Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூலையில் இருக்கும் ஐயாவின் காலை முறி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

    என்ன தான் நாங்கள் வெளிநாடு வந்தாலும் கொழும்பைத் தாண்டியே வர வேண்டும்.கொழும்பைத் தாண்டி வர வேண்டும் என்றால் ஏதோ முருகண்டியில் இறங்கினமா ஏறினமா என்ற மாதிரி இல்லை.நாள் கணக்காக கிழமைக் கணக்காக மாதக்க கணக்காக ஏன் வருடக் கணக்காக கொழும்பில் தங்கியிருந்தவர்கள் ஏராளம்.நானும் இப்படி வருடக் கணக்காக(76-77) அலைந்தவர்களில் ஒருவன் .

 

இப்படி கொழும்பில் அலைந்த காலங்களில் உறவினர்களின் வீட்டில் நின்றாலும் ஏஜென்டைப் பார்க்க அப்படி இப்படி ஒரு சாட்டு வைத்து திரிவது தான் வேலை.இப்படி திரிந்த காலங்களில் மதிய உணவுக்காக ஜவ்னா கொட்டலுக்கு சாப்பிட போவோம்.கொழும்பில் இருந்தவர்களில் இந்த ஜவ்னா கொட்டலில் சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள்.இதிலும் ஊரில் இருக்கும் போது ஒரு தரம் சோறு போட்டு இரண்டாம் தரம் சோறு சொதி என்று விட்டு தின்றால்த் தான் சாப்பிட்ட மாதிரி இருக்கும்.அத்தோடு முற்று முழுதாக தமிழர்களாலோயே நடாத்தப்படும் கொட்டலுக்கு தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லீம் சிங்கள மக்களும் நிறையவே வந்து சாப்பிடுவார்கள்.எப்படி தான் சிங்கள முஸ்லீம் கொட்டல்களில் சாப்பிட்டாலும் உறைப்பு என்பது இல்லாவிட்டால் சாப்பிட்ட மாதிரியே இருக்காது.இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால் இந்த கொட்டல் நடத்துபவர்கள் அனேகமானோர் தீவகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

 

ஆரம்பத்தில் சாப்பிட போன எனக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால் பட்டறையில் உள்ளவர்(அனேகமாக முதலாளி)வேலை செய்பவர்களுடன் நடத்தும் சம்பாசணை.பட்டறையில் இருந்து வாறவரை

 

கொஞ்சம் இருங்க இந்த ஜயா இரண்டாம் தரம் முடித்திட்டார் எழும்ப போறார் நீங்கள் அதிலை இருக்கலாம்

 

சாப்பிட்டுட்டு வாறவரை அவர் என்ன சாப்பிட்டார் என்று அவரின் கணக்க முடிப்பது

 

சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களின் இலையையும் பார்த்து தம்பி ஜயான்ரை ஆட்டுக்கு ரசம் விடு

 

தம்பின்ரை கோழிக்கு சொதி விடு

 

இஞ்சாலை பார் வாசலுக்கு பக்கத்தில் இருக்கிற ஜயான்ரை ஆட்டுக்கு சோறு போடு

 

அந்த மூலையில் இருக்கிற ஜயாவின்ரை காலை முறித்து விடு(பயப்பிடாதோங்கோ நண்டுக் கால் தான்)

 

என்று இவர்களின் சம்பாசணைகளைக் கேட்க ரொம்பவும் பிரியமாக இருக்கும்.சிலர் ஜவ்னா கொட்டல்களை குறை கூறுபவர்களும் உண்டு.அப்படி என்ன தான் குறை என்று பார்த்தால் இரண்டாம் தரம் சோறு ஓகே ஆனால் மூன்றாம் தரம் கேட்டால் கொஞ்சம் முறைக்கிறார்கள் விருப்பமில்லாமல் பரிமாறுகிறார்கள் என்று சொல்வார்கள்.இதற்காகவே சோற்றுக்குள் பாக்கைப் போட்டு அவிக்கிறார்கள் என்றும் கூறுவார்கள்.நானும் அருகிலிருந்த(கொம்பனித் தெரு)கொட்டல் முதலாளியிடம் இரவிரவாக இருந்து அரட்டை அடிக்கும் போது சாடைமாடையாக கேட்டுப் பார்த்தேன் மனிசன் பிடியே கொடுக்காமல் கதைப்பார்.

