Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடமாட முடிந்தது:- வடக்கு விவசாய அமைச்சர்
b7ba0a8e48706582733f2db1dcd42f2f.jpg

விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் பெண்களால் நள்ளிரவிலும் தன்னந்தனியாக நடமாடமுடிந்தது. அதுபோன்ற ஒரு காலம் மீளவும் வராதா என்று மக்கள் இப்போது ஏங்க ஆரம்பித்துள்ளனர் என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்தார்.

புங்குடுதீவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நேற்று புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. 
 
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றிய போதே  அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் உரையாற்றுகையில்,
 
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையை மிருகத்தனமானது என்று சிலர் குறிப்பிட்டார்கள். நான் 
அவ்வாறு சொல்லமாட்டேன். மிருகங்கள்கூடச் செய்யத்துணியாத கொடுஞ்செயல் இது. இந்த மாபாதகத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எந்தப் பிறவியிலும் அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. 
 
போருக்குப் பிறகு இதுபோன்ற கொலைகளும், சமூகவிரோதச் செயற்பாடுகளும் அதிகிரித்துள்ளன. இவற்றின் 
பின்னணியில் போதைப்பழக்கம் ஒரு பிரதான காரணமாக இருக்கிறது. என்றும் இல்லாத வகையில் இளைய தலைமுறையிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. 
 
எமது இளைய தலைமுறையைத் தவறான பாதையில் வழிநடத்துவதன் மூலம் அவர்களின் விடுதலை உணர்வை மழுங்கடிக்கச் செய்யலாம் என்ற நோக்கத்துடனேயே இங்கு போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு ஊக்கிவிக்கப்படுகிறது. 
 
விடுதலைப் புலிகளின் காவல்துறை குற்றங்களைக் கட்டுப்படுத்தியிருந்தது. இப்போது கடும்குற்றவாளிகள்கூட சுதந்திரமாக நடமாடக்கூடியதாக உள்ளது. எனவே, எமது இளைய தலைமுறையின் பாதுகாப்புக் குறித்து பெற்றோர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எமது இளைய தலைமுறையின் பழக்கவழக்கங்கள் குறித்துப் நாம் விழிப்பாயிருக்க வேண்டும்.
 
 வடக்கு மாகாண சபையும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய தீர்க்கமான வழிமுறைகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். 
 
நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற இவ்வஞ்சலி நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா,சிவஞானம் சிறீதரன், வடமாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்,மாகாணசபை உறுப்பினர்கள் அனந்தி சசிதரன், பா.கஜதீபன், விந்தன் கனகரத்தினம், க.சிவாஜிலிங்கம் ஆகியோருடன் கல்வித் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=348524035016780070#sthash.WqSQVQiW.dpuf

உண்மையிலும் உண்மை .இதை மறுக்க எவனுக்காவது துணிவிருக்கா ???

போதைப்பொருளாலேதான் இது நடந்தது என்று தெரிந்தும் அதைக் கடத்துபவனுக்கு மரணதண்டனை கொடுப்பதை ஏன் எதிர்க்கின்றனர் என்றுதான் விளங்கவில்லை... கேட்க ஒருவன் வரவேண்டும்... வருவான் விரைவில்... 

  • கருத்துக்கள உறவுகள்

வருவான் என்று காத்திருந்தால் எதுவும் நடக்காது. மக்கள் தான் எனி கிளர்ந்து எழ வேண்டும். இந்தியப் படைகள் காலத்தில் மக்கள் விழிப்புக் குழுக்களை அமைத்து ஒட்டுக்குழுக்களின் பிள்ளை பிடியில் இருந்தும்.. வீடு புகுந்து கொள்ளை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட ஒட்டுக்குழு.. மற்றும் இந்தியச் சிப்பாய்களை கட்டுப்படுத்துவதிலும் மக்கள் காட்டிய அதே அணுகுமுறை இன்று தேவைப்படுகிறது. மாகாண அரசு இது தொடர்பில் மக்களுக்கு நல்ல விடயங்களைச் செய்வதோடு போதைப்பொருள் கடத்தல் மார்க்கங்களை தடுக்கும் வகையில்.. மாகாண அரசு தனக்கான ஒரு தனி போதைப்பொருள் தடை அணியை உருவாக்கி செயற்படுதல் வேண்டும்.

