Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒப்பந்த அடிப்படையில் கொல்லப் பட்டாரா வித்தியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவில் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலையாகிய வித்தியா ஒப்பந்த கொலை அடிபடையில் கொல்லப் பட்டதாயும். பிரதான குற்றம் சாட்டப் பட்ட நபர்க்கு வேறு ஒருவர் பணம் கொடுத்தே இதை செய்விக்க வைத்துளதாயும் கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுளது.

http://www.asianmirror.lk/news/item/8968-schoolgirl-from-punguditivu-raped-murdered-on-contract-reports

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசிலிருந்து சென்றவர்,
சட்டத்தரணிக்கு 40 லட்சம்,
பத்துப் பேர், இதில் சம்பந்தம்,
காவல் துறையின் தாமத நடவடிக்கை,
"ஹெல்மெட் குறூப்". கல்லெறி கோஷ்டி....
எண்டு.... பார்க்கும் போது, சந்தேகம் ஏற்படத்தான் செய்கின்றது. :( 
 

  • கருத்துக்கள உறவுகள்

இது வித்தியா பாலியல் வன்புணர்வுக்..கொலையை திசை திருப்பி.. தனிப்பட்ட விரோதக் கொலையாக்க காட்ட நடக்கும் பிரச்சாரமாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது. சிங்கள ஊடகங்கள் இதனை நுட்பமாகப் பார்க்கின்றன. இதனை பாலியல் வன்புணர்வுக் கொலையாகக் கருதி குற்றவாளிகளை கடுமையாகத் தண்டித்துவிட்டால்.. இதே பாலியல் வல்லுறக் குற்றசாட்டோடுள்ள சிறீலங்கா இராணுவத்தையும் கடுமையாக தண்டிக்க வேண்டிய நிலையை நாடு தானே வலிந்து உருவாக்கி விட்டதாகிவிடும். இதனை அதற்கு உதாரணமாகக் காட்டிவிடுவார்கள்.. என்பதால்.. இதனை தனிப்பட்ட.. ஒப்பந்தக் கொலையாக்கி.. அலுவலை மூடிமறைத்து.. முடிக்கப் பார்க்கிறார்கள்.

 

சிங்களவனுக்கு.. அடியெடுத்துக் கொடுக்க எம்மவர்களே.. போதிய அளவில் இருக்கிறார்களே... அப்புறம் என்ன.. பஞ்சம் அவனுக்கு. :icon_idea::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சசி வர்ணம், நிழலி உட்பட பலரின் வேண்டுதலுக்கு செவி மடுத்து. தூண்டுதல்களுக்கு ஆளாகாமல் இந்த கருத்தை தர்க ரீதியாக மட்டும் அணுகுகிறேன். பார்க்கலாம் இந்த பரிசோதனையின் பலனை.

1) வித்தியா வல்லுறவுக்கு ஆளானார் என்பது சந்தேகதுக்கு இடமின்றி நிருபணாமாயுள்ளது ( மருதுவ அறிக்கை)

2) ஆகவே இதை தனியே கொலை என்று யாரும் வல்லுறவை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

3) கொலையில் சம்பந்த பட்ட எல்லோர்க்கும் கொலை, மற்றும் வல்லுறவு இரண்டுக்குமே குற்றப் பத்திரிகை வழங்கப்படும்

4) வேறு நபர்களை தொடர்பு படுத்துவதால் - இதில் இப்போ மாட்டுப் பட்டுள்ள 10 பேர்களும் தப்ப முடியாது. சட்டத்துக்கு நோக்கம் (motive) எதுவாயிருந்தாலும் கவலை இல்லை. கொலை, வல்லுறவு எனும் செயல் ( actus reus) நடந்ததா. குற்றவாளி கொலை/வல்லுறவு செய்யும் எண்ணத்துடன் (mensrea) இருந்தாரா என்பது மட்டுமே சட்டத்துக்குத் தேவை. ஆகவே பணத்துக்குச் செய்தாலும், காமத்தில் செய்தாலும் - குற்றம், குற்றமே.

5) எனவே இப்படிச் சொல்வதால் இதை தூண்டிய/பணம் கொடுத்தோரும் மாட்டுப்படுவார்களே ஒழிய, ஏலவே பிடிபட்டவர்கள் தப்ப முடியாது.

