Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்தப் பத்து நிமிடங்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"இன்று செவ்வாய்க்கிழமை. வேலைவிட்டு நேரத்திற்கே கிளம்பி வந்துவிட்டது வசதியாகி விட்டது. இன்றும் அவள் வருவாள். கடந்த இரண்டரை வருடங்களாகக் கண்களாலேயே மட்டும் பேசிக்கொள்ளும் எமது உணர்வுகள் மாற்றங்கள் ஏதுமின்றி இன்றைக்கும் தொடரும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டே காரிற்குள் காத்திருந்தேன். பிண்னனியில் இலளையாராஜாவின் பாடல்கள்  மெதுவாக மனதைத் தாலாட்டிக்கொண்டிருக்க அவள் வரும் வழி பார்த்துக் காத்திருந்தேன். நேரம் நெருங்க நெருங்க மனது துடிப்பது எனக்கு வெளியே கேட்டது.

 

என்னைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்த காரெல்லாவற்றையும் மனம் அங்கலாய்ப்புடன் பர்த்துக்கொண்டது. அவளில்லை. சரி, 3 மணியாகிறது, இனிக் கிளம்பலாம் என்று நான் நினைத்திருக்க அவளது சாம்பல் நிறக் கார் வீதியின் ஆரம்பத்தில் திரும்புவதை எனது பின்கண்ணாடியில் பார்த்தேன். ஆகா, வந்துவிட்டாள், மனம் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியது. அவள் மெதுவாக என்னைத் தாண்டி ஓட்டிச் செல்வதை ஆசையுடன் கடைக்கண்ணால் பார்த்தேன். நிச்சயம் நான் அங்கே நின்றிருப்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவள் அதை வெளிக்காட்டப் போவதில்லை. வழமை போலவே எதுவும் தெரியாதவள்போல அவள் என்னைக் கடந்து சென்றாள்

 

ஒரு 20 அல்லது 30 மீற்றர்கள் சென்றிருப்பாள். அவளது கார் நின்றது. அப்படியே U Turn போட்டு வீதியின் மறுபுறத்தில் அவளது கார் என்னை நோக்கியபடி நிற்க அவள் நிறுத்தினாள். சிறுபிள்ளைபோல வெளியே இறங்கி தனது கார் யாரினதும் வீட்டின் Drive way மறித்து நிற்கிறதா என்று அவசரத்துடன் பார்த்தாள். முன்னும் பின்னுமாக அவள் அப்படி பார்க்கும்போது ஓரக்கண்ணால் என் பக்கம் பார்த்ததை நான் பார்த்தேன். மனதினுள் மின்சாரம் ஒன்று ஒரே பாய்ச்சலில் தலையிலிருந்து கால்வரை ஓடி மறைந்தது. இதுதான், இந்தப் பொழுதுதான் நான் நாள்தோறும் காத்திருப்பது. இதுபோதும் இன்றைக்கு. அவள் பேசக் கூடத் தேவையில்லை, பார்வைகளே போதும் என்றது மனது. இதையேதான் கடந்த இரண்டரை வருடங்களாக பாலாய்ப்போன மனம் சொல்லிவருகிறது

 

இன்னும் ஒரு 10 நிமிடத்தில் அவள் வந்து காரை எடுத்துக்கொண்டு என்னைத் தாண்டிப் போவாள். அப்போது அவளை இன்னும் ஒருமுறை பார்த்துவிடலாம் என்கிற ஆசையில் காரிற்குள் அவள் வரும்வரை காத்திருந்தேன். அவள் வந்தாள். காரை மெதுவாக ஓட்டிக்கொண்டே என்னைத் தாண்டி அவள் சென்றாள். அவள் அணிந்திருந்த குளிர் கண்ணாடியினூடாக அவள் என்னைப் பார்க்கிறாளா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னைப் பார்க்கவேண்டும் என்றே மனம் விரும்பியது. எந்தச் சைகையும் இல்லாமல் அவள் பின்கண்ணாடியூடு மறைந்தும் போனாள்.

 

சிறிதுநேரம் மனதில் இருந்த ஓட்டமெல்லாம் அடங்கிப்போக இனம்புரியாத சோர்வு ஏற்பட்டது. இளையராஜா காதல் டூயட்டிலிருந்து மாறி இப்போது தனிமையில் சோகக் கீதம் பாடிக்கொண்டிருந்தார். வந்தவேலை முடிந்தது என்று எண்ணி காரை ஸ்டாட் செய்துகொண்டே வீடு கிளம்பினேன்

 

நாளைக்கும் இதே இடத்தில் அவள் வருகைக்காகக் காத்திருப்பேன் என்கிற எண்ணமே புதுமையாக இருக்க (இது கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தாலும் கூட) நாளை மாலையை எண்ணிக்கொண்டே வீடு சென்றேன்.

