Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயிலில் மோதிப் படுகாயமடைந்த யாழ்.இந்து மாணவன் சாவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம்  செலவில்லாத

மேலும் தொடர்ந்து பராமரிக்க செலவளிக்க தேவையற்றதும்

அதே நேரம் மக்களை விழிப்பூட்டவும்

ஆபத்தான கடவைகளை மாகாண அரசின் உதவியுடன் தேர்வு செய்து

அருகே இருபுறமும் பெரிய அறிவித்தல்களை  வைக்கலாம்

அத்துடன் அதிகம் புகையிரதம் செல்லாத இந்த வேளையில்

இத்தனை மணிக்கு புகையிரதம் வரும் என்பதை சிவப்பில்  போட்டுவிடலாம்...

வேண்டுமானால் அங்குள்ள மக்களின் உதவியோடு

அங்குள்ள உள்ளுர் அமைப்புக்களின் உதவியோடு

புகையிரதம்வரும் வேளையில் மட்டும் 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட அப்பகுதி மக்களில் ஒருவரை

(ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொருவரை)அந்த இடத்தில் நின்று சில நிமிடங்களை சிரமதான அடிப்படையில் (இலவசமாக)

தரும்படி கேட்கலாம்.....

இதில் அறிவித்தல்களை வைக்கும் செலவை வேண்டுமானால் புலம்பெயர் உறவுகள் பொறுப்பெடுக்கலாம்...

  • Replies 80
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் உங்கள் கருத்து ஆக்கபூர்வமானது. எனினும் ஒரு கேள்வி ரயில்வே திணைக்களத்தின் நிர்வாக விடயங்களில் தலையீடு செய்ய வடமாகாண சபையால் முடியுமா?

அல்லது Contract  அடிப்படையில் ரயில்வே திணைக்களத்திற்காக வடமாகணசபை இந்த பணியை பொறுப்பெடுத்து ரயில்வே திணைக்களத்திடம் பணத்தை அறவிடலாமா?  அதற்கு இலங்கை சட்டத்தில் இடமிருக்கிறதா?

ட்ரிங்கோ! கேள்வி நியாயமானது. அதனால் தான் பாதைகள் எந்தத் திணைக்களத்திற்குச் சொந்தமாக இருந்தாலும், பாதுகாப்பு ஏற்பாட்டை இன்னொரு அமைப்பு எடுக்கலாம் என்றேன். அனேகமாக நோக்கம் நல்லதாக இருந்தால் யாரும் தடைபோட மாட்டார்கள், ஒத்துழைக்கவே செய்வார்கள்.

வவுனியாவில் நான் இருந்த போது சில தனியார்  கல்வி நிலையங்கள் தங்கள் மாணவர்கள் பாதுகாப்பாகக் வீதியைக் கடக்க பாதசாரிகள் கடவையை RDA ஓடு சேர்ந்து அமைத்ததைக் கண்டிருக்கிறேன். வீதி RDA இற்குரியது. மஞ்சள் கோட்டை, அறிவித்தலை RDA அமைக்கும். பகுதியளவிலான செலவை கல்வி நிலையம் ஏற்றுக் கொள்ளும்- இது சாத்தியமானது. சட்டத்தில் இடமுண்டா தெரியாது!

இப்போது பழைய சிக்னல் முறை இல்லாமல் நிற சிக்னல் முறை வவுனியாவில் இருந்து காங்கேசன்துறைவரை இருப்பதாக வாசித்த ஞாபகம். அப்படி இருந்தால் இது ஒரு பெரிய வேலையே இல்லை. யாராவது மணிகட்டணும் பூனைக்கு. ஆனால் எலி எல்லாம் பிசி தேர்தலில்.

இந்து மாணவனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கெளரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு,

அண்மையில் ரயில் கடவையில் ஒரு மாணவன் அநியாயமாக உயிர் இழந்த சம்பவம் பற்றி நீங்களறிந்திருப்பீர்கள்.

வடமாகாணத்தில் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்தும் நடைபெராது இருக்க, வடமாகாண சபையால் ஒரு பாதுகாப்பு திட்டம் ஒருங்கமைக்கப் பட வேண்டும் என்பதே எமது விண்ணப்பம்.

