Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வி - வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் சந்தித்துப் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாதாசன்,

உண்மையிலேயே இதை சிரிப்புவராமல் தன் எழுதினீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மா காந்தி கூட தன அஹிம்சை போராட்டத்திக்கு பிரச்சாரங்களை செய்து தான் ஆட்களை சேர்த்தவர் . சும்மா இருக்க ஒருவரும் அவர் கூட சேரவில்லை . ஆகவே ஒரு விடுதலை போராட்டதிக்கு ஆட்களை சேர்க்கும் போது இப்படியான கட்டாய ஆட்சேர்ப்புகள் நடக்கத்தான் செய்யும் .

இதனை சரி பிழை என்ற கட்டத்துக்குள் வைத்து விமர்சனம் செய்ய கூடாது . தேவைகருதி சிலதினை செய்யத்தான் வேண்டும் ....

ஊழிக்காலம் புத்தகத்தை இப்போதுதான் படித்துமுடித்திருந்தேன். இறுதி யுத்தத்தில் மக்கள் எவ்வாறு கொடிய துன்பங்களுக்கு ஆளானார்கள் என்று இந்தப் புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். எறிகணை, ஆட்டிலறி, பல்குழல், கிபீர் அடி என எல்லாவற்றுக்குள்ளும் அகப்பட்டு இறந்தவர்களும், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தப்பியோட முனைந்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களும் எனப் பல விடயங்கள் வருகின்றன. மக்கள் பட்டினி இருக்கும்போது உணவுப் பொருட்களைப் யார் பதுக்கி வைத்திருந்தார்கள் என்பதும் படித்தால்தான் தெரியும்.

ஆட்பிடிப்பு பற்றியும் பல இடங்களில் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் ஆட்பிடிப்புக்கான கட்டளையை யார் கொடுத்திருந்தார்கள் என்பதை புலிகளின் தலைமைப் பீடத்தில் இருந்த தளபதிகளுடனும், முக்கியமாக அவர்களது மனைவிகளுடன் நல்ல தொடர்பில் இருந்த தமிழ்க்கவியால் நேரடியாகச் சொல்லமுடியவில்லை என்பது ஆச்சரியமாகத்தான் இருந்தது.

கட்டாய ஆட்சேர்ப்பை நியாயப்படுத்துபவர்கள் அந்த நிலையில் தாங்களோ தங்கள் குடும்பமோ இருந்தால் அதே கருத்தைவைக்கமாட்டார்கள். அப்படியான சிந்தனையுடையவர்கள் போர் நிறுத்தக் காலத்தில் வன்னிக்குச் சென்று போராட்டத்தில் இணைந்திருப்பார்கள். ஆனால் ஊரான் பிள்ளைகளைப் பலிகொடுத்து தாம் தப்பித்து வாழுவதே சுயநலமிகளான தமிழர்களின் பண்பு.

ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்கள்கூட களமுனைக்குப் போகாமல் ஆட்சேர்ப்பில் மும்மரம் காட்டியதும் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் என்று புரிந்தது.

புத்தகத்தைப் படிக்காதவர்களுக்கும் படிக்க விரும்பாதவர்களுக்கும் சில மாதிரிகளைத் கீழே தருகின்றேன்.

----

பக் 258 - 259.

தினமும் பிள்ளைகளைப் பிடிக்கிறார்கள். களப்பணிக்கென குடும்பத் தலைவர்களையும் கொண்டுபோகிறார்கள். அப்படிக் கொண்டுபோய் விடுகிற இடங்களிலெல்லாம் விமானத்தாக்குதல்கள் நடக்கின்றன. நிறையப்பேர் செத்துப்போனார்கள். உடனடியாக வீட்டுக்குத் தகவலும் வராது. ஒரு மாதம் கழித்துத்தான் வீரச் சாவுப் பட்டியலில் பெயர் வரும்.

ஒரு கட்டத்தில் ஆட்பிடிக்க வருவோருக்கும் சனங்களுக்குமிடையில் சண்டைகள் மூண்டன. மக்கள் கூட்டம் கூட்டமாக எதிர்த்துத் தாக்கினர். அப்படியானவொரு சந்தர்ப்பத்தில் போராளியொருவன் கொல்லப்பட்டான். சில போராளிகள் காணாமற்போயினர். சிலருக்கு அடிகாயங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

பிரபா போராடதொடங்கிய நாள் முதல், மே 2009 வரை செய்தது கிளர்ச்சிதான்.

கிருபன் அருமையான கருத்து. டபுள் பச்சைகள்.

லண்டனில் எங்கே வாங்கலாம் ஊழிக்காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா.. புத்தகத்தில் உள்ளவை எல்லாம் உண்மையின் சாட்சியங்கள் என்பதை எப்படி உறுதி செய்து கொள்கிறீர்களோ தெரியவில்லை.

அதே பிராந்தியத்தில் இருந்து வந்த டாக்டர் அரச கட்டுப்பாட்டில் இருந்த போது சொன்னவைக்கும்.. இப்போ சொல்வதற்கும் இடையில் பல வேறுபாடுண்டு.

அதேபோல்.. புத்தகம் எழுதிறவையின் மனநிலை மாற்றங்களும்.. புகுத்த வேண்டியதை புகுத்தி நிற்கும்.

மேலும்.. கட்டாய ஆட்சேர்ப்பு என்பது பள்ளிக்கூடம் போற பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய் பயிற்சி கொடுத்து புலியோட அடிபடு என்று விட்டது வேறு... களப்பணிக்கு வாங்கோ என்று கேட்டு சில சந்தர்ப்பங்களில்.. ஆட் தேவையின் நிமித்தம்.. விருப்புக்கு மாறாக கொண்டு போனவை கட்டாய ஆட்சேர்ப்பு ஆகாது.

ஆகாய கடல் வெளித் தாக்குதலின் போது.. பள்ளி மாணவர்களை எல்லாம்.. ஆனையிறவிற்கு கூட்டிச் சென்று இயக்கச்சியில் பங்கர் வெட்ட விட்டார்கள். யாழ் கோட்டை தாக்குதலின் போது எதிரியின் சுடுவீச்சுக்குள் நின்று பங்கர் வெட்ட விட்டார்கள்.

அங்கு சென்று அதை வெட்டும் போது தான்.. அந்தப் போராளிகளின் தேவையை உணர முடிந்தது. ஒவ்வொரு பங்கரும்.. அவர்களுக்கு எவ்வளவு அத்தியாவசியம் என்பதை உணர்த்தியது. ஒரு வெற்றிப் பொறியாக மாறிய பங்கர்களும் உண்டு. அதில்.. யாழ் பொலிஸ் நிலையப் பகுதியில் அமைந்திருந்த பங்கர்களே.. யாழ் கோட்டையின் வெற்றிக்கு இறுதியில் பிரதான பங்கு வகித்தன.

