Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வரும் விமானத்துறையில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர்கள்!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களை காமடி பண்ண வேண்டாம் என பொருள்படவே எழுதினேன்.

நீங்க சொன்னா சரிதானுங்க... பலாலியில் வேலை கிடைக்காது என்பதை முன்கூட்டியே ஊகித்து படிக்காமல் விட்டுவிடுவதுதான் சரி. அதையும் மீறி படித்தால்... ஒரே காமெடிதான் போங்க.. ஹா..ஹா.. 

Edited by sabesan36

  • Replies 124
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹை.. கிருஸ்துவத்துக்கு மதமாற்றம்! 8 மணியாகுது... பொறுங்கோ ஒருக்கா மருதடிக்கு ஓடிப் போட்டு வந்து மீதியை படிக்கிறேன்.. மருதடி பிள்ளையாருக்கு நாளைக்கு கொடியேற்றம். அந்தோனியார் கோவில் காம்பவுண்டுக்கு வெளியேயும் (கணபதிப்பிள்ளை கடைக்கு முன்னால்) ஒரு தண்ணீர் பந்தல் இருக்கு! வாங்க...  மோர் சாப்பிடலாம். சூட்டுக்கு நல்லது.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

ஹியுமேடிக்கா நிறுவனத்தினரையும், அவர்களது பணிகளையும் தெரியும். சுனாமி தாக்காகிய பின்னர் அநேக மீனவர்களுக்கு இலவசமாக படகுகளைக் கொடுத்திருந்தார்கள். இப்போதும் பருத்தித் துறையில் இருந்து தொண்டமனாறு கடற்கரைகளில் இந்த humedica படகுகளைக் காணலாம். இவர்களது சர்வதேச பாடசாலைக்கும் போனமுறை இலங்கையில் நின்றபோது போயிருக்கிறேன், நல்ல முயற்சி. ராஜசூரியர் அவர்களையும் தெரியும். இவர்கள் சிறுவர்களுக்கான ஒரு அநாதை இல்லத்தையும் நன்கு நடத்தி வந்தார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹியுமேடிக்கா நிறுவனத்தினரையும், அவர்களது பணிகளையும் தெரியும். சுனாமி தாக்காகிய பின்னர் அநேக மீனவர்களுக்கு இலவசமாக படகுகளைக் கொடுத்திருந்தார்கள். இப்போதும் பருத்தித் துறையில் இருந்து தொண்டமனாறு கடற்கரைகளில் இந்த humedica படகுகளைக் காணலாம். இவர்களது சர்வதேச பாடசாலைக்கும் போனமுறை இலங்கையில் நின்றபோது போயிருக்கிறேன், நல்ல முயற்சி. ராஜசூரியர் அவர்களையும் தெரியும். இவர்கள் சிறுவர்களுக்கான ஒரு அநாதை இல்லத்தையும் நன்கு நடத்தி வந்தார்கள்.

அத்துடன், தீவுப்பகுதியில் இருந்து அவசர மருத்துவ உதவிக்கு யாழ்ப்பாணம் வர ஆம்பியூலன்ஸ் படகு சேவை நடத்தும் ஒரே நிறுவனமும் இதுதான். பாம்புக்கடி போன்ற சம்பவங்களுக்கு உடனடியாக யாழ். பெரியாசுபத்திரிக்கு கொண்டுவர வேண்டும். அதை செய்வது இந்த ‘மதமாற்றல்’ நிறுவனம் என அறியப்பட்ட நிறுவனம்தான். 

 

ஹியூமடிக்காவில் இருந்து விடுதலை பெற்று இதையும் செய்துதர ‘கருத்தாளர்களுக்கு’ யாழ் மக்கள் வெயிட்டிங்.

  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன், தீவுப்பகுதியில் இருந்து அவசர மருத்துவ உதவிக்கு யாழ்ப்பாணம் வர ஆம்பியூலன்ஸ் படகு சேவை நடத்தும் ஒரே நிறுவனமும் இதுதான். பாம்புக்கடி போன்ற சம்பவங்களுக்கு உடனடியாக யாழ். பெரியாசுபத்திரிக்கு கொண்டுவர வேண்டும். அதை செய்வது இந்த ‘மதமாற்றல்’ நிறுவனம் என அறியப்பட்ட நிறுவனம்தான்.