யாழ் எனும் ஒரு கருத்து களத்தில் கீழ் காணும் திரியில் பல புலம்பெயர்ந்த மக்கள் தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

இதில் எவ்வகையான பாதுகாப்பு முறை சிறந்தது என்பது முதல் பல விடயங்கள் அலசப்பட்டுள்ளன.

தயவு கூர்ந்து இதை கருத்தில் எடுத்து விரைந்து செயல்ப்படுவீர்களா?

ஒரு ஆசிரியர் என்ற வகையிலும், செயல்திறன் கூடிய வடமாகாண அமைச்சர் என்ற முறையிலும் உங்கள் மேலான பங்களிப்பினை எதிர்பார்த்து நிக்கிறோம்.

மேலும் தொடர்பு கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட யாழ் கள திரியிலோ அல்லது இந்த மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

------------///-/

இது ஓகேயா?

என் மின்னஞ்சலில் அனுப்புவதாயின் பெயர் போட முடியாது. மொட்டைக் கடிதம் போல் போடுவது நல்லாயிராது.

வேறு யாரும் தில்லானவர்கள் சொந்த பெயரில் அனுப்ப சம்மதம் என்றால் சொல்லவும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம் செய்தீர்கள்

வாழ்த்தி வரவேற்கின்றேன்..

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அனுப்பேல்ல விசுகு.

அடைப்புக்குறிக்கு கீழே உள்ளதை வாசிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

சத்தியமா சுமந்திரனை எனக்குத்தெரியாது.

விக்கியுடனான பரிட்சயத்தை (அவர் அரசியலில் இறங்கியதால்) புதுப்பிக்க விரும்பவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டா குற்றம் என்று எழுதுகிறீர்கள்?

ரயில் கடவையில் ஒரு வருடத்துக்கு 3 பேர் படி அடிச்சு கொண்டு தமிழர் விகிதாசாரத்தை குறைக்கலாம் எண்டு சில மோட்டுத்தமிழர் நினைக்கலாம் ஆனால் சிங்களவர் அந்தளவு மோடையர் அல்ல.

சிறிது தெளிவான சிந்தனை உள்ளவர்களுக்கு விளங்கும்.

முட்டையில் மயிர் பிடுங்கும் புத்திசீவிகளுக்கு மட்டும் சில மொக்குகள் எழுதுவது   விளங்காது.விகிதாசாரம் குறைப்பு என நான் எழுதியது பொதுவானது.

அதுதான் உண்மையிலேயே   சிங்களத்தின் முழு நோக்கம்.

ஒரு பக்கம் சிங்களக்குடியேற்றம்.மறுபக்கம் முஸ்லீம்களின் குடியேற்றம் மற்றும் இனப்பெருக்கம். இதவிட ராணுவ அச்சுறுத்தலால் மக்கள் வெளியேற்றம். தொடர்ந்து நடக்கும் கைதுகள் காணாமற்போகச் செய்தல்

அத்துடன் இப்படியான தடுக்கக்கூடிய இழப்புக்கள் எனப் பல வழிகளிலும்

தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவது உண்மை இல்லையா?

கோசான் அண்ணே. அரிவரியிலிருந்து என்னால் பாடம் நடத்தமுடியாதது எனக்குக் கவலை அளிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமியை விடக்கூடாது - ராணுவ பிரசன்னத்தை குறையுங்கோ எண்டு நாக்கு வரள குழறிப்போட்டு நாங்களே ஆமியை குடிமனைகளுக்க கூப்பிடுவதா?

அப்படி ஆமி நிண்டா ஐயோ எல்லாம் ராணுவமயம் என்று முதலில் கூவப்போவது நீங்கள்தானே?

இதைத்தான் ஊரில் சொல்லுவீனம் "பிறண்ட வழத்துக்கு குறி சுடுவது என்று" :)

உங்கள் கருத்தைப்பார்த்தால் இப்போது ராணுவம் ஏதோ காட்டுக்குள்ளும்

மக்கள் நடமாட்டம் இல்லாத வெட்டை வெளிகளிலும்  இருப்பது போல இருக்கின்றது.

விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமம் ஒரு உதாரணம்.

சண்டையும் இல்லை வேலை வெட்டியும் இல்லை என்றால் வெளியேறலாம்தானே என்னத்திற்கு இன்னும் அங்கெ இருக்கின்றார்கள்.வேலை வெட்டி  இல்லாவிட்டால் இப்படியான வேலைகளிலும் ஈடுபடுத்தப்படலாம்தானே.

