Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது வீடுகளையும், கோயில்களையும் அழித்து இராணுவம் விகாரைகளைக் கட்டியுள்ளது! - வயாவிளான் சென்ற மக்கள் வேதனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
odakapulam-viharai-200315-seithy-200.jpg

எங்களின் வீடுகளையும், கோயில்களையும் அழித்து இராணுவம் விகாரைகளைக் கட்டி வைத்திருக்கிறது. எங்களின் காணிகளைப் பார்க்க விடாமல் இடையிலேயே மறித்து முள்கம்பி வேலி அமைக்கின்றனர். முகாம்கள் இருக்கிற வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வீடுகள் இருந்த இடம்கூட தெரியவில்லை என்று வயாவிளான் பகுதியை இன்று பார்வையிட்டுத் திரும்பிய மக்கள் தெரிவித்தனர்.

   

உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் ஆயிரத்து 100 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வலி. கிழக்குப் பிரதேசமான வளலாயில் 233 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 197 ஏக்கர் காணி வயாவிளான் கிழக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்டது. முன்னதாக இப்பகுதியில் 223 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும் 197 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட தங்களின் காணிகளைப் பார்க்க பெருமளவிலான மக்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.

 

விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த வீடுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. அத்துடன் அப்பகுதிகள் புதர்கள் மண்டியும் காணப்பட்டன. தவிர அப்பிரதேசங்களில் சில வீடுகள் மட்டுமே அழிக்கப்படவில்லை. ஆனால் அந்த வீடுகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் மக்களின் கண்முன்னேயே வேலிகளை அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

 

காணிகளைப் பார்க்க ஆவலுடன் சென்ற மக்கள் எல்லைக்கு அப்பால் இருக்கும் தங்கள் காணிகளைப் பார்க்க இராணுவத்தினரிடம் அனுமதி கோரினர். ஆனால் இதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். இதனால் இராணுவத்தினருடன் மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். நிலங்களைப் பார்வையிடச் சென்ற மக்களில் சிலர் கண்ணீருடன் தங்கள் நிலத்தின் மண்ணைத் தொட்டு அள்ளிய காட்சி பலரின் மனதையும் உருகச் செய்தது.

 

odakapulam-viharai-200315-seithy.jpg

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமந்திரன் கோஷ்டியும் புலத்திலை இருக்கிற நாலஞ்சுபேரும் சேர்ந்து நாட்டை நல்ல நிலைக்கு கொண்டுவருவினம்.....ஆனால் லெக்சனுக்கு பிறகுதான் செய்வினம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருக்கிற யாராலும் ( என்னாலும் உங்களாலும்) ஒண்டும் புடுங்க முடியாது.

கூட்டமைப்பு இப்போ போகும் நிதானமான பாதையில் போனால் - ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவாக விரைவில் மீட்க்கப்படும்.

என்ன புலிகள் பறிகொடுத்த நிலத்தை எல்லாம் - கட்டேல போற வயசில சம்பந்தனும் சீவியும் மீட்கினம் அவ்வளவே.

யாழ்ப்பாணம், உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட வசாவிளான் பிரதேசத்திலுள்ள தங்களது காணிகளை, அவற்றின் உரிமையாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை பார்வையிடச் சென்றனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம் -

 

article_1426854295-IMG2416.JPG

 

article_1426854334-IMG2550.JPG

 

 

article_1426854345-IMG2551.JPG

 

article_1426854353-IMG2552.JPG

 

article_1426854361-IMG2565.JPG

 

article_1426854371-IMG2572.JPG

 

article_1426854380-IMG2578.JPG

 

article_1426854390-IMG2592.JPG

 

http://www.tamilmirror.lk/142233#sthash.Xp5v2sHN.dpuf


article_1426854397-IMG2593.JPG


article_1426854412-IMG2612.JPG

 


article_1426854421-IMG2615.JPG

 

 

article_1426854429-IMG2636.JPG

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் இருக்கிற யாராலும் ( என்னாலும் உங்களாலும்) ஒண்டும் புடுங்க முடியாது.

கூட்டமைப்பு இப்போ போகும் நிதானமான பாதையில் போனால் - ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவாக விரைவில் மீட்க்கப்படும்.

என்ன புலிகள் பறிகொடுத்த நிலத்தை எல்லாம் - கட்டேல போற வயசில சம்பந்தனும் சீவியும் மீட்கினம் அவ்வளவே.

 

புலிகள் தாங்களா... பறிகொடுக்கல்ல..!!  சென்ரி போட்டிட்டு நாலு சூடு சுட்டிட்டு.. ஆமிக்காரனை வரவிட்டிட்டு.. தாங்கள் ஓடிப்போய் இன்னொரு பக்கத்தால ஆமிக்காரனோட வந்து கிரிபத் சாப்பிட்ட.. காட்டிக்கொடுக்க.. வந்த.. ஈபி.. புளொட்.. ஈபிடிபி.. டெலோ பறிகொடுத்ததுகளும் அடங்கும். 

 

புலிகள்.. 2002 பேச்சுக்களின் போது முன்வைத்த முக்கிய விடயம்.. உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றல். அப்ப பெரிய மனுசாள் சொல்லிச்சினம்.. புலிகள் பேச்சைக் குழப்பத்தான் உதை முன் வைக்கினம். அன்றாடப் பிரச்சனையை பாக்கிறதை விட்டிட்டு... புலிகள் ஏன் உயர் பாதுகாப்பு வலயத்தை தூக்கிப் பிடிக்கினம் என்று. புலிகளுக்கு தெரியும்.. இந்தப் பாதுகாப்பு வலயங்களின் கனதி. ஆக்கிரமிப்பு நோக்கம்.

