Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழங்களின் தூய தமிழ் பெயர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
APPLE - குமளிப்பழம்,அரத்திப்பழம்
APRICOT - சர்க்கரை பாதாமி
AVOCADO - வெண்ணைப் பழம்,ஆணை கொய்யா
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம்
CARAMBOLA - விளிம்பிப்பழம்
CASHEWFRUIT - முந்திரிப்பழம்
CHERRY - சேலா(ப்பழம்)
CHICKOO - சீமையிலுப்பை
CITRON - கடாரநாரத்தை
CITRUS AURANTIFOLIA - நாரத்தை
CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்
CITRUS MEDICA - கடரநாரத்தை
CITRUS RETICULATA - கமலாப்பழம்
CITRUS SINENSIS - சாத்துக்கொடி
CRANBERRY - குருதிநெல்லி
CUCUMUS TRIGONUS - கெச்சி
CUSTARD APPLE - சீத்தாப்பழம்
DEVIL FIG - பேயத்தி
DURIAN - முள்நாரிப்பழம்
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
GOOSEBERRY - நெல்லிக்காய்
GRAPE - கொடிமுந்திரி, திராட்சைப்பழம்
GRAPEFRUIT - பம்பரமாசு
GUAVA - கொய்யாப்பழம்
HANEPOOT - அரபுக் கொடிமுந்திரி
HARFAROWRIE - அரைநெல்லி
JACKFRUIT - பலாப்பழம்
JAMBU FRUIT - நாவல்பழம்
JAMUN FRUIT - நாகப்பழம்
KIWI - பசலிப்பழம்
LYCHEE - விளச்சிப்பழம்
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
ORANGE - தோடைப்பழம், நரந்தம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
PAIR - பேரிக்காய்
PAPAYA - பப்பாளி
PASSIONFRUIT - கொடித்தோடைப்பழம்
PEACH - குழிப்பேரி
PERSIMMON - சீமைப் பனிச்சை
PHYLLANTHUS DISTICHUS - அரைநெல்லி
PINEAPPLE-அன்னாசிப்பழம்
PLUM - ஆல்பக்கோடா
POMELO - பம்பரமாசு
PRUNE - உலர்த்தியப் பழம்
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RAISIN - உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை
RASPBERRY - புற்றுப்பழம்
RED BANANA - செவ்வாழைப்பழம்
RED CURRANT - செந்திராட்சை, செங்கொடிமுந்திரி
SAPODILLA - சீமையிலுப்பை
STAR-FRUIT - விளிம்பிப்பழம்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
SWEET SOP - சீத்தாப்பழம்
TAMARILLO - குறுந்தக்காளி
TANGERINE - தேனரந்தம்பழம்
UGLI FRUIT - முரட்டுத் தோடை
WATERMELON - குமட்டிப்பழம், தர்பூசணி
WOOD APPLE – விளாம்பழம்
 
நன்றி முகனூல்
 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழில் இவ்வளவு கனிகள் இருந்தாலும் மல்கோவா மாங்கனிகளின் சுவையே தனி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறுக்காலைபோவார் பனம்பழத்தை மறந்திட்டாங்கள்..... ஐ மீன் பனங்காய்  :lol:

தமிழில் இவ்வளவு கனிகள் இருந்தாலும் மல்கோவா மாங்கனிகளின் சுவையே தனி!

இது கமலாப் பழத்தை காயாக சாப்பிடா தவர்களின் கருத்து :D

  • கருத்துக்கள உறவுகள்

இது கமலாப் பழத்தை காயாக சாப்பிடா தவர்களின் கருத்து :D

இது கொய்யாப் பழம் சாப்பிடாதவர்களின் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லிர் இப்படி அபத்தங்களை உருவாக்குவது.  இங்கு குறிப்பிட்ட பல பழங்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லை, 

கலைசொல் ஆக்கம் அல்லதி திசைச் சொற்களை இணைத்துக்கொள்ளுவது தமிழுக்கு வளக்கம்தான்.  உருளைக் கிளங்கு மிழகாய் போன்றவை நம்முன்னோர் ஆக்கிய கலைச்சொற்கள்தான். 

STRAWBERRY - செம்புற்றுப்பழம் போன்ற அபத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிரொபெறி என்றுதான் அழைப்பேன். இந்த விடயங்கல்தொடர்பாக நிறைய விவாதங்கள் தேவை.

