Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் ஆயுத எழுத்து ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஆயுத எழுத்து ...

கனடாவில் ஆயுத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் March 14th 2015..இடம் BURROWS HALL Community Center 1081 Progress avenue Scarborough Ontario M1B 5Z6 நேரம் - 1.30PM TO 5PM    யாழ் கள உறவுகள் அனைவரையும்  வரவேற்கிறேன் .நன்றி

10351336_785098984877332_300118638488023

·

சாத்திரி நீங்களும் வருகின்றீர்களா?

நான் கண்டிப்பாக வர முயல்வேன்.. இன்ஷா அல்லாஹ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி நீங்களும் வருகின்றீர்களா?

நான் கண்டிப்பாக வர முயல்வேன்.. இன்ஷா அல்லாஹ்

வருவதுக்கான முயற்சியில் இருக்கிறேன் .முதலில் லீவு கிடைக்கவேண்டும் ..இரண்டாவது பயண சீட்டு விலை அதிகமாக உள்ளது .இரண்டும் சரி வந்தால் கனடாவில் கால் வைக்கலாம் ..

பி .கு ...டிக்கெட் போட்டுத் தரச்சொல்லி றோ விடம் கேட்டிருக்கிறேன் பாக்கலாம்

1528458_785266968193867_6227593127550881

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் 14 உங்களுடைய நூல் மார்ச் 15 மீராபாரதியின் நூல் இரண்டும் பிள்ளைகளின் மார்ச் விடுமுறைக்குள் வருகின்றன. பிள்ளைகளின் மார்ச் விடுமுறைக்கு எங்கும் செல்லாது இருந்தால் கண்டிப்பாக நூல் விமர்சன நிகழ்வுக்கு வருவேன் சாத்தர்.

Edited by வல்வை சகாறா

முடிந்தால் வாருங்கள் நானும் வர முயற்சி செய்கிறேன்

பி .கு ...டிக்கெட் போட்டுத் தரச்சொல்லி றோ விடம் கேட்டிருக்கிறேன் பாக்கலாம்

அண்மையில் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் திடீரென்று "இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினர் தமிழ் மக்களை கொன்று குவித்தனர் அதனால் புலிகளின் இந்திய இராணுவத்திற்கு எதிரான யுத்தம் மிகவும் நியாயம்" என்று ஒரு செய்தி வாசித்திருந்தேன். 

அடடா, திடீர் என்று என்ன நடந்தது உலகளவில் என்று நான் ஆராயும் போது, அது ஒரு காலத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரை எதிர்த்து தீரமுடன் போராடிய வீரன் ஆகிய சாத்திரி அவர்கள் இந்திய அமைதிகாக்கும் படையின் அதிகாரி ஒருவரையே தன் புத்தக வெளியீட்டுக்கு வரவழைத்து மேடையில் வைத்தே இந்திய படையினரின் அட்டூழியங்களை ஒப்புக் கொள்ள வைத்த விடயம் தான் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களின் மனசாட்சியை கதைக்க வைத்தது என்று அறிந்து கொண்டேன்

அந்தளவுக்கு, ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்தவர்களின் மனசாட்சியையே உலுப்பக்கூடிய அதி சிறந்த மானுடப் போராளி நீங்கள் கேவலம் றோவிடம் டிக்கெட் தொடர்பாக கேட்டது மிகவும் கவலையளிக்கின்றது. ஆகக் குறைந்தது CIA விடமாவது கேட்டு இருக்கலாம்.

நம்ம ஆக்களுக்கு தெரிந்து உளவு பிரிவு என்றால்  உலகத்திலேயே ..றோ .. அல்லது  இலங்கை புலனாய்வு பிரிவு (இலங்கை புலனாய்வு பிரிவின் ஆங்கிலம் தெரியாது ),மகிந்தா போனப்பிறகு அங்கை பவர் இல்லை  அடுத்த உலக புலனாய்வு ...றோ ...தான்  அதை தவிர வேறை எதுவும் தெரியாது அதுதான் அவர்களிடம் டிக்கெட் ....டிக்கெட் ..டிக்கெட்