6) பிடிபட்டவர்கள் தப்ப இருக்கும் ஒரே வழி - தாம் இந்த செயலை செய்யவில்லை, செய்தோம் என்பதற்க்கு போதிய ஆதாரமில்லை என நிறுவுவதே. சில வீடுகளை உணர்சிக்குழுக்கள் எரித்ததால் - ஆதாரங்கள் பல எரித்து போய்விட்டதாயும் பேசிக்கொள்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நுட்பமாக மறைக்கப்பட்டவை..

 

1. கொலையாளிகள் தாம் மதுபோதையில் இருந்ததால்.. நடந்தது என்ன என்பதை அறியவில்லையாம் என்ற வாக்குமூலம்.

 

2. மக்களோடு சேர்ந்து போராடுகிறோம் போர்வையில்..கொலையாளிகளுக்கு சார்ப்பானவர்களே ஆதாரங்களை அழிக்கக் கூடிய கைங்கரியம் நடந்திருக்க உள்ள வாய்ப்பு அடியோடு மறைக்கப்பட்டு மக்களின் நியாயமான நீதி கோரலை "உணர்ச்சிப் பெருக்கு" என்று காட்ட விளைவது.

 

3. ஒப்பந்தக் கொலைகள் என்பது.. திட்டமிட்டு 3ம் நபருக்காகச் செய்வது. இது தனிப்பட்ட விரோதக் கொலை என்பதனூடு திட்டமிட்ட பாலியல் வன்முறைக் கொலையல்ல.. கொலையாளிகள் சந்தர்ப்ப சூழ்நிலையால்.. மதுபோதையில் அதை செய்து விட்டனர் என்று காண்பிக்க போடப்படும் கருத்தியலுக்கான அத்திவாரமாகவும் இதனைக் கொள்ளலாம்.

 

4. வடக்குக் கிழக்கில்.. 2009 க்குப் பின் மகிந்த, மைத்திரி ஆட்சியில் பல தமிழ் இளம் பெண்கள் மற்றும் மாணவிகள் பாலியல் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட போது அவற்றை அப்படியே மூடிமறைத்த விட்ட சிங்கள காவல்துறையும்.. சிறீலங்காவின் முக்கிய ஊடகங்களும்..வித்தியா விவகாரத்தில் மக்களும் மாணவர்களும்..சமூக ஊடகங்களும் எடுத்த உடனடி விளிப்புணர்வால்.. அந்தக் கொடுமை நாடு பூராவும்.. ஏன் சர்வதேசம் பூராவும் செய்தியாகிவிட்டுள்ள நிலையில்.. அதனைத் தொடர்ந்து எல்லா அநியாயங்களும் கிளறப்படும் நிலை கண்டு.. அவை... சிந்திக்கப்படாமல் இருக்கச் செய்தல்.. என்பதாகவும் இவ்வாறான செய்தி ஆக்கல் அமையலாம்.

 

எது எப்படியோ வித்தியாவிற்கு நடந்த கொடூரத்துக்கு  நீதிகிட்ட வேண்டிய அதேவேளை தமிழ் பெண்கள் மீதான இதே கொடுமைகளைச் செய்த மற்றவர்களும் தண்டிக்கப்படுவதும்.. அந்தப் பெண்களுக்கு நீதி கிடைப்பதும் அவசியம்.

 

வித்தியா மட்டுமல்ல.. சரணியா.. ரஞ்சினி.. கிருசாந்தி... என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது..! இவர்கள் எல்லோருக்கும் நீதிகிட்ட வேண்டும். வித்தியாவுக்கு நீதி உடனடியாகக் கிட்ட வேண்டும். மாணவ சமூகம் மீதான தமிழ் பெண்கள் மீதான அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்படுவதை சர்வதேசமும் சேர்ந்து உறுதி செய்ய வேண்டும். அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தமிழர் தரப்போடு சிங்கள அரசும் சர்வதேசமும் பேசி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை களத்தில் மேற்கொள்ள வேண்டுமே தவிர.. நீதி கிடைக்காமல் செய்யும் வகைக்கு நடவடிக்கைகள்.. பூசி மறைப்புக்கள் நிகழக் கூடாது. இதுவே எங்கள் மற்றும் பெரும்பாலான மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு.

