Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமுகனுக்கு 18 வயது சிங்கள மாணவி புகட்டிய பாடம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமுகனுக்கு 18 வயது சிங்கள மாணவி புகட்டிய பாடம்!

 
news.jpg

தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் தன்னை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரொருவரின் நாக்கை கடித்து துண்டாக்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிவரும் இந்த 18 வயது மாணவி அக்குரஸ்சை பகுதியில் தனியாக வந்துகொண்டு இருந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் அவர் நடந்து வரும்வேளை. மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர், குறுக்கே வந்து அவரை மறித்துள்ளார்.

அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று ஓரமாக வைத்து கட்டிப் பிடித்து , கெடுக்க முனைந்துள்ளார். இதேவேளை தனது நாக்கை மாணவியின் வாய்க்குள் விட அவர் முனைந்தவேளை , காமுகனின் நாக்கை பலமாக கடித்துள்ளார் அந்த மாணவி. இதனை சற்றும் எதிர்பாராத காமுகன், என்னசெய்வது என்று தெரியாது அலறியடித்துள்ளார். இதனைப் பாவித்து அம்மாணவி அங்கே இருந்து தப்பிவிட்டார். தப்பிச் செல்ல முன்னர் தனது செல் போனில் ,  மோட்டார் சைக்கிளை படம் எடுத்துக்கொண்டு தான் ஓடியுள்ளார். பின்னர் பொலிசாரிடம் சென்று மோட்டார் சைக்கிளின் படத்தை கொடுத்து முறைப்பாடு செய்துள்ளார்.

மோட்டார் சைக்கிளின் பதிவை வைத்து, அதன் உரிமையாளரைக் கண்டுபிடித்த பொலிசார் அவரை அடையாளம் காட்டச்சொல்லியுள்ளார். இதனையடுத்து அவரை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது.

http://www.visarnews.com/2015/06/18.html

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எந்தக்காமுகனும் நாக்கை நீட்டப் பயப்படுவார்கள். அத்துடன் நாய்க்கு நலமடிப்பதுபோல் அடித்துத் தண்டனையும் கொடுத்தால் புதிய நாய்கள் வாலாட்டவும் பயப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி... அந்தச் சம்பவத்தை ஆரு படம் பிடிச்சது?:wub:

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எந்தக்காமுகனும் நாக்கை நீட்டப் பயப்படுவார்கள். அத்துடன் நாய்க்கு நலமடிப்பதுபோல் அடித்துத் தண்டனையும் கொடுத்தால் புதிய நாய்கள் வாலாட்டவும் பயப்படும்.

இப்படியான காட்டுச்சட்டங்களை இங்கே அமுல்படுத்தமுடியாது ....இது என்ன விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமா.....? நீங்கள் விரும்பியவாறு நலமடிக்க  
இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு ......இங்கே சர்வதேச சட்டவிதிகள் , மனித உரிமைகள் போன்றவை மதிக்கப்படுபவை 
ஆகவே சட்டவிதிகளின் பிரகாரம் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ,சாட்சிகளின் அடிப்படையில் விசாரிக்கப்படவேண்டும் ,நாக்கை கடித்த பெண்ணிற்க்கு நாக்கை கடித்தற்க்கான தண்டனை வழங்கப்படவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

அவன் உணர்ச்சி வசப்பட்டு நாக்கை நீட்ட , அவள் உணர்ச்சி வசப்பட்டு கடித்துத் துப்ப ,

ஒரு புணர்ச்சி தவிர்க்கப் பட்டு விட்டது...!

நீதி: உணர்ச்சிகளுக்கு கட்டுப்பாடு அவசியம்...!

  • கருத்துக்கள உறவுகள்


இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு ......இங்கே சர்வதேச சட்டவிதிகள் , மனித உரிமைகள் போன்றவை மதிக்கப்படுபவை 

மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இப்பொழுதுதான் செவ்வாக்கிரகத்திலிருந்து வந்துள்ளேன். இலங்கை என்ற நாடுபற்றி உங்களைப்போன்றோர் அறிந்தளவிற்கு நான் அறிந்ததில்லை.:(

 


  • கருத்துக்கள உறவுகள்

மன்னித்துக் கொள்ளுங்கள். நான் இப்பொழுதுதான் செவ்வாக்கிரகத்திலிருந்து வந்துள்ளேன். இலங்கை என்ற நாடுபற்றி உங்களைப்போன்றோர் அறிந்தளவிற்கு நான் அறிந்ததில்லை.:(

 

 

வேறொன்றுமில்லை ...பாஞ்ச்  அண்ணை 
இப்படித்தான் யாழ் களத்திலும் சில பேர்கள் நாங்களேல்லாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்கள் 
என்ற கணக்கில் எங்களுக்கு  தீர்வு எடுத்துவிட்டுக்கொண்டு திரியினம் ....அதுதான் அவங்க பாணியிலேயே ஒன்றை எடுத்துவிட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

அவன் உணர்ச்சி வசப்பட்டு நாக்கை நீட்ட , அவள் உணர்ச்சி வசப்பட்டு கடித்துத் துப்ப ,

ஒரு புணர்ச்சி தவிர்க்கப் பட்டு விட்டது...!

நீதி: உணர்ச்சிகளுக்கு கட்டுப்பாடு அவசியம்...!

சமூக நீதி : நல்லவேளை அவனுக்கு எதுவும் ஏடாகூடமாக நடக்காமல்  'நா'வோடு போயிட்டது..! :o

பெண்மணி பாராட்டுக்குரியவர்..!:)

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி... அந்தச் சம்பவத்தை ஆரு படம் பிடிச்சது?:wub:

இதோடா...ஐயனார் படம் கேக்கிற விதத்தை பாரு!!!!! happy0199.gif

அவசரப்பட்டு விட்டா அந்த பெண் .. இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் .. அண்ணாச்சியின் பொல்லினை புடுங்கி இருக்கலாம் ... அத்துடன் அடக்கி கொண்டு இருந்திருப்பர் .....

ஓட்ட வெட்ட வேண்டும் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.