Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போதைப்பொருள் விநியோகஸ்தர்களை மாணவர்கள் எமக்கு காட்டிக்கொடுக்க வேண்டும் - முதலமைச்சர்

Featured Replies

article_1433149344-ssa.jpg

எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும். விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

உதயன் பத்திரிகை நிறுவனம் ஒன்றின் உலகக் கிண்ண கிரிக்கெட் கொண்டாட்டம், யாழ். இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (31) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எமது இளைஞர், யுவதிகள் விளையாட்டுக்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டால் தான் பலவித சமூகச் சீரழிவு செயல்களில் இருந்து தம்மை தப்ப வைத்துக் கொள்ளலாம். விளையாட்டுக்கள் எங்கள் உடல்கள் பற்றி எமது திறன்கள் பற்றி சிந்திக்க வைக்கும் தன்மை வாய்ந்தன. எம்மை குறிக்கோள் நோக்கி இயக்கும். யார் யாரோ வேண்டும் என்றே திட்டமிட்டு போதைப்பொருள் பாவனையைக் கல்லூரிகளிலும் பாடசாலைகளிலும் விநியோகித்து வருகின்றார்கள்.

சிறு சிறு கடைகளில் எல்லாம் சிறிய பொதிகளில் பல்வேறு பெயர்களில் அவற்றை விநியோகிப்பதாக எனக்கு செய்தி கிடைத்துள்ளது. புங்குடுதீவில் அண்மையில் இடம்பெற்ற வன்புணர்விலும் கொலையிலும் ஈடுபட்டவர்கள் போதைப் பொருட் பாவிப்புக்கு அடிமைப்பட்டிருந்ததாலேயே மிருகத்தனமாக நடந்து கொண்டதாகப் பேசப்பட்டு வருகின்றது. அரசியல் ரீதியாக ஏன் இந்தப் போதைப்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது என்று நினைக்கின்றீர்கள்? அதன் பின்னணியில் ஒரு முக்கியமான காரணம் உண்டு என்பது எனது கருத்து.

ஒரு காலத்தில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசாங்கங்களையே ஆட்டிப் படைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் பெருத்த செலவுடன்தான் அவர்களை அப்போதிருந்த அரசாங்கத்தால் அழிக்க முடிந்தது. இனியும் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேரக்கூடாது, ஒருமித்துச் செயலாற்றக்கூடாது, கல்வியில் சிறந்து விளங்கக்கூடாது, சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக்கூடாது, விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக்கூடாது, அவர்களை நடை பிணங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் சில அதிகாரபீட அலுவலர்களிடமும் அரசியல்வாத அமைச்சர்களிடமும் எழுந்தது.

வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை அழித்தொழித்து விட்டோம். ஆனால், மீண்டும் அவர்கள் எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே போதைப்பொருட்களைத் திட்டமிட்டு அறிமுகம் செய்ய முன்வந்தார்கள் என்பது எனது கருத்து. எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

விநியோகம் செய்பவர்களை எமக்குக் காட்டிக் கொடுக்க மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இந்தச் சதியில் இருந்து தப்ப முயற்சிக்க வேண்டும். சில அமைச்சர்கள், உயர் பதவிகளில் இருந்தவர்கள், சில காலத்துக்கு முன் அதிகாரத்தில் இருந்த பலர் கூட அண்மைக்காலம் வரையில் போதைப்பொருள் விநியோகத் தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டிருந்தார்கள் என்று இன்றைய அரசாங்கத்தின் ஆராய்வின் போது தெரியவந்துள்ளது. செல்வாக்கு மிகுந்தவர்களின் உந்துதலின் பேரில் இந்தப் போதைப்பொருள் விநியோக வியாபாரம் வடமாகாணத்தில் நடந்து வந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம். பணம் புரட்டுவதே அவர்கள் குறிக்கோள்.

இப்பேர்ப்பட்டவர்களுக்கு பணத்துக்கு மேலாக எதுவுமே முக்கியமில்லை. எனவே பொருளாதார காரணங்களுக்காகவும் போதைப்பொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது. அதனால் சீரழிவது எமது மாணவ இளம் சந்ததியினர். நன்மை அடைவது பெரும் பணம் படைத்தவர்களும், இடைத்தரகர்களும், மாணவ முகவர்களும். போதைப் பொருள் பாவனைக்குக் காசு பணம் வேண்டும். அதற்கு அடிமையானதும் அதன் கோரப் பிடிக்குள் இருந்து தப்ப முடியாது.