ஊழலும்.. லஞ்சமும்.. கப்பமும்.. ஒழுக்கயீனங்களும்.. இனத்துவேசமும்  நிறைந்த சிங்கள காவல்துறை நம்பி எம் மக்களை காப்பாற்ற முடியாது. இச்செய்தி சர்வதேச சமூகத்துக்கு ஆணித்தரமாக கொண்டு செல்லப்பட வேண்டும். :icon_idea:

அத்தோடு மாகாண அரசுக்கான பொலிஸ் அதிகாரங்களின் முக்கியத்துவம் பற்றியும் அதன் அவசியம் பற்றியும் சர்வதேச பிரதிநிதிகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் அப்படித்தான் இருந்தது.

கோவில் போல நாடு வேண்டும் என்று வேண்டி அப்படியே அமைத்தும் காட்டினார்கள்.

ஆனால் தமது வலுவுக்கு அதிகமாய் ஆசைப்பட்டு எல்லாத்தையும் போட்டடித்து விட்டுப் போனார்கள்.

இப்போ அவர்கள் இல்லை. இனி வரப்போவதும் இல்லை.

அமைச்சர் புலிகளை பற்றி ஏத்தி கதைப்பது வாக்கு வேட்டைக்கு வேணுமானால் உதவலாம். ஆனால் மக்களுக்கு இப்போ தேவை புலிப் புராணமில்லை.

மக்களை பாதுகாக்கும் வகையில் மாகாண அரசு மைத்திரியுடன் நேரடியாக பேசி ஒரு போலீஸ்- மாகாணசபை ஒருங்கிணைப்பு பொறிமுறையை ஏற்படுத்தி செயல்படலாம்.

அதவிட்டுவிட்டு புலிகள் காலத்தில் இப்படி இல்லை, சோழர் காலத்தில் இப்படி இல்லை, சங்க காலத்தில் இப்படி இல்லை என்று பழங்கதை பேசுவது கூறு கெட்ட அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை பாதுகாக்கும் வகையில் மாகாண அரசு மைத்திரியுடன் நேரடியாக பேசி ஒரு போலீஸ்- மாகாணசபை ஒருங்கிணைப்பு பொறிமுறையை ஏற்படுத்தி செயல்படலாம்.

ஏன்.. பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கி அந்தந்த மாகாண அரசுகளே தங்களின் பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனுமதிக்கும் பொறிமுறையை கொண்டு வரலாம் தானே. அதைச் சொல்ல என்ன தயக்கம். எதுக்கு சிங்கள பொலிஸ்.. மாகாணசபை ஒருங்கிணைப்பு பொறிமுறை. அதுதான் ஒருங்கிணைய முடியுதில்லை என்பது நிதர்சனமாகத் தெரியுதே. புலிகள் திரும்பி வரப்போவதில்லை என்பதை நிதர்சனமாகச் சொல்லுபவர்கள்.. சிங்கள பொலிஸும்.. தமிழர் மாகாண சபையும் சேர்ந்தியங்க முடியும் என்று எதை வைச்சு நிதர்சிக்கிறார்களோ..??! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முரண்நகை.

மயூரன் சுகுமாரன் கடத்திய போதைப் பொருள் போன்றவற்றை பாவிக்கும் ஒரு குழுவால்தான் இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கு.

மயூரன் நம்ப தம்பி, தெரியாமல் செய்துட்டார் என்று அழுதவர்கள்தான் இப்போ வெட்டுடா கொத்துடா என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாததை அவர் கதைக்கவில்லை.. இந்த இடம் எப்படி இருக்கவல்லது என்பதையே கதைக்கிறார். அதில் தவறேதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முரண்நகை.

மயூரன் சுகுமாரன் கடத்திய போதைப் பொருள் போன்றவற்றை பாவிக்கும் ஒரு குழுவால்தான் இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கு.

மயூரன் நம்ப தம்பி, தெரியாமல் செய்துட்டார் என்று அழுதவர்கள்தான் இப்போ வெட்டுடா கொத்துடா என்கிறார்கள்.

சிங்கள இராணுவம் கடத்தி.. விற்பனை செய்யும் போதைப்பொருளால் தான் இத்தனையும். இந்தப் போதைப் பொருள் பாவனை எமது இளைய சமூகத்தை வேரறுக்க முனையும் செயல்.

