
 
------------------------------------------------------------------------------------------------------
 
யாழில் நான் பதியும் கடைசி "அரசியல் கருத்து" இதுவே.
வேறு பகுதிகளில் பங்கெடுப்பேன். நன்றிகள் எல்லாருக்கும்.  :)
 
.

Edited by ஈசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான். இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா செய்த மறைமுக உதவிக்கு (மகிந்த போல) முரண்டு பிடிக்காமல் இலங்கை அரசும் கை கொடுக்கும். அமெரிக்காவும் இலங்கைக்கு கை கொடுக்கும். இரு தரப்புக்கும் ஒரு டீல், தேர்தலுக்கு முன்பே ஏற்பட்டிருக்கும்.

இலங்கை அரசுக்கு இந்த விஷயத்தில் மிகப் பெரிய  asset மங்கள் சமரவீர.

அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட் உதவியுடன் ஐரோப்பிய நாடுகளை கன்வின்ஸ் செய்து, புலிகளுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய தடையை கொண்டுவரச் செய்த அதே மங்கள சமரவீர.

அவர்தான் தற்போது வெளிவிவகார அமைச்சர். இந்தாள் பெரிய lobby மன்னன். தமிழருக்கும் lobby செய்வதற்கும் எட்டாப் பகை.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன்..

மகிந்த ஏன் மேற்கு எதிர் நிலை எடுத்தார் என்பதற்கு ஊகங்களை வேண்டுமானால் மேற்கொள்ளலாம். ஆனால் இவரை மேற்கின் காய்நகர்த்தலுக்கு எதிராகப் பயன்படுத்தியது ஒருவர்தான்.. அது சரியா என்பதை காலம்தான் சொல்லும். மகிந்த சீனாவை உள்ளே கொண்டு வந்ததால்தான் பிரச்சினை இவ்வளவு இவ்வளவு முன்னேறி வந்தது என்பது உண்மை..

மற்றும்படி, மேற்கில் அகதி அந்தஸ்து வழங்கிவிட்டார்கள் என்பதை நீங்கள் வேறு விதமாக விளங்கிக் கொண்டுள்ளீர்கள்.. உலக நாடுகளைப் பொறுத்தவரையில்,

1) சிங்களவரால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்கள் சில காடையரால் மேற்கொள்ளப்பட்டவை.

2) இராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்பவர்கள் போரில் ஏற்பட்ட collateral damage.

3) மகிந்தவைத் தவிர மற்றைய ஆட்சியாளர்கள் அனைவரும் நல்லவர்கள்.

இந்த அடிப்படையில்தான் அகதிகள் விவகாரம் நடந்தது. மற்றும்படி எங்கள் பிரச்சினையை விளங்கி ஏற்றுக்கொண்டார்கள் என்றெல்லாம் கிடையாது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில், தீர்வு கிடைத்துவிட்டது. 13 ஆம் திருத்தத்தின்படி அதிகாரங்களை வழங்காத மகிந்தவே குற்றவாளி.. இதுதான் சர்வதேசத்தின் நிலைப்பாடு. ஏனென்றால் இந்தியாவின் நிலைப்பாடே சர்வதேசத்தின் நிலைப்பாடு..

மற்றும்படி உங்களின் ஆங்கில வசனத்தில் எனக்கும் பூரண உடன்பாடு உள்ளது.. :D

இந்த உலகம் 30 வருடமாக சிங்களத்துக்குச் சொல்வது.. தமிழர் பிரச்சனையை தீர்த்துவை என்று.
 
சிங்களம் 30 வருடமாக அவர்களுக்கு காட்டுவது.. 
 
"ஐயோ.. எனக்கு விருப்பம் ஆனால் இவர்கள் விடுகிறார்கள் இல்லை." என்று. 
 
யார் விடுகிறார்கள் இல்லை?
 
இந்த...... தொலை நோக்கு.. நேரிய வழிகாட்டல்....
 
அப்போது உலகம் சொன்னது " ஓ.. அப்படியா சங்கதி ? நாம் அவர்களை அப்புறப்படுத்துகிறோம்" என்று. அப்படியே செய்தது.
 
இன்று சிங்களத்துக்கு சாட்டுச் சொல்வதற்கு ஆட்கள் இல்லை.
 
ஆனால்......
 
"தொலை நோக்கு" பார்ட்டிகளுக்கு நிலமையைப் புரிந்து கொள்வதில் சிறிய சிக்கல் இருக்கிறது. அது அவர்களுடைய பிறவிக் குணமாகக் கூட இருக்கலாம். அல்லது இடையில் வந்த ஒரு குணமாகக் கூட இருக்கலாம்...
 
அதனால் சிங்களம் சாட்டு தேடுவதற்கு மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் எம்முடைய தொலைநோக்குப் பார்டிகள்
 
" நான் சும்மா வந்தனான் பாருங்கோ... "
 
என்று நடுவில் வந்து நிற்பார்கள்.
 
பிறவிக் குணம் என்று ஒன்று உண்டல்லவா....

ஈசன் கடந்த முப்பது வருடங்களாக சர்வதேசம் தமிழர் பிரச்சனையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுத்ததாக எழுதியிருந்தீர்கள். அதற்கு முன்னைய முப்பது வருங்களில் சர்வதேசம் ஏன் அவ்வாறு அழுத்தம் கொடுக்கவில்லை என்பதை நீங்கள் ஏன் சிந்திக்கவில்லை.