களத்துக்கு வெளியில் இருந்தும்.. சுய விளம்பரம்.. தேடியும் பட்சாதாபிகளாக மாறி உள்ள பலரை இன்று பார்க்கிறோம். பொது எதிரியை விட்டு.. சொந்த போராளிகளுக்கு எதிராக.. சொந்த மக்களை கட்டாயப்படுத்தி அனுப்பின வரதராஜப் பெருமாளையும்.. பெரும் எதிரிப் படையணிகளை தம் பலத்துக்கு அதிகமாவே எதிர் கொண்டு போராடிய எம் சொந்த சகோதர சகோதரிகளுக்கு தற்துணிவோடு போய் உதவ வேண்டிய சூழலை புறக்கணித்த மக்களையும்.. நாம் கண்டு கொள்வதில்லை. புலிகள் மீதான விமர்சனங்கள் என்பதை ஒரு புத்தகத்தின் அடிப்படையில்.. எடுக்க முடியாது. எமது சுய சிந்தனை அனுபவம் இவற்றையும்.. அங்கு சேர்த்து.. நியாயமான ஆராய்தலோடு முடிவெடுக்க வேண்டும்.

இதனால் தான் உந்த புழுகு மூட்டை புத்தகங்களை வாசிப்பதில்லை. எம்மவர்கள் எவ்வாறு எல்லாம் சுயநலத்துக்கு கதை சொல்வார்கள் என்பதை ஒவ்வொரு அகதி விண்ணப்பக் கதைகளும் சான்று பகிர்கின்றன. அப்படியான எம் மக்களிடம்.. நீதியான நியாயமான வரலாற்றுப் பதிவோடு ஒரு நூல் வரும் என்று நினைக்கவில்லை. பல முன்னாள் போராளிகள் கூட சந்தர்ப்பவாதிகளாக அலைவதை காண்கிறோம். அப்படி இருக்கு இன்று நிலைமை.

அதற்காக எதிரிகளின் நலனுக்காக.. வரதராஜப் பெருமாள் போன்ற சொந்த இனத்தை சொந்த இனத்தைக் கொண்டே அழித்தவர்களை மக்களின் பிரதிநிதிகளாக்க முனையும் அந்நியர்களின் செயலை எப்படியும் நியாயப்படுத்த முடியாது. :icon_idea:

Edited by nedukkalapoovan

ஒட்டுமொத்தத்தில தமிழர்களுக்கென  தேவையான சுய கௌரவமான ,தன்மானம் ,சூடு ,சுரணை உள்ள ஒரு வாழ்வை அமைக்க தங்களையே அர்ப்பணித்து போராடி முயன்ற தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் எம் இரத்தங்களை அவர்களின் காலத்தின்  தேவைக்கேற்ப ,கட்டாயத்திர்கேற்ப செயல்பட்ட செயல்பாடுகளை ...நாம் விமர்சிக்கும் இந்த காலம் கொடுமையிலும் கொடுமை ....................சுரணையற்றவர்களின்  எழுத்துக்களும் அவற்றை காவிக்கொண்டு திரியும் போலி அரசியல் ஆய்வாளர்களுக்கு மத்தியிலும்    உண்மை ,யதார்த்தம் எப்போதும் விலகி நிற்காது என்பதே உண்மை......... :icon_mrgreen:
 
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்காமலேயே எல்லாம் உண்மை என்றோ இல்லை புளுகுகள் என்றோ ஒருவரும் சொல்லமுடியாது. ஆனால் எதையும் வாசிக்காமாலேயே தீர்ப்புச் சொல்ல நெடுக்ஸைப் போன்ற தீவிர தமிழ்த் தேசியவாதிகள் நிறையப் பேர் இங்குள்ளனர்.

ஊரில் இருந்தபோது நானும் பங்கர் வெட்டியிருக்கின்றேன், சென்றி பார்த்திருக்கின்றேன். ஒரு மாதம் அகதியாக வெளியிலும் வெட்டையிலும் படுத்திருக்கின்றேன். ஆனால் இதெல்லாம் இறுதி யுத்தக் காலத்துக் கொடுமைகளோடு ஒப்பிடும்போது வெறும் தூசு.

ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் எப்படிக் கட்டுப்பாட்டை இழந்தது என்பதையும், காயப்பட்ட போராளிகளுக்கான பால்மாவையே சக போராளி திருடி விற்றதையும் காலமாக ஊழிக்காலம் இருந்தது. எழுதியவரும் 20 வருடம் புலிகளில் இருந்தவர்தான். இறுதிவரை புலிகளின் கொடுப்பனவுகளுக்கும் வழங்கல்களுக்கும் காத்திருந்தவர்தான்.

சரி. திரியைத் திசை திருப்ப விரும்பவில்லை. இன்னொரு திரியில் நேரம் கிடைக்கும்போது மேலும் எழுதுகின்றேன்.

நீங்கள் புத்தகத்தை வாசிச்சு தான் உதை தெரிஞ்சு கொள்கிறீர்கள்.

எங்களுக்கு சொந்த உறவுகள் அங்கிருந்து.. கடைசி வரை அங்கு வாழ்ந்து.. தப்பி.. வெளியில் வந்து சொன்ன உண்மையின் சாட்சியங்கள்.. உதை விட நல்ல ஆதாரமாக பதிவாகி உள்ளது.

இதே ஆக்கள்.. போராளிகள் தங்கள் தேவைக்கு என்றிருந்த கொஞ்ச உணவில்.. கஞ்சி காய்ச்சி.. ஊத்தினதைச் சொன்னவையோ..?!

பொதுமக்களுக்கு உணவு தேவை என்பதை சர்வதேச செஞ்சிலுவை அறிவித்தும்.. ஐநா அறிவித்தும்.. அனுப்பாத ஐநா பிரமாணங்களை ஏற்றுக் கொண்ட ஒரு அரசை கண்டிக்க வக்கில்ல.. போராளிகளின்.. பால்மாவில்.. அத்தனை மக்களும் உயிர் வாழ்ந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கும் உங்களின் புத்தக வாசிப்பு அறிவு வியக்க வைக்கிறது கிருபண்ணா. :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் எங்கே வாங்கலாம் ஊழிக்காலம்.

தெரியவில்லை. இந்தியாவில் இருந்து நண்பர் ஒருவர் மூலமாகத் தருவித்திருந்தேன். 

எதுவரை தளத்தை நடாத்தும் பௌசர் (eathuvarai@gmail.com) சிலநேரம் விற்கலாம். கேட்டுப் பாருங்கள்.

இதே ஆக்கள்.. போராளிகள் தங்கள் தேவைக்கு என்றிருந்த கொஞ்ச உணவில்.. கஞ்சி காய்ச்சி.. ஊத்தினதைச் சொன்னவையோ..?!

ஆம். அதுவும் சொல்லப்பட்டிருக்கு. அது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர். கஞ்சி ஊத்தாவிட்டால் பட்டினியாலேயே ஒன்றுமில்லாதவர்கள் பலர் செத்திருப்பார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆம். அதுவும் சொல்லப்பட்டிருக்கு. அது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர். கஞ்சி ஊத்தாவிட்டால் பட்டினியாலேயே ஒன்றுமில்லாதவர்கள் பலர் செத்திருப்பார்கள்.