மயூரன் மட்டுமல்ல.. உலகில் யார் போதைப் பொருளை கடத்தினாலும் விற்றாலும் அவர்களுக்கு தண்டனை அவசியம். அதன் மூலமே போதைப்பொருள் பாவனையின் பெருக்கதை குறைக்கலாம். அதற்காக போதைப் பொருள் கடத்தி தண்டனையை ஏற்று திருந்திய ஒரு கைதியை கொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது.

போதைப் பொருள் பாவிக்கிறவனை கொல்லனுன்னு ஒரு சட்டமில்லை. அவனை அதில் இருந்து விடுவிப்பது தான் முக்கியம்.

எமது தேசத்தை மக்களை சிங்களவனிடம் இருந்து விடுவித்தாலே போதும்.. போதைவஸ்துப் பிரச்சனை தானாக ஒழியும். சிங்களவனை இதற்காக தண்டிச்சு மிணக்கடுவது வீண் வேலை.  ஏனெனில்.. சிங்கள தேசமும் அதன் அரசியலும் குடு மாத்தையாக்களால் தான் தீர்மானிக்கப்படுகுது. அதனை தமிழர்கள் மீதும் திணித்து தமிழர்களின் சுதந்திர வேட்கைக்கு முடிவுகட்ட நினைக்கிறான் சிங்களவன். அதற்குள் மயூரனை செருகுகின்றனர் சிலர். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரோட்டுக் கூட்டவும் லாயக்கில்லாத மாகாணசபை என்று கேலி பேசியவர்கள் இப்போ போலீஸ் அதிகாரத்தை வைத்து மாகாணசபை உருப்படியாக ஏதாவது செய்யலாம் என்றளவுக்கு மாற்றி யோசிப்பது நல்ல மனமாற்றமே.

மைத்திரியுடன் நேரடியாக் பேசி சீவியோ மாகாண சபையோ ஏதும் சாதிக்க முயல்வதாய் தெரியவில்லை.

மகிந்தவிடம் காட்டிய நெகிழ் போக்கை கூட மைத்திரியிடம் இவர்கள் காட்டவில்லை.

சீவீ தன் போக்கை தேசிய அரசியல் சார்பாய் மாற்றாமல், மாகாண சபைக்கு காணி பொலீஸ் அதிகாரங்களை பெற முயல வேண்டும்.

மக்கள் அவரை வடக்கின் முதல்வராய் தேர்ந்தார்களே ஒழிய கூட்டமைப்பின் தலைவராய் அல்ல.

மாகாண சபை இல்லாவிட்டால்.. உள்ளூராட்சி சபை.. அதுவும் இல்லை என்றால்.. பாடசாலை அபிவிருத்திச் சபைகளூடாக என்றாலும் எமது மக்களை எதிரியிடம் இருந்து தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பதே முதற் தேவை.

அதற்காக மாகாண சபைகளே எமது மக்களின் அரசியல் உரிமை.. கோரிக்கை என்பதாக காட்ட நினைப்பது முழு முட்டாள் தனம். :lol::D

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மண்ணில் சாத்தியாக உள்ளதை வைத்து அந்த மண்ணுக்குரிய மக்களையும் மண்ணையும் பாதுகாக்க வேண்டுமே தவிர தாரைவார்க்க முற்படக் கூடாது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வல்லுறவை செய்த 3 பேரும் நாளைக்கே திருந்தீட்டம் என்று சொல்கி, நாலைஞ்சு படத்தை கீறி சீன் போட்டால் - அவர்களுக்கும் தண்டனையில் இருந்து விடுப்பு கொடுக்க வேண்டும் என வாதிடுவீர்களா?

தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்றால் எல்லா குற்றவாளிகளும் மறுநாளே புத்தர் ஆகிவிடுவார்கள்.

இவ்வளவு அப்பாவித்தனமாய் உள்ளீர்களே :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்திலை நாடு இப்பிடியெல்லாம் இருந்தது...... :)

சுந்திரமாக திரிய முடிந்தது..... :)

பெண்கள் பயமில்லாமல் நடமாடமுடிந்தது என்று நினைவு கூர்ந்தாலும் ஒருசிலருக்கு தப்பாகவே தெரிகின்றது........ :o

உங்கை கொஞ்ச ஆக்களுக்கு உண்மையை கதைச்சால் உள்ளதெல்லாம் பத்தியெரியுது. :D

கொலைக் குற்றமும்.. போதைப் பொருள் கடத்தலும் ஒன்றென்றால்.. வடக்குக் கிழக்கில் உள்ள சிங்கள இராணுவத்தில் பெரும்பகுதியை தூக்கில் போட்டு கொல்ல வேண்டும். அதைச் செய்து போட்டு வந்து இந்தக் கேள்வியை கேளுங்கள்..?!

