Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடிநீரில் கழிவு எண்ணெய் மாசு தொடர்பான ஊடக அறிக்கை - அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம்:-

Featured Replies

யாழ் குடாநாட்டின் சில பகுதிகளில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளமை தொடர்பினில்; அமைச்சர்களான ஜங்கரநேசன் மற்றும் சத்தியலிங்கம் தரப்பு வெளியிட்ட அறிக்கையினை மருத்துவ அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளன.

இது தொடர்பினில் அவ்வமைப்பு இன்று விடுத்துள்ள அறிக்கையினில்

குடிநீரில் எண்ணெயானது வெற்றுக் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும் நிலையில நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து பல்வேறு செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இது பொதுமக்களை பாரிய அளவில் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்ந நிலையில் பொதுமக்களின் சுகாதார விடயங்களில் அக்கறையுடன் செயற்பட்டு வரும் அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கமானது 27.03.2015 அன்று இவ்விடயம் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தது. அதில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

2012ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால் நடாத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளில் சுன்னாகம் பிரதேசத்தில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் மாசானது குடிநீரிற்கான நியம அளவினை விடவும் பல மடங்கு அதிகளவில் காணப்பட்டது. மேலும் மனித உடலிற்குப் பாரிய தீங்குகளை ஏற்படுத்தும் பார உலோகங்களும் சில கிணறுகளில் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் அண்மையில் நிபுணர் குழுவினரின் முறையான முழுமையான ஆய்வுகள் முடிவடையும் முன்னரே வெளியிடப்பட்ட அறிக்கையில் குடிநீரில் மாசுகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையானது விஞ்ஞான ரீதியாக குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

நிபுணர் குழுவினரால் நடமாடும் சிறிய இயந்திரம் மூலம் நடாத்தப்பட்ட பரிசோதனை மாதிரிகள் எந்தப் பிரதேசத்தில் எந்தக் கிணறுகளில் எடுக்கப்பட்டன என்பது அப்பிரதேச சுகாதார அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை. நீர் வழங்கல் அதிகாரசபையினரின் ஆய்வின் மாதிரி எண்ணிக்கையை விடவும் மிகக் குறைந்த அளவிலான மாதிரிகளே இப்பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

2012ம் ஆண்டின் ஆய்வின் முடிவுகளின் படி குடிநீரில் உண்மையில் மாசுக்கள் கலந்திருக்குமாயின் அது மக்களுக்கு பாரிய சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடும். சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள், புற்று நோய், மலட்டுத்தன்மை, பிறப்புக் குறைபாடுடைய குழந்தைகள் பிறத்தல் என்பன அவற்றுள் சிலவாகும். குடிநீரின் மாசு தொடர்பாக சந்தேகம் உள்ள நிலையில் பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடடிய அவ்வகையான குடிநீரை பொதுமக்கள் குடிக்கவோ சமைக்கவோ பயன்படுத்த வேண்டாம் என அரச வைத்தியர்களாகிய நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

இப்பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகளால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நம்பகத் தன்மையானது எமக்குத் தருப்திகரமானதாக இருக்கவில்லை. எனவே எதிர்வரும் காலங்களில் பிரதேசத்தில் நடாத்தப்படும் ஆராய்ச்சிகளை அவற்றின் முக்கியத்துவம் மற்றும் நம்பகத் தன்மையைக் கருத்தில் கொண்டு பிரதேச வைத்திய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்துமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம். மேலும் ஆய்வுகளானது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய முறையிலும் உலக சுகாதார நிறுவனத்தினரின் நியமங்களிற்கு அமைவாகவும் தொடர்ச்சியான முறையில் நடைபெற்றதன் பின்னரே அது தொடர்பான அறிக்கைகள் வெளியிடப்படவேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது தொடர்பாகவும் தவறான தகவல்களால் மக்கள் தீங்கு விளைவிக்கும் குடிநீரை அருந்துவதைத் தடுப்பது தொடர்பாகவும் அரச வைத்தியர்களாகிய நாம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். பொது மக்கள் மருத்துவ ரீதியாக தொடர்ந்து பாதிக்கப்பட்டு அதற்கு உரிய அதிகாரிகள் நம்பகத் தன்மையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் பட்சத்தில் நாம் பாரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்குத் தள்ளப்படக் கூடும் என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோமென தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

report.jpg

http://www.pathivu.com/news/38818/57//d,article_full.aspx

மூலம்: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/118130/language/ta-IN/article.aspx

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் மற்ரும் திரு சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

 

அண்மையில் ஜப்பானின் புஹுசீமா பகுதியில் நடந்த சுனாமி அனர்த்ததின் பின்னர் ஜப்பானிய மக்கள் அக்கடற்க்கரைப்பகுதியில் பிடிக்கப்படும் மீன்களை உண்பதை நிறுத்திவிட்டார்கள், அதன்காரணமாக ஜப்பானியப்பிரதமர் அக்கடற்கரைப்பகுதியில் பிடிக்கப்பட்ட மீனை தானே உணவாக உண்டு மக்களது பயத்தினை நீக்கியதுமட்டுமில்லாது அப்பகுதியில் வாழும் மீனவர்களது பிரச்சனையையும் முடிவுக்குக்கொண்டுவந்தார்.

