Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகப் போராட்டம் பெருவெற்றி! தமிழ் சமூகம் முழு ஆதரவு!! 4 ஆயிரம் வரையான மக்கள் பங்கேற்பு

யாழ்.பல்கலைக்கழக சமூகத்தின் மிகப்பெரும் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பு படுகொலைகள் தொடர்பிலான ஐ.நா விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் காலை 10 மணியளவினில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியிருந்தது.

யாழ்.பல்கலைக்கழக சமூகம் மற்றும் பொது ஜன அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டம் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகி பேரணியாக பலாலி வீதியை சென்றடைந்து பின்னர் கந்தர்மடம் சந்தியினூடாக நல்லூர் வீதியை வந்தடைந்திருந்தது.

jaffna_univesity_and_public_demonstratio

நல்லூர் ஆலய முன்றலில் ஒன்று கூடிய போராட்டகாரர்கள் ஜ.நாவிற்கான தமது மகஜரை எடுத்து சென்று கையளிக்க மன்னார் ஆயர் அதிவண இராயப்பு யோசேப் ஆண்டகை மற்றும் இந்து மதகுரு வாசுதேவக்குருக்கள் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

jaffna_univesity_and_public_demonstratio

போராட்டத்தில் சமயத்தலைவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர். முன்னதாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவிரவாக படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் எங்கெணும் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் சிவில் உடையிலும் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இவை எதனையும் பொருட்படுத்தாது மிகுந்த வீதி போக்குவரத்துக்கட்டுப்பாட்டுடன் போராட்டகாரர்கள் ஊர்வலத்தை தொடர்ந்திருந்தனர்.

jaffna_univesity_and_public_demonstratio

குறிப்பாக போராட்டகாரர்களிற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் ஆயர் அதிவண இராயப்பு யோசேப் ஆண்டகை மற்றும் இந்து மதகுரு வாசுதேவக்குருக்கள் இணைந்து ஊர்வலத்தை முன்னடத்தியிருந்தனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக பிரதிநிதிகள் தென்னிலங்கை பெரும்பான்மையின மாணவ பிரதிநிதிகள், மதகுருமார்கள், கன்னியாஸ்திரிகள் என சுமார் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் பல்கலைக்கழக சமூகத்திற்கு தோள் கொடுத்து இணைந்திருந்தனர்.

jaffna_univesity_and_public_demonstratio

22012ம் ஆண்டு மாணவர்களால் நடத்தப்பட்ட கண்டன பேரணி இரும்புக்கரங்கொண்டு அடக்கப்பட்டிருந்த நிலையினில் இன்றைய போராட்டம் அனைத்து தரப்புக்களது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

jaffna_univesity_and_public_demonstratio

இது ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் பேரணியாக அமைகின்றது.

jaffna_univesity_and_public_demonstratio

நாங்கள் ஐ.நா விசாரணை அறிக்கை தாமதப் படுத்தியதால் கடும் வேதனை அடைந்துள்ளோம் என்பதைக் காட்டவும் ஐ.நா எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதில் எமது எதிர்பார்ப்புக்கள் என்ன என்பதை காட்டவும் இப்பேரணி ஏற்பாடு செய்திருந்ததாகவும் ஒரே குடையின் கீழ் ஈழத்தமிழர்களாக கலந்து கொண்டு எமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் பேராசிரியர் இராசகுமாரன் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

jaffna_univesity_and_public_demonstratio

பல்கலைக்கழக மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளை இடைநிறுத்தி போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

jaffna_univesity_and_public_demonstratio

jaffna_univesity_and_public_demonstratio

jaffna_univesity_and_public_demonstratio

jaffna_univesity_and_public_demonstratio

jaffna_univesity_and_public_demonstratio

http://www.pathivu.com/news/38041/57/4/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

உவையளும் புலிவால்களோ?சுமத்திரனின் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்.....:D

  • கருத்துக்கள உறவுகள்

உவையளும் புலிவால்களோ?சுமத்திரனின் அறிக்கையை எதிர்பார்க்கிறோம்..... :D

அடுத்த மாதம் யெனீவாவுக்கு போறதா?

இல்லையா?

சுமத்திரனின் கதையைக்கேட்கவா?

மக்களின் கோரிக்கைக்கு காது கொடுக்கவா??