உதவித்திட்டம் ஏதும் இருந்தால் ஐங்கரநேசன் சேர் உடன் தொடர்பு கொள்ளலாம்

கருத்துக்கள் மட்டும் எனில் மீரா தந்த முகவரிக்கு அனுப்ப முடியும்

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பாடசாலை மட்டங்களில் நடத்தப்படவேண்டும்

இலங்கையின்(சொறிலங்காவின்) அனைத்து பகுதிக்கும் புகையிரதத்தில் சென்றிருக்குறேன், எங்கும் பாதுகாப்பு வேலியை பார்த்ததில்லை
 
இங்கிலாந்தில் Northholt park ஸ்டேஷனில் என் கண்முன்னால் ஒரு கறுப்பு இனத்தவர் இன்னுமொரு கறுப்பு இனத்தவரை வேகமாகவந்த ரயிலில் தள்ளிவீழ்த்தி கொலைசெய்தார (2009இல்)  
 
கொழும்பிலும் இவ்வாறு சம்பவங்கள் நடந்திருக்கின்றது 
 
விழிப்புணர்ச்சிதான் முக்கியம்  என்பதற்காக மட்டுமே சொல்லுகிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

கெளரவ அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களுக்கு,

அண்மையில் ரயில் கடவையில் ஒரு மாணவன் அநியாயமாக உயிர் இழந்த சம்பவம் பற்றி நீங்களறிந்திருப்பீர்கள்.

வடமாகாணத்தில் இவ்வாறான விபத்துகள் தொடர்ந்தும் நடைபெராது இருக்க, வடமாகாண சபையால் ஒரு பாதுகாப்பு திட்டம் ஒருங்கமைக்கப் பட வேண்டும் என்பதே எமது விண்ணப்பம்.

யாழ் எனும் ஒரு கருத்து களத்தில் கீழ் காணும் திரியில் பல புலம்பெயர்ந்த மக்கள் தம் கருத்துக்களை முன் வைத்துள்ளனர்.

இதில் எவ்வகையான பாதுகாப்பு முறை சிறந்தது என்பது முதல் பல விடயங்கள் அலசப்பட்டுள்ளன.

தயவு கூர்ந்து இதை கருத்தில் எடுத்து விரைந்து செயல்ப்படுவீர்களா?

ஒரு ஆசிரியர் என்ற வகையிலும், செயல்திறன் கூடிய வடமாகாண அமைச்சர் என்ற முறையிலும் உங்கள் மேலான பங்களிப்பினை எதிர்பார்த்து நிக்கிறோம்.

மேலும் தொடர்பு கொள்ள விரும்பினால் குறிப்பிட்ட யாழ் கள திரியிலோ அல்லது இந்த மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும்.

------------///-/

இது ஓகேயா?

என் மின்னஞ்சலில் அனுப்புவதாயின் பெயர் போட முடியாது. மொட்டைக் கடிதம் போல் போடுவது நல்லாயிராது.

வேறு யாரும் தில்லானவர்கள் சொந்த பெயரில் அனுப்ப சம்மதம் என்றால் சொல்லவும்.

இது தான் இன்றையநிலை

செய்ய

தனது பெயரைக்கொடுக்க

பொறுப்பெடுக்க எவரும் தயாராக இல்லை....

நான் எடுப்பேன்

ஏற்கனவே யாழில் ஒரு திட்டத்துக்கு பொறுப்பாக இருக்கின்றேன்

அது முடிய செய்கின்றேன்

என்ன இதுவும் எனது தம்பட்டத்தில் பதிவாகும்.... :(

விசுகு
 
உங்கள் முயற்சியில் ஒரு குடும்பமே வாழப்போகின்றது. தயவு செய்து சலித்துக் கொள்ளாதீர்கள். உங்களை மாதிரி முன் நின்று ஒரு திட்டத்தை ஆரம்பித்து நிறைபேற்றுபவர்கள்தான் எமது சமுதாயத்திற்கு தேவை.
 
"என்ன தவம் செய்தேன்
இந்த உறவுகளுடன் பழக என்றிருக்கிறது.....
வாழ்க வளமுடன் எல்லோரும்....."
 
