Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கானல் நீர் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் மழை. நடந்ததை நம்பமறுக்கும் இதயம். இருந்த இடத்திலிருந்து நகராமல் தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். "அப்பா, அழுகிறீர்களா?" என்று மகள் வந்து கேட்கவும் "இல்லையே!" என்று சுதாரித்தாலும் அவள் கண்டுவிட்டாள்."பிறகு ஏன் உங்கள் கண்கள் ஈரமாக இருக்கின்றன?" என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். பதிலளிக்கப் பிடிக்கவில்லை. "போய்ப் படி" என்று அவளை ஒருவாறு அதட்டிவிட்டு கதிரையிலிருந்து எழுந்துகொண்டேன். இனி என்ன செய்வது?? கம்பியூட்டரில் ஏதாச்சும் பார்க்கலாம், யாழுக்குள் யாராச்சும் வந்து ஒப்பாரி தொடங்கிவிட்டார்களா என்று பார்க்கலாம் என்று வந்துவிட்டேன்.

 

அதுசரி, "இதெல்லாம் எதற்காக?" என்று நீங்கள் யாராவது கேட்கலாம். சிலருக்கு, "இலங்கைதான் விளையாடவில்லையே?? பிறகு ஏன் உவருக்குக் கவலை" என்று எண்ணம் தோன்றலாம் (நவீனன், என்ன நான் சொல்வது சரிதானே??).

 

ஆனால் உண்மையாகவே மனம் அழுதது, அழுகிறது. தென்னாபிரிக்காவுக்காக முதன்முதலாக !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் முதன் முதலாக தென்னாபிரிக்க அணியின் அசுரத்தனம் பற்றித் தெரிந்துகொண்டது 1992 இல் என்று ஞாபகம். இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்திருந்தார்கள். வாய்க்குள் நுழைய முடியாத பெயர்கள், ஒருபக்கத்திற்கு வாரி இழுத்துவிடப்பட்ட மஞ்சள் நிற முடி, உயர்ந்து வளர்ந்த மனிதர்கள். இலங்கை வீரர்களுடன் ஒப்பிடும்போது இவர்கள் கோலியாத்தாகத் தெரிந்தார்கள். தாவீது எப்படிக் கறுப்பாக சிங்களம் பேசுபவராக இருக்கமுடியும் என்றுமட்டும் கேட்காதீர்கள். 

 

சில டெஸ்ட் போட்டிகளும், ஒருநாள்ப் போட்டிகளிலும் விளையாடினார்கள். போட்டிகள் என்று கூறினாலும் கூட அவர்கள் மட்டுமே விளையாடியதாக எனக்கு நினைவு. இலங்கையணி பார்வையாளர்களாகத்தான் மைதானத்திற்குள் நுழைந்திருந்தது.  விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் இலங்கையணிக்குத் தோவி. தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சுக்கு மட்டையைக் கொடுப்பதா, மண்டையைக் கொடுப்பதா என்று அவர்கள் யோசிப்பதற்குள் அவர்கள் ஆட்டமிழந்திருப்பது அவர்களுக்குத் தெரியவரும். அப்படி ஒரு அட்டகாசமான ஆட்டம் அது. 

 

அதன்பிறகு தென்னாபிரிக்கா என்றால் இலங்கையணி பயப்படுகிறதோ இல்லையோ, எனக்குப் பயம் வந்து தொற்றிக்கொள்ளும். 

 

அலன் டொனால்ட், மக்கயா நிட்டினி, பிரெட் ஷுல்ஸ், மக்மில்லன், ஷோன் பொல்லொக்.........இப்படைப் பலரும் வந்து பயமுறுத்திப் போவார்கள். நான் பயப்பட்டதுபோலவே ஜயசூரியவும் சொல்லிவைத்தாற்போல டொனால்ட்டின் பந்துக்கோ அல்லது நிட்டினியின் பந்துக்கோ முதலாவது..மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டாவது ஓவரில் சிலிப்பில் பிடிகொடுத்து போய்க் கொண்டிருப்பார். இலங்கையணிக்கு அடித்தளம் அடித்துக் கொடுப்பவரே கமக் கட்டிற்கு மட்டையை வைத்துக்கொண்டு போகும்போது மற்றையவர்கள் பற்றிக் கேட்கத் தேவையில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பலமுறை எனது தூக்கத்தைக் கெடுத்திருந்தாலும் அவர்கள் மீது எப்போதும் இனம்புரியாத மதிப்பு எனக்கிருந்தது. மற்றைய அணிகளிடம் இருக்கும் ஆணவம் சிறிதும் இல்லை. கண்ணியமான ஆட்டக் காரர்கள். ஆட்டத்தில் உண்மையான பற்றுக்கொண்டவர்கள். இப்படிப் பல காரணங்கள். 

