Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவிற்கு கல்வி சுற்றுலா வரும் விமானத்துறையில் கல்வி பயிலும் யாழ்ப்பாணம் தமிழ் மாணவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் தென்னிந்திய திருச்சபையால் பல பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுகின்றன.. இதன் ஆசிரியர்கள் அரச ஊழியர்களாக அரசின் சம்பளம் பெறுகின்றவர்கள். இப்படியான பள்ளிக்கூடம் ஒன்றில்தான் நானும் படித்தேன்..

ஒவ்வொரு நாள் பள்ளி ஆரம்பிக்கும்போதும் கடவுள் வணக்கம் சொல்லவேண்டும்.. "பரலோகத்தில் இருக்கும் எமது பிதாவே.." :D

இதை எல்லோரும் சொல்வோம்.. ஐயர் பெடியன்களும் சொல்வார்கள்.. :lol: எதிர்த்துக் கேட்டால் பள்ளியை விட்டுப் போகவேண்டியதுதான்..

இந்தப் பள்ளிகளுக்குப் பின்புலத்தில் மதமாற்ற எண்ணங்கள் இருக்குமா?? எனக்கு அப்படித் தோன்றவில்லை.. முன்னர் இருந்திருக்கலாம்.

  • Replies 124
  • Views 6.5k
  • Created
  • Last Reply

......

இந்தப் பள்ளிகளுக்குப் பின்புலத்தில் மதமாற்ற எண்ணங்கள் இருக்குமா?? எனக்கு அப்படித் தோன்றவில்லை.. முன்னர் இருந்திருக்கலாம்.

நன்றி உங்கள் உண்மையான பதிவிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பலமான ஆதரவுடன்தானே சிறிலங்கா தமிழினப் படுகொலையை அரங்கேற்றியது.ஐநாவில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற விடாது எத்தனை தடைகளை இந்தியா செய்தது.மடியில் கனமில்லாமலா இதெல்லாம் செய்தவர்கள்.

ஐயோ ஐயோ
 
தலையில் அடிக்கவும் முடியாது. மனிசி எனக்கு விசர் என்ற முடிவுக்கே வந்து விடுவாள்.
 
புலவர் தயவு செய்து திரியின் ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள். இத்திரி ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு மனிசனையும் கடிச்சு அப்புறம் யாரைக் கடிக்கலாம் என்று தேடுகின்ற நேரத்தில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நீங்களுமா?
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கருத்து வைப்போர் செய்தியியைப் படித்துவிட்டா கருத்து வைக்கிறார்கள் என எண்ணத் தோன்றுகிறது.

விமானத் துறை என்றால் என்ன என்னும் விளக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.

நான் எழுதிய எவறிற்க்கும் பதில் இல்லை ஆனால் , கருதுக்கள் எல்லாம் இவர் என்ன செய்தார் என்பதாகவே இருக்கிறது. இங்கே  ஒரு தலைப்பு இருந்தால் அது சம்பந்தமாக விவாதிக்க அல்லது பதில் சொல்ல முடியாது. ஆனால் கருத்து வைப்பார் மீதான தனிப்பட்ட கேள்வியாக மட்டுமே பதில் முன் வைக்கப்படுகிறது.

ஏன் ஜீர்மனியில் இருக்கும் ஒரு மத நிறுவனம் இங்கு வந்து பல இலட்சங்களை செலவி செய்கிறது? இவர்களின் நோக்கம் என்ன?

     நாம் இவற்றின் பின் விளைவுகளை ஆளமாகப்  பார்க்காமல் இருப்பது முற்றிலும் மடத் தனம். இன்று ஆபிரிக்காவில் கிறித்துவ மதத்தவருக்கும், இசுலாமியருக்கும் நடக்கும் பல சண்டைகளில் பலியாவது சொந்தச் சகோதரர்கள     .

இது நாளை ஈழத்திலும் நடக்காது என்று சொல்ல முடியாது. பவுத்த ,இந்து, கிறித்துவ மதவாதச் சக்திகள் அல்ல நாட்டை வளம் படுத்தக் கூடியவர்கள். நாடு வளம் பெற மக்கள் மீது கரிசனை கொண்ட அரசும், அரசின் பொருளாதார, மக்கள் நலத் திட்டங்களுமே தேவை. ஒரு மதச் சார்பற்ற தமிழ் அரசினினால் மட்டுமே அபிவிரித்தியையும் , கல்வியையும் வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும். இந்த மத நிறுவனக்களும் அவர்கள் காட்டும் படமும் பின் நாட்களில் பாரிய மத மோதல்களுக்கும் , சண்டைகளுக்கும் வழி வகுக்கும் .

