Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

<----"பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"---->

Featured Replies

யாழ்கள வாழ் மகா சனங்களே,

 

              நாம இங்க கதை எழுதுறம், கட்டுரை எழுதுறம், கவிதை எழுதுறம் பத்ததுக்கு நல்ல நல்ல கருத்து எழுதுறம், ஆனா பாருங்க நாம பக்கம் பக்கமா என்னத்த எழுதுனாலும் ஒருத்தரும் நமக்கு பச்சை குத்துரதில்ல... இந்த கவலை நம்ம எல்லோர் மனசிலும் இருக்கும்... இன்னும் சிலருக்கு ஒரு பெரிய பிரச்சனையா இருக்கும், நான் என்ன கவுந்தடிச்சு எழுதினாலும் ஒருத்தரும் எட்டி பாக்குறான் இல்லையேன்னு.... சிலருக்கு விழுற பச்சைய பாக்க நமக்கு கண்ணுல அருவியா கொட்டும்...  

 

 

அப்படி ஏங்குற நம்ம சாதி சனத்துக்கா கொண்டு வந்தது தான் "பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"... :icon_idea:

 

பச்சைய பிச்சை எடுக்குரன்ற இந்த திட்டம் என்னானா,

 

இந்த திட்டத்துல ஒரு இருபது ஆக்கள  சேத்துக்குவோம்

 

அப்பிடி சேக்குற ஆளுங்ககிட்ட இருந்து யாருக்கெல்லாம் அவசரமா பச்ச வேணுமோ அவரு என்ன நாசமறுப்ப எழுதினாலும் கண்ண மூடிக்கிட்டு மத்த ஆளுங்க எல்லோரும் பச்சைய குத்தனும் :D

 

அடுத்த முறை சங்கத்து ஆளு இன்னொருத்தருக்கு  வளைச்சு வளைச்சு குத்துவோம்

 

இப்போ ரெண்டு ஆளுங்களுக்கு ஒரே நேரத்தில பச்சை புள்ளி தேவை படுத்து எண்டா ரெண்டு பேருக்கும் நடுவில ஏலம் விடுவோம் ஏலத்தில அதிக புள்ளிய விட்டு கொடுக்கிறவருக்கு பச்சைய குத்துவோம்

 

இந்த திட்டத்தில சேருரவங்க ஒரு நாளைக்கு ஒரு புள்ளி மட்டும் பச்ச குத்தினா போதும், மத்த ரெண்டு உங்க ரசனைக்கு எத்த மாதிரி எப்போதும் போல மத்த திரிக்கு குத்தலாம்.

 

 

 

இதால என்ன நன்மை என்டு  கேக்குரியலா...?

 

 

இப்பிடி சுழற்ச்சி முறையில திட்டத்துல சேர்ந்த ஒவ்வொருத்தருக்கும் வரிசையா பச்சை புள்ளிகள் கிடைக்கும்.

 

இருபது நாளைக்கு ஒரு தடவ உங்களோட பச்ச புள்ளிக  உச்சத்த தொடும்

 

புதுசா இணையுற உறுப்பினர் ஏற்கனவே இருக்குற பழைய உறுப்பினருக்கு வரிசைப்பிரகாரம் ஒரு பச்சை புள்ளிய குத்தனும்,

 

எதாச்சும் உறுப்பினர் வரமா போன தண்டனையா சங்கத்துக்கு இரண்டு  பச்சை குத்தனும்

நம்ம திட்டத்த பத்தி வெளிய மத்த திரியில தப்பா பேசுற ஆக்களுக்கு நாம யாரும் பச்ச குத்த கூடாது, அதால அவங்களுக்கு நம்ம மேல பயம் வரும் :D

 

நம்ம கையில ஒரு பச்ச எப்போவும் இருப்பு இருக்கதால இந்த திட்டதில சேரமாட்டேன்னு அடம் புடிக்குற ஆக்களோட பச்சை புள்ளி விகதம் நாளைடைவில குறைஞ்சிடும். :lol:

 

 

இதுக்கு மேல இதர பலனா

 

 

நம்ம சங்கத்து ஆளு மேல எதாச்சும் ஒழுங்கு நடவடிக்க எடுத்த அவருக்கு எதிர எதிர்ப்பா பதிவு செய்யுற விதமா எந்த திரிக்கும் பச்ச போடாம புறக்கணிப்போம்