ஹியூமடிக்காவில் இருந்து விடுதலை பெற்று இதையும் செய்துதர ‘கருத்தாளர்களுக்கு’ யாழ் மக்கள் வெயிட்டிங்.

தெரியும் :) அத்துடன் இலவசமாக குடிநீர் விநியோகமும் செய்து வந்தார்கள் என நினைக்கிறேன். (humedica வின் tractor bowser களைக் கண்டிருக்கிறேன்) வாயால் வடை சுடுபவர்களை கருத்தில் எடுக்காமல் விட்டு காண நாட்களாகி விட்டது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரியும் :) அத்துடன் இலவசமாக குடிநீர் விநியோகமும் செய்து வந்தார்கள் என நினைக்கிறேன். (humedica வின் tractor bowser களைக் கண்டிருக்கிறேன்) வாயால் வடை சுடுபவர்களை கருத்தில் எடுக்காமல் விட்டு காண நாட்களாகி விட்டது...

ஆம். யுத்த காலத்தில் இலவச மருத்துவ உதவி மற்றும் மருந்துகள் கொடுத்த நிறுவனம். நமக்கு வாயில் சனி. அதையும் தாண்டி உதவிகள் வரும்... 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே படித்து புரிந்து கொள்ளவும்-

இங்கு ‘மதம் மாற்றும்’ ஜேர்மன் நிறுவனம் என்று கூறப்படும் நிறுவனத்தின் இணையதள லிங்க்-

http://www.humedica.org/index_eng.html

இந்த படிப்பு பற்றிய முழுமையான விபரத்துக்கான IATA லிங்க்-

https://www.iata.org/training/courses/Documents/apt-ops-2nd-toc.pdf

“இந்து மத கட்சி என அறியப்பட்ட பா.ஜ.க. தலைமையிலான இந்திய அரசும், மானிப்பாயில் மதமாற்றம் செய்வதாக கூறப்படும் கிருஸ்துவ பள்ளியும் இணைந்து வழங்கும் கூட்டுச் சதி” லாஜிக் சூப்பர்!

அதுவும் சரிதான். நாளைக்கே பலாலி விமான நிலையம் இயங்க தொடங்கினால், வேலை செய்ய கொழும்பிலிருந்து ஆட்களை கொண்டு வரலாம் அல்லவா?

இதை வாசித்தனீங்களா? 3 பக்கங்களையும் ஆறுதலாக வாசியுங்கள்

Edited by MEERA

Sorry ஜீவன் சிவா.. நான் பாதை மாற்றவில்லை.. ஆனால், மாறிய பாதையில் பயணம் செய்தவர்களில் நானும் ஒருவன். Sorry.

 

இல்லை சபேசன்36 இதற்கெல்லாம் sorry சொல்ல வேண்டியதில்லை. இந்த  நிறுவனம் எமது மக்களிற்கு எவ்வளவோ செய்கின்றது. அதற்கான திரியில் மதமாற்றம் எனும் பிரச்சைனையில் தொடங்கி இப்போது தனிப்பட்ட ஒரு மனிதனின் படிப்பு தராதரத்தில் வந்து நிற்கின்றது. அந்த கடுப்பில் பதியப்பட்டதுதான் முருங்கை மரமும் வேதாளம் பதிவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்னையில்லை.. ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை போல சுமாராக தெரிந்தவர்கள் சுமாரான பயிற்சி கொடுக்கிறார்கள். மேதாவிகள் இனித்தான் வரப் போகிறார்கள்...  கம்ப்யூட்டரை Log Off பண்ணிவிட்டு. அதுவரை பொறுத்திருங்கள் மக்களே! 