 

புலிகளை பயங்கரவாதிகளுன்னு.. உச்சரிச்சவை தான்.. எனி மண்ணை மீட்டுக்கொடுக்கனும். சம்பந்தனுக்கு அதில் குறிப்பிடத்தக்க பங்குண்டு. புலிகளை மக்களுக்கான விடுதலைப் போராளிகளுன்னு தொடர்ந்து.. அழுத்தமா.. எல்லோரும்..சொல்லி இருந்தா.. சர்வதேசம்... புலிகள் உயிர் கொடுத்து.. மீட்ட மண்ணைப் பறிகொடுக்க சிங்களவனுக்கு உதவி இருக்காது.  :icon_idea:

மீள்குடியேற்றம் – மாற்றம், ஏமாற்றம்..!

 

Vasavilan8-300x181.jpg

 

வசாவிழானிலிருந்து கொழும்பு மிரருக்காக ஜெரா
 
“ஒரு உதவி செய்யுங்கோ ஐயா. ஒரு போத்தில் மருந்து வாங்கித் தாங்கோ, இந்த இடத்திலயே குடிச்சிற்று செத்துப்போறன், இங்கயே புதைச்சிடுங்கோ” – இப்படித்தான் தன் முன் நின்றுகொண்டிருக்கும் இராணுவத்தினனைப் பார்த்து அழுது, கெஞ்சிக்கொண்டிருக்கிறார் ஒரு தாய்.
 
 
அவருக்கு வயது 70, தன் ஊருக்குத் திரும்பியே ஆகவேண்டும் என்ற முடிவோடு வசாவிளானில் இன்று விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இடங்களைப் பார்க்க பெரும் ஆவலோடு வந்தவர். அவரின் காணியை அபகரித்து வைத்திருக்கும் இராணுவத்தினனின் காலில் விழாத குறையாக அழுது, கெஞ்சியும், அது கிடைக்காத ஏமாற்றத்தோடு நிற்கிறார் அந்தத் தமிழ் தாய்.
 
Vasavilan11.jpg
 
Vasavilan5.jpg
 
Vasavilan7.jpg
 
இந்த ஏமாற்றத்தைத்தான் வளலாயில் இன்று தங்கள் காணியை, பாழடைந்த வீடுகளைப் பார்ப்போம் என்று வந்திருந்த பெரும்பாலானோர் முகங்களிலும் காணக்கூடியதாக இருந்தது. வந்திருந்தோருக்கு வயது வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. 1990 ஆம் ஆண்டில் இங்கிருந்து வெளியெற்றப்பட்டவர்கள். இன்றுதான் ஊர் திரும்பியிருக்கின்றனர். கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி என அதிக தூரங்களில் இருந்தும் வந்தவர்கள் ஏமாற்றத்தோடு காடுகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
 
அதில் ஒருவர் இராஜரட்ணம், வவுனியாவில் இருந்து ஊர் பார்க்க வந்திருக்கின்றார். கேள்வியைக் கேட்டதுமே, பக்கத்தில் இருந்தவரின் பைலில் இருந்த பேப்பரையும், தன் பையில் இருந்த பேனாவையும் எடுத்துவிட்டார். இதுதான் தான் தம்பி நாங்கள் நிக்கிற றோட்டு. இந்த வெட்டைக்காணி ஏற்கனவே விட்ட பகுதி. சும்மா கிடந்தது. அதுக்கு அங்கால ஆமி காம்ப், சேர்ச், அங்கால நேர கொஞ்சம் விட்டிருக்கு, பிறகு திருப்பியும் குறுக்கால முள்ளுக்கம்பிய போட்டு அடைச்சிட்டாங்கள். குறுக்க கோடு போட்டிருக்கிற இடம் தான் இப்ப விட்டிருக்கு. 257 ஏக்கர் விடுறதா சொன்னாங்கள். ஆனால் 190 ஏக்கர் தான் வரும் போல” கிறுகிறுவென வரைபடம் ஒன்றைப் போட்டு முழுவிபரத்தையும் இலகுவாக விளங்கப்படுத்திவிட்டார் அவர்.
 
Vasavilan15.jpg
 
Vasavilan1.jpg
 
Vasavilan2.jpg
 
 
Vasavilan3.jpg
 
Vasavilan4.jpg
 
Vasavilan6.jpg
 
Vasavilan13.jpg
 
உங்கட காணி? ”பாதி கிணறு முள்ளுக் கம்பி வேலிக்கு அங்காலயும், மீதிக் கிணறு இங்காலயுமா கிடக்கு” வரைபடத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் சொல்கிறார், சுத்திவர ஆமி, காடு, இதுக்குள்ள எங்கட பிள்ளையள கொண்டு வந்து வச்சிக்கொண்டு எப்பிடி இருக்கிறது? அவரின் கேள்வி அனைவரையும் அமைதியாக்கிவிடுகிறது.
 
பிரதேச அதிகாரி வருகிறார். அனைவரும் ஓடிப்போய் அவரிடம் ”என்ர காணிக்கு விடேல்ல, இதெல்லாம் விவசாய நிலம், இதுக்குள்ள நாங்கள் குடியேற ஏலாது”, என முறையிடுகின்றனர். “கொஞ்சம் கொஞ்சமாய்த்தான் விடுவினம். ஒரேதா விட மாட்டினம். முதல் விட்ட இடங்களுக்க வந்து குடியேறுங்கோ, பிறகு இதுக்குள்ளயும் குடியேறாட்டி, மிச்ச இடங்களையும் விடமாட்டாங்கள். தோட்டக்காணி வேண்டாம் எண்டால் சும்மா தாங்கோவன்” அதிகாரி சொல்லிமுடித்தார்.
 
