Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முனி.. நீங்கள் கேட்பது நியாயமே. பிபிசியில் கூட இப்படி கள்வர்களின் காணொளிகள்.. பல வந்துள்ளன. முக மறைப்பின்றி வந்துள்ளன. ஆனால் பொலிஸாரின் அனுமதியுடன் தான் அவை வெளியிடப்பட்டிருக்கும்.

இந்தப் படங்கள் சொறிலங்கா பொலிஸின் அனுமதியுடன் வெளியிடப்பட்டிருந்தால்.. அதில் தப்பில்லை.

பொதுவாக.. தமிழ் இணைய ஊடகங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. தள பிரபல்யத்துக்காக.. அவர்கள் இணையத்தள செய்தி முறைமைகளை மீறி நடப்பது கண்கூடு.

கடந்த காலங்களில் சிங்களத்தால் சீரழிக்கப்பட்டு.. படுகொலை செய்யப்பட்ட.. பெண் போராளிகளின் ஆடையற்ற படங்களையும் சிங்கள ஊடங்களுக்கு போட்டியாக தமிழ் ஊடகங்களும் வெளியிட்டன. :icon_idea:

  • Replies 80
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வெளியே வந்ததும் திருமலையில் பெரிய தாதாவாக இருப்பார்.

அந்த அளவுக்கு பிரபலமாகிட்டா.

  • கருத்துக்கள உறவுகள்

chain-robber-01.JPG

உண்மையில்.... இந்தப் பெண்ணின் மன நிலையை நினைக்க, மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
இந்த, இணையத்தளங்களின் அயோக்கிய வேலையால்....  அவர் பொலிசாரின் கைதில் இருந்து, விடுவிக்கப் பட்டதும்.. தற்கொலை முயற்சிக்கு கூட போகலாம் என்பதை... எமது ஊடகங்கள், புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை தர்மம், சரி தவறு விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று தான்... மாற்றுக் கருத்து இல்லை.

நாங்கள் வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் இருந்து கொண்டு இங்கு இருக்கும் தார்மிகங்களை

மூன்றாம் உலக நாடு ஒன்றில் எதிர்பார்க்க முடியாது.

இந்த பெண்ணின் நிலமை கவலைக்குரியது தான்...

இதே நேரம் இந்த குற்றத்தை ஒரு ஆண் ஒருவர் செய்து கையும் களவுமாக பிடிபட்டு படங்கள் பிரசுரிக்கப்பட்டு இருந்தால் நாங்கள் 4 பக்கத்திக்கு நீட்டி முழக்கி பரிதாபப் படுவோமா என்பது ஒரு கேள்விக்குறிதான் !!!

(இப்படிப்பார்த்தால் இலங்கை அரச அதிகாரிகள் கூட தமிழ் இன அழிப்பு நடவடிக்கையில் தாங்கள் வெறும் சந்தேக நபர்கள் தான் என்று கூறி .... எஸ்கேப் ....)  என்னுடைய ஒப்பீடு தார்மீகம் குறித்தே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.' 
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     
 
படங்களை போட்டு கிழிப்பவர்களை வாழிய வாழிய என வாழ்த்துவோம் :icon_mrgreen: :icon_mrgreen:

அண்ணை தெரியாமல் தான் கேக்குறன், நீங்க நேர்மையாவோ ஜேர்மனிக்கு போனநீங்கள்?

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும், நீங்க யாழில் படம் போட்டு கிழிச்சு வேலையில்லை

ரெண்டு மூண்டு செல்லோட ஓடின உங்களுக்கு எங்க விளங்கபோகுது. மல்டி பரல், கிபிர், மிக் போன்றவற்றில் மாட்டியிருந்தால் கூட கதைக்க மாட்டிங்கள்

எவனும் ஒரு சந்தர்பத்தில் தவறிளைக்குறான்... திருந்த சந்தர்பம் குடுப்பதே சரியானது

அபிவிருத்தி அடைந்த நாடுகளை பற்றி கதைக்குறீர்கள்... ஆஸ்திரேலியா மயூரன் சூகுமார் விடையத்தில் என்ன சொல்கிறது?