அதேபோல் வணங்காமண் உணவு - மருத்துவ நிவாரணக் கப்பலை செஞ்சிலுவையிடம் கையளித்து.. மக்களை அந்த உதவிகள் உரிய நேரத்தில் சென்றடையச் செய்திருந்தாலும்.. போராளிகள்  சிலர் திருடி விற்க வேண்டி வந்திருக்காது. மக்கள் காயப்பட்டு செத்திருக்க வேண்டியும் வந்திராது.

அதேபோல்.. இந்தியா விட்ட போலி அறிக்கையை  நம்பாது.... கனரக ஆயுதப் பாவனையை உலகம் தவிர்க்க கண்டிப்பாகக் கோரி இருந்திருந்தால்.. கண்காணித்திருந்தால்.. எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.

பிழை புலிகள் மீது மட்டுமானதல்ல. புலிகள் மீதான பிழை 10% என்றால்.. மிகுதி 90% பிழைகளும் அவர்களிற்க்கு வெளியில். ஆனால்.. நாம் அலசி ஆராய்ந்து வாந்தி எடுப்பதோ.. அந்தப் 10% ஐ எப்படி 90% ஆக்குவது என்பது பற்றி தான்.

இதனால்.. ஆதாயம் பெறுவது.. திட்டமிட்டு ஒரு இனப்படுகொலையை நடத்தி முடித்த அதிகார வர்க்கங்களும்.. ஆக்கிரமிப்பு சக்திகளுமே..!

அதற்கு ஏன் நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ துணை போக வேண்டும். உண்மையான இன விருப்பிருந்தால் அதைச் செய்வோமா..?! என்ற கேள்வியும் எழுகிறது. :icon_idea:

வரதராஜப்பெருமாள்.. இந்தியாவோடு சேர்ந்து நின்று சொந்த இனத்துக்கு எதிராக இழைத்த கொடுமைகள்.. 90% அவர்களின் கூட்டுத் தவறாகும். அதனை 10% ஆக்கிக்காட்ட நினைப்பது மகா வரலாற்றுத் தவறு மட்டுமல்ல.. சுத்த அயோக்கியத்தனமாகும். :icon_idea:

Edited by nedukkalapoovan

மகாத்மா காந்தி கூட தன அஹிம்சை போராட்டத்திக்கு பிரச்சாரங்களை செய்து தான் ஆட்களை சேர்த்தவர் . சும்மா இருக்க ஒருவரும் அவர் கூட சேரவில்லை . ஆகவே ஒரு விடுதலை போராட்டதிக்கு ஆட்களை சேர்க்கும் போது இப்படியான கட்டாய ஆட்சேர்ப்புகள் நடக்கத்தான் செய்யும் .
 
உங்கட பேருக்கு பொருத்தமான கருத்துகளை வைக்கிறீர்கள் வாழ்த்துக்கள். நல்ல வேளை இதுகளை கேட்க காந்தியும் பிரபாகரனும் உயிரோட இல்லை. 

மேலும்.. கட்டாய ஆட்சேர்ப்பு என்பது பள்ளிக்கூடம் போற பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய் பயிற்சி கொடுத்து புலியோட அடிபடு என்று விட்டது வேறு... களப்பணிக்கு வாங்கோ என்று கேட்டு சில சந்தர்ப்பங்களில்.. ஆட் தேவையின் நிமித்தம்.. விருப்புக்கு மாறாக கொண்டு போனவை கட்டாய ஆட்சேர்ப்பு ஆகாது.

ஆஹா என்ன ஒரு சமாளிப்பு. விருப்பத்திற்கு மாறாக என்பது கட்டாயம் என்று பொருள்படாதா?
ஒரு பெண்ணை உறவு கொள்ள வாங்கோ என்று கேட்டு அவர் வராத பட்சத்தில் பலவந்தப்படுத்தி உறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சொல்வது போலுள்ளது. 

உங்கட பேருக்கு பொருத்தமான கருத்துகளை வைக்கிறீர்கள் வாழ்த்துக்கள். நல்ல வேளை இதுகளை கேட்க காந்தியும் பிரபாகரனும் உயிரோட இல்லை. 

என்ன கொடுமைடா சரவணா ,.... தமிழ்கவி யார் ஏன் இப்படி ஒரு விடயத்தை எழுதினார் இதையெல்லாம் விளங்கி கொள்ள சாதாரண மனித அறிவு போதும்  ..... 
 
இறுதி யுத்தம் அங்கு இடம்பெற்ற துன்பங்கள் இதனை யாரும் இல்லை என்று சொல்லவில்லை மறுக்கவும் இல்லை . ஆனால் அதனை எங்களுக்காக தங்கள் உயிரினை அர்ப்பணித்த ஒரு புனிதர்களை பிழை சொல்வதுதான் கொடுமையிலும் கொடுமை .   உண்மையில் தமிழ் மக்கள் எங்களுகென்று ஒரு தனித்துவமான் சுய மரியாதையை வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மாதிரி விமர்சனம் செய்ய மாட்டார்கள் .
 
இறுதி யுத்தம் பற்றிய நிறைய போலிகளை சும்மா நியப்படுத்தவேண்டம் ....சிங்களவன் உங்களை எப்படி எல்லாம் கொன்று குவித்துள்ளான் அதனை கண்டு கொதிப்பதை விட்டுட்டு எங்களுக்கவே இறந்தவர்களை கொச்சைபடுத்தும் ஈனபிறவிகளா நீங்கள் .....
 
தலைவர் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் தெனாலி ......அதுதானே அந்த வீடியோ என்று சொல்வீர்கள் தானே ....  வாழ்க வளமுடன் .....
 
இறுதி யுத்தத்தில் இருந்து வந்த என் நெருங்கிய பல உறவினர்கள் உண்டு ... நிறைய விடயங்கள் தெரியும் ...சும்மா சிங்களம் வெளிப்படுத்தும் போலிகளை வைத்து கண்ட கண்ட விமர்சனங்களை எழுதுபவர்களை என்ன சொல்ல முடியும் ....
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்காமலேயே எல்லாம் உண்மை என்றோ இல்லை புளுகுகள் என்றோ ஒருவரும் சொல்லமுடியாது. ஆனால் எதையும் வாசிக்காமாலேயே தீர்ப்புச் சொல்ல நெடுக்ஸைப் போன்ற தீவிர தமிழ்த் தேசியவாதிகள் நிறையப் பேர் இங்குள்ளனர்.

ஊரில் இருந்தபோது நானும் பங்கர் வெட்டியிருக்கின்றேன், சென்றி பார்த்திருக்கின்றேன். ஒரு மாதம் அகதியாக வெளியிலும் வெட்டையிலும் படுத்திருக்கின்றேன். ஆனால் இதெல்லாம் இறுதி யுத்தக் காலத்துக் கொடுமைகளோடு ஒப்பிடும்போது வெறும் தூசு.

ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் எப்படிக் கட்டுப்பாட்டை இழந்தது என்பதையும், காயப்பட்ட போராளிகளுக்கான பால்மாவையே சக போராளி திருடி விற்றதையும் காலமாக ஊழிக்காலம் இருந்தது. எழுதியவரும் 20 வருடம் புலிகளில் இருந்தவர்தான். இறுதிவரை புலிகளின் கொடுப்பனவுகளுக்கும் வழங்கல்களுக்கும் காத்திருந்தவர்தான்.

சரி. திரியைத் திசை திருப்ப விரும்பவில்லை. இன்னொரு திரியில் நேரம் கிடைக்கும்போது மேலும் எழுதுகின்றேன்.

ஏன் இவர் 2002 சமாதானம் ஏற்பட்டபோது விலகவில்லை ?
இப்போ இவர்களுக்கு தேவை ஆமி கெடுபிடி இல்லதா வாழ்வு 
சுய விளம்பாரம் 
அதற்கு எந்த வாந்தியும் எடுத்துவிட தயார்!
 
இந்த கேடு கெட்டவர்களை விட போரில் ஒருநாள் பங்கு எடுக்காத நான் எத்தனயோ மேல்.
 
2009இல் நடந்தது தமிழர்கள் இனி தலைநிமிர்ந்து வாழ்வதா இல்லையா என்பதற்கான போர்.
இதில் எந்த கூட்டு கொலையை செய்தும் தமிழனை அழிக்க உலக ஏகாபத்தியங்கள் எல்லாம் கூடிய வேளை.
 
இவளவுமான இழப்புகளோடு என்றாலும் வன்னித்தமிழன் மீண்டதற்கு நடந்தவைகள்தான் காரணம். 
கட்டாய ஆட்சேர்ப்பு இல்லாது போயிருந்தால் .....?
விடுவிக்க பட்ட போராளிகள் என்று யாரும் இருந்திருக்க மாட்டார்கள் 
 
மக்கள் சிதறி ஓட  வேண்டும் என்பதால்தான் மக்களை இலக்கு வைத்து இராணுவம் தாக்கி வந்தது 
நடந்தது ஒரு இன அழிப்பு போர் என்பதை முழுதாக மறந்துவிட்டால் .........
இந்த சுயல கயவர்களின் புத்தகங்களை நானும் வாங்கி கால் நீட்டி கொண்டு இருந்து வாசிப்பேன். 
சிங்கள பௌத்த வெறியர்களின் இறுதி தாண்டவம் என்பதை 
மறக்கும் சக்தி எனக்கும் இருந்தால் இதைவிட மேலான பக்கங்களுடன் நானே எழுதுவேன். 
வாழ்வோ சாவோ ஓரிடத்தில் என்பதும் ஒன்றாக எனபதும் தான் மே 19ம் திகதியை உருவாக்கியது.
அல்லது வவுனியாவில் இவளவு பெரிய முகம் இருந்திருக்கும் என்று நான் எண்ணவில்லை.
 
புலிகள் மரம் வெட்ட தடைபோட்டபோது 
சில புலிகளுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் விறகு நிறைந்து இருக்கும்.
கட்டாய ஆள் சேர்ப்பு என்றால் ...?
அது துயரம் துன்பம் நிறைந்துதான் இருக்கும்.
லண்டனில் அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதை நீங்கள் கண்டதே இல்லையா ?
புலிகள் தமிழரே இல்லையா ?
உலகில் தோன்றிய மனிதர்கள் தானே புலிகளும். 
 
1991லேயே ஆனையிறவு சண்டையின்போது ஒரு வீட்டுக்கு இரு பெட்டிகள் வந்தது 
அந்த வீட்டு துயரில் 20 வருடம் கழிந்தும்  அயல் வீடுகள் பங்கு எடுத்ததில்லை?????
அவர்களுக்கு வாழ தெரியாமலா புலிகளுக்கு போனார்கள் ??
 
இரண்டாம் உலகயுத்தம் நடந்தபோது அமெரிக்காவில் நடந்த கட்டாய இராணுவ சேர்ப்புக்கு பயந்து பலர் 
கனடாவிற்கு ஓடினார்கள் கனடா எல்லையில் வைத்து அமெரிக்க இராணுவம் நாளும் நாளும் பலரை சுட்டது.
போரில் அமெரிக்கா வென்று பொருளாதரத்தில் நிலைக்க தொடங்கியதும் 
திரும்பி வந்தார்கள்.
இறந்த இராணுவ வீடுகளுக்கு என்ன வந்தது ??
கட்டாய ஆட்சேர்ப்பு இல்லாது அமேரிக்கா வென்றிருக்க முடியுமா ?
இப்போதும் சண்டை நடந்தால் எல்லோரும் கப்பல் ஏற வேண்டியதுதான்.
 
எல்லா துயரும் மக்களுக்கு நடந்துதான் போனது.
அங்கிருக்கும்போது புலிகளின் முதுகில் ஏறி மக்களை எய்த்த இவருக்கு இப்போது ஏன் முறுக்குது ??
இனஅழிப்பு போரில் தன்னால் முடியுமானவரை தற்காப்புக்கு போராடியும் முடியாமால் 
அழிந்து தோல்வி கண்ட நிலையில் ஈழ தமிழன் நிற்கிறான்.
இதில் விரும்பி போனவர் 
வில்லங்கத்தில் போனவர் 
என்று எல்லா வீட்டிற்கும் துயரம்தான் எஞ்சியது.
 
சில நாதரிகளுக்கு மட்டும் 
எப்போதும் சுகமாக சுயவிளம்பரத்துடன் வாழ கிடைக்கிறது.
மனிதானாக பிறந்தால் சில அடிப்படைகள் இருக்க வேண்டும் என்பதால் 
பல மனிதர்கள் இப்படி கூறு  கெட்டு வாழ்வதிலும் சாவது மேல் என்று வாழ்கிறார்கள்.
 
வன்னியில் நடந்ததை புத்தகத்தில்தான் இப்போதும் ஈழத்தமிழன் வாசித்துக்கொண்டு இருக்கிறான் 
என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
இதில் கூட எதோ பாசாங்கு இருக்கும் என்றுதான் நான் சந்தேகிக்கிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா என்ன ஒரு சமாளிப்பு. விருப்பத்திற்கு மாறாக என்பது கட்டாயம் என்று பொருள்படாதா?
ஒரு பெண்ணை உறவு கொள்ள வாங்கோ என்று கேட்டு அவர் வராத பட்சத்தில் பலவந்தப்படுத்தி உறவு கொள்வது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று சொல்வது போலுள்ளது. 

கள அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு களப் பின்பணிக்கு அறிவுறுத்தல்களோடு ஆட்களை அழைத்துச் செல்வது ஒன்றும் கட்டாயம் அல்ல. பொதுவாக தீவிர போர் பிராந்தியங்களில் பெரும் வல்லரசுகளே இந்த முறைகளைக் கையாண்டுள்ளன.