 

யாவும் கற்பனை ! (இதைச் சொல்லாட்டி இதை கதை என்று நம்பமாட்டாங்கள் )

 

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

----

யாவும் கற்பனை ! (இதைச் சொல்லாட்டி இதை கதை என்று நம்பமாட்டாங்கள் )

 

இதுதான்..,.. கதை என்று, இப்போது நம்பி விட்டோம்.... ரகு. :D

உங்கள் கதை என்று தெரியும்! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நகரேலாது. நடக்கிறதைப் பார்க்கவேண்டியதுதான். இது ஒரு கதை கண்டியளோ ?? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

இரண்டரை வருடம் ஓவர் டைம் செய்கின்றீர்கள் போல  :lol:


என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் ஓவர் டைமாக  பேப்பர் விநியோகிக்க வெளிக்கிட்டு இப்ப நடு ரோட்டில் நிற்கின்றார் :o  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை வருடம் ஓவர் டைம் செய்கின்றீர்கள் போல  :lol:

என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் ஓவர் டைமாக  பேப்பர் விநியோகிக்க வெளிக்கிட்டு இப்ப நடு ரோட்டில் நிற்கின்றார் :o  .

 

 

அர்ஜுன் அண்ணா, இது கதை. எனக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

 

 

அவளது தமையன் பற்றி நான் இதுவரை எதுவும் எழுதவில்லையே  கு.சா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையும் பத்து நிமிடங்களும் என்னய்யா நடக்குது இங்க?

 

இப்பிடி சஸ்பென்சா விட்டுட்டுப்போய் இந்த ரகுநாதன் என்ன செய்கிறார்...எனக்கு முழுவிபரமும் தெரியோணும் இல்லை என்றால் தலை வெடிச்சுப்போடும். :icon_mrgreen: :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களாக அவளைக் காணச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. Out of sight , out of mind என்று சொல்வார்களே, அப்படி அவளது நினைவுகள் சிறிது சிறிதாக இல்லாமல் ஒரு புள்ளியாகி மறைந்துபோகலாம் என்று நான் பிடிவாதமாக நினைத்திருந்தேன். இந்த சில வார காலமும் அதற்கு உதவி புரியும் என்று நம்பியிருந்தேன் ( இப்படிப் பல வார விடுமுறைகள் இந்த இரண்டரை வருடத்திலும் வந்து போயாச்சு....ஆனால் எதுவுமே மறைந்ததாக நினவில்லை). ஆனால் அவ்வப்போது அவளது நினைவு இடைக்கிடையே மின்னி மறைந்துகொண்டிருந்ததையும் நான் மறுக்கமுடியாது. காரில் இளையாராஜாவை ஒரு போதுமே நான் நிப்பாட்டியது கிடையாது. காரை start செய்தவுடன் அவர் பாடத் தொடங்கிவிடுவார், சொல்வழி கேளாத மனது அவர் பின்னாலேயே பாடிக்கொண்டு போகும். அப்போதெல்லாம் அவளின் நினைவுகள் தோன்றி மறையும். இந்த இளையராஜாவைக் கண்டுபிடித்தவனைக் கூட்டிவந்து நிறையக் கேள்வி கேட்க வேண்டுமென்றெல்லாம் ஆசையுண்டு............. :D

 

நேற்று மாலைநேரம், குளிர் காற்று சில்லென்று வீசிக்கொண்டிருக்க எமது தேசத்தை குளிர்காலம் மெதுவாக அரவணைக்கத் தொடங்கியிருந்தது. வெளிச்சமும் இருட்டும் சங்கமிக்கும் ஒரு பொழுதில் எதேச்சையாக அவளைப் பார்த்தேன் (இது திட்டமிட்ட சந்திப்பில்லையென்றால் நம்பவா போகிறீர்கள் ?) . அவளும் என்னைப் பார்த்தாள். சிரித்தாள்...எனக்காகத்தான் அந்தச் சிரிப்பு என்று மனம் பிடிவாதமாக முடிவெடுத்தாலும், அவளுடனேயே வந்த அவளது உறவினரைப் பார்த்து அவள் சிரித்திருக்கலாம் என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அவள் சிரித்தவுடன் சொல்வழி கேளாத என்மனதும் சிரித்தது. அதை அவள் சட்டை செய்தாளா இல்லையா என்பதுகூட அந்த இருட்டில் தெரியவில்லை. Out of sight , out of mind என்பவற்றையெல்லாம் தூக்கித் தூரக் கடாசிவிட்டு மனமெல்லாம் ஆக்கிரமிக்க அவளது நினைவுகள் மீண்டும் வந்து மனதில் சப்பாணி போட்டு உட்கார்ந்துகொண்டது. அடக் கடவுளே !