 

தர்க்கம் ரீதி என்பது சாத்தியமான எல்லாவற்றையும் பொருத்திப் பார்ப்பது. எமக்கு வசதியானதை மட்டும் முன்னிறுத்துவது அல்ல. :icon_idea:

 

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1) கொலையாளிகள் போதையில் இருந்தோம் அதனால் நடந்ததை அறியவில்ல என்பதால் - ஒன்றும் ஆகப் போவதில்லை. இது ஒரு defence ஏ இல்லை. It's an irrelevant fact.

2) மக்கள் உணர்சி வசப்பட்ட பின்னணியில் தான் கொலையாளிக்கு சார்பானவர்கள் அந்த குழப்ப நிலையை பயன் படுத்தி தடயங்களை அழிக்க முடிந்தது. தனியே போய் அழித்திருந்தால் அவர்களும் மாட்டி இருப்பர்.

3) இன்று வரை போலீசின் அசண்டையீனம் தவிர இதில் அரச நேரடித்தொடர்பு இருப்பதாக சொல்லப் படவில்லை. இது ஒரு - Tamil on Tamil வன்முறை என்பதுதான் உண்மை. யாழில் நடக்கும் சகலதையும் தெற்கின் தலையில் கட்டும் புலத்து அரசியல் போக்கும், தமிழர்களில் குற்றமே நிகழ்வதில்லை எனும் மேட்டிமையும் இதை எம்மை ஏற்கவிடாமல் செய்யக்கூடும். ஆனால் இப்படிச் செய்வதன் மூலம் இந்த கொலையில் இந்த 10 பேருக்கும் அதிகமாக சம்பந்த பட்டோரை தப்பிக்க வைக்க சிலர் முயலக்கூடும். தமிழ்மாறன்கள் எங்கேயும் இருக்கலாம்.

4) இதில் மாற்றுக்கருத்து இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்துப்பகிர்வுகள் தொடருங்கள்

 

பல சக்திகள்

மிகவும் பலமான சதிகள்

அரசியல்

அரசமாற்றத்தின் பின் விளைவுகள் மற்றும்  அதனால் வலுவிழந்து மீளத்துடிக்கும் கரங்கள்

என பல கண்ணுக்குத்தெரியாத கரங்கள் உள்ளன...

 

பொறுமை  அவசியம்

எவரையும் குற்றம் சாட்டமுதல் ஆயிரம் தடவை யோசிக்வேண்டியுள்ளது

பார்க்கலாம்

தர்மம் வெல்லும்

வெல்லணும்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பந்த அடிப்படையில் கொல்லப் பட்டாரா வித்தியா

 

இதை வித்தியாவின் குடும்பம் சார்பாக

வித்தியாவின் சித்தப்பாவாகிய யோகா அவர்கள் முற்றுமுழுதாக மறுத்திருந்தார்

அவரது பேச்சை அஞ்சலி நிகழ்வில் நானும் நேரடியாக கேட்டிருந்தேன்.

விரைவில் இங்கு இணைக்கின்றேன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்..

 

1. ஒரு குற்றம் சுயசிந்தனையில் இல்லாத (மதுபானப் பாவனை அல்லது போதைப்பொருள் பாவனை இதனைச் செய்யும்) போது நடத்தப்பட்டதாகக் காட்டி.. குற்றவாளிகளை தப்பு விப்பது அல்லது தண்டனைக் குறைப்பைக் கோருவது பொதுவாக கையாளப்படும் ஒரு தந்திரமாகும். இதனை இங்கும் பாவிக்க முற்படுவது கண்கூடு.

 

2. குற்றவாளிகள் இனங்காணப்பட்டு.. கைது செய்யப்பட்ட பின்.. அவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டிருக்கிறது. ஒரு முக்கிய நிகழ்வோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும்.. அவர்கள் தொடர்பிலான அனைத்தையும் துப்புத் துலக்கும் வரை பாதுகாக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. கட்டாயம். பொதுமக்கள் போராடியதை சாட்டு வைச்சு பொலிஸார் கடமையை செய்யாது விட்டு.. துப்புக்களை தொலைக்க திட்டமிட்டு இடம்கொடுத்தமை இங்கு அப்பட்டமாகவே புலப்படுகிறது. ஆனால் குற்றச்சாட்டு.. நீதி தாமதிக்கப்படுவதற்காகவும்.. பொலிஸின் மெத்தனப் போக்கையும்.. மாற்றான் தாய் மனப்பான்மையையும்.. குற்றவாளிகள் திட்டமிட்டு தப்ப விடப்படுவதையும் கண்டித்து போராடிய மக்கள் மீது திருப்புவது முழு அபந்தம் என்பதற்கும் அப்பால்.. இப்படியான கொடூரங்களை குற்றவாளிகள் தொடர்ந்து செய்வதைத் தூண்டும்.