ஏன் உங்கட பிள்ளையளில் உங்களுக்கு கைவைக்கும் உரிமை இருக்குறதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள்வர்கள் மீது எப்பவுமே அவதானமா இருக்கவேண்டும்,

உங்கள் கருத்திற்கு நன்றி!!

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் இலங்கை ஜனாதிபதியினால் மன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட்ட சில பெண்களின் படங்களும் இணையத்தில் வெளிவந்திருந்தன. அவர்கள் மேல் சுமத்தப்பட்ட  குற்றங்களும் நிரூபிக்கப்படவில்லை.

பொது மன்னிப்புக்குள் இந்தப்படங்கள் போடும் விடையங்கள்  மறைந்து விடும்.

உங்கள் கருத்திற்கு நன்றி!!

எழுதிபோட்டு திருப்பி வாசிக்கேக்க உள்ளுக்க குத்தியிருக்குமே

உந்த சமாளிவுகேஷன் எல்லாம் வேலைக்கு ஆகாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதை பொருள் கடத்திய சுவிஸ் பெண்: கைது செய்த அமெரிக்க பொலிசார் [ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 09:00.00 மு.ப GMT ] heroin_001.jpgசுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 45 பைகளில் ஹெராயின் போதை பொருளை கடத்திய போது அமெரிக்க பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிஸின் ஜேனிவா (Geneva) நகரத்தை சேர்ந்தவர் Natasha Laurenza (25). தற்போது அமெரிக்காவில் உள்ள மான்செஸ்டர் (Manchester) நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு செல்போன் பேசிக்கொண்டு காரை ஓட்டிச்சென்றபோது, போக்குவரத்து ஆய்வில் இருந்த பொலிசார் அவரது காரை மடக்கினர்.

அப்போது, அவரது காரின் பின்புறம் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அடைக்கப்பட்டு இருந்ததை கண்ட பொலிசார், அவற்றை தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையின் போது காரின் பின்புறம் சுமார் 45 பைகளில் ஹெராயின் என்ற போதை பொருள் இருந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

போதை பொருள் மட்டுமில்லாமல், உரிய அனுமதி இல்லாமல் ‘ஸ்டன்’ (Stun) துப்பாக்கியும் வைத்திருந்த அவரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர்.

சுவிஸ் பெண்ணின் கைது குறித்து பேசிய ஒன்ராறியோ ஷெரீஃப் (Ontario, sheriff) அலுவலகம், சட்டவிரோதமாக போதை பொருள் கடத்தியது மற்றும் உரிய அனுமதி இல்லாமல் ஆயுதம் வைத்திருந்த குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது ஒன்ராறியோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இன்னும் சில தினங்களில் மான்செஸ்டர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

Swiss News

அலைகள் ஓய்வதில்லை படத்தில் "கோயிலில் காதல் தொழுகை" என்றொரு பாடல்வரி உள்ளது
அந்த வரி எவ்வாறு உருவானது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்தப் பெண்ணுக்காகக் கவலைப்படுபவர்கள், கவலைப்படப் பல காரணங்கள் இருக்கலாம்.... ஆனால் நீதி, சட்டம் என்பவற்றை உதாரணமாக்கி கருத்திடுபவர்கள், முக்கியமானதொன்றை கவனிக்க தவறியதாகத் தெரிகிறது. செய்தியை மறுமுறை வாசிப்பது நல்லது.
 
"தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்."  
 
'பொதுமக்களே பிடித்தார்கள்.' 'பொதுமக்களே பொலிசாரிடம் ஒப்படைத்தார்கள்.'
 
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு." இதுவே உண்மையான சனநாயகம்.
 
