Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சனம் நிக்குது... அடிச்சு மொட்டந்தலைய பிளந்து இருக்கவேணும் :(

  • Replies 169
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

02b1a3f165984fa6bf3c7e785f9afa69
  • கருத்துக்கள உறவுகள்

அரக்கத்தனமான வெறியாட்டத்தினை வன்மையாகக் கண்டிக்கின்றோம்: - புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி

[Wednesday 2015-05-20 13:00]
vithya-200515-380-seithy-news.jpg

எமது ஊரின் புதல்வியும் புங்குடுதீவு உயர்தர மாணவியுமான செல்வி வித்தியா சிவலோகநாதனின் படுகொலையைக் கண்டித்து புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியத்தின் தலைவர் செ.செல்வகுமாரன் செயலாளர் துரைகணேசலிங்கம் ஆகியோர் கூட்டாகக் கண்டன அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.

புங்குடுதீவு மண்ணில் உதித்து பெற்றவர்களின் எண்ணங்களுடன் தன்சக மாணவிகளுடன் வாழும்காலத்தில் தனது எதிர்காலக் கனவுகளை யதர்சனமாக்க முடியாது ஈவிரக்கமின்றி பாலியல் வன்கொடுமை செய்து அவரைப் படுகொலை செய்த நிகழ்வினை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மேற்படி வன்கொடுமை புரிந்த கொலைகாரக் காடயைர்க்கு அதியுட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம்.

கற்புக்கரசி கண்ணகிக்கு காவல் தெய்வமாக விளங்கியது புங்குடுதீவு மண். இனத்தின் விடுதலைக்காய் ஒருமாபெரும் வழிகாட்டியான பெண்ணைப் பெற்று அளித்தது புங்குடு தீவு மண். மொழி பண்பாடு வீரம் சைவம் ஆகியவற்றிற்கு அணிகலனாய் விளங்கும் புங்குடுதீவு மண்ணில் களங்கம் ஏற்பட எம் இனத்தின் பண்பாட்டினை அழிக்கும் பாதகர்களை எல்லாம் பரவ விட்டது எவ்வாறு?

கொலை செய்தவர்கள் கொலைசெய்யத் தூண்டியவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவதுடன் நீதியின் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்த புங்குடுதீவு மண்ணின்மைந்தன் சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களையும் பாராட்டுகின்றோம்.

துன்பமுற்ற செல்வி வித்தியா சிவலோக நாதனின் ஆன்மா சாந்தியடைய இறைஞ்சுகின்றோம். காலத்தில் வாழ்வு வாழவென்பதல்ல வாழ்வினை வாழ்ந்து காட்ட காலம் வழிசமைக்க பஞ்சமா பாதகங்கள் மறைந்திட பொன்கொடு தீவுமண் உயர்ந்திடத் திடன்கொள்வோம் .

புங்குடுதீவு மறுமலர்ச்சி ஒன்றியம் - யேர்மனி.

20.05.15

http://www.seithy.com/breifNews.php?newsID=132412&category=TamilNews&language=tamil

எனது ஊரைச்சேர்ந்தவர்

மற்றும் உறவு என்ற ரீதியில் 

நானறிந்து

அவர் சட்டத்தரணியாக தொழில் செய்பவர் அல்ல....

சட்டக்கல்லூரியில் விரிவுரையாளர்களில் முதலிடத்தில் உள்ளவர்

அத்துடன் இலங்கையில் நீதிபதிகளை நியமிக்கும் குழுவின் தலைவர்.

என்னைப்பொறுத்தவரை

இந்த நிமிடம்வரை

லங்காசிறி இணையத்தைவிட

நம்பிக்குரியவராக உள்ளார்.

பார்க்கலாம்...

இச் சம்பவத்தில் விரி தமிழ்மாறன் சுவிஸில் இருந்து சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை தப்பி விக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆள் இன்னும் தடுப்புக்காவலில் தான் வைக்கப்பட்டு இருகின்றார்.