ஆகவே பாவிப்பதற்குப் பணம் வேண்டும். இதன் காரணத்தினால் அவர்கள் விநியோகத்தர்களாக மாறுகின்றார்கள். போதைப் பொருட்களை மற்றவர்களுக்கு விற்று தாமும் போதையில் மயங்கி நிற்க துணிகின்றார்கள். இதனால்தான் முதலில் அறிமுகம் செய்தவர்களையும், விநியோகத்தர்களையும் நாம் அடையாளம் காண முடியாது போகின்றது. புலணுர்வின் நிமித்தம் இதற்குள் மாட்டிக் கொண்டவர்கள் தான் ஈற்றில் சட்டத்தின் பிடிக்குள்ளும் கைது செய்யப்பட்டு கையேற்கப்படுகின்றார்கள். வழக்குகளின் கேட்பின் போது எனக்குத் தெரியவந்த விடயங்கள் இவை. விரைவில் மத்திய அரசாங்கத்துடனும் சேர்ந்து போதைப்பொருள் பாவிப்பை அழிக்க போதிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் குணமாக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட நாமுள்ளோம். மாணவ மாணவியரின் பூரண ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம் என கூறினார்.

http://www.tamilmirror.lk/147363#sthash.AxPTbnOS.dpuf

எங்கட பக்கத்தில சிறி லங்கா பொலிஸ் அதிகாரி தான் கஞ்சா வீட்டுக்கு வீடு டெலிவரி பண்ணுறாராம். உங்கட அரசாங்க கூலிகள் தான் முக்கிய ஆக்கள். ஆனால் அவர்களை தண்டிக்க "பவர்" வேணும். சும்மா செய்தி தலையங்க பேச்சுக்களை விட்டு காரியத்தில் இறங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் எமது இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி அரசாங்கங்களையே ஆட்டிப் படைத்து வந்துள்ளனர். வெளிநாட்டு உதவியுடன் பெருத்த செலவுடன்தான் அவர்களை அப்போதிருந்த அரசாங்கத்தால் அழிக்க முடிந்தது. இனியும் தமிழ் இளைஞர்கள் ஒன்று சேரக்கூடாது, ஒருமித்துச் செயலாற்றக்கூடாது, கல்வியில் சிறந்து விளங்கக்கூடாது, சுதந்திர எண்ணங்கள் அவர்கள் மனதில் எழக்கூடாது, விடுதலை வெறி அவர்களுள் கொழுந்து விட்டு எழக்கூடாது, அவர்களை நடை பிணங்கள் ஆக்க வேண்டும் என்ற எண்ணம் சில அதிகாரபீட அலுவலர்களிடமும் அரசியல்வாத அமைச்சர்களிடமும் எழுந்தது.

வடக்கு, கிழக்கு மாகாண இளைஞர்கள் பலரை அழித்தொழித்து விட்டோம். ஆனால், மீண்டும் அவர்கள் எழமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் முகமாகவே போதைப்பொருட்களைத் திட்டமிட்டு அறிமுகம் செய்ய முன்வந்தார்கள் என்பது எனது கருத்து. எமது இளைஞர்கள் இடையே போதைப் பொருட்களை அறிமுகம் செய்யப் பாரிய ஓர் அரசியல் காரணம் பின்னணியில் இருந்து வந்துள்ளது என்பதை எங்கள் மாணவ உலகம் அறிந்து கொள்ள வேண்டும்.

நிதர்சனமான உண்மை.

மாணவ மாணவியரின் இனப்பற்றும்.. தாம் இதில் (பலரது எதிர்காலத்தையே சிதைக்கவல்ல போதைப் பொருள் பாவனையில்) சிக்காது மீளனும் என்ற உணர்வும் பாடசாலைகளில் ஆசிரியர்களாலும் கட்டி வளர்க்கப்பட வேண்டும். பாடசாலைகள் மாணவர்களை இக்குற்றங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது.

நாம்.. பாடசாலைகளுக்கு இது தொடர்பான ஒரு பிரசன்ரேசனை செய்து யாழ் களம் சார்பில் அனுப்பி வைத்தால் என்ன..??! அல்லது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு அதைச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அதை போட்டுக் காட்டி அறிவுறுத்தக் கேட்கலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

அதுமாத்திரமில்லை, குறிப்பாக பாடசாலை மாணவிகளை குறிவைத்து இயங்கும் கும்பல்களின் கதைகளும் வெளிகொணரப்பட வேண்டும். 

