Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் தலைவிரித்தாடும் பாலியல் குற்றங்கள் யார் பொறுப்போடு நடக்கவேண்டும்?

Featured Replies

 தற்போது கிறிஸ்பூதத்திற்கு பின்னரான மிகப்பெரும் சவாலக உருவெடுத்து ஆட்டிப்படைக்கும்  கொடுமையான விசயமாக இருப்பது இந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்கள்தான்.

“உடையவன் இல்லையேல் ஒரு முழம் கட்டை என்பது” தற்போது தமிழர் பகுதிகளிலும் இலங்கையின்  ஏனைய பகுதிகளிலும் நடந்தேறும் பாலியல் கொடுமைகளின் மூலம் வெளிப்படையாக காணமுடிகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் இருந்த சமூகமே தொடர்ந்து வாழ்கிறது விடுதலைப்புலிகள் இருந்தபோது வராத காமம் ஏன் இப்போது வருகிறது? 

மக்களின் சுதந்திரத்தையும் வாழ்வியல் போக்கையும் பாதிக்கும் சதியாக பெண்களின் உணர்வுகளை சீரளிக்கும் திட்டமிட்டசதியாக இது இடம்பெறுவதை யாவரும் உணர்ந்துவிட்டார்கள்.

கடந்த 4 மாதத்தில் மாத்திரம் 35 ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றங்கள் இடம்பெற்று இருக்கின்றது.
புங்குடுதீவில் ஒன்றுக்குபின் ஒன்றாக தொடர் குற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன – தமது அரசியல் பிழைப்பிற்காக மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொண்டு சமூகத்தையும் சீழிக்கின்ற சதிவேலைகளையும் அவற்றை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்ற நாசகார செயற்பாடுகளையும் உடனடியாக கட்டுப்பாட்டிற்குள்கொண்டுவரவேண்டும்.

இது தொடரும் பட்சத்தில் சமூகத்தையோ சமூக நல்நோக்கத்தையோ பின்னாளில் எதிர்பார்க்கமுடியாது போய்விடும்.

பெண்களை காம பொருளாக மாற்றுகின்ற கலாச்சாரம் திட்டமிட்டவகையில் பரப்பப்படுகின்றது. வித்தியா கொலை குற்றவாளிகளை தண்டிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே பாலியல் குற்றம் புரியப்படுகிறது இதற்கான துணிவு எங்கிருந்து வருகின்றது? இதன் பின்னணியில் யார் செயற்படுகின்றனர் இது திட்டமிட்ட செயல் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. 

சிறுமிகள் முதற்கொண்டு பாடசாலை மாணவிகள்வரை வயயோதிப பெண்கள் என்ற பேதம் இன்றி இந்த பாதகத்தை செய்ய யாரால் யார் தூண்டப்படுகிண்றார்கள்.

கிறிஸ்பூதம் போன்ற திட்டமிட்ட செயல் அன்றி இது வேறு எதுவாகவும் இருக்கமுடியாது.
பெண்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த தமது கைகளில் பாதுகாப்பு கருவிகளை சுமகவேண்டும் என்ற ஒரு தோற்றப்பாட்டை இந்த பாலியல் சம்பவங்கள் தோற்றுவித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

அரசும் அரசு சார்ந்தோரும் இதற்கு உடந்தையாக இருப்பதுபோல் ஒருதோற்றப்பாடு நிலவுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் இதை மக்கள் சார்பாக பார்க்கும்போது ஏற்றுக்கொள்ளவேண்டியதாகவே இருக்கின்றது.

எனவே காலம் தாழ்த்தாத தண்டனைகளும் உடனடி நடவடிக்கைகளும் இந்த பாலியல் குற்றம் புரிவோரின் விடயத்தில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகின்றேன்.