இதை வாசித்தனீங்களா? 3 பக்கங்களையும் ஆறுதலாக வாசியுங்கள்

பிரச்னையில்லை.. ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை போல சுமாராக தெரிந்தவர்கள் சுமாரான பயிற்சி கொடுக்கிறார்கள். மேதாவிகள் இனித்தான் வரப் போகிறார்கள்...  கம்ப்யூட்டரை Log Off பண்ணிவிட்டு. அதுவரை பொறுத்திருங்கள் மக்களே! 

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சொல்லுவார்கள்.. "வெற்றிடத்தை காற்று நிரப்பும்." என்று.. சில நேரங்களில் அவை hot air ஆக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிடம் வரமுன்பு நாம் போயிங் ஏர்பஸ் எல்லாம் எப்படி ஓட்டுவது என்பதை கட்டாயமாய் பிடித்து கொண்டுபோய் கற்றுத்தந்தோம் என்பதை நினைவில் கொள்ளவும் மக்களே.

Hot air is always better than fart :)

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் மட்டுமில்லை ஊரிலும் நாள் பள்ளிக்கு போகவில்லை. எனக்கு எழுத படிக்கவே தெரியாது. நான் ஒரு கைநாட்டு.

சரி இப்ப சொல்லுங்க உங்க ஸ்கொலசிப்பின் பெயர்தான் என்ன ? :)

 

கோசான்!

நீங்கள் உங்கள் பெறு பேறுகளை காட்டி அமெரிக்கா பிரித்தானியா கனடா வில் உள்ள பல்கலை கழகங்களுக்கு

அனுமதிக்கு பதியும்போது.

அவர்கள் உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுகொண்டால்....

அந்த யுனிகளுடன் பெரிய நிறுவனங்கள் இஸ்கோலர் சிப் ப்ரோக்க்ராம் வைத்திருப்பார்கள்

அந்த பட்டியலை உங்களுக்கு அனுப்புவார்கள்.

மெடிக்கல் துறை

எங்கினியரின் போன்றவற்றுக்கு வேறு வேறு கொன்பனிகள் இஸ்கோலர் ஷிப் கொடுக்கும்

(பிரித்தானியாவில் மெடிக்கல் மாணவர்களுக்கு கோவிடன்ட் COVIDENT கம்பனி நிறைய கொடுப்பார்கள்)

நீங்கள் அவர்களுக்கு உங்களை பற்றி விரிவாக ஒரு பரிந்துரை கடிதம் எழுதி விண்ணபிக்க வேண்டும்

அந்த கடிதத்தை பொறுத்தும் உங்கள் பெறு பேறுகளை பொறுத்தும் அவர்கள் தெரிவு செய்வார்கள்.

என்னுடைய ஒன்றைவிட்ட சகோதரி ஒருவர் லண்டனில் அப்படி படிக்கிறார்

ஒரு செலவும் இல்லை. கொழும்பில் இருந்து வரும்போதே இஸ்கோலர் ஷிப்இல் தான் வந்தார்.

வரு முன்பு பாரிய செலவு வைப்பார் என்று எண்ணி இருந்தான்

இப்படி கிடைத்தது பெருத்த அதிர்ஷ்டம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைத்தான் சொல்லுவார்கள்.. "வெற்றிடத்தை காற்று நிரப்பும்." என்று.. சில நேரங்களில் அவை hot air ஆக இருக்கும்.

ஆனால், வெற்றிடத்துக்கு real hot air வரும்போது, காற்று புஸ் என்று போய்விடும்... எப்பண்ணே வாறீங்க? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது எல்லாம் தெரிந்த விடயங்கள்தான் மருது.