ஆனால்.. திட்டமிட்டு.. ஒரு அந்நிய நாட்டின் தேவைக்கு சொந்த மக்களின் பள்ளிக்கூடப் பிள்ளைகளை அவரும் பெற்றோரும் அறியா வண்ணம் கடத்திச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்து.. வீதிவீதியாக.. சந்தி சந்தியாக.. காவலுக்கு விட்டு தாங்கள் இந்தியப் படைகளின் ஊர்த்திப் பவனிப் பாதுகாப்போடு ஊருலா வருவதற்கு.. பிள்ளை பிடிப்பது என்பது வேறு... இதனை தான் வரதராஜப் பெருமாள்.. என்ற இந்த இனப்படுகொலையாளன் செய்தார். செய்து முடித்திட்டு.. இந்தியப் படைகளோடு ஓடினார். இப்போ இந்தியத் தூதரகத்தோடு திரும்பி வந்திருக்கிறார். மக்கள் தலைவன் என்றால்... மக்கள் முன் நின்றிருக்கலாமே...! அல்லது மக்களுக்காக மடிந்திருக்கலாமே...! :icon_idea:

உங்களுக்கு வித்தியாசங்களை உணர முடியாத பிரச்சனை உள்ளது. ஆடும் மாடும் பண்ணையில் நிற்பதால்.. இரண்டும் ஒன்று என்று காட்ட விரும்பும் உங்களைப் போன்ரோடு கருத்தாடுவது சுத்த வேஸ்டு. :icon_idea::)

கேடு கெட்ட தமிழன் இதற்கு இப்பவரை சிலர் உதரணமாக இருக்கின்றார்கள் ....
விருப்பம் இல்லாத பெண்ணை உறவுக்கு அழைப்பதுவும் , ஒரு இக்கட்டான போராட்டதிக்கு ஆட்களை சேர்ப்பதுவும் ஒரு விடயம் என்கிறார் தெனாலி ......
 
அடடா என்ன ஒரு ஒப்பனை .... தமிழ்கவி இப்ப எங்க இருகின்றா என்பது எல்லாருக்கும் தெரியும் ...அதென்ன இப்பதான் அவா இப்படி ஒரு புத்தகத்தை எழுதுகின்றா .....
 
எங்கள் போராட்டத்தினை பற்றிய உண்மையான விடயங்கள் கூட இருக்க கூடாது என்பதில் இந்தியா எவ்வளவு அக்கறையாக உள்ளது என்பதற்கு அவரின் புத்தகம் நல்ல உதாரணம் ....
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியே ஆனாலும் விரும்பாவிட்டால் தொடாதே.

அதே போல் சொந்த இனமே ஆனாலும் நாம் விடுதலையை அவர்களுக்கு தீத்த முடியாது.

காந்தி உப்பு சத்தியாகிரகத்து வா என்று கூட கூப்பிடவில்லை. அவர் போறார் எண்டு கேள்விப்பட்டு சனம் சாரை சாரையா தானாக போனது.

ஒன்றில் மக்களை விரும்பி போராட்ட வரும் படி செய்யும் வேலைகளை செய்திருக்கோணும் (2000

அல்லது ஆளில்லாமல் திண்டாடும் நிலை வரமுன் போராடத்தை நிறுத்தி வேறு வழிகளில் இலக்கை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

ரெண்டுமில்லை - கேட்டா முக்காலமும் உணர்ந்த மூர்த்தி என்று பீட்டர் மட்டும் விடுவார்கள்.

ஆக கோர்டன் வையிஸ் சொன்னதுமாதிரி இரண்டு தரப்பாலும் போர்க்குற்றம் புரியப்பட்டிருக்கு.

இங்கே இந்த புத்தகத்துக்கே இப்படி தள்ளினால் சிங்களவங்கள் எவ்வளவு துள்ளுவார்கள். தனிய சிங்களத்தின் மீதுதான் போர்குற்றம் விசாரிக்க சொல்லி வாதாட முடிதாது.

பாரபட்ச்மில்லாத விசாரணை அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை எண்டு வந்தால் தனிய ஒருதரப்பை மட்டும் விசாரிச்சுட்டுப் போய்விடுவார்கள் எண்டு கொஞ்சப்பேர் நினைக்கினம். ஆனால் அதாலை சேதாரம் எங்களுக்கும் தான்.

இறுதி யுத்தம் பற்றிய நிறைய போலிகளை சும்மா நியப்படுத்தவேண்டம் ....சிங்களவன் உங்களை எப்படி எல்லாம் கொன்று குவித்துள்ளான் அதனை கண்டு கொதிப்பதை விட்டுட்டு எங்களுக்கவே இறந்தவர்களை கொச்சைபடுத்தும் ஈனபிறவிகளா நீங்கள் .....
 
இதை தான் சிங்கள இனவாதிகளும் சொல்கிறார்கள். புலிகள் எவ்வளவு சிங்களவர்களை கொன்றார்கள் அதை பேசுவதை விடுத்து எமக்காக போராடிய எமது ராணுவ வீரர்களில் குற்றம் சாட்டாதீர்கள் என்று. உங்களைப் போன்றவர்களது கருத்துக்கும் சிங்கள இனவாதிகளின் கருத்துக்கும் என்ன வித்தியாசம்??
 
தலைவர் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் தெனாலி ......அதுதானே அந்த வீடியோ என்று சொல்வீர்கள் தானே ....  வாழ்க வளமுடன் .....
 
தலைவர் உயிரோட இருக்கிறார் என்ற ரீல் என்னும் ஓடுதா??
 
இறுதி யுத்தத்தில் இருந்து வந்த என் நெருங்கிய பல உறவினர்கள் உண்டு ... நிறைய விடயங்கள் தெரியும் ...சும்மா சிங்களம் வெளிப்படுத்தும் போலிகளை வைத்து கண்ட கண்ட விமர்சனங்களை எழுதுபவர்களை என்ன சொல்ல முடியும் ....

இறுதி யுத்தத்தில் நின்று வந்த வரமுடியாமல் செத்த எனது உறவுகளும் உண்டு. வெளிநாட்டிலிருந்து அங்கு எமது மக்களுக்கு எம்மை காப்பவர்கள் என்பவர்களாலேயே நடத்தப்பட்ட கொடுமைகளை நியாயப்படுத்துவது தான் சுத்த ஈனத்தனம். 

ஏன் இவர் 2002 சமாதானம் ஏற்பட்டபோது விலகவில்லை ?
இப்போ இவர்களுக்கு தேவை ஆமி கெடுபிடி இல்லதா வாழ்வு 
சுய விளம்பாரம் 
அதற்கு எந்த வாந்தியும் எடுத்துவிட தயார்!
 
இந்த கேடு கெட்டவர்களை விட போரில் ஒருநாள் பங்கு எடுக்காத நான் எத்தனயோ மேல்.
 