ச. சஜீவன்
துணைத்தவிசாளர் 
வலிவடக்கு, பிரதேசசபை
 http://www.pathivu.com/news/40474/57//d,article_full.aspx
 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த காலத்தில் மக்கள் மக்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடப் பயப்பட்டனர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் காமமும் காமுகர்களும் ஆங்காங்கே இருந்தது, இருந்தனர், அதாவது அவர்கள் திருந்தவில்லை பயத்தில் இருந்தனர். ஒரு சமூகம் தண்டனைக்குப் பயந்து தவறு செய்யாமலிருப்பதும் தாமாகவே திருந்தி ஒழுக்கமாக வாழ்வதும் இருவேறுபட்ட நிலைகள். இது புலிகள் காலத்தில் குற்றச்செயல்கள் குறைந்து இருந்தது ஆனால் குற்றவாளிகள் அடங்கிக்கொண்டு திருந்தாமல் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. இது புலிகளின் தவறல்ல. தற்போதைய நிலைமையை சமூகவிரோதிகள் இராணுவ உளவாளிகள் ஒட்டுக்குழுக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. புலிகள் இருந்திருந்தால் இப்போது நிலைமைவேறு!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த காலத்தில் மக்கள் மக்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடப் பயப்பட்டனர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் காமமும் காமுகர்களும் ஆங்காங்கே இருந்தது, இருந்தனர், அதாவது அவர்கள் திருந்தவில்லை பயத்தில் இருந்தனர். ஒரு சமூகம் தண்டனைக்குப் பயந்து தவறு செய்யாமலிருப்பதும் தாமாகவே திருந்தி ஒழுக்கமாக வாழ்வதும் இருவேறுபட்ட நிலைகள். இது புலிகள் காலத்தில் குற்றச்செயல்கள் குறைந்து இருந்தது ஆனால் குற்றவாளிகள் அடங்கிக்கொண்டு திருந்தாமல் இருந்தனர் என்பதைக் காட்டுகின்றது. இது புலிகளின் தவறல்ல. தற்போதைய நிலைமையை சமூகவிரோதிகள் இராணுவ உளவாளிகள் ஒட்டுக்குழுக்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. புலிகள் இருந்திருந்தால் இப்போது நிலைமைவேறு!

குற்றம் செய்விக்க ஊக்குவிக்க சொறிலங்கா போலிசுக்கு 6 வருடங்களுக்கு மேல் எடுத்துள்ளது................... :D 

இந்த 6 வருடங்களும் கஞ்சா,குடி வகைகள் என்பவற்றை தமிழ் மக்களுக்கு கொடுத்து கலச்சார அழிவுக்கு ஊன்றுகோல் இந்த சொறிலங்கா போலிஸ் .

குற்றம் செய்விக்க ஊக்குவிக்க சொறிலங்கா போலிசுக்கு 6 வருடங்களுக்கு மேல் எடுத்துள்ளது................... :D

இந்த 6 வருடங்களும் கஞ்சா,குடி வகைகள் என்பவற்றை தமிழ் மக்களுக்கு கொடுத்து கலச்சார அழிவுக்கு ஊன்றுகோல் இந்த சொறிலங்கா போலிஸ் .

 

இலங்கை பொலிஸ் இவற்றை கொடுத்தால் வாங்கி குடிக்கும், பாவிக்கும் எமது தாயகத்து இளைஞர்களிற்கு தலைக்குள் எதுவுமே இல்லை என்கிறீர்களா?
 
 
 இப்பிரச்சனையானது இன்று உலகலாவிய விதத்தில் முக்கியமானது. இதில் தாயகத்தில்தான் இப்படி நடக்கிறது என்ற உங்கள் வாதம் அர்த்தமற்றது. தாயகத்திலும் உள்ளதுதான் ஆனால் இதற்காக இலங்கை பொலிஸ் இவற்றை கொடுக்கிறார்கள் என்று எழுதுவது எல்லாம் ரொம்ப ஓவர். இதற்கான காரணங்கள் பல அதற்குள் முக்கியமானது உழைக்காமல் வரும் பணம்.
 
விட்டால் தாயகத்தில் நடக்கும் குற்றச் செயல்களிற்கெல்லாம் இலங்கை அரசும் அதன் பொலிசும்தான் காரணம் என்பீர்கள் போல.
 
கொஞ்சம் நீங்கள் இருக்கும் நாட்டின் பத்திரிகைகளையாவது வாசியுங்கள். பிரச்சனைகள் தாயகத்திற்கானது மட்டுமில்லை என்று புரியும்.
 