இங்கே அதுவல்ல கேள்வி. உங்கள் சொந்தகாரர் இப்படி ஒரு bursary/sponsorship இல் வந்தார் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. :)

நல்ல முயற்சி. இதனால் அங்கிருக்கும் இளைஞர்கள் முன்னேறினால் மகிழ்ச்சி. 
இங்கு சில புலவாலுகள் முட்டையில் மயிர் புடுங்கும் வேலைகளை தவறாமல் செய்வார்கள். யாழ் களத்தில் எனது என்டர்டெய்ன்மன்ட் அவர்கள் தான். அவர்கள் எழுதுவதை வாசித்து சிரித்து விட்டு சென்றுவிட வேண்டும். ஜெயகுமாரி ஏன் சீலை உடுத்தேலை..ஜெசிக்கா ஏன் தங்கத்தை குடுக்கேலை என்று புலம்ப மட்டும் தான் அவர்களுக்கு தெரியும்
அவர்களுக்கு என்னும் அங்கிருக்கும் மக்கள் மண்ணெண்ணை ஜெனரேடரில குப்பி விளக்கை வைச்சு வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்று விருப்பம். அப்பதானே இவர்கள் சொகுசா வெளிநாட்டில இருந்து புலி கொடி ஆட்டலாம் ஜெனிவா டூர் போகலாம். 

இப்படியான ஒரு பயிற்சி நெறியை.. போர் காலத்தில்.. வட இலங்கை.. தொழில்நுட்பக் கல்லூரி என்ற தனியார் கல்வி நிறுவனம் நடத்தியது ஞாபகம். விட்டால்.. இந்தியா தான் இப்ப எல்லாத்தையும் ஈழத்தமிழருக்கு புதிசா காட்டுது என்று கதை அளப்பாங்க போலிருக்குது.  :icon_idea:  :lol:


போர் காலத்தில் அழகுக் கலை..ஹோட்டல் முகாமைத்துவம்.. நவீன் கலைகள்.. எல்லாமே போதிக்கப்பட்டன. இலத்திரனியல்.. இசைக்கருவிகள் பாவனையும் போதிக்கப்பட்டன. கணணிக் கல்வியும் போதிக்கப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் அதுவும் மின்சாரம்.. எரிபொருள் தடை சிங்களத்தால் போடப்பட்டிருந்த காலத்திலும் கூட. மண்ணெய்யில் ஜெனரேட்டர்கள் இயக்கி படிப்பித்தார்கள்.  :icon_idea:

 

அதுக்கு இப்ப என்ன? புலிகள் திரும்ப வந்து மக்கள் மண்ணெய்யில் ஜெனரேட்டர்கள் இயக்கி வாழ வேணுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கல்வியின் பேரில் மதமாற்றம் நடக்கின்றது" என்று நாரதர் ஒரு முறைப்பாட்டை இங்கு வைத்ததும், ஐயகோ இந்த உரையாடல் அதிரடியாய் சீறி பறக்கின்றது. கப்டல், கிறிஸ் கெயிலின் சிக்ஸ்ர்கள் எங்கே என்னைப்பார் உன்னைப்பார் என்று அனல் பறக்கும் யாழ் உறுப்பினர்களின் கருத்துக்கள் எங்கே. அந்த துடுப்பாட்டத்தை விட இந்த துடுப்பாட்டம் இன்னமும் அதிரடியாய் இருக்கின்றதே.

 

கள உறவுகளே அடுத்த செமை பைனல் நியூசிலாந்து அணிக்கும், தென் ஆபிர்க்கா அணிக்கும் இடையில் வரும் திங்கட்கிழமை தொடங்கும்வரை தயவுசெய்து தொடர்ந்து அதிரடியாய் விளையாடி வாசகர்களாகிய எங்களை குசிப்படுத்துங்கள். இன்னும் இரண்டு நாள் செமை பைனல் வரை எப்படி கழியப்போகின்றது ஒரே போரிங்காய் இருக்கப்போகின்றது என்று கவலை வந்தது. இந்த உரையாடல் தொடரும் வரை எனது குசிக்கும், கொண்டாட்டத்துக்கும் ஏது தடை?

 

இப்படிக்கு,

 

மூக்கை தோண்டி உருட்டுவதிலும், பல்லை குத்தி மணப்பதிலும், ஆகாயத்தை பார்த்து துப்புவதிலும் சுய இன்பம் காணும் சங்கம்.