 

காரை Start  செய்ததும் மீண்டும் இளையராஜா பாடத் தொடங்கினார். Situation song தேடித் தேடி விரல்களை தட்டிக் கொண்டு போனேன்.........அப்போது..... ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்றவேண்டுமோ.............அதுசரி, இந்தப் பாட்டுக்கு முன்பெல்லாம் இத்தனை அர்த்தம் புரிந்ததாக நினைவில்லையே என்று வியந்துகொண்டு மிதிக்கத் தொடங்கினேன்........நாளை மறுபடியும் அவளைக் காணப் போகும் 10 நிமிடக் காத்திருப்புக்காக !

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

கதையிலை வாற அவளின்ரை தமையனுக்கு காரிலை மினைக்கடுற விசயம் தெரியுமோ?

தமையனை விடுங்கோ

வீட்டுல ஆத்துக்காரிக்கு தெரியுமோ இல்லியோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமையனை விடுங்கோ

வீட்டுல ஆத்துக்காரிக்கு தெரியுமோ இல்லியோ?

 

 

அதுதானே பார்த்தன், எங்கயடா ஒருத்தரும் இதைக் இதுவரை கேட்கவில்லை என்று................கதையென்று சொன்னாப் பிறகு இப்படியெல்லாம் கேட்டு சங்கடப் படுத்தக் கூடாது ஈழப்பிரியன்........அப்புறம் அழுதுடுவேன் ! :icon_mrgreen:

Edited by ragunathan

அடுத்த காதலா ? கலக்குறீங்க ரகு . தொடருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த காதலா ? கலக்குறீங்க ரகு . தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விறுவிறுப்பான கதை சொல்லியாகிவிட்டீர்கள். தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  அனுபவப்பதிவுக்கு ரகு..... :icon_idea:

 

இதெல்லாம் சாதாரணம் ஐயா

முன்னோர்கள் எவ்வளவு அனுபவசாலிகள் :lol:

நாற்பது வயதில் இதை எவராலும் தடுக்கமுடியாது :icon_mrgreen:

இதுவும் கடந்து போகும் ராசா... :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

........நாளை மறுபடியும் அவளைக் காணப் போகும் 10 நிமிடக் காத்திருப்புக்காக !

 

அவனவன் கோடி கோடியாக கொட்டுறான்.

 

மனதுக்கு சுகம் என்றால் ஒரு பத்து நிமிடத்தை வீணாக்குவது ஒன்றும் பெரிதல்ல.

 

அண்டமா முனிவரே தடக்குப்படும் போது நீங்கள் நாங்கள் எந்த மூலைக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்டமா முனிவரே தடக்குப்படும் போது நீங்கள் நாங்கள் எந்த மூலைக்கு.

 

அது தானே....? :lol:

நாம் சொல்லி சமாளிப்பதற்காகத்தானே

நம் முன்னோர் இதையெல்லாம் எழுதிச்சென்றிருக்கிறார்கள்  :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக அனுபவித்து எழுதுகிறீர்கள் . அஹா அந்த பத்து நிமிடங்களுகாக பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள்.

இக்கதை கற்பனையா அல்லது இப்பெண் தான் முடிவில் உங்கள் மனைவியா ?

கற்பனை கதை என்று கூறிய பின்னரும் நான் இப்படி கேட்பது சரியில்லை .

ஆனால் இளமை நெஞ்சில் உருவாகும் அந்த ஏக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது .

ரகு அண்ணா, உங்கள் மனைவி யாழ் இணையம் பார்ப்பதில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு எழுத்தாளர் காதல் கதை எழுதினால் அதை ஏன் அவரின் உண்மைக்கதையாக கொள்ள வேண்டும் ? கற்பனையில் வல்லவர்கள் எழுத்தாளர்கள். கற்பனையில் உதிப்பவற்றை

எழுத்து வடிவில் தருவார்கள் . என்றாலும் ரகு நன்றாக அனுபவித்து எழுதி இருப்பதனால் அவரது கதை இங்கு வெற்றி அடைந்துள்ளது .

