Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப் படவுள்ள டென்னிஸ் மைதானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப் படவுள்ள டென்னிஸ் மைதானம்!

under%2Bwater%2Btennis%2Bcourt.jpg

டுபாய் நகரம் உலகில் மிக அதிகளவில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வரும் நகரம் என்பதுடன் அங்குள்ள உலகின் மிக உயரமான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் பால்ம் தீவுகள் என்பவை உலகப் புகழ் பெற்றவை என்பது நீங்கள் அறிந்திருக்கக் கூடும்!

அறியாத புதிய தகவல் ஒன்று! அதாவது உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் உலகத்தின் (water world) கீழ் மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் சூழ அதன் கீழே டென்னிஸ் மைதானம் டுபாயில் அமைக்கப் படவுள்ளது.

போலிஷ் கட்டடக் கலைஞரான 30 வயதாகும் கொட்டாலா என்பவரது கனவுத் திட்டமாக இது அமையவுள்ளது. எனினும் இதை நிறைவேற்ற பலத்த சவால்கள் உள்ளதாக சில பொறியியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். மிக நீண்ட வளைந்த கண்ணாடிக் கூரையும், கணிசமான பார்வையாளர்கள் உள்வாங்கப் போதுமான இடத்தையும் நிர்மாணிப்பதே முக்கிய சவால்களாக உள்ளது. குறிப்பாக  மிக நீண்ட, வலிமையான மற்றும் வளைந்த கண்ணாடிக் கூரையை உற்பத்தி செய்வதும் அதன் மூலம் அமைக்கப் படும் கூரை மிக வலிமையான தண்ணீரின் அழுத்தத்தால் உடைந்து விடாது இருப்பதும் மிகவும் சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் மிகக் கடின உழைப்பினாலும் திட்டத்தாலும் டுபாயில் ஏற்கனவே உருவாக்கப் பட்ட பொறியியல் சின்னங்களான பூர்ஜ் கலிஃபா கட்டடம் மற்றும் மனிதனால் உலகில் செயற்கையாக முதலில் நிர்மாணிக்கப் பட்ட மிக அழகான மற்றும் பெரிய தீவுக் கூட்டமான பால்ம் ஆகியவை குறித்த நிலக்கீழ் டென்னிஸ் விளையாட்டு மைதான அமைப்பும் முற்றிலும் இயலாத ஒன்று அல்ல என்ற நம்பிக்கையை இதைத் திட்டமிட்டுள்ள கட்டடக் கலைஞர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது  எனலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

http://4tamilmedia.com/lifestyle/listen-song/30679-under-water-tennis-court-to-be-built-in-dubai

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாட்டு பொறியியலாளரெல்லாம் மத்திய கிழக்கில் தான் வித்தையைக் காட்டுகிறார்கள்.

ஏன் தங்கள் தங்கள் நாட்டில் கட்டுவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாட்டு பொறியியலாளரெல்லாம் மத்திய கிழக்கில் தான் வித்தையைக் காட்டுகிறார்கள்.

ஏன் தங்கள் தங்கள் நாட்டில் கட்டுவதில்லை?

பொறியியலாளர் மட்டுமல்ல... ஐந்து நட்சத்திர விடுதிகளின் தலைமை சமையல் காரர்கள் கூட வெளிநாட்டவர்கள் தான்.

உள்ளூரில் வேலை செய்தால்... ஊக்கமும், பணமும், சுதந்திரமும் குறைவாக இருக்கும் என்ற காரணம்.

இது உண்மைதான்..

தமிழகத்தில் உழைத்ததில் 50 சதவீதம் மிக உண்மையாக, கவனமாக உழைத்தால் போதும்.. அங்கு கிடைக்கும் ஊதியத்தைவிட பலபடங்கு இங்கே சம்பாதிக்க முடியும்..

மிக முக்கியமாக ஆசிய மேலதிகாரிகளாக இல்லாதபட்சத்தில்,  வேலையில் ஊழல், மற்றும் பிறரின் தலையீடு மிகக் குறைவு. ஆனால் வேலையில் கவனக்குறைவு அறவே இருக்கக்கூடாது, சில மாதங்கள் 45 முதல் 50 பாகை வெப்ப சூழலில் உழைப்பது மிகக் கடினமாக இருக்கும்.

இங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில்.... டுபாயில் மிக உயர்ந்த பதவிகளில் இருக்கும், பல ஜேர்மன்காரர்களின் பேட்டியையும்.. அவர்கள் வேலை செய்யும் இடத்தின் சூழ் நிலையையும் நேரில் படம் பிடித்து, காண்பிப்பார்கள். பார்க்க... சுவராசியமாக இருக்கும்.