 

மற்றைய அணிகளுடன் தென்னாபிரிக்கா விளையாடும்போது அவர்களை ஆதரிக்கத் துடிக்கும் மனம், இலங்கையுடன் விளையாடும்போது மட்டும் குரங்குபோல இலங்கையணியின் தோலின்மேல் ஏறிக்கொண்டுவிடும். ஆகத் தெரிந்தே இலங்கையணியை ஆதரித்துக்கொண்டும் இவர்களை எதிர்த்துக் கொண்டும் இருந்தேன். இன்றுவரை !

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உண்மையாகவே மனம் அழுதது, அழுகிறது. தென்னாபிரிக்காவுக்காக முதன்முதலாக !

 

 

 

 

சேம் பீலிங்...!  ரெம்ப வேதனையுடன்  வெளியே போய் வந்தேன்...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் தொடங்குமுன்னமே தென்னாபிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடி வந்தது. தென்னாபிரிக்க அணி மேற்கிந்தியாவுக்கெதிராக ஆடிய விதத்தைப் பார்த்தபோது எனக்கு அதே பழைய கவலை வந்து தொற்றிக்கொண்டது. குறிப்பாக டிவிலியர்ஸ் அடிக்கும் அடியைப் பார்த்தால் மற்றைய அணிகளுக்கு ஆப்புத்தான், குறிப்பாக இலங்கையணிக்கு என்று மனம் சொல்லிக் கொண்டது. நான் பயந்தவாறே தென்னாபிரிக்கா போட்டியின் ஆரம்பத்தில் வெளுத்து வாங்கியது. குறிப்பாக டிவிலியர்ஸ் அடித்து நொறுக்கிக் கொண்டுவந்தார். 

 

இலங்கை அணியுடனான தென்னாபிரிக்காவின் கால் இறுதிப் போட்டியும் வந்தது. எப்படியாவது இலங்கையணி இந்தப் போட்டியில் வென்றுவிடும், வென்றுவிட வேண்டும் என்று மனம் விரும்பியது. இதற்குக் காரணம் தென்னாபிரிக்கா பாக்கிஸ்த்தானுடனும், இந்தியாவுடனும் அடைந்த தோல்வியை மனம் அவ்வப்போதமிரைமிட்டுக் கொண்டதுதான். அவங்களாலேயே முடியுமெண்டால், ஏன் எங்களால முடியாது என்று ஒரு மனச் சமாதானம் !

 

சங்கக்காரவும், திரிமாணவும், தில்ஷானும் அப்போது ஆடி வந்தவிதம் எனது நம்பிக்கையை இன்னும் அதிகரிக்கவே, பெருத்த எதிர்பார்ப்புடன் இலங்கையணிக்கும் தென்னாபிரிக்காவுக்குமான ஆட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். 

 

காத்திருந்த நாளும் வந்தது. இலங்கையாடத் தொடங்கியது, விக்கெட்டுக்கள் சரியத் தொடங்கின. என்றுமே அடித்தாடும் சங்கா குழம்பிப் போய் நின்றதை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் ஒருபக்கத்தில் நிலைகுலைந்து நிற்க மற்றைய பக்கத்தில் யார் வருகிறார் யார் போகிறார் என்று அறியமுன்னர் இன்னொருவர் வந்து போய்க் கொண்டிருந்தார். காலில் சில்லுப் பூட்டி அசுரத்தனம் காட்டும் சங்கா அன்று 95 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தபோது எனக்குக் கவலை சிறிதும் இருக்கவில்லை (சத்தியமாக! ). ஏனென்றால் மனம் மரத்து விட்டது. இலங்கையணியின் தோல்வியை தில்சானும், பெரேராவும் முதலாவது இரண்டாவது ஓவரிலேயே எனக்குச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆகவே உணர்சிகளற்ற மனத்துடன் கட்டாயத்திற்கு விளையாட்டுப் பார்த்துக்கொண்டிருந்தேன் அன்றைக்கு!