நீங்கள் எதுவும் கேட்கவில்லை, ஒரு நல்ல காரியம் செய்யும் நிறுவனம் மதமாற்றம் செய்கிறது என்று ஒரு கருத்தை வைத்துத் திரிக்கு எண்ணை ஊற்றியது தவிர!. விமானப் பணித்துறை பற்றி நீங்கள் சபேசன் 36 இற்குப் பாடம் எடுப்பது சரியான நகைச்சுவை போங்கள்! :D

ஜீவன் சிவா சொன்னது போல இருநூறு வருடங்கள் முன்பு பல பள்ளிகளை ஆரம்பித்தது முதல் ஆமி அடிச்ச நேரம் புலிகளின் பகுதிகளில் மனிதாபிமானப் பணி செய்தது வரை கிறிஸ்துவ அமைப்புகள் தமிழர்களுக்கு நன்மையே செய்தன. நீங்களெல்லாம் என்ன நோக்கத்தோட உதவ வந்தாங்கள் என்ற கேள்வியைக் கேட்டுப் போட்டுத் தான் நிவாரணத்திற்கு வரிசையில் நின்றிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்! இப்ப உங்களுக்கு புகலிடம் தந்திருக்கும் கிறிஸ்துவத்தை மறைமுகமாக ஆதரிக்கும் நாடுகளும் என்ன நோக்கத்திற்காக தந்தார்கள் என்று தீர ஆராய்ஞ்சு போட்டுத் தான் வதிய ஆரம்பிச்சும் இருப்பீர்கள்! இல்லையா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சமாதன காலத்தில் ஊருக்கு போன ஒருவர் இங்கு வந்து சொன்னார் அங்கை (ஊரில)ஒருத்தர் கைத்தோலை பேசியில் கதைக்கிற மாதிரி பொிசா பிலிம் காட்டிக்கொன்டிருந்தார்.அங்கு கவேறேஜ் இருக்காது என்டு.பிரச்சனை என்னவென்டால் அங்கை உள்ளவர்கள் ஒன்டும் தொியாமல் ஒன்டையும் கானாமல் ஒன்டையும் அனுபவிக்க வசதி இல்லாமல் இருந்தால் தானே இங்கை உள்ளவர்கள் போய் பிலிம் காட்ட வசதியாாய் இருக்கம்.அதன் தாக்கம் இந்த திரியில் எரியும் கருத்துக்கள்.அங்கு ஏதாவது ஒன்டு நடந்தால் அதற்க்கு  இனம் ,மதம் ,பிரதேசம் ,பாடசாலை, படிப்பு இன்னும் இத்தியாதி இத்தியாதி எல்லாம் சோ்த்து எதிர்க்கிறது.நல்ாய் இருங்கோ.நன்றி.

உண்மை சுவைப்பிரியன்! ஒரு துரும்பையும் அசைக்காமல் இப்படி எதிலும் குறை பிடித்து எழுதவும் ஒரு "தில்" வேணும்! எப்படி முயற்சி செய்தாலும் கைவருகுதில்லை எனக்கு! :D

புலிகள் இருந்த போது அடங்கி இருந்த கிறிஸ்துவ எதிர்ப்பு, மத ரீதியான பிரிப்பு என்பன "புலம் பெயர் தேசியவாதியள்" என்று தம்மை நம்பிக் கொண்டிருக்கிற ஆக்களாலேயே இப்ப பொங்கி வெளி வருகுது! முஸ்லிம்களை அவர்களின் மதம் காரணமாகவே புலிகள் வெளியேற்றினார்கள் என்று வரலாற்றைத் திரிக்கிற ஆக்களும் யாழிலேயே இருக்கிறார்கள் என்றால் எங்கட தராதரம் என்ன எண்டு யோசிச்சுப் பாருங்கோவன்!

 இந்த திரியில் எரியும் கருத்துக்கள்.அங்கு ஏதாவது ஒன்டு நடந்தால் அதற்க்கு  இனம் ,மதம் ,பிரதேசம் ,பாடசாலை, படிப்பு இன்னும் இத்தியாதி இத்தியாதி எல்லாம் சோ்த்து எதிர்க்கிறது.நல்ாய் இருங்கோ.நன்றி.

பச்சை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பலவிதமான அறியாமைகளோடு இங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் காலத்தில்... பின்னான சமாதான காலத்தில்.. சிங்களம் தடை செய்த பொருட்களை தவிர மிச்சம் எல்லாம் தாயகத்தில் இருந்தது. மக்கள் அனுபவித்தார்கள். கணணிக் கல்வி கூட அளிக்கப்பட்டு வந்தது.