 

நீங்களும் எத்தனையோ ஜவ்னா கொட்டல் ஏறி இறங்கி இருப்பீர்கள் இப்படியான அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி

Edited by eelapirean

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான பகிர்வு, ஈழப்பிரியன்!

 

யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது!

 

ஹமீதியா கபே எண்டு கேட்டால் ஒருத்தருக்கும் தெரியாது!  மொக்கன் கடை எண்டால், தெரியாத இளம் தலைமுறையே இருக்காது!

 

அங்க சில பேர் ' ஆட்டு மூளை' ஓடர் பண்ணுவினம்!

 

அபப, முதலாளி 'மொக்கன்' ஒரு கத்துக் கத்துவார்!

 

தம்பி... ஐயாவுக்கு ஒரு ' மூளை' கொடு!

 

அதே போல தம்பி..  இரண்டு ' பிஸ்டேக்' கொண்டோடி வா எண்டும் சொல்லுவார்!

 

'பிஸ்டேக்' எண்டால் என்ன எண்டு எல்லாரிட்டையும் கேட்டுத் திரிஞ்சால்... பெரிய ஆக்களின்ர மறு மொழியும் .... அது 'பிஸ்டேக்' தான்!

 

அது '  Beef Stake'  எண்டு தெரிய வர ... இன்னும் இரண்டு வருசங்கள் எனக்குத் தேவைப்பட்டது!  :D

 

தொடருட்டும் உங்கள் ... பகிர்வுகள்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ஈழப்பிரியன், புங்கையூரான்.
நான்.... இலங்கையில் ஹோட்டல்களில், சாப்பிட்டது குறைவு என்றாலும்.....
மொக்கன் கடையின் புட்டும், அதன் கறிகளும் இப்போதும்.... நாவில் நீர் ஊற வைக்கும்.

அத்துடன், காலி வீதியில்  வெள்ளவைத்தயிலுள்ள "மயூரா" உணவு விடுதியின், உணவுகளும் எனக்கு மிகவும் பிடித்தவை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு நன்றி புங்கை  தமிழ்சிறி.

 

மொக்கன் கடையில் குறைந்தது 10தடவைகளாவது போயிருப்பேன்.இப்போது நீங்கள் எழுதித் தான் அதன் பெயரே தெரியுது.

 

மொக்கனின் புட்டும் குறுமாவும் ரசமும் சொல்லி வேலையில்லை.

 

சிறி நீங்கள் வெள்ளவத்தைப் பக்கம் இருந்தபடியால் ஜவ்னா கொட்டல் அனுபவம் இல்லாமல் போயிருக்கலாம்.புறக்கோட்டை ஐந்து லாம்படிச் சந்தி  போன்ற இடங்களில் இருந்திருந்தால் கட்டாயம் போயிருந்திருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலிருந்தபோது

பாடசாலை தவிர்ந்த நாட்களில்

மத்தியானம் 

ஆமர்வீதி Police Station க்கு முன்னால் இருந்த

Jaffna Hotel இலும்

இரவில் ஆமர்வீதியிலிருந்து 134  BUS அங்கொடைக்கு திரும்பும் சந்தியில் இருந்த (Police Station க்கு மறுபக்கம்)

சாப்பிடுவது வழக்கம்.

Jaffna Hotel எனது ஒன்றுவிட்ட அண்ணரின் கடை.

நண்டுக்கறியும் 

இறால் குழம்பும் 

இன்றும் கண்ணுக்குள் வந்து போகுது.

இந்தக்கடை முதலாளி அண்ணராக இருந்தபோதும்

இரவுச்சாப்பாட்டுக்கு மறு பக்கம் போவதற்கு காரணம் அவர்களது முட்டைப்பொரியல்.