அந்த முப்பது வருடங்களில் தமிழர் பிரச்சனை என்று ஒன்று இருக்கிறது என்று தெரியாத நிலையில் சர்வதேசம் இருந்துள்ளதா?

அதற்கு முன்பு தானே மேற்கத்தய பல்கலைகழகங்களில் முதுமாணி பட்டம் பெற்ற பல தலைவர்கள் தமிழ் மக்களைப் பிரதிநிதிதுவப்படுத்தினார்கள். சர்வதேச நாடுகளின் தலைவர்களுக்கு எந்த வகையிலும் சளைக்காத அதி உயர் கல்வி தகைமையை அவர்கள் பெற்றிருந்தும் தமிழர்  பிரச்சனையை சர்வதேசத்திற்கு எடுத்து சென்று தமது திறமையின் மூலம் அதை கையாளதவறியது ஏன்?

அவையெல்லாம் எப்போதோ நடந்தவை அவற்றை பற்றி கதைப்பதில் பிரயோசனம் இல்லை என்று நீங்கள் கருதலாம். ஆனால் அந்த தமிழரசு கட்சிதானே மீண்டும் எமது தலைமையே ஏற்றிருகிறது. ஆகவே அது பற்றி சிந்திக்க ஒவ்வொரு தமிழருக்கும் தேவை இருக்கிறது.

ஒரு சிறிய பிளேற் சிராய்பு  இரத்த காயம் இன்றி பிரச்சனையை கையாளகூடிய சட்ட அறிவு, அரசியல் அறிவு பெற்றவர்களாக இருந்தும் போதிய அவகாசம் இருந்தும் சர்வதேசத்தில் தமிழர் பிரச்சனையை ஒரு பேசு பொருளாக கூட இவர்களால் ஏற்படுத்த முடியவில்லை. தமிழர் பிரச்சனையை உணர்ச்சி அரசியலாக்கியது யார்?  அப்படி செய்வது எதிர்காலத்தில்  பாரிய அழிவுகளை உருவாக்கும் என்று இந்த மெத்த படித்த தலைகளுக்கு தெரியாமல் போனதேன்? அவர்கள் படித்த முதுமாணி பட்ட படிப்புகளில் வரலாறு ஒரு பாடமாக இல்லையோ?   உணர்ச்சி அரசியலை முன்னெடுக்க முன்பு  உலகநாடுகளில் நடந்த விடுதலை போராட்ட வரலாறுகளை அந்த தலைவர்கள் படிக்க தவறியது ஏன்? அதற்கான ஆங்கில அறிவு இவர்களுக்கு தாராளமாக இருந்ததே.

தங்கள் கருத்தாடலில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்ட  ஜேவிபி கூட  மரியாதையாக  அழைத்த நீங்கள் சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சனையை தீர்க்குமாறு அழுத்தம் கொடுக்கவைத்த போராளிகளை "தமிழ்பயங்கரவாதிகள்" என்று அழைத்திருந்தீர்கள். அதாவது தமிழர் பிரச்சனையை குறைந்த பட்சம் சர்வதேச பேசுபொருளாக கூட ஏற்படுத்தாது தமது சுய நல பதவி ஆசை பொழுது போக்கு அரசியலுக்காக  அதை பயன்படுத்தி உணர்ச்சி அரசியலை வளர்த்த  தலைவர்கள் மீது ஒரு சுண்டு விரல் கூட நீட்ட முடியாத அல்லது விரும்பாத  உங்களால்,  சரி பிழைக்கப்பால் தமது எதிர்கால சந்ததிக்காக நேர்மையுடன் தன்னலமிலாமலும்  போராடி தமது உயிர்களை கொடுத்த அந்த போராளிகளை "தமிழ் பயங்கரவாதிகள்" என்று சுலபமாக எந்த தயக்கமும் இன்றி   கேவலபடுத்த முடிகிறது.  உங்கள் வார்த்தைகளில் நீங்கள் கூறிய பிறவிக்குணம் இதுதான் என்று கொள்ளலாமா? தமிழனின் பிறவிக்குணம்.

(சிறந்த  முறையில் அரசியல் கருத்துகளை எழுதிவரும்  தாங்கள் அரசியல் கருத்து எழுதவதை நிறுத்துவதாக கூறியிருந்தீர்கள். அது துரதிர்ஷரவசமானது. தங்களில் சில கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் பல கருத்துகள்  சிறப்பானவை. ஆர்வத்துடன் என்னை வாசிக்க தூண்டியவை.  இன்றைய யதார்த்தை புரிந்து அரசியலை கொண்டு செல்லவேண்டும் என்ற உங்களின் கருத்து வரவேற்க கூடிய கருத்து. அதை நானும் ஆதரிக்கிறேன். ஜதார்த்த அரசியலுக்கு குறுக்கே நிற்பவர்கள் சுயலவாதிகள் என்ற உங்கள் கருத்தே எனது கருத்தும்.    ஒருவகையில் இவர்கள் பழைய  அப்புகாத்து அரசியல் வாதிகளை பிரதிநித்துவபடுத்துகிறார்களோ தெரியவில்லை.  அரசியல் கருத்து எழுதுவதை நிறுத்துவதாக கூறிய நீங்கள் வாசிப்பதை நிறுத்துவதாக  குறிப்பிடவில்லை என்பதால் இதை உங்களுக்கு பதிலாக எழுதினேன்.)

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.