ஒருவர் வந்து எழுதிறார் மீண்டும் மண்ணெய் ஜெனரேட்டர் வந்து புலிகள் போடனுமோன்னு. இப்ப என்ன ஆகாயத்தில் இருந்தா மின்சாரம் வருகிறது. வந்து கொண்டிருந்த மின்சார நிலைகள் மீது விமானத்தாக்குதல் நடத்தி நிறுத்தினது சிங்களம்.

வந்து கொண்டிருந்த தொலைக்காட்சி சேவையை கொக்குவிலில் விமானத்தாக்குதல் நடத்தி நிறுத்தியது சிங்களம்.

வந்து கொண்டிருந்த ரயில்களை வவுனியாவோடு நிறுத்தியது சிங்களம்.

கடைசியில் மக்கள் ஒன்றையும் அனுபவிக்கல்ல.. இப்ப தான் அனுபவிக்கினம் என்பது போன்ற தோற்றப்பாடுகள் அதுவும் எல்லாம் புலிகளால் என்ற தோற்றப்பாடுகள்.. பொய்யர்களின் பொய் முகத்தையும்.. தாங்கள் வெளிநாடுகளில் அகதி வாழ்வுக்கு அவிழ்த்துவிட்ட பொய்களை மெய்யாக்கவுமே சிலர் இங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் காலத்தில் மக்கள்.. சிங்களம் தடை செய்தவற்றைத் தவிர.. எல்லாவற்றையும் அனுபவித்தார்கள். அத்தோடு கூடிய சுதந்திரத்தை அனுபவித்தார்கள். 

சினிமா படங்களுக்கு தடை இருந்த போது உள்ளூர் படங்கள் வெளிவந்தன. பின் சினிமா தடைகளும் எடுக்கப்பட்டு.. தரமான படங்கள் வெளியிடப்பட்டன. அந்தப் போர்ச் சூழலில் கூட முழு நீள திரைக்காவியங்களை உள்ளூரில் தயாரித்த பெருமை.. போர் காலத்தில் நடந்துள்ளது.

அதே போல்.. மக்கள்.. கல்வியில் குறையோடு இருக்கவில்லை. சகல கல்வி வாய்ப்புக்களும் இயன்ற அளவிற்கு அளிக்கப்பட்டன.

இன்று பல்வேறு முகவர் அமைப்புக்கள்.. பல்வேறு மோசடி நோக்கில் மக்களை.. மாணவர்களை நோக்கி வரும் நிலை அன்றிருக்கவில்லை. மக்கள் பயமின்றி.. ஒரு நிறுவனத்தில் இணைந்து கல்வி கற்கக் கூடிய சூழல் இருந்தது. இன்றைய மோசடிச் சூழல் அன்றில்லை.

இவற்றை உணர உணர்த்த.. மக்கள் விளிப்புடன் செயற்படுவதை சிலர்.. ஏதோ மக்கள் ஒன்றையும் அனுபவிக்காமல் இருந்துவிட்டனர்.. இன்று தான் எல்லாம் அனுபவிக்கின்றனர் என்று ஆக்கிரமிப்புக்கு வசதிவாய்ப்பால்.. பாடம் எடுக்கும் சிலரின் உள்நோக்கத்தை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு மக்களை மாணவர்களை நோக்கி வரும்.. விடயங்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருந்து செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாயம். இவை ஏமாற்றங்களில் இருந்தும்.. ஆபத்துக்களில் சிக்குவதில் இருந்தும் மக்களைக் காக்கும்.  :)  :icon_idea:

கொழும்புக்கு வந்த எம் மக்கள் எத்தனையோ போலிகளிடம் ஏமாந்த வரலாறை..போர்க்காலம் தந்துள்ளது. அந்தளவு ஏமாற்றங்கள்.. ஊரில் போர் பிராந்தியத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இன்று அந்த ஏமாற்றக்காரர்கள் எம் மக்களின் வாசல்படியில் வெளிநாட்டுக் காசை பறிக்க குழுமி நிற்கின்றனர் என்பதையும் மக்கள் உணரச் செய்ய வேண்டும்.  :icon_idea: 

Edited by nedukkalapoovan

"பலர் பலவிதமான அறியாமைகளோடு இங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்."
 
பறவாயில்லை நாங்கள் அறிந்த ஆமைகளுடன் எழுத முயற்சிக்கின்றோம்.
 
தயவு செய்து திரியுடன் ஒட்டி இருங்கள். எனது தாழ்மையான வேண்டுகோள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

"பலர் பலவிதமான அறியாமைகளோடு இங்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள்."
 
பறவாயில்லை நாங்கள் அறிந்த ஆமைகளுடன் எழுத முயற்சிக்கின்றோம்.
 
தயவு செய்து திரியுடன் ஒட்டி இருங்கள். எனது தாழ்மையான வேண்டுகோள்.

