Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் இந்து முறைப்படி ஆண்களின் ஓரினச் சேர்க்கை திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கேரளாவைச் சேர்ந்த 2 ஓரனிச்சேர்க்கை வாலிபர்கள் அமெரிக்காவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த 2012ம் ஆண்டு டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என்ற பிராமணர் அறிமுகமாகியுள்ளார்.

முதலில் நட்பாக துவங்கிய அவர்களின் பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்ற அவர்கள், தங்களின் காதல் பற்றி பெற்றோர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்ட இருவீட்டார்களில் சிலர் அதிர்ச்சியடைந்தாலும், சிலர் அவர்களின் காதலை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறுதியில் இரு வீட்டாரும் அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க முடிவு செய்த்தையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இதையடுத்து இந்த மாதம் கலிபோர்னியாவில், சந்தீப் மற்றும் கார்த்திக் பாரம்பரிய இந்து முறைப்படி தங்கள் குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.USA-Tamil.jpg

 

http://www.canadamirror.com/

- See more at: http://www.canadamirror.com/canada/40560.html#sthash.QWRaopRM.dpuf

என்ன கொடுமை சரவணா, அண்மையகாலமாக கிந்தியா தான் இதில் முதலிடம் போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாசமறுப்பிலை நிச்சயதார்த்தம் வேறை நடந்திருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
ஆணும் பெண்ணும் சமம் என்றால் எல்லாமும் சமம்தான். அதென்ன திருமணத்தில்மட்டும்.... ஆச்சரியக்குறி??  :(
 
நிச்சயதார்த்தம் நாசமறுப்பிலை ஐயா குமாரசாமி பெரியவரே, அது நாச வரவேற்பு. :D  :lol:  
 

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில்.... இரு இந்தியப் பெண்களும், லெஸ்பியன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்தியா... எவ்வளவோ முன்னேறி விட்டது.
இலங்கையர்கள் ஏன், இப்படியான கலியாணங்களை செய்ய தயக்கம் காட்டுகிறார்கள்.smiley-laughing002.gif

 

அதுக்காக... "நீ, வா.... நான் தாலி கட்டுறன்" என்று கேட்டுடாதீங்கப்பா. :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமுறைப்படி இவர்கள் செய்த திருமணம் தவறானது.
இந்து மதத்தில் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற தத்துவமே உள்ளது.

வேணுமென்றால் வெள்ளைக்காரருடைய கலாச்சார முறைப்படி இன்னொரு முறை செய்யட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்துமுறைப்படி இவர்கள் செய்த திருமணம் தவறானது.

இந்து மதத்தில் ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற தத்துவமே உள்ளது.

வேணுமென்றால் வெள்ளைக்காரருடைய கலாச்சார முறைப்படி இன்னொரு முறை செய்யட்டும்.

உந்தக் கண்றாவியைச் செய்து காட்டினதே சிவனும் விஶ்ணுவும் தான். அய்யப்பன் வாரிசு!

ஆணும் பெண்ணும் சமம் என்றால் எல்லாமும் சமம்தான். அதென்ன திருமணத்தில்மட்டும்.... ஆச்சரியக்குறி??  :(

 

நிச்சயதார்த்தம் நாசமறுப்பிலை ஐயா குமாரசாமி பெரியவரே, அது நாச வரவேற்பு. :D  :lol:

ஆண் = பெண்

ஆண் = ஆண்

பெண் = பெண்

ஆண் + பெண் = குழந்தை

ஆண் + ஆண் = ?

பெண் + பெண் = ?

அண்ணை அது வேற சமம் அண்ணை

வேணுமென்றால் அவர்கள் சேர்ந்து வாழட்டும், அது அவர்களின் விருப்பம், ஆனால் திருமணம் என்ற கதைக்கு இடமில்லை.

இதுவும் விளங்காவிடில் சொல்லுங்கள், நல்ல விளக்கம் தரலாம்

 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தக் கண்றாவியைச் செய்து காட்டினதே சிவனும் விஶ்ணுவும் தான். அய்யப்பன் வாரிசு!