சமூகத்தில் மிகவும் மதிக்கப்டுகின்றவர்கள் கூட அரசியலில் குறுக்கு வழியில் செல்லவும் அதற்காக பணம் பெறவும் எவ்வளவு கீழ்த்தரமான விடயங்களிலும் இறங்குவர் என்பதற்கு விரிவி இன்னுமொரு மோசமான உதாரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நம்பிக்கெட்ட காலம் போய்........... யாரை  நம்புவதென்று தெரியவில்லை.  :(
 
அம்பிகைபாலன் என்றொரு சட்டத்தரணியை யாருக்காவது தெரியுமா?
  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாம் கொஞ்சம் அவதானமாய் இருக்க வேண்டும்.

இதில் பல மர்ம முடிச்சுகள் என் கண்ணுக்குத் தெரியுது.

1) இந்த கலவரத்தை யாழில் சிங்களவர்களுக்கு எதிராக கலவரம் நடப்பதாக ஜாதிக கெல உறுமைய சொல்லி இருக்கிறது. அதை உடனடியாக இல்லை இது ஒரு குற்றவியல் சம்பவத்தோடு தொடர்பு பட்ட கலவரம் என சுமந்திரன் மறுத்துள்ளார் ( இந்த நேரத்தில்தான் தேசிய பட்டியல் எம்பிகளின் அருமை தெரியும், எங்கே சுரேஸ், கஜன்ஸ் அண்ட் சரவணபவன்).

2) போலீஸ் பிராந்திய அத்தியட்சகருடன் வாய்க்கு வாய் பேச கொழும்பிலேயே யோசிப்பார்கள். யாழில் முன்பு நடந்த வல்லுறவிக்கு எல்லாம் இப்படி நடக்கவில்லை. இப்போ போலீஸ் வாகனக்களையே தாக்கி அத்தியட்சரின் முகத்துக்கு நேரா கையைகாட்டி கதைக்க எப்படி முடிகிறது?

3) பேசுபவர்களின் தலை மயிர் வெட்டில் ஒரு மிலிட்டரித் தனம் தெரிகிறது

4) வடக்கில் 18 திகதி புலிக்கொடி ஏற்றப்பட்டதாய் இன்னுமொரு வதந்தி தெற்கில் தூபமிடப்படுகிறது.

5) உண்மையிலே முசுலீம்களை போராட சொல்லி தூண்டியது மனிதாபிமானமா அல்லது வேறேதும் ஒரு சக்தியா?

6) சுவிஸ்சில் இருந்து போனதாக சொல்லப் படுபவர் - ஏன் இவ்வளவு லேட்டாக பிடிபட்டார்?

7) கொலையில் சம்பந்த பட்டிருந்தால் உடனடியாக ஊரை விட்டுக்கிளப்ம்பாமல், ஏன் தனியாளாக மாட்டினார்?

8) விரிவி இதில் ஏன், எப்படி வருகிறார். ஒரு 40 லட்சத்துக்காக விலை போனாரா?

9) கொலையாளிகள் ஏன் சடலத்தை மறைக்க முயலவில்லை. முன்பு ஆமி செய்த போதெல்லாம் கிணத்தில் துக்கிப் போடுவார்கள். கண்டு பிடிக்கவே நாளாகும். இவர்கள் மரத்தில் கட்டிய அகோர நிலையில் விட்டுச் சென்றது - வேஎண்டுமென்ற ஒரு கலவர சூழலை உருவாக்கவா?

10) கொழும்பில் இருந்து வந்தவர் சொல்லும் சாட்சியம் - ஏறுக்கு மாறாய் இருக்கிறதல்லவா?

11) இந்த செய்திக்கு சீன அரண் ஊடகம் யாழில் பெரும்கலகம் என்று ஏன் பில்டப் கொடுக்கிறது?

எனக்கு என்னமோ இது வேறு ஒரு பெரிய எத்தனத்துக்கான முதல் படி போலவும் படுகிறது.

தமிழர் பகுதிகளில் கலவரம் வெடித்தது, சிங்களவர் தாக்கப் படுகிறனர் எனக்கூறி ஒரு 83 மீண்டும் திட்டமிடப் படுகிறதா?