குடியிருக்க வீடு இல்லாமல் எப்பிடி தோட்டத்துக்கு போறது? அந்தக் கூட்டத்தில் கடைசி வரிசையில் நின்றவர் கேட்ட கேள்வி அதிகாரிக்கு கேட்வில்லை. சிலர் அதிகாரியின் கதையிலும் உண்மையிருப்பதை ஒத்துக்கொண்டனர். போன வேகத்தில் ஆங்காங்கே மக்கள் கூடி நின்று பேசிக்கொள்கிறார்கள். இராணுவம் புதிய முட்கம்பி வேலிகளை அமைத்தலில் தீவிரம் காட்டுகிறது.
 
சுரேஸ் எம்.பி வருகிறார். செய்தியாளர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். பொருத்தமான இடமொன்றைப் பார்த்து கெமராக்கள் முன் பேசத் தொடங்குகின்றார்.
 
”மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். விடுவதாக சொல்லப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி யாழ்ப்பாணம் வாறார். இங்க வரும்போது இந்த விடயத்தையும் கவனிக்க சொல்லி மகஜர் கொடுப்போம்” அவர் பேசியதன் சாரம் இவ்வளவுதான்.
 

 

Vasavilan9.jpg

 

Vasavilan101.jpg

 

Vasavilan12.jpg

.மக்கள் ஓடோடிப் போய், பரலோகமாதா தேவாலயத்தில் ஜனாதிபதிக்கு கொடுப்பதற்கான மகஜரில் கையெழுத்திட வரிசை காக்கிறார்கள். இந்தத் தேவாலயமும் இப்போது பாதுகாப்பு வலயத்துக்குள் வந்துவிட்டது. கிட்டத்தட்ட 100 வருடங்களைக் கடந்துவிட்ட இந்தத் தேவாயலத்தைக் கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து ஞாயிறு தினத்தில் மட்டும் வந்து ஊரவர்கள் வழிபட இராணுவம் அனுமதித்திருந்தது. முட்கம்பி வேலிகள் திறந்துவிடப்பட்டன. ஆனால் வசாவிளான் கிராமத்தின் சில பகுதிகளை ஊர்மக்கள் பார்க்க வரப்போகிறார்கள் என்கிற விடயம் தெரிய வந்தவுடன், ஆலயத்தைச் சூழ மீண்டும் முட்கம்பி வேலிகள் அடைக்கப்ட்டாயிற்று. அதுவும் இராணுவ முகாம் வலையத்துக்குள் வந்துவிட்டது. தேவாலயத்தைப் பார்த்துத் திரும்புகையில், “இஞ்சால வாங்கோ, ஆமிக்காரன் செய்யிற தோட்டங்கள காட்டுறன், என்று அழைத்துப் போகிறர் வலி. வடக்கின் பிரதேச தவிசாளர் சுகிர்தன்.

 
“இண்டைக்கு J/244, J/252 கிராம சேவகர் பிரிவுகளுக்குள்ள வாற காணிகள பாக்க மக்களுக்கு அனுமதி கிடைச்சது. ஆனால் இங்க வந்து பாத்தால், விடுபட்ட இடங்கள் எதுவும் சனம் குடியிருந்த பகுதியில்ல. தோட்டக்காணிகளத்தான் விட்டிருக்கினம். அதுவும், குறுக்கு குறுக்கா முட்கம்பி வேலியள். ஒட்டகப் புலம், சோலைக் கட்டி, மணமூலை கிராமங்கள்தான் சனம் வாழ்ந்த கிராமங்கள். ஆனால் அந்தக் கிராமங்களில, தெரிவுசெய்து தோட்டக்காணிகளையா விட்டிருக்கினம். இங்க 106 குடும்பங்கள் வந்திருக்கினம், ஆனால் 25 குடும்பங்களுக்குதான் காணிகள் கிடைச்சிருக்கு. மிகுதிச் சனங்கள் பாவம். பெரிய ஏமாற்றந்தான். பாருங்கோ, இதுதான் ஒட்டகப்புலம், ஒட்டகப் புலம் எண்டால் எலும்பு முறி மருத்துவத்துக்குப் பேர் போன இடம். கேள்விப்பட்டிருப்பியள். இப்ப இந்த இடம் முழுவதையும் ஆமி பிடிச்சி தோட்டம் செய்யிறாங்கள். இதெல்லாம் விடுவிக்கேல்ல” இந்தக் கதையை சொல்லிக்கொண்டே 5 கிலோமீற்றர்களுக்கு மேல் சுற்றளவு கொண்ட, இராணுவம் கையகப்படுத்தி விவசாயம் செய்கின்ற நிலத்தை சுற்றிக்காட்டினார் அவர்.
 
அதைப் பார்த்துவிட்டு மீளத் திரும்புகையில் வெறுமையான முகங்களுடன் சனம் சொந்த ஊரை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது.
Vasavilan14.jpg
 
 

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

எதை எடுத்தாயோ
அது இங்கிருந்தே எடுக்கபட்டது
இன்று உன்னுடையது
நாளை இன்னொருவருடையது
         --------கீதை-------

 

அழிந்த கோவிலில் விகாரை கட்டியது
எனக்கு பிழையாக தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமா என்றாலும் விடிவு தெரியுது .