தாயகத்திலும் இவை அகற்றப்பட வேண்டியவையே. யாழில் பேர்போன இந்துக்கல்லூரி முதலிடம். யதார்த்தமாகவும் ஆரோக்கியமாகவும் கருத்திடலாமே. வெறுமனே மற்றவர்கள் மீது பழி சொல்வது இலகு ஆனால் நடக்கப்போவது எதுவுமில்லை.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 

இலங்கை பொலிஸ் இவற்றை கொடுத்தால் வாங்கி குடிக்கும், பாவிக்கும் எமது தாயகத்து இளைஞர்களிற்கு தலைக்குள் எதுவுமே இல்லை என்கிறீர்களா?

 

நடப்பவற்றை பார்த்தால் ஆதாரங்கள் அப்படித்தான் சொல்கின்றன.
 
 

. இதற்கான காரணங்கள் பல அதற்குள் முக்கியமானது உழைக்காமல் வரும் பணம்.

 

 

இந்த பணத்தை பயனுள்ள வகையில் வழிப்படுத்த மாகாண சபை நிறையவே செய்யலாம்.

வரும் பணத்துக்கு அபரிதமான வரியை விதித்து அந்த வரியில் வேலைவாய்ப்பு வழங்கலாம். ஆனால் பின்வரும் காரணங்களுக்கு வரும் பணத்துக்கு வரிவிலக்கு வழங்கலாம்:

  1. முதியவர்களை பராமரித்தல்.
  2. பதியப்பட்ட வணிகத்துக்கு முதலீடு.
  3. அனாதை சிறார்கள்  ஊனமுற்றவர்களுக்கு வரும் பணம்.
  4. கல்வி செலவுக்கு நேரடியாக பாடசாலைக்கு அனுப்பப்படும் பணம்.
  5. மருத்துவ செலவுக்கு வரும் பணம்.

 

வேறு எவற்றுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுத் தலைமை.. சிங்களப் படை காவல்துறை தரப்பின்.. மாற்றான் தாய் மனப்பான்மை.. பேரினவாதச் சிந்தனைகள்  தான் முக்கிய காரணம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசுத் தலைமை.. சிங்களப் படை காவல்துறை தரப்பின்.. மாற்றான் தாய் மனப்பான்மை.. பேரினவாதச் சிந்தனைகள்  தான் முக்கிய காரணம். :icon_idea:

  1.  இதை எப்படி மாற்ற போகிறீர்கள்?
  2. அதற்கு  எத்தனை வருடங்கள் எடுக்கும்?
  3. அது வரை எத்தனை வித்யாக்களை பலி கொடுக்க தயாராக இருக்கிறீர்கள்?

இந்த பணத்தை பயனுள்ள வகையில் வழிப்படுத்த மாகாண சபை நிறையவே செய்யலாம்.

வரும் பணத்துக்கு அபரிதமான வரியை விதித்து அந்த வரியில் வேலைவாய்ப்பு வழங்கலாம். ஆனால் பின்வரும் காரணங்களுக்கு வரும் பணத்துக்கு வரிவிலக்கு வழங்கலாம்:

  1. முதியவர்களை பராமரித்தல்.
  2. பதியப்பட்ட வணிகத்துக்கு முதலீடு.
  3. அனாதை சிறார்கள்  ஊனமுற்றவர்களுக்கு வரும் பணம்.
  4. கல்வி செலவுக்கு நேரடியாக பாடசாலைக்கு அனுப்பப்படும் பணம்.
  5. மருத்துவ செலவுக்கு வரும் பணம்.

 

வேறு எவற்றுக்கு வரிவிலக்கு வழங்க வேண்டிய தேவை இருக்கிறது?

 

நீங்க வேற,

 

வெளிநாட்டு பணத்தில கைவச்சா விக்கியாரே வெளியேற்றப்படும் நிலைதான் அங்கிருக்கு.

 

இருந்தாலும் உங்க டீல் எனக்கு புடிச்சிருக்கு.

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

 

  1.  இதை எப்படி மாற்ற போகிறீர்கள்?
  2. அதற்கு  எத்தனை வருடங்கள் எடுக்கும்?
  3. அது வரை எத்தனை வித்யாக்களை பலி கொடுக்க தயாராக இருக்கிறீர்கள்?

 

 

இதனை மாற்ற சிங்களவனின் காலில் போய் விழுந்து பிரயோசனம் இல்லை.