 

3. சிறீலங்கா அரசு நேரடியாகச் சாராத போதும்.. அது சார்ந்த பொலிஸ் துறை தவறிழைத்திருக்கிறது. தவறிழைத்த பொலிஸ் அதிகாரி மீது உருப்படியான நடவடிக்கைகள் இல்லை. சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனரே தவிர அவர்கள் கடமை செய்யத் தவறியமையை இட்டு.. விசாரணைகளோ.. இடைக்கால பதவி பறிப்போ செய்யப்படவில்லை. இது சிறீலங்கா அரசு தானும் கூட்டுப்பங்காளியாக இவ்வாறான குற்றங்களில் இருக்க விரும்புகிறதோ என்ற கேள்வியையே பலப்படுத்தி நிற்கிறது. அத்தோடு அரசியல் செல்வாக்குகளை பிரயோகிக்கவும்.. அதன் மூலம் பொலிஸ் அதிகாரிகள்.. ஆதாயம் தேடுவதும் நிகழ்ந்தும்.. அது தொடர்பில் ஒரு விசாரணைக்கும் இன்னும் எதுவும் உருப்படியாகச் செய்யப்படவில்லை. சிறீலங்கா பாராளுமன்றில் இந்த நிகழ்வு கண்டிக்கப்பட்டும்.. இது தொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி ஒரு அறிவிப்பையும்.. உத்தரவாதத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்.. நீதிகேட்டுப் போராடும் மக்களுக்கு வழங்கவில்லை. இதே சிங்களப் பகுதியில் என்றால்... இப்படி மெளனம் காப்பார்களா. குற்றத்துக்கு உடந்தையானவர்களை தப்ப விடுவார்களா. பொலிஸ் கடமையை செய்யத் தவறிய பொலிஸாரை பேணிப்பாதுக்காக பாதிக்கப்பட்ட சிங்கள மக்கள் சிங்கள அரசை விட்டுவைப்ப்பார்களா..?!!

 

ஆக இங்கு சிறீலங்கா பொலிஸ் மட்டுமல்ல.. சிறீலங்கா அரசின் மெத்தனமும் குற்றம் செய்யப்படவும் குற்றவாளிகள் குற்றம் செய்யத் தூண்டப்படவும்.. தப்பவும் வழி சமைத்துள்ளது. இது எதனைக் காட்டுகிறது..?! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

However, Jaffna is now largely peaceful, reports said.மேற்கூறிய வசனம் சிலருக்கு{புலம்பெயர்ந்த தோழர்களுக்கு,சில முன்னாள் புலிஉறுப்பினர்களுக்கு,சிங்கள ஆட்சியாளர்களுக்கு,சர்வதேச அமைப்புக்களுக்கு } இன்று அவசியம் தேவைபடுகின்றது.......

under the influence of liquor என்று மேட்டுக்குடியாளர்கள் தீர்ப்பை குறைத்து கொடுப்பினமோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1) புத்தன், நெடுக்கு இருவரும் diminished responsibility எனும் defence ஐ பிழையாய் விளங்கி கொண்டு கதைக்கிறீர்கள். இது மனநிலை பாதிப்பால் சுய நினைவில்லாமல் இருப்போர்க்கானது. இதை போதையின் ஆளுகையின் கீழ் கொலை செய்தோருக்கு பாவிக்க முடியாது. உண்மையில் மனநலம் பாதிக்கப் பட்டிருக்கும் ஒருவர்க்கு கூட இந்த டிபென்சை பாவிக்க வக்கீல்கள் யோசிப்பார்கள். காரணம் கொலை செய்தவர் கூட நன்னடத்தை பிரகாரம் 15-20 வருடத்தில் வெளியே வரலாம். ஆனால் மனநிலையால் கொலைசெய்தவர் என தீர்பாபவரை சாகும் வரை சிறையை விட மோசமான மருத்துவ மனையில் இருந்து வெளியே விமாட்டார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை, குற்றவாளிகள் போதையில் இருந்தார்கள் என்பது ஒரு irrelevant point தான்.