 

நல்லவேளை யுத்தம் முடிந்ததும் மகிந்தா போனதும்  இல்லாவிட்டால் தமிழர் இருந்த மண்ணின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும் .

 

முப்பது வருடங்கள் யுத்தத்தைத்தை நடாத்தியவர்களும்  அதற்கு பணம் கொடுதர்வர்களும் மகிந்தாவை ஜனாதிபதியாக கொண்டுவந்தவர்களும் அதை ராஜதந்திரம் என்றவர்களும் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

சங்கலிமன்னன் ஆங்கிலேயருடன் சண்டை போடாது விட்டிருந்தால்
ஆங்கிலேயர் போகும்போது தமிழர் பகுதியை சிங்கள பகுதியுடன் இணைத்திருக்க மாட்டார்கள்.
புலிகளுக்கு போராடும் வேலையே வந்திராது.

சங்கிலி மன்னனின் கூற கெட்ட வேலையால்
புலிகள் 30 வருடம் போராட வேண்டி வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மருதங்கேணி.. இவர்கள் இப்படியும் எழுதுவார்கள்.

 

பிக் பாங் நடக்காட்டில்.. பூமியே தோன்றி இருக்காது.மனிதனும் தோன்றி இருக்கமாட்டான். புலிகளும் தோன்றி இருக்கமாட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் நல்லபடியா நடந்து கொண்டிருந்திருக்கும்.. இன்னொரு ஆங்கிலில..!  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமா என்றாலும் விடிவு தெரியுது .

 

நல்லவேளை யுத்தம் முடிந்ததும் மகிந்தா போனதும்  இல்லாவிட்டால் தமிழர் இருந்த மண்ணின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும் .

 

முப்பது வருடங்கள் யுத்தத்தைத்தை நடாத்தியவர்களும்  அதற்கு பணம் கொடுதர்வர்களும் மகிந்தாவை ஜனாதிபதியாக கொண்டுவந்தவர்களும் அதை ராஜதந்திரம் என்றவர்களும் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு .

அர்ஜுன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி

பலாலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட சேதங்களுக்கு

நான் பொறுப்பு ஏற்கிறேன்.

பாதிப்புக்கு  உள்ளானவர்கள் என்னுடன் மேற்கொண்டு தொடர்பு

கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமா என்றாலும் விடிவு தெரியுது .

நல்லவேளை யுத்தம் முடிந்ததும் மகிந்தா போனதும் இல்லாவிட்டால் தமிழர் இருந்த மண்ணின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும் .

முப்பது வருடங்கள் யுத்தத்தைத்தை நடாத்தியவர்களும் அதற்கு பணம் கொடுதர்வர்களும் மகிந்தாவை ஜனாதிபதியாக கொண்டுவந்தவர்களும் அதை ராஜதந்திரம் என்றவர்களும் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு .

மகிந்தவிட்கு முட்டு கொடுத்தவை என்ன மாதிரி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் கொஞ்சமா என்றாலும் விடிவு தெரியுது .

 

நல்லவேளை யுத்தம் முடிந்ததும் மகிந்தா போனதும்  இல்லாவிட்டால் தமிழர் இருந்த மண்ணின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும் .

 

முப்பது வருடங்கள் யுத்தத்தைத்தை நடாத்தியவர்களும்  அதற்கு பணம் கொடுதர்வர்களும் மகிந்தாவை ஜனாதிபதியாக கொண்டுவந்தவர்களும் அதை ராஜதந்திரம் என்றவர்களும் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு .

 

சரியாச்சொன்னியள் அண்ணை......
உங்களை மாதிரி நாலுபேர் இருக்கிறபடியாலைதான் நாட்டிலை மழையே பெய்யுது....smilie_wet_126.gif
உங்களைப்போன்றவர்கள் எமக்கு கிடைத்தது யாம் செய்த தவத்தின் பலன்.  :icon_mrgreen:

கொஞ்சம் கொஞ்சமா என்றாலும் விடிவு தெரியுது .

நல்லவேளை யுத்தம் முடிந்ததும் மகிந்தா போனதும் இல்லாவிட்டால் தமிழர் இருந்த மண்ணின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும் .

முப்பது வருடங்கள் யுத்தத்தைத்தை நடாத்தியவர்களும் அதற்கு பணம் கொடுதர்வர்களும் மகிந்தாவை ஜனாதிபதியாக கொண்டுவந்தவர்களும் அதை ராஜதந்திரம் என்றவர்களும் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு .

முன்பு எப்போதும் மகிந்தவை மட்டுமல்ல அதற்கு முந்திய எல்லா சிங்கள அரசின் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறை யுத்தத்தை ஆதரித்த, அதற்கு உதவி செய்த, இப்ப வேசம் போட்டு மக்களை ஏமாற்ற நினைக்கும் நீங்களும் தான் பொறுப்பு.

Edited by trinco

உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் செல்ல சி.வி.க்கு தடை 

article_1427028053-Cv01.jpg

 

 

வசாவிளான் கிழக்குப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்பாதுகாப்பு வலய எல்லைக்குள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை உட்செல்ல விடாது இராணுவத்தினர், ஞாயிற்றுக்கிழமை (22) தடுத்து நிறுத்தினார்கள்.

 

25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்படவுள்ள வசாவிளான் கிழக்குப் பகுதியை பார்வையிடுவதற்காக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அங்கு சென்றார்.