 

 

 மேற்குறிப்பிட்டது செய்தி,

 

இப்போது உங்கள் இருவருக்கும் சவால் விடுகிறேன் ஏழாலை வடக்கில் எனது குடியிருப்பை ஒதுக்கி நீங்கள் வாழ்வதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறேன், முடியுமாகவிருந்தால் அங்குவந்து ஒருவாரம் தங்கியிருந்து எனது வளவின் கிணத்துநீரில் குளித்து முகம்கழுவி, அக்கிணற்றுநீரில் சமையல் செய்து அதையே குடிநீராகப்பயன்படுத்தி எமது அச்சத்தைப் போகச்செய்ய முடியுமா?

 

இங்கு கூத்தமைப்புக்காக வக்காலத்துவாங்கும் அவர்களது அடிப்பொடிகளே இச்செய்தியை அவர்களுக்குச் சொல்லமுடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அவை வரமாட்டினம் இளகின இரும்பு எங்கு உள்ளதோ அங்குதான் கூட்டமைப்பின் வாலுகள் நிற்பினம், சுமன்திரனை லண்டன் கொண்டு வருவன் எண்டு சொன்ன கனடா வாலு இப்ப அடக்கி வாசிக்குது.ஐங்கரநேசன் நான் நம்பி இருந்த ஆள் பிழை என  வரும்போது தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

இதை இதை இதைத்தான் இவ்வளவு காலமும் நான் எதிர்பார்த்தன். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் நான் வேறொரு திரியில் எழுதியதை இங்கு மீண்டும் பதிவிடுகிறேன்: தண்ணீரை மனிதன் குடிப்பதற்கு பயன்படுத்துவதாயின் அதில் எவ்வித எண்ணெய் பொருளும் கலந்திருப்பது சர்வதேச நியமங்களில் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை. வேண்டுமானால் உலக சுகாதார மையத்தின் குடிதண்ணீர் தர நியமத்தை (WHO standardisation for drinking water) இதற்கு ஆதாரம் காட்டலாம். இருப்பினும் முன்னேறிய நாடுகள் தத்தமது தரத்துக்கு ஏற்ப இந்த நியமங்களை மீள் பரிசீலித்து மேம்படுத்தி பாவனை செய்து வருவது வழக்கம். குடிநீரில் எண்ணெய் கலந்து இருப்பின் அது நீண்டகால தாமத சுகாதார கேடுகள் (long term and delayed health hazards) தமிழினத்துக்கு ஏற்படுத்தும் சாத்திய கூறுகள் அதிகம் உண்டு. எண்ணையின் அளவை இலங்கை அரசு லிட்டருக்கு 1 மி.கி இல் இருந்து 2 மி. கி உயர்த்தியதாக நிபுணர்குழு தனது அறிக்கையில் தெரிவித்தபோது எமது புத்திஜீவி விவசாய அமைச்சர் ஐந்கரநேசனும் அங்குதான் இருந்தார். எண்ணெய் பொருட்கள் தண்ணீரில் லிட்டருக்கு 0,001 மில்லி கிராம் இருந்தாலே அது அதிகம் என்று உலகம் சொல்கிறது.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

எழுஞாயிறு விடுத்திருக்கும் சவால் வரவேற்புக்குரியது. ஜனநாயக விழுமியங்களை வலுவடையச்செய்யும்.

கூடவே இதில் முதல்வரின் நிலைப்பாடு என்ன?

ஐங்கரநேசன் பொதுவாக ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் அவரே இப்படி ஏன் பல்டி அடிக்கிறார்?

அல்லது அவர்கள் சொல்லுவதுதான் உண்மையா ?

யாரைத்தான் நம்புவதோ ஏழை ( தமிழர் ) நெஞ்சம் .

யாரைத்தான் நம்புவதோ ஏழை ( தமிழர் ) நெஞ்சம் .

பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தான் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள். ஐங்கரநேசன் அல்ல. 
 
அதேநேரம் ஜனவரி பெப்பிரவரி மாதங்களில் மாரியில் பெய்த மழைகாரணமாக நிலக்கீழ் நீர் அதிகளவில் காணப்படும். இதுவும் மாசுக்களின் செறிவை மிக மிக அதிகமாகக் குறைத்து விடலாம். இந்த நிபந்தனையையும் ஆய்வாளர்கள் கருத்தில் எடுத்தார்களா தெரியவில்லை.
 
இது சம்பந்தமாக மேலும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது அவசியம். குறிப்பாக கோடை காலப்பகுதியில். 
 
யாழ் மருத்துவர்கள் ஆய்வின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் படி தான் கேட்கிறார்கள். 
 