அந்தப் பெண்ணின் படத்தை வெளியிட வேறு எந்தத்தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்..? மகிந்தா நியமித்த மொகான் பீரிசு போன்ற நீதிபதிகளின் தீர்ப்பையா...??? :o     

ஐரோப்பாவில் வசித்தாலும் நான் "சுழல் கக்கூசில் தான் இன்னும் இருக்கிறேன்" என்பதைப் பறைசாற்றும் படி இருக்கிறது பாஞ்ச் உங்கள் கருத்து! :D

"மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு" என்பது தேர்தலுக்கு அரசியல் வாதிகள் பயன்படுத்தும் கோஷம்! சந்தேக நபருக்கு நீதி வழங்கும் கோஷம் அல்ல! நாங்கள் இன்னும் ஒன்றைச் செய்யலாம்! மக்களின் தீர்ப்புத் தான் முக்கியமெண்டு ஆப்கானிஸ்தான் போல மக்களே தூக்கில் போடவும் அனுமதி கொடுக்கலாம்! 

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பொலிசார் யாரையும் முன்னரைப்போல இப்போது கண்மூடித்தனமாகக் கைது செய்வதில்லை என எங்கேயோ கேட்ட ஞாபகம் இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனியிடம் கேட்ட அதே கேள்வியையே உங்களிடமும் கேட்கிறேன்! (அவர் கம்மெண்டு இருக்கிறார் இன்னும்!) இப்படி ஒரு நிலையில் படம் வெளிவந்தது உங்கள் குடும்பப் பெண்ணாக இருந்தால் உங்கள் நிலைப்படு என்ன? (விடை சொல்ல வேண்டாம்! தெரியும் நீங்களும் இத்தோடு பம்மிக் கொண்டு போய் விடுவீர்கள்! :rolleyes: )

யாழைவிடவும் வேறு இணையங்களுக்கும் நான் எழுதியுள்ளேன். ஆனால் அங்கு இல்லாத பண்பு யாழ்கள உறவுகளில் தெரிந்ததால் இங்கு தொடர்ந்திருக்க விரும்பினேன். நாதமுனியவர்கள் உங்கள் கேள்விக்குப் பதில்தராது கம்மெண்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அதற்குக் காரணம் உங்கள் கேள்வியின் பண்பைப் பொறுத்ததாக இருக்கலாம். அவரிடம் கேட்ட அதே கேள்வியை என்னிடமும் கேட்பதாக எழுதியுள்ளீர்கள். கேள்வி பண்பற்றதாகவே எனக்குப்படுகிறது. ஆகவே நானும் கம்மெண்டு இருந்துவிட விரும்புகிறேன்.  :(

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

இனி ஒவ்வொருவரும் விமானத்தில் இருந்து இறங்கி வரவேண்டும்

சபா கண்ணை கட்டுதே

திருந்துவார்கள் என்ற எதிர் பார்ப்புடன் நான் விமானத்தில் ஏறப்போறேன்

கண்டபடி விமானம் விழுவதால் பயமா இருக்குது :rolleyes:

சேர்வையர்,

பதில் தராமல் ஓடிவிட்டேன் என்று, ஜஸ்டீன் போட்ட பதிவுக்கு, நீங்கள் மூக்கை நுளைத்து, கண்ணைக் கட்டுது என்றால் ஏப்புடி?

VVT கொத்து அந்த மாதிரி. டிஸ்கவுண்ட் ஏதும் கிடைக்கும் எண்டு, உங்கட பேரை சொல்லப் போக, நீங்கள் மறதில போட்டியலாம் எண்டு, ஒரு பில்லை இழுத்திச்சினம்.

என்ன செய்யிறு, நம்ம கள உறவாச்சே எண்டு, கட்டியாச்சு. பிறகு ஆறுதலா தாருங்கோவன்.:icon_mrgreen:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு, தனிநபர் சுதந்திரம், மதிப்பீடுகள், பண்புகள் போன்றனவற்றை அதிகம் மதிக்கும் மேற்கு நாடுகளில் நியமங்களை பரபரப்புக்காக செய்திகளை வெளியிட்டு தங்களைப் பிரபல்யப்படுத்தி பணம் சம்பாதிக்கும் இணையக் குடிசைக் கைத்தொழில் புரிபவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாது. மூன்றாம் தரச் செய்திகளிலும், கிசுகிசுக்களிலும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும். அதைப் படித்தோம், அப்பால் போனோம் என்று இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் ஜயா,

பதிவிட்டு விமானம் ஏறினேன். இறங்கி பார்த்தேன்.