 

ஒட்டகப்புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்தில் மீளக்குடியேறவுள்ள மக்களை சந்தித்தபின், விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடுவதற்காக சென்றார். விடுவிப்பதாகக்கூறப்பட்ட 197 ஏக்கர் காணிகளுக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் வெள்ளிக்கிழமை (20) கட்டுப்பாடு விதித்தனர். அதே கட்டுப்பாட்டை வடமாகாண முதலமைச்சருக்கும் இராணுவத்தினர் விதித்தனர். புதிய உயர்பாதுகாப்பு வலய வேலியை தாண்டி முதலமைச்சர் உள்ளே செல்ல இராணுவத்தினர் இடமளிக்கவில்லை. ஆனால், அந்த வேலி விடுவிக்கப்பட்ட காணிகளை உள்ளடக்கியதாகவே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1427028076-Cv02.jpg

 

article_1427028090-Cv03.jpg

 

http://www.tamilmirror.lk/142347#sthash.UgHyf9GT.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் கொஞ்சமா என்றாலும் விடிவு தெரியுது .

 

நல்லவேளை யுத்தம் முடிந்ததும் மகிந்தா போனதும்  இல்லாவிட்டால் தமிழர் இருந்த மண்ணின் அடையாளமே இல்லாமல் போயிருக்கும் .

 

முப்பது வருடங்கள் யுத்தத்தைத்தை நடாத்தியவர்களும்  அதற்கு பணம் கொடுதர்வர்களும் மகிந்தாவை ஜனாதிபதியாக கொண்டுவந்தவர்களும் அதை ராஜதந்திரம் என்றவர்களும் இவை எல்லாவற்றிற்கும் பொறுப்பு .

 

 

ஓபரேசன் லிபரேசன் நடந்திச்சிது பாருங்கோ. சனம் எல்லாம் அல்லோல கல்லோலம். அகதியாய் மூட்டை முடிச்சுடன் நாலு பக்கத்தால் ஓட்டம். பிறகு இந்தியன் ஆமி வந்தான் பாருங்கோ. திரும்பவும் ஊருக்கு சந்தோசப்பட்டுக்கொண்டு மூட்டை முடிச்சுடன் திரும்பல். பின்னம் வந்தவன் பாருங்கோ முன்னம் இருந்தவனை விட கொடூரன். முன்னவன் சாப்பாடு தராமல் அடிச்சான். பின்னவன் சாப்பாடு தந்த்போட்டு அதைவிட மோசமாய் அடிச்சான்.

 

இருபத்து அஞ்சு வருசத்துக்கும் மேலாய் துரத்தப்பட்டு கடைசிவரை ஒன்றுமே இல்லாததை விட வெறும் மண் தரை புழுதியை தொட்டு தடவுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். அகதியாய் ஊரைவிட்டு ஓடவேண்டி வந்திருந்தால் அதன் வலி என்ன என்று தெரியும். எத்தனை சனங்கள் ஊருக்கு திரும்பி போக ஒரு நாளாவது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஏங்கி ஏங்கி ஏக்கத்தோடையே செத்துப்போச்சுதுகள். அப்படிப்பார்க்கேக்க இப்போது வெறும் காடு, சூனியத்தை பார்ப்பதற்காவது ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது போற்றுதற்குரியது.

 

சுடுகாடாக்கிய பழையவன் போய் இப்போது  முட்கம்பி வேலி போடுகிற புதியவன் வந்து இருக்கிறான். அதிகம் எதிர்பார்த்து ஏமாறுவது எங்கள் வழக்கம். ஊருக்கு போக விடுறம் என்று சொல்லிக்கொண்டு சரி ஏதோ சனத்தை கடைசியில் முட்கம்பி வேலிக்குள் திரும்பவும் தள்ளாவிட்டால் சரி.

 

எல்லாம் யுத்தம் தந்த வடு. இதற்கு இந்தியா தொடக்கம் பலரும் பொறுப்பு பாருங்கோ. இந்தியா ஆரம்பத்தில் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியும் வழங்கி மண்டையை கழுவி விடாமல் போயிருந்தால் இவ்வளவு அழிவுகள் வந்திருக்காதே. 

jaffana-vasavilan.jpg
 
"எங்­க­ளுக்கு நஞ்சை வாங்கித் தாருங்கள். நாங்கள் இந்த இடத்­தி­லேயே குடித்­து­விட்டு எங்கள் உயிரை மாய்த்துக் கொள்­கிறோம். நாம் மோச­மாக ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். முன்னர் ஒட்­ட­கப்­புலம் கிரா­மத்­துக்கு வைத்­திய தேவை­க­ளுக்­காக சென்று வந்தோம். தற்­பொ­ழுது அங்கு செல்ல முடி­யா­த­வாறு அந்தக் கிரா­மத்தைச் சூழ புதி­தாக வேலிகள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன. மேலும் விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யா­னது மக்கள் குடி­யி­ருப்­பு­க­ளற்ற விவ­சாய நிலங்­க­ளாகும்"
 
இவ்­வாறு கடந்த 13 ஆம் திகதி வெள் ளிக்­கி­ழமை விடு­விக்­கப்­பட்ட பகு­தியைப் பார்­வை­யிட வந்த வயோ­திபத் தாயொ­ருவர் உட்­பட பலரும் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் தமது உள்ளக் குமு­றலைக் கொட்டி அழுது புலம்­பி­னார்கள். அத்­துடன் மக்­க­ளிடம் மீண்டும் கைய­ளிக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளி­லுள்ள வீடுகள், கட்­ட­டங்கள், பொது இடங்கள், கிண­றுகள் என்­பன அழிக்­கப்­பட்டு வெறும் கற்­கு­வி­ய­லாகக் காட்சி தரு­வ­தா­கவும் மீளக்­கு­டி­யேறச் சென்ற மக்கள் மிகுந்த விசனம் தெரி­விக்­கின்­றனர்.
 