வேறு எங்கும் கிடைக்காத ருசி.

வெங்காயம் மிளகாய் முட்டை எல்லாவற்றையும் ஒரு அரைப்பொரியலில் தருவார்கள்.

 

சாப்பாடு முடிந்து வர 

Jaffna Hotel ன் உள்ளே மறுபுறத்தில் முத்துத்தம்பி  சித்தப்பா

வேண்டாமென்று மறுத்தாலும் தரும் கப்பல் பழம்...

கண்கள் பனிக்கிறது

அந்த நாள் நினைவுகள்

அது ஒரு கனாக்காலம்....

 

அப்படியே வெளியில் வந்தால் ஒரு கயிற்றில் சிகரெட் சுருட்டு பிடிக்க நெருப்பு தொங்கியபடி இருக்கும்

அதுவும் ஒரு காட்சிதான்.

 

நன்றி  ஈழப்பிரியன்

எனது ஞாபகங்களையும்

அதிலும் எனது ஊர் சம்பந்தப்பட்ட பதிவு என்பதால் மட்டற்ற மகிழ்ச்சி.

தொடருங்கள்...

 

 


இதைவிட கொட்டாஞ்சேனை மேட்டில் இருந்த சிங்களக்கடை

அதன் பருப்பும் பாணுக்கும் அலைந்திருக்கின்றோம்..


என்னே ருசி...... :icon_idea:

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாய் 80ம் ஆண்டுக்கு முன்வரை  பெரும்பாலும் இரவுச் சாப்பாடு ஐந்து சந்தி பிளவ்ஸ்சும் , மொக்கங் (தான் சரி) கடையும்தான்.   நானும் என் நன்பனும் இரவு வழமையாய் ரொட்டி ரோஸ் என்டால் பிளவ்ஸ் , பிட்டும் ஆனமும் (ரசம் போன்ற ஒன்று, அங்கு அதுதான் பேமஸ்.) என்டால் மொக்கங் கடை. பின் அப்படியே செக்கன்ட் ஷோ. தவறாது, கலரியில்தான் இருந்து பார்ப்பது. புதுப்படம் 65 சதம், பழைய படம் 35 சதம்.

 

ஒளிவிளக்கு ராஜாவில், குடியிருந்த கோவில் வின்ட்சரில், இந்த இரு படங்களும் எத்தனை தரம் பார்த்தோம் என்று கணக்கு இல்லை. இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டு போகலாம். இப்ப நினைத்தால் அவ்வளவும் அருமையான அனுபவங்கள்...!

 

கொழும்பில் நிக்கும்போது காலையில் கொள்ளுப்பிட்டி விவேகானந்த பவான். (இப்ப அந்தக் கடை கிடையாது.) மத்தியாணத்தில் பாவாகடை சோறு எவ்வளவும் எடுக்கலாம், கறிக்குத்தான் காசு. இரவில் கோல்பேசில் "நான்" உட்பட விதம் விதமான உணவுகள்...!

 

எனது நன்பன் நன்றாகச் சமைப்பார், அதேபோல் நன்றாகக் குடிப்பார். எமக்கு ஒரு சிங்கள நன்பரும், ஒரு ஆட்டோ நன்பரும் இருந்தனர். நாங்கள் கொழும்பில் நிக்கும்வரை அந்த ஆட்டோ எங்களுடன்தான் இருக்கும். பின்னேரம் ஐந்து மணிக்கு எமது வேலைகளை முடித்துவிட்டு , மாடிறைச்சியும், மாட்டு நாக்கும், மாசிக் கருவாடும் வாங்கிக் கொண்டு அந்த நன்பனின் வீட்டுக்குப் போவோம். அங்கு அன்று அவர்களின் குசினியும், விறாந்தையும் எங்கள் கைக்கு வந்துவிடும். நாங்கள் உதவி செய்ய அவன் அருமையாய்ச் சமைப்பான். மாசிக்கருவாட்டில் ஒரு சம்பல் போடுவான்   கீல வெடக் நே   ( சொல்லிவேலையில்ல)

 

அப்படியே அவர்கள் "வாசிக்க" தொடங்கி விடுவினம். நான் அவர்களுக்கு கம்பனியாக பாட்டுகள் ,பைலாக்கள் பாடிக்கொண்டு (சில பாடல்கள் டின்னில் தாளமடித்துக் கொண்டு எதிரெதிராகப் பாடுவது... உதாரணமாய் ஒருவர் " களுத்துறைமெ பாலமே கொல்ல மாலு பானவ என்பார் , மற்றவர் ஏக்க இன்னெ.......தாமு மானவ " என்டெல்லாம் போகும்.)

