Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு

Featured Replies

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான ஆறு நிபந்தனைகள் விதிப்பதற்கு அரசாங்கம்  தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் பின்வரும் நிபந்தனைகளின்  அடிப்படையிலேயே இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது.

 

1.     தொழில் தகமைகள் அல்லது கல்வித் தகைமைகள் வைத்திருத்தல்.  

 

2.    இலங்கையில் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான சொத்துகளை வைத்திருத்தல்.  

 

3.     இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கியொன்றில் 2.5 மில்லியனுக்கு மேற்பட்ட பணத்தை 3 ஆண்டுகள் நிலையான வைப்பாக பேணுதல்.

 

4.     மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட ஏதாவது ஓர் வங்கியில் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் 25, 000 அமெரிக்க டொலர்களை வைப்பாக பேணுதல்.  

 

5.     25, 000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பிணைப்பத்திரங்களை வைத்திருத்தல்.  

 

6.     55 வயதை பூர்த்தி செய்திருத்தல்

 

ஆகிய தகுதிகளில் ஒன்றையேனும் கொண்டிருத்தல் வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.  இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க அமைச்சரவையில் அனுமதி  பெற்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. -

 

http://thinakkural.lk/article.php?local/jauvtw3ghp1498ced556cd9f11245xxaxu9c0c8315cfbe0744a3baf0tpbyp#sthash.AbbjUcMA.dpuf

Edited by Athavan CH

  • Replies 157
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஒன்பது நாடுகளின் பிரஜைகள் இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள அனுமதி

 

 

dual%20citizenship_CI.jpg




ஒன்பது நாடுகளின் பிரஜைகள் இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


இரட்டைக் குடியுரிமை வழங்கும் நிர்வாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.புதிய அரசாங்கம் இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடைமுறையை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.முதல் கட்டமாக ஒன்து நாடுகளின் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.


அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுககளின் பிரஜைகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட உள்ளது.


இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்பும் பிரதம குடியிருப்பாளர் 250,000 ரூபாவினை செலுத்த வேண்டும், அவரது மனைவி 50000 ரூபாவினை செலுத்த வேண்டும், 22 வயதுக்கும் குறைந்த திருமணமாகாத பிள்ளைகள் 50000 ரூபா செலுத்தி இரட்டைக் குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும்.


இரட்டைக் குடியுரிமையை பெற்றுக் கொள்வது தொடர்பில் சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியது அவசியமானது.


இதேவேளை, இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் 2000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்ததாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/117934/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கட்.. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கட்.. :D:lol:

 

அரசே சொல்லுது

கனடாக்காரர்கள் எல்லோரும் புலிவால்கள் என்று.... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவமே.

  • கருத்துக்கள உறவுகள்

கனடா கட்.. :D:lol:

 

சிறீலங்காவுக்கு அதிகம் நிதி வழங்கிய நாடுகளில் ஒன்றான.. நோர்வேயும் கட்.

 

ஜேர்மனி கட்.

 

அது சரி.. அசைலம் அடிக்க.. சிறீலங்கா பற்றி அவதூறு சொல்லி அதற்கு அபகீர்த்தி ஏற்படுத்தினவைக்கும்.. இரட்டைப் பிரஜா உரிமை கொடுப்பினமோ..?! இல்ல.. அசைலம் எடுக்கும் வரை சிங்களவன் கூடாது. எடுத்த உடன நல்லவன் என்று சொல்லிற நிறமாறும் தமிழர்களுக்கு வசதியாகக் கேட்கிறம். :lol::D

சிறீலங்காவுக்கு அதிகம் நிதி வழங்கிய நாடுகளில் ஒன்றான.. நோர்வேயும் கட்.

 

 

அதுசரி 
 
52" தொலைக்காட்சிப் பெட்டியையும் வானொலி உபகரணங்களையும் மிகுதியையும் எனக்கு தந்ததிற்காவவாவது நோர்வையை விட்டு வைத்திருக்கலாம். 

மேற்கு நாட்டு பாஸ்போர்டுடன் இருக்கும் எம் தமிழ் மக்கள்  தத்தமது நாட்டு பாஸ்போர்டுடன் தாயக மக்களுக்கு தேவையான அடிப்படை  நிதி உதவிகளை செய்யலாம். அந்த இத்துபோன லங்கா  பாஸ் போர்டை எடுக்க ஏன் வீண் செலவு செய்வான். அந்த பணத்தை வேறு  பிரயோசனமாக பயன் படுத்தலாம்.  தாயக மக்களுக்கு நிதி மற்றும்  தொழில் நுட்ப உதவிகளே  உதவிகளே முக்கியம். அதனை ஒவ்வொருவரும் தமக்கு உரிய வகையில் செய்ய முயற்சி எடுப்பதே மிக முக்கியமானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தமிழர்களுக்கு மட்டும் இல்லையே. சிங்களவர்களுக்கும் பொருந்துமே.

 

இரட்டை பிரஜா உரிமையால் உண்மையில் பயன் எல்லாருக்கும் உள்ளதா? இரட்டை பிரஜா உரிமையின் பயன்கள் எவை?