இதே­வேளை, உயர் பாது­காப்பு வல­ய­மாக இருந்த வசா­விளான் கிழக்கு பகு­தியை கடந்த 13 ஆம் திகதி வெள் ளிக்­கி­ழமை பார்­வை­யிட அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டது. 1990 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்­பட்ட அசா ­தா­ரண சூழ்­நிலை கார­ண­மாக இடம்­பெ­யர்ந்த இப்­பி­ர­தேச மக்கள் பல்­வேறு துய­ரங்­க­ளுக்கு மத்­தியில் கடந்த 25 வரு­டங்­க­ளுக்கும் மேலாக 30ற்கும் மேற்­பட்ட இடங்­களில் இடம் மாறி மாறி அக­தி­க­ளாக வாழ்ந்து வந்­தனர்.
 
இந்த நிலையில் புதிய அரசு பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து மீண்டும் அவர்­களின் சொந்த இடங்­களில் மீள­கு­டி­ய­மர அனு­ம­தி­ய­ளிக்­கப்­படுமெனக் கூறப்­பட்­டது. அதன் தொடர்ச்­சி­யாக, புதிய அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் கீழ் அர­சாங்கம் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட நிலங்­களை அந்த மக்­க­ளி­டமே வழங்­கு­வ­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­டமும் உலக நாடு­க­ளி­டமும் தெரி­வித்து வந்­துள்­ளது.
 
இதற்­க­மைய கடந்த காலத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த மீள்­கு­டி­யேற்ற செய­ல­ணிக்­குழு, இரா­ணுவத் தரப்பு மற்றும் அர­சாங்க அதி­பர்கள், பிர­தேச செய­லா­ளர்கள் மத்­தியில் பல்­வேறு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் மேற்­கொண்டு சுமார் 1100 ஏக்கர் காணி­களை பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருந்­தது.
 
இத்­த­கைய நிலையில் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­பாக கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம அலு­வலர் பிரிவின் ஒரு பகு­தியும் கடந்த 13 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை வலி.வடக்கு பிர­தேச செய­லாளர் பிரிவின் கீழ் உள்ள வசா­விளான் கிழக்கு பகு­தியும் மக்கள் பார்­வை­யி­டு­வ­தற்­காக அனு­ம­திக்­கப்­பட்­டது.
வசா­விளான் கிழக்கு பகு­தியை பார்­வை­யி­டு­வ­தற்­காக அச்­சு­வேலி குட்­டி­யப்­புலம் பகு­தியில் ஒன்­று­கூ­டிய மக்கள் தமது பதிவு நட­வ­டிக்­கைளை மேற்­கொண்டு அப்பகு­தியில் உள்ள ஆலய முன்­றலில் ஒன்­று­கூடி மத வழி­பா­டு­களில் ஈடு­பட்ட பின்னர் தமது இடங்­களை பார்­வை­யிட சென்­றனர்.
 
இந்த பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­பட்ட பகு­தி­யா­னது, வசா­விளான் கிழக்கு ஜே 244 கிராம அலு­வலர் பிரிவு மற்றும் ஜே 252 பலாலி தெற்கு கிராம அலு­வலர் பிரிவின் ஒரு பகு­தி­யாகும். இங்கு 197ஏக்கர் நிலப்­ப­ரப்பை உள்­ள­டக்­கிய நிலமே விடு­விக்­கப்­பட்­டுள்­ளது.
 
விடு­விக்­கப்­பட்ட நிலத்­தினை பார்­வை­யிட சென்ற மக்­க­ளுக்கு அங்கு சென்ற உடனே ஏமாற்றம்தான் காத்­தி­ருந்­தது. குறிப்­பாக, பல்­வேறு இடர்­பா­டு­களின் மத்­தியில் ஒட்­ட­கப்­புலம் அம­லோற்­பவ அன்னை ஆல­யத்­திற்கு இரா­ணு­வத்­தி­னரின் அனு­ம­தி­யுடன் வரு­டாந்த வழி­பாட்­டிற்கு சென்­று­வர அனு­மதி வழங்­கப்­பட்ட நிலையில் பின்னர் அசா­தா­ரண சூழலால் அங்கு செல்­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது.
 
அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு மீண்டும் இரா­ணு­வத்­தி­னரின் உத­வி­யுடன் அவ்வால­யத்­திற்கு மாதத்தின் முதல் சனிக்­கி­ழ­மை­க­ளிலும் மற்றும் ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ மை­க­ளி லும் திருப்­பலி பூசை மற்றும் வழி­பாட்­டிற்கு இரா­ணு­வத்­தி­னரின் அனு­மதி வழங்­கப்­பட்­டது. இந்த ஆலய வழி­பாட்­டிற்கு வெளி­நா­டு­களில் வாழும் புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­களால் நிதி வழங்­கப்­பட்டு ஆலயம் புன­ர­மைப்பு செய்­யப்­பட்டு பூஜை வழி­பா­டுகள் இடம்­பெற்று வந்­தன.
 
இதன்­போது பல்­வேறு இடங்­களில் இருந்து மக்கள் வாக­னங்­களில் ஆல­யத்­திற்கு வந்து சென்­றனர். தற்­போது இப் பகுதி விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்ட நிலையில், கோயி­லுக்கு உட்­செல்லும் வழியை தவிர ஏனைய பகு­தி­களில் புதி­தாக வேலிகள் அமைக்­கப்­பட்டு காட்­சி­ய­ளிக்­கின்­றன.
 