 

நான் நினைத்தது போலவே எனது முட்டாள்த்தனமான எதிர்பார்ப்பிற்கு எந்த இடமும் தராமல் தென்னாபிரிக்கா இசகு பிசகாமல் அன்றைக்கு அடித்து முடித்தது. மனதில் வலி சிறிதும் இல்லை. 10 மாதம் பொறுமையுடன் காத்திருந்து பெற்றதுபோல மடியில் எந்தக் கனமும் இல்லாமல் இப்போது உலகக் கிண்ணத்தைப் பார்க்கலாமே என்று மனது தனக்குத்தானே சொல்லிக்கொண்டது.

 

சரி, யாரை ஆதரிப்பது ? இந்தியா....இல்லவே இல்லை. முதலாவது எதிரி நாடு ! நியுசிலாந்து?? முடியாது. இவ்வளவு காலமும் தடவித்தடவி ஆடிக் கொண்டிருந்தவர்கள் இப்போது மஜிக் செய்வதுபோல ஆட்டம் காட்டுவதா?? ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிடிவாதமாக மனது மறுத்து விட்டது. அவுஸ்த்திரேலியா?? அடிக்கடி எனது இரண்டாவது அபிமான அணி என்று நான் அவ்வப்போது புரளி விட்டாலும்கூட, ஆணவம் பிடித்தவர்கள், தற்பெருமைக் காரர்கள்..இப்படிப் பல குறைகள் அவர்களிடம், ஆகவே அவர்களையும் ஆதரிக்க முடியாது. ஆக மீதமிருப்பது தென்னாபிரிக்கா மட்டும்தானே?? அவர்களை ஆதரிக்கலாமா?? அதிலும் ஒரு பிரச்சினை, இலங்கைக்கு கால் இறுதியில் டியூஷன் கொடுத்தவர்கள். எனது அணியின் உலகக் கிண்ணக் கனவை தூங்கவிடாமலேயே அழித்து முடித்தவர்கள். அவர்களை எப்படி ஆதரிப்பது ?

 

ஆகக் குழம்பிப் போய்த்தான் போட்டிகளை இப்போது ரசித்து வந்துகொண்டிருந்தேன். 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா வீரர்களும் மைதானத்திலிருந்து அழுதுகொண்டிருந்தார்கள்....நான் எந்த டீம் விளையாடினால் ஒரு டீமை சார்ந்து நிற்பதில்லை அதனால் யார் வெற்றிபெறுகிறார்கள் தோல்வியடைகிறார்கள் என பெரிதாக அலட்டிகொள்வதில்லை...இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்படவாய்ப்பு குறைவு நீங்களும் இதை கடைப்பிடியுங்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு வேலைக்கு அதிகாலையிலேயே கிளம்பிவிட்டேன். வேலைத்தளத்துக்குப் போகும்வரை யாரை ஆதரிப்பதென்று முடிவு இருக்கவில்லை எனக்கு. 

 

ஆனாலும், இவ்வளவு காலமும் அதிஷ்ட்டம் இல்லாத ஆனால் தகுதியான அணி என்று சொல்லப்படும் தென்னாபிரிக்கா வென்றால் நன்றாக இருக்குமே என்கிற ஆசை மட்டும் துளிர்விட்டிருந்தது. 

 

வேலைப் பழுவின் காரணத்தால் போட்டி பற்றி முழுமையாக மரந்துவிட்டேன். 2 மணியளவில் நண்பன் ஒருவன் ஸ்கோர் என்னவென்று என்னைக் கேட்கும்போதுதான் அட்டம் நடப்பது நினைவுக்கு வந்தது. உடனேயே கைய்யடகத் தொலைபேசியில் ஸ்கோர் பார்க்கத் தொடங்கினேன். தென்னாபிரிக்கா 88 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள், 21 ஓவர் என்று சொல்லியது. உடனேயே கண்கள் தேடிய பெயர் டிவிலியர்ஸ்! இருக்கிறாரா போய்விட்டரா என்றுதான் பார்த்தேன். அவர் இன்னும் ஆட வரவில்லை. அப்பாடா என்று  ஒரு நிம்மதிப் பெருமூச்சு ! அதன்பிறகு வேலை போகவில்லை. கணினியிலும் கிரிகின்போவில் ஸ்கோரைப் போட்டுவிட்டு வேலையி அரைக்கண், விளையாட்டில் ஒன்றரைக்கண் என்று "கடுமையாக" வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

நான் நினைத்தவாறு டிவிலியர்ஸும் வந்தார். விரும்பியதுபோலவே அடித்தும் ஆடினார். மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கூடவே மில்லரும் வந்தார். 18 பந்துகளில் 49 ஓட்டங்கள் என்று பொழிந்து தள்ளினார். 43 ஓவர்கலில் 281 ஓட்டங்கள் என்று குவித்துவிட்டு ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது தென்னாபிரிக்கா.