பார்ரா...களத்தில் நின்று வந்தவர்களை விட இப்ப புலம் பெயர் வீரர்கள் தான் மேல் போல கிடக்கு
 
2009இல் நடந்தது தமிழர்கள் இனி தலைநிமிர்ந்து வாழ்வதா இல்லையா என்பதற்கான போர்.
இதில் எந்த கூட்டு கொலையை செய்தும் தமிழனை அழிக்க உலக ஏகாபத்தியங்கள் எல்லாம் கூடிய வேளை.
 
இவளவுமான இழப்புகளோடு என்றாலும் வன்னித்தமிழன் மீண்டதற்கு நடந்தவைகள்தான் காரணம். 
கட்டாய ஆட்சேர்ப்பு இல்லாது போயிருந்தால் .....?
விடுவிக்க பட்ட போராளிகள் என்று யாரும் இருந்திருக்க மாட்டார்கள் 
 
கட்டாய ஆட்சேர்ப்பு இல்லாமல் இருந்தால் இரண்டு நாள் பயிற்சியோட முன்னரங்குக்கு போன வாழ வேண்டிய பல தமிழ் இளைஞர்கள் உயிர் பிழைத்திருப்பார்கள். கட்டாயமாக சேர்க்கப்பட்டாலும் புலி தான் என்று சிங்களம் சிதைத்த யுவதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கும். 
 
மக்கள் சிதறி ஓட  வேண்டும் என்பதால்தான் மக்களை இலக்கு வைத்து இராணுவம் தாக்கி வந்தது 
நடந்தது ஒரு இன அழிப்பு போர் என்பதை முழுதாக மறந்துவிட்டால் .........
இந்த சுயல கயவர்களின் புத்தகங்களை நானும் வாங்கி கால் நீட்டி கொண்டு இருந்து வாசிப்பேன். 
சிங்கள பௌத்த வெறியர்களின் இறுதி தாண்டவம் என்பதை 
மறக்கும் சக்தி எனக்கும் இருந்தால் இதைவிட மேலான பக்கங்களுடன் நானே எழுதுவேன். 
வாழ்வோ சாவோ ஓரிடத்தில் என்பதும் ஒன்றாக எனபதும் தான் மே 19ம் திகதியை உருவாக்கியது.
அல்லது வவுனியாவில் இவளவு பெரிய முகம் இருந்திருக்கும் என்று நான் எண்ணவில்லை.
 
சிங்களம் கொன்றது என்பதற்காக புலிகளும் அவர்களை வதைக்கலாம் என்று இல்லை. இறுதியில் இரண்டு தரப்பாலும் கொல்லப்பட்டது அப்பாவி தமிழ் பொதுமக்கள். லாபம் அடைந்தது சிங்கள ஆட்சியாளர்களும் புலம்பெயர் கொள்ளை கூட்டமும்.
 
புலிகள் மரம் வெட்ட தடைபோட்டபோது 
சில புலிகளுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் விறகு நிறைந்து இருக்கும்.
கட்டாய ஆள் சேர்ப்பு என்றால் ...?
அது துயரம் துன்பம் நிறைந்துதான் இருக்கும்.
லண்டனில் அரசியல் வாதிகளுக்கு நெருக்கமானவர்களுக்கு சலுகைகள் கிடைப்பதை நீங்கள் கண்டதே இல்லையா ?
புலிகள் தமிழரே இல்லையா ?
உலகில் தோன்றிய மனிதர்கள் தானே புலிகளும். 
 
1991லேயே ஆனையிறவு சண்டையின்போது ஒரு வீட்டுக்கு இரு பெட்டிகள் வந்தது 
அந்த வீட்டு துயரில் 20 வருடம் கழிந்தும்  அயல் வீடுகள் பங்கு எடுத்ததில்லை?????
அவர்களுக்கு வாழ தெரியாமலா புலிகளுக்கு போனார்கள் ??
 
இரண்டாம் உலகயுத்தம் நடந்தபோது அமெரிக்காவில் நடந்த கட்டாய இராணுவ சேர்ப்புக்கு பயந்து பலர் 
கனடாவிற்கு ஓடினார்கள் கனடா எல்லையில் வைத்து அமெரிக்க இராணுவம் நாளும் நாளும் பலரை சுட்டது.
போரில் அமெரிக்கா வென்று பொருளாதரத்தில் நிலைக்க தொடங்கியதும் 
திரும்பி வந்தார்கள்.
இறந்த இராணுவ வீடுகளுக்கு என்ன வந்தது ??
கட்டாய ஆட்சேர்ப்பு இல்லாது அமேரிக்கா வென்றிருக்க முடியுமா ?
இப்போதும் சண்டை நடந்தால் எல்லோரும் கப்பல் ஏற வேண்டியதுதான்.
 
இது ஒரு அப்பட்டமான பொய் செய்தி. கனடிய எல்லையில் தினமும் பலரை சுடும் அளவிற்கு அமெரிக்க அரசு இருக்கவில்லை. சட்டத்தின் பிரகாரம் ராணுவத்தில் சேராதவர்கள் விட்டு ஓடியவர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டார்கள். விட்டா முழு பூசணியும் சோற்றுக்குள்ள மறைஞ்சிடும் போல. 
 
கள அவசர அத்தியாவசிய தேவைகளுக்கு களப் பின்பணிக்கு அறிவுறுத்தல்களோடு ஆட்களை அழைத்துச் செல்வது ஒன்றும் கட்டாயம் அல்ல. பொதுவாக தீவிர போர் பிராந்தியங்களில் பெரும் வல்லரசுகளே இந்த முறைகளைக் கையாண்டுள்ளன.

நாடுகள் பிள்ளை பிடிச்சு இரண்டு நாள் பயிற்சியோட எதிரிக்கு முன்னால கொண்டு போய் நிப்பாட்டுவதில்லை. சட்டபூர்வமான கட்டாய ராணுவ சேவை என்றால் அதற்கு முறையான பயிற்சிகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டே அவர்கள் ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள படுவார்கள். எப்படி எல்லாம் சமாளிக்கிறாங்கப்பா.

ஆனால்.. திட்டமிட்டு.. ஒரு அந்நிய நாட்டின் தேவைக்கு சொந்த மக்களின் பள்ளிக்கூடப் பிள்ளைகளை அவரும் பெற்றோரும் அறியா வண்ணம் கடத்திச் சென்று ஆயுதப் பயிற்சி அளித்து.. வீதிவீதியாக.. சந்தி சந்தியாக.. காவலுக்கு விட்டு தாங்கள் இந்தியப் படைகளின் ஊர்த்திப் பவனிப் பாதுகாப்போடு ஊருலா வருவதற்கு.. பிள்ளை பிடிப்பது என்பது வேறு... இதனை தான் வரதராஜப் பெருமாள்.. என்ற இந்த இனப்படுகொலையாளன் செய்தார். செய்து முடித்திட்டு.. இந்தியப் படைகளோடு ஓடினார். இப்போ இந்தியத் தூதரகத்தோடு திரும்பி வந்திருக்கிறார். மக்கள் தலைவன் என்றால்... மக்கள் முன் நின்றிருக்கலாமே...! அல்லது மக்களுக்காக மடிந்திருக்கலாமே...! :icon_idea:

ஈழத்தில் மக்கள் முன் நின்ற தலைவர் யாருங்கோ?