குறிப்­பாக, ஒட்­ட­கப்­புலம் பகு­தி, முன்பு பல்­வேறு வைத்­திய தேவை­க­ளுக்­காக மக்கள் சென்று வந்த மிகவும் பிர­சித்தி பெற்ற இட­மாகும். இங்கு பார்­வை­யிட வந்த மக்­களில் ஒட்­ட­கப்­புலம் கிரா­மத்தை சேர்ந்த மக்­களே அதிகம் வந்­தி­ருந்­தார்கள். ஆனால், இரா­ணு­வத்­தினர் அவர்­களின் இடங்­களை பார்­வை­யிட அனு­மதி வழங்­காது அந்த கிரா­மத்தை சூழ வேலிகள் அமைத்து வரு­கின்­றனர். தற்­போது விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யா­னது மக்கள் குடி­யி­ருப்­புகள் அற்ற விவ­சாய நிலங்­க­ளே­யாகும். மக்­களை குடி­யி­ருப்­புக்கள் உள்ள பகு­திக்கு செல்ல அனு­ம­தித்­தாலே இந்த பகு­தியை பயன்­ப­டுத்த முடியும் என மக்கள் தெரி­விக்­கின்­றனர்.
 
விடு­விக்­கப்­பட்ட பகு­தி­யொன்­றினை பார்­வை­யிட்ட குடும்­பஸ்தர் ஒருவர் தெரி­விக்­கையில், இப்­ப­கு­தியை பார்­வை­யி­டு­வ­தற்­காக 500ற்கும் மேற்­பட்­ட­வர்கள் வருகை தந்­த­போது 5 பேரின் வீடு­க­ளையே அடை­யாளம் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஏனைய வீடுகள் விடு­விக்­கப்­ப­டாத பகு­திக்­குள்­ளேயே உள்­ளன. 2010ஆம் ஆண்­டிற்கு பின்னர் இப் பகு­தி­களில் உள்ள ஆல­யங்­க­ளுக்கு திரு­விழாக் காலங்­க­ளின்­போது அனு­மதி வழங்­கப்­பட்­ட­போது காணப்­பட்ட வீடுகள், கட்­ட­டங்கள், தற்­போது இடிக்­கப்­பட்­டுள்­ளன. மக்­க­ளிடம் மீள கைய­ளிப்­ப­தாக அறி­விக்­கப்­பட்ட பின்னர் பல கட்­ட­டங்கள், வீடுகள், பொது இடங்கள் மற்றும் கிண­றுகள் என்­பன இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.
 
புதிது புதி­தாக இரா­ணு­வத்­தினர் காணி­களை கைய­கப்­ப­டுத்­து­வ­தனால் தங்­கி­யி­ருப்­ப­தற்­கான வீடுகள் அனைத்தும் இரா­ணு­வத்­தினர் வசமே உள்­ளன. இரா­ணு­வத்­தி­னரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்ட காணி­களை சொந்த மக்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கப்­படும் என கூறி வரு­கின்ற நிலையில், இரா­ணுவ முகாம்­களோ அல்­லது இரா­ணு­வத்­தி­னரின் பயன்­பாட்­டிலோ இல்­லாத இடங்­களைக் கூட இரா­ணு­வத்­தினர் புதி­தாக கைய­கப்­ப­டுத்தி வைத்துள்ளனர் என்றார்.
 
விடுவிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த இன்னொருவர் கருத்து தெரிவிக்கையில்,
1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து நாங்கள் மூன்று மாவட்டங்களில் அதாவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் (நலன்புரி முகாம்கள் உட்பட) இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்துவருகின்றோம். இந் நிலையிலேயே எமது பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆவலுடன் வந்தபோது எமது பகுதி இன்னும் விடுவிக்கப்படாத பகுதியிலேயே உள்ளது. இதனால் நாம் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கிறோம் என்றார்.
குறிப்பாக, வேலிகள் அடைக்கப்பட்ட பகுதிக்குள் இராணுவத்தினர் விவசாய செய்கையில் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கோ கூட்டமைப்பு இணக்க அரசியல் செய்து எல்லாத்தையும் மீட்டு தருவினம்.

காணி கையளிப்பு...

 

article_1427096338-land01.jpg

 

வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் 25 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட 430.6 ஏக்கர் காணி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை (23) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

article_1427096363-land03.jpg

 

article_1427096396-land05.jpg

 

article_1427096404-land06.jpg

 

article_1427096420-land08.jpg

 

article_1427096429-land09.jpg

 

article_1427096478-land02.jpg

 

http://www.tamilmirror.lk/142402#sthash.DQEV3h2f.dpuf

காணி விடுவிப்பு இப்போது ஆரம்பமே! இனி அது தொடரும் என்கிறார் ஜனாதிபதி
 
mythiri%20554565645.jpg
 
தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் பயம்,பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்குவதன் மூலமே இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் ஏற்படுத்தமுடியும். தமிழ் மக்களிடத்திலிருக்கும் பயம், பீதி, சந்தேகம் என்பவற்றை நீக்கவேண்டுமாயின் அவர்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப்பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதை நாம் உணர்வோம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
 
வயாவிளானில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியில் பொதுமக்களது காணிகள் சிலவற்றை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை முற்பகல் வயாவிளானில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
புதிய அரசாங்கம் என்ற வகையிலேயே நாங்கள் மக்களுடைய எல்லாப் பிரச்சினைகளையும் படிப்படியாகத் தீர்த்துவைத்துவருகிறோம். குறிப்பாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளை நாம் முன்னுரிமைப்படுத்தி தீர்த்துவைக்க முற்பட்டுள்ளோம். இப்படியான வேலைகள் ஆரம்பிக்கப்படும்போது சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் குறைபாடுகள் இருந்தாலும் கூட நாம் எமது வேலைகளைத் தொடர்ந்தால்த்தான் அவற்றையும் நிவர்த்தி செய்து நிறைவேற்றமுடியும். மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதற்காகவே நாங்கள் இந்த புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளோம்.
 