மக்களை சில வசதிகளைக் காட்டி.. ஏமாற்றுக் காரர்களிடம் சிக்க வைக்க அனுமதிக்க முடியாது. அது குறித்து மக்களை எச்சரிக்கை செய்ய மக்கள் கருசணை உள்ள அனைவருக்கும்.. ஒரு பொதுப்பொறுப்புள்ளது.

வன்னிக்கு உதவி செய்யுறம் என்று போய் உபத்திரம்.. உளவு செய்தவர்களையும் மக்கள் அறிவார்கள்.  :icon_idea:

குறிப்பிட்ட இந்த கல்வி நிறுவனம் மதமாற்றம் செய்கின்றதா? ஏதாவது ஆதாரம் உள்ளதா? 
உங்களை போன்றவர்களுக்கு உண்மையிலேயே பிரச்சனை என்ன? அங்கு எவரும் எதுவும் செய்ய கூடாது என்பதா? அமெரிக்க மிசனரிகள் 100 வருடங்களுக்கு முன் இருந்தே யாழில் இயங்கி வருகின்றன. 

மதத்தைப்  பரப்ப வந்தவர்கள் ஏன் கல்வி நிறுவnaங்களை அமைத்தனர்? இன்றும் மதத்தைப் பரப்புவர்கள் ஏன் கல்வி நிறுவனங்களை நடாத்துகின்றனர்? கல்விக்கும் , மத நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு? 
 
ஏன் இவர்கள் மத வழிபாட்டை பாடசாலையில் கட்டாயமாக்கிறார்கள்?   

நாரதர்

இத்திரியை திசை திருப்பியதே நீங்கள்தானே

யாழ் மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகள் கிரிஸ்துவ அமைப்பால் உருவாக்கப்பட்டவையே. இவற்றில் பழமையான யாழ் மத்திய கல்லூரி பரியோவான் கல்லூரி போன்றவை இன்றும் 90 வீதம் இந்துக்களையே கொண்டுள்ளது. யாரும் யாரையும் சுய விருப்பத்திற்கு மாறாக எதையும் திணிக்க முடியாது புரிந்து கொள்ளுங்கள்.

இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள். கிரிஸ்ததுவ மதத்தினர் இந்துக்களை மதம் மாற்றுகின்றார்கள் என்பதுதானே. பிடித்திருந்தால் யாரும் மதம் மாறலாம். இதில் கேள்வி கேட்க நான் யார் நீங்கள் யார்? இங்குள்ள பிரச்சனை அதுவல்ல. இத்திரியும் அது தொடர்பானதல்ல.

நான் இந்தச் செய்தியில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உண்மையில் என்ன செய்கிறது என எனக்கு முன்னர் தெரிந்து இருந்த விடயத்தை எழுதினேன்.   இது இந்தத் திரிக்குச சம்பந்தம் அற்ற விடயமா? விமானத் துறை என்று பொய் எழுதப்பட்டது, அது பற்றிக் கேட்டேன்  , அதுவும் இத் திரிக்கு சம்பந்தம் அற்ற விடயமா? நீங்கள் எப்படி இது இத் திரிக்கு சம்பந்தம் அற்றது எனச் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.

அன்றில் இருந்து இன்று வரை , கிறித்துவ மதம் ஆட்சியாளர்களால், காலனித்துவவாதிகளால் , நவ காலனித்துவ மேற்கத்திய நிறுவங்களால் கல்வி நிறுவங்களின் ஊடாக உள்பரப்பப்பட்டு ஊர் மக்களிடம்  , பொருளாதார உதவிகளினிடாக நிணுக்கமான முறையில்மதமாற்றம்  செய்யப்பட்டு வருகிறது.
இதன் மூலம்  மேற்குலகச் சார்பு மக்கட் கூட்டத்தை தமக்குச் சாதகமான நாடுகளில் உருவாக்குவதே இவர்களின் நூற்றாண்டு உக்தியாக இருந்து வந்திருக்கிறது. 
வரலாறு தெரியாவிட்டால் படியுங்கள் .படித்து விட்டு எழுதுங்கள்.
இத்திரியை அதனது ஓட்டத்திலேயே விட நான் செய்த முயற்சி வீண்தான். ஏற்றுக்கொள்கின்றேன்.
 
விடை பெறுகின்றேன்
 
நன்றி

புலிகள் இருந்த பொழுது தடை செய்யப்பட்டு இருந்த இந்த மதம் பரப்பும் நிறுவனங்கள்  இன்று , இருக்கின்ற கிறித்துவ சபைகளுக்கே   சவாலாகச்  செயற்பட்டு வருகின்றன.  

One of the groups identified in this report, Youth for Christ, regard it as their mission to “raise up lifelong followers of Jesus”.