அப்படி ஒரு கலவரத்தின் பிண்ணணியில், இப்போ இருக்கும் அரசை கவிழ்த்து விட்டு - ஒரு ராணுவ அரசை நிறுவும் திட்டமாய் இருக்குமா?

நேற்று மைத்திரி, ரணில், சந்த்ஹிரிகா இரவிராவாய் தேர்தல் சீர்த்திருத்தம் பற்றிக் கதைதிருப்பார்கள் என எனக்குப் படவில்லை.

என்னடா எலி கோமனதோடை ஓடுது என்று பார்த்தால் கூட்டணியினரோ தமிழரசுக்கட்சியினரோ அந்த பக்கமே எட்டி பார்க்கவில்லையாமே இதுக்குள்ளை ஜாதிக கெல உறுமையாவையும் கொண்டுவந்து உறும விட்டாச்சு  mr.கோச்சா என்கையா ஆதாரம் ?

பின் கதவால் வந்தவருக்கு அப்படியே ஒரு வெள்ளையடிப்பு .   எனக்கு பார்க்க நீங்களே பிளான் பன்னி எதோ செய்யபோறது போல் உள்ளது பாவம் மக்கள் .

சிங்களவன் கூட உங்கடை ஆட்களே குற்றவாளிகளை தப்ப வைக்கிறது என்கிறான் பாண் பெட்டி பயல்.உள்ள சனமெல்லாம் நந்திகடலில் அஞ்சலி செலுத்த பின்கதவால் வந்தவரும் கொட்டாவி வாயரும் எங்கை போயினம் .

  • கருத்துக்கள உறவுகள்

இச் சம்பவத்தில் விரி தமிழ்மாறன் சுவிஸில் இருந்து சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குற்றவாளியை தப்பி விக்க முயன்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது. ஆள் இன்னும் தடுப்புக்காவலில் தான் வைக்கப்பட்டு இருகின்றார்.

சமூகத்தில் மிகவும் மதிக்கப்டுகின்றவர்கள் கூட அரசியலில் குறுக்கு வழியில் செல்லவும் அதற்காக பணம் பெறவும் எவ்வளவு கீழ்த்தரமான விடயங்களிலும் இறங்குவர் என்பதற்கு விரிவி இன்னுமொரு மோசமான உதாரணம்.

வணக்கம் நிழலி

வணக்கம் உறவுகளே..

கிட்டத்தட்ட நிழலியின் முடிவுக்கே நானும் வந்துள்ளேன்

சில பொறுப்புக்களில் இருப்பதால் 

மிகவும்  பொறுப்போடும்

நிதானத்துடனும்  பேசவேண்டியுள்ளது. எழுதவேண்டியுள்ளது.

முழுமையான தகவல்களையும் சம்பந்தப்பட்டோரிடமிருந்து நேரடி கேட்டு வருகின்றோம்.

சில கேள்விகள் இருக்கின்றன

இதே விஜயகலா மகேஸ்வரனிடமும் விரி தமிழ்மாறனிடமும் சட்டத்தை கையிலெடுக்காதீர்கள்

சட்டத்திடம் ஒப்படைத்து

சட்டப்படி அதிக தண்டனை  வாங்கித்தருவோம்

எம்மை நம்புங்கள் என மக்களுக்கு நம்பிக்கையூட்டி பொறுப்பெடுத்துச்செல்லப்பட்ட

மக்களால் குற்றம் சாட்டப்பட்ட நபர்

அடுத்த நாளே எவ்வாறு கொழும்பில் இருந்தார்.....??

இதற்கு விஜயகலா மகேஸ்வரனும் விரி தமிழ் மாறனும் உண்மையை மக்களிடம் சொல்லணும்

அதுவே இந்தக்குளப்பங்களும் குளறுபடிகளும் பிரிவுகளும் தீர ஒரேஒரு வழி

இதற்கு கூட்டமைப்பு உட்பட எல்லோரும் ஒரு மொழியில் பேசணும்

மக்களது பக்கம் நின்று

அவர்களது வலியை உணர்ந்து நடக்கணும்

இல்லாது விட்டால்

இன்றையநிலையில் கூட்டமைப்பு தீவகப்பகுதிகளிலிருந்து அந்நியப்பட்டுவிடும்

இது யாருக்கு நன்மையாகும்.....??