2) இலங்கை போலீசை நாம் ஸ்கொட்லாண்ட் யார்ட் ரேஞ்சுக்கு எதிர்பார்கிறோம். அவர்கள் என்ன வச்சுக்கொண்டா வஞ்சகம் செய்கிறார்கள்.

3) வழமையான பொலீஸ் அசண்டையீனம். இதே போல் தெற்கில் கஹாவத்தை கொலைகள் மேலும் பல கொலைகளிலும் போலீஸ் கையாகாததனம் வெளிப்பட்டிருக்கு. சகலதையும் இனவாதம் எனும் அரியம் ஊடாக நாம்தான் பாத்கிறோமோ தெரியவில்லை.

4) விசுகு, வித்தியாவின் உறவுகளுக்கு இந்த கொலையினை யார் செய்தார்கள் என்ற முழு விபரமும் தெரியும் என எதிர்பார்க்க முடியாது. எனது கருத்தெல்லாம், இந்த 10 பேரைவிடவும் மேலும் பலர் இதில் மறைமுகமாக சம்பந்த பட்டிருக்க கூடும் என்பதே. என் வக்கீல் மனம் ஓவராய் சிந்திப்பதாயும் இருக்கலாம். ஆனால் இந்த கோணத்தில் யோசிப்பதில் விசாரிப்பதில் ஒரு பாதகமுமில்லை. அப்படியாரும் இருப்பின் அவர்களையும் தண்டிக்கலாம் இல்லை என்றால் இந்த 10 பேருடன் நிறுத்தலாம். அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

4) விசுகு, வித்தியாவின் உறவுகளுக்கு இந்த கொலையினை யார் செய்தார்கள் என்ற முழு விபரமும் தெரியும் என எதிர்பார்க்க முடியாது. எனது கருத்தெல்லாம், இந்த 10 பேரைவிடவும் மேலும் பலர் இதில் மறைமுகமாக சம்பந்த பட்டிருக்க கூடும் என்பதே. என் வக்கீல் மனம் ஓவராய் சிந்திப்பதாயும் இருக்கலாம். ஆனால் இந்த கோணத்தில் யோசிப்பதில் விசாரிப்பதில் ஒரு பாதகமுமில்லை. அப்படியாரும் இருப்பின் அவர்களையும் தண்டிக்கலாம் இல்லை என்றால் இந்த 10 பேருடன் நிறுத்தலாம். அவ்வளவே.

 

இந்த பத்து பேரையும் கூட  இங்கு தொடர்ந்து மக்களால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என எழுதிவருகின்றேன்

காரணம் நிரூபிக்கும்வரை அவர்களை குற்றவாளிகள் என சொல்லமுடியாது

 

ஆனால் இதை நிரூபிக்கக்கூடியவகையில் ஆதாரங்கள் இருப்பதாக சொல்பவர்களுக்கு களம் கொடுக்கப்படவேண்டும். அதற்கு அமைதி ஏற்பட்டு குற்றம் சுமத்திப்பட்டவர்கள் நீதிக்கு முன்கொண்டுவரப்படணும்.  அதன் மூலமே உண்மையான குற்றவாளிகளும் அதற்கு உடந்தையானவர்களும்

அவர்கள் எதற்காக உடந்தையாக இருந்தார்கள் என்பதும் தெரியவரும்

வரணும்

  • கருத்துக்கள உறவுகள்

1. முன்னர் வழக்குகளில்.. மதுபோதையில் இருந்தோர் செய்த குற்றங்கள்.. தண்டனைக் குறைப்போடு விடுவிக்கப்பட்ட வழக்குகள் உள்ளன தானே.

 

Six soldiers were yesterday remanded by the Killinochchi Magistrate P. Sivakumar in connection with the alleged gang-rape of a young mother, police said.

According to police the suspects who were under the influence of liquor had repeatedly raped the woman in an abandoned house at ‘Rad Barna’ village in Viswamadu.

They were later arrested by the Military Police following a complaint by the victim.

 

Courtesy: Times Online

 

http://www.lankasrinews.com/view.php?2b34OXl4a4cp54Y34aeIAQU0e23mYBBdcd3BdmA3e0dU0Mmece04cYB52cda3lmO30

 

இவர்கள் பெற்ற தண்டனை என்ன..??! 2010 இல் நடந்தது.. இவர்களுக்கு இப்ப என்ன நடந்தது..??!