இவ்வாறு எழுதிய நீங்களா மேற் சிவப்பில் குறிப்பிட்ட வரிகளை எழுதுவது. சில விடயங்களில் நானும் முதுகெலும்பற்றவன்தான். ஆனாலும் கருத்துகளில் சண்டை பிடித்தாலும் பல விடயங்களில் உங்களுடன் சேர்ந்து பயணிக்க விரும்புகின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

இது தான் இன்றையநிலை

செய்ய

தனது பெயரைக்கொடுக்க

பொறுப்பெடுக்க எவரும் தயாராக இல்லை....

நான் எடுப்பேன்

ஏற்கனவே யாழில் ஒரு திட்டத்துக்கு பொறுப்பாக இருக்கின்றேன்

அது முடிய செய்கின்றேன்

என்ன இதுவும் எனது தம்பட்டத்தில் பதிவாகும்.... :(

கருத்திட்டம்     

கருத்திட்டப் பிரதேசம்     

வடக்கு மற்றும் தலைமன்னார் பாதைகளில் சமிக்ஞை கொடுத்தல் மற்றும் தொலைத் தொடர்பாடல் முறைமையை புனர்நிர்மாணம் செய்தல்.     அநுராதபுரத்தில் இருந்து காங்கேசன்துறைக்கும் மற்றும் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் துறைக்குமான 310 கி.மீ.          Optical Fiber backbone மற்றும் வானொலித் தொடர்பாடலுடன் கூடிய நிற வெளிச்ச மற்றும் சமிக்ஞை கொடுத்தல் தொலைத் தொடர்பு முறைமையை பொருத்துவதை கருத்திட்டம் உள்ளடக்குகின்றது.

காலப்பகுதி     குறிப்புகள்

3 வருடங்கள்

http://www.railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=61&Itemid=68&lang=ta

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 09:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது.

இப்படி அவர்களின் இணையம் இருக்கின்றது.

ரயில்வே திணைக்களம் மத்தியுடன் தொடர்புள்ளது. மாகாண சபைக்கு அதன் அதிகாரங்கள் இல்லை. கோசான் அண்ணை எங்களுக்கு விளையாட்டுக் காட்டுகின்றார்.

காலப்பகுதி     குறிப்புகள்

3 வருடங்கள்

http://www.railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=61&Itemid=68&lang=ta

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011 09:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது.

உங்கள் இணைப்பில் கட்டணம் போன்ற விடயங்களே தெரிகின்றன. தயவு செய்து சரியான இணைப்பைத் தரமுடியுமா?

ஆனாலும் உங்கள் இணைப்பில் யாழ்பாணத்திற்குரிய எந்த கட்டணமும் இல்லை. 
 
யாழ்பாணத்திற்குரிய குறியீடு JFN

Edited by ஜீவன் சிவா

அதுதான் மேலே குறிப்பிட்டுள்ளேன். அவர்களின் இணையத்தளம் இறுதியாக 2011 இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அந்த நேரம் யாழ்ப்பாணம் வரை புகையிரதம் சென்றதா? சிவா அண்ணை

எனக்கு ஞாபகம் இல்லை.

அதுதான் மேலே குறிப்பிட்டுள்ளேன். அவர்களின் இணையத்தளம் இறுதியாக 2011 இல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

அந்த நேரம் யாழ்ப்பாணம் வரை புகையிரதம் சென்றதா? சிவா அண்ணை

எனக்கு ஞாபகம் இல்லை.

மன்னக்கவும் நீங்கள் கொடுத்த இணைப்பு 

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014 10:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

தயவு செய்து இணைப்பை சரி பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் இனவிகிதாசார குறைப்பை அவர்கள் கனகச்சிதமாக செய்கிறார்கள். ரெயில் விட்டுச் செய்யவில்லை. நீங்கள் "பொதுவாய் சொன்னேன்" எண்டு ஆட்டுக்க மாட்டை விட்டுட்டு என்னை ஏசுறியள்.