 

அதுசரி, தென்னாபிரிக்காவை எப்போது ஆதரிக்கத் தொடங்கினோம் ? எதற்காக ஆதரிக்கத் தொடங்கினோம்?  எனக்குத் தெரியாமலேயே தென்னாபிரிக்க அணியை மனதில் வரிந்துகொண்டு மீதி ஆட்டத்திற்காகக் காத்திருந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க அணியின் பலவீனம் களச் சூழ்நிலைக்கு தன்னை இசைவாக்க மறுப்பது தான்.

 

மூன்று.. ரன் அவுட் கோட்டை. இரண்டை கச் கோட்டை. அதுவும் சூழ்நிலைகள் ஒன்று.

 

மேலும்.. எல்லைக் கோட்டை நோக்கி பாயும் பந்துகளை தடுக்க.. முறையான தடுப்பு வியூகம் இன்மை.

 

அதுவும் ஈரலிப்பான கள நிலவரத்தில்.. வேகப்பந்து வீச்சாளர்கள்.. சோபிப்பது கடினம்.. என்ற நிலையிலும்.. சிறிய மைதானத்தில்.. போட்டுக்கொடுத்து எல்லைக் கோட்டை நோக்கி பந்தை விரட்ட விட்டமை.

 

மற்றும்படி.. வழமை போல கடைசி வரை போராடித் தோற்றார்கள்.

 

நியூசிலாந்தின் சிறப்பு.. பதட்டமின்றி ஆடிமுடித்தது தான். அது முக்கியம் ஒரு அணி தன்னை வலுப்படுத்த. இறுதி ஆட்டத்துக்குச் செல்ல நியூசிலாந்து தகுதியான அணி என்பதை அதன் ஆட்டம் நிரூபித்தது என்றால் மிகையில்லை.

 

தென்னாபிரிக்கா.. சூழ்நிலைக்கு ஏற்ற.. களத்தடுப்பு வியூக அமைப்பில் வீக்.

 

மீண்டும்.. திறமையை வளர்த்து.. அடுத்த முறையாவது இன்னும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்.

 

நியூஸி.. உலகக் கிண்ணத்தை கைப்பற்ற வாழ்த்துக்கள். பலமுறை போராடி அரையிறுதியோடு தோற்ற அணி.. இம்முறை இறுதி வரை வந்திருக்குது. உலகக் கோப்பையையும் கைப்பற்றின் மகிழ்ச்சி தான். எதிரணியில் உள்ள இந்தியாவும் அவுஸியும்.. குறைந்தது இரண்டு தடவைகள் உலகக் கோப்பை வென்றுள்ளன. :icon_idea::)

 

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்தணி ஆடத் தொடங்கியது.

இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் பலமுறை சூராவளிபோல ஆடிய மக்கலம் ஆடவந்தார். நான் எதிர்பார்த்ததுபோலவே ஆடவும் தொடங்கினார். வயிற்றில் புளியைக் கரைத்து யாரோ கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கொண்டிருந்தார்கள் எனக்கு.

அடப் பாவி மனுசா, யார் யாருக்கு அடிப்பது என்று விவஸ்த்தை கூட இல்லாமலா அடிப்பாய் ? ஸ்டெயினும், மோனே மோக்கலும் உனக்கு பாடசாலை அணி பந்துவீச்சாளர்களா என்று மனம் கருவிக்கொள்ள அவர் அடித்தாடிக் கொண்டிருந்தார். இதில் இன்னும் வேதனை என்னவென்றால், உலகின் முதலாவது சிறந்த பந்துவீச்சாளரான ஸ்டெயினின் 3 ஓவர்களுக்கு 39 ஓட்டங்களை மக்கலம் குவித்ததுதான். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக ஸ்டெயினின் பந்துகள் மைதானத்தின் நாலாபுறமும் அலறிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தன. இவருக்கே இந்தக் கதியென்றால் மற்றையவர்களின் நிலை பற்றிக் கேட்கவேண்டாம்.