ஒன்றும் செய்யாது

ஒன்றிலும் பங்குபற்றாது

சும்மா வீட்டிலிருந்து விசிலடிப்பவர்களுக்கும்

தட்டச்சு செய்பவர்களுக்கும் பிரச்சினையில்லை...

ஏதாவது செய்பவர்களுக்குத்தானே

முடிவுகளை எடுப்பது பற்றிய சிக்கலே....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வீட்டிலிருந்து விசிலடிப்பவர்களுக்கும்

தட்டச்சு செய்பவர்களுக்கும் பிரச்சினையில்லை...

<....

சில மேடை பேச்சாளர்கள் இருக்கினம் ,மேடையில் ஏறினால் இறங்கமாட்டினம்,சபையில் இருக்கிற ஆட்கள் விசிலடிச்சால்தான் மேடையைவிட்டு இறங்குவினம்......அந்த இடத்தில் விசிலடிச்சவன் பலருக்கு நன்மை செய்திருக்கிறான்...அவன் விசிலடிக்காமல் விட்டிருந்தால் மேடைபேச்சாளரின் உபயோகமற்ற பேச்சுக்களை சபையோர் நீண்ட நேரம் கேட்கவேண்டி வந்திருக்கும்..... :D...ஆகவே விசிலடிப்பது,தட்டச்சு செய்வது போன்ற்வற்றால் சில நன்மைகள் உண்டு....

இது புலி வால்களால் தான் நடத்தப்பட்டது .  ஏனெண்ட வெறும் நாலாயிரம் பேர் தான் கலந்த்ருக்கினம். மிச்ச சனமல்லாம் சுமந்திரனிண்ட வாலை பிடிச்சுக் கொண்டு வீட்ட விட்டு வரேல்லை. 

பல்கலையின் போராட்டத்தில் சிங்கள மாணவர்களும் பங்கேற்பு! முஸ்லிம்கள் எவரும் இல்லை 
 
students%20666s.jpg
 
ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை வெளியாவது பிற்போடப்பட்டமையைக் கண்டித்தும் - உடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழக சமூகம் இன்று செவ்வாய்க்கிழமை அமைதிப் பேரணி நடத்தியது. இந்தப் பேரணியில் யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களும் பங்கேற்றனர். ஆனால் இந்தப் பேரணியில் முஸ்லிம் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புலி வால்களால் தான் நடத்தப்பட்டது .  ஏனெண்ட வெறும் நாலாயிரம் பேர் தான் கலந்த்ருக்கினம். மிச்ச சனமல்லாம் சுமந்திரனிண்ட வாலை பிடிச்சுக் கொண்டு வீட்ட விட்டு வரேல்லை. 

மக்கள் யாருடைய வாலை பிடிக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஊர்வலம் நடந்தபோது நானும் அங்கிருந்தேன். எனது கணக்குப்படி அதிகபட்சம் சுமார் 1000 பேர் கலந்துகொண்டார்கள். அவ்வளவுதான். யாழ்ப்பாண மக்கள் தொகை எவ்வளவு?

அதை விடுங்கள், இவர்கள் கூறும் 4000 கணக்கையே எடுத்துக் கொண்டால்கூட,  பொதுமக்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், நாடாளுமன்ற, வட மாகாண உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்ட இந்த பேரணியை யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கமும், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்தது என்கிறார்கள்.

யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டும் 2011-ம் ஆண்டு கணக்குப்படி 5721 மாணவர்களும், 1182 ஊழியர்களும் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் கலந்த அனைத்து மாணவ செல்வங்களுக்கும் நன்றிகள்....  இது ஆரம்ப போராட்டமாக இருக்கட்டும் மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு கடந்தகால வரலாற்றில் நிறைய உண்டு ........ இலக்கை எட்டும் வரை தொறந்து போராடுங்கள்.   

தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை இந்த பேரணி மூலம் மிகவும் நிதானமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களில் வலியை அந்த மக்களால் தான் தெளிவாக உணர முடியும். வெளிநாட்டில் வாழும் நாங்களே அல்லது வெளிநாட்டில் காலம் பூரா சம்பாதித்துவிட்டு தமது இறுதிக்கால ஜாலி வாழ்விற்காக மட்டும் அங்கு தற்போது தற்காலிகமாக குடியேறி வாழ்பவர்களாலேயோ அதனை தத்துருபமாக உணரமுடியாது. மக்கள் தற்போதய ஜதார்த்தை உணர்ந்து ஜனநாயக முறைப்படி அமைதியாக தாங்களாகவே தமது உரிமை முழக்கத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

jaffna_perani_007.JPG

jaffna_perani_008.JPG

jaffna_perani_009.JPG

jaffna_perani_010.JPG

jaffna_perani_011.JPG

jaffna_perani_012.JPG

jaffna_perani_013.JPG

jaffna_perani_014.JPG

jaffna_perani_015.JPG

jaffna_perani_016.JPG

jaffna_perani_017.JPG

Edited by பெருமாள்

பிள்ளைகளை பறி கொடுத்த பெற்றோருக்குத்தான் தெரியும் அதன் வலி .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழக மாணவ சமூகத்தின் இந்த போராட்ட நியாயத்தை.. உலகெங்கும் உள்ள தமிழ் மாணவச் சமூகம் நியாயத்தோடு பற்றி நிற்கும். அதற்கான எல்லா முனைப்புக்களும் மாணவ அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

மாணவர் சக்தி மகத்தான சக்தி. அதனை மக்களுக்கான நீதி நியாயம் உரிமை நோக்கி நேர்த்தியா பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இராணுவ அடக்குமுறைகளுக்குள்ளும்.. 500 மக்கள் கலந்து கொண்டிருந்தால் கூட அது மிகவும் பாராட்டத்தக்க விடயம். உறவுகளை தொலைத்துவிட்டு தினமும் அல்லல்படும் மக்களுக்கு ஒரு நம்பிக்கை கீற்றை தருவதாக அமையும். இங்கு சிலரின் கருத்துப் பதிவு.. அவர்களின் உள்நோக்கங்களை அப்படியே தெளிவாக இனங்காட்டி நிற்கிறது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்..interesting ! ஆயிரம் வாக்குக் கிடைச்ச டக்கி அமைச்சராக இருந்த ஊரில்,  ஆயிரம் பேர் கலந்து கொண்ட ஊர்வலத்திற்கு மக்கள் சக்தி காணாது என்கிறார்கள்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தங்கள் உணர்வுகளை இந்த பேரணி மூலம் மிகவும் நிதானமாக வெளிப்படுத்தியுள்ளார்கள். அவர்களில் வலியை அந்த மக்களால் தான் தெளிவாக உணர முடியும். வெளிநாட்டில் வாழும் நாங்களே அல்லது வெளிநாட்டில் காலம் பூரா சம்பாதித்துவிட்டு தமது இறுதிக்கால ஜாலி வாழ்விற்காக மட்டும் அங்கு தற்போது தற்காலிகமாக குடியேறி வாழ்பவர்களாலேயோ அதனை தத்துருபமாக உணரமுடியாது. மக்கள் தற்போதய ஜதார்த்தை உணர்ந்து ஜனநாயக முறைப்படி அமைதியாக தாங்களாகவே தமது உரிமை முழக்கத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

1970-80 களில் செய்யபட்டு தோல்வி கண்டவைதான்.
இவை தோல்வி கண்டதன் பின்புதான் ஆயுத போராட்டம் முன்னேடுக்கபட்டது அல்லது தமிழர்கள் கையில் ஆயுதம் திணிக்கபட்டது.
 
கடந்த தேர்தலில் மகிந்த வெல்ல வேண்டும்.
மகிந்த வெல்வதே தமிழர்களுக்கு சர்வதேச அரங்கில் சாதகமான கதவுகள் திறக்க வாய்ப்பை கொடுக்கும் என்று எழுதினேன்.
 
இன்னும் 2வருடத்தில் ஒன்றும் நடக்காது போகும்போது ....
எல்லோரும் மைத்திரியைதான் திட்டுவார்கள். பாவம் அந்தாள் .....
சும்மா கிடந்த மைத்த்ரியை சில  மில்லியன் டாலொர் செலவில் சேனாதிபதி ஆக்கியவன் ...... 
சில மில்லியன்களை பல மில்லியன் ஆக்கவே திரைமறைவில் உழைக்கிறான்.
அவன் சொல்வதைத்தான் மைத்திரி கேட்க முடியும்.
 
உலகில் என்ன நடக்கிறது என்பதை சற்று அங்கும் இங்கும் பார்ப்பதில்லை.
மகிந்த போனால் சுதந்திரம் வரும் என்று கனவுதான் காண முடியும். 
 