மயூரனின் நிலை போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார் என்பது தான். அதற்காக அவர் நீண்ட காலம் சிறை அனுபவித்தவர். அவரை விடுவது ஆபத்து என்றால்.. அவுஸி அரசு சொன்ன நடைமுறைக்கு அமைய ஆயுள் தண்டனையை கொடுத்திருக்க வேண்டியது தானே. அவரைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அந்தக் குற்றம் கொல்லப்பட வேண்டிய அளவுக்கு கொலைக் குற்றமும் அல்ல.

ஆனால் இங்கு.. ஒரு ஒப்பந்த கொலைகாரனுன்னும்.. போதைவஸ்து பாவிக்கிறவன் என்றும் தெரிந்தும் சமூகத்தில் அவனை அலைய விட்டு பல அப்பாவி உயிர்களை பலியெடுத்த சிங்கள காவல்துறையை.. எவர் எப்படி தண்டிப்பது..??! மொத்த சிங்கள காவல்துறையையும் உயிரோடு கொழுத்தினால் தகும். எல்லாம் தானா திருந்தும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண அரசு முதல் படி, சமஸ்டி இறுதி இலக்கு என்பதே நான் எப்போதும் சொல்வது.

கண்டபடி விழிப்புக் குழுக்கள் அமைத்தால் அது vigilantism எனும் சண்டித்தனத்துக்கே வழிகோலும். மாகாணசபை மட்டத்தில், ஜனாதிபதி, போலிசை உள்வாங்கி ஒரு பொறிமுறை ஏற்படுத்தப் படுவதே பொருத்தமாய் இருக்கும்.

இதில் கஜன் கம்பனியின் வகி பாகமும், புலவாலுகளின் வகிபாகமும் பேசப்பட வேண்டும்.

மக்களின் அண்றாட பிரச்சினைகளில் இருந்து கூட்டமைப்பையும், மக்களையும் திசை திருப்பி, தீவிர இனமா அரசியல் ( ultra nationalism) எனும் அழிப்பு பாதைக்கு மக்களை இழுத்து போவதில் இந்த இரண்டு கூட்டமும் செய்யும் கைங்காரியம் இன்னொரு வகை கூறு கெட்ட அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் காலத்தில் அப்படித்தான் இருந்தது.

கோவில் போல நாடு வேண்டும் என்று வேண்டி அப்படியே அமைத்தும் காட்டினார்கள்.

ஆனால் தமது வலுவுக்கு அதிகமாய் ஆசைப்பட்டு எல்லாத்தையும் போட்டடித்து விட்டுப் போனார்கள்.

இப்போ அவர்கள் இல்லை. இனி வரப்போவதும் இல்லை.

அமைச்சர் புலிகளை பற்றி ஏத்தி கதைப்பது வாக்கு வேட்டைக்கு வேணுமானால் உதவலாம். ஆனால் மக்களுக்கு இப்போ தேவை புலிப் புராணமில்லை.

மக்களை பாதுகாக்கும் வகையில் மாகாண அரசு மைத்திரியுடன் நேரடியாக பேசி ஒரு போலீஸ்- மாகாணசபை ஒருங்கிணைப்பு பொறிமுறையை ஏற்படுத்தி செயல்படலாம்.

அதவிட்டுவிட்டு புலிகள் காலத்தில் இப்படி இல்லை, சோழர் காலத்தில் இப்படி இல்லை, சங்க காலத்தில் இப்படி இல்லை என்று பழங்கதை பேசுவது கூறு கெட்ட அரசியல்.

மொற்றோரோல்லாவும்  நோக்க்கியவும் கைதொலைபேசி விற்பனையில் 
கோடி கட்டி பறந்த போது 
 
ஆப்பிள் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது 
 
சாம்சுங் சிமர்ட் போன் முறைமை 
உதரணாமாக கொண்டு களமிறங்கி சாதனை படைத்து.
 
இருப்பது சரியில்லை என்றால் ...
எது சரி என்ற ஒரு கேள்வி எழும் ?
அதற்குதான் உதாரணங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.
 
புலிகள் இனி வரமாட்டார்கள் 
புலிகள் வானத்தில் இருந்து குதிக்கவில்லை 
 
எமது சமூகத்தில் இருந்து எமது சமூகத்தை வழி நடாத்த 
ஏன் ஒரு சக்தி பிறக்க முடியாது??
 