 

நியானி மாதிரி ஒருத்தருக்கும் பச்சையே போடாத ஆக்களோட பச்ச புள்ளி போடுற உரிமைய தட பண்ணனும்னு போராட்டம் நடத்துவோம் :icon_mrgreen:

 

ஆண்டுக்கொரு முறை நடக்குற "பச்ச பிச்ச பெருவிழா"ல நல்ல செயல்பட்ட உறுப்பினருக்கு வாழ்த்து சான்றிதழும் 20 பச்சையும் அன்பளிப்பா வழங்குவோம் :lol:

 

திட்டத்தில சேராம நம்மகிட்ட பச்சைய  கேக்குற ஆளுங்களுக்கு அகில உலக பச்சை வங்கில இருந்து 200 சதம் வட்டிக்கு கடனா கொடுப்போம் :D

வருடத்துக்கு ஒருமுறை வங்கில இருக்க பச்சைய பகிர்ந்து எல்லோருக்கும் தரப்படும்

 

புதுசா களத்தில சேருற உறுப்பினருக்கு நம்ம சங்கம் சார்பா அஞ்சு பச்ச புள்ளிய கொடுத்து ஊக்குவிப்போம் :)

 

இதில்லாம பிறந்த நாள், காதுகுத்து, கெடாவெட்டு, கலியாணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்கள கொண்டாடுற கள உறவுகளுக்கு  நம்ம சங்கம் சார்பா அஞ்சு புள்ளிய கொடுத்து வாழ்த்த தெரிவிப்போம்... :)

 

களத்தில பத்தாண்டுக்கு மேல தொடருற கள உறுப்பினருக்கு அவரோட சேவைய பாராட்டி அவரோட யாழ்கள வயசுக்கு இணையா பச்சைய கொடுத்து சங்கம் சார்பா கௌரவ படுத்தபடுவார். :)

 

 

இப்போ திட்டத்த பத்தின விரிவான விளக்கமும், செயல் திட்டத்தையும் சொல்லியாச்சு

திட்டத்துல இணைய விருப்பபடுற  சகோதரங்கள் இதுக்கு ஒரு பச்சைய குத்திட்டு  மேற்ப்படி திட்டத்துல இணையலாம்.

 

 

அப்ப நான் வரட்டா ....
.
.
.
.

நமது பச்சை நமது உரிமை



 

Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

நான் சங்கத்தில் சேர்ந்துட்டேன்..!!!!!!! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் பின்னால வாங்கோ

நான் சேரமாட்டன், ஆனா பிச்சை கேட்டா இல்லை என்று சொல்ல விருப்பம் இல்லை. விஸ்வாக்கு பிச்சையாக பச்சை போடுறன்  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சங்கத்தில் சேர நான் முந்தி.. நீ முந்தி.. என்று கூட்டம் அலைமோதுகிறது.. அதிகபட்சம் 20பேர்தான் என்பதால் கூட்ட நெரிசலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். :o:D

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் ஆயிரம் பிச்சை :lol:  சீ பச்சை கிடைக்க வேண்டி விச்சுவாவின் கட்சியல் சேர்ந்து கொல்கின்றேன் :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வந்திட்டன் , நாளைக்குத்தான் பச்சை...! :)

 

(அடப்பாவி உடம்பெல்லாம் மூளையாய்க் கிடக்கு..! ) :)  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களவிதிகளை விட இந்தப் பச்சைப் பிச்சைத் திட்ட விதிகள் குழப்பமாக இருக்கின்றனவே!

திரும்பி ஒருக்கா பார்க்கத் தூண்டும் அழகான பெண்கள் மாதிரி திரும்ப வாசிக்கத் தூண்டும் பதிவுகளுக்கும் வாசித்தவுடன் சிரிக்கவைக்கும் கருத்துக்களுக்கும்தான் பச்சை போடவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அட... <----"பச்சையை பிச்சை எடுக்கும் திட்டம்"----> நல்ல திட்டமாயிருக்கே.... :D

நானும், 19´வது ஆளா... இதுல சேர்ந்துக்கிறேன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பிச்சை ,குத்துற விசயம்..சி ..பச்சை குத்துற விசயம் எண்டா ,என்ன  ஒருக்கா விளக்கமா

சொல்லுங்கோ,

 

 

நானும் குத்தலாம் எண்டு நினைக்கிறன் ...