நாங்கள் உங்கள் பகுதிகளுக்கு வரும்போது இங்குள்ள குறைபாடுகள், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து உங்கள் அரசியல் தலைவர்கள் எங்களுக்குத் தெளிவாகத் தெரியப்படுத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் உங்கள் பிரச்சினைகள் பற்றி அரசியல் தலைவர்கள் எடுத்துரைக்கிறார்கள். எனவே தமிழ் மக்களாகிய உங்களுக்கு பாரதூரமான பல பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் இதன் வாயிலாக அறிந்துவைத்துள்ளோம்.
 
நீங்கள் உங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் தேர்தலில் எனக்கு வாக்களித்தீர்கள். எனவே நான் தெட்டத்தெளிவாக உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் எமது ஆட்சிக்காலத்தின்போது தீர்வு காணுவோம் என்பதை நான் இந்தச் சந்தர்ப்பத்திலே உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்திலும் நாம் உங்கள் மத்தியில் மேடைகளில் பேசுவதற்காக வரமாட்டோம். பதிலாக கிராமங்கள்தோறும் சென்று உங்கள் பிரச்சினைகள் குறித்து உங்களிடமே நேரடியாகப் பேசி தீர்வு காண்பதே எமது அடுத்த நடவடிக்கைகளாக இருக்கும்.
 
புதிய அரசாங்கம் என்ற வகையிலேயே மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முக்கிய பல திட்டங்களை நாம் முடுக்கிவைத்துள்ளோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே மிக மிக முக்கியமானது. இதற்காக நாம் சந்தேகத்தையும் பீதியையும் இல்லாமல் நீக்கிவிடவேண்டும்.
 
தமிழ் மக்களது பிரச்சினைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு அவற்றுக்குத் தீர்வு வழங்குவதன் மூலம்தான் உங்களுடைய அந்த சந்தேகத்தையும் பீதியையும் இல்லாமல் செய்யமுடியும். நாம் இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை கடந்த மாதம் உருவாக்கி செயற்படுத்தி வருகிறோம். இதில் முக்கியமான பணிகளை முன்னெடுத்து எமக்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இருக்கிறார்.
 
உங்களது பிரச்சினைகளை நாங்கள் மிகவும் அவதானமாகச் செவிமடுத்துவருகிறோம். எனவே படிப்படியாக உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்போம். உங்களுடைய மனங்களில் இருக்கும் சந்தேகம், பயம், பீதி எல்லாவற்றையும் தீர்க்கக்கூடிய விதத்திலே நாம் உங்கள் பிரச்சினைகளை அவதானித்து வருகிறோம். இன்று இந்த நிகழ்வு என்பது எமது ஆரம்பமே தவிர இது ஒரு முடிவு என்று நீங்கள் எண்ணிவிடக்கூடாது. இதனை முடிவுறுத்த எமக்கு இன்னும் சில காலம் தேவைப்படுகிறது.
 
இன்று நாங்கள் உங்கள் காணிகளை கையளிப்பது மட்டுமல்லாமல், இங்கே அழிந்துபோன கட்டுமானங்களை எல்லாம் மீளமைத்துத்தருவதும் எமது நோக்கமாகவுள்ளது. இந்தப்பிரதேசத்துக்கு வந்து இந்தக் காணிகளைப் பார்த்தபோது எமது உள்ளத்திலே மிகவும் மனவேதனை ஏற்பட்டுள்ளது. நீங்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இந்தப்பகுதியை பார்த்தால் அது நன்றாகத் தெரியும்.
 
மாத்தளை,கண்டி, நுவரெலியா பிரதேசங்கள் போல அல்ல இந்த பிரதேசங்கள். இங்குள்ளவர்கள் குடிதண்ணீருக்கு என்ன செய்கிறார்கள் என்று நான் வடக்கு முதலமைச்சரிடம் கேட்டேன். அப்போதுதான் மக்கள் குடிதண்ணீருக்காக பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளனர் என்று தெரியவந்தது. காணிகளை விடுவிப்பது மட்டுமன்றி, உங்களுக்கு வாழக்கூய சூழலையும் சுற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது.
 
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே போன்று நாங்களும் உங்கள் மீது கவனம் செலுத்துவோம். ஒரு பிள்ளை அழும்போது அது எதற்காக அழுகிறது என்று பார்க்கவேண்டும். அதேபோன்று வடபகுதி மக்களது பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் வடபகுதியில் பெரும் மாற்றத்தை கொண்டுவரவிருக்கிறோம். அதற்குத் தேவையான எல்லா வசதிகளையும் நாம் ஏற்படுத்திக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். வடக்குமாகாண முதலமைச்சருக்கும் வடக்கு மாகாண சபைக்கும் நாம் பூரண வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம். வடபகுதி மீனவர் பிரச்சினை பற்றியும் நாம் கருத்திலெடுத்துள்ளோம். மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட வேலைத்திட்டத்தையும் நாம் ஆரப்பிப்போம். - என்றார். -
 
 
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.