முன்பின் அறிமுகமற்ற ஊர் மக்களுக்கு புதிதானசிலர் ஊருக்குள் புகுந்து வன்முறையிலேயே குறியாக இருக்கும் நபர்கள் யார்??

சிந்தித்து

சூழ்ச்சிகளை இனம் கண்டு உடனடியாக தலைவர்கள் செயற்படவேண்டிய தருணம் இது.

  • கருத்துக்கள உறவுகள்
வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய ஐவருக்கும் மறியல்
d63bfac8737764fe83b692525a67f925.jpg

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கடந்த 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஐவரையும் யூன் மாதம்  முதலாம் திகதி  வரைக்கும்  விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. 

யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கும் வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும்  இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த தகவலைத் தெரிவித்தார். 
 
வித்தியாவின் படுகொலையுடன்  சம்பந்தப்பட்ட மூவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும்  ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த 18 ஆம் திகதி  ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதியின்  உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் ஐவரும்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
 
குறித்த சந்தேக நபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதவான்  அனுமதி வழங்கியிருந்ததுடன்  எதிர்வரும்  யூன்  முதலாம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறும்  உத்தரவிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார். 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=534154044421569243#sthash.NLdF2J9k.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்ஸ்,

ஆதாரம் கேட்டிருந்தீகள். மேலே நான் நடந்ததாய் சொன்ன விடயங்களுக்கு ஆதாரம் இதோ:

ஜாதிக ஹெலவுக்கு சுமந்த்ஹிரன் பதில்:

http://www.dailymirror.lk/73223/not-even-a-hint-of-racial-violence-tna

புலிக்கொடி வதந்திக்கு இது

http://www.dailymirror.lk/73233/ruwan-refutes-allegation-on-hoisting-ltte-flag-in-north

இதை எப்படி மகிந்த புலியோடு தொடர்புபடுத்துறான் என்பதுக்கு இது

http://www.dailymirror.lk/73381/police-should-act-urgently-on-jaffna-incidents-mr

நான் கேட்ட மிகுதி விடயங்கள் என் "சந்தேகத்தின்" பால் பட்ட கேள்விகள். ஆதாரம் இல்லாதபடியால்தான் சந்தேகப் படுகிறேன். புரியுதா?

ஆதாரம் எல்லாம் ஆங்கிலி பீசில கிடக்கு. பிறகு கூகிள் டிரான்சிலேட்டரில் தப்பும் தவறுமா வாச்சிப் போட்டு என்னை குடையாதேங்கோ. இப்பவே சொல்லீட்டன்.

வித்தியா‬ கொலை குற்றவாளிகள் 10 பேரையும் பகிரங்கமாக தூக்கில் போட வேண்டும்! - நாடாளுமன்றத்தில் விஜயகலா ஆவேசம்

வித்தியாவின் கொலைக்குற்றவாளிகளில் ஒருவரை மக்களிடமிருந்து காப்பாற்றி

சட்டத்தின் முன் நிறுத்தவோம் என உறுதிமொழி வழங்கி சட்டத்தரணி வி.ரி தமிழ்மாறனாலும் பிரதி அமைச்சர் விஜகலா மகேஸ்வரனாலும் கொண்டு செல்லப்பட்ட சுவிசை சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவர் 

அடுத்தநாளே கொழும்பு தப்பி செல்ல உடந்தையாக இருந்த விடயத்தில் சட்டத்தரணியை கைது செய்ய போராடிய மக்கள் அமைச்சர் விஜகலா மகேஸ்வரனை மறந்துவிட்டனரோ..? அல்லது அமைச்சர் தனது செல்வாக்கால் மக்களிடம் இருந்து தப்பிவிட்டாரா..?

விஜகலாவின் நாடாளுமன்ற உரையை கேட்கும்போது எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருகிறது.. ஒன்டும் தெரியாத பாப்பா போட்டுக்கிட்டாளமடி தாப்பா..