Another organisation, Scripture Union, describe their mission as “to go and make disciples of Jesus Christ among children”. Each group identified in this report has similar missionary objectives.

A revealing quote from another group, Christians and Sheffield Schools (CaSS), states: “An American study found that nearly half of all people who become committed Christians did so before the age of 13 (43%), with 64% finding their faith before they were 18…CaSS believes the small mustard seeds we plant in a child’s life are important” 6.

The child evangelism movement gained traction following the publication of a report by Christian missionary strategist Luis Bush in which he coined the term “4/14 window”.7 The report identified the strategic importance of evangelising to the demographic group from age four to fourteen years old, which research has revealed to be the most open and receptive to every form of spiritual and developmental input.

Christian groups in Britain appear to be imitating a model from the United States, largely orchestrated by the Child Evangelism Fellowship (CEF), a worldwide organisation “dedicated to seeing every child reached with the Gospel of the Lord Jesus Christ, discipled and established in a local church”8. In the United States, conservative evangelical groups have successfully established themselves as part of America’s ostensibly secular public education system. According to New York journalist Katherine Stewart’s exposé of their successful attempts to use the public education system in the U.S. to advance a fundamentalist agenda, evangelical groups employ a “stealth strategy that relies on low visibility”9.

http://www.secularism.org.uk/uploads/evangelism-in-state-schools.pdf

Edited by narathar

  • கருத்துக்கள உறவுகள்

மதத்தைப்  பரப்ப வந்தவர்கள் ஏன் கல்வி நிறுவnaங்களை அமைத்தனர்? இன்றும் மதத்தைப் பரப்புவர்கள் ஏன் கல்வி நிறுவனங்களை நடாத்துகின்றனர்? கல்விக்கும் , மத நம்பிக்கைக்கும் என்ன தொடர்பு? 

ஏன் இவர்கள் மத வழிபாட்டை பாடசாலையில் கட்டாயமாக்கிறார்கள்?

வளமான வாழ்வுக்கு அடிப்படையான கல்வியைத் தான் ஒரு கடவுளின் மதத்தைப் போதிக்கிற அமைப்பு சிறப்பான கொடையாக மனிதர்களுக்குக் கொடுக்க முடியும்! அன்றாடம் சாப்பாடு போடுவதை விட இது நல்ல நீண்ட காலத்தில் பயன் கொடுக்கும் ஒரு செயல்.

ஒரு மத அமைப்பு தன் பள்ளியில் தன் மத வழிபாட்டை மட்டுமே அனுமதிக்கிறது என்றால் அதை விரும்பாதோர் அந்தக் கல்வியகத்திற்குப் போகாமல் விடலாம், யாரும் தலையில் துவக்கு வைத்து அழைக்கப் படமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் நீங்கள் சொல்வது போன்ற தீவிர நிலை பல மதம் சார்ந்த கல்விக் கூடங்களில் நடப்பதில்லை. நான் படித்த மத்திய கல்லூரி வெஸ்லியன் பாதிரிகளால் ஆரம்பிக்கப் பட்டு இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கல்லூரி. எப்போதும் காலை வழிபாட்டில் தேவாரம், கிறிஸ்துவ பிரார்த்தனை, (முஸ்லிம்கள் இருந்த போது துவா) எல்லாம் இருக்கும்.

இப்படி பட்ட ஐயங்களை வைத்துக் கொண்டு மதவாதம் தூண்டுவதை விட நீங்களே உங்களுக்கு சம்மதமுள்ள மதத்தின் அமைப்புகள் மூலம் கிறிஸ்துவ அமைப்புகள் செய்யும் பணிகளைப் பொறுப்பெடுக்கலாம். அது நல்ல செயல் அல்லவா? :)

புலிகள் இருந்த பொழுது தடை செய்யப்பட்டு இருந்த இந்த மதம் பரப்பும் நிறுவனங்கள்  இன்று , இருக்கின்ற கிறித்துவ சபைகளுக்கே   சவாலாகச்  செயற்பட்டு வருகின்றன.

அவை என்ன அமைப்புகள்? தடை செய்யப்பட்ட அமைப்புகள்? ஆதாரம் உண்டா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரி எங்கேயோ தொடங்கி, எங்கேயோ போகிறது. நானும் இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன். அதற்குமுன், இந்த கல்வி பற்றி சிலருக்கு குழப்பம் உள்ளதால் ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு, கிளம்பலாம்.

-விமானத்துறையில் ஏராளமான தகுதி நிலைகளில் கல்வி உண்டு. அடிப்படை விமானத்துறை கல்வியில் இருந்து, MBA வரை,

-அந்தந்த கல்வி தகுதி நிலையில் படிக்க அதற்கு முந்தைய கல்வித் தகுதி வேண்டும். ஊதாரணமாக சில படிப்புக்கு பல்கலைககழக டிகிரி தேவை.