 

2. சிறீலங்கா பொலிஸ் ஸ்கொட்லாண்ட் யார்ட்டிடம் பயிற்சி எடுக்குது.. பெற்ற பயிற்சிக்கு ஏற்ப.. கடமையை செய்வதில் மட்டும் அதனை கடைப்பிடிக்க என்ன பிரச்சனை.

 

3. இனவாதம் என்பதிலும்.. சிறீலங்கா அரச அசட்டையீனமும் இதில் உள்ளது என்பது தான் வாதம். அதில் தமிழினத்தின் மீதான மாற்றான் தாய் மனப்பான்மையும்.. கூடி நின்று கூத்தடிக்கிறது.. என்பது தான் நியாயம். யதார்த்தம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுவிசிலிருந்து சென்றவர்,

சட்டத்தரணிக்கு 40 லட்சம்,

பத்துப் பேர், இதில் சம்பந்தம்,

காவல் துறையின் தாமத நடவடிக்கை,

"ஹெல்மெட் குறூப்". கல்லெறி கோஷ்டி....

எண்டு.... பார்க்கும் போது, சந்தேகம் ஏற்படத்தான் செய்கின்றது. :( 

 

 

இந்த 40 லட்ச விவகாரம் வெறும் குற்றச்சாட்டு மட்டுமே

சாதாரணமாகவே வெளிநாட்டுக்காறனுக்கு சாதகமாக இருந்து விட்டால் அள்ளி எறிந்திருப்பார்கள் என்று தான் தாயகத்தில் ஒரு மனநிலை இருக்கிறது. புலம் பெயர்ந்தவன் எல்லோரும் கோடீசுவரர்களாக உள்ளதாக ஒரு நினைப்பு அங்கு. ஆனால் நிஐம் வேறல்லவா.

 

தனிப்பட்ட முறையில் விரி தமிழ் மாறனுக்கு 40 லட்சம் வெறும் தூசு.

அத்துடன் அவரது பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் இதுவரை காசுக்கு விலை போனதாக தகவலில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1) எனக்குத்தெரிய எந்த குற்றவாளிக்கும் போதையில் செய்தார் என தண்டனை குறப்பதில்லை. வேணுமெண்டால் கூட்டுவார்கள் ( சில நாடுகளில்).

அநேகமாக 50 % மேற்பட்ட வன்புணர்வு வழக்குகளில் ஏதோ வகையில் போதை சம்பந்தப் பட்டிருக்கும். அவர்கள் எல்லோருக்கும் தண்டனை குறைப்பா செய்கிறார்கள். நீங்கள் மேலே சொன்னதில் ஆமிக்காரர் குடித்துருந்தார்கள் என இருக்கிறதே தவிர அதுக்காக விலக்கு/ தண்டனை குறைப்பு அளிக்கப் பட்டதாய் இல்லை. வழக்குக்கு என்ன நடந்தது எனத்தெரியாது. ராணுவ வீரர்கள் சம்பந்தமான எந்த வழக்கில்தான் தீர்ப்பு வந்துள்ளது ? அப்படி இருக்கு இலங்கையின் நீதித்துறை, சட்டம் ஒழுங்கு.

2) ஸ்கொடாண்ட் யார்ட் பயிற்சி என்ன சாண்ட்ஹேர்ஸ்டில் பயிற்சி பெற்ற ராணுவ அதிகாரிகளே யுத்த குற்றம் செய்தார்களே?

3) இனவாதம் இலங்கையில் தலைவிரித்தாடுவது மறுப்பதற்கில்லை. ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும் அதனூடுதான் பார்கவேண்டுமா என்பதே என் கேள்வி.