பிலாண்டர், மோனி மோக்கல் என்று வரிசையில் வைத்து மக்கலம் அடிபோட்டுக் கொண்டிருந்தார். வெறு வழியில்லாமல் ஸ்டெயின் 3 ஓவர்கள் வீசிய நிலையில் கட்டாய ஓய்வுக்குக் கொண்டுவரப்பட, இம்ரான் தாகீரும், மோனியும் வீசிக்கொன்டிருந்தார்கள்.

மக்கலம் 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 59 ஓட்டங்களைக் குவித்திருந்த நிலையில் தெய்வாதீனமாக மோனே மோக்கலின் பந்துவீச்சில் ஸ்டெயினமே பிடி கொடுத்து ஆட்டமிழஎது சென்றபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அழவேயில்லை. அந்த மகிழ்ச்சி கரையுமுன்னமே குப்டிலும் ஓடி ஓடி ஆட்டமிழந்து போனார். ஆகா, அற்புதம் என்று சொல்லிக்கொண்டேன்.

டெயிலர் வந்தார், வில்லியம்சன் வந்தார். சிறிதுநேரம் ஆடினார்கள், ஆட்டமிழந்தும் போனார்கள். அப்போது ஓட்ட எண்ணிக்கை 149 இற்கு 4 விக்கெட்டுக்கள்.  ஆகா, தென்னாபிரிக்காவுக்கு சாதகமாக ஆட்டம் வருகிறதே என்று மகிழ்ந்துகொண்டாலும்கூட, ஓவர் ஒன்றிற்கான ஓட்ட வேகம் 7 ஓட்டங்கள் என்ற நிலையில் நியுசிலாந்து ஆடிக்கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை.

இதன் பின்னர் ஆடவந்தார்கள் அன்டர்சனும், எல்லியட்டும். நியுசிலாந்தணியின் அதிரடி ஆட்டக் காரர்கள், இவர்களால் நிதானமாக ஆட முடியுமா?? நியுசிலாந்தணியை எல்லைக் கோட்டிற்கு இழுத்துச் செல்லமுடியுமா என்றெல்லாம் வர்ணனையாளர்கள் கேட்டுக்கொண்டிருக்க அவர்கள் நிதானமாக ஆடத் தொடங்கினார்கள். 

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய இவர்கள் இருவரும் சிறிது சிறிதாக வேகம் எடுக்கத் தொடங்கினார்கள். முதலில் அடித்தாடத் தொடங்கியவர் அன்டர்சன். டுமினி வீசிய சில புல்டொஸ்ஸுகள் எல்லைக் கோட்டிற்கு வெளியே போய் விழுந்தன. அவரைப் போலவே மற்றைய பந்துவீச்சாளர்களுக்கும் அடிவிழத் தொடங்கியது. அன்டர்சனைத் தொடர்ந்து எல்லியட்டும் அதிரடியாக ஆடத் தொடங்கினார். தென்னாபிரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியிருந்த ஆட்டத்தை இவர்களிருவரும் தூக்கி நிறுத்தினார்கள். அதோடு நின்றுவிடாமல், நியுசிலாந்தணியின் பக்கம் நகர்த்தவும் செய்தார்கள். சிறிது சிறிதாக இவர்கள் சேர்ந்து எடுத்த ஓட்டங்கள் 103 ஆகியிருந்த நிலையில் அன்டர்சன் ஓங்கியடித்த பந்தை தென்னாபிரிக்க வீரர் புலெசி பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். போட்டி மீண்டும் தென்னாபிரிக்காவின் பக்கம் சாயத் தொடங்கியது.

 

ஆனால் மறுபுறத்தில் எல்லியட் இன்னும் ஆடிக்கொண்டிருந்தார். அவருடன் லூக் ரொங்கி இணைந்துகொண்டதும் மீண்டும் ஆட்டம் சூடு பிடித்தது. இருவரும் இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 269 இற்கு உயர்த்தியபோது ரொங்கி ஆடமிழந்து செல்ல நியுசிலாந்தணி 3 ஓவர்களில் 29 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. எல்லியட்டுடன் சேர்ந்து ஆடவந்தவர் டானியல் விட்டோரி. இவர் ஆடுவாரா சொதப்புவாரா என்று பலரும் எதிர்பார்த்திருக்க, ஸ்டெயினின் வயிட் பந்தொன்றை இவர் பவுண்டரிக்கு அனுப்ப ஆட்டம் சூடு பிடித்தது.