 

எத்தனை வருடங்கள் என்பதல்ல.. சாத்தியமான விரைவில் இவை சர்வதேச மயப்படுத்தப்பட்டு.. சர்வதேச அழுத்தங்களூடு.. தமிழ் மக்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி இலங்கைத் தீவை ஆளுபவர்கள் நிர்ப்பந்தித்தால் மட்டும் தான் விடிவு.. முடிவு வரும்.

 

வித்தியாவுக்கு முதல் பல்லாயிரம் வித்தியாக்களை பலிகொடுத்தும்.. அவர்களைப் பலியெடுத்த சிங்களத்தின் வல்லாதிக்க சக்திகளின் காலில் போய் விழுந்து மண்டியிடக் கேட்பது.. இன்னும் வித்தியாக்களை உருவாக்குமே தவிர தவிர்க்காது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வருடங்கள் என்பதல்ல.. சாத்தியமான விரைவில் இவை சர்வதேச மயப்படுத்தப்பட்டு.. 

 

இலங்கை தமிழரின் நிலை இன்னமும் சர்வதேச மயப்படவில்லை என்றா நீங்கள் கருதுகிறீர்கள்?

 

 

 சர்வதேச அழுத்தங்களூடு.. தமிழ் மக்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி இலங்கைத் தீவை ஆளுபவர்கள் நிர்ப்பந்தித்தால் மட்டும் தான் விடிவு.. முடிவு வரும்.

 

தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் தீர்வு தான் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு சிறப்பான தீர்வு என்ற கருத்து தவறானது. மக்கள் தமது முன்னைய தலைவர்கள் தமக்கு தர முனைந்த தீர்வை சிறப்பான தீர்வு என்று நினைக்க கூடும். ஆனால் அந்த தீர்வே தமிழ் மக்களின் பெரும் தொகையானோர் அழிய காரணமானது. தமிழீழ விடுதலை போருக்கு முன் இனக்கலவரங்களில் கொல்லப்பட்ட மக்கள் தொகையிலும்  தமிழீழ போரில் இறந்த மக்கள் தொகை மிகப் பல மடங்கானது. மக்கள் தமது தமிழ் பிரதேசங்களிலேயே சொத்துக்களை இழந்து அகதிகளானதும் தமிழீழ போரின் காரணமாகவே.

 

தமிழீழத்துக்காக சர்வதேச அழுத்தங்களை இத்தனை வருடங்கள் தேடியும் எந்த ஒரு நாடும் கூட அதை தர தயாராக இல்லை. அதற்கு சர்வதேச அரசியலோ பொருளாதாரமோ ஆதரவாகவும் இல்லை. ஆகவே தமிழ் மக்கள் விரும்பும் (அல்லது முன்னர் விரும்பிய) அரசியல் தீர்விலும் பார்க்க தமிழ் மக்களுக்கு அங்கு பாதுகாப்பை தரக்கூடிய அரசியல் தீர்வை தேடுவதே பொருத்தமானது. மக்கள் பெருமளவில் வாக்களித்து தெரிவு செய்த இன்றைய தலைவர்களும் அதையே தேடுகிறார்கள்.

 

 

வித்தியாவுக்கு முதல் பல்லாயிரம் வித்தியாக்களை பலிகொடுத்தும்.. அவர்களைப் பலியெடுத்த சிங்களத்தின் வல்லாதிக்க சக்திகளின் காலில் போய் விழுந்து மண்டியிடக் கேட்பது.. இன்னும் வித்தியாக்களை உருவாக்குமே தவிர தவிர்க்காது.  :icon_idea:

 

நீங்கள் டகிலஸ் தேவானந்தா மற்றும் கருணா போன்றவர்கள் மகிந்த இராஜபக்ச காலத்தில் இப்படி காலில் போய் விழுந்து மண்டியிடக் கேட்பது என்று கூறியிருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். வட கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ எதிர்ப்புக்கு மத்தியில் இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களித்து அவரை பதவிக்கு கொண்டு வந்தார்கள்.  மகிந்த இராஜபக்சவும் வட கிழக்கு முதலமைச்சரும் திரும்ப திரும்ப அரசுக்கு இதை நினைவுறுத்தி வருகிறார்கள்.