'இப்படி படம் உங்கள் குடும்ப....?

உங்களிடமே கேட்கிறேன். ஒரு குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், நீதிபதியிடம், எனது நிலை உங்சள் குடும்ப உறவுக்கு வந்திருந்தால் தண்டிப்பீர்களா என்பது போன்ற அபத்தமாக தெரிகிறது.

தெளிவாக சொல்வதானால், சரியாகப் படிக்கவில்லை என்று வாத்தியார் நாலு சாத்து சாத்தினால், பயிலின் தகப்பன், தலைமை வாத்தியாரிடம் போய், வாத்தியாரின் மகன் படியாமல் இப்படி அடிவாங்கினால் உவர் என்ன செய்வார் என்று கேட்டால் எப்படி.

ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்குதே கேள்வி.

:rolleyes: சரி நீதிபதி அவர்களே! நீங்கள் தான் தீர்ப்பு எழுதும் தகுதி வாய்ந்த ஜட்ஜ் ஐயா! உங்களிடம் கேட்டது இந்த சாதாரண குடிமகனின் தவறு தான்! எனக்கும் தீர்ப்பெழுதிப் போடாதையுங்கோ!

(இது பயனுள்ள வாதம் தான் என்றாலும், சுவரோடு ஒரு அளவுக்குத் தான் முட்டலாம், இதை விட அடுத்த கட்டிடத்தில கூட்டில இருக்கிற சிம்பன்சிக்கு சைகைப் பாசை படிப்பிக்கலாம், அது நல்ல பயனுள்ள வேலையாக இருக்கும்!எனவே நான் புறப்படுறன்! :D )

  • கருத்துக்கள உறவுகள்

:D பலருக்கு இங்கே திரி எதைப் பற்றி என்பதில் குழப்பம்! பொலிசார் கைது செய்தால் சந்தேக நபர் தான், அது கண்ணை மூடிக் கொண்டு செய்தாலும் திறந்து கொண்டு செய்தாலும்! சந்தேக நபருக்கு உரிமைகள் இருக்கு! இப்ப இதுவா விவாதம்? சந்தேக நபரை ஏன் ஒரு மூன்றாம் தர மீடியா பகிரங்கப் படுத்த வேண்டும் என்பதே விவாதம்! ஏதாவது இது பற்றிச் சொல்ல இருந்தால் சொல்லலாம்!

இலங்கைச் சட்ட திட்டம் எனக்குத் தெரியாது.அது அவர்களுக்கேற்ற மாதிரி அடிக்கடி மாறும்.

சந்தேகத்தில் ஒருவர் கொடுக்கும் புகாரின் மேல் ஒருவரை விசாரணைக்கு அழைக்கும்  போது நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.திருடப்பட்ட நகைகள் கூட மீட்கப்பட்டுள்ளனவாம்.

அந்தச் செய்தித்தளம் மூன்றாந்தரமாக இருந்தால் என்ன முதலாந்தரமாக இருந்தால் என்ன?

செய்தி உண்மையா இல்லையா என்பது தான் முதற்பிரச்சனை.

உங்கள் ஆதங்கத்தைப்பார்த்தால் இந்தச் செய்தியும் படமும் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிகையில் வந்திருந்தால்

நீங்களும் கம்மன்னு இருந்திருக்கலாம். :D

வாத்தியார்,

உங்க சிலர் குய்யோ, முறையோ எண்டு விதண்டாவாதம் பண்ணுகினம்.