வன்னியில் புதிய நாட்காட்டியில் வெளிவந்தபோது தேவநேயப்பாவாணரை அடியொற்றி சனிக்கிளமைக்கு காரி என்பதுபோன்ற பதங்கள் பயன்பட்டுத்தப் பட்டிருந்தது.  நான் நடைமுறைத் தமிழ் வளக்கில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.என்னுடைய ஆட்ச்சேபனையை பதிவு செய்தேன். தேவநேபாவாணர் மிகவும் முக்கியமானவர்தான். ஆனாலும் கடவுள் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

STRAWBERRY - செம்புற்றுப்பழம் போன்ற அபத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிரொபெறி என்றுதான் அழைப்பேன். இந்த விடயங்கல்தொடர்பாக நிறைய விவாதங்கள் தேவை.

 

strawberry.jpg

STRAWBERRY ஐ....  "வைக்கோல் பழம்" என்று அழைத்தால், நன்றாக இருக்குமே. :)

  • கருத்துக்கள உறவுகள்

இலந்தைப் பழமும் இங்கில்லை...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஒர் சந்தேகம். யாரும் தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.
 
1. அத்திப்பழமா அல்லது அத்திக்காய் என்பது சரியா?
 
2. "அத்திப்பூ பூத்தால் போல் என்கின்றேமே", அப்படியானால் அத்திப்பூ எப்போதாவதுதான் பூக்குமா? சராச‌ரியாக எத்தனை வருடத்திற்கு ஒருமுறை இது பூக்கும்? 
 
3. மேலும் இது சாப்பிடக்கூடிய ஒர் பழமா/காயா?
 
யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.
  • கருத்துக்கள உறவுகள்

1) காய் ஆக இருக்கும் போது காய். பழுத்த பின் பழம்?

2) நான் கேள்விப்பட்டது அப்படித்தான். அருமையாக தான் அத்தி பூக்குமாம்.

3) ஆம்

http://ta.m.wikipedia.org/wiki/அத்தி_%28தாவரம்%29

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் சொல்வது மிகவும் சரி. ஏற்கனே தமிழ் பெயர் உள்ளவற்றை தவிர ஏனையதை அப்படியே பாவிக்கலாம்.

உதாரணம் ஐஸ் கிரீம். குளிர் களி என்று ஏன் காமெடி பண்ணனும்.

இதில் ஆங்கிலேயன் கெட்டிக்காரன். கட்டமரான் (கட்டுமரம்), அனிகட் (அணைக்கட்டு), மிளகுடன்னி (மிளகுதண்ணி) என அப்படியே தன் மொழியில் சேர்த்து விடுவான். ஆங்கிலத்தில் 80% ற்கு மேல் திசைச்சொற்களே. சிங்களவரும் அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்

tomaten800.jpg.2388355.jpg

 

"ரொமாற்ரோ"... என்ற இந்தப் பழத்தின், தமிழ் பெயரையும்.... அங்கு காணவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் சொல்வது மிகவும் சரி. ஏற்கனே தமிழ் பெயர் உள்ளவற்றை தவிர ஏனையதை அப்படியே பாவிக்கலாம்.

உதாரணம் ஐஸ் கிரீம். குளிர் களி என்று ஏன் காமெடி பண்ணனும்.

இதில் ஆங்கிலேயன் கெட்டிக்காரன். கட்டமரான் (கட்டுமரம்), அனிகட் (அணைக்கட்டு), மிளகுடன்னி (மிளகுதண்ணி) என அப்படியே தன் மொழியில் சேர்த்து விடுவான். ஆங்கிலத்தில் 80% ற்கு மேல் திசைச்சொற்களே. சிங்களவரும் அப்படியே.

 

எல்லாவற்றையும்....அப்பிடியே.... பாவித்தததால் தான்.

தமிழ் நாட்டுக்காரர் கதைப்பது... தமிழா, ஆங்கிலமா,

அல்லது... ஏதாவது வேறு மொழி கதைக்கிறார்களா... என்று, குழப்பாமாய் இருக்கு.

 

தமிழ் உலகின் மூத்த மொழி. அது தனது..... "ஒரிஜினல்" தன்மையை.. என்றும் இழக்கக் கூடாது.