  • கருத்துக்கள உறவுகள்

நீதி சரியா இல்லை. பொலிஸ் சரியா இல்லை. இராணுவம் சரியா இல்லை. ஆட்சியாளர்கள் சரியா இல்லை. சட்ட அமுலாக்கம் சரியா இல்லை. அப்படி என்றால்.. உலக அரங்கில் சிறீலங்கா தோல்வி அடைந்த நாடு என்று அறிவித்து.. சர்வதே நேரடிக் கண்காணிப்பின் கீழ் ஐநா படைத்துறை நிர்வாகத்தின் கீழ் அதனைக் கொண்டு வர உதவ வேண்டும். அதன் கீழ் தமிழ் மக்களுக்கு தோல்வி அடைந்த நாட்டில் இருந்து சலக உரிமையோடு விலகிச் சென்று தனிநாடு அமைக்க சர்வதேசம் சகல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

 

இப்படியே காலம் காலமா சொல்லிக்கிட்டு குற்றங்களும் சாவுகளும் எம் மக்களை அழிக்க அனுமதிக்க முடியாது தானே. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தோல்வி அடைந்த நாடு எனும் நிலைக்கு வர இன்னும் பலபடி கீழே போக வேண்டி இருக்கு ( சோமாலியாவைக்கூட இன்னும் அப்படி சொல்வதில்லை). ஆனால் இலங்கை வெற்றியடைந்த நாடுமில்லை. ஒரு நடுத்தர நாடு. பாகிஸ்தான், ஆப்கான், எரித்திரியா, சூடான் இப்படி.

தவிரவும் ஒரு நாட்டை தோல்வி அடைந்த நாடு எனகூறி இன்னொரு நாடு தலையிட சர்வதேச சட்டத்தில் இடமில்லை. Right to protect எனும் doctrine அடிப்படையில் கொசோவோ வில் தலையிட்டது போல் தலையிடலாம்.

ஆனால் முள்ளிவாய்காலிலேயே தலையிடதோர் இப்போவா தலையிடுவர்? இலங்கையில் தலையிடும் புவிசார் நலன் யாருக்கும் இல்லை. தலையிடாமலே காரியம் சாதிக்கிறார்கள்.

தலையிட்டாலும் தனிநாடு பிரித்து கொடுக்கப்போவதில்லை.

உலக நடைமுறைகளும், சர்வதேச சட்டங்களும் நீதி, அறம் பால் அமைபவை அல்ல. அவற்றின் மூலநாதமே நாடுகளின் சுயநல நலன்களே.

இதுகுள்ளாளதான் எம் அரசியல் போராட்டத்தை நாம் நகர்த்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றமிழைத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். தாயக மக்கள் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்க முதல் மயூரன் விடயத்தpல் மரண தண்டனை கூடாது என்று வாதிட்ட நாம் இன்று மரண தண்டனையைi ஆதரவளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் .குற்றவாளிகள் செய்திருப்பது. மிகக் கொடிய செயல்.அதுவும் பள்ளி மாணவியை பாடசாலைச் சீருடையில் கடத்திச் சென்று பலர் கூட்டு வன்புணர்வு செய்து கொலை செய்திருக்கிறார்கள்.இதற்கு மரண தண்டனையே வேண்டும் என தாயக மக்களின் பேராட்டங்களில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. மரண தண்டனை கொடுக்கப்படும் போது மிகக் கவனமாக ஆராய்ந்து தண்டனை கொடுக்கப்பட வேண்டும்.சந்தேக நபர்கள் எல்லோரும் குற்றச் செயல்களுடன் நேரடியாகச் சம்பந்தப்படிருந்தார்களா என்பதைச் சொல்ல பாதிக்கப்பட்ட சாட்சி உயிரோடு இல்லை.மது போதையில் இருந்த படியால் குற்றஞ் செய்தார்கள் என்ற வாதம் எடுபட்டு தணைடனைக் குறைப்பு நிகழக் கூடாது. அவ்வாறு நிகழுமாயின் நாடு முழுவதும் மதுபாவனைக்கு தடை என்ற சட்டம் இருந்தால் மட்டுமே அப்படிச் செய்யலாம்.மேலும் இந்த பிரச்சனையுடன் சில இராணுவப் புலனாய்வாளரகளும் ஊடுருவி நீதி மன்றத்துக் கு கல்லெறிவதன் மூலமும்இ பெhதுச் சொத்தை நாசமாக்குவதன் மூலமும் அரசாங்கத்திற்கே ஆதாயம் இருக்கின்றது. யாழில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி இராணுவப் பிரசன்னத்தை தொடர்ந்து வைத்திருக்கலாம்.இராணுவப் புலனாய்வாளர்கள் அரசின் அனுமதியோடு செயற்படுபவர்கள். வழக்கைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள.மேலும் குற்றஞ் சாட்டப்பட்ட சுவிஸ் குமார் என்பவரையும் சுவிசில் இருக்கும் வேறு ஒருவரையும் இணைத்து கதைகள் பின்னப்பட்டு குழப்பியடிக்கப்படுகின்றது. இதற்குள் பலரும் மதிக்கும் தமிழ்மாறனும் தலையிட்டு சிக்கலைப் பெரிதாக்கியுள்ளார். அவரைப்பற்றி ஊடகங்களிலும் முகப்புத்தகத்திலும் பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்புடும் போது அவர் மௌனமாக இருப்புது புரியவில்லை. ஊடகங்களில் கட்டுரைகளை எழுதிக் குவிக்கும் அவருக்கு ஒரு மறுப்பறிக்கை கொடுக்க நேரமில்லையா? அவரின் மௌனம் குற்றவாளிகளுக்கு உதவிகிறார் என்பதையே உறுதியாக்கிறது.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச் சூழலில் சிறீலங்காவை அதன் ஆட்சியாளர்கள் வைச்சிருந்தாலும்.. தமிழ் மக்கள் தங்கள் நியாயத்தை.. தமக்கு நிகழும் அநியாயங்களை.. சர்வதேசம் அறிய எடுத்து வைத்து நீதி கேட்பதும் கூட தமிழ் மக்களின் வாழ்வியலை இலங்கைத் தீவில் சற்றேனும் பாதுகாக்க உதவும்.