-(A/L) வரை படித்தவர்களுக்கு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவு உள்ள மாணவர்களை இந்த துறைக்கு கொண்டுவர வேண்டுமென்றால், இந்த பள்ளியில் உள்ள படிப்பில் ஆரம்பிக்கலாம். இதுதான் தொடக்கம். இதை பாஸ் செய்தால் மேற்கொண்டு படிக்கலாம்.

-விமானத்துறையில் படித்தால், பலனுள்ளதா? அந்த துறையில் 26 ஆண்டு பணிபுரிந்தவன் என்ற வகையில் எனது அபிப்பிராயம் - பலனுண்டு.

-பலாலி சர்வதேச விமானநிலையம் ஆகுமா? ஆக வேண்டும் என்ற முயற்சியில் இலங்கையில் lobby செய்பவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில், நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.

சரி. இந்த திரியில் இருந்து விடைபெறுகிறேன். நன்றி.

புலிகள் இருந்த பொழுது தடை செய்யப்பட்டு இருந்த இந்த மதம் பரப்பும் நிறுவனங்கள்  இன்று , இருக்கின்ற கிறித்துவ சபைகளுக்கே   சவாலாகச்  செயற்பட்டு வருகின்றன.  

நல்ல காலம் புலிகள் 300 வருடங்களிற்கு முன்னர் இருக்கவில்லை. இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் பெருமை கல்வி என தம்பட்டம் அடிக்க முடியாது போயிருக்கும்.
 
விடை பெற்ற பின்னரும் இக்கருத்தை எழுதத்தூண்டியது தாங்களே.
 
நன்றி  வணக்கம்
  • கருத்துக்கள உறவுகள்

திரிக்குத் தொடர்பில்லாத விடயங்களை எழுதியதால் மன்னிக்கவும்! எனக்கும் பயனுள்ள வேலைகள் செய்ய வேண்டி இருப்பதால் இத்தோடு விடை பெறுகிறேன்! :)

  • கருத்துக்கள உறவுகள்

நானும் விடை பெறுகிறேன்.

இங்கே நல்ல முறையில் கருத்தாடிய அனைவருக்கும் நன்றிகள்.

சபேசன் - விமானத்துறையில் மட்டுமில்லை இதில் கிடைக்கும் transferable skillsஐயும் ஆங்கில அறிவையும் வைத்து, வங்கியியல், மக்கள் தொடர்பாடல், ஹாஸ்பிட்டாலிட்டி இண்டஸ்ர்ரீ என்று எத்தனையோ துறைகளில் வேலை எடுக்க முடியும் என்பது அதிகம் மூளையை கசக்காமலே புரியும் (மூளை இருப்பவர்களுக்கு). ஏல் பரீட்சையுடன் கம்பஸ் போகாவிட்டால், தொடர்ந்தும் எம் தகைமைகளை வளர்க்க முடியாது எனும் நிலை ஊரில் மாறுவது மிக நல்ல விடயம்.

மற்றும்படி மதம் மாற்றுகிறார்கள் எனும் கூச்சல், ஒரு காழ்ப்புணர்சி மிக்க, தனிபட்ட குரோதங்களை பழிதீர்க்கும் (வேலையை விட்டு விலகியவர் சொன்னாராம் - என்ன காரணதுக்காக துரத்தப்பட்டாரோ?) ஆதாரம் அற்ற, மத குரோதத்தின் பால் வெளிப்பட்ட பொய்க்கூச்சல் என்பது திரியை வாசிக்கும் யாருக்கும் விளங்கும்.

பலாலியை இட்டு நையாண்டி பண்ணுபவர்கள் பண்ணட்டும், சகல கிண்டல்களையும் மீறி குறைந்த பட்சம் இந்த்ஹியாவுக்கு போகுமளவுக்கு ஆவது பலாலி தரமுயர்த்தப் படும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.

எறும்பூர கல்தேயும்.

வளமான வாழ்வுக்கு அடிப்படையான கல்வியைத் தான் ஒரு கடவுளின் மதத்தைப் போதிக்கிற அமைப்பு சிறப்பான கொடையாக மனிதர்களுக்குக் கொடுக்க முடியும்! அன்றாடம் சாப்பாடு போடுவதை விட இது நல்ல நீண்ட காலத்தில் பயன் கொடுக்கும் ஒரு செயல்.