உங்களுக்கு வித்தியாசங்களை உணர முடியாத பிரச்சனை உள்ளது. ஆடும் மாடும் பண்ணையில் நிற்பதால்.. இரண்டும் ஒன்று என்று காட்ட விரும்பும் உங்களைப் போன்ரோடு கருத்தாடுவது சுத்த வேஸ்டு. :icon_idea::)

மேலே கருத்தெழுதிய மூவரும் வன்னியில் நின்று கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளாகி இருந்தால் அப்ப தெரிந்திருக்கும் அதன் வலி. வெளிநாட்டில சுகமா காலாட்டிக்கொண்டு நாட்டிலிருப்பவர்களின் பிள்ளைகள் பிடிக்கப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் நியாயப்படுத்துவதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை. இவ்வளவு தூரம் விடுதலையை நேசிக்கும் இவர்கள் இறுதி யுத்தத்திற்கு ஆள் பற்றாக்குறை என்று தெரிந்தும் ஏன் நாடு திரும்பி போராடவில்லை? 

தெனாலி நான் கேட்டதிக்கு பதில் என்ன ... சும்மா ரீல் எனக்கு விடவேண்டாம் .. உறுதிபடுத்த முடியுமா.....
 
உங்கள் பதில்களை பார்த்தால் ஒன்று மட்டும் விளங்குது ....
 
ஒரு பழமொழி தானும் படாமல்  தள்ளியும் படுக்காதவர்கள்  என்று.... சுருங்க சொன்னால் இப்படியாக கருத்துகளை பதிவதால் ஒன்றும் பெரிய நடுநிலையாளர்கள் என்றில்லை ...
 
சிங்களமும் சொல்லுதோ ...ராணுவம் இறந்ததை பற்றி ......  எப்படி இப்படி ஒரு கல் நெஞ்சம் ...சிங்களம செய்த இனப்படுகொலையை சரி என்றமாதிரி கருத்து பகிரும் நீங்கள் ஒரு மானத்தமிழன் என்ற நிலையை இழந்தவர்கள் ....
 
.கள யதார்த்தம் புரிய வேண்டும் ....ஒரு இக்கட்டான நிலையில் எத்தனை நெருக்கடிகள் இதனை சொல்லி புரிய வைக்க முடியாது ... அந்த நிலையில் நடக்கும் சில தவறுகளை மட்டுமே கதைப்பவர்கள் அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள் .
 
உங்கள் விளக்கங்களை கொஞ்சம் எழுதுங்கள் பார்ப்பம் .....ஒன்றை விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கின்றது ....எல்லாருக்கும் தெரியும் இறுதி நேரத்தில் என்ன நடந்தது என்று ... புதுசாக விளக்கம் சொல்ல தேவையில்லை ...முதலில் எங்கள் போராட்டம் இந்தமாதிரி வல்லரசுகளால்  அழிக்கப்பட்டு  விட்டதே என்ற வலி தான் முன் நிற்க வேண்டும் .....மக்களுக்காக போராளிகள் உயிரை விடும் போது அவர்களுக்காக மக்களும் சில தியாகங்களை செய்ய வேண்டி வரும் ... இது கள நிலவரம் தான் தீர்மானிக்கும் ....

போர்க்குற்ற விசாரணை எண்டு வந்தால் தனிய ஒருதரப்பை மட்டும் விசாரிச்சுட்டுப் போய்விடுவார்கள் எண்டு கொஞ்சப்பேர் நினைக்கினம். ஆனால் அதாலை சேதாரம் எங்களுக்கும் தான்.

அது பற்றி உங்களுக்கென்ன கவலை. இரண்டு தரப்பையுமே விசாரிக்கட்டுமே. நேர்மையான பக்கசாரபற்ற விசாரணை நடைபெறுமனால் பாதிக்கப்படப்போவது சிங்களத்தரப்பே என்பது சகலருக்குமே தெரியும். திட்டமிட்ட இன அழிப்பு செய்த சிங்கள தரப்புபின் குற்றங்கள் நிரூபணமானால் அதன. மூலம் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும். அதற்காக தான் ஆயிரக்கணக்கான போராளிகள் தமது உயிரை கொடுத்தார்கள். சிங்கள தரப்பிற்கும் பாதிப்பு வந்துவிடுமோ எறன்ற கவலையில் தான் தமிழ்தரப்பை மிரட்டுகின்றீர்கள்.
இங்க பார்ரா .... ஆடு நனையுது என்று ஓநாய் அழுதிச்சாம் ....
போர்குற்ற விசாரணை வந்தால் 100% மாட்டுவது சிங்களம மட்டுமே ... புலிகள் செய்தது தற்காப்பு சண்டை அத்துடன் இறுதி சமரில் நடந்த சில விடயங்கள் புலிகள் தான் மக்களை கொடுமை படுத்தினார்கள் என்று நிருபிக்க முடியது ... கருணா தரப்பினரின் துரோக குமபளும் இந்த செயலில் ஈடுபட்டார்கள் ... இது பொதுவான மக்களுக்கும் தெரியும் ....
 
கொஞ்சபேர் அதனையும் புலிகள் மேல் பழிசுமத்திக்கொண்டு இருக்கினறார்கள் .  புலிகள் இராணுவத்துடன் மோதுவதா இல்லை மக்களை பாதுகாப்பதா ? மற்றும் இப்படியான துரோக கும்பலின் அநியாய வேலைகளை தடுப்பதா ? வரிப்புலி உடுப்புடன் நின்று சுட்டால் அது புலிகள் தானா ? குறுகிய இடத்தில் நடந்த போர் . 
என்னவும் நடக்கலாம் ....
 
இங்க கொஞ்சபேர் பழி சொல்லிக்கொண்டு திரியினம் .... புலிகள் போராடினது எங்கள் விடிவிக்காக ...சில அசம்பாவிதங்களை விமர்சிக்க வேண்டிய தருணம் இதுவல்ல ...
 
கேவலம் சிங்களவன் எத்தனை மிருக்கதனமான விடயங்களை செய்துள்ளான் ... அதனை கேட்க ஒன்றும் தைரியமில்லை ... 
  • கருத்துக்கள உறவுகள்

மனைவியே ஆனாலும் விரும்பாவிட்டால் தொடாதே.

அதே போல் சொந்த இனமே ஆனாலும் நாம் விடுதலையை அவர்களுக்கு தீத்த முடியாது.

காந்தி உப்பு சத்தியாகிரகத்து வா என்று கூட கூப்பிடவில்லை. அவர் போறார் எண்டு கேள்விப்பட்டு சனம் சாரை சாரையா தானாக போனது.

ஒன்றில் மக்களை விரும்பி போராட்ட வரும் படி செய்யும் வேலைகளை செய்திருக்கோணும் (2000

அல்லது ஆளில்லாமல் திண்டாடும் நிலை வரமுன் போராடத்தை நிறுத்தி வேறு வழிகளில் இலக்கை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

ரெண்டுமில்லை - கேட்டா முக்காலமும் உணர்ந்த மூர்த்தி என்று பீட்டர் மட்டும் விடுவார்கள்.