 

சிங்களத்துக்கு நோகும் என்று அதன்.. சிங்களத்தின் வாலைப் பிடிச்சுக்கிட்டு நின்றால்.. அதோ கதிதான். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பை காரணம் காட்டி வழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றும் யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வழக்காளிகள் சலிப்பு, அலைச்சல் மூலம் வழக்கை  கைவிட வைக்கலாம். இது போன்ற நடவடிக்கைகள் சதேகத்தை எழ வைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்ம்...நான் வவுனியாவுக்கு என்று எதிர்வு கூறினேன்....அவர்கள் இன்னும் கொஞ்சம் அங்கால போய் கேக்கிறாங்கள்.

....................................உங்களிடம் உங்கள் சொந்த நாட்டுக் கடவுச் சீட்டு இருத்தால் நீங்கள் அகதிக்கோரிக்கையை வைத்த நாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும். இதைவிட கொடுமையான குற்றம் வேறு வேறு பெயர்களில் கடவுச் சீட்டு வைத்திருந்து பயணித்தல்.விரைவில் மேற்குலகம் பலரை கைது செய்து அவரவர் நாடுகளுக்கு திருப்பி அனுப்பவும் தண்டனைகள் வழங்கவும் பெருமெடுப்பிலான முயற்சிகளை மேற் கொண்டுள்ளதுடன் விரைவில் இது சம்பந்தமான தகவல்களை பொது மக்களிடமும் திரட்டவிருக்கின்றது. .............................................

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் எனக்கு சில டவுட்டு 
இந்த வழக்கு இலங்கை சட்ட திட்டத்திற்கு உட்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் தானே நடக்கும் ....?
நமக்கு சட்ட அறிவெல்லாம் சைபர் ....ஒருவேளை இந்த வழக்கு ஐந்து மாசம் இழுத்தால் ....அப்படியே ஐந்து வருடம் இழுத்தால் ...அதுக்கு மேல போய் அம்பது வருடம் இழுத்தால் ....தீர்ப்புதானே வழங்கிட்டாப்போச்சு ....எவ்வளவு தீர்ப்பு வழங்கிட்டோம் இது என்ன பிசாத்து மேட்டர் 

 

ஆனால் எனக்கு சில டவுட்டு

இந்த வழக்கு இலங்கை சட்ட திட்டத்திற்கு உட்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் தானே நடக்கும் ....?

நமக்கு சட்ட அறிவெல்லாம் சைபர் ....ஒருவேளை இந்த வழக்கு ஐந்து மாசம் இழுத்தால் ....அப்படியே ஐந்து வருடம் இழுத்தால் ...அதுக்கு மேல போய் அம்பது வருடம் இழுத்தால் ....தீர்ப்புதானே வழங்கிட்டாப்போச்சு ....எவ்வளவு தீர்ப்பு வழங்கிட்டோம் இது என்ன பிசாத்து மேட்டர்

இல்லை இப்ப சம் சும் வந்து இலங்கையின் நீதி துறையை பத்தரமாத்து தங்கங்களாக மாற்றிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.