இங்கே கருத்து வைப்போர் செய்தியியைப் படித்துவிட்டா கருத்து வைக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
விமானத் துறை என்றால் என்ன என்னும் விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
 
நான் எழுதிய எவறிற்க்கும் பதில் இல்லை ஆனால் , கருதுக்கள் எல்லாம் இவர் என்ன செய்தார் என்பதாகவே இருக்கிறது. இங்கே  ஒரு தலைப்பு இருந்தால் அது சம்பந்தமாக விவாதிக்க அல்லது பதில் சொல்ல முடியாது. ஆனால் கருத்து வைப்பார் மீதான தனிப்பட்ட கேள்வியாக மட்டுமே பதில் முன் வைக்கப்படுகிறது.
 
ஏன் ஜீர்மனியில் இருக்கும் ஒரு மத நிறுவனம் இங்கு வந்து பல இலட்சங்களை செலவி செய்கிறது? இவர்களின் நோக்கம் என்ன?
     நாம் இவற்றின் பின் விளைவுகளை ஆளமாகப்  பார்க்காமல் இருப்பது முற்றிலும் மடத் தனம். இன்று ஆபிரிக்காவில் கிறித்துவ மதத்தவருக்கும், இசுலாமியருக்கும் நடக்கும் பல சண்டைகளில் பலியாவது சொந்தச் சகோதரர்கள     .
 
இது நாளை ஈழத்திலும் நடக்காது என்று சொல்ல முடியாது. பவுத்த ,இந்து, கிறித்துவ மதவாதச் சக்திகள் அல்ல நாட்டை வளம் படுத்தக் கூடியவர்கள். நாடு வளம் பெற மக்கள் மீது கரிசனை கொண்ட அரசும், அரசின் பொருளாதார, மக்கள் நலத் திட்டங்களுமே தேவை. ஒரு மதச் சார்பற்ற தமிழ் அரசினினால் மட்டுமே அபிவிரித்தியையும் , கல்வியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இந்த மத நிறுவனக்களும் அவர்கள் காட்டும் படமும் பின் நாட்களில் பாரிய மத மோதல்களுக்கும் , சண்டைகளுக்கும் வழி வகுக்கும் .    

Evangelism in schools

Read our report on the activities of evangelical organisations in state schools:

Evangelism in schools ­– The role of external visitors in publicly funded education

Our state schools are being targeted and exploited by evangelical groups as part of their missionary work. That is the conclusion of a new report from the NSS looking into the activities of external visitors to schools.

Parents and schools alike should be concerned that evangelical organisations are gaining access to children and young people by seeking involvement in publicly funded education through the provision of religious education, school worship, pastoral work and the setting up of prayer spaces and bible-based school clubs.

Given the rapidly changing religious landscape in Britain, and in particular the diminishing interest in religion amongst young people (and their parents), it is easy to see why evangelical groups regard access to schools as essential if they are to raise the next generation of believers. However, as a matter of principle, we believe there should be no place in publicly funded schools for evangelism and proselytization.

Main findings

  • There is a significant and growing incursion of evangelical organisations into publicly funded education.
  • The activities of external visitors are often undertaken in schools without parents' knowledge and with little, if any, opportunity for withdrawal.
  • The motivations and aims of external groups, either out of complicity or naivety, are going unquestioned by head teachers, governors, Local Education Authorities and the Department for Education.
  • The presence of evangelical organisations and individuals in publicly-funded schools, particularly non-religious schools, is undermining the Human Rights of parents who choose a non-religious upbringing, or an upbringing of any other faith.
  • The legal obligation on all schools to provide religious education, and a daily act of (broadly Christian) worship provides a foot in the door to organisations with evangelistic intentions.
  • The ambiguity about the specific aims and purpose of religious education, and its low status in schools, provides an ideal environment for evangelical groups to exploit.
  • Head teachers are insufficiently discerning about the external groups they are allowing into their schools.

