Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னைய அரசுக்கு எதிரானதே வட மாகாணசபைத் தீர்மானம்! சுரேஸ் பிரேமச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Suresh-MP-300-news.jpg

கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பிலேயே வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும் புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் நல்லுறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

   

கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது இனப்படுகொலையே என வலியுறுத்தி வட மாகாணசபையில் நேற்றுமுன்தினம் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டிருந்தது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன்-

 

கடந்த அரசாங்கம் மக்களைத் துன்புறுத்தியுள்ளது என்பதற்காகவே அதனை மாற்றும் தீர்மானத்துக்கு மக்கள் வந்தனர். இதனாலேயே புதிய அரசாங்கத்தை அவர்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தநிலையில் வட மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானமானது கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் தொடர்பானவை.

 

யுத்த விதிமுறைகளை மீறி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியுத்தத்தின் போது 70 ஆயிரம் பேர்வரை உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையே தெரிவித்துள்ளது. கடந்த 30 வருட யுத்தத்தில் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மட்டுமன்றி கடந்த அரசாங்கம் யுத்தத்தின் பின்னரும் மக்களை துன்புறுத்தியது. இதனால்தான் மீன்பிடி படகுகளில் ஏறி மக்கள் வெளிநாடுகளுக்குச் சென்றனர். தாக்குதல்கள் மட்டுமன்றி துன்புறுத்தல்களும் இனப்படுகொலைகளே. இவற்றுக்கு எதிராகவே வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

 

இவை தொடர்பில் புதிய அரசாங்கம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும். புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை முன்வைப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீள்குடியேற்றம், காணிகளைக் கையளிப்பது உள்ளிட்ட விடயங்களை நாங்களே அழுத்தம் கொடுத்து அரசாங்கத்துடன் பேசிவருகின்றோம்.

 

இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் இந்த அரசாங்கம் கவனத்தில்கொண்டு உரிய தீர்வை வழங்கவேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கும், புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருக்கும் நல்லுறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=126411&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மென்று விழுங்காம சொல்ல வாறதைச் சொல்லுங்க..

 

மகிந்த கூடா... மைத்திரி அச்சா.

 

கோத்தா கூடா.. பொன்சேகா அச்சா...

 

அப்ப இனப்படுகொலை என்று நீங்க சொல்லுறது எதை...?! :lol::icon_idea::o:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தங்கக்கட்டி...

உங்களைச்சொல்லுவமா??

சும்மா

தமிழருக்கு ஒரு பாட்டுப்போட்டிருக்கிறம்

இனி  கொஞ்ச நாளைக்கு நாம கூடிக்குலாவலாம்.. :(  :(  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகளுக்கு வளைந்து வழிந்து பேசிப்பேசி பழகிப்போச்சு  

நான் சொன்னது போனமாசம்! 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தெரியாதவர்கள் எல்லாம் ஊடகப் பேச்சாளர்கள்

 

ஒரு இனத்திற்கெதிராக இன்னொரு இனம் அதுவும் பெரும்பான்மையான இனம் சகல அரச வலுக்களைக் கையில் வைத்திருக்கும் இனம் செய்யும் அல்லது  செய்த சகல  வன்முறைகளுக்கும் படுகொலைகளுக்கும் நடைமுறையில் இருக்கும் அரசே பதில் அளிக்க வேண்டும்.

தீர்மானம் மகிந்தவிற்கோ அல்லது பண்டாவிற்கோ எதிரானது அல்ல.
சிங்கள அரசிற்கெதிரானது என்பதைக் கூட்டமைப்புத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய அரசில் அங்கம் வகிப்பவர்களில் பலர் ஜனாதிபதி உட்பட அன்றைய அரசில் அங்கம் வகித்தவர்களே! ரணில் அங்கம் வகித்த ஐதேகட்சியும் இன அழிப்பின் பங்காளிகளே!அவர்களின் ஆட்சிக்கு காலத்தில் பல இனக்கலவரங்கள் அரசின் ஆசியோடு தடத்தப்பட்டிருக்கின்றன.யாழ் நூலக எரிப்பான கலாச்சாரப் படுகொலையும் ஐதேகட்சியின் மேற்பார்வையிலே நடந்துள்ளது. ரணிலுக்கும் இன்ப்பிரச்சனைத் தீர்வில் எந்த அக்கறையும் இல்லை என்பதை முதலமைச்சரே தனது உரையில் தெளிவு படுத்தியுள்ளார்.ஏன் இறுதிப் போரான முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் போது அதனை ஆதரித்து பாற்சோறு சாப்பிட்டு வெடிகொழுத்திக் கொண்டாடியவர்கள் தானே இவர்கள்.சந்திரிகா,பொன்சேகா ஆகியோரும் செம்மணிப்படுகொலை,நவாலிப்படுகொலை உட்பட தமிழரின் இரத்தக்கறை படிந்தவர்கள்தான்.ஆனால் சுரேசின் இந்த அறிக்கை இன்னுமொரு இன அழிப்பின் பங்காளியான இந்திய அரசைத்திருப்திப் படுத்தவதற்காகவே என்பதே உண்மை.

தீர்மானம் மகிந்தவிற்கோ அல்லது பண்டாவிற்கோ எதிரானது அல்ல.

சிங்கள அரசிற்கெதிரானது என்பதைக் கூட்டமைப்புத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்

 

ஏற்புடைய கருத்து.
 
நாம் அகிம்சையில் ஆரம்பித்து ஆயுதப் போராட்டம்வரை பார்த்தவர்கள். எதுவுமே வேலைக்காகவில்லை மறுபடியும் ஆரம்பத்தில் வந்து நிற்கின்றோம். இணக்க அரசியல்தான் எமது இருப்பை உறுதி செய்ய இப்போதிருக்கும் ஒரே தெரிவு. இவ்வருட சுதந்திர விழாவில் இலங்கை அரசினாலும் சில சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டதை மறுக்கமுடியாது. 
 
"தமிழ் அரசியல்வாதிகளுக்கு வளைந்து வழிந்து பேசிப்பேசி பழகிப்போச்சு" இதுதான் அரசியல்வாதிகளுக்குப் பாலபாடம். அதாவது ஒருவர் அடிக்கின்ற மாதிரி நடிப்பார் மற்றவர் அழுவது போல் நடிப்பார். இதற்கெல்லாம் கவலைப்பட்டால் முடியுமா? போக வேண்டிய தூரம் அதிகம்.
 
 
நம்பிக்கைதான் வாழ்கை. நம்பி முன்னேறுவோம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் அடிப்படை டக்ளஸ்தேவாந்தாவை விட கேவலம்...

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி வந்தவுடன் மைத்திரிக்கு எதிரானது என்று கதை விடுவினம் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.