 

இடையிடையே மோனி மோக்கலும், ஸ்டெயினும் நம்பிக்கை தரும்விதமாகப் பந்துவீசிக் கொண்டிருந்தாலும்கூட, எல்லியட்டும் பிடிகொடாமல் ஆடிக்கொண்டிருந்தார், அல்லது அவர் கொடுத்த பிடிகளை தென்னாபிரிக்க அணி விட்டுக் கொண்டிருந்ததுமட்டுமல்லாமல் மிக இலகுவான ரண் அவுட் வாய்ப்புகளையும் அவசரத்தில் சொதப்பிக் குழப்பியது தென்னாபிரிக்கா. 

 

சரி, கடைசி ஓவருக்கு வருவோம். 6 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி. 11 ஓட்டங்கள் எடுத்து ஓட்ட எண்ணிக்கை சமனானால்  நியுசிலாந்தணி அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்கிற நிலை. ஸ்டெயின் பந்துவீச வந்தார். 

 

முதலாவது பந்திற்கு முகம் கொடுத்தவர் விட்டோரி. ஸ்டெயின் மெதுவாக வீசிய பந்த அடிக்க முடியாது கீப்பரிடம் விட்டோரி போக விட, எல்லியட்ட் வேகமாக ஓடி, மறுபக்கம் சென்றுவிட்டார்.

 

5 பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவை. ஸ்டெயினின் 2 ஆவது பந்துக்கு ஒரு ரண் எடுத்து எல்லியட், விட்டோரியிடம் சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறார். 

 

ஸ்டெயின் வெளியே வீசிய 3  அவது பந்திற்கு விட்டோரி மட்டையைக் கொடுத்து 4 ஓட்டங்களைப் பெறுகிறார். போட்டி நியுசிலாந்தணியின் பக்கம் முற்றாகச் சாய்கிறது.

 

4 ஆவது பந்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றுக்கொண்டு விட்டோரி சந்தர்ப்பத்தை எல்லியட்டிடம் கொடுக்கிறார். 2 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி, 4 ஓட்டங்கள் எடுத்தால் சமன், ஆனால் நியுசிலாந்து அடுத்த கட்டத்திற்குப் போய்விடும் என்கிற நிலையில் ஸ்டெயினின் 5 ஆவது பந்தை எதிர்கொள்ள ஆயத்தமாகிறார் எல்லியட். 

 

இந்தப் பந்துடன் ஆட்டம் நிர்ணயிக்கப்படும் என்றிருக்க, ஸ்டெயின் வேகமாக வந்து நீளமான பந்தை எறிகிறார். மைதானத்திலிருந்த 45,000 ரசிகர்களும் இதயத்தை வாய்வழியே வெளியே எடுத்துவைத்து பார்த்திருக்க, வேகமாக வந்த பந்தை அசுரத்தனமாக அடித்து எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்புகிறார் எல்லியட். கூடவே பலமான கர்ஜனையும் வந்து போகிறது. முழு அரங்கும் மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்க நியுசிலாந்தணி குதூகலிக்கிறது.

 

அனால் அதே மைதானத்தில் இடிந்துப்போய் இன்னுமொரு அணி நிலைகுலைந்து நிற்கிறது. தென்னாபிரிக்க அணித்தலைவர் செய்வதறியாது முழங்காலில் இருந்துகொண்டு விறைத்துப் போக, ஸ்டெயின் ஆடுகளத்தில் மல்லாக்காக விழுந்து கிடக்க, மோனே மோக்கல் தான் களத்தடுப்பில் நின்ற இடத்திலேயே இருந்து கதறியழ தென்னாபிரிக்கா இன்னுமொருமுறை உலகக் கிண்ணத்தை இழந்து பரிதவித்துப் போகிறது. 

 

யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் வீரர்கள் மாறி மாறி தமக்குள் பார்த்துக்கொள்ள, மைதானத்திற்கு வெளியே இருந்த உதிரி வீரர்கள் உள்ளே வந்து அவர்களைத் தழுவி ஆறுதல் சொல்ல எனது கண்களும் கலங்குகின்றன !

 

இறைவா, இன்னும் எத்தனை வருடங்கள்தான் இவர்கள் காத்திருக்க வேண்டும் ??????

 

அல்லது உலகக் கிண்ணம் எப்போதுமே தென்னாபிரிக்காவுக்குக் கானல் நீர்தானா என்று மனம் அங்கலாய்க்கிறது !

 

நன்றி !