We believe the growing presence of evangelical organisation in schools should be of concern to everyone, religious and non-religious, who cares about the objectivity and integrity of state education and the Human Rights of parents who are entitled to a state education that does not run counter to their own religious and philosophical convictions.

https://www.secularism.org.uk/evangelism-in-schools.html

மேலே தந்திருப்பது எவ்வாறு பிரித்தானியாவில் கல்வியின் ஊடாக இந்த மதமாற்ற அமைப்புக்கள் தொழிற்படுகின்றன , எவ்வாறு அவை தடுக்கப்பட வேண்டும் ஏன் தடுக்கப்பட வேண்டும் இதன் பயங்கர விளைவுகள் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும் என்னும் விபரங்கள் உள்ளன. உலகெங்கும் இந்த நிறுவனக்கள் இளம் சிறார்களைக் குறிவைத்து இயங்குகின்றன.  

 

இங்கே கருத்து வைப்போர் செய்தியியைப் படித்துவிட்டா கருத்து வைக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.
விமானத் துறை என்றால் என்ன என்னும் விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
 
நான் எழுதிய எவறிற்க்கும் பதில் இல்லை ஆனால் , கருதுக்கள் எல்லாம் இவர் என்ன செய்தார் என்பதாகவே இருக்கிறது. இங்கே  ஒரு தலைப்பு இருந்தால் அது சம்பந்தமாக விவாதிக்க அல்லது பதில் சொல்ல முடியாது. ஆனால் கருத்து வைப்பார் மீதான தனிப்பட்ட கேள்வியாக மட்டுமே பதில் முன் வைக்கப்படுகிறது.
 
ஏன் ஜீர்மனியில் இருக்கும் ஒரு மத நிறுவனம் இங்கு வந்து பல இலட்சங்களை செலவி செய்கிறது? இவர்களின் நோக்கம் என்ன?
     நாம் இவற்றின் பின் விளைவுகளை ஆளமாகப்  பார்க்காமல் இருப்பது முற்றிலும் மடத் தனம். இன்று ஆபிரிக்காவில் கிறித்துவ மதத்தவருக்கும், இசுலாமியருக்கும் நடக்கும் பல சண்டைகளில் பலியாவது சொந்தச் சகோதரர்கள     .
 
இது நாளை ஈழத்திலும் நடக்காது என்று சொல்ல முடியாது. பவுத்த ,இந்து, கிறித்துவ மதவாதச் சக்திகள் அல்ல நாட்டை வளம் படுத்தக் கூடியவர்கள். நாடு வளம் பெற மக்கள் மீது கரிசனை கொண்ட அரசும், அரசின் பொருளாதார, மக்கள் நலத் திட்டங்களுமே தேவை. ஒரு மதச் சார்பற்ற தமிழ் அரசினினால் மட்டுமே அபிவிரித்தியையும் , கல்வியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இந்த மத நிறுவனக்களும் அவர்கள் காட்டும் படமும் பின் நாட்களில் பாரிய மத மோதல்களுக்கும் , சண்டைகளுக்கும் வழி வகுக்கும் .    

 

 

குறிப்பிட்ட இந்த கல்வி நிறுவனம் மதமாற்றம் செய்கின்றதா? ஏதாவது ஆதாரம் உள்ளதா? 
உங்களை போன்றவர்களுக்கு உண்மையிலேயே பிரச்சனை என்ன? அங்கு எவரும் எதுவும் செய்ய கூடாது என்பதா? அமெரிக்க மிசனரிகள் 100 வருடங்களுக்கு முன் இருந்தே யாழில் இயங்கி வருகின்றன. 
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா அமைப்புக்களுக்கும் ஒரு அஜெண்டா இருக்கும். ஐசிஆர்சி, ஆகஸ்பார்ம், விவேகானந்த சபை, ராமகிருஸ்ண மடம், இப்படி எல்லோருக்கும். இவர்களுக்கும் அப்படி ஒரு கிறிஸ்தவ அஜண்டாவில் இயங்க கூடும். ராயப்பு யோசேப்பு முதல், வெரித்தாஸ் வரை இதைப் பார்த்துள்ளோம்.