கோசான் இது உங்களுக்கே அடுக்குமா ....?
 
காட்டாய இராணுவ சேர்ப்பு அமெரிக்கா முதற்கொண்டு இன்னும் பல நாட்டில் இருக்கு.
ஒரு நாட்டு பிரைஜாக ஓவரு பிரஜைக்கும் கடமைகள் உண்டு.
இதிலே வேண்டின பெண்டாட்டி வேண்டாத பெண்டாட்டி தத்துவமெல்லாம் ஆகாது. 

விசாரணை முடிய இறந்த இடங்களில் இருந்து உயிர்பித்து அழைத்துவந்து 
புலிகளுக்கும் தண்டனை கொடுக்கட்டும் யார் வேண்டாம் என்றார்  ???
 
பனி பிடிக்கிறது என்று கேள்வி பட்டிருக்கிறேன் 
இந்த அளவிற்கு பாதிக்கும் என்று இப்போதான் தெரிகிறது. 
 
(கோசான் சிவப்பில் இருப்பது உங்களுக்கு எழுதவில்லை 
இதில் சேர்ந்து வருகிறது )

Edited by Maruthankerny

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கருத்தெழுதிய மூவரும் வன்னியில் நின்று கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளாகி இருந்தால் அப்ப தெரிந்திருக்கும் அதன் வலி. வெளிநாட்டில சுகமா காலாட்டிக்கொண்டு நாட்டிலிருப்பவர்களின் பிள்ளைகள் பிடிக்கப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் நியாயப்படுத்துவதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை. இவ்வளவு தூரம் விடுதலையை நேசிக்கும் இவர்கள் இறுதி யுத்தத்திற்கு ஆள் பற்றாக்குறை என்று தெரிந்தும் ஏன் நாடு திரும்பி போராடவில்லை? 

வன்னியில் நிகழ்ந்தது கட்டாய ஆட்சேர்ப்பு என்று சொல்லவே முடியாது. வீட்டுக்கு ஒருவர் தேசக் கடமைக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள். எத்தனை வீட்டில இருந்து அதைச் செய்யப் போனவை..??!

புலம்பெயர் நாடுகளில்.. குடும்பத்துக்கு இத்தனை ஆயிரம் தேசம் மீட்க என்று பங்களிப்பு கேட்ட போது எத்தனை குடும்பங்கள் தானா முன்வந்து அதைக் கொடுத்தவை..?!

கட்டாய ஆட்சேர்ப்பு என்பதை ஈழத்தில் அறிமுகப்படுத்தியது.. மிஸ்டர் வரதராஜப் பெருமாள் கோஸ்டியினர். ரோட்டில போற வாற பிள்ளைகளைப் பிடிச்சுக் கொண்டு போய் ஒரு வாரப் பயிற்சி கூட இன்றி பிடிச்சு புலியோட சண்டை பிடின்னு.. ரோட்டில.. சந்தில நிறுத்தியவர்கள்.. தான்.. கட்டாய ஆட்சேர்ப்பிற்கு உதாரணம்.

உலகப் போர்களின் போது.. போதிய பயிற்சிகள் இன்றி படைவீரர்கள்.. முன்னணி நிலைகளுக்கு அனுப்பட்டதை தாங்கள் படிக்கவில்லைப் போலும். அல்லது மறந்திருப்பீர்கள். ஆனால்.. ஒரு நாடும்.. தன் சொந்த மக்களைக் கொண்டு சொந்த மக்களை அழிக்க கட்டாய படைச் சேர்ப்புச் செய்யவில்லை. புலிகளும் செய்யவில்லை. அதைச் செய்த பெருமை.. வரதராஜப் பெருமாள் கும்பலுக்கே உண்டு. :lol::icon_idea:

சிங்கப்பூரின் வரலாறு தெரிந்திருக்கும் ... இங்கே ஆண்கள் கட்டாயம் ராணுவ சேவை 2 வருடத்திக்கு செய்ய வேண்டும் . அத்துடன் எப்பாவது தேவைப்பட்டால் போருக்கு போகவேண்டும் ....இல்லாவிட்டால் அது தேசக்குற்றம் .....இன்னும் எத்தனை நாடுகள் இந்த கொள்கையை நடைமுறையில் வைத்துள்ளார்கள் ...
வெளிநாடுகளில் இருக்கும் உங்களுக்கு இது தெரிந்திருக்கும் .
 
புலிகள் மட்டும் ஆட்களை சேர்க்க கூடாது ... இதென்ன நியாயம் .....
ஏன் அவர்கள் தங்கள் குடும்பத்திக்கு சொத்து சேர்த்தார்களா ?   எங்கள் எல்லாருக்கும் சேர்த்து தானே போரடினர்ர்கள் ....உதவி செய்யாமல் விமர்சனம் வேற ......
 
70-80 களில் சிங்களவன் வீடு புகுந்து வெட்டினான் ... அந்த நிலையில் இருந்து உயிர் தப்பியவர்கள் எங்கள் குடும்பம் .... இப்படியாக நேரடி கொடுமைகளை அனுபவித்தவன் ஒருபோதும் விமர்சிக்கமட்டன் ....
 
ஒன்றும் இல்லாதவர்கள் தான் சும்மா ஊளையிடுவது ......

நீங்கள் சொல்லவாறது எங்களுக்கு புரியுது, அனால் சிங்கப்பூர் அரசாங்கமும் அல்லது இராணுவமும் புலிகளையும் எந்த அடிப்படையில் ஒப்பீடு செய்கிறீர்கள்?

எல்லோருக்கும் சேர்த்துத்தான் போராடினார்கள் அனால் எல்லோரும் போராடவில்லை, போராடாதவர்கள் பாதிக்கப்பட்டதாக புகார் கொடுத்தால் அது விசாரிகப்ப்படும்தானே? 

70-80 களில் சிங்களவன் வீடு பூந்து வெட்டினது வெட்டிய பின்னர் உலகநாடுகள் அனுதாபத்தோடு பார்த்தது போராட்டத்துக்கும் ஆதரவு இருந்தது. பின்னர் நடந்ததெல்லாம் நான் சொல்லவேண்டும் என்பதில்லை.

இறுதியில் இப்பிடியெல்லாம் குற்றச்சாட்டுகள் வருது. 

சுட்டு விரலால் மற்றவர்களை நாங்கள் சுட்டும்போது எங்கள் மீது நீளும் விரல்களுக்கு பதில் சொல்வது எங்கள் கடமை இல்லையா? 

எல்லாத்துக்கும் மேல் பாதிகப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். சிங்களம் செய்த கொடுமைக்கு கூலி கொடுக்கும் காலம் வரும்போது எங்கள் தரப்பின் மீது சுமத்தப்படும் குற்றங்களும் நிவர்த்தி செய்யப்படவேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.