..பி கு ..நீங்கள் எப்பவுமே உலகத் தரம் ..என்னால் அப்படி யோசிக்க முடியாது நான் எப்பவும் லோக்கல்

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீரா  புத்தகம் கேட்டிருந்தீர்கள்   ஆயுத எழுத்து நாவலை லண்டனில் இப்பொழுது பெற்றுக்கொள்ளலாம் .விலாசம் .
317 High Street North , Eastham , London , E12 6SL , phone number is 07817262980..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. உந்த இடத்திற்கு போக 2 மணித்தியாலம் எடுக்கும். எதுக்கும் அடுத்த கிழமை முயற்சி செய்கிறேன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி. உந்த இடத்திற்கு போக 2 மணித்தியாலம் எடுக்கும். எதுக்கும் அடுத்த கிழமை முயற்சி செய்கிறேன்

உங்களுக்கு தபால் மூலமும் அனுப்பி வைப்பார்கள் .தொடர்பு கொள்ளுங்கள் .

வருவதுக்கான முயற்சியில் இருக்கிறேன் .முதலில் லீவு கிடைக்கவேண்டும் ..இரண்டாவது பயண சீட்டு விலை அதிகமாக உள்ளது .இரண்டும் சரி வந்தால் கனடாவில் கால் வைக்கலாம் ..

பி .கு ...டிக்கெட் போட்டுத் தரச்சொல்லி றோ விடம் கேட்டிருக்கிறேன் பாக்கலாம்

1528458_785266968193867_6227593127550881

றோவுக்கு பணக் கஷ்டமாக இருந்தால் கே.பியிடம் கேட்டு பார்க்கலாம்   :D  :lol: 

அது சரி சாத்திரி அண்ணை ராஜேந்திர சோழனுக்கு கடைசி வரைக்கும் ஜப்பானிய பெண் கிடைக்கவேயில்லையா?  :D

நம்ம ஆக்களுக்கு தெரிந்து உளவு பிரிவு என்றால்  உலகத்திலேயே ..றோ .. அல்லது  இலங்கை புலனாய்வு பிரிவு (இலங்கை புலனாய்வு பிரிவின் ஆங்கிலம் தெரியாது ),மகிந்தா போனப்பிறகு அங்கை பவர் இல்லை  அடுத்த உலக புலனாய்வு ...றோ ...தான்  அதை தவிர வேறை எதுவும் தெரியாது அதுதான் அவர்களிடம் டிக்கெட் ....டிக்கெட் ..டிக்கெட்

..பி கு ..நீங்கள் எப்பவுமே உலகத் தரம் ..என்னால் அப்படி யோசிக்க முடியாது நான் எப்பவும் லோக்கல்

இன்னும் இரண்டு மேலதிகமாக தெரியும் சாத்திரி அண்ணை. 
ஒண்டு மொசாட் & மற்றது கே ஜி பி  :D

நம்ம ஆக்களுக்கு தெரிந்து உளவு பிரிவு என்றால்  உலகத்திலேயே ..றோ .. அல்லது  இலங்கை புலனாய்வு பிரிவு (இலங்கை புலனாய்வு பிரிவின் ஆங்கிலம் தெரியாது ),மகிந்தா போனப்பிறகு அங்கை பவர் இல்லை  அடுத்த உலக புலனாய்வு ...றோ ...தான்  அதை தவிர வேறை எதுவும் தெரியாது அதுதான் அவர்களிடம் டிக்கெட் ....டிக்கெட் ..டிக்கெட்

..பி கு ..நீங்கள் எப்பவுமே உலகத் தரம் ..என்னால் அப்படி யோசிக்க முடியாது நான் எப்பவும் லோக்கல்

நீங்கள் எப்பவும் லோக்கல்தான் சாத்திரி அண்ணை ஆனால் ராஜேந்திர சோழன் ஜப்பானிய பெண்தான் 
வேண்டும் என்று அடம் பிடிக்கிறாராமில்ல.   :D
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் உறவுகள் யாரேனும் சாத்துவின் நூல்விமர்சனத்திற்குப் போகிறீர்களா?