 

 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுநாதன்.அழகாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்.
இங்கே இரண்டு சிங்கங்கள் போட்ட போட்டியில் இதுவரை இந்தத் தொடரில் தோல்வியைத் தழுவாத நியூசிலாந்து அணி அந்த நம்பிக்கையில் மட்டுமே நின்று கடைசிவரை நிதானமாக ஆடி வெற்றியைத் தங்கள் பக்கம் சேர்த்தார்கள்.

தென்னாபிரிக்க வீரர்கள் ஒரு ஓட்டம் கூட அதிகமாகக் கொடுக்கக் கூடாது
என்ற மன நிலையில் சிறப்பாகக் களம் காத்தார்கள்.
இரண்டு மூன்று தடவைகள்  அவர்களுடைய சொதப்பல் அவர்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தி விட்டன.

இப்படியொரு விறுவிறுப்பான ஆட்டத்தை நடத்திய ஆபிரிக்க அணிக்கு வாழ்த்துக்கள்.

தொடரில் கோப்பையை நியூசிலாந்து வென்றால்  கோப்பையை வென்ற அந்த அணியிடம் தாங்கள் தோற்றதாக அவர்கள் தங்கள் மனதைத் தேற்றிக்கொள்ளுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் குயின்டன் டிகாக் ஆரம்பத்தில் இருந்தே சரியில்லை. :huh: இவர் ஆரம்பத் துடுப்பாளராக இறங்கி ஓரிரு ஆட்டங்களில்தான் ஓரளவு நன்கு விளையாடினார். அதுமட்டுமல்லாமல், கடைசியில் விக்கட் கீப்பரான இவரிடம் பந்து நேராகப் போனாலும் ஓட்டம் எடுத்தார்கள் நியூசிலாந்து வீரர்கள். இவர் பந்தை எறிவதும் அது விக்கட்டில் படாமல் போவதுமாக இருந்தது. ஒருதரமாவது இவர் விக்கட்டில் எறிந்திருந்தார் என்றால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

எதுவாகிலும் நியூசிலாந்தின் பந்துவீச்சு அருமை. குறிப்பாக ட்ரென்ட் போல்ட். சற்று கூடிய சிறப்பான அணி வெற்றி பெற்றது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக அனைத்து அணிகளும் ஆட்டத்திற்கான முன் ஆயத்தப்பணிகளில் களத்திற்கு வெளியான சகல வெளியுதவிகளையும் முழுமையாக பெற்று களத்தில் அதனை சரியான வகையில் பிரயோகிக்க முயலும் சில வேளைகளில் அவர்களது முன் ஆயத்த பணிகளுக்கு சம்பந்தமில்லாமல் கள நிலமைகள் எதிரணியின் தந்திரோயபான முன் ஆயத்தம் மாற்றிவிடும். மற்ற அணிகளை விட தென்னாபிரிக்காவிற்கே களத்திலும் வெளியுதவி தாராளமாகக்கிடைத்தது, கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டு காதில் தொலை தொடர்பு கருவி மூலம் தனது உதவியாளருடன் உரையாடிக்கொண்டு எல்லைக்கோட்டருகே தென்னாபிரிக்க பந்து வீச்சு பயிற்சியாளர் பாதுகாப்பு அதிகாரி மாதிரி அமர்ந்து கொண்டு தனது பந்து வீச்சாளர்களுக்கு மாற்ம் கள நிலமைக்கு ஏற்ப அறிவுரை கூறுவது ஒரு நடுவுனிலையான விளையாட்டின் சமனிலையை குளப்பும் ஓர் செயல்.

எந்த ஒரு ஆட்டமும் மழை வந்து குழப்பினால் அதன் திசை மாறிவிடும் .மழை தொடங்க எனக்கு வெறுத்துவிட்டது .(சென்ற உலக கோப்பைக்கு முதல் உலக கோப்பை  இறுதி ஆட்டம் சிறிலங்கா -ஆஸி ) .

 

மீண்டும் ஆட்டம் சூடு பிடித்து மிக நல்ல ஒரு கிரிக்கெட் ஆட்டம் பார்த்த திருப்தியில் மாட்ச் முடிந்தது .நியூசிலாந்தை தவிர வேறு ஒரு அணியிடம் தென்னாபிரிக்கா தோற்றிருந்தால் மிகவும் வேதனை பட்டிருப்பேன் ,தோற்றால் நியூசிலாந்தும் பாவம் என்ற மனநிலையும் மனதில் இருந்ததால் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்தது .