ஒரு மத அமைப்பு தன் பள்ளியில் தன் மத வழிபாட்டை மட்டுமே அனுமதிக்கிறது என்றால் அதை விரும்பாதோர் அந்தக் கல்வியகத்திற்குப் போகாமல் விடலாம், யாரும் தலையில் துவக்கு வைத்து அழைக்கப் படமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் நீங்கள் சொல்வது போன்ற தீவிர நிலை பல மதம் சார்ந்த கல்விக் கூடங்களில் நடப்பதில்லை. நான் படித்த மத்திய கல்லூரி வெஸ்லியன் பாதிரிகளால் ஆரம்பிக்கப் பட்டு இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கல்லூரி. எப்போதும் காலை வழிபாட்டில் தேவாரம், கிறிஸ்துவ பிரார்த்தனை, (முஸ்லிம்கள் இருந்த போது துவா) எல்லாம் இருக்கும்.

இப்படி பட்ட ஐயங்களை வைத்துக் கொண்டு மதவாதம் தூண்டுவதை விட நீங்களே உங்களுக்கு சம்மதமுள்ள மதத்தின் அமைப்புகள் மூலம் கிறிஸ்துவ அமைப்புகள் செய்யும் பணிகளைப் பொறுப்பெடுக்கலாம். அது நல்ல செயல் அல்லவா? :)

அவை என்ன அமைப்புகள்? தடை செய்யப்பட்ட அமைப்புகள்? ஆதாரம் உண்டா?

//வளமான வாழ்வுக்கு அடிப்படையான கல்வியைத் தான் ஒரு கடவுளின் மதத்தைப் போதிக்கிற அமைப்பு சிறப்பான கொடையாக மனிதர்களுக்குக் கொடுக்க முடியும்! அன்றாடம் சாப்பாடு போடுவதை விட இது நல்ல நீண்ட காலத்தில் பயன் கொடுக்கும் ஒரு செயல்.//
 
கல்வி என்பது மதச் சார்பற்ற அரசு செய்ய வேண்டிய  பணி. கல்வியின் மூலம் ஒருவன் வளம் பெற முடியும் எனில் , பிறகு ஏன் கடவுள் ? ஜெபம் எல்லாம். அவற்றைத் துறந்து விட்டு இந்த அமைப்புக்கள் ஈன் சீவி செய்வதில்லை?  ஏன் மதப் போதகர்களே இதன் அதிபர்களாக இருக்கிறார்கள்.?      
 
//ஒரு மத அமைப்பு தன் பள்ளியில் தன் மத வழிபாட்டை மட்டுமே அனுமதிக்கிறது என்றால் அதை விரும்பாதோர் அந்தக் கல்வியகத்திற்குப் போகாமல் விடலாம், யாரும் தலையில் துவக்கு வைத்து அழைக்கப் படமாட்டார்கள் என்று நம்புகிறேன்.//
 
இங்கே  அக் கல்வி நிறுவனம் கல்வியின் மூலம் அடையக் கூடிய பொருளாதார நலனைக் காட்டியே மாணவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. அதன் மதம் சார்ந்த போசகர்களின்  அளவிலா பொருளாதார வளம் பல வசதிகளை அந்த நிறுவனத்திற்கு வழங்குகிறது . இவை அரச பாடாசாலைகளை விட வளம் மிக்கவையாக இருக்கின்றன. இதற்கு ஒரே  தீர்வு மதம் சார் பாடசாலைகள் தேசிய மயமாக்கப்பட்டு, மதச் சார்பற்ற கல்வி முறமை அமுல் படுத்தப்பட வேண்டும்.
 
ஆனால்// நீங்கள் சொல்வது போன்ற தீவிர நிலை பல மதம் சார்ந்த கல்விக் கூடங்களில் நடப்பதில்லை. நான் படித்த மத்திய கல்லூரி வெஸ்லியன் பாதிரிகளால் ஆரம்பிக்கப் பட்டு இந்துக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு கல்லூரி. எப்போதும் காலை வழிபாட்டில் தேவாரம், கிறிஸ்துவ பிரார்த்தனை, (முஸ்லிம்கள் இருந்த போது துவா) எல்லாம் இருக்கும்.//
 
மத்திய கல்லூரி அரசுடமையாக்கப்பட்ட ஒரு மதப் பாடசாலை. ஆனால் இன்றும் கிறித்துவ சபைகளால் நிர்வகிக்கப்படும் பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம்,மாணவர் தெரிவு, புலமைப் பரிசு, அதிபர் தெரிவு , மாணவத் தலைவர் தெரிவு என சகல தெரிவுகளும் மதத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது.   
 