 

இன்று தமிழ் மக்கள் நினைத்தால் அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை மாற்ற முடியும். இதற்கும் மேலாக சர்வதேச அரசியலும் தமிழ் மக்களுக்கு ஆதரவான நெருக்குதலை ஒரு பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கொடுத்து வருகிறது. ஆனால் எந்த அரசும் தமிழீழத்துக்கு ஆதரவில்லை. ஆகவே தமிழ் மக்கள் சிங்களத்தின் வல்லாதிக்க சக்திகளின் காலில் போய் விழுந்து மண்டியிடக் கேட்பது என்ற கருத்து இன்றைக்கு பொருத்தமானது அல்ல.

 

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு உள்ள நிருவாக கட்டமைப்பு இன்னமும் உருவாகவில்லை என்பதே உண்மையானது. அதற்கு தமிழ் மக்களே நிறைய செய்ய முடியும். மாகாண சபை செய்ய முடியும். புலம்பெயர்ந்தவர்களின் பணம் அங்கு ஒரு காடையர் சமுதாயத்தையும் போதைப்பொருள் பாவனையையும் அதிகரிக்கின்றது என்பதை எந்த ஒரு சமூகவியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார். ஆகவே இந்த அழிவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு பெருமளவில் காரணமாகிறது. இது எமது மக்களாலேயே கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட முடியும்.

 

 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

மாகாண சபைக்கு நீங்கள் சொல்லும் வரி விதிக்கும் அதிகாரமில்லை.

தவிரவும் போகும் பணம் முக்காவாசி போறது சட்டத்துக்கு தெரிந்தல்ல.

தவிர 100 க்கு 20 வரி எண்டால் 120 அனுப்புங்கோ என கேட்பர் அங்கே இருக்கும் மைனர் குஞ்சுகள்.

ஒரே தீர்வு - புலம் பெயர் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு அனுப்பாமல். தேவையான காரணங்களுக்கு, தேவையான அளவை மட்டும் அனுப்புதல் மட்டுமே.

 

 ஆகவே தமிழ் மக்கள் விரும்பும் (அல்லது முன்னர் விரும்பிய) அரசியல் தீர்விலும் பார்க்க தமிழ் மக்களுக்கு அங்கு பாதுகாப்பை தரக்கூடிய அரசியல் தீர்வை தேடுவதே பொருத்தமானது. மக்கள் பெருமளவில் வாக்களித்து தெரிவு செய்த இன்றைய தலைவர்களும் அதையே தேடுகிறார்கள்.

 

தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு உள்ள நிருவாக கட்டமைப்பு இன்னமும் உருவாகவில்லை என்பதே உண்மையானது. அதற்கு தமிழ் மக்களே நிறைய செய்ய முடியும். மாகாண சபை செய்ய முடியும். புலம்பெயர்ந்தவர்களின் பணம் அங்கு ஒரு காடையர் சமுதாயத்தையும் போதைப்பொருள் பாவனையையும் அதிகரிக்கின்றது என்பதை எந்த ஒரு சமூகவியல் ஆய்வாளரும் மறுக்க மாட்டார். ஆகவே இந்த அழிவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு பெருமளவில் காரணமாகிறது. இது எமது மக்களாலேயே கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட முடியும்.

 

 

 

 

நன்றி ஜூட்
 
உங்கள் பதிவு ஆழமான எதிர்காலம் பற்றிய சிந்தனையையும் பார்வையையும் கொண்டது. வெறுமனே பச்சை குத்தமட்டுமில்லை. 
  • கருத்துக்கள உறவுகள்

யூட் நல்ல கற்பனை.

 

சிங்களத்திடம் இருந்து நிர்வாக சுதந்திரம் என்பது தமிழர்கள் கைக்கு சும்மா வராது.

 

அது சும்மா சாத்தியமும் இல்லை. அல்லது சம் சும் சரணாகதி அரசியல் அதனைக் கொண்டு வரவும் போறதில்லை. இது யதார்த்தம்.