 

ஶ்ரீ லங்கா இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள தகமைகள் உள்ள ஒருவர் ஏன் ஶ்ரீ லங்காவுக்கு முக்கித்தக்கி போகவேண்டும்? வேறோர் நாட்டில் இரட்டைப்பிரஜாவுரிமையை பெறலாமே? உதாரணமாய் பிரிட்டன் + அமெரிக்கா, கனடா + அமெரிக்கா, கனடா + அவுஸ்திரேலியா.

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் தமிழர்களுக்கு மட்டும் இல்லையே. சிங்களவர்களுக்கும் பொருந்துமே.

 

இரட்டை பிரஜா உரிமையால் உண்மையில் பயன் எல்லாருக்கும் உள்ளதா? இரட்டை பிரஜா உரிமையின் பயன்கள் எவை?

 

ஶ்ரீ லங்கா இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள தகமைகள் உள்ள ஒருவர் ஏன் ஶ்ரீ லங்காவுக்கு முக்கித்தக்கி போகவேண்டும்? வேறோர் நாட்டில் இரட்டைப்பிரஜாவுரிமையை பெறலாமே? உதாரணமாய் பிரிட்டன் + அமெரிக்கா, கனடா + அமெரிக்கா, கனடா + அவுஸ்திரேலியா.

ஆம். சிங்களவர்களுக்கும்தான்.

 

இரட்டைப் பிரஜாவுரிமை அவரவர் தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்தது. எனக்கு தேவை உள்ளது. எடுத்து வைத்திருக்கிறேன்.

 

புதிய அரசால் மத்திய வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்ட அர்ஜூனா மகேந்திரனுக்கு, அந்த பணியை செய்ய இரட்டை பிரஜாவுரிமை தேவை. அவர் விண்ணப்பித்துவிட்டு இருக்கிறார் (அவரிடம் சிங்கப்பூர் பிரஜாவுரிமை உள்ளது).  

 

தனிப்பட்ட நபர்களில் தேவைகளைப் பொறுத்தது இது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சொத்து அல்ல்து பணம் ஏன் கேட்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சொத்து அல்ல்து பணம் ஏன் கேட்கிறார்கள்?

 

ஒரு சட்டமூலத்தைக் கொண்டு வந்து அமுக்கிப் போடத்தான். :)

 

சொறிலங்காவின் சன நாய் அகத்தை நம்பி எதுவும் செய்யக் கூடாது. அங்கு இருப்பது சன நாயமே அல்ல. சிங்களப் பேரினவாத பெருந்தேசிய.. அரசியல்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கிழவி,

1) அசையா சொத்து வைத்திருத்தல்

2) விசா எடுக்க தேவையில்லை

3) அரசியலில் ஈடுபடும் உரிமை(இனிமேல் எம்பி ஆக முடியாதாம்)

4) சொகுசு ஹோட்டல்களில் தங்கும் போது இலங்கையர்கான விலைக்கழிவு கிடைக்கும்

5) சுங்க வரிச் சலுகைகள்

6) வியாபாரம்/கம்பனி ஸ்தாபிக்கும் உரிமை

இப்படி பல அனுகூலங்கள் உண்டு.

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே என்போர்க்கு ஒரு நல்ல விடயம்.

சொறிலங்கா ஒரு பிச்சைகார நாடு என பழித்தபடி வெளிநாடுகளில் பிச்சை எடுப்போர்க்குத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாய் பிள்ளைக்கு அடிச்சாலே உள்ள தூக்கி வைக்கிற உலகம்.. தாய் நாடு சொந்த மக்களை வகைதொகையில்லாமல் கொல்ல.. துன்புறுத்த.. வேடிக்கை பார்ப்பதும்.. அதனை இன்னும் சில பேர்.. பொன்னாடு என்று புகழ்வதும்.. சொறிலங்காவுக்கு காலம் அப்படி இருக்குது.  :)

 

இதையே தமிழர்கள் அசைலம் அடிக்கேக்க சொல்லுவினமோ.. சொறிலங்கா என்பது.. எங்களுக்கு பொன்னாடு.. அசைலம் அப்பிளிகேசனை கிழிச்சுப் போட்டிட்டு... பொன்னாட்டுக்கே திருப்பி அனுப்பி வை என்று.  :lol:  :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இரட்டை பிரஜா உரிமையின் பிரதிகூலங்கள்.

1) இலங்கையில் கைது செய்தால் - புல நாட்டு தூதரக உதவி சொல்லிக் கொள்ளும் படி இராது.

2) புலத்தில் சில அரச வேலைகள் கிடையாது

3) நான் தமிழ் தேசியவாதி என்று பீத்த முடியாது

அசைலம் - நினைச்சேன் சிரித்தேன் :)

எப்போதும் தம் இனத்தை பழித்து எள்ளி நகையாடியும், வேற்று மொழிக்காரன் என்றால் மரியாதையுடன் அவர்களுக்கு சலாம் போட்டே வாழவேண்டும் என்றும் பாடம் எடுப்பவர்கள் இப்போது  பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே என்று சந்தர்ப்பத்துக்கு தகுந்தாற்போல பாட்டு பாடுகிறார்கள்.