 

அதெல்லாம் இப்ப நினைக்க நெஞ்சைப் பிசையுது. நன்றி ஈழப் பிரியன்...! :rolleyes::)

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் தெரியுது பெண்கள் எத்தனை விடயங்களை இழக்கிறார்கள் என்று

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவை இல்லாமல்உதுக்குள்ளை வந்து எட்டிப் பாத்து இப்ப இரவு நித்திரையை துலைச்சுப்போட்டன்

இனி பள்ளிக்குடத்து எட்டாம் வகுப்பு பெட்டையள் வரைக்கும் " றிவேஸ்" ல போய் - நித்திரையில உளறப்போறன் என்ர சீதேவி முழிச்சு கிடந்தா பிறகு "லங்கா சிறி"ல தான் பாக்கக் கிடைக்கும் - ஆய்க்கினை யாப்போச்சு.

 

கோட்டை முனியப்பகோயில்  : தேங்காய்ச்சொட்டு

 

பரணி ஹோட்டல்                       :  அப்பம்

 

சிற்ரி பேக்கறி                                :  காறாத்தல் பாணும் பருப்பும்

 

சுபாஸ் கபே                                    :  ஐஸ்கிரீம்

 

றிக்கோ கோப்பி பார்                     :  றோள்ஸ்,கோப்பி

 

வை.சி.சி.கு(V.S.S.K)                       :  உளுந்து வடை

 

மலாயன் கபே                                 :  போளி

 

தாமோதர விலாஸ்                       :  நெய் தோசை

 

சந்திரா ஐஸ் கிறீம்                         :  ஐஸ் சொக்

 

கொழும்பு றெஸ்ரோறன்              :  றால் குளம்பு

 

பிளவ்ஸ்                                           :  றோஸ்ற்(5 சதம்)         

 

மொக்கன் கடை                               :  புட்டு, ஆணம்,மட்டிச் சம்பல்

 

முனீஸ்வரா கபே                             : புட்டு,இடியப்பம்,தோசை - புளிச்சொதி தாளித்த சம்பல்(கடுகு தூக்கல்)

(வெலிங்டன் சந்தி)

லிங்கம் கூல்பார்                               : சர்பத் , இதர வாழைப்பழம், பீடா

(வெலிங்டன் சந்தி)

கபே பாரத்                                             : அப்பம், பிளேன் ரீ

(ஆரிய குளம் சந்தி)                           

ஒரியென்டல் பேக்கரி                        : சங்கிலிப் பாண்

 

சொக்கன் கடை                                     : கடலை வடை(3 ~ 5 சதம்) பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

 

பட்டு புளியங் காய், ஈச்சம் பழம், பாலப் பழம், நாவல் பழம்  அம்பலவி மாங்காய் (உப்புமி+மி.தூள்)

 

எல்லாச் செல்வத்தையும் துலைச்சுப் போட்டு வந்து உங்க மண்ணெடுக்க வேண்டிக்கிடக்கிது

 

"" எட்டுச் செலவுக்கு உது எல்லாம் கொண்டந்து படைபினமே "" 

 

இஞ்சூரன்ஸ் காசில எடுத்தெறிஞ்சிற்று  மூண்டாம் நாள் வேலைக்கெல்லோ ஓடோணும் 

 

பின் குறிப்பு:

நான் பெற்ற இன்பம்  நீங்களும் பெற்று  - வீணி ஊத்தி நித்திரைல புரக்கடிச்சு முதுகில மொங்கான்  விழ வாழ்த்துகிறேன்

 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பரதேசி நீங்கள் சாப்பிடாத கடை இல்லைப் போல. சாகமுதல் எழுதி வைச்சிட்டுப் போனீர்கள் என்றால் கட்டாயம் படைப்பினம்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல சுவாரசியமான பகிர்வு, ஈழப்பிரியன்!