அதுக்காக ஒரு கிறிஸ்தவ நம்பிக்கை உள்ள நிறுவனம் என்பதால் கல்வியின் பெயரில் மதமாற்றம் நடக்கிறது என்று கண்ணை மூடியபடி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த பாடசாலையை பற்றி நானறிந்தவரையில், யாழ்ப்பாணம் கன்னியர்மடம், சென் பற்றிக்ஸ், போன்றவற்றில் இருப்பதை விட குறைந்தளவே மத முக்கியத்துவம் இருப்பதாக சொல்கிறார்கள்.

யாழில் புதிதாய் சில கல்விமுறைகளை செய்ய எத்தனிக்கிறார்கள்.

மதம்மாறுங்கள் - இலவசம் என்று சொல்லவில்லை. காசுக்குத்தான் படிப்பிக்கிறார்கள்.

"மதச்சார்பற்ற தமிழீழம்" (எப்படித்தான் சிரிக்காம இத சொல்ல முடியுதோ) என்ற இல்லாத ஊருக்கு வழிசொல்லும் கதையை நம்பி அங்க வாழும் மக்கள் தமக்கு கிடைக்கும் கல்வி மேம்பாட்டுக்கான வாய்ப்பை உதறித்தள்ள முடியாது, மாட்டார்கள்.

நாரதர்

 

இத்திரியை திசை திருப்பியதே நீங்கள்தானே

 

யாழ் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் கிரிஸ்துவ அமைப்பால் உருவாக்கப்பட்டவையே. இவற்றில் பழமையான யாழ் மத்திய கல்லூரி பரியோவான் கல்லூரி போன்றவை இன்றும் 90 வீதம் இந்துக்களையே கொண்டுள்ளது. யாரும் யாரையும் சுய விருப்பத்திற்கு மாறாக எதையும் திணிக்க முடியாது புரிந்து கொள்ளுங்கள்.

 

இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள். கிரிஸ்ததுவ மதத்தினர் இந்துக்களை மதம் மாற்றுகின்றார்கள் என்பதுதானே. பிடித்திருந்தால் யாரும் மதம் மாறலாம். இதில் கேள்வி கேட்க நான் யார் நீங்கள் யார்? இங்குள்ள பிரச்சனை அதுவல்ல. இத்திரியும் அது தொடர்பானதல்ல.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தைப் பதுப்பித்து அங்கு பயிற்சி நெறிகளையும் வைக்கலாமே.எனக்கெண்டால் அறிவுப்பசியுடன் இருக்கும் யாழ் மாணவர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கும் விடயமாகவே படுகிறது. எங்கள் மக்களின் மீதும் உடைமைகள் மீதும் குண்டுகளைப் பொழிந்து அழித்தவர்கள் ஒரு நல்ல நோக்கத்திற்காகச் செய்வதாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் இந்தச் சந்தர்ப் பாவித்து அவர்களின் வலையில் விழுந்து விடாமல் முன்னேற வேண்டும். கம்பியில் நடப்பது மாதிரி கவனம் வேண்டும்.தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளும்,பல்கலைக் கழகங்களும் நல்லதொரு இலாபமீட்டும் தொழிலாகும்.(ஏதோ இந்தச் சமயத்தில் றோ இயக்கங்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தது நினைவுக்கு வந்து தொலைக்குது.)

  • கருத்துக்கள உறவுகள்

புலவர் இந்த பள்ளிகூடம் நடத்துற ஆக்களா உங்கள் மீது குண்டு மழை பொழிந்தது? சொல்லவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு மீட்சியே இல்லையா?

இப்படி எல்லாவற்றையும் சந்தேகத்துடன் பார்த்தால், எமக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை.

தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூட சொல்ல முடியாது ஏனென்றால் எங்களுக்கு இவ்வளவு அழிவு வந்தபோதும் எந்த ஒரு கடவுளும் எங்களை காப்பாற்றவோ கணக்கெடுக்கவோவில்லை.

தமிழர்களுக்கு மீட்சியே இல்லையா?

இப்படி எல்லாவற்றையும் சந்தேகத்துடன் பார்த்தால், எமக்கு ஒன்றுமே கிடைக்கப்போவதில்லை.

 

 

அப்பாடா இந்த திரியில் ஒரு நிம்மதியான பதிவு
 
நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.