உங்களுடைய கருத்துக்கள் 
தமிழர்களை பயம்காட்டி ஒரு அச்ச நிலையில் வைத்திருப்பத்தை 
நான் கவனித்து வருகிறேன்.
எனது பார்வையிலும் தவறு இருக்கலாம் ....
ஆனால் தமிழர்களுக்கு தமிழ் சக்தி எப்போதும் தேவை 
அதை உருவாக்காது........... எதை உருவாக்கியும் பயன் இல்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

இது புலிகள் இருந்த போது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி.. புலிகள் இல்லாத போது 13 திருத்தம் கேட்டுச் சோர்ந்தவர்களுக்கு சொல்ல வேண்டிய கருத்து.

மாகாண சபைக்குள்ளால் சமஸ்டி.. கேட்க நல்லா இருக்குது. மாகாண சபையோ 13 க்குள் நகருவதே கேள்விக்குறியாக உள்ளது.

இதில்.. சிங்கள பொலிஸ் படையை இணைத்து.. ஒரு பொறிமுறை. இப்ப சிங்கள பொலிஸ் படை எங்க நிற்குது.. சிங்கள தேசத்திலா. தமிழர்களின் நிலத்தில் தானே.

தமிழர்களை நிர்வகிக்க தமிழ் பொலிஸ் படை அமைக்கப்பட வேண்டும். அது மாகாண அமைச்சின் கீழ் அமைய வேண்டும். அதன் மூலம் தான் மாகாண அரசு தனது எல்லைக்குள் உள்ள மக்களின் விருப்பப்படி சிவில் நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியும்.

மத்தியில் சர்வ அதிகாரங்களோடும் உள்ள... சிங்கள ஆட்சியாளர்களின் பொலிஸை வைச்சுக் கொண்டு.. மாகாண அரசு என்ன பொறிமுறையை கட்டினாலும் அதனை சிதைக்க சில வினாடிகள் போதும். இந்தக் கூப்பாடுகள் எல்லாம்.. எமது மக்களை பாதுகாப்பதுக்குப் பதில்.. எமது மக்களை பாதுகாக்க..வந்து சேர வேண்டி அதிகாரங்கள் வராமல் தடுப்பதையே அதிகம் செய்யும். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண அரசு முதல் படி, சமஸ்டி இறுதி இலக்கு என்பதே நான் எப்போதும் சொல்வது.

கண்டபடி விழிப்புக் குழுக்கள் அமைத்தால் அது vigilantism எனும் சண்டித்தனத்துக்கே வழிகோலும். மாகாணசபை மட்டத்தில், ஜனாதிபதி, போலிசை உள்வாங்கி ஒரு பொறிமுறை ஏற்படுத்தப் படுவதே பொருத்தமாய் இருக்கும்.

இதில் கஜன் கம்பனியின் வகி பாகமும், புலவாலுகளின் வகிபாகமும் பேசப்பட வேண்டும்.

மக்களின் அண்றாட பிரச்சினைகளில் இருந்து கூட்டமைப்பையும், மக்களையும் திசை திருப்பி, தீவிர இனமா அரசியல் ( ultra nationalism) எனும் அழிப்பு பாதைக்கு மக்களை இழுத்து போவதில் இந்த இரண்டு கூட்டமும் செய்யும் கைங்காரியம் இன்னொரு வகை கூறு கெட்ட அரசியல்.

அவர்கள் தருவதை வேண்டுவதற்கு 
ஏன் அரசியல் செய்ய வேண்டும் ??
 
சுமந்திரன் போய்  சும்மா எங்காவது குந்தில் குந்தியிருந்தாலும் ....
அவர்கள் தருவதை தருவார்கள்தானே ?
 
எமக்கு எது தேவையோ அதைதான் வலியுறுத்த வேண்டும்.
அதில் இருந்து பெறுவது எதுவாக வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்.
 
அடிமையாக இருப்பதுதான் சத்தியம் என்றால் 
ம க்களே அடிமையாக இருக்க பயிற்சி எடுங்கள் என்று சொல்பவன் 
ஒரு கூளியாக்த்தான் இருக்க முடியும்.

உங்களுடைய கருத்துக்கள்

தமிழர்களை பயம்காட்டி ஒரு அச்ச நிலையில் வைத்திருப்பத்தை

நான் கவனித்து வருகிறேன்.