 

யாழ்ப்பாணத்தில், அஞ்சு லாம்படிச் சந்திக்குக் கிட்ட ' ஹமீதியா கபே' எண்டு ஒண்டு இருந்தது!

 

 

புங்கையூரன் 

இந்த சந்திக்குப் பேர் அஞ்சு முச்சந்தி எல்லோ  :rolleyes: ???

 

உங்கட சந்தி கொழும்பில இருகிற மாதிரித்தான் என்னக்கு நினைப்பு :huh:

 

சில வேளை இரண்டும் ஒண்டுதானோ தெரியாது :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரதேசி நீங்கள் சாப்பிடாத கடை இல்லைப் போல. சாகமுதல் எழுதி வைச்சிட்டுப் போனீர்கள் என்றால் கட்டாயம் படைப்பினம்

 

 

எங்கையோ ஒரு வயுறு அடிப்புடிச்சு மணக்கிற மாதிரி இருக்கிது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் 

இந்த சந்திக்குப் பேர் அஞ்சு முச்சந்தி எல்லோ  :rolleyes: ???

 

உங்கட சந்தி கொழும்பில இருகிற மாதிரித்தான் என்னக்கு நினைப்பு :huh:

 

சில வேளை இரண்டும் ஒண்டுதானோ தெரியாது :D

அதே.... அஞ்சு முச் சந்தி தான்! :icon_idea: 

 

நன்றி பரதேசி!

 

கொழும்புக்குப் போறதுக்கே... பிள்ளையார் கோயில்ல தேங்காய் உடைச்சுக்  குஞ்சியம்மா, பெரியம்மா, முதல் தெரிஞ்ச சொந்தத்துக்கெல்லாம் பயணம் சொல்லி...எல்லாரும் சொல்லுற 'தம்பி கவனமப்பு' எல்லாத்தையும் பத்திரமாய் வாங்கி வைச்ச காலம் அது..! :D 

 

இப்ப என்னடா எண்டால் லண்டனுக்குப் போறதுக்கே... யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்ட் வரையும், யாராவது ஒருவர் கொண்டு வந்து இறக்கிப் போட்டு, 'அண்ணை' போய்ச் சேர்ந்தவுடன ஒரு 'ஈமெயில்' அடிச்சு விடுங்கோ எண்ட அளவில வந்து நிக்குது! :o

 

பிள்ளையார் சமன்பாட்டில இருந்து ' அவுட்டாய்ப்' போய்ட்டார்!

 

ஆனால், 'முறி கண்டியானுக்கு' இன்னும் பயம்! :D

 

அந்தக்காலத்தில ஆனானப்பட்ட 'யாழ்தேவியே' சிலோ பண்ணுறதாம் எண்டால் பாருங்கோவன்! :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவை இல்லாமல்உதுக்குள்ளை வந்து எட்டிப் பாத்து இப்ப இரவு நித்திரையை துலைச்சுப்போட்டன்

இனி பள்ளிக்குடத்து எட்டாம் வகுப்பு பெட்டையள் வரைக்கும் " றிவேஸ்" ல போய் - நித்திரையில உளறப்போறன் என்ர சீதேவி முழிச்சு கிடந்தா பிறகு "லங்கா சிறி"ல தான் பாக்கக் கிடைக்கும் - ஆய்க்கினை யாப்போச்சு.