இந்த போராட்டத்தை சோசல் மீடியா ஊடாக எம்மால் இன்னமும் பகிரங்க படுத்த முடியும்.
கடந்த மூன்று நாட்களாக நான் எனது பேஷ்புக் மற்றும்                 பக்கத்தில் இணைத்து வருகிறேன். 
யாரோ பத்து பேர் அறிந்தால் கூட வெற்றிதான்.
இதை எத்தனை இணைய வசதி உள்ள தமிழர்கள் செய்கிறாரார்கள் ?
 
யாழ்களத்தில் திறம்பட செயலாற்றிகொண்டு இருந்தார் துளசி என்று ஒரு உறவு ...
இலாத பொல்லாத வசைபாடி அவரையும் இங்கிருந்து துரத்திவிட்டது ஒரு அலுகோசு கூட்டம்.
அவர் இங்கு இருந்து போனாலும் இருக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்தும் குரல் கொடுப்பார் என்று நம்புகிறேன்.
 
இன்று சிரியா நாட்டு போரில் மேற்கு ஏகபத்தியம் அடக்கி வாசித்துகொண்டிருக்க முக்கிய காரணம் சோசல் மீடியாதான்.
அனைத்தையும் அக்குவேறு ஆணிவேராக பரப்பி வருகிறார்கள்.
மெயின் மீடிய ஸ்ட்ரீம்மை கடந்து செய்தி பரப்புகிறார்கள் அவர்களுடைய கடின உழைப்பு ஒற்றுமை இன்று அவர்களுக்கு தற்கால வெற்றியை கொடுத்திருக்கிறது.
 
1975ஆம் ஆண்டிற்கு பின்பு ஈழத்தில் பிறந்தவர்களுக்கு புலியை விட்டால் வேறு ஒன்றை தெரியாது 
1991இற்கு பின்புதான் இனவாத அரசு இரத்த வெறியுடன் யுத்த இயந்திரத்தை முழு வீச்சாக இயக்க தொடங்கியது.
அங்கிருந்த இளைஞர்களுக்கு இருந்த ஒரே தெரிவு வீதியில் குண்டு அடிபட்டு சாவது அல்லது புலியுடன் இணைந்து போராடுவது.
அவர்கள் புலியாகி போர்களத்தில் மடிந்த போது அதை பார்த்து  சந்தோசபட்டு ஆனந்தமாக இங்கே கருத்து எழுதிவருகிறது ஒரு அகிறுனை கூட்டம்.
அப்பாவி தமிழ் இளைஞர்கள் இறந்தபோது அவர்களுக்கு புலிபட்டம் வழங்கி அவர்களுது இறப்பில் மனம் பூரித்ததார்கள்.
 
நாளை இந்த மாணவர்களின் போராட்டம் தோற்றுபோனால் .....
அதை சந்தோசமாக கொண்டாட இன்னொரு கூட்டம் (தமிழர்கள் இடையே) தயாராக இருக்கிறது.
அது சுமந்திரன் கூட்டமாக கூட இருக்கலாம். 
 
முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழன் துரோகத்திற்கு கொடுத்த விலை.
எமது எதிரியை எதிர்த்து போராடும் சக்தியும் தியாக உணர்வும் குறிப்பிட தமிழ் இளைஞர்கள் இடையே தாரளாமாக இருந்தது. 
 
பார்பானின் குரங்கு தனத்தை இன்னமும் பாதி தமிழர்கள் புரியவில்லை.
சம்மந்தரை சுதந்திர தின விழாவிற்கு அனுப்பி சுதந்திர தினம் என்றால் என்ன என்று தெரியாத ஒருவரை 
தலைவராக கொண்டதுதான் தமிழ் இனம் என்று இத்தனைக்கு பிறகும் எம்மை அவமானபடுத்தியே வருகிறான் பார்ப்பான். 
நாங்கள் வலியின் உச்சிக்கு போனாலும் பார்ப்பான் பாவம் பார்க்க போவதில்லை. அவன் அரக்கனை விட கொடியவன் 
இந்தியாவில் எத்தனை சிறுவர்கள் வீட்டு வேலை எனும் பெயரில் நரக வலி அனுபவிக்கிறார்கள் பார்ப்பன் வீடில் என்று பலருக்கு தெரியாது.
அவனுடைய மனதை அங்கிருந்து புரிந்துகொள்ளலாம். 
 