 

(ரகு , நல்லா தான் காயிந்திருகிறீர்கள் அந்த பத்து நிமிடங்களும் !!! :rolleyes: :rolleyes: )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே"

 

அருமையான வரிகள்! இந்தப் பாடல்களை சிறுவயதில் கேட்டபோது அர்த்தம் புரிந்ததில்லை. இசையே பாடலை ரசிக்க வைத்திருந்தது. 

 

இன்றோ நிலமை வேறு. அர்த்தம் முழுவதுமாகப் புரிகிறது. பொழுதுகளுக்கேற்ப அதன் தக்கமும் மாறுகிறது. காதல் செய்யும் விந்தைதான் என்னே??

 

மேற்சொன்ன பாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?? எதுவுமில்லை. என்னை அலைக்கழிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். 

 

சரி, "கதைக்கு" வருகிறேன்.

 

வருடக் கணக்கில் பரீட்சைக்கு விளித்திருந்து படித்துவிட்டு, பரீட்சையன்று, பரீட்சை நிலையம் வரை போய்விட்டு எழுதாமேலேயே வீடு வருவதென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் எனது நிலையும். 

 

ஆளை விடுங்கள். இதுக்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.............

கதையென்றால் பேசாமல் கேட்கவேண்டும், கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது ?

 

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்வார்கள் !!! :D


ஒரு எழுத்தாளர் காதல் கதை எழுதினால் அதை ஏன் அவரின் உண்மைக்கதையாக கொள்ள வேண்டும் ? கற்பனையில் வல்லவர்கள் எழுத்தாளர்கள். கற்பனையில் உதிப்பவற்றை

எழுத்து வடிவில் தருவார்கள் . என்றாலும் ரகு நன்றாக அனுபவித்து எழுதி இருப்பதனால் அவரது கதை இங்கு வெற்றி அடைந்துள்ளது .

 

(ரகு , நல்லா தான் காயிந்திருகிறீர்கள் அந்த பத்து நிமிடங்களும் !!! :rolleyes: :rolleyes: )

 

 

பூத்தல், காய்த்தல், இறுதியில் காய்ந்தும் போதல்...இவையெல்லாம் இயற்கைதானே?? நாம் என்ன விதிவிலக்கா ???

  • கருத்துக்கள உறவுகள்

ரகுவிற்காக

 

சகோ உங்களுக்குக் காதலே வேலையாய்ப் போச்சு  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தனுயிர்க் காதலியே

இன்னிசை தேவதையே"

 

அருமையான வரிகள்! இந்தப் பாடல்களை சிறுவயதில் கேட்டபோது அர்த்தம் புரிந்ததில்லை. இசையே பாடலை ரசிக்க வைத்திருந்தது. 

 

இன்றோ நிலமை வேறு. அர்த்தம் முழுவதுமாகப் புரிகிறது. பொழுதுகளுக்கேற்ப அதன் தக்கமும் மாறுகிறது. காதல் செய்யும் விந்தைதான் என்னே??

 

மேற்சொன்ன பாட்டுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா?? எதுவுமில்லை. என்னை அலைக்கழிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான். 

 

சரி, "கதைக்கு" வருகிறேன்.

 

வருடக் கணக்கில் பரீட்சைக்கு விளித்திருந்து படித்துவிட்டு, பரீட்சையன்று, பரீட்சை நிலையம் வரை போய்விட்டு எழுதாமேலேயே வீடு வருவதென்றால் எப்படியிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அப்படித்தான் எனது நிலையும். 

 

ஆளை விடுங்கள். இதுக்குமேல் என்ன எழுதுவதென்றே தெரியவில்லை.............

கதையென்றால் பேசாமல் கேட்கவேண்டும், கேட்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் என்னதான் செய்வது ?

 

வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்வார்கள் !!! :D

 

 

பூத்தல், காய்த்தல், இறுதியில் காய்ந்தும் போதல்...இவையெல்லாம் இயற்கைதானே?? நாம் என்ன விதிவிலக்கா ???

 

கதை என்று நீங்களே கூறிவிட்டு பிறகு காய்த்தல் பூத்தல் என்றெல்லாம் என்ன கதைவிடுகிரீர்கள். மரியாதையாகக் கதையை எழுதி முடியுங்கள் :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.