அவர்களின் கீழ் வேலை செய்யும்.... இரண்டாம் தர பணியாளர்கள் கூட... வெளிநாட்டவர்களாகவே இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

டுபாயில் தண்ணீர் உலகத்துக்குக் கீழே கட்டப் படவுள்ள டென்னிஸ் மைதானம்!

under%2Bwater%2Btennis%2Bcourt.jpg

...அறியாத புதிய தகவல் ஒன்று! அதாவது உலகிலேயே முதன் முறையாக தண்ணீர் உலகத்தின் (water world) கீழ் மீன்களும் கடல் வாழ் உயிரினங்களும் சூழ அதன் கீழே டென்னிஸ் மைதானம் டுபாயில் அமைக்கப் படவுள்ளது.

http://4tamilmedia.com/lifestyle/listen-song/30679-under-water-tennis-court-to-be-built-in-dubai

hydropolis_1.jpg

இந்த திட்டத்திற்கு முன் "ஹைட்ரோபொலிஸ்" (Hydropolis) என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று கடலுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில், தோராயமாக 600 மில்லியன் ஈரோ செலவில் ஜெர்மனி பொறியாளர்களின் திட்டத்தில், துபாய் ஜுமெய்ராவில் 260 ஏக்கர் பரப்பளவில் 'துபாய் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனத்தால் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் திட்டம் நிதி நெருக்கடியால் சில வருடங்களுக்கு முன் நின்றுவிட்டது.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
... அவர்களின் கீழ் வேலை செய்யும்.... இரண்டாம் தர பணியாளர்கள் கூட... வெளிநாட்டவர்களாகவே இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கும். :)

அரசாங்க அலுவலகங்கள் தவிர்த்து, எந்த இடத்திலும் வெளிநாட்டவர்கள் தான்.. மொத்த அமீரக சனத்தொகையில் தோராயமாக 70 முதல் 75 சதவீதம் வரை வெளிநாட்டவர்கள் தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

hydropolis_1.jpg

இந்த திட்டத்திற்கு முன் "ஹைட்ரோபொலிஸ்" (Hydropolis) என்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று கடலுக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில், தோராயமாக 600 மில்லியன் ஈரோ செலவில் ஜெர்மனி பொறியாளர்களின் திட்டத்தில், துபாய் ஜுமெய்ராவில் 260 ஏக்கர் பரப்பளவில் 'துபாய் ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனத்தால் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால் திட்டம் நிதி நெருக்கடியால் சில வருடங்களுக்கு முன் நின்றுவிட்டது.

து...பாயில் நிதி நெருக்கடியா... ??????  அப்புறம் எப்படி உங்களை அங்கே வைத்துச் சமாளிக்கிறார்கள் !!!!  :o  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வித்தையும் ஒரு பூகம்பம் வந்தால் தெரியும். மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும். பல உயிர்ப்பலிகளை எடுத்து. நேபாளம் எப்படி சிதைஞ்சு கிடக்கென்று கண்முன்னால கண்டும்.. இன்னும் மாடிகளை கட்டும் மனிதனை நினைக்க... கவலையா இருக்குது. தானே தனக்கு கொள்ளி வைக்கிற இனம் என்றால் அது 6 அறிவு மனிதன் தான். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
மேட்ச் நடக்கும்போது 
கண்ணாடி வெடித்தால் ....?
 
மீனோடு மீனாக வேண்டியதுதானா ? 
டெனிஸ் கோர்ட் அளவை கண்ணாடியால் மூடி 
தண்ணீரை விடுவது என்பது ...
சாத்தியாமா ?
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வித்தையும் ஒரு பூகம்பம் வந்தால் தெரியும். மண்ணோடு மண்ணாகிக் கிடக்கும். பல உயிர்ப்பலிகளை எடுத்து. நேபாளம் எப்படி சிதைஞ்சு கிடக்கென்று கண்முன்னால கண்டும்.. இன்னும் மாடிகளை கட்டும் மனிதனை நினைக்க... கவலையா இருக்குது. தானே தனக்கு கொள்ளி வைக்கிற இனம் என்றால் அது 6 அறிவு மனிதன் தான். :lol::D

அது நிலநடுக்கப் பிரதேசத்தில் இல்லை என நினைக்கிறேன்.. அப்படி இருந்தாலும் அதை சமாளிப்பதற்கு பொறியாளர்கள் உள்ளார்கள்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

து...பாயில் நிதி நெருக்கடியா... ??????  அப்புறம் எப்படி உங்களை அங்கே வைத்துச் சமாளிக்கிறார்கள் !!!!  :o  :D  :lol:

துபாய் அரசே, இப்படி இடக்கு மடக்கா கேள்வி கேட்கிறாரே.., இவரை கொஞ்சம் தட்டி வையுங்கள்..! :lol::D

(Click RED Arrow to play)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

அது நிலநடுக்கப் பிரதேசத்தில் இல்லை என நினைக்கிறேன்.. அப்படி இருந்தாலும் அதை சமாளிப்பதற்கு பொறியாளர்கள் உள்ளார்கள்..! :D

அமீரகம், நிலநடுக்கப் பகுதியில் இல்லை..

சிறு அதிர்வுகள் வந்தாலும் தாக்குப் பிடிக்கும்படியாகவும், காற்றின் வேகத்தை சமாளிக்கவும் ஏற்ற வகையில்தான் புர்ஜ் கலீஃபா கட்டிடம் பொறியாளர்களால் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது என படித்த ஞாபகம்.

உலக நாட்டு பொறியியலாளரெல்லாம் மத்திய கிழக்கில் தான் வித்தையைக் காட்டுகிறார்கள்.

ஏன் தங்கள் தங்கள் நாட்டில் கட்டுவதில்லை?

துபாய் காட்டார் போன்ற நாடுகள் தான் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய பணம் வைத்து இருக்குறார்கள். எல்லாம் ஆயில் , காஸ் செய்யும் வேலை.

Edited by Surveyor

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.