 

*** விஷ்ணு மோகினி அவதாரத்தில் இருந்தபோதே அந்த தப்பு தெண்டா நடந்தது. அவர்களுக்கு பிறந்தவர் தான் ஐயப்பன்.  :D

Spoiler
ஐயப்பனின் வரலாறு

மகசி என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின்தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகசி முடிவு செய்தாள். பிரம்மாவை நோக்கி கடுந்தவமியற்றினார். அதனால் மகிழந்த பிரம்மா சிவனுக்கும் திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகசிக்கு மரணம் ஏற்படும் என்று வரம் தந்தார்.

பாற்கடல் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த யோகத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலாமல் போனது. பின்னர் யோகம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அவ்வாறு சிவபெருமானுக்காக மோகினி மீண்டும் அவதரித்த பொழுது சிவனும் மோகினியும் ஒன்று சேர்ந்து பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) - ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு. ஐயன் என்பது ஆர்ய என்பதின் திரிபு. ஆர்ய என்றால் மதிப்புக்குரிய என்று பொருள்.

ta.wikipedia

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தனிமனித சுதந்திரம் என்பது மற்றவர்களைப் பாதிக்காத வரைக்கும்... மதிக்கப் பட வேண்டிய ஒன்று என்பது எனது அபிப்பிராயம்!

 

அத்துடன்  தன்னினச்சேர்க்கை என்பதைப் பற்றி.  விஞ்ஞான பூர்வமான புரிதல் இன்னும் ஏற்படவில்லை! வெறும் மத நம்பிக்கைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மட்டுமே ' எதிர்ப்புக்கள்' காண்பிக்கப் படுகின்றன!

 

மத சம்பிரதாயமான சடங்குகளுக்கு அப்பால்... நான் இவர்களது 'சங்கமத்தை' ஏற்றுக்கொள்கிறேன் என்றே நம்புகின்றேன்!

 

மற்றும் நாகரிக சமுதாயங்களும் மெல்ல.. மெல்ல.. இந்த திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டங்களை இயற்றி வருகின்றன!

சேர்ந்து வாழ்தல்(லிவிங் டுகெதர்) வேறு திருமணம் வேறு

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்க்கை என்பது ஒரு வட்ட சாலை ....
முன்பு அரசர்களுக்கு அந்தபுரம் இருக்கும் 
அழகிகள் பட்டாளம் இருக்கும்.
இப்போ அரசர்களை சுற்றி கமரா செக்ருட்டி 
சொந்த மனைவியிடம் போவதற்கே ரிஸ்க் எடுக்க வேண்டும்.
சாதாரண குடிமகன் 
குடி கிளப் நாளொரு குட்டி பொழுதொரு மேனி 
என்று சாதரணமாக திரிகிறான். 
 
பிடிக்குதோ இல்லையோ 
மாற்றங்களை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
எனது வாழ்வில் .....
எனது அம்மாவின் பள்ளி கால புகைப்படத்தில் 
நண்பிகளுடன் மினி ச்கேர்டுடன் (கட்டை பாவாடை) 
எல்லோரும் நிற்கிறார்கள்.
அதே அம்மா .....
எனது அக்காவின் பாவாடை அதே வயதில் முழங்காலுக்கு 
சற்று மேலே போகாமல் பார்த்து கொள்வார்.
அக்காவின் மகள் 
வீட்டில் என்றாலும் இப்போ கால்சட்டையுடன் இருக்கிறாள்.
இது யாழ்பாணத்து எல்லா வீட்டிலும் இருக்கும் சாதாரண விடயம்.
முன்பையும் 
பின்பையும் 
ஒரே தருணத்தில் நாம் பார்பத்தில்லை என்பதால் 
மாறுதல் எமக்கு தெரியாமலே மாறிவிடும். 
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

ஒரு உளவியல் உண்மை தெரியுமா?

ஓரினச்சேர்கையாளரை அதிகமாக வெறுப்பது போல் காட்டிக் கொள்பவர்கள் உண்மையிலேயே அதில் ஒரு இலைமறைகாய் நாட்டம் உடயவர்களாய் இருப்பார்களாம் :)

கிறிஸ்தவத்தின் உண்மையாக கர்த்தா ( ஜேசு அல்ல, ஜேசுவின் மறைவின் பலவருடங்களின் பின்னே கிறிஸ்தவம் ஒரு மதமாகியது) போல் இப்படிப் பட்ட ஒருவர் என்று சொல்வார்கள்.