முதலில் இவர்கள் செய்தது பல மதுபான சாலைகளுக்கு அனுமதிபத்திரம் கொடுத்தது, பின்னர் அந்த மதுப்பான சாலைகளில் இனந்தெரியாத பலர் சில இளையவர்ர்களுக்கு அறிமுகமாகி இலவசமாக அல்லது சிநேகிதமாக மதுபானம் வாங்கி கொடுத்து அவர்களை மோதவிட்டது.

இப்பொது அது கஞ்சாவையும் தாண்டி விட்டது, கோத்தாவின் திட்டம் கோத்தாவிக்கு பின்னரும் தொடர்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான உண்மை.

மாணவ மாணவியரின் இனப்பற்றும்.. தாம் இதில் (பலரது எதிர்காலத்தையே சிதைக்கவல்ல போதைப் பொருள் பாவனையில்) சிக்காது மீளனும் என்ற உணர்வும் பாடசாலைகளில் ஆசிரியர்களாலும் கட்டி வளர்க்கப்பட வேண்டும். பாடசாலைகள் மாணவர்களை இக்குற்றங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது.

நாம்.. பாடசாலைகளுக்கு இது தொடர்பான ஒரு பிரசன்ரேசனை செய்து யாழ் களம் சார்பில் அனுப்பி வைத்தால் என்ன..??! அல்லது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு அதைச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அதை போட்டுக் காட்டி அறிவுறுத்தக் கேட்கலாம். :icon_idea:

நெடுக்கரின் ஆலொசனை நல்லதாகவே படுகின்றது. இதற்கு எனது முழு ஒத்துழைப்பும் இருக்கும்.

நிச்சயமாக சிங்களத்தின் கொள்கை வகுப்பாளர்கள் எனது இனத்தில் இருந்து இன்னொரு புரட்சி நடைபெறக்கூடாது என்பதில் முனைப்பாக இருக்கின்ரனர் என்பது தெளிவு. அது ஆயுதப் புரட்சி மட்டும் என்பதல்ல கருத்து. மாறாக தமிழர் தம் கல்வி, பொருளாதாரம், கலாசாரம், சமூக விழுமியங்களையும் சிதைத்துவிட சிங்களம் நினைக்கிறது. தொடக்கத்திலேயே கிள்ளி எறியாவிட்டால் பாதிக்கப்படப்போவது எமது சந்ததிதான்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு யோசனை நெடுக்கு.

என் சகல உதவியும் உண்டு.

பாடசாலைகளில் சங்கீத மன்றம், இலக்கிய மன்றம், இண்டராக்டிவ் கிளப் போல போதை விழிப்புணர்வு மன்றங்களை அமைக்கலாம்.

எதாவது செய்தே ஆகணும்.

இங்கே யூ கே யில் ask Frank எனும் ஒரு திட்டமிருக்கு. அதை முன் மாதிரியாக கொள்ளலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது கள உறவுகளே...

உங்கள் எல்லோரினதும்.. சிந்தனை வடிவங்களை இங்கு ஒரு கணக்கை ஆரம்பித்து அதில் பிரதிபலிக்கப் பண்ணினால்.. அதனை பாடசாலைகளுக்கு நேரடியாகவும்.. பழைய மாணவர் சங்கங்களூடாகவும்.. வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சு ஊடாகவும் அனுப்பலாம்.

நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே உங்களின் எண்ணத்தை இதில் பிரதிபலிக்கலாம்.

ஒரு பொதுக் கணக்கை ஆரம்பித்து இதனை யாழ் கள நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு முன்னெடுப்பதே நல்லது. இதனை நாற்சந்தியில் செய்தால் நன்றே இருக்கும்.

இந்த இணையத்தை அதற்குப் பாவிக்கலாம்.. :icon_idea:

https://prezi.com/

https://www.emaze.com/

http://www.visme.co/teams/

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான உண்மை.

மாணவ மாணவியரின் இனப்பற்றும்.. தாம் இதில் (பலரது எதிர்காலத்தையே சிதைக்கவல்ல போதைப் பொருள் பாவனையில்) சிக்காது மீளனும் என்ற உணர்வும் பாடசாலைகளில் ஆசிரியர்களாலும் கட்டி வளர்க்கப்பட வேண்டும். பாடசாலைகள் மாணவர்களை இக்குற்றங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது.