 

சர்வதேசம் எமது விடயங்களின் ஆழத்தை அறிந்திருப்பது வேறு.. பூகோள நலன் சார்ந்து அது எடுக்கும் காலங்களுக்கான முடிவுகள் என்பதில் தான்.. சிங்கள அரசு மீதான அழுத்தங்களின் பரிமானம் வேறுபட முடியும். சர்வதேசத்தை தமிழர்களின் நலன் பால் சிந்திக்கச் செய்ய தமிழர்களிடம் பலமில்லாமல் இருக்கலாம்.. ஆனால்.. தெற்காசிய.. ஆசிய பிராந்திய நலன் தொடர்பில் மேற்குலகின் தேவைகள் மாறுபடும் போது தமிழர்களின் இருப்பு.. அந்தப் பிராந்தியத்தில் அவர்களின் தேவைகளை சார்ந்து உதவி நிற்கின்ற போது சர்வதேச அணுகுமுறைகள் மாறும்.

 

கிழக்குத் தீமோரை பிரிக்க விடாது ஆயுதம் கொடுத்த அதே சர்வதேசம் தான் பின்னர் பிரிக்கவும் தேர்தல் நடத்த அழுத்தம் கொடுத்தது. தென்னாபிரிக்காவில் அப்படி. பயங்கரவாத நாடான கியூபா இன்று அமெரிக்காவின் நட்பு நாடாகியுள்ளது. மேற்குலகின் நட்பு நாடாகியுள்ளது.

 

எனவே சர்வதேசத்தின் தேவைகள் மாறும் சூழலைக் கவனித்து.. சீன ஆதிக்கம் ஆசியாவில் பெருகும் இன்றைய சூழலில்.. சீன நிழலில் அண்டி வாழும் சிங்கள தேசத்தின் அணுகுமுறைகளை வைத்து தமிழர்கள் செய்யும் நுட்பமான அரசியல்.. இராஜதந்திர நகர்வுகளே.. அவர்கள் விரும்பியதை சாத்தியமாக்க முடியும்.

 

அதனை விடுத்து எதுவும் சாத்தியமில்லை.. தமிழீழத்தை யாரும் அங்கீகரிக்கல்ல.. என்று ஒரு மாயையை காட்டி மக்களை ஒரு குறுகிய நிரந்தரமற்ற சூழலுக்குள்.. நிர்வாகச் சிக்கலை தீர்ப்பதே போதும் வேறு ஒன்றும் அவசியமில்லை என்று கட்டுப்படுத்துவது கூட ஒரு அடக்குமுறையை திணிப்பது போன்றதே.

 

நாம்.. பரந்து சிந்திக்கவும்.. பல்வேறு வழிகளில் நகரவும் வேண்டி உள்ளேமே தவிர.. ஒன்றை (உ+ம் தமிழீழம்) புறக்கணித்து..அதன் மூலம் சிங்களத்தை திருப்திப்படுத்தி.. எமக்கு வேண்டியதை அடையாலம் என்பது எதனையும் சாத்தியமாக்காது. இந்தத் தெளிவு எமக்கு அவசியம்.

 

ரஷ்சியாவுடனான முறுகல்.. சீனாவுடனான முறுகல்.. கியூபாவுடான நட்புக்கு வழிவகுத்தது.. மேற்குலகிற்கு அது அவசியம். சீனாவுடான முறுகலை.. எமக்கு சாத்தியமாக்கச் சிந்திப்பதை விடுத்து.. எதுவும் ஆகாது என்று காட்டுவதில் எமக்கு எதுவும் கிடைக்கப் போறதில்லை. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

எனவே சர்வதேசத்தின் தேவைகள் மாறும் சூழலைக் கவனித்து.. சீன ஆதிக்கம் ஆசியாவில் பெருகும் இன்றைய சூழலில்.. சீன நிழலில் அண்டி வாழும் சிங்கள தேசத்தின் அணுகுமுறைகளை வைத்து தமிழர்கள் செய்யும் நுட்பமான அரசியல்.. இராஜதந்திர நகர்வுகளே.. அவர்கள் விரும்பியதை சாத்தியமாக்க முடியும்.

 

இன்று மைத்திரி ஜனாதிபதியாக இருப்பதும் ரணில் பிரதமராக இருப்பதும் சீன ஆதிக்கத்தில்,  சீன நிழலில் அண்டி வாழும் சிங்கள தேசத்திஇற்கு சீன மக்கள் வழங்கிய நன்கொடையா? நீங்கள் இன்னமும் மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சிகாலத்தில் நிற்கிறீர்கள்.