செய்தியின் பிரகாரம் ஐங்கரநேசன் எந்த இடத்தில் வருகிறார் என்பது புரியவில்லை.    :huh:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல நீரோ கெட்ட நீரோ கிடைக்கின்ற நீரைத்தானே சனங்கள் பயன்படுத்தமுடியும்? இல்லாவிட்டால் தண்ணீர் தேவைக்கு போத்தல் வாங்கி பயன்படுத்த எல்லாருக்கும் வசதிகள் உள்ளதா? பல்வேறு தேவைகளிற்கு அந்த தேவைகளை பொறுத்து தண்ணீரை துப்பரவு செய்து பயன்படுத்தும் வழிவகைகள் பற்றி ஆராயவேண்டும். குடிப்பதற்கு, சமைப்பதற்கு தேவையான நீரை தாங்கிகளில் தினமும் மக்களிற்கு சப்ளை செய்யலாம். குளிப்பதற்கு, கழுவல், துவையலுக்கும் இந்த நீரினால் பிரச்சனை வருகின்றதா? தோலில் அழற்சி ஏதும் ஏற்படும் என்றால் குளிப்பதற்கும் குறிப்பிட்ட நீரை பயன்படுத்த முடியாது. கால்நடைகள், விவசாயத்துக்கு நீருக்கு எங்கே போவது? நீரை பாரிய அளவில் துப்பவரவு செய்து பயன்படுத்தும் முறை அல்லது உபகரணங்கள் தேவை. இது எல்லாம் போரினால் அழிந்த, பொருளாதார கட்டமைப்புக்கள் நிலைகுழைந்த பூமியில் இப்போது சாத்தியமா? மக்கள் பிரதேசங்களில் அடாவடியாய் நிலைகொண்டுள்ள சொறி லங்காவின் படைத்தரப்பினர் எவ்வண்ணம் தமது தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றார்கள்? இவர்கள் இதுபற்றி ஏதும் அக்கறைகாட்டி, தமது ஆய்வுகள் எதையாவத் மேற்கொண்டு உள்ளார்களா? ஏன் என்றால் சொறி லங்காவில் தமிழ் மக்களை விட படைத்தரப்பின் சுகவாழ்வில் அதிக கவனம் செலுத்தப்படுவதால் படைத்தரப்பு பயன்படுத்தும் நீர் நல்ல நீராக அதிக கவனத்தை அரசு செலுத்தி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

”அம்பலமாகின்றது ஜங்கரநேசன்,சத்தியலிங்கம் தகிடுதங்கள்”

இந்த அநாகரீகமான வார்த்தைப் பிரயோகத்தை நீக்கிவிடுமாறு யாழ் இணையத்திடம் கேட்டுக்கொள்கிறேன். 

0000நாட்டில் மிகுந்த நெருக்கடிகளூக்குள் பணிபுரிகிர்aவர்களோடு பண்பொடு கலந்துரையாடுவது பிழைகள் என கருதுபவற்றை சுட்டிக்காட்டி விளக்கம் கேட்பது நியாயமானது,புலம்பெயர்ந்த நாடுகளீல் வாழும் எமக்கு அவர்களைக் கொச்சைப்படுத்த உரிமை யார் தந்தது?. 

என் மதிப்புக்குரிய எழுஞாயிறு செய்தியின் கொச்சைப் படுத்தலை கண்டித்துவிட்டு தனது கேழ்வியை முன்வைதிருக்கவேணும்.

Edited by poet

பதிவு தளத்தில் இருந்து இணைக்கப்பட்ட செய்தியின் உள்ளடக்கத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எவரையும் நேரடியாகக் குற்றம் சுமத்தவில்லை என்பதால் தவறான பார்வையைத் தரும் தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் செய்தியின் மூலமான உலக தமிழ்ச் செய்திகள் தளத்தின் நேரடி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நியானி. நன்றி யாழ் கழம்

  • கருத்துக்கள உறவுகள்

திரு ஐங்கரநேசன் மற்ரும் திரு சத்தியலிங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,

 

இப்போது உங்கள் இருவருக்கும் சவால் விடுகிறேன் ஏழாலை வடக்கில் எனது குடியிருப்பை ஒதுக்கி நீங்கள் வாழ்வதற்காக அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறேன், முடியுமாகவிருந்தால் அங்குவந்து ஒருவாரம் தங்கியிருந்து எனது வளவின் கிணத்துநீரில் குளித்து முகம்கழுவி, அக்கிணற்றுநீரில் சமையல் செய்து அதையே குடிநீராகப்பயன்படுத்தி எமது அச்சத்தைப் போகச்செய்ய முடியுமா?

 

இங்கு கூத்தமைப்புக்காக வக்காலத்துவாங்கும் அவர்களது அடிப்பொடிகளே இச்செய்தியை அவர்களுக்குச் சொல்லமுடியுமா?

 

எழுஞாறு   Hats off
 
நியாயமான உங்கள் கேள்வியை உங்களுக்கு யாராவது ஊடகவியலாளர்களைத் தெரிந்திருந்தால் அனுப்பி விடுங்கள். இக்கேள்வி நிச்சயமாக கேட்கப்பட வேண்டியது. இதை யாழ்களத்தில் விவாதிப்பதை விட ஊடகவியலாளர் சந்திப்பில் விவாதிப்பதே சரி.
 
கள உறவுகளிற்கு ஊடகவியலாளர் தொடர்பு இருப்பின் இக்கேள்வியை அனுப்பி விடவும்.
 
பதிவிற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.