ஆயுத எழுத்திலும் நிறைய இடத்தில அண்ணன் சக்கை சியாம் நல்லா சக்கை அடைஞ்சிருக்கிறார் எண்டு புத்தகத்தை வாசிச்ச புண்ணியவான்கள் சொல்லினை. :D  :D  :D
நிஜமாலுமா?  :lol:  :icon_idea:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13824_10202638747329624_3169242494525452

10388636_10202638746209596_5334166169771

11021525_10202638750649707_1814417072961

11058764_10202638748849662_4291447898807

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒலி  ஒளிப்பதிவு கனடா..நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் பார்க்கவும்

https://www.youtube.com/playlist?list=PL-qG_O5awlE4No6tHOlaigevFI2_uwvnv

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி சாத்திரியார்
ஜேர்மனியில் எங்கேயும் கிடைக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்களுக்கு நன்றி சாத்திரியார்

ஜேர்மனியில் எங்கேயும் கிடைக்குமா?

யேர்மனியில் டோட்மண்டில்  மே மாதம் வெளியிடவுள்ளேன் அதற்கு முதல் புத்தகம் தேவையாயின் முகப்புதகத்தில் கோமகனோடு தொடர்பு கொள்ளவும் ..அல்லது ஜெர்மனியில் சபேசனோடு தொடர்பு கொள்ளுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் டோட்மண்டில்  மே மாதம் வெளியிடவுள்ளேன் அதற்கு முதல் புத்தகம் தேவையாயின் முகப்புதகத்தில் கோமகனோடு தொடர்பு கொள்ளவும் ..அல்லது ஜெர்மனியில் சபேசனோடு தொடர்பு கொள்ளுங்கள்

நன்றி சாத்திரியார்

சபேசனைக் கடையில் கண்டால் வேண்டிக்கொள்கின்றேன்

எனக்கு அழைப்பிதழ் வேண்டாம் :D

கட்டாயம் வருவேன்

ஆயுத எழுத்து  - சாத்திரி 
 
மூச்சு விடாமல் வாசித்து முடித்த நாவல்கள்  பட்டியலில் இதுவும் அடங்குகின்றது .
 
எம்மவர் நாவல் ,எமது விடுதலை போராட்டத்தை பற்றியது ,ஆசிரியர் விடுதலை புலிகளின்  இயக்கத்தில் இருந்தவர் ,எமது போராட்டத்தின் இதுவரை எவரும் எழுதாத ஆயுத விநியோகம் பற்றி இருக்கு, இவை எல்லாவற்றையும் விட பலர் எழுத விரும்பாத பக்கங்களையும் தொட்டு செல்கின்றது, இவற்றை விட வேறு என்ன காரணம் வேண்டும் மூச்சு விடாமல் வாசிப்பதற்கு ,
 
நாவலை வாசிக்கும் போது  சற்றும் அன்னியமில்லாமல் எமது மண்ணில் சயிக்கிளில் திரிந்தது போல ஒரு  உணர்வு வந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது கல்லு முள்ளு குத்தவும் தவறவில்லை . 
 
ஆசியரின் தற்கால அரசியலை வைத்து நாவலை வாசிக்காமலோ சிலர் எதிர்க்க  தொடங்கிவிட்டார்கள் .வெளியீட்டிலும் தடை என்று  நாவல் இலவச விளம்பரத்துடன் வெளிவந்துவிட்டது , இப்போ இலக்கிய உலகில் இது வெகு சகஜம் .
83 ஆண்டு இனக்கலவரத்துடன் விடுதலை போராட்டத்தில் இணைந்துகொண்ட பல்லாயிரம் கணக்கான போராளிகளில் ஒருவரின் கதை . இதுவரை வெவ்வேறு இயக்கங்களில் இருந்த  போராளிகள் எழுதிய  பத்து நாவல்கள் வரை படித்துவிட்டேன்  .எல்லாவற்றிலும் பொதுப்படையான சில விடயங்கள்  இருந்தது .
 
தமது செயற்பாட்டை  , தமது அமைப்பை நியாயப்படுத்துவது .
 