Face book

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி வித்தியா பற்றி அவரது ஆசிரியர் எழுதிய உருக்கமான குறிப்பு

புங்குடுதீவில் காமுகர்களால் கொல்லப்பட்ட மாணவி வித்தியாவின் ஆசிரியர் ஒருவர் எழுதிய குறிப்பு மனதை பிசைவதாக உள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய வித்தியாவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத துஷ்யந்தன் துரைராஜா என்ற ஆசிரியர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ள குறிப்பு இது.

வித்யா ................... நினைத்து பார்கிறேன்!

2010 இல், புங்குடுதிவு மஹா வித்யாலயத்தில் எனது வகுப்பிற்கு புதிய மாணவி ஒருவர் வந்திருபதாக நான் வகுப்பினுள் நுழைந்ததும ஏக குரலில் கூறினர் என் வகுப்பு மாணவர்கள் . பார்த்தபோது வகுப்பின் கடைசி வரிசையில் இருந்த அந்த மாணவி வெருட்சிஉடன் எழுந்து நின்றாள்.பெயரை கேட்ட பொது ,"வித்தியா" என்றாள்.

ஆங்கில பாடம் என்றல் வித்தியா என்றே அந்த வகுப்பு மாணவர்கள் கூறும் அளவுக்கு அவளின் திறமை இருந்தது . ஆங்கிலம் மட்டும்மல்ல எல்ல பாடங்களிலும் திறமை காட்டிய அவளுக்கு கணிதம் மட்டும் சவால் விட்டது .அதில் கவனம் எடு என்று எல்லா ஆசிரியர்களுமே கூறும் பொது அவளின் பதில் "சுட்டுபோட்டாலும் வராது சேர் ".

எதிர் கால இலட்சியம் பற்றி ஆங்கிலத்தில் ஒருமுறை நான் எழுத சொன்னபோது தான் ஒரு பத்திரிகை யாளர்க வருவதே நோக்கம் என்ன்று எழுதி இருந்தாள்.உயர் தரத்தில் கூட அந்த துறையை தான் ஒரு பாடமாக அவள் தெரிவு செய்து படித்தாள்.

ஜனாதிபதி செயலணி குழுவின் ஆங்கில பாட இறுவட்டுகள் கொழும்பில் வைத்து வழங்கப்பட போது எம் பாடசாலை தரப்பில் இவளை தெரிவு செய்தபோது ஆங்கிலத்தில் கதைக்க வேண்டி வருமா என்று அப்பாவியாக அவள் கேட்டது இன்னும் என் காதில் ஒலிக்கிறது.மஹா வித்தியாலயத்தில் இருந்து நான் இட மாற்றம் பெற்ற பொது அதை ரத்து செய்ய முடியதா என்று ஒரு மகளை போல் அவள் வினவியது இன்னும் மனதை நெருடுகிறது .

வேலணை மத்திய கல்லூரிக்கு ஒரு மாதம் முன்னர் எதோ செமினார் என்று வந்த பொது கூட என்னை கண்ட போது சிரிப்புடன் ஓடி வந்து அளவளாவி அவளின் நன்றி விசுவாசத்தை கூறியது இன்னும் என்னுள் எதிர் ஒலிக்கிறது .

இறப்பு பொதுவானது . ஆனால் இவளின் இறப்பு கொடுரம் அந்த அப்பாவி பிஞ்சுக்கு பொருத்தம் இல்லாதது .

எப்போதும் தலை வலிக்கிறது கண் குத்துது என்று அடிக்கடி கண்ணீர் விடும் அவள் இறுதி நேரத்தில் என்ன அவஸ்தை பட்டிருப்பாள்.. கடவுளே .....

இறுதி சடங்கில் நாம் மழை இல் தோய்ந்த படி சென்றது நல்லதே.. எமது கண்ணீர் வெளி இல் தெரியக் கூடாது... போய் வா மகளே .......

11224479_1628870797356325_46752348574626

வித்தியாவின் படுகொலை தொடர்பாக ஒரு சிங்கள சகோதரி எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு

அவர்கள் மன்னம்பேரியை 

பாலியல் பலாத்காரம் செய்து

அவளை உயிருடன் புதைத்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

கிளர்ச்சி எழுச்சிபெற்றிருந்தது.

