Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைச்சுவையாக மாறிய 100 நாள் திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்டம் பாரிய நகைச்­சு­வை­யுடன் நிறை­வ­டைந்­துள்­ளது. எமது ஆட்­சிக்­கா­லத்தில் முன்­னெ­டுக்­கப்­பட்டஅபி­வி­ருத்தி திட்­டங்­களை திறந்து வைப்ப­தையே 100 நாள் திட்­டத்தில் அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்­ளது என்று ஸ்ரீ­லங்கா சுதந்­திரக்கட்­சியின் பொதுச் செய­லாளர் அனுர பிரி­ய­தர்­ஷன யாப்பா தெரி­வித்தார்.

Anura-Priyadarshana-Yapa_1.jpg

 

ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

 

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் பத­வி­யேற்று 100 நாட்கள் நிறை­வ­டைந்­து­விட்­டன. எம்மை பொறுத்­த­வரை 100 நாள் வேலைத்­திட்டம் நகைச்­சு­வை­யா­கவே முடி­வ­டைந்­துள்­ளது. 100 நாட்­களில் பல திறப்பு விழாக்­களை செய்­துள்­ளனர்.

ஆனால் எமது அர­சாங்க காலத்தில் ஆரம்­பித்து செய்­யப்­பட்ட வேலைத்­திட்­டங்­களை இந்த அர­சாங்கம் 100 நாட்­களில் திறந்து வைத்­துள்­ளது. குறிப்­பாக பின்­ன­வலை திறந்த மிரு­கக்­காட்­சி­சாலை எமது அர­சாங்­கத்தின் காலத்தில் உரு­வாக்­கப்­பட்­டது. அதனை 100 நாள் அர­சாங்கம் திறந்து வைத்­துள்­ளது. நல்லாட்சி என்று கூறுகின்றனர். ஆனால் நல்லாட்சியில் இவ்வாறு செய்வது நல்ல விடயமாக தெரியவில்லை என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/04/23/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-100-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கென்ன விசரே?

இவற்ற கட்சித் தலைவர் தானே ஜனாதிபதி...

உவருக்கென்ன விசரே?

இவற்ற கட்சித் தலைவர் தானே ஜனாதிபதி...

 

அந்த கொடுமையை ஏங்க கேட்கிறிங்க, அவருடைய கட்சி தலைவர் தான் சனாதிபதி, அவருடைய கட்சியுருபிரர்கள் அமைச்சர்கள்.

 

அதே கட்சியின் பாரளுமன்ற குழுத்தலைவர் எதிர்த்கட்சி தலைவர்.

 

அட சபாநாயகர் கூட அவங்க கட்சிதான்னா பாத்துக்குங்களேன்.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

யாப்பா கூப்பா போடுகிறாரா?? :D

  • கருத்துக்கள உறவுகள்

யாப்பா கூப்பா போடுகிறாரா?? :D

 

நுணா.... நல்ல மூடில், இருக்குமாப் போல் தெரிகின்றது. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்
அப்பவே சொன்னேன் எல்லோருக்கும் தலையில் மிளகாய் அரைக்கும் அரசாகத்தான் இது அமையும் என்று.
விடுவிச்ச 400 மீட்டர் நிலத்தை வைத்து இராணுவத்துடன் என்ன காதலா செய்வது ?
 
மகிந்த வந்திருந்தால் .....?
மோடி அரசு ஒரு தீர்க்க நிலைக்கு தள்ளி இருக்கும் 
சீனாவா ?
நானா ?
சீனாவை கைவிட கூடிய நிலையில் மகிந்த அரசு இருக்கவில்லை.
 
இப்போ மோடி வந்து சீனாவின் 700 மில்லியன் திட்டத்தை கைவிட தான் 740 மில்லியன் 
தருவதாக கூறிவிட்டு போனார். பிச்சகார இந்தியா 40 மில்லியனில் பெட் கட்டி இலங்கை பாராளுமன்றில் 
பேசிவிட்டு போனார்.
அதோடு விசாவை திறந்துவிட்டு .....
1 பில்லியன் எக்ஸ்போர்ட் டை மூன்று ஆண்டில் ஜவுளியில் மட்டும் இந்தியா எதிர் பார்க்கிறது.
அவர்கள் எதிர்மறையாக வியாபாரம் பேசிவிட்டு போகிறார்கள்.
விழுந்த இலங்கையில் சுரண்டும் எண்ணம்தான் இந்தியாவிற்கு.
இது சிங்கள எச்கோன்மிஸ்ட் துக்களுக்கும் நன்கு புரியும் 
அதனால்தான் மைத்திரி சீனாவிற்கு ஓடினார்.
 
கூட்டி கழித்து கணக்கு பார்த்தால் ....
காலம் பிளஸ் மைனஸ்தான் தமிழர்கள் பெற்றது. 
 
இப்போ வரதராஜ பெருமாளை களம் இறக்கிறது இந்தியா 
கூட்டமைப்பு பிரிக்கப்படும் என்பதுதான் இதன் இன்னொரு சமிஞ்சை.
 
உலகை பொருளாதாரம்தான் ஆழ்கிறது.
இந்த சின்ன விடயத்தை புரியும் ஆட்களாக சம்மந்தரும் மாவையும் இல்லை.
சிங்களவன் ஒரு துண்டை கூட பகிர மாட்டான்.
எமக்கு இருக்கும் ஒரே பலம் பொருளாதாரம்தான்  பிளஸ் ஒற்றுமை.
இரண்டிலுமே வந்கோரத்து நிலைதான். 
இனி வரும் காலத்தில் அரசியல் என்பது வெறும் 30 வீதமக்த்தான் இருக்கும்.
உக்ரைன் 
ஈரான் அணு விடயம் 
சிரியா போர் 
புதிய பூதம் ஐ ஸ் ஸ் 
வட கொரியா 
எல்லா விடயமும் இப்படியே வாய்ப்பன் மா மாதிரி இழுபட்டு கொண்டு இருக்க என்ன காரணம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.