தான் நேரடியாக சம்பந்தப்பட்ட விடயங்களை ஓரளவு நேர்மையாகவும்  மற்றவர்கள் சொல்லி அறிந்த  விடயங்கள் என்று சிலவற்றை  பிழையான அல்லது மிகைப்படுத்திய தரவுகளுடன்  எழுதுவது ,
 
சுய தம்பட்டம்  , தனது கதையை எழுதும் போது அது தவிர்க்க முடியாததோ அல்லது வாசிப்பவர்களுக்கு தன்னால் முடியாததை அவர் செய்ததால் அப்படிப்படுகின்றதோ தெரியாது .
 
நாவலுக்குள் ,
 
அப்பாவிடம் பேச்சு ,அம்மாவின் அரவணைப்பு, நண்பர்களுடன் உல்லாசம் ,வாலிப காதல் என்று இருந்த ஒரு சாதாரண  இளைஞன் "அவனின் " வாழ்க்கை , விடுதலை பயிற்சி ஆயுதம் என்று திசை மாற்றிய அரசியலில் தொடங்குகின்றது .வேறு சில இயக்கங்களுக்கு முதலில் போக முயற்சித்து பின்னர் ரிவோல்வரின் பரிசம் புலிகளில் இணையவைக்கின்றது .
பீட்டரின் நட்பு  அவனின் காதல்  அதானல் தண்டனை பின் தற்கொலை  ,கார்க்கார சிங்கராசாவின் மகனின் கொலை ,செட்டியார் மகளின் காதல் இப்படி பல சம்பவங்கள் . எமது போராட்டத்தில் ஆயுதத்தை கண்டதும் எம்மவருக்கு  பிடித்த முதல் வியாதியின் விளைவுகள்  இவை  ஆனால் இவற்றை விடுதலைக்கான ஒரு விதையாக அந்த நாட்களில் எண்ணிய அறியாமை .
 
மாற்று இயக்க முரண்பாடுகள் முற்றி கொலைவெறி ஆட்டத்தில் முடிந்த மாற்று இயக்க தடைகள் .அதையும் பெருமையாக நினைத்த அரசியல் வறுமை. மயூரனின் சினைப்பர் ,டெலோ தலைவர் சிறி சுரேசின் M16 பறிக்க பாய்ந்தது ,டோச்சனின் சூடு என்று அவரது இயக்க பாணியிலேயே புல்லரிக்க வைக்கின்றார் .
 
இந்தியன் ஆமியின் வருகை . அவர்களின் பேயாட்டம் ,மக்கள் அவலம் . மக்கள் பட்ட இன்னல்கள். ரவிக்கு கிரீசு போல எமக்கும் ரணத்தை உண்டாக்குகின்றது .மாற்று இயக்கங்கள் இலங்கை அரசுடன் சேர்ந்து செய்த துரோகங்கள் அதில் அவன் பட்ட கஷ்டங்களும் அடக்கம் .
 
தாக்குதலில் ஏற்பட்ட காயம் அவனை வெளிநாடு செல்ல வைக்கின்றது .நாட்டில் நடந்த போராட்டத்தை பற்றியே அதிகம் வாசித்தவர்களுக்கு அவனின் பதிவுகள் பல புது விடயங்களை சொல்லி நிற்கின்றது. உட்கொலை , தூள் கடத்தல் ,மது ,மாது  போன்ற விடயங்கள் இயக்க கட்டுப்பாடு, தூய்மை என்று வளர்த்துவைத்த இயக்கத்தின் பிம்பம்  அடிபட்டு போக  இங்குதான் பலர் வெறுப்பிற்கு "அவன்" உள்ளாகின்றான்  .வெளியில் இருந்து இயக்க வேலை செய்தவர்களுக்கு இவை ஒன்றும் புதியவிடயமல்ல. திரைக்கு பின்னால் நடந்த விடயங்களை ஏன் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் என்பதும் கேள்விக்குரியதுதான் . 
 