பின்னர் அவர்கள்

ககவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

நான் கஹவத்தையைச் சேர்ந்தவளல்ல.

நுரிவத்த பெண்களிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

நான் நுரிவத்தவில் வாழவில்லை.

பின்னர் அவர்கள்

வடக்கின் மகளீரிடம் வந்தார்கள்

நான் பேசவில்லை

கிருஷாந்தி குமாரசாமி,கோணேஸ்வரி,இசைப்பிரியா

இவர்கள் என் சகோதரிகளல்ல.

பின்னர் அவர்கள்

வேறு தோல் நிறம்கொண்ட

பெண்ணிடம் வந்தார்கள்

கூட்டாய் எட்டுப்பேர்

விக்ரோறியா அலெக்ஸ்சாண்டிராவை

பாலியல் பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் வெளிநாட்டவள் என்பதால்.

அந்தக கோரக் கும்பல்

ரீட்டா ஜானை

பாலியல் பலாத்காரம் செய்தது

அவளது உடல்

பதினைந்துமுறை குத்தப்பட்டு

மொடேரா கடற்கரையில்

வீசப்பட்டது.

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் ஒரு இந்தியப் பெண் என்பதால்.

அவள் மாலை வேளை

நகைகள் அணிந்து

கடற்கரையில் நடைப்பயிற்சி செய்து

வினையை தானே தேடிக்கொண்டாள்.

பின்னர் அவர்கள் விஜேராமவில்

பெண் ஒருவரை பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் ஒரு விபச்சாரி என்பதால்.

பின்னரும் அவர்கள்

நூற்றுக்கணக்கான கன்னிகளை

பலாத்காரம் செய்தார்கள்

சம்பையின் மதுவுடன்

அக்குரசவிலும் மொனராகலையிலும்

கொண்டாடினார்கள்

நான் பேசவில்லை

ஏனெனில்

எனக்கு அரசியல்வாதிகளுக்கு பயம்.

பின்னர் அவர்கள்

லோகராணியை

பாலியல் பலாத்காரம் செய்து

புனித தலமொன்றில் நிர்வாணமாய்

உடலை வீசியெறிந்தார்கள்

கும்பலாய் அவர்கள்

சரண்யா செல்வராசாவை

பாலியல் பலாத்காரம் செய்தார்கள்

நான் பேசவில்லை.

இன்று அவர்கள்

வித்தியா சிவலோகநாதனை

பாலியல் பலாத்காரம் செய்தனர்

நான் பேசவில்லை

ஏனெனில்

அவள் தமிழிச்சி

புங்குடு தீவு எனும்

சிறு கிராமத்தவள்.

By :

Shamila Dal

Shamila Daluwatte

uwatte

http://kathiravan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F123/

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் ஐந்து காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

புங்டுதீவு படுகொலை சம்பவம் தொடர்பில் சரியான முறையில் செயற்படவில்லை என்று தெரிவித்து, யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய காவற்துறை நிலையங்களின் ஐந்து அதிகாரிகளின் உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண காவற்துறை நிலையத்தின் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை அத்தியட்சகர், உதவி காவற்துறை அத்தியட்சகர், காவற்துறை தலைமையக பரிசோதகர் மற்றும் ஊர்காவற்துறை தலைமையக பரிசோதகர் ஆகியோரே இடமாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

11312764_1629196927323712_58302347129556

இடமாற்றம் என்பது இழைக்கப்பட்ட குற்றத்துக்கு வழங்கப்படும் வெகுமதியா..??!

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் முன் விசாரிக்கப்பட வேண்டியவர்களே தவிர இடமாற்றி அவர்கள் இன்னும் குற்றம் செய்ய தூண்டக் கூடாது.