நாம்.. பாடசாலைகளுக்கு இது தொடர்பான ஒரு பிரசன்ரேசனை செய்து யாழ் களம் சார்பில் அனுப்பி வைத்தால் என்ன..??! அல்லது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு அதைச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அதை போட்டுக் காட்டி அறிவுறுத்தக் கேட்கலாம். :icon_idea:

நெடுக்கரின் திட்டம் வரவேற்கப்பதோடு நின்றுவிடாது செயல்முறைவடிவம்பெற வடமாகாண முதலவரோடு தொடரபை ஏற்படுத்தி இதுபோன்ற சிந்தனைகளை முன்வைப்பது பொருத்தமாகும். களஉறவுகளனைவரும் இணைந்து இதற்கான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கான பொருண்மிய பங்களிப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு தொடர்செயற்பாடாகச் செய்வதே நீண்டகால நோக்கில் பயன்தரும். 
 
அதேவேளை மாகாண அரசுக்குக் காவற்றுறை அதிகாரம் மிகவும் அவசியமானது என்பதை இந்த நாசகார நடவடிக்கைகள் சுட்டிநிற்கின்றன.
நெடுக்கர் அவர்களே
வாசித்தமா சண்டை போட்டமா மறந்தமா என்றில்லாமல் மிகவும் நல்ல விடயத்தை ஆரம்பித்துள்ளீர்கள் மிகவும்நன்றி.
 
எனது பங்களிப்பும் உதவியும் நிச்சயமாக உண்டு. தொடருங்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனமான உண்மை.

மாணவ மாணவியரின் இனப்பற்றும்.. தாம் இதில் (பலரது எதிர்காலத்தையே சிதைக்கவல்ல போதைப் பொருள் பாவனையில்) சிக்காது மீளனும் என்ற உணர்வும் பாடசாலைகளில் ஆசிரியர்களாலும் கட்டி வளர்க்கப்பட வேண்டும். பாடசாலைகள் மாணவர்களை இக்குற்றங்கள் தொடர்பில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்துவது நல்லது.

நாம்.. பாடசாலைகளுக்கு இது தொடர்பான ஒரு பிரசன்ரேசனை செய்து யாழ் களம் சார்பில் அனுப்பி வைத்தால் என்ன..??! அல்லது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு அதைச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு அதை போட்டுக் காட்டி அறிவுறுத்தக் கேட்கலாம். :icon_idea:

நல்லவிடயம் தம்பி..

நானும் உள்ளேன் ஐயா... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனைவரினதும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது... உங்களின் வசதிக்கு ஏற்ப பங்களிப்பை நல்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/158445-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88/

Posted Today, 05:29 PM

யாராவது தாயகத்தில் அதிகமாகப் பாவிக்கப்படும் போதைப் பொருட்களின் பெயர் தெரிந்தால் பட்டியலிடவும்.

பொதுவாக போதைப் பொருட்களிற்கு எதிரான நடவடிக்கையாக இல்லாது குறிப்பிட்ட போதைப் பொருட்களிற்கு எதிராக இருப்பின் அதிக நன்மை பயக்கும் என்பது எனது கருத்து.
 
நன்றி.

தயவு செய்து யாராவது உதவுங்களேன்.

கஞ்சா தான் தொடக்கத்திற்கு வளர்ந்தால் ஹெரோயின் தாரளமாக கிடைக்கும். சிறிலங்கா கொழும்பு துறைமுகதிற்குள்ளால் ஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டொலர் போதை பொருட்கள் கடத்தபடுகின்றன.

சிறிலங்கா பிரதமர் பலமில்லியன் டொலர் ஹெரோயின் கடத்தி பிடிபட்டார். ஆனால் பாருங்கள் பெரிய முதலைகளை பிடிக்க சக்தி இல்லை. சும்மா சில்லறைகளை பிடித்து படம் போட்டு பீலா காட்டலாம்.

நன்றி விவசாயி
 
கஞ்சா பொதுவாகவே இந்தியாவிலிருந்துதான் கடத்தப்படும் சாத்தியமுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் இந்திய இராணுவ பிரசன்னத்தில் விதைக்கப்பட்டது வேறு கதை. இதை தடுக்க இப்போது எம்மால் முடியாது.
 
இதற்குள் புகும் புதியவர்களே எமது இலக்காக இருக்க வேண்டும். இவர்களிற்காக இதனால் ஏற்படும் விளைவுகளையும் அதற்கான விளக்கங்களையும் எம்மால் கொடுக்க முடியும். புதியவர்களை இதற்குள் உள்வாங்கப்படாமல் செய்ய முடியுமானால் ஏறத்தாள 80 வீதமான  தீர்ந்தமாதிரித்தான். பின்னர் இதில் தங்கி இருப்பவர்களின் மறுவாழ்வு பற்றி யோசிக்கலாம். 
கோசான், நெடுக்ஸ், விசுகு, நொச்சி, சூறாவளி, வாலி மற்றும் உறவுகளே ஏதாவது எழுதுங்களேன். 
 