வேலை வெட்டி இல்லாத ஆமிக்காரனுக்கு ரயில் காவல் வேலை குடுக்கிறது மகா மொக்குத்தனம். ஓமந்தை முதல் மாவிட்டபுரம் வரை ஒவ்வொரு வீதிக்கும் ஒரு ஆமி சென்றி நிக்கிற மாரி ஆயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரெயில்வே கடவைக்கே காவலுக்கு லாயக்கில்லாத ஆமியா சிறிலங்கன் ஆமி :D

இலங்கை அரசியல் அமைப்பை மாற்ற அடுத்த திட்டம் போடுவம் . :icon_mrgreen:

இறந்த மாணவனுக்கு அஞ்சலியை செலுத்துவதை விட்டு ஆளுக்கு ஆள் பொரிமா தோண்டி கதை எழுதுகின்றீர்கள்  :(

இலங்கை அரசியல் அமைப்பை மாற்ற அடுத்த திட்டம் போடுவம் . :icon_mrgreen:

இறந்த மாணவனுக்கு அஞ்சலியை செலுத்துவதை விட்டு ஆளுக்கு ஆள் பொரிமா தோண்டி கதை எழுதுகின்றீர்கள் :(

நீங்க அந்தபொரிமாவை சாப்பிடுங்க.
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ வாத்து ( வாத்தியாரை செல்லமாய் சுருக்கி உள்ளேன்).

நான் உங்களுக்கு படம் காட்டவில்லை. ரெயில்வே மத்திய அரசினதே ஆயினும், வீதிக்கடவையை மாகாணசபை, உள்ளூராட்சி சபைகள் தன்னிச்சையாக நிறுவினால் என்ன என்ற ஜஸ்டீனின் எண்ணத்தில் உதித்த திட்டமையையா இது.

விசுகு,

கோசான் என்ற பெயரிலேயே அனுப்பி விட்டேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா ஒரு முடிவை எடுங்கோ

1) அஞ்சலி மட்டும் செலுத்துதல்

2) வருடத்திற்கு 3 தான் என பேசமல் இருத்தல்

3) விபத்தை தடுக்க ஏதாவது முயற்சி செய்தல்

4) பொரிமா தோண்டுதல்

  • கருத்துக்கள உறவுகள்

கெதியா ஒரு முடிவை எடுங்கோ

1) அஞ்சலி மட்டும் செலுத்துதல்

2) வருடத்திற்கு 3 தான் என பேசமல் இருத்தல்

3) விபத்தை தடுக்க ஏதாவது முயற்சி செய்தல்

4) பொரிமா தோண்டுதல்

அஞ்சலி செலுத்துவதுடன் நிறுத்த முடியாது.

ஏன் என்று கேட்பதால் தான் ஏதாவது முடிவு கிடைக்கும்

வருடத்திற்கு மூன்று தான் எனப் பேசாமல் இருந்தால் அது இன்னும் அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளன.

விபத்தைத் தடுக்க எங்களால் முடியாது. ஆனால் அதற்கான விமர்சனங்களை வைக்கும் போது பொரிமா தோண்டுதல் தவிர்க்க முடியாததாகி விடுகின்றது.

இப்படியான சிந்தனைகள்தான் மேலும்மேலும் பாதகங்களை உருவாக்குபவை. ஆபிரிக்காவில் முதன்முதலாக ஒரு பாதை போட்டாலும், கொஞ்சம் மக்கள் சாகட்டும்.. பிறகு பழகிக்கொள்வார்கள் என்பதாக உள்ளது உங்களது சிந்தனை.

தொடருந்துக் கடவைகளில் உள்ள ஆபத்துக்களை நன்கு அறிந்தவர்கள் யார்?

1) வளர்ந்தவர்கள்?

2) சிறுவர்கள்?

3) உடல் ஊனமுற்றவர்கள்?

4) தொடருந்துப் பாதை வடிவமைப்புப் பொறியலாளர்கள்?

இதில் ஒன்றில்தான் விடை இருக்கிறது. அதை மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து கொண்டால் இப்படியான விபத்துக்கள் நடைபெறுவதை தவிர்க்கலாம்.

அது  விளங்குது  இசை  ஆனால்  இங்கு விவாதம்  அதையும் இனப்படுகொலை திட்டமிட்ட  செயல்  என்பது போல் விவாதிக்க்படுவது  தவறு  ,எல்லாவற்றிலும்  எண்களை  தேசியவாதிகள்  மீட்ப்பர்கள்  என்று  காட்ட  முட்படுவது  ஆரோக்கியமானது  அல்ல அல்லவா ...தவறை  திருத்த  முயற்ச்சி  செய்வதை  விட்டு  அதுக்கும்  தலமைகளை  பேசிட்டு  இருப்பதில்  என்ன  பயன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.