இவர்களை எல்லாம் பதவியில் இருந்து இடைநிறுத்தி.. முன்னாள் நீதித்துறை சார்ந்தோர் உள்ளடங்கிய.. சுயாதின விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து அதன் முன் ஒரு மாத காலத்துக்குள் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளாக இனம் காணப்படுவோர்.. நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். அல்லாதோர் மீள பணியில் சரியான எச்சரிக்கையோடு இணைக்கப்பட்டு அதன் பின் இடமாற்றத்தை வழங்குவதே.. ஓரளவு நியாயமான தீர்வாக இருக்க முடியும்.. இந்த பொலிஸ் குற்றவாளிகளை தண்டிப்பதில். :icon_idea:

ஊரிலிருந்து  வந்த செய்திகளின்படி..

வடபகுதியிலுள்ள அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த 60 முக்கிய அதிகாரிகள்

(காவல்த்துறை

இராணுவம்

கடற்படை

சிவில் நிர்வாகம்)

புங்குடுதீவுக்கு வந்திருந்தார்கள்.

இவர்களை அழைத்து வந்தவர் விரி தமிழ் மாறன்.

இவர்கள் அனைவரையும் அழைத்து

புங்குடுதீவு மக்கள் அனைவரையும் அழைத்து (விரி தமிழ்மாறனின் வேண்டுகோளுக்கிணங்க மக்களை அழைத்தவர்கள் சர்வோதயத்தினர்)

ஒரு கூட்டம் நடந்தது சர்வோதய மண்டபத்தில்.

கூட்டத்தின் நோக்கம் இனி இவ்வாறான ஒரு நிகழ்வு நடக்காமல் தடுப்பதற்காக புங்குடுதீவில் ஒரு காவல்துறை அலுவலகத்தை (உதவி அல்ல) திறப்பது.

இந்த காரணத்தை சொன்னவரும்

60 முக்கிய அதிகாரிகளை அழைத்து வந்தவரும் விரி தமிழ் மாறனே.

கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு 45 நிமிடங்கள் விரி தமிழ் மாறன் வந்திருந்த  அதிகாரிகளுக்கு விளங்கவேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் பேச அதை மக்களுக்கு அங்குள்ள கணேசு வைத்தியரின் மகன் தமிழில் மொழி பெயர்த்தார்.  45 நிமிட உரை நடந்து கொண்டிருந்தபோது

கூட்டத்திலிருந்த ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

அழைப்பைத்தொடர்ந்து மக்களிடம் விடயம் பரவியது.

விரி தமிழ்மாறனை  நோக்கி மக்கள் நேற்றிரவு உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு போனார் எனக்கேள்வி எழுப்பினர்.

மக்களின் ஆவேசத்தை கண்ட அதிகாரிகளும் பதில் சொல்லுமாறு விரி தமிழ் மாறனை நெருக்கினர்.

ஆனால் அவரது வாயிலிருந்து ஒரு சொல்லும் வரவில்லை.

அதனைத்தொடர்ந்து  இவர்மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் கிடடத்தட்ட இவரை பணயம் வைக்கும் முடிவை அவர்களே எடுத்து மக்களுக்கு கையெழுத்திட்ட கடிதத்தையும் கொடுத்தனர்

அதுவரை அந்த மக்கள் (கிட்டத்தட்ட நாலரை மணித்தியாலங்கள்)

அதிகாரிகளின் வாகனங்கள் அசையவிடாது அவற்றின் ரயர்களுக்குள் படுத்துக்கிடந்தனர்.

விரி தமிழ் மாறன்

அன்று மூடியவர் இன்றுவரை வாயைத்திறக்கவில்லை...

தமிழருக்கு ஒரு பாதுகாப்பு இல்லை அதை அவர்கள் இழந்துவிட்டார்கள்.இது தான் யதார்த்தம் மாற்றுக்கருத்தேயில்லை என்கின்றது, இந்த முக நூல் வரைகலையில் உருவான படம்

11167688_383191891873421_650944693608073

இருப்பவர்கள் இருந்திருந்தால் எமக்கு இப்படியெல்லாம் நடக்குமா ???...இணையத்தில் வெளிவந்த கார்ட்டூன் . 

வரைந்தவர் - யோகேந்திரன்

Edited by BLUE BIRD

11377367_514324092050328_721566716945616   11265036_514324102050327_579117382814335

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.