மயிரைக் கட்டி மலையை இழுத்துப் பார்ப்போம் வந்தால் மலை போனால் மயிர்தானே.
கள உறவுகளே தயவு செய்து உங்கள் கருத்துக்களை கீழ் குறிப்பிடும் திரியில் இடவும்.
 
உங்கள் அனைவரினதும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது... உங்களின் வசதிக்கு ஏற்ப பங்களிப்பை நல்கலாம்.

http://www.yarl.com/forum3/index.php?/topic/158445-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88/

இங்கு இதற்காக ஒரு இலவசமில்லாமல் கணக்கை ஆரம்பதிற்காக உதவி தேவை இருப்பின் அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன்.

கோசான், நெடுக்ஸ், விசுகு, நொச்சி, சூறாவளி, வாலி மற்றும் உறவுகளே ஏதாவது எழுதுங்களேன்.

மயிரைக் கட்டி மலையை இழுத்துப் பார்ப்போம் வந்தால் மலை போனால் மயிர்தானே.

சொல்வதற்கு ஒன்றுமில்லை, என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.

னெடுக்கரின் முயற்சி வெற்றி பெறவேண்டும்.

நன்றி விவசாயி

கஞ்சா பொதுவாகவே இந்தியாவிலிருந்துதான் கடத்தப்படும் சாத்தியமுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் இந்திய இராணுவ பிரசன்னத்தில் விதைக்கப்பட்டது வேறு கதை. இதை தடுக்க இப்போது எம்மால் முடியாது.

இதற்குள் புகும் புதியவர்களே எமது இலக்காக இருக்க வேண்டும். இவர்களிற்காக இதனால் ஏற்படும் விளைவுகளையும் அதற்கான விளக்கங்களையும் எம்மால் கொடுக்க முடியும். புதியவர்களை இதற்குள் உள்வாங்கப்படாமல் செய்ய முடியுமானால் ஏறத்தாள 80 வீதமான தீர்ந்தமாதிரித்தான். பின்னர் இதில் தங்கி இருப்பவர்களின் மறுவாழ்வு பற்றி யோசிக்கலாம்.

கராச்சி மற்றும் கொச்சினுக்குள்ளால் தான் பெருமளவு கொழும்பு சென்று உலகம் பரவுகிறது. கஞ்சா தாராளமாக இலங்கை மலையக பகுதிகளில் வளர்கிறது. சிறி லங்கா அரசே மருந்திற்காக ஒவ்வொரு வருடமும் பல தொன்கள் வளர்கிறது. நீங்கள் சிகரெட் போல் சுற்றிய கஞ்சா பாக்கெட் எல்லாம் கண்டி, கொழும்பு பகுதிகளில் தாராளம்.

இந்த நகரங்களில் பல பணக்கார இஸ்லாமிய இளையோர் ஹெரொயினுக்கு அடிமையாகி வருவது கவலையான விடயம். அவர்களுக்கு மதுவிற்கு தடை என்பதால் கஞ்சா, ஹெரொயினுக்கு அடிமையாகிறார்கள். கஞ்சா, ஓப்பியம்(சோமம்), கொக்க தாவரங்கள் எல்லாம் மிருகங்களுக்கு இயற்கை தந்த மருந்து. பார்மசியில் இவற்றின் உப பொருட்கள் தான் மருந்துகள். மதுவும் மருந்து தான். அவற்றை அளவுக்கதிகமா நாம் பாவித்தால் தான் பிரச்சினை.

மற்றும் கொக்கைன், ஹெரோயின் தயாரிப்பில் பாவிக்கப்படும் இரசாயன பொருட்கள் தான் பெரும் பிரச்சினை. சுருட்டுக்கும் சிகரெட்டிற்கும் உள்ள வித்தியாசம். வட அமெரிக்க பூர்வ குடிகள் பொயிலையை மருந்தாக பாவித்தார்கள். எம் இளையோரை வெருட்டுவதற்கு பதில் அறிவை ஊட்டுவது உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில்......
களத்தில் நேரெதிர் கருத்துள்ளவர்கள் கூட....
ஒற்றுமையாக, ஒரே கருத்துடன் செயல் படுவதைப் பார்க்க... மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :) 
இது... எமது எதிர்காலச் சந்ததிக்கு, விடப்பட்டுள்ள சவால்....
இதனை, யாழ்களத்தின் மூலம் செயற்படுத்தி...... நல்ல முடிவை எட்ட வேண்டும்.
எனது பங்களிப்பும், நிச்சயம் உண்டு.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.