 

இம்முறை நவீனன் வைத்த போட்டியில் தென்னாபிரிக்காவை சாம்பியனாக தெரிவுசெய்து விட்டு அதிஸ்டம் இல்லாத டீம் தெரிவை மாற்ற நினைத்தேன் .பிறகு அவர்களில் நம்பிக்கை வைத்து அப்படியே விட்டுவிட்டன் ஆனால் இந்தியாவிடம் அவர்கள் அப்படி ஒரு படு தோல்வியை அடைய சரியான கோபம் வந்துவிட்டது .

தென்னாபிரிக்கா பங்கு பற்றிய முதல் உலக கோப்பையில் மழை பெய்து இவர்கள் இங்கிலாந்திடம்  தோற்றது பெரிய பகிடி .முதன் முதலில் D/L Methods அந்த வருடம் தான் கொண்டுவந்தார்கள் என்று நம்புகின்றேன் ..தென்னாபிரிக்கா வெல்லபோகுது என்றிருந்த மாட்ச் மழை பெய்ய வெல்லவே முடியாத ரன்கள் தென்னாபிரிக்க அடிக்கவேண்டும் என்று வந்துவிட்டது .

டி வில்லியர்சிற்கு இந்த உலக கோப்பை சமர்ப்பணம் என்று நான் இங்கு பதிந்தேன் .அதை அவர் ஏமாற்றவில்லை ஆனால் இப்போதும் இந்த மாட்ச் ஒரு கனவு மாதிரி இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

Faf du Plessis,AB de Villiers சரியான ஒரு form க்கு வந்திருந்தார்கள்.அதுவும் 38 ஆவது ஓவரில். 12 ஓவர்களில் சராசரியாக 100 ஆவது அடித்து  300 ஐ தாண்டும் ஓட்டங்கள் எடுப்பார்கள். பின்பு fielding ல் நியூசிலாந்துக்கு அழுத்தம் கொடுபபர்கள் என நினைத்தேன். மழை வந்து குழப்பி ஒவார்கள் 43 ஆக்கப்பட்டு  ந் பந்து கிளவ்சில் பட்டது என தொலைக்காட்சி நடுவர் சொல்லும் போதே தென் ஆபிரிக்கா தோல்வி அடையும் என முடிவு எடுத்து விட்டேன். அருமையான குழு. குறிப்பாக வாய் சவாடல் விடாமல் கிறிககட்டை சுவாரசியம் ஆக்கியவர்கள் தென் ஆபிரிக்கர் தான். Better luck next time.

கண்களில் மழை. நடந்ததை நம்பமறுக்கும் இதயம். இருந்த இடத்திலிருந்து நகராமல் தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். "அப்பா, அழுகிறீர்களா?" என்று மகள் வந்து கேட்கவும் "இல்லையே!" என்று சுதாரித்தாலும் அவள் கண்டுவிட்டாள்."பிறகு ஏன் உங்கள் கண்கள் ஈரமாக இருக்கின்றன?" என்று விடாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். பதிலளிக்கப் பிடிக்கவில்லை. "போய்ப் படி" என்று அவளை ஒருவாறு அதட்டிவிட்டு கதிரையிலிருந்து எழுந்துகொண்டேன். இனி என்ன செய்வது?? கம்பியூட்டரில் ஏதாச்சும் பார்க்கலாம், யாழுக்குள் யாராச்சும் வந்து ஒப்பாரி தொடங்கிவிட்டார்களா என்று பார்க்கலாம் என்று வந்துவிட்டேன்.

 

அதுசரி, "இதெல்லாம் எதற்காக?" என்று நீங்கள் யாராவது கேட்கலாம். சிலருக்கு, "இலங்கைதான் விளையாடவில்லையே?? பிறகு ஏன் உவருக்குக் கவலை" என்று எண்ணம் தோன்றலாம் (நவீனன், என்ன நான் சொல்வது சரிதானே??).

 

ஆனால் உண்மையாகவே மனம் அழுதது, அழுகிறது. தென்னாபிரிக்காவுக்காக முதன்முதலாக !

 

என்னையா கேட்டீர்கள் ரகு? :o:lol:

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போட்டிக்கு மிகச்சிறந்த இரு அணிகளான இந்தியாவும் நியூசிலாந்தும் தெரிவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

.ரகு விளையாட்டை விட உங்கள் தொகுப்பு நன்றாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.