 

கோட்டை முனியப்பகோயில்  : தேங்காய்ச்சொட்டு

 

பரணி ஹோட்டல்                       :  அப்பம்

 

சிற்ரி பேக்கறி                                :  காறாத்தல் பாணும் பருப்பும்

 

சுபாஸ் கபே                                    :  ஐஸ்கிரீம்

 

றிக்கோ கோப்பி பார்                     :  றோள்ஸ்,கோப்பி

 

வை.சி.சி.கு(V.S.S.K)                       :  உளுந்து வடை

 

மலாயன் கபே                                 :  போளி

 

தாமோதர விலாஸ்                       :  நெய் தோசை

 

சந்திரா ஐஸ் கிறீம்                         :  ஐஸ் சொக்

 

கொழும்பு றெஸ்ரோறன்              :  றால் குளம்பு

 

பிளவ்ஸ்                                           :  றோஸ்ற்(5 சதம்)         

 

மொக்கன் கடை                               :  புட்டு, ஆணம்,மட்டிச் சம்பல்

 

முனீஸ்வரா கபே                             : புட்டு,இடியப்பம்,தோசை - புளிச்சொதி தாளித்த சம்பல்(கடுகு தூக்கல்)

(வெலிங்டன் சந்தி)

லிங்கம் கூல்பார்                               : சர்பத் , இதர வாழைப்பழம், பீடா

(வெலிங்டன் சந்தி)

கபே பாரத்                                             : அப்பம், பிளேன் ரீ

(ஆரிய குளம் சந்தி)                           

ஒரியென்டல் பேக்கரி                        : சங்கிலிப் பாண்

 

சொக்கன் கடை                                     : கடலை வடை(3 ~ 5 சதம்) பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

 

பட்டு புளியங் காய், ஈச்சம் பழம், பாலப் பழம், நாவல் பழம்  அம்பலவி மாங்காய் (உப்புமி+மி.தூள்)

 

எல்லாச் செல்வத்தையும் துலைச்சுப் போட்டு வந்து உங்க மண்ணெடுக்க வேண்டிக்கிடக்கிது

 

"" எட்டுச் செலவுக்கு உது எல்லாம் கொண்டந்து படைபினமே "" 

 

இஞ்சூரன்ஸ் காசில எடுத்தெறிஞ்சிற்று  மூண்டாம் நாள் வேலைக்கெல்லோ ஓடோணும் 

 

பின் குறிப்பு:

நான் பெற்ற இன்பம்  நீங்களும் பெற்று  - வீணி ஊத்தி நித்திரைல புரக்கடிச்சு முதுகில மொங்கான்  விழ வாழ்த்துகிறேன்

 

பரதேசி... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகு இந்த பாக்கு விசயம் உங்களுக்கு ஏதாவது தெரியுமோ?

 அனேகமாய் 80ம் ஆண்டுக்கு முன்வரை  பெரும்பாலும் இரவுச் சாப்பாடு ஐந்து சந்தி பிளவ்ஸ்சும் , 

பிளவுஸ் ரோஸ் யாழில் மிகவும் பிரபலமாக இருந்தது.இந்துவில் இருந்து மதிய நேரம் சாப்பாட்டைக் கொண்டு போய் ரோஸ் வாங்கி சேர்த்து சாப்பிடுவோம்.பகிர்வுக்கு நன்றி சுவி.

இப்பதான் தெரியுது பெண்கள் எத்தனை விடயங்களை இழக்கிறார்கள் என்று

உண்மை தான் சுமே சைவக்கடை தவிர பெண்களை வேறு கடைகளில் காண முடியாது.

தேவை இல்லாமல்உதுக்குள்ளை வந்து எட்டிப் பாத்து இப்ப இரவு நித்திரையை துலைச்சுப்போட்டன்

இனி பள்ளிக்குடத்து எட்டாம் வகுப்பு பெட்டையள் வரைக்கும் " றிவேஸ்" ல போய் - நித்திரையில உளறப்போறன் என்ர சீதேவி முழிச்சு கிடந்தா பிறகு "லங்கா சிறி"ல தான் பாக்கக் கிடைக்கும் - ஆய்க்கினை யாப்போச்சு.