அங்கே பொலீஸ் விசாரனை நடந்திருக்கிறது. யாழில் உறவுகள் இல்லா நிலையில், திருகோணமலையில் இருந்து திருவிழாவிற்கு, அதுவும், நல்லூர் முருகன் போன்ற பிரபல்யமில்லா ஆலயத்திற்கு வந்ததற்கு திருப்தியான காரணம் கொடுக்க வில்லை.

நகை எடுக்க முயற்சித்த போதே பிடிபட்டார்.

பெண் பொலீசார் சோதனையிட்ட போது, உள்ளாடையிலிருந்து வேறு நகைகள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்கள் மூவரும், விரைவில் நீதிமன்றில் நிறுத்தப்படுவர் என தெரிகிறது.

உங்க எண்னெண்டா, மனித உரிமை அது, இதுவாம் சிலர். சிம்பென்சிக்கு படிபிக்கிறன் எண்டு கெளம்பிட்டாரு ஜஸ்டின்.

பாதிக்கப்பட்டவர் மனித உரிமை பற்றியோ, குருவி சேர்ப்பது போல், சேர்த்து வாங்கின நகைகளை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்யக் கூடுமே என்று யாருமே கவலைப்படவில்லையே.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பொது இடத்தில்  கையும் களவுமாக பிடிபட்ட ஒருவரின் படத்தை ஒரு செய்தித்தளம் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்பது எனக்கு விளங்கவில்லை.

:D

இதைக் கேள்வியுற்று எனக்கு சத்தியமாய் அதிர்ச்சியில்லை! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள பாஞ்ச்! இதில் என்ன பண்புக் குறைவைக் கண்டீர்கள்? உங்கள் உறவினர்கள் யாரும் இப்படிச் செய்பவர்கள் என்று எங்கேயும் நான் எழுதவில்லை! தங்கள் உறவுகள், நெருக்கமானவர்கள் போல முன் பின் தெரியாத அன்னியர்களையும் பார்த்தால் இப்படி பட்ட தரக்குறைவான காரியங்களை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதே கேள்வியின் பின்னாலுள்ள செய்தி! இது ஒன்றும் உங்களுக்கோ நாதமுனிக்கோ எதிரான தனிப் பட்ட தாக்குதல் அல்ல! அப்படிக் கருத்து இங்கே தொனித்தால் முறையிடுங்கள், நிர்வாகம் சொல்வதை நான் கேட்கிறேன்!

உண்மை என்னவென்றால், எங்கள் உறவுகள், தெரிந்தவர்களுக்கு இதே போல நடக்கும் போது நாம் எல்லோருமே யூ-ரர்ண் எடுத்துத் திரும்பி எங்கள் கருத்தை மாற்றிக் கொள்வோம்! ஆனால் இப்போது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம், மௌனமாகி விடுவோம்! இதுவே நான் சொல்ல வந்த விடயம், வேறெதுவும் இல்லை!

எனக்குக் குறைவாகத் தெரிவது உங்களுக்கு நிறைவாகத் தெரியலாம் அல்லது மாறி உணர்வதும் மனித இயல்பு. அப்படி இருப்பதால்தான் நாங்களும் விவாதங்களைப் புரிந்து மோதமுடிகிறது. குத்துச்சண்டை புரிபவர்களும் மோதல்முடிவில் கைகுலுக்கிக்கொள்வார்கள் அதுவும் ஒரு சிறந்தபண்பாகும். அதனை உங்களிடமும் கண்டேன்.
 
அன்புள்ள பாஞ்ச்! இது எங்கள் மோதலை முடித்து கைகுலுக்க வைத்துவிட்டது. சண்டைகளைப் பார்ப்பதிலும் மக்களுக்கு அதீத ஆர்வம் உள்ளது. பார்ப்பதற்குத் திரண்டு வருவார்கள். நாங்கள் தொடர்ந்து மோதுவோம், விவாதிப்போம் முடிவில் கைகுலுக்கிக்கொள்வோம் இனிய உறவுகளாக. :rolleyes:  :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.