அதற்க்காகத்தான்....  புலிகள், "ஐஸ் கிறீமை" .... "குளிர் களி" என்று குறிப்பிட்டார்கள். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நன்றி கோஷன், சில பழங்களின் பெயர்கள் சிங்களத்தில் தெரியும், கொழும்பு வழக்கில் வித்தியாசாமாக இவற்றை அழைப்போம். தெரிந்தால் தமிழில் இவற்றிற்கு என்ன பேர் என அறியத்தரவும்.
 
1. ஜம்புக்காய்
2. கட்டுக்குறிக்ஞான்
3. கடுகுடா
3. கல்சியம்பளா
5. மோர
4. பினிஜம்பு
6. லோவிக்காய் (சிகப்பு நிற பழம், புளிப்பு  உப்புடன் சாப்பிடுவோம்) 
7.வெறளிக்காய்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் - ஜம்புவை யாழிலும் ஜம்பு என்றே அழைப்போம். சியம்பலா - பட்டுப்புளி என்று நியாபகம். பினி ஜம்புதான் ஜாம் பழமோ?

மற்றயவை பற்றித் தெரியவில்லை.

சிறி,

தமிழ்நாட்டினரை போல் தமிழில் பெயர் உள்ளதையும் ஆங்கிலத்தில் சொல்லுமாறு நான் சொல்லவில்லை. ஐஸ் கிரீம் போன்ற எம் கலாச்சாரத்துக்கு புதியனவற்றை அப்படியே அழைக்கலாம் என்கிறேன்.

BLACKBERRY - நாகப்பழம்

BLUEBERRY - அவுரிநெல்லிர் இப்படி அபத்தங்களை உருவாக்குவது.  இங்கு குறிப்பிட்ட பல பழங்கள் எங்கள் கலாச்சாரத்தில் இல்லை, 

கலைசொல் ஆக்கம் அல்லதி திசைச் சொற்களை இணைத்துக்கொள்ளுவது தமிழுக்கு வக்கம்தான்.  உருளைக் கிங்கு மிகாய் போன்றவை நம்முன்னோர் ஆக்கிய கலைச்சொற்கள்தான். 

STRAWBERRY - செம்புற்றுப்பழம் போன்ற அபத்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சிரொபெறி என்றுதான் அழைப்பேன். இந்த விடயங்கல்தொடர்பாக நிறைய விவாதங்கள் தேவை.

வன்னியில் புதிய நாட்காட்டியில் வெளிவந்தபோது தேவநேயப்பாவாணரை அடியொற்றி சனிக்கிமைக்கு காரி என்பதுபோன்ற பதங்கள் பயன்பட்டுத்தப் பட்டிருந்தது.  நான் நடைமுறைத் தமிழ் வக்கில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ளவில்லை.என்னுடைய ஆட்ச்சேபனையை பதிவு செய்தேன். தேவநேபாவாணர் மிகவும் முக்கியமானவர்தான். ஆனாலும் கடவுள் இல்லை. 

 

பொயட்
 
தயவு செய்து உங்கள் கருத்துக்களில் ல, ள, ழ பாவனையை கொஞ்சம் கருத்திலெடுத்தால் வாசிக்க நன்றாக இருக்கும். கணனி தப்பு பண்ணாது தவறு எம் அக்கறையின்மையே.
 
புலவராயிருந்தாலும் குற்றம் குற்றமே.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு தமிழர்கள்.... பெரியாரின் திராவிட "ஆனியன்" சாரி... வெங்காய கலாச்சாரத்தில் வளர்க்கப் பட்டதால்....
அவர்களும்... வாய்க்கு வந்தபடி... உளறிக் கொண்டு இருக்கிறார்கள். :D

Edited by தமிழ் சிறி

  • 2 months later...
எனக்கு ஒர் சந்தேகம். யாரும் தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.
 
1. அத்திப்பழமா அல்லது அத்திக்காய் என்பது சரியா?
 
2. "அத்திப்பூ பூத்தால் போல் என்கின்றேமே", அப்படியானால் அத்திப்பூ எப்போதாவதுதான் பூக்குமா? சராச‌ரியாக எத்தனை வருடத்திற்கு ஒருமுறை இது பூக்கும்? 
 
3. மேலும் இது சாப்பிடக்கூடிய ஒர் பழமா/காயா?
 
யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும்.

"அத்திப்பழம் சிவப்பா" என்றொரு பாடல் இருக்கின்றதல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.