 

இம்ளா நாளும் ,பச்சை குத்துற விசயமே தெரியாமல் காலத்தை களிச்சுப்புட்டன்..

 

பச்சையை ,எங்கின,,,வேண்டணும் எப்படி இங்க குத்துறது

எந்த விசயத்துக்கு குத்துறது..ஒருக்கா சொல்லித்தாங்கோ

 

நானும் 20´வது ஆளா... இதுல சேர்ந்துக்கிறேன். :)

 

யாழிலேயே நமக்குத்தான்பா பச்சைப்புள்ளி கம்மியா இருக்கு.... தம்பியோவ் ஆதிமனுசன் எனக்கு இங்க இன்னும் சேர்ந்து முடியாத 20 பேரும் ஒவ்வொரு பச்சைப்புள்ளிகளை இனாமாகத்தாங்கப்பா.... வேறவழி பச்சைப்புள்ளியை எடுக்க ஆதியும் பிய்ந்த தட்டோடு அலையவேண்டிப்போச்சே :lol: :lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

மன்னித்து கொள்ளுங்கள் அண்ணன்களே,

வேலையிடத்தில் அதிக பளுகாரனமாக  இந்த  பக்கம்  வர  முடியவில்லை :(


நானும் வந்திட்டன் , நாளைக்குத்தான் பச்சை...! :)

 

(அடப்பாவி உடம்பெல்லாம் மூளையாய்க் கிடக்கு..! ) :)  :icon_idea:

 

எங்க சுவியண்ணா எப்பிடி படுத்து படுத்து யோசித்தாலும் பத்திற்கு மேல் தாண்டுதில்லையே...   பாருங்கோ இதில்கூட 12 ஆக்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்... :D


 திரும்ப வாசிக்கத் தூண்டும் பதிவுகளுக்கும் வாசித்தவுடன் சிரிக்கவைக்கும் கருத்துக்களுக்கும்தான் பச்சை போடவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும்.

 

அப்படியெண்டால் வெள்ளிகிழமை பதியற விசேட பதிவுகளுக்கு மட்டும் தான் பச்சை கிடைக்குமண்ணே.... :lol::D:lol:

 

  • தொடங்கியவர்

யாழிலேயே நமக்குத்தான்பா பச்சைப்புள்ளி கம்மியா இருக்கு.... தம்பியோவ் ஆதிமனுசன் எனக்கு இங்க இன்னும் சேர்ந்து முடியாத 20 பேரும் ஒவ்வொரு பச்சைப்புள்ளிகளை இனாமாகத்தாங்கப்பா.... வேறவழி பச்சைப்புள்ளியை எடுக்க ஆதியும் பிய்ந்த தட்டோடு அலையவேண்டிப்போச்சே :lol: :lol:

 

அடே ஆதி பயலே ! :lol: , நாங்களே பச்சை எடுக்க வழி தெரியாம  திக்கி திணறி இப்பிடி ஒரு பிச்சை எடுக்குற திட்டத்த கொண்டு வந்தா, அதில பச்சைய போடமா எங்க கிட்டயே பச்சைய கேக்குற  ^_^  - இனி எங்க சங்கத்து ஆளுங்க ஒருத்தர் கூட உனக்கு பச்சை போட மாட்டோம்... வேணும்னா பச்சைய போட்டு சங்கத்துல சேர்ந்து கேளுட வால் பயலே  :D  ..... ( அப்பாடா திட்டியாச்சு  :icon_mrgreen:  )

 

  • தொடங்கியவர்

இந்த பிச்சை ,குத்துற விசயம்..சி ..பச்சை குத்துற விசயம் எண்டா ,என்ன  ஒருக்கா விளக்கமா

சொல்லுங்கோ,

 

 

நானும் குத்தலாம் எண்டு நினைக்கிறன் ...

 

இம்ளா நாளும் ,பச்சை குத்துற விசயமே தெரியாமல் காலத்தை களிச்சுப்புட்டன்..