வாசித்ததை சொல்கிறேன். அடிக்க வராதேயுங்கோ.

திருமணம் என்பதே மனிதன் அமைத்த ஒரு சடங்கு. அதில் தெய்வீகம் ஏதுமில்லை. அப்படி இருக்கையில் ஆணும் பெண்ணும் மட்டும்தான் திருமணம் செய்வது சரி என்பதும் மனிதன் போட்ட சட்டம்தானே?

மனிதன் போட்ட சட்டத்தை காலப்போகில் மனிதனே மாற்றுவது வழமைதானே?

எனக்குத்தெரிய எந்த இந்து சமய புத்தகமும் திருமணம் ஆண்-பெண் இடையே தான் சாத்தியம் என்று சொல்லவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருமத்தை இவ்வளவு பெரிசாய் கொண்டாடுவினமெண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை..... :lol:  :D

 

 

நானும் தான்....

காணொளியை பார்த்து....  ஷாக்காகிட்டேன். :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கா என்றாலே பிரமாண்டம்தான் !

 

அடிவாங்கினாலும் பிரமாண்டம்தான்..... :D

 

111wtcreutersitaly.jpg

அடிவாங்கினாலும் பிரமாண்டம்தான்..... :D

 

111wtcreutersitaly.jpg

 

 

 அடி கொடுப்பதிலும் தான்

 

article-1165768-0411E22E000005DC-256_468

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளை கொல்வதிலும் தன் :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவிகளை கொல்வதிலும் தன் :)

அவர்கள் எல்லோரும் எதிர்கால பயங்கரவாதிகள் 
என்பது டி என் எ டெஸ்ட் செய்து நிருபனமான பின்புதான் 
கொல்லபட்டு இருப்பார்கள்.
 
அப்பாவிகளின் மரணம் அமெரிக்காவை பிரமாண்டமாக பாதிக்கும் செயல்!

கலியாணவீட்டு திர்க்குள்ளே அணுகுண்டை போடுவீங்களா ?
என்ன மனுசரப்பா நீங்க ?
  • கருத்துக்கள உறவுகள்

-----
கலியாணவீட்டு திர்க்குள்ளே அணுகுண்டை போடுவீங்களா ?
என்ன மனுசரப்பா நீங்க ?

 

 

கலியாண வீட்டு திரியா?

கிழிஞ்சுது போ...... :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கலியாண வீட்டு திரியா?

கிழிஞ்சுது போ...... :D  :lol:  :icon_idea:

தமிழ் சிறி அவர்களே அங்கு அப்படி என்ன இருக்கிறது கிழிவதற்கு...... ????????  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அவர்களே அங்கு அப்படி என்ன இருக்கிறது கிழிவதற்கு...... ????????  :lol:

 

வேண்டாம் ஐயா.....

நீங்கள் கேட்டதற்கு, நான் பதில் எழுதப் போக....

மட்டுறுத்தினர்கள், மேலும்.... பிரித்து, மேய்ந்து..... விடுவார்கள் ஐயா. :D  :lol: 

 

நான்.... இந்த விளையாட்டுக்கு வரேல்லை. :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வேண்டாம் ஐயா.....

நீங்கள் கேட்டதற்கு, நான் பதில் எழுதப் போக....

மட்டுறுத்தினர்கள், மேலும்.... பிரித்து, மேய்ந்து..... விடுவார்கள் ஐயா. :D  :lol: 

 

நான்.... இந்த விளையாட்டுக்கு வரேல்லை. :icon_idea:

 

யாழ்கள மட்டுறுத்தினர்கள் பிரித்து மேய்வதால்தான் நாங்கள் தரித்து நிற்கிறோம். இல்லையெனில் களம் காடுபத்திக் காணாமல் போயிருப்போம். :o  
 
 
பேரன்: பாட்டி நான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து ஓடப்போகிறேன் என்னை வாழ்த்துங்கள் பாட்டி.
 
பாட்டி: பார்த்து மெதுவா ஓடுப்பா என்ரை செல்லப் பேரா.
 
பேரன்: கிழிஞ்சுதுபோ.... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.