//இப்படி பட்ட ஐயங்களை வைத்துக் கொண்டு மதவாதம் தூண்டுவதை விட நீங்களே உங்களுக்கு சம்மதமுள்ள மதத்தின் அமைப்புகள் மூலம் கிறிஸ்துவ அமைப்புகள் செய்யும் பணிகளைப் பொறுப்பெடுக்கலாம். அது நல்ல செயல் அல்லவா? :)//
 
முதலில் எழுதியதைப் பூல் கல்வி, மதச் சார்பற்ற அரசினாலெயீ வசங்க்க்கப்பட வீண்டும். நான் எந்த மதத்தையும் சாராதவன். 
 
//அவை என்ன அமைப்புகள்? தடை செய்யப்பட்ட அமைப்புகள்? ஆதாரம் உண்டா?//
 
குறிப்படப்படும் பாடசாலை எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் பின்னால் இருக்கும் கிறித்துவ அமைப்புக்கள் வன்னியில் இயங்கினவா? இவை இவாஞ்சளிகன் கிறித்துவ அமைப்புக்கள. புலிகளுடன் நெருக்கமாக இருந்த கத்தோலிக்கப்   பாதிரியார்கலே இவர்கள் இயங்குவதை விரும்பவில்லை.   

நல்ல காலம் புலிகள் 300 வருடங்களிற்கு முன்னர் இருக்கவில்லை. இருந்திருந்தால் யாழ்ப்பாணத்தின் பெருமை கல்வி என தம்பட்டம் அடிக்க முடியாது போயிருக்கும்.
 
விடை பெற்ற பின்னரும் இக்கருத்தை எழுதத்தூண்டியது தாங்களே.
 
நன்றி  வணக்கம்

புலிகள் இருக்கவில்லை, ஆனால் நாவலர் இருந்தார். அவர் போட்டியாக சுதேசப் பாடசாலைகளை நிறுவினார். நாடு காலனித்துவத்தில் இருந்து விடுதலை அடைந்ததும்  முதல் வேலையாக கிரித்துவபாடசாலைகள்         சிலவற்றைத் தவிர பெரும்பாலான பாடசாலைகள் அரசுடமையாக்கப்பட்டன. 

//விமானத்துறையில் ஏராளமான தகுதி நிலைகளில் கல்வி உண்டு. அடிப்படை விமானத்துறை கல்வியில் இருந்து, MBA வரை//

விமானத் துறைக் கல்வி என்றால் என்ன?   இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு மிகுதி பேசலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி எங்கேயோ தொடங்கி, எங்கேயோ போகிறது. நானும் இந்த திரியில் இருந்து விடை பெறுகிறேன். அதற்குமுன், இந்த கல்வி பற்றி சிலருக்கு குழப்பம் உள்ளதால் ஒரு விளக்கம் கொடுத்துவிட்டு, கிளம்பலாம்.

-விமானத்துறையில் ஏராளமான தகுதி நிலைகளில் கல்வி உண்டு. அடிப்படை விமானத்துறை கல்வியில் இருந்து, MBA வரை,

-அந்தந்த கல்வி தகுதி நிலையில் படிக்க அதற்கு முந்தைய கல்வித் தகுதி வேண்டும். ஊதாரணமாக சில படிப்புக்கு பல்கலைககழக டிகிரி தேவை.

-(A/L) வரை படித்தவர்களுக்கு, அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆங்கில அறிவு உள்ள மாணவர்களை இந்த துறைக்கு கொண்டுவர வேண்டுமென்றால், இந்த பள்ளியில் உள்ள படிப்பில் ஆரம்பிக்கலாம். இதுதான் தொடக்கம். இதை பாஸ் செய்தால் மேற்கொண்டு படிக்கலாம்.

-விமானத்துறையில் படித்தால், பலனுள்ளதா? அந்த துறையில் 26 ஆண்டு பணிபுரிந்தவன் என்ற வகையில் எனது அபிப்பிராயம் - பலனுண்டு.

-பலாலி சர்வதேச விமானநிலையம் ஆகுமா? ஆக வேண்டும் என்ற முயற்சியில் இலங்கையில் lobby செய்பவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில், நம்பிக்கை உள்ளது. பார்க்கலாம்.

சரி. இந்த திரியில் இருந்து விடைபெறுகிறேன். நன்றி.

பலாலியை சர்வதேச விமானநிலையம் ஆக்கியவுடன் சொல்லுங்கள் அடுத்த முறை பலாலியில் வந்திறங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஜோக்கடித்தாலே எமக்குத்தாங்கேலாது,

ஆனா ஒரு கல்வி நிறுவனத்தை - ஆதாரம் ஏதுமின்றி அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று சொல்லி, மதம் பரப்புகிறார்கள், மதம் மாற்றுகிறார்கள் என்று கீழ்த்தரமாக அவதூறு செய்யலாம்

ஏனெண்டால் நமக்கு வந்தால் ரத்தம் - மற்றயோருக்கெண்டால் தக்காளிச் சட்னி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.