ஆனால் அங்கெ சீன ஆதிக்கம் இன்று குறைக்கப்படுள்ளது.

 

அமெரிக்க அரசுக்கு இலங்கையில் தாராளமாக சக்தி மிக்க சிங்கள ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். தமிழரின் துணை அமெரிக்க அரசுக்கு தேவை இல்லை.  சர்வதேச வல்லாதிக்க போட்டியில் அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ  தமிழரால் எந்த பயனும் இல்லை என்பதை அந்த நாடுகள் நன்கு அறிந்து இருக்கின்றன. நீங்களே சொல்லுங்கள்: இந்த வல்லாதிக்க போட்டியில் தமிழரால் என்ன "நுட்பமான அரசியல்" செய்ய முடியும்?

 

 

 

ரஷ்சியாவுடனான முறுகல்.. சீனாவுடனான முறுகல்.. கியூபாவுடான நட்புக்கு வழிவகுத்தது.. மேற்குலகிற்கு அது அவசியம். சீனாவுடான முறுகலை.. எமக்கு சாத்தியமாக்கச் சிந்திப்பதை விடுத்து.. எதுவும் ஆகாது என்று காட்டுவதில் எமக்கு எதுவும் கிடைக்கப் போறதில்லை.  :icon_idea:  :)

 

 

அப்படியான உங்கள் திட்டத்தை சொல்லுங்கள். மற்றவர்கள் எவரிடமும் இவ்வாறான எந்த சிந்தனையும் இருப்பதாக தெரியவில்லை. அமெரிக்காவுக்கு இலங்கை தமிழர்கள் தேவையில்லை. சிங்களவர்கள் தாரளமாக இருக்கிறார்கள்.

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சிங்களச் சார்ப்பு என்ற ஒற்றை வட்டத்தில் சிங்களத்தின் பிடியில் இருக்க எனி விரும்பாது. சிங்களத்தின் சீனச் சார்ப்புக் கொள்கைகள் பற்றி அமெரிக்கா நன்கு அறியும். அதேவேளை.. இது சோவியத் யுகமும் அல்ல. இந்தியா பற்றி கடுப்போடு முடிவெடுக்க. அந்த வகையில்.. அமெரிக்காவுக்கு தமிழர்களின் அரவணைப்பும் அவசியம். அது சிங்களத்தை தன் கைப்பிடியில் வைத்திருக்க அது உதவும்.

 

மகிந்தவின் சீனச் சார்ப்பு கொள்கையை கொண்டு வந்ததே சந்திரிக்கா - கதிர்காமர் கூட்டணி தான். அதை வைச்சு நகர்த்திய காய் நகர்த்தல்களில் தான் ஹிந்தியாவின் தமிழர் எதிர்ப்புப் போக்கை தமதாக்க முடிந்தது.

 

நாம் சர்வதேச மாற்றங்களைக் கருத்தில் கொண்டு திட்டமிட்ட திட்டங்கள் வைத்திருக்க வேண்டும்.. அதனை கொண்டு செல்லும் பாதையும் வகுத்துச் செயற்பட்டால் தான் எமது மக்களுக்கு ஓர் விடிவு வரும். இன்றேல்.. எல்லாம் அம்போ.

 

அமெரிக்கா ஈழத்தில்.. தமிழர்களையும்.. தமிழகத்தையும் அவ்வளவு புறக்கணிக்கத்தக்க சக்தியாகப் பார்க்காது எனி. அப்படி பார்த்தால்.. நட்டம் அமெரிக்காவிற்கு தான். :icon_idea:

இவற்றை சிறி லங்கா அரச கூலிகள் திருத்த போவதில்லை. கிரீஸ் பூதத்திற்கு முடிவு தமிழீழ மக்களே கட்டினார்கள். அதே போல் உடனடி மருத்துவத்தை காமுகங்களில் காட்டினால் அவர்களும் பொத்துவார்கள். சிறி லன்கனிட்ட சும்மா புலம்பி ஒருத்தனும் உதவ போவதில்லை. அவனுக்கு எமது சமூக கட்டமைப்பு உடையவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.