அவரது முழு நோக்கமும் அது தான்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் நான் பயங்காட்டாட்டி தமிழர்கள் வீறு கொண்டு எழுந்து மதவாச்ச்சியை கைப்பற்றி விடுவார்கள். குறிப்பாக யாழை வாசிக்கும்சில புலத்துப் போர்வாள்கள் போய்.

எனவேதான் கோடி கோடியா கொட்டிக்கொடுத்து என்னை இங்கே கருத்தெழுத வைக்கிறது இலங்கை அரசு.

எப்படித்தான் சிரிக்காம இப்படி காமெடி பண்ண வருகுதோ உங்களுக்கு.

கிழிஞ்சுது போ இதுக்கை கோடி நினைப்பு வேறை!!!!!  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை நான் சொல்லுறது வீட்டுக்கோடி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு முரண்நகை.

மயூரன் சுகுமாரன் கடத்திய போதைப் பொருள் போன்றவற்றை பாவிக்கும் ஒரு குழுவால்தான் இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கு.

மயூரன் நம்ப தம்பி, தெரியாமல் செய்துட்டார் என்று அழுதவர்கள்தான் இப்போ வெட்டுடா கொத்துடா என்கிறார்கள்.

நெடுக்ஸ் இந்த இடத்தில் சறுக்கிவிட்டார் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

போதை கடத்துபவர்களால் மூன்று குற்றவாளிகள் உருவானதைக் கண்டோம்.. மயூரனால் எத்தனைபேர் உருவானார்கள் என்று தெரியவில்லை.

அப்படிப்பட்ட மயூரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அதே தண்டனையை முன்னாள் பிரதமர் டிஎம் ஜெயரட்னவுக்கும் வழங்குவோம் என்றதும் நெடுக்ஸ் துள்ளிக்குதிப்பது ஏன்??

மகிந்த சனாதிபதியாக இருந்தபோது மாகாணசபைக்கு காணியோ போலிஸ் அதிகாரமோ தரவே மாட்ட்டன் இன்று நேரடியாக மாத்திரமிலை மைக்கு போட்டு கூட சொன்னார். இருந்தாலும் மகிந்ததான் திரும்பி வரவேண்டும் என்று அடம்பிடிச்சம். இப்ப மைத்டிரியிட்ட போய் போலிசை தாங்கோ என்று எப்படி கேட்பம்? 

குற்ற செயல்கள் தடுக்கப்படவேண்டும், சமூகத்தில் போதை பொருள் பாவனை அகற்றப்படவேண்டும். அதுக்கு ஊழல் நிறைந்த சிங்கள போலீசை நம்பி பிரயோசனம் இல்லை. இதுகளை கவனிக்க அல்லது நெறிப்படுத்த உடனடியாக ஒரு கட்டமைப்பை மாகாணசபையுடன் சேர்ந்து எடுக்கப்படவேண்டும்.

அனாலும் இந்த குற்றசெயலை வைத்து ஒட்டுமொத்த என்னமாதிரியான அரசியல் தீர்வு வேண்டும் என்று சொல்வது சரியாக படவில்லை.

குற்றசெயல்கள் அதிகரிப்பதாக கூறும் இவர் வடக்கு மாகாணசபை ஊடாக இது சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று ஏன் விவாதிக்க முடியாது? 

குறைந்தது அந்த குற்றவாளிகளை கைதுசெய்ய ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?

அடுத்த தேர்தலுக்கு பிறகுதான் அரசியல் திர்வாமில்ல அதுவரைக்கும் இப்படி நடக்காமல் இருக்க ஏதாவது பண்ண முடியாதா?

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்திலை நாடு இப்பிடியெல்லாம் இருந்தது...... :)

சுந்திரமாக திரிய முடிந்தது..... :)

பெண்கள் பயமில்லாமல் நடமாடமுடிந்தது என்று நினைவு கூர்ந்தாலும் ஒருசிலருக்கு தப்பாகவே தெரிகின்றது........ :o

உங்கை கொஞ்ச ஆக்களுக்கு உண்மையை கதைச்சால் உள்ளதெல்லாம் பத்தியெரியுது. :D

அவருக்கு புலிக்காச்சல்  அண்ணே......புலியின்டை கிலிதான் அவரை ஆட்டிப்படைக்குது....பாவம் விட்டுடுங்கண்ணே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.