 

பச்சையை ,எங்கின,,,வேண்டணும் எப்படி இங்க குத்துறது

எந்த விசயத்துக்கு குத்துறது..ஒருக்கா சொல்லித்தாங்கோ

 

நானும் 20´வது ஆளா... இதுல சேர்ந்துக்கிறேன். :)

 

ஹிஹி இவ்வளவு அப்பாவியான உறுப்பினர் நமது திட்டத்தில் இணைந்திருக்கிறாரா? அவருக்கு நமது சங்கத்தின் முதல் பச்சையை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். :lol:

 

iypixt.png

மேலே படத்தில் சிவப்பு நிறத்தால் வட்டமிட்டது தான் பச்சை புள்ளிக்கு உரிய பொத்தான். ஒவ்வொரு உறுப்பினரின் கருத்திற்கும் கிழே இப்படி இருக்கும். உங்களுக்கு பிடித்த கருத்திற்கு நீங்கள் இந்த பொத்தானை அழுத்தி பச்சை புள்ளிகள் வழங்கலாம்.

மேல நீல நிறத்தில் வட்டமிட்டது எனது இந்த நூதன பச்சையை திருடும் திட்டத்திற்கு கிடைத்த முத்தான 12 பச்சை புள்ளிகள்.... :lol::D:icon_idea:

 

ராஜன் விஷ்வா எப்படித்தான் இந்த ஜடியா எல்லாம் தோணுதோ?
ரூம் போட்டு யோசிப்பீங்களோ.
 
உறுப்பினர்கள் சேருகின்ற வேகத்தைப் பார்க்க எனக்கும் உள்ளால ஏதோ பண்ணுது. எதற்கு வம்பு நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான்.
என்னையும் வண்டிலே ஏத்துங்கப்பா.

 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னித்து கொள்ளுங்கள் அண்ணன்களே,

வேலையிடத்தில் அதிக பளுகாரனமாக  இந்த  பக்கம்  வர  முடியவில்லை :(

 

எங்க சுவியண்ணா எப்பிடி படுத்து படுத்து யோசித்தாலும் பத்திற்கு மேல் தாண்டுதில்லையே...   பாருங்கோ இதில்கூட 12 ஆக்கள் தான் சிக்கியிருக்கிறார்கள்... :D

 

அப்படியெண்டால் வெள்ளிகிழமை பதியற விசேட பதிவுகளுக்கு மட்டும் தான் பச்சை கிடைக்குமண்ணே.... :lol::D:lol:

 

 

அஹா.நான் முன்பே சில பிடித்த பதிவுகளிற்கு அமுக்கி இருக்கின்றேன் .ஆனால் இதுதான் அந்த பச்சை புள்ளின்னு தெரியாது

இப்ப விளங்கிச்சு...பச்சயின்னா என்னான்னு..

 

ச..இம்புட்டு காலம் விளங்காமல் காலத்தை கடத்திப்புட்டேன்

 

ஒருநாளைக்கு ,இது மூணுக்குமேல போடா முடியாதா ..

அதுக்குமேல அந்த பச்சையை அழுத்தினால் ......முடியல சாமி

 

இந்த விளக்கத்தை தந்த உங்களுக்கு ஒரு பச்சை ...

 

............

 

இன்னுமொரு கேள்வி ...நமக்கு பச்சை கிடைத்திருக்கிறது எவ்வளவேன்னு பார்ப்பதானால் எப்படி...

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய பெயருக்கு மேல எலியை கொண்டுபோய் விடுங்கோ ,தெரியும் (இதற்கு ஒரு பச்சை கட்டணமாக அறவிடப்படும் ) . :D

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இது insider trading அல்லவா?

இதை செய்யப் போய்தானே ராஜ் ராஜரெட்ணம் கம்பி எண்றார் :)

பி கு - மனதில் பட்டதை சட்டெனச் சொல்லுங்கள். பச்சை பச்சையாய் கொட்டும் :)

இங்கு மாட்டுக்கருத்து கூறமுடியுமா? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • 2 weeks later...

நான் மேலே உங்களுக்கு பச்சை குத்தியுள்ளேன், நிச்சயமாக அது பிச்சை அல்ல, உங்களின் எழில் மிகு எழுத்து நயத்திற்காகத்தான் அது குத்தப்பட்டது.

  • 1 year later...

பச்சை + பிச்சை = வெற்றி 

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.