இங்கு ஒரு கூட்டம் சம்மந்தர் ராஜதந்திரமாக சுதந்திர விழாவிற்கு போனாராம் என்று எழுதிவருகிறது. வாசித்து மெய் சிலிர்க்க வேண்டியதுதான்.
சம்மந்தருக்கு இனம் என்ன கேடு கெட்டாலும் பரவயில்லை தனக்கு பதவி இருந்தால் போதும் என்றுதான் கடந்த 40 வருடமாக வாழ்ந்து காட்டி வருகிறார். 
இன்னமும் அவரை நம்ப ஒரு கூட்டம் இருக்கிறது. 
 
இதய சுத்தியோடு தமிழனுக்காக யாரவது போராடினால்......
அவர்களை பார்த்து அனுதாபப்பட மட்டுமே முடியும்!
உள்ளிருக்கும் இரத்த அணுக்கள் தூண்டுதலால் எம்மால் முடிந்ததையும் செய்ய வேண்டி வருகிறது. 

தமிழ்மக்களை ஐ.நா ஏமாற்றிவிட்டது – யாழ். பேரணியில் மன்னார் ஆயர் உரை((அரசாங்கத்தின் ஆவணங்களின் அடிப்படையில் 8 மாதங்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் அழிக்கப்பட்டுள்ளனர்”)) FEB 24, 2015 | 12:21by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

Bishop-Rayappu-Joseph-300x200.jpgவிசாரணை அறிக்கையைப் பிற்போட்டுள்ளதன் மூலம், தமிழ் மக்களை ஐ.நா ஏமாற்றி விட்டதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று பல்கலைக்கழக சமூகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட நீதி கோரும் அமைதிப் பேரணியில், பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இது நீதியைக் கேட்கின்ற வைபவம். பிற்போடப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பது சட்டத்தின் அடிப்படைத் தத்துவமாக உள்ளது.

உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றுதான் நாம் ஐ.நாவை நாடினோம். அவர்கள் எங்களை கைவிட்டு விட்டதாகவும் ஏமாற்றி விட்டதாகவும் உணர்கிறோம்.

உள்ளக விசாரணை செய்ய 6 மாதம் போதாது. ஒரு ஆண்டு, ஒன்றரை ஆண்டுகள் ஆகலாம். அதற்கு மேலும் செல்லலாம். முழுமையாக செய்ய முடியாது. அடுத்த மார்ச் மாதம் என்று பிற்போட்டு அப்படியே காலம் கடத்தலாம்.

இந்த நாட்டில் உள்ளவர்கள் தான் குற்றங்களைச் செய்தவர்கள். குற்றம் செய்தவனை நீதிவானாக்குவது எப்படி?

குற்றம்சாட்டப்பட்ட நபரும் நீதிவானும் ஒருவராக இருக்க முடியாது. அதுவும் சட்டத்தின் நியதி தான். அதுதான் இங்கு நடக்கப் போகிறது.

பாரபட்சமற்ற விசாரணை எமக்கும் தேவை. உள்நாட்டு விசாரணை அனைத்துலக பிரதிநிதிகளை சேர்த்துக் கொண்டு செய்யப்படலாம். அதுவே உண்மையை கண்டறிய சிறந்த பொறிமுறையாக அமையும்.

அரசாங்கத்தின் ஆவணங்களின் அடிப்படையில் 8 மாதங்களில் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் அழிக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/24/news/3937

நீங்கள் மன்னாரிலேயே இருப்பதால்தான் இப்படி கூறுகிறீர்கள் ............
உலகில் ஏழைகளை எளியவர்களை அடித்து அடிமைபடுத்தவே ஐ.நா வை பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்.
ஆபிரிக்க நாடுகள் பல எந்த குற்றமும் அறியாது நாளும் நாளும் இறந்து கொண்டு இருக்கிறார்கள். 
 
ஐ நா வை நம்பியதுதான் நீங்கள் செய்யும் தப்பு.
 
இதுவரைக்கும் எல்லாம் புலிகளுக்கு எதிரானது என்று நம்பி...
விசில் அடித்துக்கொண்டு திரிந்தது ஒரு கூட்டம். 
அதுகும் இனி தெளிவடையும் அதிர்ஷடவசமாக ஆறாம் அறிவு ஏலேக்ட்ரோன்கள் நகர்வு பெற்று கொஞ்சம் என்றாலும் வேலை செய்தால். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.