 

 

 ஆனால் மேற்கு நாட்டு  பாஸ்போர்டை தூக்கி வீசமாட்டார்கள். ஏனென்றால் பெற்ற தாய் பிறந்த பொன்னாடு  நாடு ஒரு வேளே கஷ்டபட்டால் மீண்டும் ஓடி வந்து வசதியாய் தாம் வாழ்வதற்கு.  அதையும் வைத்து கொண்டு பாடம் நடத்துகிறார்கள். அதற்குள் பிறந்த பொன்நாடு என்று சென்றிமென்ற் வேற . யாரை ஏமாற்ற இந்த வேஷம் போடுகிறார்கள்.

 


இரட்டை பிரஜா உரிமையின் பிரதிகூலங்கள்.

1) இலங்கையில் கைது செய்தால் - புல நாட்டு தூதரக உதவி சொல்லிக் கொள்ளும் படி இராது.
2) புலத்தில் சில அரச வேலைகள் கிடையாது
3) நான் தமிழ் தேசியவாதி என்று பீத்த முடியாது

அசைலம் - நினைச்சேன் சிரித்தேன் :)

 

ஆனால் பிறந்த பொன்நாடு என்று தேசியம் பேசி பீத்தலாம். யாரையும் ஏமாற்றலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 யாரை ஏமாற்ற இந்த வேஷம் போடுகிறார்கள்.

 

அவர்கள்.. மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைச்சு கொண்டு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு.. படு சுழியர்கள் என்ற நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்.. உலகமே அறியும் இவர்கள்.. மு மு க்கள் என்று.  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தக் கட்ட அரசியலுக்குக் கடன் பிச்சைய நம்பி காலத்தை ஓட்டும் நாடு சொறிலங்கா அவையின் 
இரட்டைப் பிரஜாவுரிமைக்கு 6 நிபந்தனையாம் கேட்க்க சிரிப்பாய் இருக்கு . மோடி வரும்போது 
கொழும்பு துறைமுக நகரின் பணிகளை நிறுத்துவதும் இன்று 
சீனா பயணம் என்றவுடன் துறைமுக வேலைகளை மீண்டும் ஆரம்பித்து வாலாட்டும் நாய்க்கு ஒப்பானஅரசு.

சீ சீ இந்த பழம் புளிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் இதை எடுக்க நாயாய் பேயாய் அலையிறார். நான் நினைக்கிறேன் வேறொரு நாட்டு குடியுரிமையை பெற்றதால் இலங்கை குடியுரிமையை இழந்த ஒருவருக்கு இந்த நிபந்தனைகள் இல்லை என்று.

"But the applicants have to be from any of the nine countries, USA, Canada, Australia, New Zealand, UK, France, Sweden, Switzerland and Italy to apply for a dual citizenship."

- See more at: http://www.dailymirror.lk/67315/immigration-dept-receives-10-dual-citizenship-applications#sthash.2vFogiR3.dpuf

Edited by MEERA

எனக்கு தெரிந்த ஒருவர் இதை எடுக்க நாயாய் பேயாய் அலையிறார். நான் நினைக்கிறேன் வேறொரு நாட்டு குடியுரிமையை பெற்றதால் இலங்கை குடியுரிமையை இழந்த ஒருவருக்கு இந்த நிபந்தனைகள் இல்லை என்று.

"But the applicants have to be from any of the nine countries, USA, Canada, Australia, New Zealand, UK, France, Sweden, Switzerland and Italy to apply for a dual citizenship."

- See more at: http://www.dailymirror.lk/67315/immigration-dept-receives-10-dual-citizenship-applications#sthash.2vFogiR3.dpuf

அந்த பட்டியலில் உள்ள நாடுகளில் வசிக்கும் முன்னால் இலங்கை பிரசைகள் விண்ணப்பிக்க முடியும்.

இருந்தாலும் ஏதாவது ஒரு தகமை இருத்தல் வேண்டும். அல்லது பணம் வைப்பில் இடவேண்டும்.

இதுகள் இல்லாமல் இலங்கைக்கு திரும்பி தங்கள் குடியுரிமையை தொடரமுடியும். ஆனால் பிறனாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டி வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் நீங்கள் கூறுவது சரி. அப்ப நம்ம ஆளு பணத்தை NRFC இல் வைப்பிலிட்டு வருச கணக்கில் காத்திருக்க வேண்டும்.

ஓம் நீங்கள் கூறுவது சரி. அப்ப நம்ம ஆளு பணத்தை NRFC இல் வைப்பிலிட்டு வருச கணக்கில் காத்திருக்க வேண்டும்.

 

வளியிலாதவகளை வேண்டாம் என்று ஒதுக்குகிறார்கள். 

 

எதுக்கு இன்னொரு வாயும் வயிறும் என்று யோசிக்கிறார்கள் போல உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று வருடத்துக்கு முன்னர் தான் அங்கிருந்த சொத்துகளை வித்தவர். பாவம் டிப்ளோமா படிக்கவும் முடியாது.

பணத்தையும் வைப்பிலிட்டு ஒரு வருடத்தின் பின்னர் தான் விண்ணப்பிக்க முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.