 

கோட்டை முனியப்பகோயில்  : தேங்காய்ச்சொட்டு

 

பரணி ஹோட்டல்                       :  அப்பம்

 

சிற்ரி பேக்கறி                                :  காறாத்தல் பாணும் பருப்பும்

 

சுபாஸ் கபே                                    :  ஐஸ்கிரீம்

 

றிக்கோ கோப்பி பார்                     :  றோள்ஸ்,கோப்பி

 

வை.சி.சி.கு(V.S.S.K)                       :  உளுந்து வடை

 

மலாயன் கபே                                 :  போளி

 

தாமோதர விலாஸ்                       :  நெய் தோசை

 

சந்திரா ஐஸ் கிறீம்                         :  ஐஸ் சொக்

 

கொழும்பு றெஸ்ரோறன்              :  றால் குளம்பு

 

பிளவ்ஸ்                                           :  றோஸ்ற்(5 சதம்)         

 

மொக்கன் கடை                               :  புட்டு, ஆணம்,மட்டிச் சம்பல்

 

முனீஸ்வரா கபே                             : புட்டு,இடியப்பம்,தோசை - புளிச்சொதி தாளித்த சம்பல்(கடுகு தூக்கல்)

(வெலிங்டன் சந்தி)

லிங்கம் கூல்பார்                               : சர்பத் , இதர வாழைப்பழம், பீடா

(வெலிங்டன் சந்தி)

கபே பாரத்                                             : அப்பம், பிளேன் ரீ

(ஆரிய குளம் சந்தி)                           

ஒரியென்டல் பேக்கரி                        : சங்கிலிப் பாண்

 

சொக்கன் கடை                                     : கடலை வடை(3 ~ 5 சதம்) பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

 

பட்டு புளியங் காய், ஈச்சம் பழம், பாலப் பழம், நாவல் பழம்  அம்பலவி மாங்காய் (உப்புமி+மி.தூள்)

 

எல்லாச் செல்வத்தையும் துலைச்சுப் போட்டு வந்து உங்க மண்ணெடுக்க வேண்டிக்கிடக்கிது

 

"" எட்டுச் செலவுக்கு உது எல்லாம் கொண்டந்து படைபினமே "" 

 

இஞ்சூரன்ஸ் காசில எடுத்தெறிஞ்சிற்று  மூண்டாம் நாள் வேலைக்கெல்லோ ஓடோணும் 

 

பின் குறிப்பு:

நான் பெற்ற இன்பம்  நீங்களும் பெற்று  - வீணி ஊத்தி நித்திரைல புரக்கடிச்சு முதுகில மொங்கான்  விழ வாழ்த்துகிறேன்

என்னடா பெயர் ஒரு மாதிரி இருக்கிறதே என்று பார்த்தேன்.

 

உண்மையிலேயே பரதேசி பொருத்தமான பெயர்.

பரதேசி... :D

எனக்கும் இதே தான் தோன்றினது.பெயருக்கேற்ற ஆள்.

பரதேசி இன்னமும் லிங்கம் கூல் பார் மறக்கவே ஏலாது.

 

சர்பத்துக்கு என்ன மாஜாஜாலம் பண்ணுகிறார்களோ ஒரு திருப்தியுடன் வெளிவரலாம்.

 

இப்போது கூட இருக்கென்று சொல்கிறார்கள்.

Edited by eelapirean

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஆக்கள் நனவிடை தோயீனம். நாங்க "யங்" தலைமுறை! ஒட்டி நிண்டு பாக்கிறம்! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பழைய ஆக்கள் நனவிடை தோயீனம். நாங்க "யங்" தலைமுறை! ஒட்டி நிண்டு பாக்கிறம்! :D

 

 

தம்பின்ரை கோழிக்கு சொதி விடு.... :D 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணச் சாப்பாட்டுக் கடைகளில் ஆத்திரம்  அவசரத்திற்கு வெளிக்குப் போகவேணும் எண்டால் சமைக்கும் இடத்தைத் தாண்டிப் போகவேண்டும். சமையல்க்காறரைப் பார்த்தால் பின்னர் சாப்பிட மனம் வராது. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இந்த பாக்கு விசயம் உங்களுக்கு ஏதாவது தெரியுமோ?

 

இதைத்தான் சொல்வது

பறியில கை வைப்பது என்று...

என்னிடமேயா..... :lol:  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.