நாவல் பின்பு அவன் களம் மாற தலைநகரில் நடந்த சில தாக்குதல்கள் , புலிகளின்  அளப்பரிய அர்ப்பணிப்புகள் ,தற்கொலை தாக்குதல்கள் ,வீரசாகங்கள் ,துல்லியமான புலனாய்வுகள் ,ஆயுத பரிமாற்றங்கள்  என்பனவற்றையும் கண்முன்னே படமாக கொண்டுவருகின்றது .உதயண்ணை காற்று புகாத இடங்களில் Mr invisible ஆக  புகுந்து விளையாடுகின்றார் .
 
உலகமெல்லாம் சுற்றி இவ்வளவு சாகசங்களும் நடத்திக்கொண்டிருந்த "அவன் " பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது இனி கட்டமைப்பை கலைத்துவிட்டு எல்லோரும் ஏதாவது நாடுகளில சொந்த வாழ்க்கைக்கு போகலாம் என்ற வசனத்துடன் கலையவேண்டிய அவலம் பெரும் கொடுமைதான் .நாட்டில் இருந்தவர்களுக்கு இந்த நிலை வரவில்லை .
இது வரை வாசித்த மற்ற இயக்க  நாவல்களில் இருந்த  அரசியல் சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல்  ஆயுத போராட்டத்தில் இருக்கும் ஒரு போராளி எப்படி தலைமையின் கட்டளையின் கீழ் விசுவாசமாக செயற்படுகின்றான் என்பதே இந்த நாவல் .
 
முரண்பாடு,
 
மாற்று இயக்க தடைகள் ,தாக்குதல் பற்றிய சில விடயங்கள் இதுவரை நான் அறிந்ததில் இருந்து பெரிதும் மாறுபட்டு இருந்தது .டெலோ அழிப்பு ,ஈ பி ஆர் எல் எப் புலிகளின் முகாமை தாக்கியது ,குறிப்பாக மட்டக்களப்பில் புளொட் வாசு கண்ணன் பவானந்தன் ஆகியோரை கருணா அழித்தது. இதில் சம்பந்தப்பட் ஒருவர் எனது நண்பர் அவர் சொல்வது முற்றிலும் வேறு கதை . இது அநேகமாக நிராஜ் டேவிட்  கட்டி விடும்  கதைகளில் ஒன்றாக இருக்கலாம் .
 
எமது விடுதலை போரட்டம் வெறுமன எமது நாட்டில் நடந்த  அரசியல், ஆயுதபோராட்டம் அல்ல தமிழ்நாட்டில் ,இந்தியாவில்,சர்வதேசத்தில் பல பரிணாமங்களில் பல மட்டங்களில் நடந்தது  .நாட்டில் நடந்த ஆயுத போராட்டத்தை பற்றி மட்டுமே எழுதிவந்தவர்கள் மத்தியில் சாத்திரியின் ஆயுத எழுத்து  புதிய பல விடயங்களை  சொல்லுவதால் முக்கியம் பெறுகின்றது .
 
எமது விடுதலை போராட்டம் பற்றி பலர்  அறியாத பக்கங்களை  அதில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதவேண்டும்  என்பதே பலர் ஆதங்கம் அந்த ரீதியில் சாத்திரியின் ஆயுத எழுத்து ஒரு முக்கிய படைப்புத்தான்.

Edited by arjun

எமது விடுதலை போராட்டம் பற்றி பலர்  அறியாத பக்கங்களை  அதில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் எழுதவேண்டும்  என்பதே ஆதங்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்   ஆயுத எழுத்து மீதான உங்கள் பார்வைக்கு நன்றி .நிகழ்வு படங்களில்  உங்களை காணவில்லை .

அர்ஜுன்   ஆயுத எழுத்து மீதான உங்கள் பார்வைக்கு நன்றி .நிகழ்வு படங்களில்  உங்களை காணவில்லை .

நிகழ்வை ஒருங்கமைக்க என்னை கேட்டிருந்தார்கள் , ஓம் என்றும் சொல்லிவைத்தேன் தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது .

அதுதான் ஒரு பிரதிநிதியை  :o  அனுப்பி வைத்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் சாஸ்திரி அண்ணா,
என்னால் போகமுடியாமல் போனதற்கு மன்னிக்கவும்.
புத்தகத்தை நண்பர் மீரா பாரதியிடம் பெற்றுக்கொள்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.